உள்ளடக்கத்துக்குச் செல்

கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/D

விக்கிமூலம் இலிருந்து
D

daily cycle : நாட் சுழற்சி.

daisy printer : டெய்தி அச்சுப்பொறி.

darkest : மிகு இருள்மை.

dark fiber : கறுப்பு ஒளியிழை; கரு ஒளியிழை : தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் ஒளியிழை வடங்களில் பயன்பாட்டில் இல்லாத இழைகளை கறுப்பு ஒளியிழை என்றழைப்பர்.

D/A (Digital to Analog) : இலக்க முறையிலிருந்து தொடர்முறைக்கு.

DAM (Direct Memory Access) : டிஏஎம் - நேரடி நினைவக அணுகல்.

DARPAnet: டார்ப்பாநெட் : அமெரிக்காவின் பாதுகாப்பு உயர்நிலை ஆராய்ச்சித் திட்டப்பணி முகமை எனப் பொருள்படும் Defense Advanced Research Projects Agency என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

dash style : கீறுகோட்டுப் பாணி.

data abstract : தரவுப் சுருக்கம்.

data administration : தகவல் நிர்வாகம்.

data analysis : தரவுப் பகுப்பாய்வு.

data attribute : தரவின் பண்புக் கூறு; விவரத்தின் பண்பியல்பு : ஒரு தரவின் இடம், பொருள், ஏவல் பற்றிய கட்டமைப்பு விவரங்கள்.

database concept: தரவுத்தள பிரிப்பி.

data base broadcasting : தரவுத் தள அலைபரப்பு.

data base design : தரவுத்தள வடிவமைப்பு.

database designer : தரவுத்தள வடிவமைப்பாளர்; தரவுத் தள திட்ட அமைப்பாளர்: ஒரு தரவுத் தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பயன்பாட்டு மென்பொருள்களுக்குத் தேவையான செயல்கூறுகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துகின்ற கணினி வல்லுநர்.

database engine: தரவுத்தளப் பொறி; தரவுத் தள இயக்கக் கருவி : ஒரு தரவுத் தள மேலாண் அமைப்பை அணுகித் தகவல்களை எடுத்தாள வழியமைத்துக் கொடுக்கும் ஆணைத் தொகுதிகளைக் கொண்ட மென்பொருள்.

data base objects : தரவுத்தளச் செயல்பாடு.

data base operation : தரவுத் தளப் பண்புகள்.

database publishing : தரவுத்தள வெளியீடு; தரவுத் தளப் பிரசுரம்; தகவல் தள அறிக்கை : ஒரு தரவுத் தளத்திலுள்ள விவரங்களைத் திரட்டி அறிக்கையாகத் தயாரித்து, கணினிப் பதிப்பக முறையில் (Desk Top Publishing) அல்லது இணையத் தொழில்நுட்ப அடிப்படையில் வெளியிடும் முறை.

data base splitter : தரவுத்தள பிரிப்பி.

database structure : தரவுத்தள கட்டமைப்பு : தரவுத்தள வடிவமைப்பு : ஒரு தளத்தில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை வடிவிலான கோப்பின் ஒவ்வொரு ஏட்டிலும் (record) இருக்க வேண்டிய புலங்களின் (fields) எண்ணிக்கை, அவற்றின் பெயர், தரவு இனம் (data type) இவற்றைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய வடிவமைப்பு பற்றிய பொதுவான விளக்கக் குறிப்பு. data base utilities : தரவுட்தள கூறுகள்.

data base wizard: தரவுத்தள வழிகாட்டி.

data bits : தகவல் துண்மிகள்: தரவு பிட்டுகள் : ஒத்திசைவில்லா தகவல் தொடர்பில், அனுப்பப்படும், ஒரெழுத்தைக் குறிக்கும் எட்டுத் துண்மிகளில் 5 முதல் 8 வரையுள்ள துண்மிகளை இவ்வாறு அழைப்பர். தரவுத் துண்மிகளுக்கு முன்பாக தொடக்கத் துண்மி (start bit) அனுபப்படும். அதன் பின், சமன் துண்மி (parity bit) அனுப்பப்படும். சமன் துண்மி அனுப்பப்படாமலும் இருக்கலாம். இறுதியில் ஒன்றிரண்டு நிறுத்த துண்மிகள் (stop bits) அனுப்பி வைக்கப்படும்.

data broadcasting : தரவு அலைபரப்பு.

data buffer : தரவி இடையகம் : கணினிச் செயல் பாட்டில் ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தகவலை அனுப்பி வைக்கும்போது, தற்காலிகமாக இருத்திவைக்கப்படுகின்ற நினைவகப்பரப்பு.

data cable : தரவு வடம் : தொடர்புச் செயல்பாட்டில் ஒரு சாதனத்திலிருந்து இன்னொன்றுக்குத் தகவலை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் இழை-ஒளிவ வடம் அல்லது கம்பி வடம்.

data channel multiplexer: தரவுத் தட ஒன்றுசேர்ப்பி.

data capture: தரவு பதிப்பி.

data catalog : தரவுப் பட்டிலியல்: தரவு அடைவு.

data conferencing: தரவுக் கலந்துரையாடல்: தகவல் கருத்தரங்கு : வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் தங்களுக்கிடையே ஒரு கலந்துரையாடலில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளல். ஒரிடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளை பல்வேறு இடங்களில் தரவுக் கலந்துரையாடல் பணிபுரிபவர்கள் அணுகவும் திருத்தவும் வழி செய்யும் மென்பொருள் தொகுப்புகளை உள்ளடக்கியது.

data consistency: தரவு ஒத்திசைவு.

data control : கட்டுப்பாட்டுத்தரவு.

data declaration : தரவு அறிவிப்பு : விவர அறிவிப்பு : ஒரு நிரலில் பயன்படுத்தவிருக்கும் பல்வேறு விவரக் குறியீடுகளை நிரலின் தொடக்கத்திலேயே அறிவிக்கப் பயன்படும் ஒரு கூற்று (statement). எடுத்துக்காட்டாக, பணியாளர்களின் விவரங்களைக் கையாள பெயர், வயது, சம்பளம் போன்ற தரவு மாறிகளை (variables) அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிக்கும் முறை மொழிக்கு மொழி data driven processing 128 data library

வேறுபடும். ஆனால், அனைத்து முறைகளிலும் சில கூறுகள்-மாறியின் பெயர், தரவு இனம், தொடக்க மதிப்பு, உருவளவு ஆகியவை, பொதுவானவை.

C, C++, Java : char name[15]; int age;

              double pay; 

pascal  : name : string[15];

              age  : integer;
              pay  : real;

data driven processing : தரவு உந்து செயலாக்கம் : தரவு செயலாக்க முறைகளுள் ஒன்று. செயலி (Processor) அல்லது நிரல் (Programme), வரிசை முறையிலான செயல்பாடுகளில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் முன், தரவின் (data) வருகைக்காகக் கட்டாயமாகக் காத்திருக்க வேண்டிய நிலை.

data description standard : தரவு விவரிப்புத் செந்தரம்.

data description : தரவு விவரிப்பு.

data encryption key : தரவுமறையாக்கத் திறவி : ஒரு தகவலை மறையாக்கம் (encryption) செய்யவும், மறைவிலக்கம் (decryption) செய்யவும் பயன்படுத்தப்படும் மறைக்குறியீடு.

data entry form: தகவல் உள்ளீட்டுப் படிவம்; தரவு பதிவுப் படிவம்.

data/fax modem : தரவு/தொலை நகல் இணக்கி : துண்மித் தாரை (bit stream) வடிவிலான தகவலையும், பட உருவங்களையும் அனுப்பவோ பெறவோ பயன்படும் இணக்கி.

data form : தரவுப் படிவம்; தகவல் படிவம்.

data format : தரவு வடிவம் : கணினியில் செயல்படுத்தப்படும் பயன்பாட்டு நிரல்களில் தகவலானது பல்வேறு வடிவங்களில் எடுத்தாளப் படுகிறது. ஒரு தகவல் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் விளக்கம் பெறுகிறது. அக்கட்டமைப்பையே தரவு வடிவம் என்கிறோம்.

data frame : தரவுத் தொகுதி, தரவுச்சட்டம்; தகவல் பொதி; தகவல் பொட்டலம் : கணினிப் பிணையங்களில் ஒற்றைத் தொகுதியாக அனுப்பப்படுகின்ற ஒரு தகவல் பொதி பிணையங்களின் தரவு தொடுப்பு அடுக்கு (Data Link Layer) தரவுச் சட்டத்தை நிர்ணயம் செய்கின்றது. பிணையக் கணுக்கள் (Network Nodes)இரண்டுக்கிடையே இணைக்கும் கம்பிகளில்தான் தரவுச் சட்டம் நிலவுகிறது. கணினிக்குள் நுழைந்த பிறகு சட்டம், பொதி என்ற பரிமாணத்தை இழக்கிறது.

data hiding : தரவு மறைப்பு.

data input & verification : தகவல் உள்ளிடு மற்றும் சரிபார்த்தல்.

data library : தரவு நூலகம் : வட்டு அல்லது அதுபோன்ற சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல் கோப்புகளின் வரையறுக்கப்பட்ட தொகுப்பு, தகவல் தரவு நூலகம் எனப்படுகிறது. data link layer : தரவுத் தொடுப்பு அடுக்கு: இரண்டு கணினிகளுக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்துக்கான வரையறுப்புகள் ஐஎஸ்ஓ குழுவினால் தரப்படுத்தப்பட்டுள்ளன. அது ஐஎஸ்ஓ/ஓஎஸ்ஐ மாதிரியம் (1SO/OSI model) என்று அழைக்கப்படுகிறது. தகவல் பரிமாற்றத்தில் ஏழு அடுக்குகள் (Layers) வரையறுக்கப்பட்டுள்ளன. அவை ஓஎஸ்ஐ அடுக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றுள் இரண்டாவது அடுக்கு தகவல் தொடுப்பு அடுக்கு எனப்படுகிறது. பருவநிலை அடுக்குக்கு (Physical Layer) மேலாக அமைந்துள்ளது. இரண்டு சாதனங்களுக்கிடையே உண்மையில் தகவலைப் பரிமாற்றம் செய்கின்ற மூன்று அடுக்குகளுள் (தரவுத் தொடுப்பு, பிணையம் மற்றும் போக்குவரத்து அடுக்குகள்) கீழ் நிலையில் இந்த அடுக்கு அமைந்துள்ளது.

data link level : தரவுத் தொடுப்பு நிலை; தகவல் இணைப்புப் படித்தளம்.

data manager : தரவு மேலாளர்.

data manipulation instruction : தரவு கையாள்தல் ஆணை.

data mart : தரவுக் குறுங்கிடங்கு; மிகப்பரந்த அளவிலான தகவல் சேமிப்பு, தகவல் கிடங்கு (Data Warehouse)எனப்படுகிறது. தகவல் கிடங்கின் ஒரு சுருங்கிய வடிவம் தகவல் குறுங்கிடங்கு எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பயனாளர் குழுவின் தேவைகளை மட்டும் நிறைவுசெய்யும் தகவல்களைக் கொண்டுள்ள கிடங்கு.

data manipulation & analysis : தரவு கையாள்தல் மற்றும் பகுப்பாய்வு.

data migration : தரவு இடப்பெயர்வு: 1. தரவுத் தளம் போன்ற ஒரு சேமிப் பிடத்திலிருந்து இன்னொன்றுக்கு தகவலைப் பெயர்த்தெழுதும் செயல்முறை. பெரும்பாலும் இத்தகைய இடப்பெயர்வு தானாக இயக்கப்படும் நிரல்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய இடப்பெயர்வில் தகவல் பெரும்பாலும் ஒருவகைக் கணினி அமைப்பிலிருந்து வேறுவகைக் கணினி அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படும். 2. மீத் திறன் கணினிப் (Super Computer) பயன்பாடுகளில், அகல் நிலை (offline)-யில் ஏராளமான தகவல்களை பதிவுசெய்து அவற்றை வட்டுக் கோப்புகளாய் நிகழ்நிலை (online) தகவலாய்க் கிடைக்கச் செய்யும் முறை தரவு இடப்பெயர்வு எனப்படும்.

data mining : தரவுச் சுரங்கம்; தகவல் அகழ்ந்தெடுப்பு : தரவுத் தளங்களிலும் மற்றும் அதுபோன்ற கணினிச் சேம வைப்புகளிலும் வணிக முறையிலான பயனுள்ள தோரணி (pattern) களையும், உறவு முறைகளையும், மிக உயர்நிலை புள்ளியியல் நுட்பம் மூலமாகக் கண்டறியும் செயல்முறை.

data, numeric : எண்வகைத் தரவு.

data output & presentation : தரவு வெளியீடு மற்றும் சமர்ப்பித்தல்.

data plotter : தரவு வரைவு பொறி.

data privacy : தரவு இரகசியம்; தகவல் கமுக்கம்; தரவுத் தனிமறைவு.

data processing: தரவுச் செயலாக்கம்: 1. கணினியில் செய்யப்படும் பொதுவான பணி. 2. குறிப்பாக, தேவையான முடிவுகளைப் பெறுவதற்காக தரவுகளை தக்கவாறு மாற்றியமைக்கச் செயல்படுத்தும் முறை. data processing, automatic தானியங்கு தரவு செயலாக்கம்.

data processing, commercial வணிகத் தரவுச் செயலாக்கம்.

data processing department : தரவுச் செயலாக்கத் துறை.

data processing, electronic: மின்னணு தரவுச் செயலாக்கம்.

data processing manager : தரவுச் செயலாக்க மேலாளர்.

data protection register : தரவுக் காப்புப் பதிவேடு.

data range properties: தரவு எல்லைப் பண்புகள்.

data representation: தரவு உருவகிப்பு

data, raw : செப்பமிலாத் தரவு.

data security officer : தரவுக் காப்பு அலுவலர்.

data service unit: தரவுச் சேவை அலகு.

data sheet view: தரவுத்தாள் தோற்றம்.

data station : தரவு நிலையம்.

data storage : தரவுச் சேமிப்பகம், தகவல் தேக்ககம்,

data storage media : தரவு சேமிப்பு ஊடகம்.

data table : தரவு அட்டவணை,

data, test : சோதனைத் தரவு.

data traffic : தரவுப் போக்குவரத்து : கணினிப் பிணையம் வழியாக மின்னணுச் செய்திகளையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்ளுதல். போக்குவரத்தின் அடர்வு அலைக்கற்றையாக அளக்கப்படுகிறது. போக்குவரத்தின் வேகம் ஒரு கால அலகில் எத்தனை துண்மிகள் (பிட்டுகள்) அனுப்பப்படுகிறது என்பதைக் கொண்டு அளக்கப்படுகின்றது.

data transmission, asynchoronous : நேரச்சீரற்ற தரவு அனுப்பீடு.

data store tier: தரவுச் சேமிப்பு அடுக்கு.

data warehouse : தரவுக் கிடங்கு.;தகவல் கிடங்கு : ஒரு நிறுவனத்தின் அனைத்துவகைத் தகவல்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய தரவுத்தளம். ஒரு தகவல் கிடங்கு என்பது பல தரவுத் தளங் களை உள்ளடக்கியதாக இருக்கலாம். ஒரே தகவல் கிடங்கு, பல்வேறு கணினிகளில் பகிர்ந்து சேமிக்கப்பட்டிருக்க முடியும். வேறுவேறு வடிவங்களில் வேறுவேறு மூலங்களிலிருந்து தகவல் கிடங்குக்கு தகவல் வந்து சேரமுடியும். ஆனால், ஒரு வழங்கன் கணினி மூலமாகத் தகவலை அணுக இயல வேண்டும். பயனாளருக்குத் தகவல் கிடங்கை அணுகும்முறை மிகவும் வெளிப்படையானது. மிகஎளிய கட்டளைகள் மூலம் தகவல் கிடங்கிலிருந்து தகவலைப் பெறவும் ஆய்வு செய்யவும் முடியும்.

data transaction : தரவுப் பரிமாற்றம் .

date : தேதி, நாள்.

date expansion : தேதி விரிவாக்கம் .

date stamping : தேதி முத்திரை : அன்றைய தேதியை ஓர் ஆவணத்தில் தானாகவே பதியச் செய்யும் முறை. பயன்பாட்டு மென்பொருள் தொகுப்புகள் பலவற்றில் இவ்வசதி உண்டு.

date time : நாள்-நேரம்.

DCA : டிசிஏ : ஆவண உள்ளடக்கக் கட்டுமானம் என்று பொருள்படும் 

(Document Content Architecture) என்பதன் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஐபிஎம்மின் முறைமைப் பிணையக் கட்டுமானத்தில் (System Network Architecture - SNA) பயன்படுத்தப்பட்ட, ஆவணங்களின் வடிவாக்கம் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை இது குறிக்கிறது. வெவ்வேறு வகையான கணினிகளுக்கிடையே உரை மட்டும் உள்ள ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வதை இது சாத்தியமாகிறது. டிசிஏ, இருவகையான ஆவண வடிவாக்கங்களை முன்வைக்கிறது. ஒன்றில், வடிவமைப்பில் மாற்றங்கள் செய்ய முடியும் (Revisable Form Text DCA). இன்னொன்றில் அத்தகைய மாறுதல்களைச் செய்ய முடியாது (Final Form Text DCA).

DCD : டிசிடி : தரவுச் சுமப்பி அறியப்பட்டது என்று பொருள்படும் Data Carrier Detected என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இரண்டு கணினிகளுக்கிடையேயான நேரியல் தகவல் பரிமாற்றத்தில் (Serial Communication) ஓர் இணக்கி (Modem), தகவலை அனுப்பத் தயாராயிருக்கிறது என்பதை உணர்த்த, இணக்கியிலிருந்து கணினிக்கு அனுப்பி வைக்கப்படும் சமிக்கை.

DCE : டிசிஇ : தகவல் தொடர்பு சாதனம் என்று பொருள்படும் Data Communication Equipment என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஆர்எஸ்-232-சி நிலை இணைப்பில் இருவகை உண்டு. ஒன்று டிசிஇ இன்னொன்று, டி.டீஇ (DTE-Data Terminal Equipment),டிசிஇ ஓர் இடைநிலை சாதனம். ஒரு டிடிஇயிலிருந்து வரும் உள்ளீட்டை பெறுநருக்கு அனுப்பி வைப்பதற்கு முன்பாக, ஏற்புடைய தகவலாய் மாற்றியமைக்கும். எடுத்துக்காட்டாக ஓர் இணக்கி, டிசிஇ-யாகச் செயல்படுகிறது. டிடிஇ-யாக இருக்கும் கணினியிலுள்ள தகவலை இணக்கமான வடிவத்தில் (Analog) மாற்றி, தொலைபேசி இணைப்பு வழியாக அனுப்பி வைக்கிறது.

decimal arithmatic, floating : மிதவைப் புள்ளி பதின்மக் கணக்கீடு.

decimal, coded: குறிமுறைப் பதின்மம்.

decimal notation, binary coded : இருமக் குறியீட்டுப் பதின்மக் குறிமானம்.

decimal point, actual : உண்மைப் பதின்மப் புள்ளி.

decoding : குறிவிலக்கம்; குறிமொழி மாற்றல்.

D.COM : டிகாம் : பகிர்ந்தமை ஆக்கக் கூறு பொருள் மாதிரியம் என்று பொருள்படும் Distributed Component Object Model என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். காம்பொனன்ட் ஆப்ஜெக்ட் மாடல் (COM) என்ற மைக்ரோ சாஃப்ட் நிறுவனத் தொழில்நுட்பத்தின் விரிவாக்கம். விண்டோஸ் அடிப்படையிலான பிணையங்களில் பயன்பாட்டுத் தொகுப்புகளுக்குத் துணை புரியும் ஆக்கக் கூறுகள் தமக்குள்ளே எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை இத்தொழில் நுட்பம் வரையறுக்கிறது. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்புக்குத் தேவையான பல்வேறு ஆக்கக் கூறுகள் ஒரு பிணையத்திலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் பகிர்ந்தமைவதை இத்தொழில்நுட்பம் சாத்தியமாக்குகிறது. பயனாளரின் பார்வையில் அத்தொகுப்பு அனைத்து ஆக்கக் கூறுகளும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒட்டுமொத்தப் பயன்பாடாகவே தோன்றும்.

DDC : டிடிசி : காட்சித் தகவல் தடம் என்று பொருள்படும் (Display Data Channel) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினியின் வரைகலை காட்சித்திரையை மென்பொருள் மூலம் கட்டுப்படுத்துவதை இயல்விக்கிற வீஸா (VESA) தரநிர்ணயம், டிடிசி-யின் கீழ், காட்சித் திரைக்குரிய பண்பியல்புகள் வரைகலைத் துணை முறைமைக்கு உணர்த்தப்படுகின்றன. அதனடிப்படையில் திரைக்காட்சி வடிவமைக்கப்படுகிறது. அதுமட்டு மின்றி, கணினிக்கும் காட்சித் திரைக்குமிடையே ஓர் இருவழி தொடர்புத் தடம் உருவாக்கப்படுகிறது.

DDE : டிடிஇ : இயங்குநிலைத் தகவல் பரிமாற்றம் எனப் பொருள்படும் Dynamic Data Exchange என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் மற்றும் ஓஎஸ்/2 ஆகியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டுத் தொகுப்புகள் தமக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் முறை. விண்டோஸ் 3.1-ல் ஓஎல்இ (OLE-Object Linking and Embedding) என்னும் செயல்முறை மூலம் இத்தகைய தகவல் பரிமாற்றம் நடைபெற்றது. விண்டோஸ் 95/98/என்டி ஆகியவற்றில் ஓஎல்இயுடன் ஆக்டிவ்எக்ஸ் என்னும் தொழில்நுட்பமும் பரவலாகப் பயன் படுத்தப்படுகிறது.

.de : .டி.இ : ஜெர்மனி நாட்டில் இயங்கும் இணையதளத்தைக் குறிக்கும் புவிசார் பெருங்களப் பெயர்.

dead key : வெற்று விசை; நிலைத்த விசை, நகராவிசை; மரித்த விசை :விசைப்பலகையில் இன்னொரு விசையுடன் இணைந்து ஓர் எழுத்தை உருவாக்கும் விசைக்கு இப்பெயர். இந்த விசையைத் தனித்து இயக்கினால் பொருளில்லை. பொதுவாக விசைப்பலகையில் ஓர் எழுத்து விசையை அழுத்தினால் அவ்வெழுத்து திரையில் பதிவதுடன், சுட்டுக்குறி அடுத்த இடத்துக்கு நகரும். ஆனால், பெரும்பாலும் வெற்றுவிசையை அழுத்தும்போது, அடுத்த எழுத்துக்கு நகர்வதில்லை. திரையில் எவ்வித எழுத்தும் தோன்றுவதில்லை. தமிழில் தட்டச்சு செய்யும்போது ஒரு மெய்யெழுத்தைப் பதிய முதலில் புள்ளியையும் பின் உயிர்மெய் எழுத்தையும் அழுத்தும் முறையில் புள்ளிக்குரிய விசை நகரா விசையாகச் செயல்படும். புள்ளி வைத்தபின் அதன் கீழேயே உயிர் மெய்யைப் போட வேண்டுமல்லவா?

dealocate : விடுவி : ஒரு தகவலை நினைவகத்தில் பதிவு செய்வதற்காக ஏற்கனவே ஒதுக்கிவைத்த நினைவக இருப்பிடத்தை விடுவித்தல்.

eamon: ஏவலாளி (பணியேற்கும் நிரல்)

dechotomissing research : இரு கிளைத் தேடல்.

decision, logical : தருக்கத் தீர்வு; தருக்கமுறை முடிவு.

decision making statements: தீர்வுசெய் கட்டளைகள்; முடிவெடுக்கும் கூற்றுகள.

decimal paint, assumes : உண்மைப் பதின்மப் புள்ளி.

decimal representation, binary coded: இருமக் குறிமுறைப் பதின்ம உருவகுப்பு. Declaractive Markup Language (DML) அறிவிப்புக் குறியமை மொழி: உரைக் கோப்புகளில் உரையை வடிவமைப்பதற்கான கட்டளைகளைக் குறிப்பது. ஆவணத்தில் இன்னின்ன பகுதிகள் வடிவமைப்புக்கு உள்ளாகியுள்ளன என்பதை மட்டுமே இது குறிக்கும். கூறாக்கி (Parser) என்னும் இன்னொரு நிரல், உண்மையான ஆவண வடிவமைப்பைச் செய்து முடிக்கும். எஸ்ஜி எம்எல் (SGML), ஹெச்டிஎம்எல் (HTML) போன்றவை அறிவிப்புக் குறியமை மொழிக்கான எடுத்துக் காட்டுகளாகும்.

declare : அறிவி, அறிவிப்பு செய்; அறிவிக்க : சில உயர்நிலை மொழிகளில் மாறிகளை (Wariables) அறிவிக்கும் கட்டளையாகப் பயன்படுகிறது. நிரலில் பயன்படுத்தவிருக்கும் மாறிகளின் பெயர், விவர இனம் ஆகியவற்றை அறிவிக்க வேண்டும். பெரும்பாலான உயர்நிலை மொழி நிரல்களில் மாறிகளின் அறிவிப்பு தொடக்கத்திலேயே செய்யப்படுகின்றது.

.de.co.us : .டி.இ.சி.ஒ.யுஎஸ் : அமெரிக்காவிலுள்ள, கொலராடோ மாநிலத்தில் டென்வர் நகரைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

decoding : குறிவிளக்கம்.

decrease indent : ஓரச் சீர்மை குறை.

decrease speed : வேகம் குறை.

decrease volume : ஒலியளவு குறை.

decrypt : மறைவிலக்கு.

DEC station : டெக் ஸ்டேஷன் : 1. சொல் செயலாக்கத்திற்கெனத் தனியாக டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் 1978இல் உருவாக்கிய சிறிய கணினி. 2. 1989இல் டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் உருவாக்கிய சொந்தக் கணினி வரிசைக்கும் இதே பெயர். 3.1989இல் டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் உருவாக்கிய, ரிஸ்க் (RISC) பிராசசரில் செயல்படும் ஒற்றைப் பயனாளர் யூனிக்ஸ் பணிநிலையங்களுக்கும் இப்பெயர் வழங்கப்பட்டது.

dedication : ஒப்படைப்பு.

deduction : பிடிப்புத் தொகை.

deep copy : ஆழ் நகல் : ஒரு தரவுக் கட்டமைப்பு (data structure) உள்ளடக்கத்தையும் அதன் துணை நிரல்கூறுகளையும் சேர்த்து நகல் எடுத்தல்.

deep hack : ஆழ் முனைவு : ஒரு நிரலாக்கப் பணி முயற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மூழ்கிவிடும் நிலை.

default button : முன்னிருப்புப் பொத்தான்; முன்தேர்வுப் பொத்தான்; தானியல்புப் பொத்தான் : ஒர் இயக்க முறைமையிலோ அல்லது ஒரு பயன்பாட்டுத் தொகுப்பிலோ ஒரு சாளரம் திரையில் தோன்றும்போது, அதிலுள்ள இயக்குவிசைப் பொத்தான்களில் ஒன்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் இருக்கும். விசைப் பலகையிலுள்ள நுழைவு (Enter) விசையை அழுத்தும் போது, தேர்வு செய்யப்பட்ட நிலையிலிருக் கும் பொத்தான் அழுத்தப்பட்டு அதற்குரிய செயல்பாடு நிகழ்த்தப்படும்.

default editor: முன்னிருப்புத் தொகுப்பி.

default home page : முன்னிருப்பு முகப்புப் பக்கம்; தானியல்பு முகப்புப் பக்கம் : இணைய உலாவின்போது, கோப்புப் பெயர் எதையும் குறிப்பிடாமல் ஒரு வலைத்தளத்தின் கோப்பகத்தை மட்டும் குறிப்பிட்டு அணுகும்போது, குறிப்பிட்ட பெயருள்ள கோப்பினை வழங்குமாறு, வலை வழங்கன் கணினியில் நிரல் அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் கோப்பின் பெயர் பெரும்பாலும், index.htm, index.html, main.html என்பதாக இருக்கும்.

default operator : முன்னிருப்பு செயற்குறி, கொடாநிலை செயற்குறி.

defect : குறைபாடு.

definite iteration : முடிவுறு மடக்கச் செயல்; குறித்த எண்ணிக்கையில் திரும்பச் செய்தல்.

default printer : முன்னிருப்பு அச்சுப் பொறி; முன்தேர்வு அச்சுப்பொறி : ஒன்றுக்கு மேற்பட்ட அச்சுப்பொறிகள் நிறுவப்பட்டுள்ள ஒரு கணினியில், ஒரு குறிப்பிட்ட அச்சுப்பொறி முன்னிருப்பாகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இருக்கும். எந்த அச்சுப் பொறியில் அச்சிடுவது என்பதைக் குறிப்பிடாமலே, அச்சிடக் கட்டளை தரும்போது, முன்னிருப்பாகக் குறிக்கப்பட்ட அச்சுப்பொறியில் அச்சிடப்படும்.

Defense Advanced Research Projects Agency : பாதுகாப்பு உயர்நிலை ஆய்வுத் திட்டப்பணி முகமை : பல்வேறு கணினிப் பிணையங்களை இணைத்து ஒருங்கிணைத்த கட்டமைப்பை உருவாக்கும் ஆய்வுக்காக அமெரிக்க அரசு அமைத்த முகமை. ஆர்ப்பா (ARPA), டார்ப்பா (DARPA) என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பிணைய களின் கட்டமைப்பே இன்றைய இணையமாகப் பரிணமித்துள்ளது.

deferred processing : ஒத்தி வைக்கப்பட்ட செயலாக்கம்; தாமதித்த செயலாக்கம் : தகவல், தொகுதி தொகுதியாகப் பெறப்பட்டு சேமிக்கப்பட்டபின் மேற்கொள்ளப்படும் செயலாக்கம்.

defined function key, user: பயனாளர் வரையறுத்த பணிவிசை.

deformation : உருச்சிதைவு : பல்லூடக மற்றும் கணினிவழி வடிவாக்கப் பயன்பாடுகளில், உருவாக்கப்பட்ட வடிவ மாதிரிகளில், மென்பொருள் கருவிகளின் உதவியுடன், செய்யப் படும் நீட்சி, சுருக்கம், வளைத்தல், முறுக்குதல் போன்ற உருவ மாற்றங்கள்.

delete all : அனைத்தும் அழி; அனைத்தும் நீக்கு.

delete file : கோப்பை நீக்கு.

delete key : நீக்கல் விசை அழித்தல் விசை : 1. ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு விசை. விசைப்பலகையில் Del என்று குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இந்த விசையை அழுத்தியவுடன் சுட்டுக் குறியின் உ அடுத்துள்ள எழுத்து அழிக்கப்படும். ஆனாலும் வேறுசில பயன்பாடுகளில், தேர்வு செய்யப்பட்ட உரைப்பகுதி அல்லது வரைகலைப் படத்தை நீக்கிவிடும். 2. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் ஏடிபி மற்றும் விரிவாக்க விசைப் பலகைகளில் உள்ள விசை, செருகு குறிக்கு முந்தைய எழுத்தை அழிக்கும். அல்லது தேர்வு செய்யப்பட்ட உரைப் பகுதியையோ, வரைகலைப் பகுதியையோ அழிக்கும்.

delete record : ஏட்டை நீக்கு.

delete sheet : நாளை நீக்கு.

delay line : சுரக்க வழி.

delevery challon : விநியோகத் தகவல்.

Delphi Information Service : டெல்ஃபி தகவல் சேவை . அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள இணையச் சேவை நிறுவனம் வழங்கும் இணையத் தகவல் சேவை.

demand driven processing : தேவை முடுக்கு செயலாக்கம்: தகவல் பெறப்பட்ட உடனேயே நடைபெறும் செயலாக்கம். இதுபோன்ற நிகழ் நேரச் (Realtime) செயலாக்கத்தின் காரணமாய் செயலாக்கப்படுத்தாத தகவலைச் சேமித்து வைக்கத் தேவையில்லாமல் போகிறது.

demonstrative education : செயல்முறை விளக்கக் கல்வி.

demodulation : பண்பிறக்கம் : கணினிகளுக்கு இடையேயான தகவல் தொடர்பில், பண்பேற்றம் செய்யப்பட்ட மின்காந்த அலை வடிவிலான சமிக்கைகளைப் பண்பிறக்கம் செய்து மீண்டும் இலக்க முறை (digital) வடிவிலான தகவலாக மாற்றி கணினியில் செலுத்த வேண்டும். பண்பேற்றம், பண்பிறக்கம் செய்து இணக்கமான தகவல் வடிவத்திற்கு மாற்ற இணக்கி (modem) என்னும் கருவி பயன்படுகிறது.

demonstration programme : சான்று விளக்க நிரல்; முன்மாதிரி நிரல் : 1. உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு நிரலின் செயல்திறனை விளக்கும், அந்நிரலின் ஒரு முன்மாதிரி வடிவம். 2. ஒரு நிரலை விற்பனைக்குக் கொண்டுவரும்முன் அதன் செயல் திறனை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சுருக்கமான வடிவ முன்மாதிரி.

density, bit : துண்மி (பிட்) அடர்த்தி.

density, Character: எழுத்து அடர்த்தி.

density, double : இரட்டை அடர்த்தி.

density, packing : பொதி அடர்த்தி.

density, recording : பதிவடர்த்தி.

density, single : ஒற்றை அடர்த்தி.

density, storage : சேமிப்பு அடர்த்தி.

denizen: டெனிஸன்: இணையத்தில் செய்திக் குழுவில் பங்குபெறும் ஒரு வரை இவ்வாறு அழைக்கின்றனர்.

departmental processing : துறைசார் செயலாக்கம்.

dependent : சார்ந்திருப்பு.

dereference : சுட்டு விளக்கம் ; மறைமுகச் சுட்டு : நினைவகத்தில் இருத்திவைக்கப் பட்டுள்ள ஒரு மதிப்பினை அணுக முகவரிச் சுட்டு (Pointer) என்னும் கருத்துரு சில நிரலாக்க மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது. சுட்டு என்பது அம்மதிப்பு பதியப்பட்டுள்ள முகவரியையே குறிக்கும். அம்முகவரியில் இருத்தி வைக்கப்பட்டுள்ள மதிப்பினை எடுத்தாள அச்சுட்டினையே மறைமுகமாய் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

(எ-டு) ; சி மற்றும் சி++ மொழிகளில்

int *p ; int n = 5; p = & n ;

என்று கட்டளை அமைக்கலாம். p என்பது, 5 என்னும் மதிப்பு இருத்தி வைக்கப்பட்டுள்ள முகவரியைக் குறிக்கும். p என்பது 5 என்னும் மதிப்பைக் குறிக்கும். இவ்வாறு ஒரு முகவரிச் சுட்டு மூலம் அம்முகவரியிலுள்ள மதிப்பை மறைமுகமாகச் சுட்ட முடியும்.

Derived class : தருவித்த இனக்குழு; உட்குழு, தருவித்த வகுப்பு: பொருள் நோக்கிலான நிரலாக்கத்தில், ஒர் இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இன்னோர் இனக்குழு. அடிப்படை இனக்குழுவின் (Base Class) அனைத்து பண்பியல்புகளையும் தருவித்த இனக்குழு கொண்டிருக்கும். அதே வேளையில் அடிப்படை இனக்குழுவில் இல்லாத புதிய உறுப்புகளையும், செயல் முறைகளையும் சேர்த்துக்கொள்ள முடியும். சில செயல்முறைகளை மாற்றியமைக்கலாம். மறுவரையறை செய்யலாம்.

derived font : தருவித்த எழுத்துரு : ஏற்கெனவே இருக்கும் ஒர் எழுத் துருவை சற்றே மாற்றியமைத்து உருவாக்கப்படும் புதிய எழுத்துரு. இப்போது பயன்பாட்டில் உள்ள வரைகலை அடிப்படையிலான மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள எழுத்துருக்களின் உருவளவுகளை மாற்றி புதிய எழுத்துகளை உருவாக்க முடியும்.

derived relation : தருவித்த உறவு முறை : ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட உறவு முறைகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய உறவு முறை.

DES : டெஸ்; டிஇஎஸ் : தகவல் மறையாக்கத் தரநிர்ணயம் எனப் பொருள்படும் (Data Encryption Standard) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1976ஆம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு அமெரிக்க அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணினித் தகவல் மறையாக்கத்துக்கான வரையறைகள். டெஸ், 56 துண்மி மறைக் குறியைப் பயன்படுத்துகிறது.

descendant : வாரிசு : 1. பொருள் நோக்கிலான நிரலாக்கத்தில் ஓர் இனக்குழுவிலிருந்து தருவிக்கப்பட்ட இனக்குழு அதன் வாரிசு என அழைக்கப்படுகிறது. தாத்தா, தந்தை, மகன் என்ற உறவுமுறையைப் போன்றது. 2. கணினிச் செயலாக்கத்தில், ஒரு குறிப்பிட்ட செயலாக்கம் (ஒரு நிரல் அல்லது ஒரு பணி) இன்னொரு செயலாக்கத்தினால் பயன்படுத்திக் கொள்ளப்படும்போது, மூலச் செயலாக்கத்தின் சில பண்பியல்புகளை அழைத்த செயலாக்கம் மரபுரிமையாகப் பெறும்.

decending : இறங்குமுகம்.

descending sort : இறங்குமுக வரிசையாக்கம் : ஒரு பட்டியலுள்ள உறுப்புகளை இறங்குமுக வரிசை முறைப்படுத்தல். Zஇல் தொடங்கி A -யில் முடியுமாறும், எண்களைப் பொறுத்தவரை பெரிய எண்ணில் தொடங்கி சிறிய எண்ணில் முடியுமாறும் வரிசைப்படுத்தல்.

description : விவரிப்பு.

description, data : தகவல் விவரிப்பு.

design : வடிவாக்கம்; வடிவமைப்பு.

design cycle : வடிவமைப்புச் சுழற்சி.

design error : வடிவமைப்புப் பிழை.

design problem : வடிவமைப்புச் சிக்கல்.

design review : வடிவமைப்புச் சீராய்வு; வடிவமைப்பு மீள்பார்வை. design, systems : முறைமை வடிவமைப்பு.

design template : வடிவமைப்பு படிம அச்சு.

design time : வடிவமைப்பு நேரம்.

desktop conferencing : கணினிக் கலந்துரையாடல் கணினிக் கருத்தரங்கு : தொலைதூர ஊர்களில் உள்ளவர்கள், ஒரே நேரத்தில் கணினி வழியாகக் கூடிப் பேசல். அவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து உரையாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இத்தகவல் தொடர்பில் பயன்பாட்டு நிரல்களிலுள்ள தகவல்கள் மட்டுமின்றி கேட்பொலி(audio) ஒளிக்காட்சி (video) தகவல் பரிமாற்றமும் இயலக் கூடியதே.

desktop enhancer : மேசைக் கணினித் திறன்கூட்டி : மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ், மேக் ஓஎஸ் போன்ற சாளரக் காட்சி அடிப்படையிலான இயக்க முறைமைகளின் செயல்பாட்டுத் திறனைக் கூட்டும் மென்பொருள் தொகுப்பு. திறன் மிகுந்த கோப்பு உலாவி, இடைச் சேமிப்புப் பலகை (clipboard) மற்றும் Listort & Qué5) (multimedia player) போன்ற வசதிகள் இதில் அடங்கும்.

desktop management interface : கணினிவழி மேலாண்மை இடைமுகம்.

desktop video : மேசைக் கணினி ஒளிக்காட்சி; ஒளிப்படங்களைத் திரையிட சொந்தக் கணினியைப் பயன்படுத்துதல். ஒளிக்காட்சிப் படங்களை ஒளிக்காட்சிச் சுருளில் பதிவு செய்யலாம். அல்லது லேசர் வட்டுகளில் பதியலாம். அல்லது படப்பிடிப்புக் கருவி மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு பதியப்பட்ட ஒளிக்காட்சிப் படங்களை இலக்கமுறை (digital) வடிவில் அனுப்பி ஒரு பிணையத்தின் மூலம் நிகழ்படக் கலந்துரையாடலில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

desktop file : மேசைக் கணினிக் கோப்பு : ஆப்பிள் மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் ஒரு வட்டிலுள்ள கோப்புகளின் விவரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்பு. இக்கோப்பு மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

despatch : அனுப்பு.

destination file : சேரிடக் கோப்பு.

destination, object : சேரிட இலக்கு.

destructive operation : சிதைப்பச் செயல்பாடு; அழிப்புச் செயல்பாடு.

destructive read: அளித்திடும் படிப்பு : சிலவகை நினைவக அமைப்புகளின் பண்பியல்பு. நினைவக இருப்பிடத்திலுள்ள தகவலைப் படிக்கும்போது அத்தகவல் செயலிச் சில்லுவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் நினைவகத்திலுள்ள தகவல் அழிக்கப் பட்டுவிடும். இத்தகைய நினைவக அமைப்பில் அழிக்கப்பட்ட இடத்தில் தகவலை மறுபடியும் எழுதுவதற்கு தனிச் சிறப்பான நுட்பம் தேவைப்படும்.

detail band : விவர கற்றை.

detail view : விளக்கமான பார்வை; விளக்கக் காட்சி.

determinant : தீர்வுப் பண்பு : தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஒர் அட்டவணையில் ஒரு பண்புக் கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கூறு அல்லது பண்புக்கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்குமாயின், அத்தகைய பண்புக் கூறு/கூறு determinism 138 DIA

களை தீர்வுப் பண்பு என்கிறோம். சார்ந்து நிற்கும் பண்புக் கூறு/கூறுகளை சார்புப் பண்பு எனலாம்.

determinism : முன்னறி திறன் : கணினிவழிச் செயல்பாடுகளில், பலன் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கும் திறன். ஒரு செயலாக்க முறைமையில் தகவல் எவ்வாறு கையாளப்படும் என்பதை முன்கூட்டி அறிதல். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட உள்ளீடுகளைத் தரும்போது, குறிப்பிட்ட வெளியீட்டையே எப்போதும் தரக்கூடிய பாவிப்பு (Simulation) முன்னறியக்கூடிய பாவிப்பு (A Deterministic Simulation) எனப்படுகிறது.

development : உருவாக்கம்.

development cycle : உருவாக்கச் சுழற்சி; உருவாக்கப் படிநிலை : ஒரு பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு உருவாக்கலில் தேவைகளை ஆய்வு செய்தல் தொடங்கி முழுமையாக்கப்பட்ட தொகுப்பை வெளிக் கொணர்வது முடிய, இடைப்படும் பல்வேறு செய லாக்கப் படிமுறைகள். பகுப்பாய்வு, வடிவாக்கம், முன்மாதிரி உருவாக்கம், நிரலாக்கம், சரிபார்ப்பு, நிறுவுதல், பராமரிப்பு போன்ற பல்வேறு படிநிலைகள் உள்ளன.

developement library support : உருவாக்க நூலக உதவி; உருவாக்க உதவி நூலகம்.

developer : உருவாக்குபவர்.

development life cycle : உருவாக்க காலச் சுழற்சி.

device address : சாதன முகவரி : ஒரு கணினியின் ரோம் (RAM) நினைவகத்துள், நுண்செயலி அல்லது ஏதேனும் ஒரு புறச் சாதனத்தால் மாற்றியமைக்கக் கூடிய நினைவக இருப்பிடம். நுண்செயலியினால் மட்டுமே மாற்றியமைக்கக்கூடிய நினைவக இருப்பிடங்களிலிருந்து சாதன முகவரிகள் மாறுபட்டவை. புறச் சாதனங்களும் இவற்றை மாற்றியமைக்க முடியும்.

device, direct access storage : நேரணுகு சேமிப்பகச் சாதனம்.

device, external: புற நிலைச் சாதனம்.

device, input : உள்ளீட்டுச் சாதனம்.

device, intelligent : நுண்ணறிவுச் சாதனம்.

device manager : சாதன மேலாளர் : ஒரு கணினியில் வன்பொருளின் தகவமைவு அமைப்புகளை (Configuration Settings) பார்வையிடவும், மாற்றியமைக்கவும் உதவிடும் ஒரு மென்பொருள் பயன்பாட்டு நிரல். எடுத்துக்காட்டாக, குறுக்கீடுகளின் (interrupts) அடிப்படை முகவரிகள், நேரியல் (Serial) தகவல் தொடர்பின் அளபுருக்களை (Parameters) பார்க்கவோ; மாற்றவோ முடியும்.

device, communication : தகவல் தொடர்புச் சாதனம். device mode: சாதனக் கணு.

device options : சாதன விருப்பத் தேர்வுகள்.

devorak keyboard : துரோவக் விசைப் பலகை

DIA : டயா; டிஐஏ : ஆவணப் பரிமாற்றக் கட்டுமானம் என்று பொருள்படும் (Document Interchange Architecture என்னும் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் முறைமைப் பிணையக் கட்டுமானத்தில் (Systems Network Architecture-SNA) ஆவணப் பரிமாற்றம் தொடர்பாக வரையறுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள். வெவ்வேறு வகைக் கணினிகளுக்கிடையே அனுப்பி வைப்பதற்கு ஆவணங்களை ஒழுங்குபடுத்தி முகவரியிடும் வழி முறைகளை டயா வரையறுத்துள்ளது.

diacritical mark : பிரித்தறி குறியீடு; ஒலிபிரித்தறி அடையாளம் : ஓர் எழுத்தின் மேலே அல்லது கீழே அல்லது நடுவே, உச்சரிப்பை வேறு படுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடு. எடுப்போசை (acute) படுத்தல் மற்றும் ஒலியழுத்த (grave) குறியீடுகளாக பயன்படுகின்றன.

diagnosis : ஆய்ந்தறி.

diagnostic : ஆய்ந்தறிதல் ; பழுதறிதல்.

diagnostic programme : பழுதறி நிழல்.

diagnostic compiler : பழுதறி தொகுப்பி; பழுதறி மொழிமாற்றி :

diagram; block: தொகுதி வரைபடம்.

diagram, circuit : மின்சுற்று வரைபடம்.

diagram, flow : பாய்வு வரைபடம்.

diagram, network: பிணைவு வரைபடம்.

diagram, wiring: கம்பி சுற்று வரைபடம்.

dialing properties : எண் சுழற்று பண்புகள்.

dialogue management : உரையாடல் மேலாண்மை.

dialogue window : உரையாடல் சாளரம், சொல்லாடற் பலகணி.

dial-up : தொலைபேசிவழி, தொலை பேசி இணைப்பு மூலமாக : ஒரு பிணையக் கணினியுடன் பொதுத் தொலைபேசி வழியாக இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளும் முறை. தனியான தடங்கள் மற்றும் ஏனைய தனியார் பிணையத் தொடர்புகள் மூலமாக ஏற்படுத்திக்கொள்ளும் இணைப்பிலிருந்து மாறுபட்டது.

dial up access : தொலைபேசிவழி அணுகல் : ஒரு தகவல் தொடர்புப் பிணையத்துடன், தொலைதொடர்புத் துறையினரின் தொலைபேசி வழியாக ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்பு.

dialup adapter : தொலைபேசிவழித் தகவி.

dial-up IP : தொரைபேசிவழி ஐபீ.

dial-up modem : தொலைபேசி மோடம்.

dial-up service : தொலைபேசி அணுகல் சேவை : உள்ளூர் அல்லது உலகளாவிய பொதுமக்களுக்கு தொலைபேசிச் சேவையை வழங்கி வரும் ஒரு நிறுவனம், இணையம் (Internet), அக இணையம் (Intranet) ஆகியவற்றை அணுகுவதற்கு வழங்கிவரும் சேவை. செய்திச் சேவைகளையும், பங்குச் சந்தை விவரங்களையும் அணுக இச்சேவை துணைபுரியும்.

dial-up networking : தொலைபேசி வழி பிணைப்பு: தொலைபேசி வழி இணைப்புப் பெறும் பிணையம்.

diary management : நாட்குறிப்பு பதிவு மேலாண்மை.

disaster recovery specialist : சேதமீட்புச் சிறப்பாளர்; இடர் மீட்சி வல்லுநர்.

DIB : டிப்; டிஐபி : 1. சாதனம் சாரா துண்மிப் படம் என்று பொருள்படும் dibble

Device independent Bitmap stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒரு பயன்பாட்டு மென் பொருளில் உருவாக்கிய துண்மி வரைகலைப் படத்தை, அந்தப் பயன்பாட்டில் தோற்றமளிப்பது போலவே இன்னொரு பயன்பாட்டு மென்பொருளிலும் காண்பதற்கு ஏதுவான கோப்பு வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட படம். 2. கோப்பகத் தகவல் தளம் என்று பொருள்படும் Directory Information Base என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். எக்ஸ்.500 முறைமையில் பயனாளர்கள் மற்றும் வளங்களின் பெயர்களைக் கொண்ட ஒரு கோப்பகம். இந்தக் கோப்பகம், ஒரு கோப்பக வழங்கன் முகவரால் (Directory Server Agent - DSA) பராமரிக்கப்படுகிறது.

dibble : தகவல் குறைவு.

dictionary, automatic : தானியங்கு அகரமுதலி.

differential : வேறுபாட்டளவை மின்னணுவியலில் ஒரு குறிப்பிட்ட வகை மின்சுற்றைக் குறிப்பிடுகிறது. இந்த மின்சுற்று இரண்டு சமிக்கை களுக்கிடையே உள்ள வேறு பாட்டைப் பயன்படுத்திக் கொள்ளும். வருகின்ற ஓர் உள்ளிட்டு சமிக்கையை வேறொரு உள்ளிருப்பு மின் அழுத்தத்துடன் ஒப்பிடாது.

differentiator : வேறுபாட்டலவி: வேறுபாட்டளவைக் கருவி; மாறு பாடளப்பான் : உள்ளிட்டு சமிக்கை என்ன வேகத்தில் மாறிக் கொண் டிருக்கிறது என்பதை அளக்கும் மின்சுற்று. இந்த மின்சுற்றின் வெளிபீட்டு மின் அளவு, உள்ளிட்டு சமிக்கை மாறும் வேக விகிதத்துக்கு நேர்விகிதத்தில் இருக்கும். x என்பது உள்ளிட்டு சமிக்கை, t என்பது நேரம் எனில், இந்த மின்சுற்றின் வெளி யீட்டளவு dxidt ஆகும்.

digest : சுருக்கத் தொகுப்பு : 1. இணையத்திலுள்ள செய்திக் குழுவில், இடையீட்டாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் சுருக்கங்களைக் கொண்ட தொகுப்பு. 2. ஒரு அஞ்சல் பட்டியலிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் தனித்தனிக் கட்டுரைகளுக்குப் பதிலாக அவற்றின் சுருக்கங்களைத் தொகுத்து அனுப்பி வைக்கப்படும் ஒரு செய்தி. அஞ்சல் பட்டியலுக்கு ஒர் இடையீட்டாளர் இருப்பின் அச்சுருக்கத் தொகுப்பு திருத்திச் சீரமைக்கப்படலாம்.

digit, binary coded : இருமக் குறிமுறை இலக்கம்.

digit, check : சரிபார்ப்பு இலக்கம்.

digit, octal: எண்ம இலக்கம்: எட்டியல் இலக்கம்.

digit place : இலக்க இடம்.

digit punching place : இலக்க துளையிடுமிடம்.

digit, sign : அடையாள இலக்கம்: குறியீட்டு இலக்கம்.

digital audio/video connector : இலக்கமுறை கேட்பொலி/ஒளிக் காட்சி இணைப்பி : சில உயர்திறன் ஒளிக்காட்சி அட்டைகளிலும் (தொலைக்காட்சி டிவி) தடத்தேர்வு அட்டைகளிலும் இருக்கும் இடைமுகம். இதன் மூலம் இலக்கமுறை கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சி சமிக்கைகளை ஒரே நேரத்தில் அனுப்ப முடியும். டிஏவி இணைப்பி எனச் சுருக்கமாவும் அழைப்பர். digital camera : இலக்கமுறை படப்பிடிப்புக் கருவி, எண்ணுருப் படமாக்கி : வழக்கமான ஃபிலிமிற்குப் பதிலாக மின்னணு முறையில், பட உருவங்களைப் பதிவுசெய்யும் கருவி. இக்கருவியில் மின் ஏற்றப்பட்ட சாதனம் (Charge-Coupled Device-CCD) உள்ளது. இயக்குநர், படக்கருவியின் மூடியைத் திறக்கும் போது, லென்ஸ் வழியாக பட உருவத்தை சிசிடி உள் வாங்குகிறது. பிறகு அப்பட உருவம், படக் கருவியின் உள்ளே இருக்கும் நிலை நினைவகம் அல்லது நிலைவட்டில் சேமிக்கப்படுகிறது. படக்கருவியுடன் தரப்படும் மென்பொருளின் உதவியுடன் பதியப்பட்ட படஉருவத்தை கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வருடுபொறி மற்றும் அது போன்ற உள்ளீட்டுக் கருவிகள் மூலம் கணினியில் கையாளும் படங்களைப் போன்றே படப்பிடிப்புக் கருவி மூலம் கணினியில் பதிவு செய்யப்பட்ட படத்தையும் நாம் விரும்பியவாறு திருத்தி, சீரமைத்து வைத்துக் கொள்ளலாம்.

digital clock : இலக்கக் கடிகாரம்.

digital data storage : இலக்கமுறை தரவுச் சேமிப்பு.

digital display : இலக்கமுறை திரைக்காட்சி; எண்ணுருத் திரைக் காட்சி : ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிறங்களில் அல்லது சாம்பல் நிறத்தில் மட்டுமே நிகழ் படத்திரைக்காட்சி சாத்தியமாகும் காட்சிமுறை. ஐபிஎம் அறிமுகப்படுத்திய ஒருநிறக் (Monochrome) காட்சி, சிஜிஏ (Colour Graphics Array), இஜிஏ (EGA-Enhanced Graphics Array) ஆகியவை இவ்வகையைச்சேர்ந்தவை.

digital image processing : இலக்கமுறைப் படிமச் செயல்முறை.

digital imaging : இலக்கமுறைப் படிமமாக்கல்.

digital line : இலக்க முறை இணைப்புத் தடம்; எண்ணுரு வழித்தடம் : இருமக் குறியீட்டு வடிவிலான தகவலை மட்டுமே ஏந்திச் செல்லும் தகவல் பரிமாற்ற இணைப்புத் தடம். தகவல் சிதைவு மற்றும் இரைச்சல் குறுக்கீடுகளைக் குறைப்பதற்கு இலக்கமுறை இணைப்புத் தடத்தில், தகவல் சமிக்கைகளை மீட்டுருவாக்கம் செய்யும் திறன்மிகுப்பு நிலையங்கள் (Repeaters) பயன்படுத்தப் படுகின்றன.

digital linear tape: இலக்கமுறை வரிசை நாடா; எண்ணுரு வரிசை முறை நாடா ஒரு காந்தவகை சேமிப்பு ஊடகம். பாதுகாப்பு நகலெடுக்கப் பயன்படுகிறது.பழைய நாடாத் தொழில்நுட்பங்களைவிட வேகமான தகவல் பரிமாற்றம் இயலும்.

digital mail :இலக்கமுறை மின்னஞ்சல்,

digital micromirror display : இலக்கமுறை நுண்ணாடித் திரைக்காட்சி; எண்ணுரு நுண்ணாடித் திரைக்காட்சி : டெக்சஸ் இன்ட்ஸ்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் இலக்கமுறை திரைக்காட்சிக் கருவியில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுத் தொழில்நுட்பம். 0.002 மிமீ-க்கும் குறைவான அகலமுள்ள நுண்ஆடிகள் தொகுப்பாக ஒரு சிப்புவில் பொருத்தப்பட்டிருக் கும். இதனைத் திருகி ஒளியைப் பிரதிபலிக்கச் செய்து திரைக்காட்சி சாதனத்தின் லென்ஸ்மீது விழச் செய்யலாம். இதனால் மிகப் பிரகாசமான முழுவண்ணத் திரைக்காட்சியை உருவாக்க முடியும். 1,920x1,035 (1,987,200) படப்புள்ளிகளும் (pixels), 6 கோடியே 40 இலட்சம் நிறங்களும் கொண்ட தெளிவான திரைக்காட்சியை உருவாக்க முடியும்.

digital multipliear : இலக்கமுறை பன்முகப் பெருக்கி.

digital optical recording: இலக்கமுறை ஒளிவப் பதிவாக்கம்,

digital photography : இலக்கமுறை ஒளிப்படக்கலை; எண்ணுரு ஒளிப்படவியல் : இலக்கமுறை (எண்ணுரு) ஒளிப்படக் கருவியைப் பயன்படுத்தும் ஒளிப்படக்கலை. வழக்கமான ஒளிப்படத் தொழில்நுட்பத்திலிருந்து இலக்கமுறை ஒளிப்பட நுட்பம் மாறுபட்டது. ஓர் உருப்படத்தைப் பதிவுசெய்ய சில்வர் ஹேலைடு தடவிய ஃபிலிம் இலக்க முறை ஒளிப்படக் கருவியில் பயன் படுத்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, இலக்கமுறைப் படக்கருவி உருவப்படங்களை மின்னணு முறையில் பதிவுசெய்கிறது.

digital signal : இலக்கமுறை சைகை; இலக்கமுறை சமிக்கை.

digital signature : மின்னணுக் கையொப்பம்; இலக்கமுறைக் கையொப்பம்; எண்ணுருக் கையொப்பம்: மின்னணு ஆவணங்களில் பயன் படுத்தப்படும் இரகசியக் குறியீட்டு முறைக் கையொப்பம். ஒருவர் தானே உரிமைச் சான்றளிக்கும் முறையாகும். மறையாக்கத்தையும் (encryption), இரகசிய சான்றுறுதிக் குறியீட்டையும் அடிப்படையாகக் கொண்டது.

digital simultaneous voice and data : இலக்கமுறையில் ஒரே நேரத்தில் குரலும் தகவலும் : மல்ட்டி டெக் சிஸ்டம்ஸ் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ள ஒரு நவீனத் தொழில் நுட்பம். ஒற்றைத் தொலைபேசித் தடத்தில் உரையாடலையும், தரவுப் பரிமாற்றத்தையும் இயல்விக்கும் தொழில்நுட்பம். குரலை அனுப்ப வேண்டிய தேவை எழும்போது பொதித் தகவல் பரிமாற்ற முறைக்கு மாறிக் கொள்ளும். இலக்கமுறையாக்கப்பட்ட குரல் பொதிகள், கணினித் தகவல் மற்றும் கட்டளைப் பொதிகளோடு சேர்த்து அனுப்பி வைக்கப்படும்.

digital subscriber line: இலக்கமுறை வாடிக்கையாளர் இணைப்பு : இது ஓர் ஐஎஸ்டிஎன் பிஆர்ஐ இணைப்பு அல்லது தடம். வாடிக்கையாளரின் வளாகம் வரை இலக்கமுறைத் தகவல் பரிமாற்றம் இயலும். முந்தைய தொலைபேசித் தடத் தகவல் பரிமாற்றத்திலிருந்து மாறுபட்டது. சுருக்கமாக டிஎஸ்எல் (DSL) என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை வழித்தடத்தில் இணைய இணைப்புப் பெற்றால் 24 மணி நேர இணையத் தகவல் பரிமாற்றம் இயலும். அதிவேகத் தகவல் பரிமாற்றமும், குறைந்த நேரத்தில் அதிக அளவு பதிவேற்றமும் பதிவிறக்கமும் இயலும்.

digital telephone : இலக்கமுறைத் தொலைபேசி,

digital switching (DVI): இலக்கமுறை இணைப்பாக்கம்.

digital versatile disk: இலக்கமுறைப் பல்திறன் வட்டு,

digital video disc : ஒளிக்காட்சி வட்டு; எண்ணுரு நிகழ் பட வட்டு : அடுத்த தலைமுறை ஒளி வட்டுத் சேமிப்பகத் தொழில்நுட்பம். ஒரு குறுவட்டில் கேட்பொலி, ஒளிக்காட்சி மற்றும் கணினித் தகவல் ஆகியவற்றை ஒருசேரச் சேமித்துவைக்க இத்தொழில்நுட்பம் உதவுகிறது. வழக்கமான குறுவட்டைவிட அதிகமான தகவல்களை ஒரு இலக்கமுறை ஒளிக்காட்சி குறுவட்டு சேமிக்க முடியும். ஒருபக்க-ஓரடுக்கு வட்டில் 4.7 ஜி.பி வரை தகவலைச் சேமிக்க முடியும். ஒருபக்க ஈரடுக்கு வட்டில் 8.5 ஜி.பி வரை சேமிக்கலாம். இருபக்க -ஈரடுக்கு வட்டில் 17 ஜி.பி வரை சேமிக்கலாம். இந்த வட்டுகளைப் படிக்க தனியான இயக்ககம் (Drive) உண்டு. இந்த இயக்ககம் (Drive) பழைய லேசர் வட்டுகள், குறு வட்டுகள், கேட்பொலிக் குறுவட்டுகள் ஆகிய அனைத்தையும் படிக்கும். டிவிடி (DVI) என்பது தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

digital video disc-recordable : இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு - பதியமுடிவது: எண்ணுரு நிகழ்பட வட்டு - எழுதமுடிவது : பயன் பாட்டுக்கு வரப்போகின்ற, இலக்க முறை ஒளிக்காட்சி வட்டில் ஒரு வகை. நுகர்வோர் இந்த வட்டில் ஒரு முறை எழுதிக்கொள்ள முடியும்.

digital video disc-erasable : இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு - அழித்தெழுத முடிவது: எண்ணுரு நிகழ்படவட்டு - அழித்தெழுத முடிவது : பயன்பாட்டுக்கு வரப் போகிற ஒளிக் காட்சி வட்டில் ஒரு வகை. நுகர்வோர் இந்த வட்டில் உள்ள விவரங்களை பலமுறை அழித்து மீண்டும் எழுதிக்கொள்ள முடியும்.

digital video disc-ROM: இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு - படிக்க மட்டும்; எண்ணுரு நிகழ்பட வட்டு - படிக்க மட்டும் : இப்போது பயன்பாட்டில் உள்ள ஒளிக்காட்சி வட்டு. இதிலுள்ள விவரங்களைப் படிக்க மட்டுமே முடியும். அழித்தெழுத முடியாது. 4.7 மற்றும் 8.5 ஜி.பி கொள்ளளவுகளில் கிடைக்கின்றன. ஒருபுறம் ஒரடுக்கு, ஒருபுறம் ஈரடுக்கு இருபுறம் ஓரடுக்கு இருபுறம் ஈரடுக்கு என நான்கு முறைகளில் இந்த வட்டில் தகவல்கள் பதியப்படுகின்றன. அதிக அளவாக 17 ஜி.பி வரை தகவல் பதியமுடியும்.

Digital Video Interactive (DVI) : இலக்கமுறை ஒளிக்காட்சி உறவாடல்: எண்ணுரு நிகழ்பட ஊடாடல் : ஜெனரல் எலெக்ட்ரிக் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் இணைந்து, நுண்கணினிப் பயன்பாட்டுத் தொகுப்புகளுக்காக உருவாக்கிய, இலக்கமுறை ஒளிக்காட்சி மற்றும் கேட்பொலித் தகவல் சுருக்க முறை. வன்பொருள், மென்பொருள் இணைந்த ஓர் அமைப்பு.

Diku MUD : டிக்குமட் : 1. டச்சு நாட்டில் கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் துறையில் பணியாற்றிய ஐந்து பேரின் டேனிஷ் மொழித் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிக்கு (DIKU) உருவாக்கிய மென்பொருள், பல்பயனாளர் பாழ்பொந்து என்று பொருள்படும் Multi User Dungeon என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கத்துடன் (MUD) சேர்ந்து டிக்குமட் (DIKUMUD) என்றாயிற்று. டிக்குமட் பல்லூடகப் பயன்பாடு உடையது. பொருள் நோக்கிலானது. ஆனால் இவற்றின் இனக்குழுக்கள் (Classes) நிலைநிரல் (Hard code) கொண்டது. பயனாளர் தாம் விரும்பியவாறு மாற்றியமைக்க முடியாது. இந்த மென்பொருளுக்கு உரிமம் பெற்றவர்கள் பணத்துக்காக இதனை விற்பனை செய்ய முடியாது. 2. டிக்குமட் மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கணினி விளையாட்டும் இதே பெயரில் அழைக்கப்படுகிறது.


dimensional storage, two : இரு பரிமாணச் சேமிப்பு.


dimensional, multi பன்முகப் பரிமாணம், பல் பரிமாணம்.


dimensioning : பரிமாணமாக்கல்.


dimmed : மங்கிய தேர்வு; மறுக்கப் பட்ட : வரைகலைப் பணித்தளத்தில் நாம் நிறைவேற்ற விரும்பும் பணிகளை பட்டியலுள்ள தேர்வுகளில் ஒன்றைத் தேர்வுசெய்து இயக்க வேண்டும். சில சூழ்நிலைகளில் சில பட்டியல் தேர்வுகள் வெள்ளைப் பின்புலத்தில் கருப்பு எழுத்தில் இல்லாமல் மங்கிய சாம்பல் நிறத்தில் இருக்கும். கருப்புப் பின்புலத்திலுள்ள வெள்ளை எழுத்துகளும் மங்கிய நிலையில் இருக்கும். இவற்றைப் பயனாளர் தேர்வு செய்ய முடியாது. எடுத்துக்காட்டாக, சொல் செயலித் தொகுப்புகளில், உரைப்பகுதி எதையும் தேர்வு செய்யாத போது Cut, Copy என்ற விருப்பத் தேர்வுகள் மங்கிய நிலையில் இருக்கும். அதேபோல, ஏற்கெனவே ஒரு பகுதியை வெட்டியோ (Cut), நகலெடுத்தோ (Copy), இடைச் சேமிப்புப் பலகை (Clip Board)-யில் வைத்திராதபோது Paste என்னும் பட்டியல் தேர்வு மங்கலாக இருக்கும்.


DIN connector : டின் இணைப்பான்; டின் இணைப்பி : ஜெர்மன் தேசிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்


டின் இணைப்பி


(Deutsch Industries Norm - DIN) வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு இசைந்து உருவாக்கப்பட்ட பல்லூசி இணைப்பான். கணினியின் பல்வேறு உறுப்புகளை இணைப்பதற்கு டின் இணைப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.


diode transistor logic : டயோடு டிரான்சிஸ்டர் லாஜிக்; இருமுனைய மின்மப்பெருக்கி இணைப்புமுறை : ஒருதிசை இருமுனையம், மின்மப் பெருக்கி மற்றும் மின்தடுப்பி ஆகிய உறுப்புகளைக் கொண்ட ஒருவகை மின்சுற்று வடிவாக்கம். தருக்கமுறைச் செயல்பாடுகளுக்குப் பயன்படுகிறது.


diogonal : மூலைவிட்டம்.


dipole : இருதுருவம் : சிறிய இடை வெளியால் பிரிக்கப்பட்டுள்ள நேர்-எதிர் மின்செறிவுகள். இரு வேறு எதிரெதிர் காந்தத் துருவங்கள்.


dir : (டிர்) : டாஸ் இயக்கமுறைமையில் உள்ள கட்டளை. இக்கட்டளை இருப்புக் கோப்பகம் அல்லது கோப்புறையிலுள்ள கோப்புகள் மற்றும் உள்கோப்பகங்களின் பட்டியலைத் திரையில் காட்டும். ஒரு குறிப்பிட்ட கோப்பக அல்லது உள்கோப்பகத்தின் உள்ளடக்கத்தை யும் உரிய பாதையைக் குறிப்பிட்டு அறிய முடியும்.

direct access storage device : நேரடி அணுகு சேமிப்பகச் சாதனம்.

direct cable connection : நேரடி வடஇணைப்பு : இரண்டு கணினிகளை அவற்றின் உ/வெ (I/O) துறை வழியாக, இணக்கி அல்லது வேறெந்த இயங்கு இடைமுகச் சாதனங்களும் இன்றி, நேரடியான ஒற்றை வடம் மூலம் பிணைத்தல். பெரும்பாலும் இதுபோன்ற நேரடி இணைப்புகளுக்கு வெற்று இணக்கி வடம் (NUll Modem Cable) என்னும் சாதனம் தேவைப்படும்.

direct digital colour proof : நேரடி இலக்கமுறை வண்ண மெய்ப்பு.

direct distance dialing : நேரடி தொலைதுார அழைப்பு.

directive : பொதுஆணை; பணிப்பு.

Directory Access Protocol : கோப்பக அணுகு நெறிமுறை : எக்ஸ் 500 கிளையன் (Client)களுக்கும் வழங்கன் (Server)களுக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தும் நெறிமுறை.

directory replication : கோப்பக நேர் படியாக்கம் : ஏற்றுமதி வழங்கன் எனப்படும் வழங்கன் கணினியிலிருந்து கோப்பகங்களின் மூலத்தொகுதியை, அதே களப்பகுதியில் (domains) அல்லது வேறுகளப்பகுதியிலுள்ள இறக்குமதிக் கணினி எனப்படும் குறிப்பிட்ட வழங்கன்களிலோ பணிநிலையங்களிலோ நகலெடுத்து வைத்தல். இவ்வாறு நேர்படியாக்கம் செய்வதில் நன்மை உள்ளது. கோப்புகள் மற்றும் கோப்பகங்களின் ஒரே மாதிரியான தொகுதிகளை பல்வேறு கணினிகளில் பதிவுசெய்து வைத்துப் பராமரிக்கும் பணியை நேர்படியாக்கம் எளிமையாக்குகிறது. மூலத் தொகுதியின் ஒரேயொரு படியை மட்டும் பராமரித்தல் போதும்.

direct recovery plan : நேரடி மீட்புத் திட்டம்,

directory service : கோப்பக சேவை : பிணையத்திலிருக்கும் ஒரு சேவை. ஒரு பிணையத்தில் பணிபுரியும் பயனாளர் ஒருவர் பிற பயனாளர்களின் அஞ்சல் முகவரிகளை அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஒரு பயனாளர், பிணையத்திலுள்ள புரவன்கணினிகளையும் (hosts) சேவைகளையும் அறிந்து பயன் பெற உதவுகிறது.

direct processing : நேரடிச் செயலாக்கம் : ஒரு கணினி அமைப்பானது, தகவல் பெறப்பட்ட உடனேயே அதனை செயற்படுத்துவது. ஒத்திவைக்கப்பட்ட செயலாக்கத்துக்கு மாறானது. அதில், தகவல், பகுதி பகுதியாக சேமிக்கப்பட்டுப் பிறகு செயலாக்கம் நடைபெறுகிறது.

direct sequence : நேரடித் தொடர்வரிசை : அகலக் கற்றைத் தகவல் தொடர்பில், பண்பேற்றத்தின் ஒரு வடிவம். தொடர்ச்சியான இருமத் துடிப்புகளால் சுமப்பி அலை பண்பேற்றம் செய்யப்படுகிறது.

direct x : டைரக்ட் எக்ஸ் : கணினியின் ஒலி மற்றும் வரை கலைக்கான வன்பொருள் சாதனங்களை, ஒரு பயன்பாடு நேரடியாக அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தித் தரும் ஒரு மென்பொருள், இது விண்டோஸ் 95/98-ல் செயல்படக் கூடியது.

dirty : அழுக்கு; மாசு: தகவல் தொடர் புத் தடத்தின் தரத்தைக் குறிக்கப் பயன்படும் சொல். அதிகப்படியான இரைச்சல் காரணமாக தகவல் சமிக்கையின் தரம் தாழ்ந்து போதல்.

dirty bit: அழுக்கு பிட், மாசுத்துண்மி : முதன்மை நினைவகத்திலுள்ள தகவல் உடனடிப் பயன்பாட்டுக்கென இடைமாற்று (cache) நினைவகத்தில் இருத்தப்படுகிறது. அத்தகவல் மாற்றம் அடைந்துள்ளது என்பதைக் குறிக்கப் பயன்படும் துண்மி. இதனை அடையாளமாகக் கொண்டே முதன்மை நினைவகத்திலுள்ள தகவலும் மாற்றம் செய்யப்படுகின்றது.

dirty ROM: அழுக்கு ரோம்; அழுக்குறு அழியா நினைவகம் : படிக்க மட்டுமே முடிகிற (திருத்த/அழிக்க முடியாத) நினைவகத்தை ரோம் என்கிறோம்.

disabled folders : செயல் முடக்கப்பட்ட கோப்புறைகள் : மேக்ஓஎஸ் இயக்க முறைமையில் பல்வேறு கோப்புறைகள் இவ்வாறு ஆக்கப்பட்டுள்ளன. முறைமைக் கோப்புறையில் உள்ள பல்வேறு கோப்புகள், முறைமை நீட்டிப்புகள், கட்டுப்பாட்டு பாளங்கள் மற்றும் நீட்டிப்பு மேலாளர் (Extension Manager) எனப்படும் மென்பொருள் கருவிகொண்டு கணினியிலிருந்து நீக்கப்பட்ட ஏனைய உறுப்புகளையும் இக்கோப்புறைகள் கொண்டுள்ளன. செயல்முடக்கப்பட்ட கோப்புறையில் தற்போதுள்ள உறுப்புகள், கணினியை இயக்கும்போது தொடக்கத்தில் நிறுவப்படுவதில்லை. ஆனால், அதன்பிறகு நீட்டிப்பு மேலாளர் நிரலால் அவ்வுறுப்புகள், அவற்றின் இயல்பான கோப்புறைகளுக்கு தாமாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

disassociate : தொடர்புநீக்கம் : விண்டோஸ் 95/98/ என்டி இயக்க முறைமைகளில் ஒர் ஆவணம் ஏதேனும் ஒரு பயன்பாட்டு மென்பொருளுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, .doc என்ற துணைப்பெயர் கொண்ட ஆவணங்கள் வேர்டு பயன்பாட்டுடனும், xls ஆவணங்கள் எக்செல், .mdb ஆவணங்கள் அக்செஸ், .ppt ஆவணங்கள் பவர்பாயின்ட், .htm ஆவணங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகியவற்றுடனும் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன. இத்தொடர்பினை மாற்றியமைக்க முடியும். .bmp ஆவணங்கள் பெயின்ட் பயன்பாட்டுடன் தொடர்புபடுத்தப் பட்டுள்ளன. .bmp ஆவணம் ஒன்றின் பெயர்மீது இரட்டைக் கிளிக் செய்தால், அந்த ஆவணம் பெயின்ட் பயன்பாட்டில் திறக்கப்படும். இதனை மாற்றி, கோரல் பெயின்ட் பயன்பாட்டில் அல்லது பெயின்ஷாப் புரோவில் திறக்கும் படி செய்யலாம்.

disaster planning : பேரிடர் திட்டப்பதிகை.

disc : வட்டு; (குறிப்பாக ஒளிவட்டு): வட்டினைக் குறிக்க Disc, Disk ஆகிய இரண்டு சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. லேசர் ஒளிக்கதிர் மூலம் எழுத/படிக்க முடிகிற, காந்தத் தன்மையற்ற உலோகப் பூச்சுள்ள பிளாஸ்டிக் வட்டுகள் Disc என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. அவையல்லாத ஏனைய வட்டுகள், நெகிழ்வட்டு, நிலைவட்டு, ரேம் வட்டு (நினைவகத்தில் உருவாக்கப்படும் மெய்நிகர் வட்டு) ஆகியவை Disk என்ற சொல்லால் குறிக்கப்படு கின்றன. லேசர் வட்டு, குறுவட்டு, கேட் பொலி/ஒளிக்காட்சி வட்டு டிவிடி வட்டு ஆகியவை பெரும் பாலும் Disc என்று குறிக்கப்படுகின்றன. disconnect : துண்டிப்பு: துணி(த்தல்): ஒரு தகவல் தொடர்பு இணைப் பினைத் துண்டித்தல்.


discrete multitone : தொடர்ச்சியற்ற பல்தொனி: தொலை தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பம். இருக்கின்ற அலைக்கற்றையை இலக்கமுறை சமிக்கைச் செயலிகளால் பல்வேறு தடங்களாகக் கூறுபோட்டு, ஒர் இணைச் செப்புக் கம்பியில் 6 mbps '(வினாடிக்கு 60 இலட்சம் துண்மிகள்) தகவல்வரை அனுப்ப, இத் தொழில்நுட்பம் வகை செய்கிறது.


discretionary access control : தனி விருப்ப அணுகுக் கட்டுப்பாடு.


discussion groups : இணைய விவாதக் குழுக்கள்; இணையக் கலந்துரையாடல் குழுக்கள் : தமக்கிடையே பொதுவான ஆர்வமுள்ள பொருள்பற்றி கணினிப் பிணையத்தில் கலந்துரையாடும் பயனாளர்களைக் குறிக்கிறது. இணையத்தில் மின்னஞ்சல் பட்டியல், இணையச் செய்திக் குழுக்கள் மற்றும் ஐஆர்சி எனப்படும் இணையத் தொடர் அரட்டை போன்றவற்றைக் குறிக்கவே இப்போது இச்சொல்தொடர் பயன்படுத்தப்படுகிறது.


disk capacity : வட்டுக் கொள்ளளவு.


disk change : வட்டு மாற்று.


disk change sensor : வட்டு மாற்று உணரி.


disk cleanup : வட்டு செம்மை செய்.


disk, compact: குறுவட்டு.


disk controller : வட்டுக்கட்டுப்படுத்தி.


disk drive controller : வட்டு இயக்ககக் கட்டுப்படுத்தி.


disk drive, floppy : நெகிழ்வட்டு இயக்ககம்.


disk, hard : நிலைவட்டு.


disk interface : வட்டு இடைமுகம் : 1. வட்டகத்தை (disk drive) கணினியுடன் இணைக்கப் பயன்படும் இடையிணைப்பு மின்சுற்று அமைப்பு. 2. வட்டகங்களைக் கணினியுடன் இணைப்பதற்கென உருவாக்கப்பட்ட தர வரையறை. எடுத்துக்காட்டாக, எஸ்டீ506 (ST 506) என்பது, நிலைவட்டுகளை கணினியுடன் இணைக்கப் பின்பற்றப்படும் வட்டு இடைமுகத் தர வரையறை ஆகும்.

disk library : வட்டு நூலகம்.


disk, magnetic : காந்த வட்டு.

disk server : வட்டு வழங்கன்; வட்டு வழங்கன் கணினி : ஒரு குறும் பரப்புப் பிணையத்தில், பயனாளர்கள் பகிர்ந்து கொள்வதற்கான வட்டினைக் கொண்ட ஒரு கணுக் கணினி. இது கோப்புப் வழங்கனிலிருந்து (File Server) மாறுபட்டது. கோப்பு வழங்கன் பயனாளர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை ஏற்றுக் கோப்புகளை வழங்கும். மிகவும் நுட்பமான மேலாண் மைப் பணிகளையும் மேற்கொள்ளும். ஆனால் வட்டுவழங்கன் மேலாண்மைப் பணி எதுவும் செய்வ தில்லை. வெறுமனே ஒரு தகவல் சேமிப்பகமாகச் செயல்படும். பயனாளர்கள் வட்டு வழங்கனிலுள்ள கோப்புகளைப் படிக்கலாம்/எழுதலாம். வட்டு வழங்கனிலுள்ள வட்டினைப் பல்வேறு தொகுதி (Volume)களாகப் பிரிக்க லாம். ஒவ்வொரு தொகுதியும் ஒரு தனிவட்டுப் போலவே செயல்படும். disk storage 148 distributed processing

disk storage : வட்டுச் சேமிப்பகம்.

disk/track info : வட்டு/தடத் தகவல்.

dispatch table : அனுப்புகை அட்டவணை : குறுக்கீடு (interrupt) களைக் கையாளும் செயல்கூறுகள் (functions) அல்லது துணை நிரல்களின் முகவரிகளைக் கொண்ட அட்டவணை. ஒரு குறிப்பிட்ட சமிக்கை கிடைத்தவுடனோ, அல்லது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளிலோ நுண்செயலி, அட்டவணையில் குறிக்கப்பட்ட குறிப்பிட்ட துணைநிரலைச் செயல்படுத்தும்.

disperse : கலைத்தல்; பிரித்தல் : ஒரு குறிப்பிட்ட தகவல் தொகுதியைப் பிரித்து வெவ்வேறு இடங்களில் கிடைக்கும்படி செய்தல். எடுத்துக் காட்டாக அட்டவணைக் கோப்பிலுள்ள ஏடுகளில் (records) உள்ள புலங்களைப் (fields) பிரித்து, வெளியீட்டின்போது வெவ்வேறு இடங்களில் கிடைக்கச் செய்தல்.

display card : காட்சி அட்டை.

display control : காட்சிக் கட்டுப்பாடு.

display memory : காட்சி நினைவகம்.

display port : திரைக்கட்சித் துறை : கணினியிலுள்ள வெளியீட்டுத்துறை. காட்சித் திரை போன்ற வெளியீட்டுச் சாதனத்துக்குரிய சமிக்கைகளை இத்துறையின் வழியாகப் பெறலாம்.

dispose : முடித்துவை.

disable : முடக்கு.

distribute : பகிர்ந்தளி; பகிர்ந்தமை : ஒரு பிணையத்தில் பிணைக்கப்பட்டுள்ள கணினிகள் மற்றும் பிற சாதனங்களின் தொகுதியால் நிறை வேற்றப்படும் தகவல் செயலாக்கம் போன்ற செயல்பாடுகளை, பல்வேறு கணினிகளுக்கிடையே பகிர்ந்தமைத்தல்.

distributed bulletin board : பகிர்ந்தமை அறிக்கைப்பலகை : ஒரு விரிபரப்புப் பிணையத்திலுள்ள அனைத்துக் கணினிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்ற செய்திக் குழுக்களின் தொகுதி.

distributed computing : பகிர்ந்தமை கணிப்பணி.

distributed computing environment : பகிர்ந்தமை கணிப்பணிச் சூழல்; பகிர்மானக் கணிமைச் சூழல் : ஒன்றுக்கு மேற்பட்ட பணித்தளங்களில் செயல் படக்கூடிய பகிர்ந்தமை பயன்பாடுகளை உருவாக்குவதற்கான தர வரையறைத் தொகுப்பு. வெளிப்படை குழு என்ற குழுவினர் உருவாக்கியது. இக்குழு, முன்பு, வெளிப்படை மென்பொருள் அமைப்பு (Open Software Foundation) என்ற பெயரில் நிலவியது.

distributed database management system : பகிர்ந்தமை தரவுத்தள மேலாண்மை முறைமை : பகிர்ந்தமை தரவுத் தளங்களைக் கையாளும் திறன்பெற்ற ஒரு தரவுத் தள மேலாண்மை முறைமை.

distributed processing : பகிர்ந்தமை செயலாக்கம் : ஒரு தகவல் தொடர்புப் பிணையத்தில் பிணைக்கப்பட்ட தனித்தனிக் கணினிகளால் நிறை வேற்றப்படும் தகவல் செயலாக்கத்தின் ஒரு வடிவம். பகிர்ந்தமை செயலாக்கம் பொதுவாக இரண்டு வகைப்படும். 1. சாதாரண பகிர்ந்தமை செயலாக்கம். 2. உண்மையான தகவல் செயலாக்கம். சாதாரணத் தகவல் செயலாக்கத்தில், பணிச் சுமையானது, தமக்குள்ளே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிகிற கணினிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. உண்மையான பகிர்ந்தமை செயலாக்கத்தில், பல் வேறு பணிகள் ஒவ்வொரு கணினியும் ஒவ்வொரு பணியை நிறை வேற்றும் வகையில் பணிச்சுமை பகிர்ந்தளிக்கப்படுகிறது.பணிகளின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு ஒருபெரும் குறியிலக்கை அடைய வழிவகுக்கும்.

distributed processing system:பகிர்ந்தமைத் தரவு செயலாக்க முறைமை.

distributed transaction processing:பகிர்ந்தமை பரிமாற்றச் செயலாக்கம்: ஒரு பிணையத்தின் வழியாக தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளும் கணினிகள், பரிமாற்றச் செயலாக்கப் பணிகளை தமக்குள்ளே பகிர்ந்து கொள்ளும் முறை.

distribution list:பகிர்மானப் பட்டியல்;வினியோகப் பட்டியல்:ஒரு மின்னஞ்சல் குழு(mailing list)உறுப்பினர்களின் முகவரிப் பட்டியல்.இது லிஸ்ட்செர்வ்(Listserv)போன்ற ஒரு அஞ்சல்குழு மென்பொருளாகவோ, ஒரு மின்னஞ்சலைப் பெறுகின்ற அனைவருடைய முகவரிகளுக்கும் சேர்த்த ஒரு மாற்றுப் பெயராகவோ இருக்கலாம்.

distributive nature:பகிர்வுத் தன்மை; பகிர்ந்தளிக்கும் இயல்பு.

divergence:விலகல்:நேர்பாதையினின்று விலகிச்செல்லல். குறியிலக்கை விட்டு விலகிச்செல்லல். 1.கணினியின் வண்ணத் திரையில் அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றின் மின்னணுக் கற்றைகள் திரையின் ஒரு குறித்த இலக்கில் ஒருங்கிணைந்து குவியாதபோது இத்தகைய விலகல் ஏற்படுகிறது. 2.விரிதாள் பயன்பாடு போன்ற மென்பொருள்களில் ஒரு நிரலில் தவறான ஒரு வாய்பாட்டின் காரணமாக சுழல் தன்மை ஏற்பட்டு,கணக்கீடு,திரும்பத் திரும்ப செய்யப் படும் நிலை ஏற்படலாம்.ஒவ்வொரு கணக்கீட்டின் போதும் கிடைக்கும் முடிவு, விடையைவிட்டு விலகி விலகிச் செல்லும்.

dividend:வகு எண்;ஆதாயப் பங்கு.

division:பிரிவு.

division, identification:இனங்காண் பிரிவு.கோபால் மொழி நிரலின் ஒரு பகுதி.

divisor:வகுப்பி;வகு எண்.

division by zero:சுழியால் வகுத்தல்;பூச்சியத்தால் வகுத்தல்:வகுத்தல் கணக்கீட்டில் ஒர் எண்ணை பூச்சியத்தால்(0.சுழி)வகுக்க முயலும் போது ஏற்படும் பிழைநிலை.எந்தவொரு எண்ணையும் பூச்சியத்தால் வகுத்தால் எண்ணிலி(infinity)விடையாகும். கணித முறைப்படி கணிக்க முடியாத மதிப்பாகும் இது.அதாவது ஒரு வகுத்தல் கணக்கீட்டில் விகுதி (denominator) மிகச் சிறிதாகிக்கொண்டே போனால் கிடைக்கும் ஈவு பெரிதாகிக் கொண்டே போகும்.விகுதி ஏறத்தாழ பூச்சியத்துக்குச் சமமான மிகச் சிறிய மதிப்பாக இருக்குமெனில், ஈவானது ஒரு கணினியால் கணிக்க முடியாத அளவுக்குப் பெரிய எண்ணாக இருக்கும்.எனவே,பூச்சியத்தால் வகுக்கும் கணக்கீட்டை கணினி அனுமதிப்ப தில்லை.எனவே,நிரலர் இது போன்ற சூழ்நிலை ஏற்படாதவாறு தம்முடைய நிரலில் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.இல்லையேல் நிரல் செயல்படாமல் பாதியில் நிற்கும்.

.di:.டிஜே: இணையத்தில்,ஒர் இணைய தளம் டிஜிபவுட்டி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

.dk:.டிகே:இணையத்தில்,ஒர் இணைய தளம் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

.dll:டிஎல்எல்:விண்டோஸ் இயக்க முறையில் பயன்படுத்தப்படும் ஒரு வகைக் கோப்பின் வகைப்பெயர். இயங்குநிலை தொடுப்பு நூலகக் கோப்பு என்று பொருள்படும் Dynamic Link Library என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

DLC:டிஎல்சி:தகவல் தொடர்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் Data Link Controlஎன்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பிணையத்தில் பருநிலையில் இணைக்கப்பட்ட இரண்டு கணுக் கணினிகளிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் பிழைகளைச் சரிசெய்யும் நெறிமுறை,எஸெஏ(SNA-Systems Network Architecture)அமைப்பில் பயன்படுத்தப்படுகிறது.

DMA:டிஎம்ஏ:Direct Memory Access என்பதன் முதலெழுத்துக் குறும் பெயர். இதற்கு நேரடி நினைவக அணுகல் என்பது பொருளாகும்.

DMTF:டிஎம்டீஎஃப்:மேசைக் கணினி மேலாண்மைப் முனைப்புக் குழு என்று பொருள்படும் Desktop Management Task Forc என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பயனாளர் மற்றும் தொழில் துறைத் தேவைகளுக்காக பீசி அடிப்படையிலான தன்னந்தனிக் கணினி மற்றும் பிணைய அமைப்புகளுக் கான தர வரையறைகளை உருவாக்குவதற்கென 1992ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டமைப்பு.

DNS:டிஎன்எஸ்: 1. களப்பெயர் முறைமை என்று பொருள்படும் Domain Name System என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலிருக்கும் புரவன் கணினிகளின் களப்பெயர்(md2.vsnl.net.in) மற்றும் ஐபீ முகவரி(202.54.6.30) இவற்றை உடைய அமைப்பு. களப்பெயர் எளிதாகப் புரியக் கூடியது.பயனாளர்கள் பயன் படுத்துவது.இப்பெயர் தாமாகவே ஐ.பீ முகவரியாக மாற்றப்பட்டு இணையத்தின் தகவல் போக்கு வரத்துக்குப் பயன்படுத்தப்படும். 2.களப்பெயர் சேவை எனப்பொருள் படும் Domain Name Service என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். களப்பெயர்முறைமையை நடைமுறைப்படுத்தும் இணையப் பயன்பாடு. டிஎன்எஸ் வழங்கன்கள்(பெயர் வழங்கன் என்றும் அழைக்கப் படுவதுண்டு) களப்பெயரும் அதற்கிணையான ஐபி முகவரியும் இணைந்த ஒர் அட்டவணையைக் கொண்டுள்ளன.

DNS server:டிஎன்எஸ் வழங்கன்:களப் பெயர் சேவையைக் கவனித்துக் கொள்ளும் ஒரு கணினி.இணையத்திலிருக்கும் புரவன் கணினிகளின் பெயர்களையும் அதற்கிணையான ஐபி முகவரிகளையும் கொண்ட அட்டவணையை வைத்துள்ளன.microsoft.com என்பது இணையத்திலுள்ள ஒரு களப்பெயர் எனில்,அதற்குரிய நிறுவனக் கணினியின் ஐபி முகவரியைத் தரும்.

.do: டிஒ:இணையத்தில் ஒர் இணைய தளம் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங் களப்பெயர்.

.doc:.டாக், டி.ஓ.சி :ஒரு சொல் செயலியில் உருவாக்கப்படும் கோப்புகளின் இயல்பான வகைப்பெயர்.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வேர்டு தொகுப்பில் உருவாக்கப் படும் கோப்புகளின் வகைப்பெயர்.

document restore button:ஆவண மீட்டாக்கப் பொத்தான்.

document routing:ஆவணம் திசைவித்தல்.

document scanner:ஆவண வருடு பொறி.

document,source:மூல ஆவணம்.

documentation:ஆவணமாக்கம்.

documentation, programme:நிரல் ஆவணமாக்கல்.

dock:பொருத்து; இணை; பிணை: 1.ஒரு மடிக் கணினியை ஒரு நிலைக கணினியில் பொருத்துதல். 2. விண்டோஸ் பணித்தளத்தில் செயல் படும் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பில்,கருவிப்பட்டையை,பயன்பாட்டுச் சாளரத்தின் விளிம்புக்கு இழுத்துச் சென்றால்,கருவிப்பட்டை அச்சாளரத்தில் பொருந்திவிடும்.பயன்பாட்டுச் சாளரத்தின் ஒரு பகுதியாகவே தோற்றமளிக்கும்.விண்டோஸ் பயன்பாடுகளில் தாய்ச்சாளரத்துள் சேய்ச்சாளரமாக ஆவணச்சாளரம் திறக்கப்படும்.ஆவணச்சாளரத்தை பெரிதாக்கினால்(Maximize)அது தாய்ச் சாளரத்துடன் பொருந்தி ஒரே சாளரம்போல் தோற்றமளிக்கும்.

docking station:பொருத்து நிலையம்: ஒரு மடிக்கணினியை எங்கும் எடுத்துச் செல்லலாம்.காரில்,ரயிலில், விமானத்தில் செல்லும் போதுகூட வைத்துப் பயன்படுத்தலாம். ஆனாலும் அதிலுள்ள திரை, விசைப்பலகை போன்ற புறச்

பொருந்து நிலையம்
சாதனங்கள் கைக்கு அடக்கமாக மிகச்சிறியதாகவே இருக்கும்.வீட்டில்/ அலுவலகத்தில் இருக்கும்போது,மடிக்கணினியை ஒரு மேசைக் கணினியைப் போலப் பயன்படுத்த விரும்பலாம்.ஆனால் அதற்கு மேசைக் கணினியின் காட்சித் திரை,விசைப்பலகை,சுட்டி மற்றும் பிற

சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி வேண்டும்.இவ் வசதிகளைக் கொண்டதுதான் பொருத்து நிலையம். இக்கருவியில் ஒரு மடிக்கணினி,காட்சித் திரை,விசைப்பலகை,அச்சுப்பொறி,சுட்டி ஆகியவற்றைப் பொருத்திக்கொள்ள வசதி இருக்கும்.

doctype:ஆவணவகை;ஆவண இனம்:எஸ்ஜிஎம்எல்(SGML)ஆவணத்தின் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் அறிவிப்பு.ஒவ்வொரு எஸ்ஜிஎம்எல் ஆவணத்திலும் ஆவண வகையின் வரையறை(Document Type Difinition) குறிப்பிடப்பட வேண்டும்.

documentation and versioning:ஆவணமாக்கமும் பதிப்பாக்கமும்.

document centric:ஆவண மையமானது: இது ஒர் இயக்க முறை மையின் பண்புக்கூறு ஆகும்.முன்பிருந்த இயக்க முறைமைகள் நிரலை மையமாகக் கொண்டவை.அதாவது,ஒர் ஆவணத்தைத் திறக்குமுன் அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாட்டுத் தொகுப்பைத் திறக்க வேண்டும். பிறகு அதனுள்ளேதான் ஆவணத்தைத் திறக்க வேண்டும்.ஆனால் இப்போதுள்ள மெக்கின்டோஷ்,விண்டோஸ் இயக்க முறைமைகளில் ஒர் ஆவணத்தைத் திறப்பதற்குக் கட்டளை தந்தால் போதும்.அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாடு தானாகவே திறக்கப்பட்டு அதனுள்ளே ஆவணம் திறக்கப்படும்.எடுத்துக்காட்டாக,விண்டோஸ் இயக்கமுறைமையில் எம்எஸ்வேர்டு தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஒர் ஆவணத்தை சுட்டியால் இரட்டை கிளிக் செய்து திறந்தால்,வேர்டு தொகுப்பு,தானாகவே திறக்கப்பட்டு அதனுள்ளே வேர்டு ஆவணம் திறக்கப்படும்.ஒர் ஆவணம் எந்தத் தொகுப்பில் உருவாக்கப்பட்டது என்பதை அறியாமலே அந்த ஆவணத்தைப் பயனாளர் திறக்க முடியும்.

document close button:ஆவண மூடு பொத்தான்.

document distribution:ஆவணப் பகிர்மானம்.

document image processing:ஆவணப் படிமச்செயலாக்கம்.

document interchange architecture(DIA):ஆவணமாறுகொள்கட்டமைப்பு.

document management:ஆவண மேலாண்மை:ஒர் நிறுவனத்துக்குள் கணினிவழியாகப் பரிமாறிக் கொள்ளப்படும் மின்னணு ஆவணங்களை உருவாக்குதல்,வினியோகித்தல் போன்ற பணிகளுக்கான கோப்பு மேலாண்மை அமைப்பு.

document minimise button:ஆவணச் சிறிதாக்கு பொத்தான்.

document source:ஆவண மூலம்:வையவிரிவலையில்(www) காணப்படும் அனைத்து ஆவணங்களும் ஹெச்டிஎம்எல் மொழியில்

உருவாக்கபபட்டவை.அவை சாதாரண உரைக்கோப்புகள் ஆகும்.<HTML>,</HTML>, , , ,TR>என்பது போன்ற குறிசொற்களுடன்(Tags) உருவாக்கப்படுகின்றன. ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்பட்ட உரைக்கோப்பினை ஒர் இணைய உலாவியில்(Browser)பார்வையிடும்போது அழகான வடிவமைப்புடன் தோற்றமளிக்கும்.ஹெச்டிஎம்எல் மூல உரைக்கோப்பு, ஆவணமூலம் எனப்படுகிறது.இணையத்தில்(வைய விரிவலையில்) பார்வையிடுகின்ற மீவுரை(Hyper Text)ஆவணங்களின் மூல வரைவினை (Source Code)அதாவது ஆவண மூலத்தைப் பார்வையிட உலாவியிலேயே வசதி உண்டு. document style semantics and specification language:ஆவண பாணி தொடரிலக்கணம் மற்றும் வரையறுப்பு மொழி: உருவாகிக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஓ தர வரையறை.ஒரு குறிப்பிட்ட வடிவாக்கம் அல்லது செயலாக்கம் சாராத ஒர் ஆவணத்தின் உயர்தர வடிவாக்கம் தொடர்பான தொடரிலக்கணம் பற்றியது.தொடரிலக்கணத்துக்கான எஸ்ஜிஎம்எல் வரையறைக்குச் செழுமை சேர்ப்பதாய் அமையும். document window:ஆவணச் சாளரம்:மெக்கின்டோஷ்,விண்டோஸ் போன்ற வரைகலைப் பணித்தளத்தில் எந்தவொரு பயன்பாட்டுத் தொகுப்பும் ஒரு சாளரத்தினுள்ளேதான் காட்சியளிக்கும். அது போலவே அத்தொகுப்பில் ஒர் ஆவணத்தை உருவாக்குதலும் பார்வையிடுதலும் ஒரு தனிச்சாளரத் தினுள்ளேதான் நடைபெறும்.சில தொகுப்புகளில் இவையிரண்டும் இணைந்து ஒரே சாளரமாகத் தோற்றமளிப்பதும் உண்டு. வரைகலைப் பணித்தளத்தில் ஒர் ஆவணம் தோற்றமளிக்கும் சாளரம் ஆவணச் சாளரம் எனப்படுகிறது. DO loop :செய் மடக்கி:பெரும்பாலான கணினி மொழிகளில்,ஒரு குறிப்பிட்ட பணியைத் திரும்பத் திரும்பப் பலமுறை செயல்படுத்த கட்டுப்பாட்டு மடக்கி(control loop)என்னும் கட்டளை வடிவம் பயன் படுத்தப்படுகின்றது.For...Next,While..Wend,Do...Enddo போன்ற பல்வேறு கட்டளை வடிவங்கள் உள்ளன. DO என்னும் மடக்கி,ஃபோர்ட்ரான்,விசுவல் பேசிக், சி, சி++,சி ஷார்ப் ஜாவா, மொழிகளில் உள்ளது. domain name:களப் பெயர்;திணைப் பெயர்:ஒரு பிணையத்தில் ஒரு குறிப்பிட்ட வழங்கன் அல்லது புரவன் கணினியின் உரிமையாளரை அடையாளம் காட்டும் பெரும் படிமுறை அமைப்பில் அம்முகவரி அமையும்.எடுத்துக்காட்டாக,www.chennai telephones.gov.in என்ற முகவரி இந்தியாவிலுள்ள(in).அரசுக்குச் சொந்தமான(gov).சென்னைத் தொலைபேசி நிறுவனத்தின் வலை வழங்கன்(web server)என்பதைக் குறிக்கிறது. in என்பது புவியியல் பெரும் களம்(major geographical domain)எனவும், gov என்பது வகைப்படு பெருங்களம் எனவும்,chennai telephones என்பது உட்களம்(minor domain)எனவும் அறியப்படுகிறது. கணிமொழி.வணி தமிழ்.வலை யாகூ.நிறு.இந் என்பதுபோன்று தமிழ்மொழியிலேயே களப்பெயர்களை அமைத்துக் கொள்ளும் தொழில்நுட்பமும் வந்துவிட்டது. domain name address:களப் பெயர் முகவரி:இணையத்திலோ அல்லது ஏதேனும் ஒரு டீசிபீ/ஐபீ பிணையத்திலோ இணைக்கப்பட்ட ஒரு கணினியின் முகவரி. குறிப்பாக, ஒரு வழங்கன் கணினியை அல்லது நிறுவனத்தை அடையாளம் காண, எண்களுக்குப் பதிலாக சொற்களை முகவரியாகப் பயன்படுத்தும் முறை. domain name server:.களப்பெயர் வழங்கன். domain name system : களப்பெயர் முறைமை. Domain Naming Services (DNS) : களப் பெயரிடு சேவை. domestíc computer:வீட்டுக் கணினி. dongle : வன்பூட்டு. doping vector : மாசு நெறியம்; மாசு திசையம். DOS box : டாஸ் பெட்டி : ஓ.எஸ்/2 இயக்க முறைமையில், எம்எஸ் டாஸ் நிரல்களை இயக்குவதற்குத் துணைபுரியும் ஒரு செயலாக்கம். DOS extender : டாஸ் நீட்டிப்பான் : டாஸ் இயக்க முறைமையில் டாஸ் பயன்பாட்டு நிரல்கள் பயன்படுத்திக் கொள்ள, 640 கேபி மரபு நினைவகத்தை நீட்டிப்பதற்காக உருவாக்கப் பட்ட நிரல். ஒளிக்காட்சி தகவி, ரோம் பயாஸ், உ/வெ துறைகள்போன்ற கணினி உறுப்புகளுக்காக ஒதுக்கப் பட்ட நினைவகத்தை டாஸ் நீட்டிப்பான் பயன்படுத்திக்கொள்ளும். DOS prompt : டாஸ் தூண்டி : எம்எஸ் -டாஸ் இயக்க முறைமையில், பயனாளரின் கட்டளையை ஏற்கத் தயாராக இருக்கும் நிலையை உணர்த்தும் அடையாளச் சின்னம், டாஸின் கட்டளைச் செயலி இதனை வழங்குகிறது. பெரும்பாலும் இச் சின்னம் இருப்பு வட்டகம்/கோப்பகத்தைச் சுட்டுவதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, A:\>, C:\-, D:DBASE> என்பதுபோல இருக்கும். பயனாளர், தன் விருப்பப்படி இச்சின்னத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும். Prompt என்ற கட்டளை அதற்குப் பயன்படுகிறது. dot : டாட், புள்ளி : 1. யூனிக்ஸ், எம்எஸ்-டாஸ், ஓஎஸ்/2 போன்ற இயக்க முறைமைகளில் கோப்பின் முதற்பெயரையும், வகைப்பெயரையும் பிரிக்கும் குறியீடு. (எ-டு) text.doc. இதனை டெக்ஸ் டாட் -டாக் என்று வாசிக்க வேண்டும். 2. கணினி வரைகலையிலும் அச்சடிப்பிலும் புள்ளிகள்தாம் ஒரு படத்தையோ எழுத்தையோ உருவாக்குகின்றன. கணினித் திரையில் காணப்படும் உருவப்படங்கள் புள்ளிகளால் ஆனவையே அவை படப்புள்ளிகள் (pixels-picture elements) எனப்படுக்கின்றன. அச்சுப்பொறியின் திறன் ஓர் அங்குலத்தில் எத்தனைப் புள்ளிகள் (dots per inch - dpi) குறிக்கப்படுகிறது. 3. இணைய தள முகவரியின் வெவ்வேறு பகுதிகளை புள்ளிகளே பிரிக்கின்றன. (எ-டு) www.vsnl.com. dot operator : புள்ளி செயற்குறி. dot per inch : ஓர் அங்குளத்தில் புள்ளிகள். double density disk : இரட்டை அடர்த்தி வட்டு;இரட்டைச் செறிவு வட்டு; இரட்டைக் கொள்திறன் வட்டு: முந்தைய வட்டுகளைப்போல் இரண்டு மடங்கு கொள்திறன் (ஓர் அங்குலப் பரப்பில் கொள்ளும் துண்மிகள்) உள்ள வட்டுகள். முற்கால ஐபிஎம் பீசியில் பயன்படுத்தப்பட்ட நெகிழ்வட்டுகளின் கொள்திறன் 180 கேபி. இரட்டைக் கொள்திறன் வட்டுகளில் 360 கேபி தகவலைப் பதியலாம். இவ் வட்டு கள் தகவலைப் பதிய,திருத்தப்பட்ட அலைவரிசைப் பண்பேற்றக் குறி யீட்டுமுறை பயன்படுத்தப்பட்டது. double linked list:இருமுனைத் தொடுப்புப் பட்டியல். double precision arithmetic:இரட்டைச் சரிநுட்பக் கணக்கீடு:இரட்டைத் துல்லியக் கணக்கீடு. double sided:இருபுற. double striking:இரட்டை அச்சடிப்பு. dot file:புள்ளிக் கோப்பு:யூனிக்ஸ் இயக்க முறைமையில் புள்ளியில் தொடங்கும் பெயரைக் கொண்ட கோப்பு.(எ-டு)profile ஒரு கோப் பகத்திலுள்ள கோப்புகளின் பட்டியலைத் திரையிடும்போது,புள்ளிக் கோப்புகள் இடம்பெறா.பெரும் பாலும் ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கான நிரல்களின் நிலைபாடுகளை இருத்தி வைக்கப் பயன்படுகின்றன. double dereference:இரட்டை சுட்டுவிலக்கம்:p என்பது a என்னும் மாறியின் முகவரியைக்குறிக்கும் சுட்டு(Pointer)எனில், *p என்பது a-யில் இருத்தி வைக்கப்பட்ட மதிப்பினை நேரடியாகச் சுட்டும்.இதில் * என்னும் அடையாளம் சுட்டு விலக்கக் குறியீடாகப் பயன்படுகிறது.q என்பது p-யைச் சுட்டும் சுட்டு எனில்.*q என்பது p-யின் மதிப்பைச்(அதாவது அதில் இருத்தி வைக்கப்பட்டுள்ள a-யின் முகவரியை)சுட்டும்.**q என்பது a-யின் மதிப்பை நேரயாகச் சுட்டும்.இதனை இரட்டைச் சுட்டுவிலக்கம் என்கிறோம். down arrow:கீழ்நோக்கு அம்புக்குறி. downloadable font:பதிவிறக்கத்தகு எழுத்துரு:ஒர் ஆவணத்தை அச் சிடும்போது, அந்த ஆவணத்தின் தகவல்,அச்சுப்பொறியின் நினைவகத்தில் ஏற்றப்படும்.அச்சுக்குரிய எழுத்துருவும் கணினியின் நிலைவட்டிலிருந்து அச்சுப்பொறிக்கு அனுப்பப்படும்.பதிவிறக்கத் தகு எழுத்துருக்கள் மிகப் பரவலாக லேசர் அச்சுப்பொறிகளிலும் பக்க அச்சுப்பொறிகளிலும் பயன்படுத் தப்படுகின்றன.சில புள்ளியணி அச்சுப்பொறிகளும் இத்தகைய எழுத்துருக்களை ஏற்கின்றன. downsizing:சிறிதாக்கம்:ஒரு நிறுவனத்தில் கணினிச் செயல்பாடுகள் முழுவதையும் பெருமுகக் கணிணி(mainframe)சிறு கணிணி(mini),போன்ற பெரிய கணினி அமைப்பிலிருந்து குறுங்கணினி அல்லது நுண்கணினி (micro)அமைப்புக்கு மாற்றியமைத்தல்.பெரும்பாலும் இம்மாற்றம் செலவைக் குறைக்க,அல்லது புதிய மென்பொருளுக்கு மாறுவதற்காக இருக்கலாம். சிறிய கணினி அமைப்பு என்பது பீசிக்கள்,பணி நிலையங்கள் இணைந்த கிளையன்(client)வழங்கன்(server)அமைப்பாக இருக்கலாம்.ஒன்று அல்லது சில குறும்பரப்பு/விரிபரப்புப் பிணையங்கள் இணைக்கப்பட்ட பெருமுகக் கணினியாகவும் இருக்கலாம். downstream:கீழ் தாரை; கீழ் ஒழுக்கு:கீழ்பாய்வு: ஒரு செய்திக் குழுவுக்கான செய்தி,ஒரு செய்தி வழங்கனிலிருந்து இன்னொன்றுக்கு அனுப்பி வைக்கப்படும் திசை வழியைக் குறிக்கிறது. downtime:முடக்க நேரம்;செயல் படா நேரம்:ஒரு கணினி அமைப்பு அல்லது அதனோடு தொடர்புடைய வன்பொருள்,செயல்படாமல் இருக்கும் நேரம்/நேரத்தின் விழுக் காடு.எதிர்பாராதவிதமாக வன்பொருள் பழுதுபட்டுச் செயல்படாமல் இருந்த நேரமாக இருக்கலாம்.அல்லது திட்டமிட்டுப் பராமரிப்புக்காக செயல்படாமல் நிறுத்தி வைத்த நேரமாகவும் இருக்கலாம். DPM:டி.பீ.எம்ஐ:பாதுகாக்கப்பட்ட டாஸ் செயல்பாட்டு இடைமுகம் என்று பொருள்படும் Dos Protected Mode Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 3.0 பதிப்புக்காக உருவாக்கிய மென்பொருள் இடைமுகம்.80286 மற்றும் அதனினும் கூடுதல் திறன் நுண் செயலிகளில் எம்எஸ்-டாஸ் அடிப் படையிலான பயன்பாட்டு நிரல்கள் பாதுகாக்கப்பட்ட முறையில் செயல் பட உதவும் மென்பொருளாகும் இது.பாதுகாக்கப்பட்ட செயல்முறையில் நுண்செயலி பல்பணிகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றும்.சாதாரணமாக எம்எஸ் டாஸில் செயல்படும் நிரல்களுக்கு 1 எம்பி நினைவகம் மட்டுமே கிடைக்கும்.ஆனால் பாதுகாக்கப்பட்ட செய்முறையின் போது 1எம்பிக்குக் கூடுதலான நினைவகப் பரப்பையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். DPMS:டி.பீ.எம்எஸ்:திரைக்காட்சி மின்சார மேலாண்மை சமிக்கை முறை என்று பொருள்படும் Display Power Management Signalling என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.கணினி செயல்படாத போது காட்சித்திரை ஒய்வு அல்லது இடைநிறுத்த நிலையில் இருக்கும்.அப்போது மிகக்குறைந்த மின் சாரத்தையே எடுத்துக்கொள்ளும்.வேஸா(VESA) நிறுவனத்தின் தர வரையறையாகும் இது. draft:வரைவு நகல். draft mode:நகல் பாங்கு:பெரும்பாலன புள்ளியணி அச்சுப்பொறிகளில் இருக்கின்ற குறைந்த தரமுடைய அதிவேக அச்சுக்கான அச்சுமுறை. drag and drop:இழுத்து விடுதல்; இழுத்துப் போடுதல்:வரைகலைப் பணித்தளத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடு.திரையில் தோன்றும் ஒரு பொருளை சுட்டியின் மூலம் இழுத்துச் சென்று வேறிடத்தில் இருத்திவைத்தல்.(எ-டு)விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு கோப்பினை அழிக்க வேண்டுமெனில்,கோப்புக்கான சின்னத்தை இழுத்துச் சென்று Recycle Bin எனப்படும் மீட்சிப் பெட்டியில் போட்டுவிடலாம். மெக்கின்டோஷில் கோப்புச் சின்னத்தை Trashcan எனப்படும் ஒழிவுப் பெட்டியில் போட்டு விடலாம். DRAW:டிரா:எழுதியபின் நேரடி வாசிப்பு என்று பொருள்படும் Direct Read After Write என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒர் ஒளிவட்டில் எழுதப்பட்ட தகவலின் துல்லியத்தைச் சோதித்தறிய,வட்டில் எழுதப்பட்டவுடனே,சரியாக உள்ளதா என்பதைப் பரிசோதிப்பர்.இதற்கான தொழில் நுட்பமே டிரா ஆகும். drawing programme:ஓவிய நிரல்:பொருள் அடிப்படையிலான வரை கலைப் படங்களைக் கையாள்வதற்கான ஒரு நிரல்.படப்புள்ளிகளால் (pixels)வரையும் படங்களைக் கையாள்வதிலிருந்து மாறுபட்டது. எடுத்துக்காட்டாக,ஒவிய நிரலில்,பயனாளர் கோடு,சதுரம்,செவ் வகம்,வட்டம்,ஒர் உரைத்தொகுதி ஆகியவற்றை தனித்த பொருள்களாகக் கையாளலாம்.அவற்றைத் தேர்வு செய்து நகர்த்தலாம்.மாற்றலாம், வண்ணம் தீட்டலாம்.(எ-டு)விண்டோஸ் 95/98 இயக்க முறையில் உள்ளிணைக்கப்பட்டுள்ள பெயின்ட்(Paint). DRDW:டிஆர்டிடபிள்யூ:எழுதும் போதே நேரடியாகப் படித்தல் என்னும் பொருள்படும் Direct Read During Write என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒர் ஒளிவட்டில் எழுதும்போதே பதிவின் துல்லியத்தை சரிபார்க்க இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது. drive change:இயக்கம் மாற்று. drive converter:இயக்கக மாற்றி. drive cartridge:பேழை இயக்கம். drive, disk:வட்டு இயக்கம். drive letter:இயக்க எழுத்து:ஐபிஎம் மற்றும் ஒத்திசைவுக் கணினி களில் இயக்ககங்களுக்கான பெயரைத் தேர்வு செய்யும் மரபுமுறை.இயக்க கங்களுக்கு A-யில் தொடங்கி பெயர்கள் சூட்டப்படுகின்றன.எழுத்துக்குப்பின் முக்காற்புள்ளி இடப்பட வேண்டும்.(எ-டு). A:, C:, D:. drive mapping:இயக்கப் பெயரீடு:ஒரு கணினியிலுள்ள இயக்ககங்களுக்கு பெயர் சூட்டல்.ஒரெழுத்தாகவும் இருக்கலாம்.ஒரு பெயராகவும் இருக்கலாம்.இயக்க முறைமை அல்லது பிணைய வழங்கன் இந்தப் பெயரைக் கொண்டே அந்த வட்டகத்தை அடையாளம் காணும். எடுத்துக்காட்டாக,பீசிக்களில் எப்போதுமே நெகிழ்வட்டு இயக்ககங்கள் A, B என்றும், நிலை வட்டகம் C என்றும் பெயர் பெறுகின்றன. drive number:இயக்க எண். driver:இயக்கி; செலுத்தி:கணினியில் ஒரு சாதனத்தை இயக்கும் அல்லது கட்டுப்படுத்தும் அல்லது முறைப்படுத்தும் இன்னொரு வன்பொருள் சாதனம் அல்லது மென்பொருள் நிரல்.எடுத்துக்காட்டாக,ஒரு தடஇயக்கி,தொலை;தொடர்புத்தடத்தில் அனுப்பப்படும் சமிக்கைகளை திறன்மிகுத்துத் தரும்.விசைப்பலகையிலுள்ள விசைகள் இன்ன விதமாக இயங்க வேண்டும் என்பதை அதற்குரிய இயக்கி நிரலே தீர்மானிக்கிறது. அதனை விசைப்பலகை இயக்கி(keyboard driver)என்று அழைக்கிறோம். இதுபோல அச்சுப்பொறியை வழிநடத்த இயக்கி உள்ளது.கணினி,அதனுடன் இணைக்கப்பட்ட புறச்சாதனங்களோடு ஒத்திசைவுடன் செயல்பட உதவும் இயக்கிகள் சாதன இயக்கிகள்(Device Drivers)எனப்படுகின்றன. driver manager:இயக்கி மேலாளர். droplet:டிராப்லெட்: 1.குவார்க் எக்ஸ்பிரஸ் தொகுப்பில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள ஒரு வசதி.ஃபைண்டரிலிருந்து கோப்புகளை இழுத்து வந்து ஆவணத்தின் ஒரு பக்கத்தில் இணைத்துவிட முடியும். 2.ஃபிரன்டியர் (Frontier)தொகுப்பில் உள்ள வசதி.ஒரு பயன்பாட்டினுள்ளே கட்டளை வரிகளை உள்ளிணைத்து,அப்பயன்பாட்டினை இரட்டைக் கிளிக் செய்யும்போது,கட்டளைவரிகள் இயங்குமாறு செய்ய முடியும். 3.ஒருகோப்பினை இழுத்துவந்து போடுவதற்கு அனுமதிக்கிற எந்தவொரு ஆப்பிள் ஸ்கிரிப்ட் நிரலும் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. drum : உருளை : 1. தொடக்க காலப் பெருமுகக் கணினிகளில் தகவல்களைச் சேமித்து வைக்கும் காந்த ஊடகமாகப் பயன்பட்டது. 2. சில அச்சுப்பொறிகளிலும், வரைவு பொறிகளிலும் (Plotter) பயன்படுத்தப்படும் சுழலும் உருளை. 3. லேசர் அச்சுப் பொறியில் ஒளிமின் பொருள் பூசப்பட்ட சுழலும் உருளை பயன்படுகிறது. லேசர் கதிர்கள் ஒளிமின் பூச்சின்மீது தாக்கும்போது, அந்த இடம் மின்னூட்டத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. உருளையின்மீது மின்னூட்டம் பெற்ற பகுதிகள், மைப்பொடித் துகள்களை ஈர்க்கின்றன. பின் உட்செலுத்தப்படும் தாளின்மீது அத்துகள்கள் படிய வைக்கப்படுகின்றன. drum, magnetic : காந்த உருளை. drum scanner: உருளை வருடுபொறி : வருடுபொறிகளில் ஒரு வகை. வருடப்படவேண்டிய அச்சடித்த தாள் உருளையின்மீது சுற்றப்பட்டுத் தகவல் கணினிக்கு அனுப்பப்படுகின்றது. drum storage: உருளைச் சேமிப்பகம். .drv : .டி.ஆர்வி : இயக்கிக் கோப்புகளின் வகைப்பெயர். dry running : உலர் ஓட்டம்; ; வெள்ளோட்டம். DSA : டிஎஸ்ஏ : கோப்பக முறைமை முகவர் அல்லது கோப்பக வழங்கன் முகவர் என்று பொருள்படும் Directory System Agent/Directory Server Agent என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். எக்ஸ்.500 வழங்கன்களில் பயன்படுத்தப்படும் ஒருநிரல். டியூஏ (DUA. Directry User Agent) என்னும் கிளையன் நிரல் அனுப்பும் கோரிக்கையின் அடிப்படையில் பிணையத்தில் ஒரு பயனாளரின் முகவரியைத் தேடித் தரும் நிரல். DSR : டிஎஸ்ஆர் : தகவல் தொகுதி தயார் என்று பொருள்படும் Data Set Ready என்ற சொல்தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். தொடர் வரிசைத் தகவல் தொடர்பில் அனுப்பப்படும் ஒரு சமிக்கை. ஓர் இணக்கி அது இணைக்கப்பட்டுள்ள கணினிக்கு தான் பணியாற்றத் தயாராக இருக்கும் நிலையைத் தெரிவிக்கும் சமிக்கை. ஆர்எஸ்-232-சி இணைப்புகளில் தடம் 6-ல் அனுப்பப்படும் வன்பொருள் சமிக்கை. DTE : டிடீஇ : தகவல் முனையக் கருவி என்று பொருள்படும் Data Terminal Equipment என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஆர்எஸ்-232-சி வன்பொருள் தரவரையறையில், ஒரு வடத்தில் அல்லது ஒரு தகவல் தொடர்புத் தடத்தில், தகவலை இலக்கமுறை வடிவில் அனுப்பத் திறன்வாய்ந்த நுண்கணினி அல்லது முனையம் போன்ற ஒரு சாதனத்தைக் குறிக்கிறது. DTV : டிடீவி : மேசைக் கணினி ஒளிக்காட்சி என்று பொருள்படும் DeskTop Video என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பிணையத்தில் நிகழ்படக் கலந்துரையாடலுக்காக ஒளிப்படக் கருவியின் பயன்பாட்டைக் குறிக்கிறது. DUA : டியூஏ : கோப்பகப் பயனாளர் முகவர் என்று பொருள்படும் Directory User Agent என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஓர் எக்ஸ்.500 கிளையன்நிரல். இது, பிணையத்திலுள்ள ஒரு பயனாளரின் முகவரியைத் தேடித் தருமாறு டிஎஸ்ஏ-வுக்குக் கோரிக்கை அனுப்பும். dual disk drive:இரட்டை வட்டு இயக்ககம்:ஒரு கணினியிலுள்ள இரண்டு நெகிழ்வட்டு இயக்ககங்களைக் குறிக்கிறது. dual processor:இரட்டைச் செயலி;இரட்டைச் செய்முறைப்படுத்தி. dual scan display:இரட்டை வருடு திரைக்காட்சி:மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் எல்சிடி(LCD-Liquid Crystal Display)காட்சித்திரையின் தொழில்நுட்பம்.இயங்கா அணி(Passive Matrix)அடிப்படையிலான நுட்பம் இது.திரையின் புதுப்பித்தல் விகிதம் மற்ற காட்சித்திரைகளைவிட இருமடங்கு வேகம் ஆகும்.இயங்கு அணி(Active Matrix)அடிப்படையிலான தொழில் நுட்பத்தோடு ஒப்பிடுகையில்,இரட்டை வருடு திரைக்காட்சி மிகவும் சிக்கனமானது;குறைந்த அளவு மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும்.ஆனால் அதே வேளையில்,தெளிவு குறைவாகவும், குறைந்த பார்வைக் கோணமும் கொண்டதாக இருக்கும். dumb quotes:ஊமை மேற்கோள்; மருங்கல் மேற்கோள்: ஒரு சொல் அல்லது தொடரின் தொடக்கத்தில் இருக்கும் மேற்கோள் குறியும், இறுதியில் இருக்கும் மேற்கோள் குறியும் ஒன்று போலத் தோற்றமளித்தல் (தட்டச்சுப் பொறியில் இருப்பதுபோல).கணினி விசைப்பலகையிலும் ஒற்றை மேற்கோள் குறியும்,இரட்டை மேற்கோள் குறியும் ஒரு பக்கக் குறியாகவே இருக்கும்.அவற்றை ' ' " "என்பது போல இருபக்கக் குறிகளாக மாற்றுவதற்கு எம்எஸ்வேர்டு போன்ற மென்பொருள் தொகுப்புகளில் வசதி உண்டு.இருபக்கக் குறிகளை துடிப்பான மேற்கோள்(Smart quotes)என்பர். dump,automatic hardware:தானியங்கு வன்பொருள் திணிப்பு. duplex channel:இருதிசைத் தடம்: இருதிசையிலும் தகவலை அனுப்பப்/பெற வசதியுள்ள தகவல் தொடர்பு இணைப்பு. dummy routine:வெற்றுத் துனை நிரல்;வெற்று வாலாயம்:இந்தத் துணைநிரல் எப்பணியையும் செய்யாது. ஆனால் ஒரு துணை நிரலுக்குரிய சொல்தொடர் அமைப்புகளைப் பெற்றிருக்கும்.செயல் பாட்டுப் பகுதிமட்டும் வெற்றாக இருக்கும். Private Sub Command -Click End Sub என்பது விசுவில் பேசிக்கில் ஒரு வெற்றுத் துணைநிரல்.பின்னாளில் வெற்றுத் துணைநிரலில் கட்டளை வரிகளைச் சேர்த்து அதனைப் பயனுள்ள துணைநிரலாய் மாற்றிக் கொள்ளலாம்.மேலிருந்து கீழ்(Top-Down)நிரலாக்க முறையில் இது போன்ற வெற்றுத் துணைநிரல்களை உருவாக்கி வைத்துக்கொண்டு,நிரலாக்கம் வளர்ச்சிபெறும் கட்டத்தில் அவற்றைப் பயனுள்ள துணைநிரல்களாய் மாற்றியமைப்பர். duplex printer:இருதிசை அச்சுப்பொறி:பொதுவாக, அச்சுப்பொறி களில் அச்சு முனை(print head)ஒரு திசையில் மட்டுமே அச்சிடும்.இடப் புறமிருந்து வலப்புறம் அச்சிட்டுச் செல்லும்.பிறகு அச்சுமுனை அச்சிடாமல் இடப்பக்கம் திரும்பி வரும்.பிறகு முன்போல வலப்பக்கம்வரை அச்சிட்டுச் செல்லும். சில அச்சுப் பொறிகளில் இருதிசைகளிலும் அச்சிடும்படி அமைத்திருப்பர். DVD : டிவிடி : Digital Versatile Disc/ Digital Video Disc என்பவற்றின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். DVI OR DV-1: டிவிஐ/டிவி-ஐ: இலக்க முறை ஒளிக்காட்சி இடைமுகம் என்று பொருள்படும் (Digital Video Interface) என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் நிலைவட்டில் அல்லது குறுவட்டில் ஒளிக்காட்சி, கேட்பொலி, வரைகலை மற்றும் பிற தகவல்களைப் பதிவு செய்வதற்குரிய வன்பொருள் அடிப்படையிலான இறுக்கும்/விரிக்கும் தொழில் நுட்பம். 1987ஆம் ஆண்டு ஆர்சிஏ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு 1988இல் இன்டெல் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அதன்பிறகு இன்டெல் டிவிஐ-யின் மென் பொருள் பதிப்பை இன்டியோ(Indeo) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. Dynaload drivers : நிகழ்நேர இயக்கிகள்: ஐபிஎம் பீசி டாஸ் 7 இயக்க முறைமையில் Dynaload என்ற கட்டளை உண்டு. டாஸ் சின்னத்தில் இக்கட்டளையைத் தந்து, சில சாதன இயக்கிகளை நினைவகத்தில் ஏற்றிக் கொள்ள முடியும். பொதுவாக, சாதன இயக்கிகள் config.sys என்னும் தானியங்கிக் கட்டளைக்கோப்பு மூலமாகவே நினைவகத்தில் ஏற்றப்படுகின்றன. கணினி இயக்கப்படும்போதே இது நிகழ்ந்துவிடும். புதிதாக சாதன இயக்கி எதனையும் ஏற்ற வேண்டுமெனில் config.sys கோப்பில் திருத்தம் செய்து மீண்டும் கணினியை இயக்க வேண்டும். ஆனால், Dynaload மூலம் config.sys கோப்பினைத் திருத்தாமலே சாதன இயக்கியை நினைவகத்தில் ஏற்ற முடியும். dynamic address translation : இயங்கு நிலை முகவரி மாற்றம். dynamic allocation : இயங்குநிலை ஒதுக்கீடு; நிகழ்நேர ஒதுக்கீடு : ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும் போதே தேவைக்கேற்ப நினைவகத்தில் இடம் ஒதுக்கீடு செய்தல். அவ்வாறு ஒதுக்கப்பட்ட நினைவகத்தை, நிகழ்நேரத்திலேயே விடுவிக்கவும் முடியும். இதனால் நிகழ் நேரத்தில் தேவையான தரவுக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கையாண்டு பின் விடுவிக்க முடிகிறது. பாஸ்கல், சி, சி++ போன்ற மொழிகளில் இதற்கான வழிமுறைகள் உள்ளன. dynamic caching : இயங்குநிலை இடைமாற்று: நிகழ்நேர இடைமாற்று : அடிக்கடி கையாளவேண்டிய தகவல்களை உடனடியாக எடுத்தாள வசதியாக, முதன்மை நிவைகத்திலுள்ள தகவல்களை நுண்செயலிதனக்கருகில் ஓர் இடைமாற்று நினைவகத்தில் (cache memory) வைத்துக் கொள்ளும். இதனால் கணினியின் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கும். மிக அண்மையில் பயன்படுத்திய தகவலை இடைமாற்று நினைவகத்தில் வைத்துக் கொள்ளல் நிகழ்நேர இடைமாற்று எனப்படுகிறது. இடை மாற்று நினைவகத்தின் கொள்திறன் அடிப்படையில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பயன்பாட்டுத் தொகுப்புக்கு எவ்வளவு நினைவகப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் இல்லாமல், எவ்வளவு நினைவகப் பகுதி கையிருப்பில் உள்ளது என்ற அடிப்படையில் இடைமாற்று நினைவகக் கொள்ளளவு தீர்மானிக்கப்படும். dynamic font: இயங்குநிலை எழுத்துரு. dynamic keys : இயங்குநிலைத் திறவிகள், நிகழ்நேர மறைக்குறிகள் : பிணையம் அல்லது இணையத்தில் தகவல் மறையாக்கம் செய்யப்பட்டு (Encryption) அனுப்பிவைக்கப் படுவதுண்டு. மறுமுனையில் மறை விலக்கம் செய்யப்பட்டு மூலத்தகவல் பெறப்படும். இவ்வாறு மறையாக்கம், மறைவிலக்கம் செய்ய திறவிகள் (Keys) பயன்படுகின்றன. ஒரு பயனாளரின் தனித்திறவி (Private key) மூலம் மறையாக்கம் செய்யப்பட்ட தகவல் அவருக்குரிய பொதுத்திறவி மூலம் மறைவிலக்கம் செய்யப்படுகிறது. தகவலை அனுப்பும் போது ஒவ்வொரு அனுப்புகையும் வெவ்வேறு திறவிகளால் மறையாக்கம் செய்யப்பட்டு அனுப்பப் படலாம். மறுமுனையில் ஒருமுறை மறைவிலக்கத்துக்குப் பயன்படுத்திய திறவியை மீண்டும் பயன்படுத்த முடியாது. இந்த நுட்பம், தகவலின் பாதுகாப்பினை அதிகரிக்கிறது. dynamic memory allocation - இயங்குநிலை நினைவக ஒதுக்கீடு: நிகழ்நேர நினைவக ஒதுக்கீடு : ஒரு நிரல் அல்லது செயலாக்கத்துக்கான நினைவகப் பகுதியை இயக்க நேரத்தில் ஒதுக்கீடு செய்தல். நிரலின் கோரிக்கைக்கு ஏற்ப, முறைமை நினைவகக் குவியலில் இத்தகைய ஒதுக்கீடு செய்யப்படுகிறது. dynamic method dispatch : இயங்கு நிலை வழிமுறை அனுப்புகை. dynamic object : இயங்குநிலைப் பொருள். dynamic operand : இயங்குநிலை செயலேற்பி. dynamic page: இயங்குநிலை பக்கம்: அசைவூட்ட ஜிஃப்கள், ஜாவா அப்லெட்டுகள், ஆக்டிவ்எக்ஸ் இயக்குவிசைகளை உள்ளடக்கிய ஹெச்டிஎம்எல் ஆவணம். dynamic random access memory (DRAM) : இயங்குநிலை குறிப்பிலா அணுகு நினைவகம். dynamic slip : இயங்குநிலை ஸ்லிப்: இயங்குநிலை நேரியல் தட இணைய நெறிமுறை என்று பொருள்படும் Dynamic Serial Line Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் ஸ்லிப் நெறிமுறைப்படி பயனாளரின் ஐபீ முகவரி ஒவ்வொரு முறையும் புதிதாக (ஒரு பட்டியலிலிருந்து) ஒதுக்கப்படும். dynamic storage : இயங்குநிலை சேமிப்பகம். dynamics : இயங்குவியல். dynamic web page : இயங்குநிலை வலைப் பக்கம் : நிலையான வடிவம், மாறும் உள்ளடக்கம் கொண்ட வலைப்பக்கம். இணையத்தில் உலா வரும் பயனாளரின் தேடல் அடிப்படையில் கிடைத்த விடைகளைத் தாங்கிய பக்கமாக இருக்கலாம். . .dz : டிஇஸட் : இணையத்தில் ஒர் இணையதளம் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் களப்பெயர். 11