கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/E

விக்கிமூலம் இலிருந்து



E


earth : தரையிணைப்பு.


E-commerce : மின் வணிகம். கணனி பிணையங்கள் வழியாக வணிக நடவடிக்கைகளைப் பொதுவாகக் குறிக்கிறது. தற்போது இணையம் வழி நடைபெறும் வணிகத்தையும் இவ்வாறே குறிக்கின்றனர்.


E-fax : மின் தொலைநகல்.


E-mail : மின் அஞ்சல்.


E-mail address : மின்னஞ்சல் முகவரி.


E-mail greeting : மின்னஞ்சல் வாழ்த்துரை; பாராட்டுரை; வரவேற்பு.


easter egg : ஈஸ்டர் முட்டை : ஒரு கணினி நிரலில் மறைந்து கிடக்கும் பண்புக் கூறு. மறைந்து கிடக்கும் ஒரு கட்டளையாக இருக்கலாம். நகைச்சுவையான செய்தியாக இருக்கலாம். ஒர் அசைவூட்டமாக இருக்கலாம். அந்த மென்பொருளை உருவாக்கியவர்களின் பட்டியலாக இருக்கலாம். ஈஸ்டர் முட்டையை உடைத்துப் பார்க்க, பயனாளர் பெரும்பாலும் தெளிவற்ற வரிசையில் பல விசைகளை அழுத்த வேண்டியிருக்கும்.


E-BOMB : மின்குண்டு; மின்னஞ்சல் குண்டு : மின்னஞ்சல் குண்டு என்பதன் சுருக்கம். சில கணினிக் குறும்பர்கள் (Hackers) ஒரு கணினிப் பிணையத்தில் (குறிப்பாக இணையத்தில்) நடைபெறும் தகவல் போக்குவரத்தை நிலை குலையச் செய்வதற்குப் பயன்படுத்தும் உத்தி. ஏராளமான அஞ்சல் குழுக்களைக் குறிவைத்து அஞ்சல் அனுப்பி, அங்கிருந்து தொடரஞ்சலாக பிற அஞ்சல் குழுக்களுக்கும் அனுப்பச் செய்து, பிணையப் போக்குவரத்தையும், கணினி சேமிப்பகங்களையும் அஞ்சல் போக்குவரத்தால் நிரம்பி வழியுமாறு செய்து நிலைகுலையச் செய்வர்.


e-cash : மின் பணம்.


.ec: இசி : ஒர் இணையதள முகவரி. ஈக்குவாடர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.


echoplex : எதிரொலிச் சரிபார்ப்பு : தகவல் தொடர்பில் பிழை கண்டறியப் பயன்படும் ஒரு நுட்பம். தகவலைப் பெறும் நிலையம், பெற்ற தகவலை மீண்டும், அனுப்பிய நிலையத்துக்குத் திருப்பியனுப்பும். அதனைத் திரையில் கண்டு, தகவல் துல்லியமாகப் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.


edge connection socket : விளிம்பு இணைப்பு பொருத்துவாய்; விளிம்பு இணைப்பு குதை குழி.


edit : தொகு; சீர்மை செய்தல்.


edit data source: மூலத் தரவைத் தொகு.


editing keys : தொகுத்தல் விசைகள்: ஆவணத்தில் திருத்தம் செய்து தொகுக்கப் பயன்படும் விசைத் தொகுதி சில விசைப்பலகைகளில் இருப்பதுண்டு. விசைப்பலகையின் முதன்மைப் பகுதிக்கும் எண்விசைத் திண்டுவுக்கும் இடையில் இருக்கும். தொகுத்தல் விசைகள் மூன்று இணைகளாக இருக்கும். செருகு (Insert) நீக்கு (Delete); முகப்பு (Home) - இறுதி (End); முந்தய பக்கம் (Page Up) - பிந்தைய பக்கம் (Page Down).


edit play list : இயங்கு பட்டியலைத் தொகு.


edit query : வினவல் தொகு.


editing : தொகுப்பாக்கம்.


editing terminal : திருந்து முனையம்; தொகுப்பு முனையம்.


.edmonton.ca : .எட்மாண்டன்.சிஏ : இணையத்தில், ஒர் இணையதள முகவரி கனடாவிலுள்ள எட்மான்டனில் உள்ளது என்பதைக் குறிக்கும் புவிப்பிரிவுப் பெருங்களப் பெயர்.


EDO DRAM : ஈடோ டி'ரேம் : நீட்டித்த தகவல் வெளியீடு இயங்குநிலை குறிப்பின்றி அணுகு முகவரி என்று பொருள்படும் ‘Extended Data Out Dynamic Random Access Memory' என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டி'ரேமை விட வேகமாகப் படிக்க முடிகிற ஒருவகை நினைவகம். முந்தைய சுழற்சியில் ஒரு விவரத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, புதிய படிப்புச் சுழற்சியைத் தொடங்க அனுமதிக்கும் செயல். இது, ஒட்டு மொத்தமாக கணினியின் செயல் திறனை அதிகமாக்கும்.


effective data transfer rate : செயல்படு தகவல் மாற்று வீதம்.


effects : விளைவு; செயல்விளைவு.


efficiency : இயங்குதிறம்; வினைத்திறன்.


eighty-column display : எண்பது நெடுக்கை திரைக்காட்சி, எண்பது எழுத்துக் காட்சி.


EDO RAM : ஈடோ ரேம் : நீட்டித்த தகவல் வெளியீடு குறிப்பின்றி அணுகு நினைவகம் என்று பொருள்படும், Extented Data Out Random Access Memory என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இயங்குநிலை ரேமில் ஒருவகை. அடுத்த நினைவக அணுகல் தொடங்கும்போது, மையச் செயலகத்துக்குத் தகவலைத் தயாராக வைத்திருக்கும். இதனால் கணினிச் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கிறது. பென்டியம் கணினிகளில் இன்டெலின் டிரைட்டன் சிப்புத் தொகுதி மற்றும் டி'ரேம் உண்டு.


.edu : இடியு : இணையக் களப் பெயர் முறைமையில் உயர்நிலைக் களம். கல்வி நிலையங்கள் தம் தளப்பெயர்களில் பின்னொட்டாக இப்பெயரைச் சேர்த்துக் கொகின்றன. (எ-டு) www.annanuniv.edu. அமெரிக்காவில், பால்வாடி முதல் உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை அளிக்கும் கல்விக் கூடங்கள், கே12.யுஎஸ் என்னும் உயர்நிலைக் களப் பெயரைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அல்லது வெறுமனே யுஎஸ் என்று பயன்படுத்துகின்றன.


EEMS : இஇஎம்எஸ் : மேம்படுத்திய விரிவாக்க நினைவக வரன்முறை என்று பொருள்படும் Enhanced Expanded Memory Specification என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மூலமான விரிவாக்க நினைவக வரையறைகளை (EMS) மேம்படுத்தி உருவாக்கப்பட்டது. இஎம்எஸ்ஸின் 3ஆம் பதிப்பு தகவல் சேமிப்பையும், நான்கு பக்கச் சட்டங்களையுமே (Frames) அனுமதிக்கும். ஆனால் இஇஎம்எஸ், 64 பக்கங்களை அனுமதிப்பதுடன் நிறைவேற்றப்பட வேண்டிய ஆணைத் தொகுதிகளை விரிவாக்க நினைவகத்தில் இருத்தவும் அனுமதிக்கிறது.இஇஎம்எஸ்ஸின் சிறப்புக்கூறுகள் இஎம்எஸ் பதிப்பு 4.0-வில் சேர்க்கப்பட்டுள்ளன.

effects:விளைவு.

efficient:செயல்திறன்மிக்க செயலாற்றல் நிறைந்த,

e-form:மின்படிவம்:மின்னணுப் படிவம் என்பதன் சுருக்கம்.ஒரு கணினிப் பிணையத்தில் இருக்கின்ற ஒரு வெற்றுப் படிவம்.பயனாளர் ஒருவர் தேவையான விவரங்களை அப்படிவத்தில் நிறைவுசெய்து,உரிய நிறுவனத்துக்கு அப்பிணையம் வழியாகவே அனுப்பிவைக்க முடியும்.இணைய நிறுவனங்கள் பலவும் தத்தமது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறவேண்டிய விவரங்களை இதுபோன்ற படிவங்கள் மூலம் பெறுகின்றன.இணையத்தில் பயன்படுத்தப்படும் மின்படிவங்கள் பெரும்பாலும் சிஜிஐ என்னும் உரைநிரல் மொழியில் உருவாக்கப் படுகின்றன. மறையாக்கம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.

eg:இஜி: இணையதள முகவரி எகிப்து நாட்டைச் சேர்ந்ததுஎன்பதைக் குறிக்கும் புவிப்பிரிவுப் பெருங்களப் பெயர்.

e-government:இணைய அரசு;

electrically operated computer: மின்னியக்கக் கணினி.

e-health care:மின் உடல்நலப் பாதுகாப்பு:இணைய நலப்பாதுகாப்பு.

electroluminescent display:மின்ஒளிர்வு திரைக்காட்சி: மடிக் கணினிகளில் பயன்படுத்தப்படும் தட்டை வடிவத் திரைக்காட்சியில் ஒருவகை.செங்குத்து மற்றும் கிடைமட்ட மின்வாய்களுக்கு (electrodes) இடையே ஒரு பாஸ்பர் அடுக்கு அமைக்கப் பட்டிருக்கும்.மின்வாய்கள் எக்ஸ்-ஒய் ஆய அச்சுகளாகச் செயல்படுகின்றன.இரண்டு மின்வாய்களும் மின்னூட்டம் பெறும்போது, அவற்றின் குறுக்குவெட்டுப் புள்ளியில் அமைந்த பாஸ்பரஸ் ஒளியை உமிழும்.மின்ஒளிர்வுத் திரைக் காட்சி ஏனைய காட்சித் திரை களைவிட விரிவான பார்வைக் கோணத்தையும் தருகின்றன.தற்போது இத்தகைய காட்சித் திரை களுக்குப்பதில் இயங்கணி (active matrix) எல்சிடி திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

electrolysis:மின்பகுமம்வேதிக் கூட்டுப் பொருளினூடே(Chemical Compound)மின்சாரத்தை செலுத்தி, மூலத் தனிப் பொருட்களாகப் பிரிக்கும் செயலாக்கம்.

electromagnetic disk:மின்காந்த வட்டு.

electro magnetic heads:மின்காந்த முனைகள்.

electron beam deflection system: மின்னணுக் கற்றை விலகல் அமைப்பு.

electronic blockboard:மின்னனு கரும்பலகை.

electronic book:மின்னணு நூல்.

electronic commerce:மின்னனு வணிகம் : கணினிப் பிணையம் வழியாக மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கை.மின்வணிகம், நிகழ்நிலை(Online) தகவல் சேவை,இணையம் அல்லது அறிக்கைப் பலகைச் சேவை (BBS) ஆகியவற்றின் வழியாக ஒரு பயனாளருக்கும் ஒரு வணிக நிறுவனத்துக்கும் இடையே நடைபெறுவதாக இருக்கலாம்.ஒரு வணிக நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளருக்கும் இடையே,மின்னணு தகவல் பரிமாற்றத் (EDI) தடங்கள் வழியாக நடைபெறும் எவ்வித வணிகத் தகவல் பரிமாற்றமாகவும் இருக்கலாம்.

electronic content:மின்னவை உள்ளடக்கம்.

electronic credit:மின்னணுப் பற்று: இணையத்தின் வழியாக பற்று அட்டை பரிமாற்றங்கள் மூலம் நடைபெறும் மின்வணிக நடைமுறை.

electronic data change:மின்னணு தகவல் மாற்றி.

'electronic document:மின்னணு ஆவணம்.

electronic document distribution:மின்னணு ஆவணப் பகிர்மானம்.

electronic frontier foundation:மின்னணு எல்லை நிதிய நிறுவனம்:கணினிப் பயனாளர்களின் பொதுஉரிமைகளைப் பாதுகாப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட,பொது நல அமைப்பாகும்.அமெரிக்காவில் சூதாட்டக்காரர்களிடம் இரகசியப் போலீசார் அதிரடிச் சோதனைகளை நடத்தி வந்தனர். அதனை எதிர்கொள்ள 1990ஆம் ஆண்டு மிட்சேல் கபூர்,ஜான் பெர்ரி பார்லோ ஆகிய இருவரும் சேர்ந்து இந்த அமைப்பைத் தொடங்கினர்.

electronic mail address:மின்னணு அஞ்சல் முகவரி;மின்னஞ்சல் முகவரி.

electronic mail services:மின்னணு அஞ்சல் சேவைகள்: கணினிப் பயனாளர்கள், மேலாளர்கள்,இரண்டுக்கும் இடைப்பட்டோர் இம்மூவரும் மின்னஞ்சல்களை அனுப்பவும், பெறவும்,பிரித்தனுப்பவும் அனுமதிக்கின்ற சேவைகளாகும்.

electronic mall:மின்னணு அங்காடி: கணினிப் பிணையங்களில் குறிப்பாக இணையத்தில் நிகழ்நிலை வணிகச் செயல்பாடுகளின் மெய்நிகர் தொகுப்பு(Virtual Collection).ஒன்றையொன்று சார்ந்த வணிகச் செயல்பாடுகள் ஒன்று இன்னொன்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓர் இணையதளத்தில் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும்.

electronic paper:மின்னணுத் தாள்: மின்னணுக் காகிதம்.

electronic records:மின்னணு ஏடுகள்.

electronic point of sale (EPOS): மின்னணு விற்பனை முனையம்.

electronic shopping:மின்னணுக் கடைச்செலவு.

electronic speech synthesis:மின்னணு பேச்சு ஒருங்கிணைவு.

electro sensitive paper:மின்னுணர்தாள்.

electro sensitive printer:மின்னுணர் அச்சுப்பொறி.

electronic signature authenticator software:மின்னணு கையெழுத்து சான்றுறுதி மென்பொருள்.

electronic storefront:மின்னணுக் கடைமுனை:இணையத்தில் ஒரு நிறுவனம் தன்னுடைய விற்பனைப் பொருட்களைக் கடைபரப்பி வைத்து,வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதற்கு அல்லது நிகழ்நிலை விற்பனைக்கு வழி செய்தல்.

electronic table:மின்னணு வரைபட்டிகை. electronic text:மின்னணு உரை.

electronic wand:மின்னணு ஒளிக்கோல்; மின்னணு மாத்திரைக் கோல்.

electron tube:மின்னணுக் குழாய்: மின்னணுச் சமிக்கைகளை அனுப்பவும்,திறன் பெருக்கவும் பயன்படும் ஒரு சாதனம்.உலோகத் தகடுகள் அல்லது வலைகள் போன்ற மின்னணு உறுப்புகள் உள்ளே பொருத்தப்பட்ட,உறையிடப்பட்ட கண்ணாடிக் குழாய்.இப்போதெல்லாம் பல்வேறு கருவிகளில் மின்னணுக் குழாய்களுக்குப் பதில் மின்மப் பெருக்கிகளே (Transistors) பயன்படுத்துகின்றனர்.என்றாலும்,எதிர்மின் கதிர்க் குழாய்(Cathode Ray Tubes),வானொலி அலைமின் சுற்றுகள் மற்றும் கேட்பொலிப் பெருக்கிகளில் குழாய்களைப் பயன்படுத்துகின்றனர்.

electrophotographic printers:மின் ஒளிப்பட அச்சுப்பொறிகள்:லேசர்,எல்இடி,எல்சிடி, அயனிப்படிவு அச்சுப் பொறிகளை இந்த வகையில் சேர்க்கலாம்.மின்னூட்டப்பட்ட ஒளி உணர்வுள்ள உருளைமீது எதிர்நிலைப் படிமம் ஒன்றைப் படிய வைப்பர்.அப்படத்திற்கு ஏற்ப,ஒளி உணர்வுள்ள உருளை நிலைமின்னூட்டத்தை அதன் மேற்பரப்பில் உருவாக்கும்.மைத்துகள்(Toner)அப்பரப்பில் ஒட்டிக் கொள்ளும்.உருளை,மைத்துகளை தாளின்மீது பரப்பும்.வெப்பமானது மைத்துகள்களை தாளோடு ஒட்டிக்கொள்ளச் செய்யும்.உருளையானது மின் தூண்டப்படும் முறையின் அடிப்படையில் அச்சுப்பொறிகள் வேறுபடுகின்றன.

electroplating:மின்முலாம் பூச்சு: மின்பகுப்பு முறையில் ஓர் உலோகத் தகட்டின் மீது இன்னொரு வேதிப்பொருளின் மெல்லிய படுகையினை படியச்செய்தல்.

electrostatic:மின்நிலைப்பு: நிலை மின்சாரம்:ஒரு கடத்துப் பாதையில் மின்னூட்டம் பரவிச் செல்லாமல் நிலைத்து நிற்றல்.இத்தகைய நிலை மின்னூட்டம் நகலெடுக்கும் கருவிகளிலும், லேசர் அச்சுப்பொறிகளிலும் மைத்துகளை ஒளியுணர்வு உருளையில் ஒட்டவைக்கப் பயன்படுகிறது.தட்டை வரைவு பொறிகளிலும் (Plotters) இதுபோலவே பயன்படுகிறது.

electrostatic discharge:நிலை மின்னிறக்கம்: வெளி மூலத்திலிருந்து நிலைமின்சாரம் ஒரு மின்சுற்றுக்குள் மின்னிறக்கம் ஆகி விடல்.எடுத்துக்காட்டாக,ஓர் ஒருங்கிணைந்த மின்சுற்றுப் பலகையை(Integrated Circuit Board)நாம் கையால் தொடும்போது,நம் உடலிலுள்ள நிலைமின்சாரம் மின்னிறக்கமாகி, அம்மின்சுற்றினை பழுதாக்கி விடுவதுண்டு.

electrostatic printer:நிலைமின் அச்சுப்பொறி.

elegant:நேர்த்தி;செம்மை:எளிமை, செறிவடக்கம்,திறன்,நயநுட்பம் அனைத்தும் சேர்ந்திருத்தல்.கணினி அறிவியலின் கோட்பாட்டு அடிப்படையில் நேர்த்தியான வடிவமைப்புக்கே (நிரல்கள்,நிரல்களுக்கு அடிப்படையான செயல்பாட்டு வரைவுகள்,வன்பொருள் ஆகியவற்றில்) முன்னுரிமை தரப்பட வேண்டும். ஆனால் கணினித் தொழிலின் வளர்ச்சி வேகத்தில் ஓர் உற்பத்திப் பொருளின் உருவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பதற்காக பெரும்பாலும் நேர்த்தியான வடிவமைப்பு புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. இதன் காரணமாய், திருத்துவதற்குக் கடினமான குறைபாடுகளை (bugs) அவை கொண்டுள்ளன.

element, AND : உம் உறுப்பு.

element, active : செயற்படு மூலகம், செயற்படு உறுப்பு: செயற்படுதனிமம்.

elementary item : தொடக்கநிலை உருப்படி.

elevator : மேலேற்றி : கணினித் திரையில் ஓர் ஆவணத்தை அல்லது ஓர் படிமத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, முழுமையாகப் பார்த்தறிய கிடைமட்ட, செங்குத்து உருள் பட்டை (Scroll Bar) களைப் பயன்படுத்துகிறோம். உருள்பட்டையில் மேலும் கீழும் நகர்த்துமாறு அமைந்துள்ள ஒரு சதுரப் பெட்டி மேலேற்றி எனப்படுகிறது.

e-mail address: மின்னஞ்சல் முகவரி: மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும். முதலில் முகவரியாளரின் பெயர். அடுத்து @ என்னும் அடையாளம். மூன்றாவதாக, இணைய தளப் பெயரைக் கொண்டிருக்கும். அப்பெயரில் அஞ்சல் வழங்கன் (mail server) கணினியின் பெயர் மற்றும் களப்பெயர் இடம் பெற்றிருக்கும். (எ-டு) Jenny@md2.vsnl.net.in

ஜென்னி என்பவர் விஎஸ்என்எல் என்ற நிறுவனத்தின் எம்.டி2 என்னும் கணினியில் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக் கிறார். net என்பது பெருங்களப் பெயர். in என்பது இந்தியா என்னும் நாட்டைக் குறிக்கும் புவிப்பிரிவுக் களப்பெயர். இம்முகவரியை, ஜென்னி அட் எம்.டி2 டாட் விஎஸ்என்எல் டாட் நெட் டாட் இன் என்று உச்சரிக்க வேண்டும்.

elevator seeking : மேலேற்றி தேடல்: ஒரு நிலைவட்டிலிலுள்ள தகவலைத் தேடிப்பெற பல்வேறு கோரிக்கைகள் எழும்போது, படிப்பு/எழுது முனைக்கு அருகிலுள்ள தகவல் என்ற அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்தி செயலாக்குவதன் மூலம், முனையின் இயக்கத்தைக் குறைப்பதுடன், நிலைவட்டின் அணுக்க நேரத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

elite : எலைட் : 1. ஓர் அங்குல இடத்தில் 12 எழுத்துகள் அச்சிடும் வகையில் அமைந்த ஒரே அகலத்தில் அமைந்த எழுத்துருவின் உருவளவு எலைட் எனப்படுகிறது. 2. வெவ்வேறு உருவளவுகளில் அமைகின்ற ஒரே அகல எழுத்துரு (Font) ஒன்றின் பெயர்.

ellipsis : முப்புள்ளி : 1. ஒரு விவரத்தை எழுதிச் செல்லும்போது அது முற்றுப் பெறாத நிலையில் முப்புள்ளி (...) இட்டு முடிப்பது வழககமாகும. முழுவதையும் சொல்லாமல் ஒரு பகுதியை மட்டும் சொல்லி நிறுத்திக்கொள்ளும் போதும் முப்புள்ளி இடுவோம். 2. விண்டோஸ் பயன்பாடுகளில் பட்டிப் பட்டையில் (Menu Bar) உள்ள விருப்பத் தேர்வுகளில் (Menu Options) முப்புள்ளி இடப்பட்டதைத் தேர்வு செய்தால் ஓர் உரையாடல் பெட்டி தோற்றமளிக்கும். 3. நிரலாக்கத்திலும், மென்பொருள் குறிப்பேடுகளிலும், ஒரு கட்டளை வரியிலுள்ள முப்புள்ளி, கட்டளைக் கட்டமைப்பிலுள்ள சில உறுப்புகள் திரும்பத் திரும்ப இடம் பெறுவதைக் குறிக்கும். ELM : எல்ம்: இஎல்எம் : மின்னணு அஞ்சல் என்று பொருள்படும் Electronic Mail என்பதன் சுருக்கம். யூனிக்ஸ் இயக்க முறைமையில் மின்னஞ்சல் எழுதவும் படிக்கவும் பயன்படும் ஒரு நிரல். எல்ம் நிரல் ஒரு முழுத்திரை உரைத் தொகுப்பானைப் பெற்றுள்ளது. யூனிக்ஸிலுள்ள மெயில் நிரலைக் காட்டிலும் எளிதாகப் பயன்படுத்த முடிகிறது. ஆனால், பைன் (pine) என்ற மின்னஞ்சல் நிரலின் வருகைக்குப்பின் எல்ம் செல்வாக்கு இழந்தது.

E-mail filter : மின்னஞ்சல் சல்லடை ; மின்னஞ்சல் வடிகட்டி மின்னஞ்சல் கிளையன் (Client) மென்பொருளில் இருக்கும் ஒரு வசதி. வருகின்ற அஞ்சல்களை பொருளடிப்படையில் பிரித்து வெவ்வேறு கோப்புறைகளில் சேமித்து வைக்கும். அன்பரசு மாமாவிடமிருந்து வரும் மடல் களை அன்பரசு என்னும் கோப்புறையில் சேமிக்கலாம். அதுமட்டுமின்றி, வேண்டாதவர்களிடமிருந்து வரும் மடல்களை வடிகட்டி நிறுத்திவிடும் சல்லடை வசதியும் உண்டு. balan@yahoo.com என்ற முகவரியிலிருந்து வரும் மடல்களைப் புறக்கணிக்குமாறு வடிகட்டி அமைக்க முடியும். அல்லது இன்னாரிடமிருந்து வரும் மடல்களை மட்டும் அனுமதிக்குமாறும் வடிகட்டி அமைக்கலாம்.

embedded chips : உட்பொதி சிப்புகள்; உள்ளமைச் சிப்புகள்.

embedded controller : உட்பொதி கட்டுப்படுத்தி : கணினியின் சாதனங்களை (நிலைவட்டு போன்றவை) இயக்குகின்ற இணைப்புக் கருவிகள் நுண்செயலிக்கு வெளியே தனிக்கருவியாகவே இருப்பதுண்டு. அப்படி இல்லாமல், அக்கருவியின் செயல்பாடுகளை செயலியே கவனித்துக் கொள்ளுமாறும் இப்போது மேம்பட்ட செயலிகள் உருவாக்கப்படுகின்றன. கட்டுப்பாட்டு மின்சுற்று நுண்செயலியில் உள்ளமைந்திருக்கும். இந்த மின் சுற்றுப் பலகை, கணினியில் உள்ளிணைக்கப்பட்டிருக்கும்.

embedded hyperlink : உட்பொதி மீத்தொடுப்பு: ஓர் உரை ஆவணத்தில் ஒரு வளத்துக்கான மீத்தெடுப்பு உரைகளுக்கிடையே அமைந்திருத்தல். அல்லது அந்த ஆவணத்திலுள்ள ஒரு பட உருவத்துடன் மீத்தொடுப்பு இணைந்திருக்கலாம்.

embedded interface : உட்பொதி இடைமுகம் : ஒரு வன்பொருள் சாதனத்தின் இயக்கி மற்றும் கட்டுப் பாட்டுப் பலகையிலேயே உள்ளிணைக்கப்பட்ட இடைமுகம். இதனால் அச்சாதனத்தை கணினியின் முறைமைப் பாட்டையில் (System Bus) நேரடியாக இணைக்க முடியும்.

embedded object : உட்பொதி பொருள்; உள்ளிடப்பட்ட பொருள்.

embedded version :உட்பொதி பதிப்பு.

embedding styles: உட்பொதி பாணிகள்.

emboss : உந்துவி.

em dash : எம் டேஷ் : ஒரு சொற்றொடரின் முறிவை அல்லது குறிக்கீட்டைக் குறிக்கப் பயன்படும் நிறுத்தற்குறி (-). தட்டச்சு அளவீட்டில் அந்தக் கோட்டின் நீளம், சில எழுத்துருக்களில் M என்ற எழுத்தின் அகலத்துக்குச் சமமாக இருப்பதால் இப்பெயர் பெற்றது. emitter coupled logic : உமிழி பிணைப்புத் தருக்கம்.


emitter,character : வரிவடிவ உமிழி;எழுத்துரு ஒளிர்வி.


e-money or emoney : மின்பணம் :மின்னணுப் பணம் என்பதன் சுருக்கம். இணையத்தில் பரிமாறிக் கொள்ளப்படும் பணத்திற்கான பொதுப்பெயர்.


emotag : உணர்ச்சி ஒட்டு; உணர்ச்சிக் குறிச்சொல் : இணைய ஆவணங் களில்,வலைப்பக்கங்களில் ஏராளமான ஹெச்டிஎம்எல் ஒட்டுகள் இணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. <Βody>... </Body>,<TR>...</TR>, என்பது போல அவை அமையும். அது போலவே ஒரு மின்னஞ்சலில் அல்லது செய்திக் குழுக்கட்டுரைகளில்,கட்டுரையாசிரியர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒட்டுகளை அமைத்துக் கொள்ளலாம். இவையும் ஹெச்டிஎம்எல் ஒட்டுகள் போலவே அடைப்புக் குறிகளுக்குள் முன் ஒட்டு பின் ஒட்டு என இணையாக அமையும்.இரண்டுக்கும் நடுவில் சொல்,சொல் தொடர் இருக்கலாம்.(எ-டு).(joke)you didn't think that would really be a joke here, did you? (joke) சில ஒட்டுகள், ஒற்றையாகவும் அமையும்(எ-டு)(gris).


emoticon : உணர்ச்சிச் சின்னம் : ஒரு குறித்தொடர் பக்கவாட்டிலிருந்து பார்த்தால் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை வெளிப்படுத்தும் முக வனைபோலத் தோற்றமளிக்கும்.பெரும்பாலும் இவ்வகை உணர்ச்சிச் சின்னங்கள் மின்னஞ்சல் அல்லது செய்திக் கட்டுரைகளில் ஒரு சொல்தொடரை அடுத்து கருத்துரை போல அமையும்.

(எ-டு). :-) :-C :-( ) :-1 :-S


employment centre : வேலை தேடு மையம்;வேலை வாய்ப்பு மையம்.


EMS:இஎம்எஸ்:விரிவாக்க நினைவக வரன்முறை என்ற பொருள்படும் Expanded Memory Specification என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இன்டெல் 8086 நுண்செயிலிச் சொந்தக் கணினிகளில் மெய்ம்முறை வரையெல்லையான 1 மெகா பைட்டு வரம்பைத் தாண்டி நினைவகத்தை விரிவாக்கும் நுட்பம்.நுண் செயலிகளின் முந்தைய பதிப்புகளில்,இஎம்எஸ் என்பது எல்லையைத் தாண்டி கூடுதல் நினைவகத்தை அணுக ஏதுவாக கூடுதலான 16 கேபி நினைவகச் சிப்புகள் பொருத்தப் பட்டு மென்பொருள் மூலம் அவற்றை அணுக வழி செய்யப்பட்டிருந்தன.இன்டெலின் பிந்தைய பதிப்புகளில் இஎம்எஸ் என்பது இஎம்எம் 386 (எம்எஸ்டாஸ் 5.0)என்பது போன்று மென்பொருள் நினைவக மேலாளர்களாக இருந்தன. இப்போதைய கணினிகளில் 1எம்பி என்கிற வரம்பு ல்லை. 80386 மற்றும் மேம்பட்ட செயலிகளில் செயல்படும் கணினிகளில், பாதுகாக்கப்பட்ட முறையில் பழைய பயன்பாடுகளை இயக்க இஎம்எஸ் பயன்படுகிறது.


em space:எம் இடவெளி:ஒரு தட்டச்சு அளவீட்டு அலகு.ஒரு குறிப்பிட்ட எழுத்துருவின் உருவளவைக் குறிப்பதாக இருக்கும். பெரும் பாலான எழுத்துருக்களில் இந்த இடவெளி பெரிய M எழுத்தின் அகலத்துக்கு சமமாகும்.இதனாலேயே இப்பெயர் ஏற்பட்டது. empty lines:வெற்று வரிகள்.

empty shell:வெற்று உறைபொதி.

emulsion laser storage:எமுல்சன் லேசர் சேமிப்பு:ஃபிலிமில் லேசர் கற்றை மூலம் சூடாக்கித் தகவலைப் பதியும் முறை.

end around shift:முடிவு சுற்று நகர்வு; ஓரச் சுழல் நகர்வு:கணினிச் செயல் பாட்டின்போது நுண்செயலியின் பதிவகங்களில் துண்மிகளின் நகர்வு நிகழும்.(எ-டு):01000101 என்ற துண்மிகளில் ஒருமுறை இடப்புற நகர்வு நேர்ந்தால்,10001010 என்ற விடை கிடைக்கும்.இடப்புறமுள்ள ஒரு துண்மி நீங்கி வலப்புறம் 0 என்னும் துண்மி சேரும்.10101100 என்பதில் வலப்புறமாக நகர்வு நிகழ்ந்தால் 01010110 என்பது கிடைக்கும். இவ்வாறு ஒரமாய் இருக்கும் துண்மி நீங்காமல் அது மறுமுனையில் சென்று சேருவதை முடிவு சுற்று அல்லது ஒரச் சுழல் நகர்வு எனலாம். 00101001 என்பது வலது ஒரச் சுழல் நகர்வில் 10010100 என்றாகும்.அதாவது வலது ஒரத்திலுள்ள 1 என்ற துண்மி நகர்ந்து வெளியேறி அது இடப்புறம் வந்து ஒட்டிக்கொள்ளும்.

encrypt:மறையாக்கு.

encryption algorithm:மறையாக்கக் கணிமுறை; மறையாக்கப் படிமுறை. encyclopedia:கலைக்களஞ்சியம்.

en dash:என் டேஷ்:1990-92 என்று ஆண்டுகளைக் குறிக்கவும். இரட்டை அடைசொல் அல்லது இரட்டைச் சொற்களிலும்(pre-civil war) இடம் பெறும் என்னும் நிறுத்தற்குறி.தட்டச்சு எழுத்தின் உருவளவுகளை அளவீடு செய்யும் அலகு.என்-இடவெளி எம்-இடவெளியில் பாதி. என்-இடவெளி அளவில் அமைந்த,என்டேஷ் ஆகும்.

end capture:பிணைப்பை விடு.

end of file lable:கோப்பு முடிவுக் குறியீடு முகப்புச் சீட்டு; கோப்பு முடிவு அடையாளக் குறி.

end of file mark:கோப்புமுடிவுக் குறி.

end of file routine:கோப்பு முடிவு நிரல்; கோப்பு முடிவு-வாலாயம்.

endless loop:முடிவிலா மடக்கி.

end mark:முடிவுக் குறி, இறுதிக் குறி: ஒரு கோப்பு அல்லது ஒரு சொல் செயலி ஆவணபோன்ற ஏதேனும் ஒன்றின் இறுதியைக் குறிப்பிடப் பயன்படுத்தும் குறியீடு.

end of page routine:பக்க முடிவு வாலாயம்; பக்க முடிவு நிரல்கூறு.

end of reel block:சுருள் தொகுதி முடிவு.

end of reel lable:சுருள் முடிவு அடையாளக் குறி; சுருள் முடிவு முகப்பு அடையாளம்.

End of Transmission Block (ETB):அனுப்புகைத் தொகுதி முடிவு.

end page:இறுதிப் பக்கம்.

end less loop:முடிவிலா மடக்கி.

end note:முடிவுக் குறிப்பு.

end-to-end control:இறுதி முடிவு கட்டுப்பாடு.

endogenous:தண்டு அகவலளர்வு;அகவளர்ச்சி.

end-user computing:இறுதிப் பயனாளர் கணிப்பணி.

end-user system:இறுதிப் பயனாளர் முறைமை.

end user license agreement:இறுதிப் பயனாளர் உரிம ஒப்பந்தம்: ஒரு

மென்பொருள் தயாரிப்பாளர்க்கும், அந்த மென்பொருளை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துபவருக்கும் இடையே வினியோகம், மறு விற்பனை, கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு போன்றவை தொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளும் சட்ட முறையான ஒப்பந்தம்.


engineering workstation : பொறியியல் பணிநிலையம்.


enhanced graphics adapter (EGA) : மேம்பட்ட வரைகலை ஏற்பி, மேம் பட்ட வரைவியல் தகவி.


energy star : ஆற்றல் நட்சத்திரம்; ஆற்றல் விண்மீன் : கணினியை இயக்கி வைத்துவிட்டுப் பணிபுரியாமல் இருக்கும் நேரத்திலும் காட்சித் திரை, நிலைவட்டு, நுண்செயலி, தாய்ப்பலகை ஆகியவை மின்சக்தியைச் செலவழித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதனால் வீணாகும் மின்சாரம் ஏராளம். அமெரிக்க நாட்டில் அனைத்துக் கணினிகளிலும் பணிபுரியாதபோது வீணாகும் மின் சாரத்தை சேமிக்க முடிந்தால் மூன்று பெரும் அணுமின் நிலையங்களை மூடி விடலாம் என்று ஒரு கணக் கெடுப்புக் கூறுகிறது. இந்நிலையை மாற்ற அமெரிக்க அதிபர் கிளின்டன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையிடம் ஒரு மாற்றுவழி காணச் செய்தார். அவர்களின் திட்டப்பணி அடிப்படையில், கணினியில் பணியாற்றாதபோது மிகக் குறைந்த அளவு மின்சாரமே செலவாகுமாறு கணினி உற்பத்தியாளர்கள் பணிக்கப்பட்டனர். கணினி இயக்க நிலையில் பணி புரியாதபோது தாய்ப்பலகை, நுண் செயலி, நிலைவட்டு, காட்சித் திரை ஆகியவை 50 விழுக்காடு மின் சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளுமாறு கணினிகள் வடிவமைக்கப்பட்டன. காட்சித்திரை குறிப்பிட்ட நேரம்வரை பயன் படுத்தப்படாவிட்டால் குறைந்த மின்சாரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு உறக்கநிலைக்கு மாறி விடும். இதுபோன்ற கணினி, பசுமைக் கணினி (Green PC) என்றழைக்கப்படுகின்றது. ஆற்றல் நட்சத்திர ஒட்டிகளை (stickers) கொண்டிருக்கும். enhanced graphics display மேம்பட்ட வரைகலைக் காட்சி.


Enhanced Integrated Drive Electronics EIDE : மேம்பட்ட ஒருங்கினை இயக்க மின்னணுவியல் (இஐடிஇ) : ஒரு வட்டினை இயக்கக் கூடிய கட்டுப்பாடு மின்சுற்றுகள் உள்ளிணைக்கப்பட்ட வட்டு இயக்க வடிவமைப்பான ஐடிஇ தரமுறையின் விரிவாக்கமே இஐடிஇ. இவை, முறைமைப் பாட்டையில் (system bus) தரப்பட்ட இடை முகங்களை இணைக்க உதவுகின்றன. முன்னில் லாத வெடிப்புத் தகவல் பரிமாற்றம் - நேரடித் தகவல் அணுக்கம் போன்ற கூடுதல் சிறப்புக் கூறுகள் உள்ளன. அது மட்டுமின்றி இஐடிஇ இலக்கம் 8.4 கிகாபைட்டுகள் வரை ஏற்கும். (ஐடிஇயில் 528 மெகா பைட்டு வரைதான்). ஏடிஏ-2 இடைமுகப்பை ஏற்கும். வினாடிக்கு 13.2 எம்பி தகவல் பரிமாற்றம் சாத்தியம் (ஐடிஇ யில் 3.3 எம்பி தான்!). ஸ்கஸ்ஸி (SCSI) இயக்கங்கள் அளவுக்குத் திறனுடையது. ஆனால் அவற்றை விட விலை மலிவானது.


enhanced parallel port : மேம்பட்ட இணைநிலைத் துறை : அச்சுப் பொறி, புற வட்டியக்ககம், நாடா இயக்ககம் போன்ற புறச் சாதனங்

களை இணைப்பதற்குப் பயன் படுத்தப்படும் ஒர் இணைப்புத் துறை. மேம்படுத்தப்பட்ட இணை நிலைத் துறைகள் விரைவான தகவல் பரிமாற்றத்துக்கு மிகுவேக மின்சுற்று களைப் பயன்படுத்துகின்றன. தகவல் தொடர்புக்கான கட்டுப்பாட்டுத் தடங்கள் ஒரு துண்மிக்கு ஒன்றாக உள்ளன. ஒரே நேரத்தில் அனைத்துத் தடங்களிலும் தகவல் துண்மிகள் ஒன்றாகப் பயணம் செய்கின்றன.


enhanced serial port : மேம்பட்ட நேரியல் துறை : சுட்டி, புற இணக்கி போன்ற மிகுவாகப் பயன்படுத்தப் படும் புறச்சாதனங்களை இணைக்கப் பயன்படும் இணைப்புத் துறை. மேம்படுத்தப்பட்ட நேரியல் துறைகள் விரைவான தகவல் பரிமாற்றத் துக்கு 16550-வகை அல்லது புதிய மிகு வேக யுஏஆர்டி மின் சுற்றுகளைப் பயன்படுத்துகின்றன. தகவல் ஒவ்வொரு துண்மியாக ஓர் இணைக் கம்பியில் ஒரு திசையில் மட்டுமோ, இரு திசையிலுமோ பயணம் செய்கின்றன.


Enhanced Small Device Interface (ESDI) : மேம்பட்ட சிறுசாதன இடைமுகம்.


ENIAC எனியாக் : பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் ஜே.பிரஸ்பர் எக்கெர்ட், ஜான் மெளக்லி ஆகிய இருவரும் சேர்ந்து அமெரிக்க இராணுவத்துக்காக 1942-1946ஆம் ஆண்டுகளில் உருவாக்கிய கணினி. 1,800 சதுர அடியில் நிறுவப்பட்டிருந்தது. 30 டன் எடை இருந்தது. 17,468 வெற்றிடக் குழாய் களையும் 6,000 கையால் இயக்கும் விசைகளையும் கொண்டிருந்தது. எனியாக்தான் உலகிலேயே மெய்யான முதல் மின்னணுக் கணினி என்று கருதப்படுகிறது. 1955ஆம் ஆண்டுவரை அது செயல்பாட்டில் இருந்தது.


enlarge : பெரிதாக்கு : மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் மற்றும் ஏனைய வரைகலைப் பணித்தளங் களில் ஒரு சாளரத்தின் உருவளவைப் பெரிதாக்குதல்.


eniarge font : பெரிதாக்கிய எழுத்துரு; பெரிய எழுத்துரு.


enquiry : விசாரணை


en space : என்-இடவெளி : ஒரு குறிப்பிட்ட எழுத்துருவில் பாயின்ட் அளவில் பாதி அகலம் கொண்ட ஒர் அளவீட்டு அலகு.


ensure capacity : கொள்திறன் உறுதி செய்.


enter : நுழை பதவி; உள்ளீடு.


enter key : நுழை விசை; நிறை வேற்று விசை; முடிப்பு விசை : விசைப் பலகையில் இருக்கும் மிக முக்கியமான விசை, கணினிக்கு ஒரு கட்டளையைத் தந்து அதனை நிறைவேற்றச் செய்ய இந்த விசையைத்தான் அழுத்த வேண்டும். உரையைத் தட்டச்சு செய்து ஒரு வரியை முடித்து வைக்க இந்த விசையைத் தட்ட வேண்டும். சொல் செயலி நிரல்களில் ஒரு பத்தியை முடித்தபிறகு இவ்விசையை அழுத்த வேண்டும்.


enter/return key : நுழை/திரும்பு விசை.


enterprise computing : தொழிலகக் கணிப்பணி; தொழில்துறை கணினிச் செயலாக்கம் : பெருந்தொழில் நிறுவனங்களில் கணினிப் பிணையங்கள் அல்லது பல்வேறு பிணை யங்களின் ஒருங்கிணைப்பு மூலம் கணினிச் செயல்பாடுகளை மேற் கொள்ளல். பெரும்பாலும் அத்தகைய பிணையங்கள் வேறுபட்ட பணித்தளம், வேறுபட்ட இயக்க முறைமை / நெறிமுறைகளைக் கொண்டவையாகவும், வேறுபட்ட பிணையக் கட்டமைப்புகளைக் கொண்டவையாகவும் இருப்பதுண்டு.

enterprise model:தொழிலக மாதிரியம்.

enterprise network : தொழிலக பிணையம் : பெருந் தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் கணினிப் பிணையம் அல்லது பிணையங்களின் ஒருங்கிணைப்பு. அத்தொழில் நிறுவனத்தின் பல்வேறு கணினிச் செயலாக்கத் தேவைகளை நிறைவு செய்வதாக அது இருக்கும். இத்தகைய பிணையம் பெரும்பாலும் விரிந்து பரந்த புவி எல்லைகளைக் கொண்டிருக்கும். வேறுபட்ட பணித்தளம், இயக்க முறைமை/நெறிமுறை/பிணையக் கட்டமைப்புக் கொண்டவையாக இருக்கும்.

enterprise scheme : தொழிலக திட்டமுறை.

entire column : நெடுக்கை முழுதும்.

entire row : கிடக்கை முழுதும்.

entity life history : உட்பொருள் வாழ்க்கை வரலாறு.

entity model : உட்பொருள் மாதிரியம்.

entity relationship model : உட்பொருள் உறவுமுறை மாதிரியம்.

entity sub type: உட்பொருள் துணை வகை.

enumerated data type : எண்ணிட்ட தரவு இனம்; பெயர்மதிப்பெண் தரவு இனம் : கணினி மொழிகளில் பல்வேறு தரவு இனங்கள் கையாளப்படுகின்றன. முழுஎண் (Integer) மெய் எண் (Real), எழுத்து (Character), சரம் (String), தேதி (Date), ஆமில்லை (Boolean) போன்றவை அவற்றுள் சில. சிலவேளைகளில் 1,2,3.... போன்ற எண் மதிப்புகளுக்குப் பதில் Sun, Mon, Tue என்றோ, Jan, Feb, Mar .. என்றோ பெயர் மதிப்புகளைப் பயன்படுத்துவது நிரலாக்கத்தில் எளிதில் புரியும்படி இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் பெயர் மதிப்புகளைக் கொண்ட எண் விவர இனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். (எ-டு). enum day (Sun, Mon, Tue ...) enum month (Jan, Feb, Mar ...) இங்கே, Sun, Mon ... Jan, Feb, ... ஆகியவை பெயர் மதிப்பாக இருந்த போதிலும், கணினி அவற்றை 0,1,2,3 என்றே எடுத்தாளும்.

envelopes and lables : உறைகளும் முகப்புச் சீட்டுகளும்; உறைகளும் சட்டைகளும்; உறைகளும் முகவரிச் சிட்டைகளும்.

EOF : கோப்பு இறுதி.

EOF exception : ஈஓஎப் விதிவிலக்கு.

epitaxial layer : எபீடேக்ஸியல் படுகை அல்லது அடுக்கு: குறைகடத்திகளில் கீழடுக்கின் திசையிலேயே அமைந்துள்ள படிகப்படுகை.

EPS : எப்ஸ்; இபீஎஸ் : பொதியுறையிட்ட போஸ்ட் ஸ்கிரிப்ட் என்று பொருள்படும் Encapsulated Post Script என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு போஸ்ட் ஸ்கிரிப்ட் கோப்பு வடிவாக்கம், ஒரு தனித்த உள்பொருளாகப்

பயன்படுத்த முடிகின்ற கணினிப் பதிப்பகப் பயன்பாடுகளில் (Desktop Publishing Applications) இபிஎஸ் பட உருக்கள் போஸ்ட் ஸ்கிரிப்ட் வெளியீட்டுடன் உடன் சேர்க்கப்பட வேண்டும்.


e-publishing : மின்னணுப் பதிப்பு; மின்பதிப்பு.


equate directive : சமவாக்கு பணிப்பு -er : .இஆர் : இணையத்தில் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர், எரித் திரியா நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கிறது.


erasable optical storage : அழிதகு, ஒளியியல் சேமிப்பகம்.


erase : அழி


erase/delete/remove : அழி/நீக்கு/அகற்று.


eraser : அழிப்பி, அழிப்பான்.


ergonomic keyboard : சூழல் தகவமை விசைப்பலகை: தகவமை விசைப் பலகை: இடைவிடாமல் தொடர்ந்து விசைப்பலகையைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி கையை இங்குமங்கும் நகர்த்திக் கொண்டேயிருப்பதால் கைமுட்டி களும், மணிக்கட்டும் பழுதடைய வாய்ப்புண்டு. இவற்றைக் குறைக்க ஏற்றவகையில் வடிவமைக்கப் பட்டுள்ள விசைப்பலகையில் விசைகள் வேறு வகையில் அமைக்கப்பட்டிருக்கும். கைகளை சிரமமின்றி இயல்பாக வைத்துக் கொள்ள வசதியிருக்கும்.

error, ambiguity : மயக்குறு பிழை.


error, absolute : முற்றுப் பிழை


error code : பிழைக் குறிமுறை; தவறான குறிமுறை.


error - correction coding : பிழை திருத்தும் குறியீடு : ஒரு தகவலை குறியீட்டு முறையில் மாற்றியமைத்து (encoding) அனுப்பி வைக்கும்போது அதிலுள்ள பிழைகளைக் கண்டறிந்து திருத்தும் திறனுள்ள குறியீட்டு முறை. அதிகப் பட்சமாய் எவ்வளவு பிழைகளைக் கண்டறியும், எவ்வளவு பிழைகளைத் திருத்தும் என்பதன் அடிப் படையில் குறியீட்டு முறை வகைப் படுத்தப்படுகிறது.


error diffusion : பிழை பரவல்.


error detection and correction: பிழை கண்டறிதல், திருத்துதல் : ஒரு கோப்பினைக் கணினி மூலமாய் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு அனுப்பிவைக்கும்போது, அதிலேற்படும் பிழைகளைக் கண்டு பிடித்துத் திருத்தும் முறை. சில நிரல்கள் பிழைகளைக் கண்டறிய மட்டும் செய்யும். இன்னும் சில கண்டறிந்து அவற்றைத் திருத்தவும் செய்யும்.


error tree : பிழை இலா; பிழை அற்ற: தவறு அல்லாத.


error handier : பிழை கையாளி.


error inherited : மரபுவழி பிழை.


error list : பிழைப் பட்டியல்.


error logical : தருக்கப் பிழை.


error register : பிழைப் பதிவேடு.


error report : பிழை அறிக்கை.


error routine : பிழை நிரல்கூறு.


error run time : இயக்க நேரப் பிழை.


error single bit : ஒற்றை பிட் பிழை.


error truncation : துணிப்புப் பிழை.


error transmission : பிழை அனுப்பீடு; தவறான செலுத்துகை. escape code : விடுபடு குறிமுறை.

escape key : விடுபடு விசை : கணினி விசைப்பலகையிலுள்ள ஒரு விசை, இதனை அழுத்தும்போது, குறிப்பிட்ட செய்தி குறியீடாகக் கணினிக்கு தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் விடுபடு விசையை அழுத்தும்போது முந்தைய நிலைக்குத் திரும்பலாம். பட்டித் தேர்வுகளில் முந்தைய மெனுநிலைக்குத் திரும்பும். சிலவற்றில் நிரலைவிட்டு வெளியேறவும் இவ்விசை உதவும்.

escape sequence : விடுபடு குறித்தொடர் : விடுபடு குறியை முன்னொட்டாகக் கொண்டு தொடரும் குறித்தொடர். பதின்ம எண் முறையில் விடுபடு விசையின் ஆஸ்க்கி மதிப்பு 27. பதினாறெண் முறையில் 1B ஆகும். இதனைத் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு குறிகள் அமையும். ஓர் ஆவணத்தில் உரையின் நடுவே விடுபடு குறித்தொடர் அமைந்திருப்பின் கணினியானது அதனைச் சாதாரண உரையாக எடுத்துக் கொள்ளாமல், கட்டளையாகக் கருதி அதனை நிறைவேற்றும். அக்கட்டளை ஒரு சாதனம் சார்ந்த அல்லது நிரலுக்குரியதாக இருக்கலாம். (எ-டு) ; சி-மொழியில், printf ("One \tTwo"); என்ற கட்டளை, one two என்று இரு சொற்களுக்கிடையே நிறைய இடம் விட்டுக் காட்டும். prints ("One\nTwo");

என்ற கட்டளை, one two என்று அடுத்தடுத்த வரியில் காட்டும். இங்கே, \t, \n என்ற குறியீடுகள் விடுபடு குறித்தொடர் ஆகும்.

ESC character : விடுபடு எழுத்து; விடுபடு குறி : ஆஸ்கி குறித்தொகுதியில் அமைந்துள்ள 32 கட்டுப்பாட்டுக் குறிகளுள் ஒன்று. இது பெரும்பாலும் விடுபடு குறித் தொடரில் முதல் குறியாக அமையும். அச்சுப்பொறி போன்ற சாதனத்துக்குக் கட்டளை தரும் குறித்தொடராக அமைந்த சரமாக இருக்கலாம். கணினி, விடுபடு குறியின் மதிப்பை 27 அல்லது 1B என்றே எடுத்துக் கொள்ளும்.

ESDI : எஸ்டி; இஎஸ்டிஐ மேம்படுத்திய சிறு சாதன இடைமுகப்பு என்று பொருள்படும் Enhanced Small Device Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வட்டுகள் கணினியுடன் அதிவேகத்தில் தகவல் பரிமாறிக் கொள்ள உதவும் ஒரு சாதனம். எஸ்டி இயக்ககம் வினாடிக்கு 10 மெகா பைட்டு அளவில் தகவல் பரிமாற்றம் செய்யும். இந்த வேகத்தை இருமடங்காக்கும் திறனும் இவற்றுக்கு உண்டு.

ESP IEEE standard: இஎஸ்பி ஐஇஇஇ செந்தரம் : Encapsulating Security Payload IEEE Standard என்பதன் சுருக்கம். இணைய நெறிமுறை யான ஐபீ : (Internet Protocol) மூலம் அனுப்பப்படும் செய்தியின் நம்பகத்தன்மை மற்றும் இரகசியத் தன்மையைப் பாதுகாப்பதற்கான தரக்கட்டுப்பாடு. சில சூழ்நிலைகளில் ஐபீ தகவல் செய்திக்கு சான்றுறுதி வழங்குவதாகவும் அமையும்.

.et : இடி : இணையத்தில் ஓர் இணைய முகவரி எத்தியோப்பா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக் கும் புவிப்பிரிவு பெருங்களப் பெயர்.

etching : செதுக்கல்; பொறித்தல். e-text : மின்னுரை : மின்னணு உரை என்பதன் சுருக்கம். மின்னணு ஊடகத்தில் நிகழ்நிலையில் (online) கிடைக்கும் ஒரு புத்தகம் அல்லது உரை அடிப்படையிலான ஆவணம். மின்னுரையை நிகழ் நிலையில் படிக்கலாம். அல்லது பயனாளரின் கணினியில் பதிவிறக்கி அகல்நிலையில் (offline) படித்துக் கொள்ளலாம்.

ethics : ஒழுகலாறு: அறவியல் கோட்பாடு.

eudora : ஈடோரா : ஒரு மின்னஞ்சல் கிளையன் (Client) நிரல். இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் ஸ்டீவ் டார்னர் என்பவர் மெக்கின்டோஷ் கணினிகளில் செயல்படும் இலவச மென்பொருளாய் உருவாக்கியது. இப்போது மெக்கின்டோஷ் மற்றும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணினிகளில் செயல்படக்கூடிய இலவச மற்றும் விற்பனைக்கான மென்பொருளாய் குவால்காம் நிறுவனம் உருவாக்கி வெளியிட்டு வருகிறது.

event-driven environment : நிகழ்வுத் தூண்டல் சூழல்.

event-driven language : நிகழ்வுத் தூண்டல் மொழி.

event driven programme : நிகழ்வுத் தூண்டல் நிரல்.

event-handler : நிகழ்வுத் கையாளி.

event-driven processing : நிகழ்வுத் தூண்டல் செயலாக்கம் : ஆப்பிள் மெக்கின்டோஷ், மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், யூனிக்ஸ், ஒஎஸ்/2 போன்ற மிகவும் மேம்பட்ட இயக்க முறைமைக் கட்டமைப்புகளில் இடம் பெற்றுள்ள ஒரு நிரல் பண்பு. நிகழ்வுகள் பல்வேறு வகைப்பட்டவை. சுட்டியின் ஒரு பொத்தானை சொடுக்குவது, விசைப்பலகையில் ஒரு விசையை அழுத்துவது, வட்டினைச் செருகுவது, ஒரு சாளரத்தின் மீது சொடுக்குவது இவையெல்லாம் நிகழ்வுகளே. தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகள் வரிசையாக அமைகின்றன. நிரலானது ஒவ்வொரு நிகழ்வாக ஏற்று, அதற்கேற்ப செயல்படும். சில வேளைகளில் சில நிகழ்வுகள் முன்னுரிமையுள்ள இன்னொரு நிகழ்வைத் தூண்டலாம்.

event-driven programming: நிகழ்வுத் தூண்டல் நிரலாக்கம்; நிகழ்வு முடுக்க நிரலாக்கம் : விசையை அழுத்துதல், சுட்டியைச் சொடுக்குதல் போன்ற நிகழ்வுகளின்போது செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு நிரலாக்கம் செய்யும் முறை. முதன்முதலாக ஆப்பிள் மெக்கின்டோஷில் நிகழ்வு முடுக்க நிரல்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. ஆனால் இப்போது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், யூனிக்ஸில் எக்ஸ்-விண்டோஸ் போன்ற அனைத்து வரைகலைப் பணித்தளங்களிலும் நிகழ்வு முடுக்க நிரலாக்கமே பின்பற்றப்படுகிறது.

evolutionary refinement : படிமலர்ச்சிச் செம்மையாக்கம்.

Exa: எக்ஸா, இஎக்ஸ்ஏ : ஒரு குவின்டில்லியனை (10") குறிக்கும் முன்னொட்டுச் சொல். கணினிச் செயல்பாட்டில் (இரும எண்முறையில் அமைந்த), எக்ஸா என்னும் சொல் 1,152,921,504,608,846,976 என்ற மதிப்பைக் குறிக்கிறது. இது 2" ஆகும். ஏறத்தாழ ஒரு குவின் டில்லியனுக்குச் சமம். exception : விதிவிலக்கு; இயக்க நேரப் பிழை : ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போது ஏதேனும் பிழையிருப்பின் நுண்செயலி நிரலை நிறை வேற்றாமல் பாதியிலேயே நின்று விடும். இடையிலேயே நிரல் நின்றுவிடாமலிருக்க இயக்க நேரப் பிழைகளை எதிர்கொள்ள அதற் கேற்ற துணைநிரலை தனியே எழுத வேண்டும். இயக்க நேரப் பிழையும் ஒரு குறுக்கீடு (Interrupt) போலவே நுண்செயலியின் கவனத்தைத் திருப்பி வேறொரு துணை நிரலை இயக்கச் செய்யும்.


exception error 12 : இயக்க நேரப் பிழை 12 : டாஸ் இயக்க முறைமை யில் அடுக்கு (Stack) நிரம்பி வழிந் தால் ஏற்படும் பிழை. Config.sys கோப்பில் அடுக்குக்கு ஒதுக்கப் பட்டுள்ள நினைவக அளவை உயர்த்துவதன் மூலம் இப்பிழையைச் சரி செய்யலாம்.


exchange 1 : பரிமாற்றம்.


exchange 2 : இறைப்பகம்.


exchangeable disk : மாற்றிக் கொள்ளக்கூடிய வட்டு.


.exe : .இஎக்ஸ்இ : எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் ஒருவகைக் கோப்பின் வகைப்பெயர். இயக்க (executable programe) என்பதைக் குறிக்கிறது. இத்தகு நிரலை இயக்க, கோப்பின் பெயரை வகைப் பெயரின்றி உள்ளீடு செய்து நுழைவு விசையை (Enter key) அழுத்தினால் போதும்.


exclusive : தனித்த.


executable : இயக்குநிலை : ஒரு நிரல்கோப்பு இயக்கப்படும் நிலையில் இருப்பது. இத்தகைய கோப்புகள் பெரும்பாலும் .bat, .com, .exe போன்ற வகைப்பெயர்களைக் கொண்டிருக்கும்.


executable file : கோப்பு நிறைவேற்றக் கூடிய கோப்பு.


execution interface : இயக்க இடை முகம.


execution slot : இயக்க செருகு வாய்; இயக்க துளைவிளிம்பு; இயக்கப் பொருத்துமிடம்.


execution time : இயக்க நேரம்: நினைவகத்திலிருந்து ஒர் ஆணையை எடுத்து அதனைக் குறிவிலக்கி (decode) செயல்படுத்த நுண்செயலி எடுத்துக் கொள்ளும் நேரம். கணினியின் உள் கடிகாரத் துடிப்பின் அடிப் படையில் இது அளக்கப்படும்.


execution trace cache : இயக்க சுவட்டு இடைமாற்று.


excution units: நிறைவேற்று அலகுகள்


executive information system : செயலாண்மை தகவல் முறைமை : ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு (அதாவது உயர்நிலை மேலாளர்களுக்கு) உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்திகள், விவரங்கள், அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித்தரும் அமைப்பு. தகவலுக்கு முக்கியத்துவம் தருவதால் இது தீர்வு உதவு முறைமை (Decision Support System - DSS) - க்கு மாறுபட்டது. பகுப்பாயவும் தீர்வு மேற்கொள்ளவும் உதவும்.


executive programme: நிரல்: செயலாண்மை நிரல்;இயக்கக் கட்டளைத் தொடர்.


expanded memory specification : விரிவாக்க நினைவக வரன்முறை. expand and colapse : விரிக்கவும் மூடவும்.

expansion : விரிவாக்கம் : கணினியில் சில புதிய வன்பொருள்களை இணைத்து, அடிப்படையான செயல்பாடுகளுக்கு அப்பாலும் அதன் திறனை உயர்த்தும் ஒரு வழிமுறை. பெரும்பாலும் அச்சு மின்சுற்று பலகைகளை (விரிவாக்கப் பலகைகள்) கணினியின்தாய்ப் பலகையினுள் விரிவாக்கச் செருகுவாய்களில் செருகி, விரிவாக்கம் செய்யப்படுகிறது.

expansion bit : விரிவாக்க பிட்; விரிவாக்கத் துண்மி.

expansion board : விரிவாக்கப் பலகை : கணினிக்கு அதிகப்படியான செயல்பாடுகளைச் சேர்க்கவும் அல்லது புதிய வளங்களைச் சேர்க்கவும் அதன் முதன்மையான தகவல் பரிமாற்றப் பாதையில் (பாட்டையில்) செருகப்படும் ஒரு மின் சுற்றுப் பலகை. நினைவகச் சில்லுகள், இயக்கக் கட்டுப்படுத்திகள், ஒளிக்காட்சி இணைநிலை மற்றும் நேரியல் துறைகள், அக இணக்கிகள் போன்றவை இவ்வகையில் அடங்கும். மடிக்கணினி மற்றும் ஏனைய கையடக்கக் கணினிகளில் பொருத்தப்படும் விரிவாக்கப் பலகைகள் பற்று அட்டை (credit card) வடிவில் இருக்கும். இவை பீசி அட்டைகள் எனப்படுகின்றன. இவை கணினியின் பின்பக்கம் அல்லது பக்கவாட்டில் பொருத்தப்படுகின்றன.

expert system shell ; வல்லுநர் முறைமை செயல்தளம்.

expiration date : முடிவுத் தேதி;

காலாவதித் தேதி : ஒரு மென் பொருளின் மாதிரியம் அல்லது பரிசோதனைப் பதிப்பு இயங்காமல் நின்றுவிடும் தேதி, ஒரு மென் பொருளை விற்பனைக்குக் கொண்டு வரும் முன்பு அதற்கான பரிசோதனைப் பதிப்பினை (Beta or Trial) பயனாளர்களுக்குத் தருவர். விற்பனைக்குள்ள சில மென்பொருள்களை சிறிது காலத்துக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், பிடித்திருந்தால் பணம் செலுத்தும்படியும் கூறுவர். இதுபோன்ற மென்பொருள் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் இயங்காமல் போகும். அந்தத் தேதிக்கு முன்பாக புதிய பதிப்பைப் பெற வேண்டும்; அல்லது அதற்குரிய அணுகுக் குறியீட்டைப் பெற வேண்டும்; அல்லது பணம் செலுத்திப் பதிவெண் பெற வேண்டும்.

expire : முடிவு: காலாவதி : ஒரு மென்பொருள் முழுமையாக அல்லது ஒரு பகுதி செயல்படாமல் நின்றுபோதல். பரிசோதனைப் பதிப்புகள் பெரும்பாலும், முழுப் பதிப்பு வெளியிடப்படும் தருணத்தில் செயல்படாமல் போகுமாறு நிரலாக்கம் செய்திருப்பர்.

explore : முழுதும் தேடு.

explorer bar : எக்ஸ்புளோரர் பட்டை.

extention file: கோப்பு வகைப் பெயர்.

external, file : புறக் கோப்பு.

extent, file : கோப்பு நிட்டிப்பு.

extended ASCII : நீட்டித்த ஆஸ்கி : ஆஸ்க்கி (ASCII - American Standard Code for Information Interchnage) குறியீடுகள் மொத்தம் 256, 0 முதல் 255 வரை. நமது அன்றாடப் பயன் பாட்டில் 0 முதல் 127 வரை (7 பிட்டுகள்)மட்டுமே பயன்படுத்துகிறோம். 128 முதல் 255 வரை (8 பிட்டுகள்) அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மதிப்புகளில் பயன்படுத்தப் படும் குறியீட்டுத் தொகுதிகள் நீட்டித்த ஆஸ்க்கி எனப்படுகின்றன. இவை பெரும்பாலும் கணினிக்கு கணினி வேறுபடுகின்றன. ஆங்கிலம் தவிர வேறுபட்ட மொழியாளர்கள் தத்தம் மொழியின் எழுத்துகளை இந்தப் பகுதியில் வைத்துக் கொள் கின்றனர். அல்லது உச்சரிப்பு எழுத்துகள், வரைகலை வடிவங்கள், சிறப்புக் குறியீடுகளையும் வைத்துக் கொள்ள முடியும்.


extended characters : நீடித்த குறியீடுகள், நீட்டித்த எழுத்துகள்: 128 முதல் 255 வரையுள்ள ஆஸ்கி மதிப்புக் கொண்ட எழுத்து வடி வங்கள். விரிவாக்க ஆஸ்கி எட்டு துண்மி(பிட்)களைக் கொண்டிருக்கும். பெரும்பாலும் பிறமொழி எழுத்துகள், பட உருவங்களை உருவாக்கும் குறிகள், உச்சரிப்பைக் குறிக்கும் சிறப்பு அடையாளங் களைக் கொண்டிருக்கும்.


extended edition : நீட்டித்த பதிப்பு : உள்ளிணைந்த தரவுத் தளம், தகவல் தொடர்பு வசதிகள் கொண்ட ஒஎஸ்/ 2 இயக்க முறையின் பதிப்பு. ஐபிஎம் உருவாக்கியது.


Extended Graphics Array : நீட்டித்த வரைகலைக் கோவை : 1990ஆம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்திய, வரைகலைக் கட்டுப்படுத்தி மற்றும் திரைக்காட்சி முறை வடிவமைப்புக்கான உயர் நிலை செந்தரம். இதன்படி 640x480 படப்புள்ளித் தெளிவு, 65,536 வண்ணங்கள் பெறலாம். அல்லது 1,024x768 தெளிவும் 256 வண்ணங்களும் பெறலாம். பெரும்பாலும் பணி நிலையக் (work station) கணினிகளில் பயன்படுகின்றன.


extended memory specification : நீட்டித்த நினைவக வரன்முறை (இஎம்எஸ்) : லோட்டஸ், இன்டெல், மைக்ரோசாஃப்ட், ஏஎஸ்டி ஆய்வக நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியது. எம்எஸ்டாஸ் இயக்க முறைமை பயன்படுத்திக் கொள்ளாத நினைவகப் பரப்புகளையும், 1 எம்பிக்கு அதிகமான நீட்டித்த நினைவகத்தையும் இயல்புநிலைப் பயன்பாட்டுத் தொகுப்புகள் பயன்படுத்திக் கொள்வதற்கான மென் பொருள் இடைமுகம். நீட்டித்த நினைவக மேலாளர் (Extended Memory Manager) என்னும் சாதன இயக்கி நிரல் நினைவகத்தை மேலாண்மை செய்யும். தேவையானபோது இதனை நிறுவிக் கொள்ளலாம். குறிப்பிட்ட பயன் பாட்டுத் தொகுப்பு, இயக்கி நிரல் மூலமாக கூடுதல் நினைவகப் பகுதியை அணுகிக் கொள்ளும்.


extended VGA : நீட்டித்த விஜிஏ : ஒளிக்காட்சி வரைகலைக் கோவை (Video Graphics Array) தர வரையறைகளின் மேம்பட்ட வடிவம். இது, ஒரு படிமத்தை 800x600 முதல் 1600x1200 வரை படப்புள்ளித் தெளிவுடன் காட்ட வல்லது. ஒரு கோடியே 67 இலட்சம் (2') வண்ணங்கள் கொண்ட நிறமாலை யைப் பெற முடியும். இந்த நிற மாலையை ஒரு சாதாரண மனிதர் வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய அளவுக்கு ஒரு கோடியே 90 இலட்சம் வண்ணங்களைக் கொண்டதாக ஆக்க முடியும். எனவே இது, தொடர் முறை (Analog)தொலைக்காட்சிக்கு

ஈடான நிறக்காட்சியைத் தரும் இலக்க முறைச் செந்தரம் எனக் கருதப்படுகிறது.


extension manager : நீட்டிப்பு மேலாளர் : மெக்கின்டோஷ் கணினியிலுள்ள ஒரு பயன்பாட்டு நிரல். கணினியை இயக்கும்போது எந்தெந்த நீட்டிப்புகளை நினைவகத்தில் மேலேற்றிக் கொள்ள வேண்டும் என்பதை வரையறுக்க பயனாளருக்கு உதவுகிறது.


external gateway protocol : புற நுழைவி நெறிமுறை : பிணையங்களை இணைக்கும் திசைவிகளுக்கும் நுழைவிகளும் (Routers and Gateways) இருப்புநிலைத் தகவலைக் கொண்டு சேர்க்கும் நெறிமுறை.


external modem : புற இணக்கி : கணினியின் நேரியல் துறையில் வடம் மூலமாக இணைக்கப்படும் தனித்த இனக்கி.


external viewer : புறப் பார்வைநிரல்; புறக் காட்சிநிரல் : தற்போது பயன் படுத்திக் கொண்டிருக்கும் பயன் பாட்டுத் தொகுப்பினால் கையாள முடியாத வகையைச் சேர்ந்த ஒர் ஆவணத்தைப் பார்வையிடப் பயன் படும் ஒரு பார்வைநிரல்.


extra-high-density floppy disk : கூடுதல் மிகு அடர்வு நெகிழ்வட்டு : 4 எம்பி தகவல் சேமிக்க வல்ல 3.5 அங்குல நெகிழ்வட்டு. இதனை இயக்க இரண்டு முனைகள் கொண்ட தனிச் சிறப்பான இயக்ககம் (Drive) தேவை.


extrapolation : புற இடுகை.


extranet : புறப்பிணையம் : ஒரு நிறுவனம் இணையத் தொழில்நுட்ப அடிப்படையில் (குறிப்பாக வைய விரிவலைத் தொழில்நுட்பங்கள்) தமது நிறுவனப் பிணையத்தை அமைத்திருப்பின் அதனை அக இணையம் (Intranet) என்றழைக்கிறோம். அந்த நிறுவனத்துக்கு பொருள் வழங்குவோர், வாடிக் கையாளர் இவர்களும் வரம்புக்குட் பட்ட வகையில் நிறுவனப் பிணையத்தை அணுக அனுமதித்தால் அதனை புறப்பிணையம் எனலாம். இவ்வாறு அனுமதிப்பதால் வணிக நடவடிக்கைகள் விரைவுபடு கின்றன. உறவுகள் பலப்படுகின்றன.


extrinsic semiconductor : புறத் தூண்டல் குறைகடத்தி : (P-)-வகை அல்லது (N-)-வகை மாசு சேர்ப்பதன் மூலம் வெப்பப் படுத்துதல் போன்ற சூழ்நிலைமைகளில் மின்னணுக்களைப் பயணிக்க வைத்து மின் சாரத்தைக் கடத்துகின்ற ஒருவகைக் குறைகடத்தி. மின்னணுக்களை அவற்றின் இயல்பான நிலை யிலிருந்து வலிந்து நகரச் செய்து புதிய மின்னணுக் கற்றை அல்லது மின்னணு இடைவெளிகளை உரு வாக்குகின்றன.


ezine : மின்னிதழ் : மின்னணு இதழ் என்பதன் சுருக்கம். இணையம், அறிக்கைப் பலகைச் சேவை (BBS) மற்றும் இதர நிகழ்நிலைச் சேவை மூலம் பெரும்பாலும் இலவசமாக வழங்கப்படும் நாளிகை இதழ்.