உள்ளடக்கத்துக்குச் செல்

கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/F

விக்கிமூலம் இலிருந்து
F

F2F எஃப்.2.எஃப்.: முகத்துக்கு நேராக என்று பொருள்படும் Face to Face என்ற தொடரின் குறுஞ்சொல். இணையத்தில் மின்னஞ்சலில் பயன் படுத்தப்படுகிறது.

facetime : பார்வை நேரம் : மற்றொரு வருடன் நேருக்கு நேர் சந்தித்துச் செலவிட்ட நேரம். இணையம் வழிச் சந்திப்பைக் குறிப்பதில்லை.

facsimile transmission : தொகை நகல் செலுத்தம்; தொலை நகல் அனுப்பீடு.

fact template : பொருண்மைப் படிம அச்சு , நிகழ்வுப் படிம அச்சு.

factor, blocking : தடு காரணி

factor, scale : அளவுகோல் காரணி, அளவீட்டுக் காரணி.

failure : பழுது : கணினி அல்லது கணினி சார்ந்த சாதனம் சரியாகச் செயல்படாமை அல்லது செயல்படா நிலை. மின்சாரம் நின்று போனால் கணினி செயல்படாமல் போகிறது. இதைத் தவிர்க்க மின்கலன் உடைய காப்பு மின்சாதனம் (யுபிஎஸ்) பயன் படுத்தலாம். கணினியை முறைப்படி நிறுத்தி வைக்கும் மின்சாரம் கிடைத்துக் கொண்டிருக்கும்.

failure rate : பழுது வீதம் : ஒரு கருவி செயல்படுவதிலுள்ள நம்பகத் தன்மையை அளவிடும் முறை. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் எத்தனை முறை பழுதாகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது.

failsafe : பழுது தடுப்பி

fair use : நியாயமான பயன்நுகர்வு; சட்டப்படி பயன்படுத்தல் : பதிப் புரிமை பெற்ற ஒரு மென்பொருளை சட்டப்படி பயன்படுத்திக் கொள்ளுதல்.

fan 1: விசிறி : கணினி உட்பாகங்கள், லேசர் அச்சுப் பொறிகள் தொடர்ந்து செயல்படும்போது வெப்பம் உண்டாகிறது. இதன் காரணமாய் அக்கருவி செயல்படாமல் போவ தற்கு வாய்ப்புள்ளது. இக்குறையைத் தவிர்க்க அக்கருவிகளுக்குள் விசிறி பொருத்தப்படுவதுண்டு. கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது தொடர்ந்து ஒரு மெல்லிய இரைச்சல் ஒலி கேட்டதுண்டா? அது விசிறியின் சத்தமே.

fan2: பிரி; பிரிப்பு : அச்சுப்பொறியின் இரண்டு தாள்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாமல் வரச் செய்வது.

tanzine : சுவைஞர் இதழ் : ஒரு குழு, ஒரு நபர் அல்லது ஒரு நடவடிக்கை மீது பற்றுக்கொண்டுள்ள சுவைஞர்களால் அத்தகைய சுவைஞர்களுக்காக இணையத்தில் மின்னஞ்சல் வழி யாக வழங்கப்படுகின்ற ஒரு இதழ்.

FAQ எஃப்ஏகியூ (அகேகே) : அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்று பொருள்படும்Frequently Asked Questions என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு குறிப்பிட்ட பொருள்பற்றி பொது வான வினாக்களும் அவற்றுக்குரிய பதில்களும் அடங்கிய ஒர் ஆவணம். இணையத்தில் செய்திக் குழுக்களில் புதிய உறுப்பினர்கள், ஏற்கெனவே பலமுறை பதிலளிக்கப்பட்ட கேள்வி களை மீண்டும் மீண்டும் கேட்ப துண்டு. இப்படிப்பட்ட கேள்வி. பதில்களைத் தொகுத்து நூலாக வெளியிடுவார். forward : முன்செல்.

fast-access storage: விரைவு அணுகு சேமிப்பகம்.

fast farward : வேகமாய் முன் நகர் .

fast SCSI : வேக ஸ்கஸ்ஸி : ஸ்கஸ்ஸி-2 இடைமுகத்தில் ஒரு வகை. ஒரே நேரத்தில் எட்டு துண்மி(பிட்) களைப் பரிமாற்றம் செய்யும். வினாடிக்கு 10 மெகா துண்மி (மெகா பிட்)கள் வரை தகவல் பரிமாற்றம் இயலும், வேக ஸ்கஸ்ஸி இணைப்பி 50 பின்களைக் கொண்டது.

fast/wise SCSI வேக/விவேக ஸ்கஸ்ஸி : ஸ்கஸ்ஸி-2 இடைமுகத் தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16 துண்மி (பிட்) தகவலைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள் வரை தகவல் பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் கொண்டது.

fat application : ஃபேட் பயன்பாடு: பவர்பீசி பிராசசர் பொருத்தப்பட்ட மெக்கின்டோஷ், 68000 பிராசசர் பொருத்தப்பட்ட மெக்கின்டோஷ் ஆகிய இருவகைக் கணினிகளிலும் செயல்படுத்தக்கூடிய ஒரு பயன்பாடு.

fat binary : ஃபேட் இருமம் : பவர்பீசி பிராசசர் அடிப்படையிலான மெக் கின்டோஷ், 68000 பிராசசர் அடிப் படையிலான மெக்கின்டோஷ் ஆகிய இருவகைக் கணினியிலும் செயல்படக்கூடிய ஒருவகை பயன் பாட்டு வடிவாக்கம்.

fat client : கொழுத்த கிளையன் : ஒருவகை கிளையன்/வழங்கன் கட்ட மைப்பில் செயல்படும் கிளையன் கணினி. இவ்வகை அமைப்பில் பெரும்பாலான அல்லது அனைத்துச் செயலாக்கங்களையும் கிளையன் கணினியே செய்து கொள்ளும். வழங்கள் கணினி மிகச் சிலவற்றைச் செய்யும் அல்லது எதையுமே செய் யாது. தகவலை வெளியிடும் பணி யையும், செயல்கூறுகளையும் கிளை யன் கணினியே கவனித்துக் கொள்ளும். வழங்கன் கணினி, தகவல் தளத்தை மற்றும் அதனை அணுகுதல் போன்ற பணிகளைக் கவனித்துக் கொள்ளும்.

FAT file system : ஃபேட் கோப்பு முறைமை : கோப்புகளை ஒழுங்கு படுத்தி மேலாண்மை செய்ய எம்எஸ்-டாஸில் மேற்கொள்ளப் படும் முறைமை. கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் File Allocation Table என்பதன் சுருக்கமே FAT எனப்படுகிறது. ஒரு வட்டினை வடிவாக்கம் (Format) செய்யும்போது எம்எஸ்டாஸ் அவ் வட்டில் ஒரு தகவல் கட்டமைப்பை (Data Structure) உருவாக்குகிறது ஒரு கோப்பினை வட்டில் சேமிக்கும் போது, சேமித்த கோப்பின் விவரங் களை எம்எஸ்டாஸ் ஃபேட்டில் எழுதிக் கொள்ளும். பின்னாளில் ஃபைலின் விவரங்களைப் பயனாளர் கோரும்போது, டாஸ், ஃபேட்டின் உதவியுடன் ஃபைல் விவரங்களைக் கொணர்ந்து தரும். டாஸ் ஃபேட் கோப்பு முறைமையை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒஎஸ்/2, விண்டோஸ் என்டி மற்றும் விண் டோஸ் 98 ஆகியவை தமக்கேயுரிய கோப்பு முறைமைகளை (முறையே HPFS, NTFS, VFAT) ?பின்பற்றுவது டன் ஃபேட் முறைமையை ஏற்றுக் கொள்ளவும் செய்கின்றன.

fat server : கொழுத்த வழங்கன்; கொழுத்த சேவையகம் ஒரு fatware

கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்யாது. பயன்பாட்டு நிரல்கள் மற்றும் தகவல், வழங்கன் கணினியிலேயே இருக்கும். தகவலைப் பெற்று வெளியிடும் பணியையே கிளையன் செய்யும்.

tatware : கொழுத்த மென்பொருள் : திறனற்ற மோசமான வடிவமைப்பு, அரிதாகப் பயன்படுத்தப்படும் ஏராளமான தேவையற்ற வசதிகள் இவற்றின் காரணமாக, நிலைவட்டில் அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் மென்பொருள்.

fault tolerance level : பழுது தாங்கு திறன் மட்டம்: பழுது சகிப்பு நிலை.

favorite : கவர்வி; ஈர்ப்பி; விருப்ப மான விருப்பத் தளங்கள்; விரும்பு பக்கம் : இணையத்தில் பயனாளர் ஒருவர் அடிக்கடி விரும்பிப் பார்க் கும் வலைப்பக்கம், மைக்ரோ சாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோர ரில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. அடிக்கடி பார்க்க விரும்பும் பக்கத்துக்கு ஒரு குறுவழியை (Shotcut) பயனாளர் தாமாகவே அமைத்துக் கொள்ள முடியும். நெட்ஸ்கேப் நேவிக்கேட்டரில் இத்தகைய பக்கத்துக்கு புத்தகக் குறி (Book Mark) என்று பெயர்.

favourites folder கவர்விகள் கோப்புறை : அடிக்கடி பார்க்க விரும் பும் வலைப்பக்கங்களுக்கான குறு வழிகளடங்கிய கோப்புறை.

மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இத்தகைய பெயர். பிற உலாவிகளில் புத்தகக் குறிகள் (Book Marks), சூடான பட்டியல் (Hotlists) என்று வேறுபல பெயர் களில் அழைக்கப்படுகின்றன.

fax programme : தொலை நகலி செயல்முறை; தொலை நகலி கட்ட ளைத் தொடர் தொலை நகலி நிரல்.

tax server : தொலை நகல் வழங்கன்.

F connector : எஃப் இணைப்பி : ஒளிக்காட்சி (Video) பயன்பாடுகளில் எஃப் இணைப்பிகள் பெருமளவு பயன்படுத்தப்படும் ஒர் இணையச்சு (Coaxial) இணைப்பி. இணைக்கும்போது திருப்பாணி (Screw) ஒன்று தேவை.

FDDI எஃப்டிடிஐ : ஒளியிழை பகிர்ந்தமை தரவு இடைமுகம் என்று பயன்படும் Fiber Distributed Data Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதி வேக ஒளியிழை குறும்பரப்புப் பிணையங்களுக்காக அமெரிக்க தேசிய தரக்கட்டுப் பாட்டு நிறுவனம் (ANSI) உருவாக்கிய செந்தரம். வில்லை வளைய (Token Ring) கட்ட மைப்பில் அமைந்த பிணையங்களில் வினாடிக்கு 100மெகா துண்மிகள் (மெகாபிட்ஸ்) வீதம் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வரை

யறுப்புகள் இதில் அடங்கியுள்ளன. எஃப்.டி.டி.ஐ-l என்பது எஃப்.டி.டிஐ-ன் நீட்டித்த வடிவமாகும். நிகழ்நேரத் தகவல் பரிமாற்றத்தில் தொடர் முறைத் தகவலை இலக்கமுறைத் தகவல் வடிவத்தில் அனுப்புவதற் குரிய கூடுதலான வரையறுப்புகள் இதில் உள்ளன.

FDM : எஃப்டிஎம் : அலைப்பகிர்வுச் சேர்ப்புமுறை என்று பொருள்படும் Frequency Division Multiplexing group சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல் சமிக்கைகளை வெவ்வேறு அலைவரிசைக்கு மாற்றிப்பின் அனைத்து அலைவரிசைகளையும் ஒற்றை அலைக் கற்றையாக்கி ஒரே தகவல் தடத்தில் அனுப்பிவைக்கும் முறை. அடிக்கற்றைப் (Baseband) பிணையங்களிலும், தொலைபேசி வழித் தகவல் தொடர்பிலும் தொடர் முறை (Analog) சமிக்கைப் பரி மாற்றத்திலும் எஃப்டிஎம் பயன்படு கிறது. எஃப்டிஎம் முறையில் தகவல் தடத்தின் அலைக்கற்றை சிறுசிறு கற்றையாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கற்றையும் ஒரு தகவல் சமிக்கைகளை ஏந்திச் செல்லும்.

Federal Information Processing Standards : கூட்டரசின் தகவல் செயலாக்கத் தரங்கள் : அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்க அமைப்புகளுக்குள் நடைபெறும் தகவல் செயலாக்கத்திற்கான வழி காட்டுதல்களும் தொழில்நுட்ப வழி முறைகளும் அடங்கிய செந்தரக் கட்டுப்பாடு.

federal database : கூட்டிணைப்புத் தரவுத் தளம் : ஒரு குறிப்பிட்ட துறைபற்றிய அல்லது சிக்கல் பற்றிய தத்தம் கண்டுபிடிப்புகளையும் பட்டறிவையும் அறிவியல் அறிஞர் கள் சேமித்து வைத்துள்ள ஒரு தரவுத் தளம். ஒரு தனி மனிதரால் தீர்க்க முடியாத அல்லது தீர்ப்பதற்குக் கடினமான சிக்கல்களுக்குத் தேவை யான அறிவியல் கலந்தாய்வுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது கூட்டிணைப்புத் தரவுத் தளம்.

Federation of American Research Networks : அமெரிக்க ஆராய்ச்சிப் பிணையங்களின் கூட்டமைப்பு அமெரிக்க நாட்டிலுள்ள பிணையங் களின் இணைப்புத் தொழில்நுட்பக் குழுமங்களை ஒன்று சேர்த்து உரு வாக்கப்பட்ட ஒரு லாப நோக்கில்லா சங்கம். கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொடர்புடைய சமூகங்களிடையே பிணையங்களை ஒருங்கிணைப்பதை தேசிய அளவில் முக்கியமாக வலியுறுத்தும்.

Federation of Computing in the United States : அமெரிக்காவின் கணிப்பணிக் கூட்டமைப்பு : தகவல் செயலாக்கப் பன்னாட்டுக் கூட்டமைப்பில் (International Federation of Information Processing - IFIP) அமெரிக்க நாட்டின் பிரதிநிதி அமைப்பு.

feedback:நிலையறிதல்; பின்னூட்டம்.

feed, card : அட்டை செலுத்தம்.

feed, friction : & Tirujeu paru-L60, உராய்வு செலுத்தம்.

feed, horizantal கிடைமட்டச் செலுத்தம்.

feed, vertical செங்குத்துச் செலுத்தம்,

ferromagnetic material : இரும்பு காந்த ஆக்கப் பொருள்; நேர்காந்த ஆக்கப் பொருள்: மிகுகாந்தப் பண்பு fetch cycle 185 file locking

பெறக்கூடிய பொருள். மின்னணுத் துறையில் பரவலாகப் பயன்படுத் தக்கூடிய பொருள். எஃகு மற்றும் தூளாக்கப்பட்ட இரும்பு ஆகியவை. மின்துண்டி (Inductor)களின், துண்டல் திறனை அதிகரிக்க, அவற்றின் சுருள்மையமாய்ப் பயன்படுகிறது. நெகிழ்வட்டு, நிலைவட்டு மட்டும் காந்த நாடாக்களில் மேல்பூச்சுக்குப் பயன்படுகிறது.

fetch cycle: கணவர் சுற்று.

fetch instruction : கணவர் ஆணை.

fi : எஃப்ஐ இணையத்தில் ஃபின் லாந்து நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

field - based search : புலம் சார் தேடல், field card : அட்டை புலம்.

field delimitter : புலம் வரம்புக்குறி.

field list : புலப் பட்டியல்.

field menu : புலப்பட்டி.

field programmable logic array : புல நிரலாக்க தருக்கக் கோவை : ஒரு வகையான ஒருங்கிணை மின்சுற்று (IC). இதில் தருக்க மின்சுற்றுகளின் (logic circuits) கோவை இருக்கும் . தனித்த மின்சுற்றுகளிடையே இணைப்புகளையும், அதன்மூலமாக கோவையின் தருக்கச் செயல்முறை களையும் நம் விருப்பப்படி நிரலாக்கம் செய்ய முடியும், தயாரிப் புக்குப் பிறகு, குறிப்பாக அவற்றைக் கணினிகளில் நிறுவும் நேரத்தில் நிரலாக்கம் செய்யலாம். இத்தகைய நிரலாக்கத்தை ஒரேயொரு முறை மட்டும் செய்ய முடியும். சிப்புவின் இணைப்புகளிடையே மிக அதிக மின்சாரத்தை செலுத்தி இத்தகைய நிரலாக்கத்தைச் செய்வர்.

field/record : புலம்/ ஏடு. field size : புலம் அளவு field, updatable : மாற்றத் தகடு புலம். field, variable : மாறு புலம். figure : உரு.

file attachment : கோப்பு உடன் இணைப்பு.


file, archived : காப்பக கோப்பு. file codes : கோப்புக் குறிமுறைகள். file compression : கோப்பு சுருக்கம்; கோப்பு அழுத்தம்; கோப்பு இறுக்கம்: ஒரு கோப்பினை வேறிடத்துக்கு அனுப்பி வைக்க அல்லது சேமிக்க அதன்அளவைச்சுருக்கும் செயல்முறை. file

conversion utility : கோப்பு மாற்றல் பயன்பாடு,

file deletion : கோப்பு நீக்கம்.

file, destination : சேகரிக்க கோப்பு.

file control block : கோப்பு கட்டுபாட்டுத் தொகுதி : ஒரு கணினியின் இயக்க முறைமை, திறந்து வைக்கப் பட்ட ஒரு கோப்பு பற்றிய விவரங் களைப் பதிவுசெய்து வைத்துக் கொள்வதற்கு தற்காலிகமாக ஒதுக்கப்படும் நினைவகப் பகுதி.

file dump : கோப்பு தினிப்பு

file, end of : கோப்பு முடிவு.

file extent : பாவு கோப்பு.

file extension: கோப்பு வகை பெயர்.

file handling : கோப்பு கையாளல்.

file identification கோப்பு அடையாளம் காணல். file, index sequential : சுட்டு தொடரியல் கோப்பு. file locking : கோப்புப் பூட்டல். 

file management: கோப்பு மேலாண்மை.

file marker, end of: கோப்பு முடிவுக் குறி. file, multi-reel : பல் சுருள் கோப்பு. file open : கோப்புத் திறப்பு file recovery  : கோப்பு மீட்பு இழப்பு போன அல்லது படிக்க முடியாத வட்டுக் கோப்புகளை மீட் டெடுக்கும் செயல்முறை. பல்வேறு காரணங்களினால் கோப்புகள் தொலைந்து போகலாம். கவனக் குறைவாக அழித்துவிடல், கோப்பு பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு பாதிப்பு ஏற்படல், வட்டு பழுதடைதல் போன்ற காரணங்களினால் நாம் கோப்பு களை இழக்க நேரிடுகிறது. ஒரு கோப்பினை அழிக்கும்போது அதன் விவரங்கள் அழிக்கப்படுவதில்லை. அந்த இடம் பிற கோப்புகளுக்குக் கிடைக்கும். கோப்பு விவரங்கள் எழுதப்பட்ட இருப்பிடங்களை அடையாளம் காணமுடிந்தால் ஒட்டு மொத்தக் கோப்பையும் மீட்டுவிட முடியும். பழுதான கோப்புகளைப் பொறுத்தமட்டில், வட்டில் குறிப் பிட்ட பகுதியில் இருக்கும் விவரத் தைப் படித்து வேறொரு வட்டில் அல்லது கோப்பில் ஆஸ்கி (ASCII) அல்லது இரும/பதினறும எண்ணுரு வில் எழுதிக்கொள்ளும் நிரல்கள் உள்ளன. எனினும் இந்த முறையில் மூலத்தகவலை அப்படியே பெறு வது இயலாது. இழந்த கோப்புகளை மீட்பதற்குச் சிறந்த வழிமுறை அவற்றை காப்பு நகலிலிருந்து (Backup) பெற்றுக் கொள்வதேயாகும்.

file fragmentation கோப்புக் கூறாக்கம் : 1. ஒரு கோப்பின் விவரங் கள் வட்டில் தொடர்ச்சியாக எழுதப்

பதியப்பட்டுள்ளது என்கிற விவரம் ஒர் அட்டவணையில் எழுதப்படு கிறது. இதன் காரணமாய் வட்டில் எழுதப்படாத இடங்களும் தொடர்ச்சியாக இருப்பதில்லை. வட்டு நிறைந்து போகின்ற நிலை யில் கோப்பினை எழுதவும் படிக் கவும் அதிக நேரம் ஆவதுண்டு. இவ்வாறு கூறுகளாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களை ஒரளவு வரிசையாக எடுத்தெழுது வதற்கென பயன்பாட்டு நிரல்கள் உள்ளன. 2. ஒரு தரவுத் தளத்தில் அட்டவணைக் கோப்பில் (Tables) ஏடுகள் (Records) வரிசையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. அவ்வப்போது ஏடுகளை அழிக்கிறோம், சேர்க் கிறோம். இதனால் ஏடுகள் கூறாகிக் கிடக்கும். ஆனால் பெரும்பாலான தரவுத் தள தொகுப்புகளில் ஏடுகளை வரிசைப்படுவதற்கென பயன்பாட்டு நிரல்கள் உள்ளன.

file retrieval : கோப்புக் கொணர்தல் : ஒரு தகவல் கோப்பினை, சேமித்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து அதனைப் பயன்படுத்த விருக்கும் கணினிக்குக் கொணரும் நடவடிக்கை.

file, sequential : தொடரியல் கோப்பு file sharing : கோப்பு பகிர்வு: பிணையங்களில் மையக் கணினி அல்லது வழங்கன் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட கோப்பினைப் பல்வேறு பயனாளர் களும் ஒரே நேரத்தில் பார்வையிட, திருத்த, வசதி இருக்க வேண்டும். இவ்வாறு ஒரே நேரத்தில் ஒரு கோப்பினை பலர் கையாள்வது கோப்புப் பகிர்வு எனப்படுகிறது. ஒரே நேரத்தில் வேறுவேறு நிரல்கள் அல்லது வேறுவேறு கணினிகள் பயன்படுத்துகின்றன எனில் கோப்பு விவரங்கள் அதற்கேற்ற வடிவாக் கங்களில் மாற்றப்பட்டு அளிக்கப் பட வேண்டும். ஒரு கோப்பு, பல ராலும் கையாளப்படுகிறதெனில் அக்கோப்பினை அணுகுவது, நுழை சொல் (P6assword) பாதுகாப்பு மூலம் ஒழுங்குப்படுத்தப்படவேண்டும். ஒரே நேரத்தில் ஒரு கோப்பினை ஒன்றுக்கு மேற்பட்டோர் திருத்த முடியாதவாறு கோப்புப் பூட்டு முறை (File lock) இருக்க வேண்டும்.

file type : கோப்பு வகை : ஒரு கோப்பின் செயல்பாட்டு அல்லது கட்டமைப்புப் பண்புக் கூறுகளின் அடிப்படையில் கோப்பு வகைகள் அமைகின்றன. பெரும்பாலும் ஒரு கோப்பின் வகை அதன் பெயரைக் கொண்டே அடையாளம் காணப்படுகிறது. எம்எஸ்டாஸில் கோப்பின் வகைப்பெயர் (Extension) கோப்பின் வகையை அடையாளம் காட்டும். (எ-டு) DBF-தரவுத்தள கோப்பு; EXE- இயக்குநிலைக் கோப்பு.

File Transfer Access and Management (FTAM) : கோப்புப்பரிற்ற அணுகலும் மேலாண்மையும்.

file type : கோப்பு வகை.

file update : கோப்பு இற்றைநிலைப் படுத்தல்; கோப்பு புதுக்குதல்.

file spec : கோப்பு வரன்முறை.

file store : கோப்புச் சேமிப்பு.

filexibility : நெகிழ்வுத்தன்மை.

fill ; நிரப்பு,

fill colour : நிரப்பு நிறம்

film : படச்சுருள்.

film reader : படச்சுருள் படிப்பி.

filter by form : படிவவழி வடிகடடல்.

filtering programme: சல்லடை நிரல்; வடிகட்டி நிரல் : தகவலை வடி கட்டித் தேவையான விவரங்களை மட்டும் எடுத்துத் தரும் நிரல்.

filter by selection : தேர்வு மூலம் வடிகட்டல்.

filter keys : வடிகட்டி விசைகள் : விண்டோஸ் 95 இயக்க முறைமை யில் கன்ட்ரோல் பேனலில் அணுகும் முறை (Accessibility) விருப்பத் தேர்வு கள் உள்ளன. உடல் ஊனமுள்ள வர்கள் விசைப் பலகையைப் பயன் படுத்தும் முறைகள் அதில் உள்ளன. விசைப்பலகையிலுள்ள விசைகளின் மீது விரல்களை அழுத்தும்போது மெதுவான அல்லது தவறான விரல் அசைவுகளினால் ஏற்படும் பிழைகளைப் புறக்கணிக்குமாறு கணினிக்கு அறிவுறுத்த முடியும். இதற்கென வடிகட்டி விசைகள் வசதி உள்ளது.

filter excluding selection: தேர்ந்ததைத் தவிர்த்து வடிகட்டல்.

final form text DCA : இருதிவடிவ உரை டிசிஏ ஒத்திசைவில்லா இரண்டு நிரல்களுக்கிடையே தகவல் பரிமாறிக் கொள்ளும் பொருட்டு, அச்சிடுவதற்குத் தயாரான வடிவில் சேமித்து வைக்கப்படும் ஆவணத்தின் தரவரையறை. ஆவண உள்ளடக்கக் கட்டமைப்பு என்று பொருள்படும் Document Content Architecture என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர் டிசிஏஎன்பது.

finalize : முடிவுறுத்து.

finalizer : முடிவுறுத்தி. finally : முடிவாக

find all files: அனைத்து கோப்புகளையும் கண்டறி.

find and replace: கண்டறிந்து மாற்று find duplicates : போலிகளை கண்டறி. find entire cells : அனைத்து கலங்களையும் கண்டறி. find next : e1அடுத்தது கண்டறி. find now : இப்போதுக் கண்டறி. find unmatched : பொருந்தாதன கண்டறி. fine : தரமான. fine print : தரமான அச்சு. finger : ஃபிங்கர்: இது ஒர் இணையப் பயன்பாட்டு நிரல். இணையத்தில் நுழையும் ஒரு பயனாளர், இணையத் தில் நுழைந்துள்ள இன்னொரு பயனாளர் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள உதவும் நிரல். இன்னொரு பயனாளரின் மின்னஞ் சல் முகவரியைக் கொடுத்தால், அவரின் முழுப்பெயர் மற்றும் பிறர் அறிந்துகொள்ள அவர் அனுமதித் துள்ள மற்ற விவரங்களையும் பெற முடியும். அல்லது ஒரு பெயரைத் தந்து அப்பெயரில் உள்ளவர்கள் இணையத்தில் அப்போது உலா வரு கின்றனரா என்பதையும் அறியலாம். ஆனால், பிற வலைத் தளங்கள் இந்த நிரல் அணுகுவதற்கு அனுமதி தர வேண்டியது முக்கியமாகும். யூனிக்ஸ் பணித்தளத்தில் மட்டுமே செயல்பட்டு வந்த ஃபிங்கர் இப் போது வேறுபல பணித்தளங்களுக் கான வடிவங்களிலும் கிடைக்கிறது.

FIR port , எஃப்ஐஆர் துறை : வேக அகச்சிவப்புத் துறை என்று பொருள்படும்

Fast Infrared port: என்ற தொடரின் சுருக்கச் சொல் கம்பியில்லா உள்ளீட்டு/வெளியீட்டுத் துறை. பெரும்பாலும் கையி லெடுத்துச் செல்லும் கணினிகளில் இருக்கும். அகச்சிவப்பு ஒளிக்கதிர் மூலமாக புறச்சாதனங்களுடன் தகவலைப் பரிமாறிக் கொள்ளும்.

FIRST : ஃபர்ஸ்ட் ; நிகழ்வு எதிர்ச் செயல் மற்றும் பாதுகாப்பு குழுக் களின் அமைப்பு என்று பொருள் LGub Forum of Incident Response and Security Teams என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

இணையம் கழகம்  (Internet Society - ISOC) அமைப்பினுள் செயல்படும் ஒரு நிறுவனம் ஆகும். கணினி அமைப்புகளின் பாதுகாப்புக்கு ஏற் படும் ஆபத்துகளுக்கு எதிரான கூட்டு முயற்சியையும், தகவல் பகிர்வை யும் ஊக்குவிக்கும் பொருட்டு செர்ட் (CERT) அமைப்புடன் சேர்ந்து செயல்படுகிறது.

first in first out : முதல் புகு முதல் விடு; முதலில் வந்தது முதலில் செல்லும் : ஒரு கியூவில் நிற்பவர் களுள் முதலில் வந்தவரே முதலில் செல்ல முடியும். கணினியிலும் இது போல, ஒரு பட்டியலில் முதலில் சேர்க்கப்பட்டதே முதலில் நீக்கப் படுகின்ற முறை பல்வேறு செயலாக் கங்களில் பின்பற்றப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அச்சுப் பொறிக்கு அனுப்பப்பட்ட வணங்களின் பட்டியலில் முதலில் வந்ததே முதலில் அச்சிடப்படும்.

first-in-last-out : முதல் புகு கடைவிடு முதலில் வந்தது இறுதியில் செல்லும், fixed block length : நிலைத்த தொகுதி நீளம். 

fixed numeric format : மாறா எண் வகை வடிவம்.

fixed- head disc unit: நிலை முனை வட்டகம்.

fixed point representation : நிலைப் புள்ளி உருவகிப்பு.

fixed point notation : நிலைப் புள்ளி குறிமானம்: பதின்மப் புள்ளி ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைத்து இடம்பெறும் எண் வடிவாக்கம். இத்தகைய எண் வடிவம் கச்சிதமான திறன்மிக்க முழுஎண் வடிவத்துக் கும், பரந்த மதிப்புகளைச் சுட்ட வல்ல சிக்கலான மிதவைப் புள்ளி வடிவத்துக்கும் இடைப்பட்ட தாகும். மிதவைப் புள்ளி எண்களைப் போலவே, நிலைப்புள்ளி எண் களிலும் பின்னப்பகுதி உண்டு. ஆனாலும், மிதவைப் புள்ளியெண் கணக்கீடுகளைவிட நிலைப்புள்ளி யெண் கணக்கீடுகளுக்கு குறைந்த நேரமே ஆகும்.

fixed-programme computer : நிலை நிரல் கணினி.

fixed word length computer : நிலைச் சொல்நீளக் கணினி ஏறத்தாழ அனைத்து கணினிகளுக்கும் இவ் விளக்கம் பொருந்தும். ஒரு கணினி யில் நுண்செயலி, பிற வன்பொருள் பாகங்களுடன் தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் முதன்மையான தகவல் பாட்டையில் ஒரே நேரத்தில் எத்தனை துண்மி (பிட்)களைப் பரிமாறிக் கொள்ள முடியும் என்பதே ஒரு சொல் எனப்படுகிறது. ஒரு சொல் எனப்படுவது 2 பைட்கள் அல்லது 4 பைட்கள் நீளமுள்ளதாக இருக்கலாம். தற்போது புழக்கத்தி லுள்ள ஐபிஎம் மற்றும் மெக்கின் டோஷ் சொந்தக் கணினிகளில் பொதுவாக 2 பைட்டு, பைட்டு சொற்கள் கையாளப்படுகின்றன. 8 பைட்டு சொற்களைக் கையாளும் கணினிகளும் உள்ளன. நுண்செயலி யின் அனைத்துச் செயலாக்கங் களிலும் ஒரே அளவான சொல் கையாளப்படும் எனில் அது நிலைச் சொல் நீளக் கணினி எனப்படுகிறது.

fj : எஃப்ஜே : இணையத்தில், பிஜி நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

tlame bait : பிழம்புத் தீனி, எரிக் கொள்ளிக்கு எண்ணெய் உணர்ச்சி வயமான விஷயத்தில் சர்ச்சையைக் கிளப்பும் கருத்துகளை முன்வைத் தல். இந்தியாவைப் பொறுத்தவரை சாதி, மதம், வழிபாட்டு இடம் தொடர்பான கருத்துகள் இவ்வகை யில் அடங்கும். கணினித் துறை யைப் பொறுத்தவரை அஞ்சல் பட்டியல், செய்திக் குழுக்கள், ஏனைய நிகழ்நிலைக் கருத்தரங்குகளில் பிறரின் சினத்தைக் கிளறும் வகை யில் முன்வைக்கப்படும் ஒரு கருத்து.

famefest பிழம்பு விருந்து இணையத்தில் செய்திக் குழுவிலும் அல்லது பிற நிகழ்நிலைக் கருத் தரங்கிலும் சர்ச்சையைத் தூண்டும் வகையில் தொடர்ச்சியாக முன் வைக்கப்படும் செய்திகள்/ கருத்துரைகள்.

flamer : தீயாள்; நெருப்பாளி, பிழம்பர்: மின்னஞ்சலில், செய்திக் குழுக் களில், நிகழ்நிலை விவாத மேடை களில், நிகழ்நிலை அரட்டைகளில் சினமூட்டும், சர்ச்சைக்கிடமான செய்தியை அனுப்பி வைப்பவர்.

fame war : தீப்போர்; பிழம்புப் போர்: அஞ்சல் பட்டியல், செய்திக் குழு

மற்றும் பிற நிகழ்நிலைக் கருத் தரங்கில் காரசாரமான வாதப் பிரதி வாதமாக மாறிப்போகின்ற ஒரு கலந்துரையாடல்.

flash BIOS : அதிவிரைவு பயாஸ்.

flat :தட்டை.

flatbed plotter : கிடைத்தட்டை வரைவு பொறி, கிடைத்தட்டை வரைவி.

flatbed scanner: கிடைத்தட்டை வருடு பொறி, கிடைத் தட்டை வருடி ': இத்தகைய வருடு பொறியில் கிடைமட்டமாக தட்டையான கண்ணாடிப் பரப்பு இருக்கும். இதன்மீதுதான் புத்தகம் அல்லது தாள் ஆவணத்தைக் கிடத்த வேண்டும். அப்பரப்பின்கீழ் ஒரு வருடுமுனை அச்சுநகலின் உருப் படத்தை வருடிச் செல்லும். சில கிடைத்தட்டை வருடுபொறிகள் ஊடுகாண் (transparent) நகல்களை, காட்டாக சிலைடுகளை உருவாக்கும் திறனுள்ளவை.

flat file database : தடடைக்கோப்பு தரவுத் தளம் : அட்டவணை வடிவிலான தரவுத் தளம். ஒவ்வொரு தரவுத் தளமும் ஒரேயொரு அட்டவணையை மட்டுமே கொண்டிருக்கும். ஒரு நேரத்தில் ஒரு அட்டவணையில் மட்டுமே பணியாற்ற முடியும்.

flat file directory : தடடைக்கோப்பு கோப்பகம் : உள் கோப்பகங்கள் (Sub Directories) இல்லாத, கோப்புகளின் பட்டியலை மட்டுமே உள்ளடக்கிய ஒரு கோப்பகம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

flat file system : தடடைக்கோப்பு முறைமை : படிமுறை அடுக்கு (hierarchieal order) இல்லாத ஒரு வகைக் கோப்புமுறை. இம்முறையில் வட்டில் உள்ள எந்த இரண்டு கோப்பும் ஒரே பெயரைக் கொண் டிருக்க முடியாது. அவை வெவ் வேறு கோப்பகத்தில் இருப்பினும் ஒரே பெயர் இருக்க முடியாது.

flatform : பணித்தளம்.

flat panel display : தட்டைப் பலகக் காட்சி,

flat screen : தட்டைத் திரை.

flat square monitor : தட்டைச் சதுர திரையகம்.

flexible disk: நெகிழ்வட்டு.

flickering :மினுக்கல்.

floating decimal arithmetic : மிதவைப் பதின்மக் கணக்கீடு.

floating point : மிதவைப் புள்ளி.

floating-point operation : மிதவைப் புள்ளி செயல்பாடு.

floating point representation :மிதவைப் புள்ளி உருவகிப்பு.

floating point constant : மிதவைப் புள்ளி மாறிலி ': ஒரு மிதவைப் புள்ளிப் பதின்ம எண் மதிப்பினைக் குறிக்கும் ஒரு மாறிலி.

floating point number : மிதவைப் புள்ளி எண் : கொடுக்கப்பட்ட ஒர் அடியெண்ணு(Base)க்கு ஏற்ப, பின்னம் மற்றும் அடுக்கெண் (Mantissa and exponent) ஆகிய இரு பகுதிகளைக் கொண்ட எண் வடிவம். பின்னம், பொதுவாக 0-1க்கு இடைப்பட்ட எண்ணாக இருக்கும். அதனை, அடியெண்ணின் மீது அடுக்கெண்ணை பத்தின் அடுக்காகக் கொண்டு பெருக்கினால் மிதவைப் புள்ளி எண்ணின் மதிப்பு கிடைக்கும்.

0.12345x 10'

என்பது ஒரு மிதவைப் புள்ளி எண். இதில் 0.12345 என்பது பின்னம் (mantissa). 10 என்பது அடியெண் (Base), 3 என்பது அடுக்கெண் (Exponent). இதன் மதிப்பு 123.45 ஆகும். இதே எண்ணை

1.2345x10°

12.345x 10

என்றும் கூற முடியும். இங்கே புள்ளி இடம் மாறிக் கொண்டே இருப்ப தால், மிதவைப் புள்ளி எனப் பெயர் பெற்றது. சாதாரண அறிவியற் குறி Lorraorth (scientific notation) பத்தினை அடியெண்ணாகக் கொண்ட மிதவைப் புள்ளி எண்களைப் பயன் படுத்துகிறது. கணினியில் இரண்டினை அடியெண்ணாகக் கொண்ட மிதவைப் புள்ளி எண்களே பொதுவாக புழக்கத்தில் உள்ளன.

floating point register : மிதவை புள்ளியெண் பதிவகம் : கணினியில் மிதவைப் புள்ளி எண் மதிப்புகளை இருத்தி வைக்க வடிவமைக்கப்பட்ட பதிவகம்.

floating point type : மிதவைப்புள்ளி வகை.

floptical : நெகிழ்ஒளிவம் : காந்தம் மற்றும் ஒளிவத் தொழில் நுட்பங்களின் சேர்க்கை. இதனடிப்படை யில் உருவாக்கப்படும் 3.5 அங்குல சிறப்புவகை வட்டுகளில் மிக அதிகத் தகவல்களை பதிய முடியும். வட்டினில் காந்த வடிவிலேயே தகவல் எழுதப்படுகிறது. படிக்கப் படுகிறது. ஆனால், எழுது/படிப்பு முனை லேசர் கதிர்மூலம் இடம் நிறுத்தப்படுகிறது. இன்சைட் பெரிஃ பெரல்ஸ் என்னும் நிறுவனம் இச் சொல்லை உருவாக்கியது. வணிகக்குறியாகவும் பதிவு செய்யப்ப ட்டுள்ளது.

floptical drive நெகிழ்ஒளிவ இயக்ககம்.

flow : ஒழுக்கு பாய்வு.

flow analysis : ஒழுங்கு பகுப்பாய்வு: கணினி அமைப்பில் பல்வேறு வகையான தகவல்களின் போக்குவரத்தை ஆய்வு செய்யும் ஒரு வழிமுறை. குறிப்பாக, தகவலின் பாதுகாப்பு மற்றும் அதன் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் கட்டுப் பாடுகள் தொடர்பான ஆய்வாக இருக்கும்.

flow diagram : பாய்வு வரைபடம்

flow chart, detail : விவரப் பாய்வு நிரல்படம்.

flow chart, system : முறைமை பாய்வு நிரல்படம்.

flush : ஒழுங்கு சீர் : கணினித் திரையில் அல்லது தாளில் விவரங் கள் ஒரு குறிப்பிட்ட சீரமைவுடன் அமைந்திருப்பது. ஒழுங்கு-வலம் எனில் வலப்புறத்தில் எழுத்துகள் ஓரச் சீர்மையுடன் அமைந்திருத் தலைக் குறிக்கும். ஒழுங்கு இடம் எனில் இடப்புற ஓரச் சீர்மையைக் குறிக்கும்.

flush : வெளியெடு; வழித்தெடு; துடைத்தெடு; அகற்று : நினைவகத் தில் ஒரு பகுதியிலுள்ள விவரங் களைத் துடைத்தெடுத்தல். எடுத்துக் காட்டாக, வட்டுக் கோப்பு இடை நிலை (Butter) நினைவகத்திலுள்ள விவரங்களை அகழ்ந்தெடுத்து வட்டில் எழுதிக் கொள்ள வேண்டும். அதன்பின் இடைநிலை நினை


வகத்தை துடைத்தெடுக்க வேண்டும் - மீண்டும் நிரப்புவதற்காக. இது போலவே விசைப்பலகையில் உள்ளீடு பெறும் விவரங்களை நுண் செயலி அல்லது வேறு உறுப்புகள் படிக்குமுன் அவை இடைநிலை நினைவகத்தில் தங்கியிருப்பதுண்டு. அவற்றையும் துடைத்தெடுத்துப் படிக்கப்படவேண்டும்.

flux reversal : காந்தப்புல திசை மாற்றம் : காந்தவட்டில் அல்லது காந்த நாடாவின் மேற்பரப்பில் உள்ள மிக நுணுக்கமான காந்தத் துகள்களின் திசையமைப்பில் ஏற் படும் மாற்றம். இரும இலக்கங்கள் 0, 1 ஆகியவை இருவேறு காந்தப்புல திசையினால் குறிப்பிடப்படுகின்றன. காந்தப்புல திசைமாற்றம் இரும 1-என்ற இலக்கத்தைக் குறிக்கின்றது. இரும 0-வைக் குறிக்க திசைமாற்றக் குறியீடு எதுவும் இல்லை.

focus : முன்னிறுத்து

folder options :கோப்புறை விருப்பத் தேர்வுகள்.

folders : கோப்புறைகள்.

follow up மறுமொழி, பதிலுரை: தொடர் நடவடிக்கை : செய்திக் குழு வில் வெளியிடப்பட்ட ஒரு கட்டு ரைக்குப் பதிலுரை. மூலக் கட்டுரை யில் இருக்கும் பொருளடக்க {Subject) வரியே பதிலுரையிலும் இருக்கும். Re என்பது முன்னொட் டாக இருக்கும். ஒரு கட்டுரையும் அதற்கான பதிலுரைகளும் கால வரிசைப்படி தொகுக்கப்பட்டிருக் கும். பயனாளர் செய்தி படிக்கும் நிரல்மூலம் அனைத்தையும் வரிசை யாகப் படிக்க முடியும்.

font class எழுத்துரு வகை; எழுத்துரு இனக்குழு.

font family property : எழுத்துரு குடும்பப் பண்பு.

Font/DA Mover : ஃபாண்ட்/டி மூவர்: பழைய ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் பயனாளர் விரும்பும் எழுத்துருக்களையும், திரைப் பயன் பாடுகளையும் நிறுவிக் கொள்ள உதவும் ஒரு பயன்பாட்டு நிரல்.


font number :எழுத்துரு எண் : ஒரு பயன்பாட்டுத் தொகுப்பு அல்லது இயக்க முறைமை, ஒர் எழுத்துருவை அடையாளம் கண்டுகொள்ள உதவும் எண். ஆப்பிள் மெக்கின் டோஷ் கணினியில் எழுத்துருக்கள் அவற்றின் பெயர்களைக் கொண்டும் மற்றும் அவற்றின் எண்களைக் கொண்டும் அடையாளம் காணப் படுகின்றன. ஒர் எழுத்துரு கணினி யில் நிறுவப்படும்போது அதே எண்ணில் ஏற்கெனவே ஒர் எழுத்துரு நிறுவப்பட்டிருக்கிறது எனில், புதிய எழுத்துருவின் எண்ணை மாற்றிக் கொள்ள முடியும்.

font size : எழுத்துரு அளவு : ஒர் எழுத்துருவின் உருவளவு. பெரும் பாலும் புள்ளிக் (point) கணக்கில் குறிக்கப்படுகிறது. ஒர் அங்குலம் 72 புள்ளிகளாகும்.

fontsize property : எழுத்துரு அளவு பண்பு.

font page : எழுத்துருப் பக்கம் : ஐபிஎம்-பல்வண்ண வரைகலைக் கோவைக் ஒளிக்காட்சி 6) (Graphics Array Video) அமைப்புகளில் கணினித் திரையில் எழுத்துகளைக் காண்பிக்க, அடிப்படையாக இருக்கும் ஒளிக் காட்சி நினைவகத்தின் (Video Memory) ஒரு பகுதி, நிரலர் தன் விருப்பப்படி வடிவமைத்த எழுத் துருவின் வரையறுப்பு அட்ட வணையை (எழுத்து வடிவங்களின் தொகுப்பு), இந்த நினைவகப் பகுதி யில்தான் இருத்திவைக்க வேண்டும்.

font style property: எழுத்துரு பாணிப் பண்பு.

font suitcase : எழுத்துருக் கைப்பெட்டி : மெக்கின்டோஷ் கணினி களில் சில எழுத்துருக்களையும் திரைப்பயன் நிரல்களையும் கொண்ட ஒரு கோப்பு. இந்த இயக்க முறைமையின் முந்தைய பதிப்பு களில் இத்தகைய கோப்புகள் ஒரு கைப்பெட்டிச் சின்னத்தில் ஆங்கில ஏ என்ற எழுத்துடன் காட்சியளிக் கும். பதிப்பு 7.0 விலிருந்து இந்தச் சின்னம் தனிப்பட்ட ஒர் எழுத் துருவைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.

font type : எழுத்துரு வகை.

too : ஃபூ : நிரல்கள் ஒரு குறிப் பிட்ட தகவலை உணர்த்த எடுத்துக் காட்டாகக் குறிப்பிடும் சரம். ஒரு கட்டளை வாக்கியத்தை விளக்கு வதற்காகப் பயன்படும் மாறிகள், செயல்கூறுகள் மற்றும் தற்காலிக கோப்புகளின் பெயர்கள் ஆகிய வற்றைக் குறிக்க, நிரலர்கள் பொது வாக ஃபூ என்ற சொல்லையே பயன்படுத்துவர்.

fore casting : முன்கணித்தல்

foreground job : முன்புல வேலை; முன்னணி வேலை.

foreground task : முன்பும் பணி . fork1: கிளை மேக்ஓஎஸ் இயக்க முறைமையில் ஒரு கோப்பினை அடையாளம் காணப் பயன்படும் இரு பகுதிகளில் ஒன்று. ஒரு மெக்கின்டோஷ் கோப்பு, தகவல் கிளை (data tork), வளக் கிளை (resource fork) இரண்டையும் கொண் டிருக்கும். பயனாளர் உருவாக்கும் பெரும்பாலான அல்லது அனைத்துக் கோப்புகளும் தகவல் கிளையில் இருக்கும். வளக் கிளை பெரும் பாலும் பயன்பாட்டு நோக்கிலான தகவல்களை அதாவது எழுத்துருக் கள், உரையாடல் பெட்டிகள் மற்றும் பட்டிகளைக் கொண்டிருக்கும்.

fork2: கிளை : பல்பணி இயக்க முறைமையில் ஒரு தாய் செய லாக்கம் தொடங்கிய பிறகு ஒரு சேய் செயலாக்கத்தைத் தொடங்கி வைக்கும் கட்டளை.

FOR loop : ஃபார் மடக்கி : ஒரு கணினி நிரலில் ஒரு குறிப்பிட்ட கட்டளைப் பகுதியை குறிப்பிட்ட தடவைகள் திரும்பத் திரும்பச் செய்யவைக்கும் கட்டுப்பாட்டுக் கட்டளை. இக்கட்டளையின் தொடர் அமைப்பு மொழிக்கு மொழி வேறு படுகிறது. பெரும்பாலான மொழி களில் ஒரு சுட்டுமாறியின் மதிப்பு குறிப்பிட்ட எல்லைக்குள் தொடர் மதிப்பாக மாறிக் கொண்டே இருக்கும். (எ-டு) பேசிக் மொழி:

FOR | = 1 TO 100

PRINT |

NEXT | பாஸ்கல் மொழி: FOR I: = 1 TO 10 DO

WRITELN (I); சி.மொழி: for {i=0; i<10; i++)

print ("%d ", );

சி. மொழியில் ஃபார் மடக்கியை இந்த வரையறைக்கு அப்பாலும் பல்வேறுபட்ட வடிவங்களில் பயன் படுத்த முடியும்.

format, address : முகவரி வடிவ அமைப்பு.

format, addressless instruction : முகவரியிலா ஆணை வடிவம்.

format bar : வடிவமைப்புப் பட்டை : ஒர் ஆவணத்திலுள்ள எழுத்துருவை, அதன் உருவளவை, பாணியை, நிறத்தை மாற்றுவது போன்ற,பணிகளுக்கென ஒரு பயன்பாட்டுத் தொகுப்பில் இருக்கும் ஒரு கருவிப் பட்டை.

format card : அட்டை வடிவம்.

format painter : வடிவம் தீட்டி.

format, print : அச்சு வடிவமைப்பு.

format, record : ஏட்டு வடிவமைப்பு.

formatting : வடிவமைத்தல்.

formatting characters: வடிவமைப்பு எழுத்துகள்.

formating bar:வடிவமைப்புப் பட்டை .

formatting tool bar : வடிவமைப்புக் கருவிப் பட்டை.

form background: படிவப் பின்னணி; படிவப் பின்புலம்.

form feed (FF) : படிவச் செலுத்துகை.

form file : படிவக் கோப்பு.

form design : படிவ வடிவமைப்பு.

form letter : படிவக் கடிதம் : ஒரு கடிதத்தைப் பலருக்கும் அனுப்பி வைக்கத் தயாரிக்கும் முறை, அஞ்சல்-இணைப்பு (mail-merge) என்றழைக்கப்படுகிறது. அனைத்துச் சொல் செயலி (word processor) தொகுப்புகளிலும் இத்தகைய வசதி உண்டு. பலரின் முகவரிகள் ஒரு தரவுத் தளத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கும். அனைவருக்கும் அனுப்ப ஒரேயொரு கடித ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கும். அஞ்சல்இணைப்பு நிரலை இயக்கியதும், தனித்தனி முகவரிகளுடன் கடிதம் தயாராகி விடும். கடிதத்தில் முகவரி நாம் குறிப்பிடும் இடத்தில் செருகப்பட்டிருக்கும். தனித்தனிக் கடிதங்களை அச்சிட்டு அனைவருக்கும் அனுப்பிவிட முடியும். அஞ்சல் -இணைப்பு மூலம் உருவாக்கப் படும் கடிதம் படிவக் கடிதம் என்றழைக்கப்படுகிறது.

form wizard : படிவ வழிகாட்டி.

forms : படிவங்கள்.

forms capolite browser : படிவம் காண்தகு உலாவி.


forms design :படிவ வடிவமைப்பு.

formula bar : வாய்பாட்டுப் பட்டை.

formulas : வாய்பாடுகள்.

fortune cookie : செல்வவளக் குக்கி; அதிர்ஷ்டக் குக்கி : பொன்மொழிகள், வருவதுரைத்தல், நகைச்சுவை- இவற்றின் தொகுப்பிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கணினித் திரையில் காண்பிக்கும் ஒருநிரல். யூனிக்ஸ் இயக்க முறைமையில் பல நேரங்களில், உள்துழையும்போதும் வெளியேறும் போதும் இதுபோன்ற குக்கிகள் செயல்படும்.

forum : மன்றம் : ஒரு குறிப்பிட்ட தலைப்பில் பயனாளர்கள் தத்தம் கருத்துகளை எழுத்துவடிவில் தெரி வித்துக் கலந்துரையாட ஒர் ஊடகத்தைப் பல்வேறு நிகழ்நிலை (online) சேவைகள் வழங்கி வருகின்றன. இணையத்தில் பெருமளவு காணப்படும் மன்றங்கள் யூஸ்நெட்டில் செயல்படும் செய்திக் குழுக்களாகும்.

forward :முன்னோக்கு. forward chaining : முன்நோக்கு சங்கிலித் தொடர்: மேதமைக் கணினி முறைமைகளில் (Expert Systems) சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறை. இம்முறையில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் ஒரு புறம். மெய்ம்மையான விவரங்கள் அடங்கிய தரவுத் தளம் இன்னொரு புறம். இரண்டிலும் தொடங்கி, இறுதியில் தரவுத்தள விவரங்களின் அடிப்படையில், விதிமுறைகளில் கூறப்பட்ட அனைத்து மெய்க்கூறுகளையும் நிறைவுசெய்யும் வகையில் இறுதி முடிவு எட்டப்படும்.

fourier transform ஃபூரியர் நிலைமாற்றம் : ஜீன் பாப்டிஸ்ட் ஜோசப் ஃபூரியர் (Jean Baptiste Joseph Fourier : 1768-1830) stairgoylb ஃபிரெஞ்சுக் கணித மேதை உருவாக் கிய ஒரு கணித வழிமுறை. அலைக் கற்றைப் பகுப்பாய்வு (Spectral Analysis), படிம செயலாக்கம் (Image Processing) போன்ற சமிக்கை உற்பத்திப் பணிகளிலும் ஏனைய சமிக்கைச் செயலாக்க முறைகளிலும் இக்கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது. ஃபூரியர் நிலைமாற்றம் ஒரு சமிக்கை உருவாக்க மதிப்பை நேரம் சார்ந்த செயல்கூறாய் (function) மாற்றுகிறது. தலைகீழ் ஃபூரியர் நிலைமாற்றம் அலைவரிசை சார்ந்த செயல்கூறினை நேரம், வெளி அல்லது இரண்டும் சார்ந்த செயல் கூறாய் மாற்றித் தருகிறது.

fractional T1 : பின்ன டீ1 : டீ1 தடத்துக்கான ஒரு பகிர்மான இணைப்பு. 24T1 குரல் மற்றும் தகவல் தடங்களின் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

frame (computer), main : பெருமுகக் கணினி

frame rate : சட்ட வீதம் : 1. ஒரு ராஸ்டர் வருடு கணினித்திரையில் காட்டப்படுவதற்கு முழு ஒற்றைத் திரை படிமங்கள் எவ்வளவு வேகத்தில் அனுப்பி வைக்கப்படு கின்றன என்பதைக் குறிக்கிறது. மின்னணுக்கற்றை வினாடிக்கு எத்தனை முறை திரையை ஆக்கிர மிக்க வேண்டும் என்பதைக் குறிக் கிறது. 2. அசைவூட்ட (Animation) செயல்பாடுகளில், ஒரு வினாடிக்கு எத்தனைமுறை ஒரு படிமம் புதுப் பிக்கப்படுகிறது என்பதைக் குறிக் கிறது. சட்டவீதம் வினாடிக்கு 14 சட்டங்களைவிட அதிகமாயின் அசைவூட்டம் உண்மையான இயக் கம் போலவே தோற்றம் அளிக்கும்.

frame relay assembler/disassembler: சட்டத் தொடர்பி தொகுப்பான் / பிரிப்பான் தடச் சேவை சாதனம் (Channel Service Unit - CSU), இலக்க முறைச் சேவை சாதனம் (Digital Service Unit - DSU), பிணையத்தை சட்டத் தொடர்பியுடன் இணைக்கும் திசைவி (router) ஆகிய மூன்றும் இணைந்தது. இச்சாதனம், சட்டத் தொடர்பிப் பிணையங்களில் தகவலைப் பொட்டலங்களாக மாற்றி அனுப்பி வைக்கும். மறு முனையிலிருந்து இதுபோல அனுப்பப்படும் பொட்டலங்களைச் சேர்த்து மூலத்தகவலாக மாற்றும். இம்முறையில் தீச்சுவர் (Firewall) போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் கிடையாது. எனவே, தனியாக பிணையப் பாதுகாப்பு செயல் முறை சேர்க்கப்பட வேண்டும்.

frame source : சட்டமூலம் ஹெச்டிஎம்மில் சட்டச் சூழலில், ஒரு பொருளடக்க ஆவணம் மூல ஆவணத்தைத் தேடி, பயனாளர் கணினியிலுள்ள உலாவி வரைந்துள்ள ஒரு சட்டத்துக்குள் காண்பிக்கும்.

fred : ஃபிரெட் : 1. எக்ஸ் 500-க்கான ஓர் இடைமுகப் பயன்நிரல். 2. கட்டளைத் தொடர் எடுத்துக்காட்டு களில் ஒரு மாறியின் பெயருக்காக நிரலர்கள் பலராலும் பயன்படுத் தப்படும் ஒரு சொல். ஒரு நிரலர் ஏற்கெனவே ஃபிரெட் என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் இன்னுமொரு மாறியின் பெயர் இடம் பெறுமிடத்தில் பார்னே (Barnay) எனக் குறிப்பிடுவர்.

free BSD : இலவச பிஎஸ்டி : ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளுக்காக இல வசமாக வெளியிடப்பட்ட பிஎஸ்டி யூனிக்ஸ் பதிப்பு. பெர்க்கிலி சாஃப்ட்வேர் டிஸ்ட்ரிபூஷன் என் பதன் சுருக்கமே பிஎஸ்டி எனப்படு வது. கலிஃபோர்னியாவிலுள்ள பெர்க்கிலி பல்கலைக் கழகத்தி லுள்ள பிஎஸ்டி அமைப்பு யூனிக்ஸ் இயக்க முறைமையை வளர்த் தெடுத்ததில் முக்கிய பங்கு வகித்தது. இன்றைக்கு யூனிக்ஸின் அங்கமாக இருக்கும் பல்வேறு சிறப்புக் கூறுகளும் பிஎஸ்டியால் உருவாக்கப் பட்டவை.

free - form language : சுதந்திர வடிவ மொழி; கட்டறு வடிவ மொழி : கட்டளைத் தொடர் ஒரு வரியில் எந்த இடத்திலும் தொடங்கலாம். கட்டளைச் சொற்கள் ஒரு வரியின் எவ்விடத்திலும் இடம் பெறலாம் என்று அமைந்துள்ள மொழி. சி மற்றும் பாஸ்கல் மொழிகள் இவ்வகையைச் சார்ந்தவை. ஃபோர்ட்ரான், கோபால் மொழிகள் அவ்வாறில்லை. கட்டளைச் சொற் கள் வரியின் குறிப்பிட்.. இடத்தில் தொடங்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் உண்டு.

free of cost : செலவில்லாமல்.

free-form text chart : தாராள வடிவ உரை நிரல் படம்.

free net : இலவச வலையம்.

free phone service : இலவச தொலை பேசி இணைப்புச் சேவை; இலவச இணைப்புச் சேவை.

free software : கட்டறு மென்பொருள்: இலவசமான மென்பொருள் மட்டு மன்று. கட்டுப்பாடற்ற சுதந்திர மென்பொருளுமாகும். மூல வரைவு உட்பட முழுமையாக இலவசமாக வெளியிடப்படும் மென்பொருள். பயனாளர்கள் அதனை இலவசமாகப் பயன்படுத்துவதுடன், விருப்பப்படி மாற்றியமைக்கலாம். மாற்றிய மைத்த பின் மீண்டும் அதனை இலவசமாகவே பிறருக்கு வழங்க வேண்டும். செய்யப்பட்ட மாற்றங் கள் தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்க வேண்டும். மூல ஆசிரியரின் பெயர் அவருடைய பதிப்புரிமைச் செய்தி ஆகியவற்றை மாற்றவோ, நீக்கவோ கூடாது. இலவச மென்பொருளுக்கும் கட்டறு மென்பொருளுக்கும் வேறுபாடு உண்டு. இலவச மென்பொருளை இலவசமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அதன் மூலவரைவு கிடைக் காது. கிடைத்தாலும் மாற்றியமைக்க முடியாது. ஆனால் கட்டறு மென் பொருள் பொது உரிம ஒப்பந்த முறைப்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. கட்டறு மென்பொருள் என்னும் கருத்துரு, மாசாசூசட்ஸிலுள்ள கேம்பிரிட்ஜின் கட்டறு மென் பொருள் அமைப்பு (Free Software Foundation) உருவாக்கிய ஒன்றாகும். Free Software Foundation : கட்டறு மென்பொருள் அமைப்பு (கழகம்) : ஒரு மென்பொருளைப் பயன்படுத்த, நகலெடுக்க, திருத்த, வியாபார நோக் கின்றி மறுவினியோகம் செய்ய பொதுமக்களுக்கு கட்டற்ற உரிமை இருக்க வேண்டும் என்ற நோக் கத்தை முன்னிறுத்தி திரு.ரிச்சர்டு ஸ்டால்மேன் என்பவர் உருவாக்கிய அமைப்பு. யூனிக்ஸை ஒத்த ஜிஎன்யூ மென்பொருளின் பராமரிப்பை இந்த அமைப்பே கவனித்துக் கொள்கிறது. ஜிஎன்யூ மென்பொருளை இலவச மாக வழங்கலாம். மாற்றி அமைக்க லாம். விலைக்கு விற்பது கூடாது.

free space : வெற்று இடம்; காலி இடம் : ஒரு நெகிழ்வட்டு அல்லது ஒரு நிலைவட்டில் தகவல் எழுதப் படாத வெற்று (காலி) இடத்தைக் குறிக்கும்.

freeze columns : நெடுக்கைகளை நிலைப்படுத்து

freeze frame video : உறைசட்ட ஒளிக்காட்சி : உருவம் சில வினாடி களுக்கு ஒரேயொரு முறை மட்டுமே மாறக்கூடிய ஒளிக்காட்சிப் படம்.

freeze panes : பாளங்களை நிலைப்படுத்து

frequency : அதிர்வலை / அதிர்வெண் / அலைவரிசை.

frequency hopping : அலைவரிசைத் துள்ளல் : ஒரு முனைக்கும் இன்னொரு முனைக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தில் ஒரு குறிப் பிட்ட அலைக்கற்றைக்குள் வெவ் வேறு அலைவரிசைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துதல். இம்முறை யினால் அத்துமீறிய குறுக்கீடுகளைத் தவிர்க்க முடியும். ஒற்றை அலை வரிசையை செயலற்றதாக்குவது போல் இதனைச் செய்ய முடியாது.

frequency modulation encoding : அலைவரிசைப் பண்பேற்ற குறியீடு : சுருக்கமாக எஃப்எம் குறியீடு என்றழைக்கப்படும். வட்டில் தகவலைப் பதிவதில் பின்பற்றப் படும் ஒரு வழிமுறை. தகவல் மற்றும் கடிகாரத் துடிப்புகள் எனப்படும் ஒத்திசைவுத் தகவலும் (Synchronicing information) வட்டின் மேற்பரப்பில் பதியப்படுகிறது. கடிகாரத் துடிப்பு களும் வட்டில் பதியப்படுவதால் அதிகமான வட்டுப் பரப்பு தேவைப் படுகிறது. எனவே எஃப்எம் குறி யீட்டுமுறை பிறமுறைகளோடு ஒப்பிடுகையில் திறன் குறைந்ததாகக் கருதப்படுகிறது. இப்போது இதை விடச் சிறந்த முறைகளும் உள்ளன. திருத்தப்பட்ட அலைவரிசைப் பண் பேற்றக் குறியீட்டுமுறை (Modified Frequency Modulation Encoding - MFM) என்பது அவற்றுள் ஒன்று. தொடர் நீள வரம்பு (Run Length Limited - RLL) குறியீட்டு முறை சற்றே சிக்கலானது. ஆனால் எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த குறியீட்டுமுறை எனக் கருதப்படுகிறது.

frequency response: அலைவரிசைப் பிரதிபலிப்பு : ஒரு கேட்பொலி சாதனம், குறிப்பிட்ட உள்ளிட்டு சமிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கி, வெளியீடாகத் தரும் அலைவரிசைகளின் வரம்பு.

frequency, ultra high : மீவுயர் அதிர்வலை

friction feed : உராய்வு செலுத்தி : அச்சுப் பொறிக்குள் தாளைச் செலுத் தும் ஒரு முறை. பொதுவாக, இருபுறமும் துளையிடப்பட்ட தாள் இரு பல்சக்கரங்களின் மேல் இடப்பட்டு, சக்கரங்கள் சுழலும் போது நகர்த்தப்படும். ஆனால் சில அச்சுப்பொறிகளில் தட்டுகளில் தாள்கள் வைக்கப்பட்டு அதன் மீது சுழலும் அழுத்த உருளை (Pressure Roler) மூலமாக நகர்த்தப்படும். இன்னும் சிலவற்றில் சுழலும் இரு உருளைகளுக்கு இடையில் உட் செலுத்தப்படும். துளையில்லாத தாள்களை உட்செலுத்த இது போன்ற உராய்வு செலுத்த முறை பயன்தரும்.

friendly : தோழமையான : கணினியை அல்லது கணினி நிரலை எவரும் எளிதாகக் கற்றுக் கொள்ளவும், எளிதாகப் பயன்படுத்தவும் ஒரு வன் பொருள் அல்லது ஒரு மென் பொருளில் உள்ளிணைக்கப்பட்டுள்ள ஒருவசதி, தோழமை என்பது பெரும் பாலான தயாரிப்பாளர்களால் வலி யுறுத்தப்படுகிறது. பெரும்பாலான பயனாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

friendly interface : தோழமையான இடைமுகம்

friendly user : பயனாளர் தோழமை

fringeware : கொசுறுப்பொருள் : இலவசமாகத் தரப்படும் மென் பொருள். ஆனால் அதன் மதிப்பும் செயல்திறனும் கேள்விக்குரியது.

front end : முன்னிலை பிறிதொரு பயன்பாடு அல்லது மென்பொருள் கருவியுடன் ஒரு இடைமுகத்தை ஏற்படுத்தித் தரும் ஒரு பயன்பாட்டு மென்பொருள் அல்லது அதன் ஒரு கூறு. இத்தகைய முன்னிலைக் கருவி யாகச் செயல்படும் பயன்பாட்டுத் தொகுப்புகள் பின்புலமாய்ச் செயல் படும் மென்பொருளைக்காட்டிலும் மிகவும் தோழமையான ஒர் இடை முகத்தை பயனாளருக்கு வழங்கும். வெவ்வேறு தயாரிப்பாளர்களின் மென்பொருள் படைப்புகளுக்கும் ஒரே மாதிரியான இடைமுகத்தை முன்னிலைக் கருவிகள் வழங்கு கின்றன. 2. வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தளம் பின்னிலை (Back End) என்றும், கிளையன் கணினிகளில் செயல் படும் பயன்பாட்டுத் தொகுப்புகள் முன்னிலைக் (Front End) கருவி என் றும் அழைக்கப்படுகின்றன. (எ-டு) ஆரக்கிள் பின்னிலைத் தரவுத் தளம். விசுவல் பேசிக், டெவலப்பர் 2000 ஆகியவை முன்னிலைக் கருவிகள்.

front end tool : முன்னிலைக் கருவி.

front panel : முகப்புப் பலகம் கணினிப் பெட்டியில் அதன் இயக்கு விசைகள், விளக்குகள், கட்டுப் பாட்டுக் குமிழ்கள் அடங்கிய முகப்புப் பட்டிகை.

FTP commands : எஃப்டீபீ கட்டளைகள்

கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் (File Transfer. Protocol) கட்டளைத் தொகுப்பு.

FTP server ; எஃப்டீபீ சேவையகம்; எஃப்டீபீ வழங்கன்:

Host - புரவன்: இணையம் வழியாகவோ அல்லது எந்தவொரு டீசிபி/ஐபி பிணையம் வழியாகவோ, கோப்புப் பரிமாற்ற நெறிமுறையைப் (FTP) பயன்படுத்தி, பயனாளர்கள் கோப்புகளை பதி வேற்ற அல்லது பதிவிறக்க அனுமதிக்கும் ஒரு கோப்பு வழங்கன் கணினி.

FTP site : எஃப்டீபீ தளம் : எஃப்.டீ.பீ. வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகள் மற்றும் நிரல்களின் தொகுப்பு. full justification: முழுசீர்மை இருபுற ஒரச் சீர்மை : சொல் செயலாக்கம் (word processing) அல்லது கணினி பதிப்பகப் பணிகளில், ஒரு பக்கத் தில் அல்லது பத்தியில் தட்டச்சு செய்யப்பட்ட வரிகளை இடம், வலம் இருஒரங்களிலும் ஒரே சீராக அமைக்கும் செயல்பாடு.

full motion video : முழுதியங்கு நிகழ் படம், முழுதியங்கு ஒளிக்காட்சி : ஒரு வினாடிக்கு 30 படச் சட்டங்கள் (30 FPS-Frames per second) வீதம் திரையில் காண்பிக்கப்படும் இலக்க முறை ஒளிக்காட்சி (Digital Video).

full motion video adapter : முழுதியங்கு ஒளிக்காட்சி ஏற்பி; முழுதியங்கு ஒளிக்காட்சித் தகவி : கணினியில் பயன்படுத்தப்படும் ஒரு விரிவாக்க அட்டை. ஒளிக்காட்சி நாடார் பதிவி (Video Casstte Recorder) போன்ற சாதனங்களிலிருந்து இயங்கு நிகழ்படங்களைக் கணினி யில் பயன்படுத்தும் இலக்கமுறை autų autors (AVI, MPEG, MJPEG போன்ற வடிவங்களில்) மாற்றித் தரும் அட்டை இது.

ful name : முழுப்பெயர் : ஒரு பய னாளரின் உண்மையான முழுப் பெயர். இது, பெரும்பாலும் முதல் பெயர், இடைப்பெயர் (அல்லது இடையெழுத்து), கடைப்பெயர் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். (எ-டு) டென்னிஸ் எம்.ரிட்சி, ஜான் எஃப். கென்னடி. ஒரு பயனாளரின் கணக்கு விவரத்தின் ஒரு பகுதியாக அவரைப் பற்றிய சொந்த விவரங்களும் கணினியில் பதிவு செய்யப் படுவதுண்டு. இயக்க முறைமை ஒரு பயனாளரை அடையாளம் காணப் பயன்படும் விவரங்களுள் அவரின் முழுப்பெயரும் ஒன்று.

full pathname: முழு பாதைகள் பெயர்: ஒரு படிநிலைக் கோப்பு முறை மையில் ஒவ்வொரு வட்டகத்திலும் வேர் காப்பகம் (Root Directory) தொடக்க நிலையாக உள்ளது. அதனுள் ஏனைய கோப்பகம்/ கோப்புறைகளும் அவற்றில் உள் கோப்பகம்/கோப்புறைகளும் அமைகின்றன. ஒரு கோப்பினை அணுகுவதற்கு அது சேமிக்கப் பட்டுள்ள வட்டகப் பெயர் (Drive Name), வேர் கோப்பகம், கோப் பகம், உள்கோப்பகங்களை வரிசை யாகக் குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக, myfile.doc என்னும் கோப்பு C வட்டகத்தில் Book என்னும் கோப்பகத்தில் Chapter என்னும் உள்கோப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளது எனில், டாஸ் இயக்க முறைமையில், C:\B00K CHAPTERIAMYFILE.Doc என்பது அக்கோப்பின் முழுப்பாதையைக் குறிக்கும் பெயராகும்.

full-screen application: முழுத் திரை பயன்பாடு.

full version : முழுப்பதிப்பு.

fully formed character : முழுவடிவ எழுத்து அச்சுப் பொறிகளை தொட்டச்சுப் பொறி (Impact Printer), தொடா அச்சுப்பொறி (Non-Impact Printer) எனப் பிரிக்கலாம். புள்ளி யணி அச்சுப்பொறிகள் (Dotmatrix Printers), டெய்சி சக்கர அச்சுப் Quirosair (Daisy Wheel Printers) ஆகியவற்றைத் தொட்டச்சில் சேர்க்க லாம். மையச்சு (Inkiet), ஒளியச்சு (Laser) பொறிகளை தொடா அச்சில் சேர்க்கலாம். புள்ளியணி அச்சுப்

பொறியில், அச்சுமுனை மைநாடா வில் மோதி தாளைத் தொட்டு அச்சிடுகின்றது. ஆனாலும் எழுத்து கள் புள்ளிகளால் ஆனவை. ஆனால் டெய்சி சக்கர அச்சுப் பொறியில் எழுத்து வடிவங்கள் தட்டச்சுப் பொறியில் உள்ளது போல, அச்சுக் கூடத்தில் பயன்படுத்தும் எழுத்து களைப்போல அச்சுருவில் வார்த்தெடுக்கப்பட்ட முழு வடிவ எழுத்துகளாக இருக்கும்.

fully populated board : முழுதும் நிரம்பிய பலகை : அச்சிட்ட மின்

சுற்றுப் பலகை. ஒருங்கிணை மின்சுற்றுப் பொருத்துவாய்கள் அனைத்திலும் ஒருங்கிணை

மின்சுற்று (IC)கள் பொருத்தப்பட் டிருக்கும். நினைவக பலகையில் பெரும்பாலும் சில ஐசி பொருத்து வாய்கள் மீதமிருக்கும். அதுபோன்ற பலகைகளை 'முழுதும் நிரம்பாப் பலகைகள்' எனலாம்.

function codes : செயல்பாட்டு குறிமுறைகள்.

function key, user defined: பயனாளர் வரையறு பணிவிசை

function, sub programme : துணை நிரல் செயல்கூறு.

functional design : செயல்பாட்டு வடிவமைப்பு : கணினி அமைப்பின் செயல்பாட்டு உறுப்புகளிடையே நிலவும் உறவுமுறை பற்றிய வரை யறுப்புகள். கருத்துரு சாதனங்களின் விவரங்கள் மற்றும் அவை இணைந்து செயல்படும் முறை களும் இவற்றுள் அடக்கம், செயல் பாட்டு வடிவமைப்பு என்பது வரைகலை வடிவில் ஒரு செயல் பாட்டு வரைபடம் மூலம் விளக் கப்படும். கணினி அமைப்பின் பல்வேறு கூறுகளைக் குறிக்க தனிச்சிறப்பான குறியீடுகள் பயன் படுத்தப்படுகின்றன.

functional programming: செயல்கூறு நிரலாக்கம் : நிரலாக்கத்தில் ஒரு பாணி. நிரலின் அனைத்து செயல் பாடுகளும் தனித்தனி செயல் கூறு களாக (Functions) அமைக்கப்பட் டிருக்கும். பொதுவாக, இதனால் பக்க விளைவு எதுவும் ஏற்படாது. முழுமையான செயல்கூறு நிரலாக்க மொழிகளில் வழக்கமான மதிப் பிருத்து கட்டளை இருப்பதில்லை. நகலெடுத்தல், மாற்றம் செய்தல் ஆகிய செயல்பாடுகளின் மூலமாக மதிப்பிருந்தும் பணி நிறைவேற்றப் படுகிறது. இணைநிலை செயலாக்கக் (Parallel processing) கணினிகளில் செயல்கூறு நிரலாக்கம் மிகுந்த பலனைத்தரும் என்று கருதப்படுகிறது.

functional redundancy checking: செயல்பாட்டு மிகை சரிபார்ப்பு : ஒரு கணினிச் செயல்பாட்டில் நிகழும் பிழையைத் தவிர்ப்பதற்கான வழிமுறை. இதன்படி, கணினியில் இரண்டு நுண் செயலிகள் இருக்கும். அவையிரண்டும் ஒரே நேரத்தில் ஒரே விவரத்தின்மீது ஒரே கட்டளையைச் செயல்படுத்தும். இரண்டு நுண் செயலிகள் மூலம் கிடைக்கின்ற விடைகள் ஒன்றாக இருக்கின்றனவா என்று சரிபார்க்கப்படும். இல்லை எனில் பிழை ஏற்பட்டுள்ளது என்று பொருள். இன்டெல் நிறுவனத்தின் பென்டியம் மற்றும் அதற்கு மேம் பட்ட நுண்செயலிகளில் செயல் பாட்டு மிகை சரிபார்ப்பு முறை உள்ளிணைந்த ஒன்றாகும்.

functional specification : செயல்பாட்டு வரையறுப்பு : ஒரு தகவல் கையாளும் அமைப்பு முறையை உருவாக்கும் போது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய நோக்கங்கள், நடவடிக்கைகளின் வகைகள் - இவற்றைப் பற்றிய ஒரு விளக்கம்.

functional units : செயல்படு உறுப்புகள்

function overloading : செயல்கூறு பணிமிகுப்பு : ஒரு நிரலில் ஒரே பெயரில் பல்வேறு செயல்கூறுகளை வைத்துக்கொள்ளும் வசதி. அளபுருக் களின் (parameters) எண்ணிக்கை , வகை, வரிசை ஆகியவற்றின் அடிப் படையில் செயல்கூறுகளின் வேறு பாடு அறியப்படும். அளபுருக்களின் வகை, வரிசை ஆகியவற்றின் அடிப் படையில் மொழிமாற்றி (compiler) சரியான செயல்கூறினை தானாகவே அடையாளம் கண்டு கொள்ளும். (எ-டு) sin{float). sin(Int) என்று இரண்டு செயல் கூறுகள் இருக்க முடியும். ஒன்று ஆரக்கோணத்தை யும் இன்னொன்று கோண மதிப்பை யும் ஏற்கும். sin (3.142/2.0) என்பது sin(x/2) என்பதால் 1.0 என்ற விடை கிடைக்கும். sin(45) என்பது 0.5 என்ற விடையைத் தரும். பொருள்நோக்கு நிரலாக்க (Object Oriented Programming) மொழிகளில் செயல் கூறு பணி மிகுப்பு ஒரு முக்கிய கூறாகும். சி#, சி++, ஜாவா மொழிகளில் இது உண்டு.

FwIW : எஃப்டபிள்யூஐடபிள்யூ : இதனால் என்ன பயன்? என்று பொருள்படும் For What It's Worth என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். மின்னஞ்சலிலும் செய்திக் குழுக்களிலும் இது பயன் படுத்தப்படுகிறது.

.FX : .எஃப்எக்ஸ் : இணையத்தில், ஃபிரான்ஸ் பெருநகரைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

FYI : எஃப்ஓய்ஐ : 1. தங்களின் மேலான கவனத்துக்கு என்று பொருள்படும் For Your Information என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின் அஞ்சலிலும் செய்திக் குழுக்களிலும், படிப் பவர்க்குப் பயன்படக்கூடிய தகவல் களை அறிமுகப்படுத்தப் பயன் படுத்தப்படும் சொல். 2. கருத்து ரைக்கான கோரிக்கை (Request For Comments - RFC) போல இன்டர்நிக் (InterNIC) வழியாக வழங்கப்படும் ஒரு மின்னணு ஆவணம். ஆர்எஃப்சி என்பது வன்பொருள்/மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கானது. ஆனால் எஃப்ஓய்ஐ என்பது இணையத் தரவரையறை அல்லது பண்புக்கூறு பற்றிப் பயனாளர்களுக்கு விளக்கு வகை நோக்கமாகக் கொண்டது.