கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/G

விக்கிமூலம் இலிருந்து
G

Game Control Adapter:விளையாட்டுக் கட்டுப்பாட்டுத் தகவி:ஐபிஎம் மற்றும் ஒத்தியல்பு சொந்தக் கணினிகளில் அமைந்துள்ள ஒரு மின்சுற்று அட்டை.கணினியின் விளையாட்டுத் துறை வழியாக வரும் உள்ளிட்டு சமிக்கைகளை செயலாக்குகிறது. சுட்டுக் குறியின் இடநிலையை மாறுகின்ற மின்னழுத்த மாய் மாற்றித் தரும் மின்னழுத்தமானி (Potentiometer)இதில் உண்டு. தொடர்முறையை இலக்க முறையாக மாற்றித்தரும் கருவி இந்த மின்னழுத்த அளவுகளை எண்களாக மாற்றித் தரும்.

game package:விளையாட்டுத் தொகுப்பு.

game port:விளையாட்டுத் துறை : ஐபிஎம்மின் சொந்தக் கணினிகளிலும் மற்றும் அதன் ஒத்தியல்புக் கணினிகளிலும்,ஜாய் ஸ்டிக் மற்றும் விளையாட்டுக் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ள ஓர் உள்ளிட்டு/ வெளியீட்டுத்துறை.பொதுவாக,ஏனைய உள்ளிட்டு/வெளியீட்டுத் துறைகளடங்கிய ஒற்றை விரிவாக்க அட்டையிலேயே விளையாட்டுத் துறையும் இணைக்கப்பட்டிருக்கும்.


game software:விளையாட்டு மென்பொருள்.

games:விளையாட்டுகள்.

games, computer:கணினி விளையாட்டுகள்.

gap,interback:தொகுப்பு இடைவெளி.

garbage characters:குப்பை எழுத்துக்கள்

gas discharge:வாயு மின்னிறக்கம்.

gas discharge display:வாயு உமிழ் திரைக்காட்சி:கையடக்கக் கணினி களில் பயன்படுத்தப்படும் தட்டை வடிவத் திரைக்காட்சி. கிடைமட்ட, செங்குத்து மின்முனை தொகுதிகளுக்கு இடையே நியான் வாயு நிரப்பப்பட்டிருக்கும்.ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு முனை மின்னூட்டம் பெறும்போது இருமுனைகளும் சந்திக்கும் இடத்தில் நியான் வாயு எரியும் (நியான் விளக்கில் உள்ளது போல).இந்தச் சந்திப்புப்புள்ளி ஒரு படப்புள்ளி (Pixel) ஆகும்.

gate,AND:உம் வாயில்.

gate,NAND:இல் உம் வாயில்

gate,NOR:இல் அல்லது வாயில்.

gate,OR:அல்லது வாயில்.

gated:வாயில் வழியாக அனுப்புகை; நுழைத்தல்; உட்செலுத்தல்: 1.ஒரு மின்னணு மின்சுற்றுத் தொகுதியில் ஒரு தருக்கமுறை உறுப்பிலிருந்து அடுத்த உறுப்புக்கு ஒரு வாயில் (gate)வழியாகத் தகவல் செலுத்தப்படுதல்.2.ஒரு பிணையம் அல்லது சேவையிலுள்ள தகவல் இன்னொரு பிணையம் அல்லது சேவைக்கு ஒரு நுழைவி(gateway)வழியாக அனுப்பப்படுதல்.(எ-டு) பிட்நெட் (BITNET) போன்ற ஒரு பிணையத்திலுள்ள அஞ்சல் பட்டியல்,இணையத்திலுள்ள ஒரு செய்திக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படுதல்.

gathering, data:தகவல் சேகரிப்பு. gauges:அளவிடு கருவி.

.ga.us:.ஜி.ஏ.யு.எஸ் :அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த இணைய தளத்தைக் குறிக்கும் புவிப்பிரிவுப் பெருங்களப் பெயர். .gb : ஜி.பி: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இணைய தளத்தைக் குறிக் கும் புவிப்பிரிவு பெருங்களப் பெயர். g-commerce : அரசு வாணிகம்.

.gd : ஜிடி: கிரினேடா நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் புவிப்பிரிவுப் பெருங்களப் பெயர்.

gender changer: இனம் மாற்றி: இரண்டு நுழையிணைப்பி (Male connector) அல்லது இரண்டு துளை

                  இனம் மாற்றி 

இணைப்பி (Female connector) முனைகளை இணைத்துவைக்கப் பயன்படும் ஒர் இடையிணைப்பி. general: பொது. general field : பொதுப்புலம். general section : பொதுப் பிரிவு, genetic engineering :மரபணுப் பொறியியல். general protection fault :பொதுப்பழுதுக் காப்பு: 80386 அல்லது அதனினும் மேம்பட்ட செயலி, பாதுகாக்கப்பட்ட முறையில் இயங்கிக் கொண்டிருக்கும்போது (காட்டாக விண்டோஸ் 3.x/9x இயக்கத்தில்), ஒரு பயன்பாட்டு நிரல், வரம்பு மீறி நினைவகத்தை அணுக முற்படும் போது ஏற்படுகின்ற பிழைநிலை. தலைப்பெழுத்துக் குறும்பெயர் ஜி.பீ.எஃப் (GPF). general public license: பொதுமக்கள் உரிமம்.

general purpose controller : பொதுப்பயன் கட்டுப்படுத்தி: பல்வேறு பயன்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒருவகைக் கட்டுப்படுத்தி.

general purpose interface bus : பொதுப்பயன் இடைமுகப் பாட்டை: கணினிகளுக்கும் தொழிலகத் தானியக்கமாக்கக் கருவிகளுக்கும் இடையே தகவல் பரிமாறிக்கொள் வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பாட்டை. இந்தப் பாட்டையின் மின் வரையறை ஐஇஇஇ தரக் கட்டுப் பாட்டில் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. generation : தலைமுறை: 1. சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புத் தொகுதியின் பல்வேறு பதிப்புகளை வேறுபடுத்திக் காட்டப் பயன்படும் ஒரு கருத்துரு. மிகப்பழைய பதிப்பு தாத்தா என்றும், அடுத்தது அப்பா என்றும், புதியது மகன் என்றும் அழைக்கப்படுகிறது. 2. ஒரு செய லாக்கத்தை இன்னொரு செயலாக்கம் தொடங்கி வைக்கிறது. முந்தையது தந்தையாகிறது. தொடங்கப்பட்ட செயலாக்கம் மற்றுமொரு செய லாக்கத்தைத் தொடங்கி வைக்கலாம். அது, இதன் குழந்தையாகிறது. முந்தைய தந்தை இந்தக் குழந்தைக்கு தாத்தா ஆகிறது. 3. சில வேளைகளில் கணினி, நிரலாக்க மொழிகள் இவற்றின் வளர்ச்சிக் கட்டங்களையும் தலைமுறைகளாகப் பகுத்துக் கூறுவதுண்டு.

generation computer,first:முதல் தலைமுறைக் கணினி.

generation computer,fourth நான்காம் தலைமுறைக் கணினி.

generator,clock signal:கடிகார சமிக்கை ஆக்கி.

genetic icon:பொதுமைச் சின்னம். மெக்கின்டோஷ் கணினித் திரையில் ஒரு கோப்பினை ஓர் ஆவணம் அல்லது ஒரு பயன்பாடாகக் காட்டும் ஒரு சின்னம்.பொதுவாக, ஒரு பயன்பாட்டைச் சுட்டும் சின்னம் அப்பயன்பாட்டை உணர்த்துவதாகவும்,ஓர் ஆவணத்தைச் சுட்டும் சின்னம் அவ்வாவணத்தைத் திறக்கும் பயன்பாட்டை உணர்த்துவதாகவுமே இருக்கும்.பொதுமைச் சின்னம் தோன்றியுள்ளது எனில் மெக்கின்டோஷின் கண்டறி நிரல் குறிப்பிட்ட அப்பயன்பாடு பழுதடைந்துவிட்டது என்பதை உணர்த்தும்.

generator,number:எண் ஆக்கி.

generator,report:அறிக்கை ஆக்கி.

GEnie:ஜெனீ:தகவல் பரிமாற்றத்துக்கான ஜெனரல் எலெக்ட்ரிக் பிணையம் என்று பொருள்படும் General Electric Network for Information Exchange என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஜெனரல் எலெக்ட்ரிக் இன்பர்மேஷன் சர்வீஸ் (General Electric information Services)உருவாக்கிய ஒரு நிகழ்நிலை(online)தகவல் சேவை,வணிகத் தகவல் மேடை,வீட்டுக்கான பொருள்வாங்கல், செய்திகள் மற்றும் மின்னஞ்சல் பரிமாற்றம் போன்ற சேவைகளை ஜெனி வழங்குகிறது.

GeoPort:நிலத்துறை:மெக்கின்டோஷ் சென்ட்ரிஸ் 660ஏவி,குவாட்ரா 660ஏவி,குவாட்ரா840 ஏவி அல்லது பவர்மேக் கணினிகளில் உள்ள அதிவேக நேரியல்(serial)உள்ளிட்டு வெளியீட்டுத்துறை.இந்தத்துறையில் எந்தவொரு மெக்கின்டோஷ் ஒத்தியல்பு நேரியல் சாதனத்தையும் இணைக்க முடியும்.இத் துறைக்கென்றே உருவாக்கப்பட்ட வன்பொருள் அல்லது மென்பொருள் எனில்,வினாடிக்கு 2 மெகாபிட் வரை தகவல் பரிமாற்றம் செய்யமுடியும்.குரல்,தொலைநகல் கணினித் தகவல் மற்றும் ஒளிக்காட்சி ஆகியவற்றைக் கையாள முடியும்.

GE0S:ஜியாஸ்:முன்னாளில் பெர்க்கிலி சாஃப்ட் ஒர்க்ஸ் என்றழைக்கப்பட்ட ஜியோஒர்க்ஸ் நிறுவனம் உருவாக்கிய இயக்கமுறைமை (operating system)sourov,ஒரு கச்சிதமான பொருள் நோக்கிலான வரைகலைப் பணிச்சூழல் வழங்கும் முறைமை ஆகும்.ஆப்பிள்,காமோடோர், எம்எஸ்- டாஸ் பணித் தளங்களில் இது செயல்படும்.

gesture language:சைகை மொழி;சமிக்கை மொழி.

get external data:புறத்தரவு பெறு..

.gf:ஜி.எஃப்: ஓர் இணையதளம் ஃபிரஞ்ச் கயானாவைச் சேர்ந்தது என்பதைச் சுட்டும் புவியியல் பெருங்களப் பெயர்.

.gh:ஜிஹெச்:ஓர் இணையதளம் கானா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் புவியியல் பெருங்களப் பெயர்.

.gi:ஜிஐ: ஓர் இணையதள முகவரி ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்தது என்பதைச் சுட்டும் புவியியல் பெருங்களப் பெயர்.

giant magneto resistive:மீக்காந்த எதிர்ப்பு மிகப்பெரும் காந்த எதிர்ப்பு.

GlF animation:ஜிஐஎஃப் அசைவூட்டம்.

GIF animator:ஜிப் அனிமேட்டர்:அசைவூட்ட ஜிஃப் படிமங்களை உருவாக்க உதவும் ஒரு மென்பொருள்.

Gigabit Ethernet:கிகாபிட் ஈதர்நெட்: பொதுவாக ஈதர்நெட் செந்தரம் 802.3ன் படி வினாடிக்கு 100 மெகாபிட் தகவல் பரிமாற்றமே இயலும்.ஆனால் ஐஇஇஇ-யின் 802.32 தர வரையறைப்படி முன்னதைப்போல இருமடங்கு வேகம்,அதாவது வினாடிக்கு ஒரு கிகாபிட்(IGpps) வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறும். வழக்கமான ஈதர்நெட் செந்தரம் 802.3 வினாடிக்கு 100 மீமிகு மெகாபிட் தகவல் பரிமாற்றத்தை அளிக்கிறது.

gigabits per second:வினாடிக்கு ஒரு கிகாபிட். (ஜிபிபீஎஸ்)பிணையத்தில் தகவல் பரிமாற்ற வேகத்தைக் கணக்கிடும் அளவீடு.1,07,37,41,824 (230) துண்மிகளின்(பிட்டுகள்)மடங்காக அளவிடப்படுகிறது.

global group:பரந்த குழு:விண்டோஸ் என்டி உயர்நிலை வழங்கன் அமைப்பில் பயனர் குழுவின் பெயர்.ஒரு களப்பிரிவில் சிறப்புரிமை பெற்ற பயனாளர்களின் குழுவைக் குறிக்கிறது. இக்குழுவில் உளள பயனாளர்கள் தத்தம் களப்பிரிவில் மட்டுமின்றி அதற்கு வெளியிலுள்ள வளங்களையும்,வழங்கன்களையும், பணிநிலையங்களையும் அணுகுவதற்கு அனுமதியும் உரிமையும் பெற்றவர்கள்.

global positioning system:உலக இருப்பிட விவரம்.

globally unique identifier:உலகளாவிய தனித்த முத்திரை: மைக்ரோ சாஃப்டின் காம்பொனன்ட் ஆப்ஜெக்ட் மாடல்(COM) தொழில்நுட்பத்தில்,ஒரு பரந்த கணினிப் பிணையத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் இனப்பொருளுக்கான இடைமுகத்தை அடையாளம் காண உதவும் 16-பிட் பெயர்.பிணைய வழங்கன் கணினியிலுள்ள இடைமுக அட்டையின் பிணைய முகவரியையும், நேர முத்திரையையும் அப்பெயர் உள்ளடக்கியிருப் பதால்,பிறவற்றிலிருந்து பிரித்துக் காணும் தனித்த முத்திரை கிடைக்கிறது.இத்தகைய முத்திரைகள் ஒரு பயன்பாட்டு நிரல் மூலம் உருவாக்கப்படுகின்றன.

global system for mobile communications: நடமாடும் தகவல் தொடர்புக்கான உலகளாவிய முறைமை: பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உட்பட 60-க்கு மேற்பட்ட நாடுகளில் நடைமுறையிலுள்ள இலக்கமுறை செல்பேசிக்கான தரவரையறை.தலைப்பெழுத்துச் சுருக்கமாக, ஜிஎஸ்எம்(GSM)என்று அழைக்கப்படுகிறன. ஜிஎஸ்எம் தகவல் தொடர்பு அமைப்புகள் பரிசோதனை முறையில் அமெரிக்க நாட்டிலும் நிறுவப்பட்டுள்ளது.

global universal identification: பரந்த உலகளாவிய அடையாளம்:ஒரு குறிப்பிட்ட இனப்பொருளுக்கு ஒரேயொரு பெயரைச் சூட்டும் அடையாளத் திட்டம்.வேறுவேறான பணித்தளங்களிலும் பயன்பாடுகளிலும் இப்பெயர் அடையாளங்காணப்படும். glyph encoding scheme:சிற்பக்குறியீட்டுத் திட்டம்.

.gm:ஜிஎம்:ஓர் இணையதள முகவரி காம்பியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் புவிப்பிரிவு பெருங்களப் பெயர்.

.gn:ஜிஎன்:ஓர் இணையதள முகவரி கினியர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

GNU ஜிஎன்யு:ஜிஎன்யு என்பது யூனிக்ஸ் இல்லை என்று பொருள்படும் GNU's Not Unix என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். யூனிக்ஸ் இயக்க முறைமையை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள்களின் தொகுப்பினை இவ்வாறு அழைப்பர்.கட்டறு மென்பொருள் நிறுமம் (Free Software Foundation) இவற்றைப் பராமரித்து Free Software Foundation என்றப் பெயரில் உள்ள Free என்ற சொல் இலவசம் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை. சுதந்தரமான,கட்டுப்பாடற்ற என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.ஜிஎன்யு மென்பொருள்கள், ஜிஎன்யு பொதுமக்கள் உரிமம்(General Public License)அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதன்படி,ஜிஎன்யு மென்பொருள்களை அல்லது அதனடிப்படையில் அமைந்த மென்பொருள்களை எவரும் விலைக்கு விற்கக்கூடாது.அவற்றை வழங்குவதற்கும்,பராமரிப்பதற்கும் ஆகும் செலவுகளை மட்டும் விலையாகப் பெறலாம். அதுபோலவே,அவற்றை வாங்கும் பயனாளர் அந்த மென்பொருள்களில் மாற்றங்கள் செய்யலாம். மாற்றம் செய்யப்பட்ட மென்பொருளை ஜிஎன்யு உரிம நிபந்தனைகளின்படியே மற்றவர்க்கு வழங்க வேண்டும்

goal seek:இலக்கு தேடு.விரிதாள் பயன்பாடுகளிலுள்ள ஒரு பயன்கூறு.

go:செல்க.

godown:கிடங்கு.

good conductors:நல்ல கடத்திகள்.

good times virus:குட்டைம்ஸ் நச்சு நிரல்: இணையத்தில் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைநகல் போன்ற ஏனைய தொலைத்தகவல் தொடர்பு மூலமாகவும் பரவும் ஒரு நச்சுநிரல். மடலின் பொருள் பகுதியில் Good Times என்று காணப்படும்.இந்த மடலைத் திறந்து படிக்கும் பயனாளரின் கணினிக்குப் பாதிப்பு ஏற்படும்.ஒரு மின்னஞ்சலைத் திறந்து படிப்பதனாலேயே ஒரு கணினியை நச்சு நிரல் தாக்கும் அபாயம் இல்லை என்ற போதிலும்,ஒரு மின்னஞ்சலின் உடனிணைப்பாக (Attachment) அனுப்பப்படும் ஒரு கோப்பில் நச்சு நிரல் ஒட்டிக் கொண்டிருக்க முடியும்.வேறெந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நச்சுநிரல்கள் சில,நமக்குத் தெரியாமலே சங்கிலித் தொடராக அஞ்சல்களை அனுப்பச்செய்யும். தேவையின்றி இணைய அலைக்கற்றையையும், பயனாளரின் நேரத்தையும் வீணடிப்பது கூட நச்சுச் செயல் தானே! http://www.cert.org என்னும் இணையதளத்தில் நச்சு நிரல்கள்பற்றி மேலும் விவரங்கள் அறியலாம்.

goodwill;நன்மதிப்பு.

Gopher server:கோஃபர் வழங்கன்:ஒரு கோஃபர் பயனாளருக்கு விவரப்பட்டிகளையும், கோப்புகளையும் வழங்குகின்ற ஒரு மென்பொருள். Gopherspace:கோஃபர்வெளி: இணையத்தின் தொடக்ககால கட்டங்களில் கோஃபர்வெளி (Gopherspace)என்பது செல்வாக்குப் பெற்று விளங்கியது.இணையத்திலுள்ள தகவல் களஞ்சியங்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து தலைப்பு வாரியாக அட்டவணையிட்டு வழங்கன் கணினிகளில் சேமித்து வைத்திருப்பர். இந்தக் கோஃபர் கணினியை அணுகும் ஒருவர் தமக்கு வேண்டிய தகவல் இருக்கும் இடமறிந்து தேடிப் பெறமுடியும்.வைய விரிவலையின் (www) வருகைக்குப் பின் கோஃபர்வெளி செல்வாக்கு இழந்துவிட்டது.

GOSIP:காலிப்: அரசு திறந்தநிலை முறைமைகளின் பிணைப்புகளுக்கான குறிப்புரை என்று பொருள்படும் Government Open Systems Interconnection Profile group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்(GOSIP).அமெரிக்க ஐக்கிய நாடு அரசு 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் ஓர் ஆணை பிறப்பித்தது.அரசுக்காக வாங்கப்படும் புதிய கணினிப் பிணையங்கள் ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ தரக்கட்டுப்பாடுள்ளவையாய் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட ஆணையையே காஸிப் குறிக்கிறது.ஆனால் இவ்வழிகாட்டுநெறி,முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.எனவே போசிட் (POSIT) என்னும் புதிய நெறியை உருவாக்கியது.

go to:அங்கு செல்.

go to page:செல்லும் பக்கம்.

go to statement:கோ டூ கூற்று;'அங்கு செல்'ஆணை ஒரு நிரலிலுள்ள ஆணைகளை கணினி வரிசையாக நிறைவேற்றுகிறது. அவ்வாறின்றி நிரல் இயக்கத்தின் போது ஒரு கட்டத்தில் நிரலின் ஒரு குறிப்பிட்ட வரிக்குத் தாவ வேண்டுமெனில் இக்கட்டளையைப் பயன்படுத்த வேண்டும்.நுண்செயலி மொழியில் கிளைபிரி (Branch),தாவல்(Jump)ஆணையாக இருந்தது. உயர்நிலை கணினி மொழிகளில் அங்கு செல் (GoTo) என்று மாறியது.பேசிக்,பாஸ்கல்,சி,சி++ போன்ற பல்வேறு மொழிகளில் இக்கட்டளை பயன்படுத்தப்படுகிறது.பொதுவாக, இக்கட்டளையைப் பயன்படுத்த வேண்டாம் என்றே நிரலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.காரணம், நிரலின் தருக்கமுறை ஓட்டத்தைப் புரிந்துகொள்ள நிரலருக்கும் கடினம்;மொழிமாற்றி(Compiler)யும் சிக்கலான வேலையைச் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

.gov:கவ், ஜிஓவி:அரசுத் துறையின் இணையதளங்களை அடையாளம் காணப்பயன்படுத்தப்படும் பெருங்களப்பெயர். இணையக் களப்பெயர் முறைமையில் இடம்பெற்றுள்ள ஏழு முதன்மைக்களப் பெயர்களில் (.com,.org,.net,.edu,.mil.int,.gov)ஒன்று. அமெரிக்காவில் இராணுவம் அல்லாத கூட்டரசின் முகமைகள் இப்பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.அமெரிக்காவின் மாநில அரசுகள் states.us என்னும் மேல்நிலைக்களப் பெயரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.us என்ற சொல்லுக்கு முன் அந்தந்த மாநிலத்தைக் குறிக்கும் ஈரெழுத்துச் சொல்லையும் சேர்த்துக் கொள்ளலாம்.

.gov.ca:ஜிஓவி.சிஏ:ஓர் இணையதள முகவரி.கனடா நாட்டு அரசாங்கத்துக்குரியது என்பதைக் குறிக்கும் பெருங்களப்பெயர்.

.gq:ஜிகியூ:ஓர் இணையதள முகவரி பூமத்திய கினியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.gr:ஜி.ஆர்:ஓர் இணையதள முகவரி கிரீஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

graceful exit:நேர்த்தியான வெளியேற்றம்: கணினியின் ஒரு செயலாக்கத்தை பிழை நிகழும் வேளையில் கூட முறைப்படி முடித்து வைக்கும் வழிமுறை.செயலாக்கத்தின் இடையில் பிழையேற்படும்போது,கணினியின் கட்டுப்பாட்டை இயக்கமுறை எடுத்துக்கொள்ளும்.அல்லது இச்செயலாக்கத்தைத் தொடக்கி வைத்த முந்தைய செயலாக்கம் எடுத்துக் கொண்டுவிடும்.கணினி, செய்வதறியாது விக்கித்து நின்றுவிடும் நிலை தவிர்க்கப்படும்.

grade of service:சேவைத் தரம்: பொதுத் தொலைபேசிக் கட்டமைப்பு போன்ற ஒரு தகவல் தொடர்பு பங்கீட்டுப் பிணையத்தில் பயனாளர் ஒருவருக்கு,அனைத்துத் தடங்களும் பயன்பாட்டில் உள்ளன;சிறிது நேரங்கழித்துத் தொடர்பு கொள்ளவும்,என்ற செய்தி கிடைப்பதற்குரிய வாய்ப்புநிலை.ஒரு பிணையத்தின்,தகவல் போக்குவரத்தைக் கையாளும் திறனை மதிப்பிட, சேவைத்தர அளவீட்டுமுறை பயன்படுகிறது.ஒரு குறிப்பிட்ட கால நேரத்துக்கு இத்திறன் மதிப்பிடப்படுகிறது.சேவைத்தரம் 0.002 என மதிப்பிடப்பட்டால் ஒரு பயனாளரின் அழைப்பு மறுமுனை சென்றடைய அந்தக் குறிப்பிட்ட கால நேரத்தில்(காலை,மாலை,இரவு)99.8விழுக்காடு வாய்ப்புள்ளது என்று பொருள்.

grade sheet:மதிப்பெண் சான்றிதழ்.

gradient:படித்தரம்/படித்திறன்.

graphical output:வரைபட வெளியீடு.

grat port:வரைவுத் துறை:ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் வரைகலைப் பணிச்சூழலை வரையறுப்பதற்கான ஒரு கட்டமைவு.திரையில் தோன்றும் ஒவ்வொரு சாளரத்திலும் ஒரு வரைவுத்துறை இருக்கும். திரையில் தோன்றும் வரைகலைப் படங்களை பின்னணியிலுள்ள சாளரத்திற்கோ அல்லது ஒரு கோப்பிலோ சேமிக்க இந்த வரைவுத்துறை பயன்படுகிறது.

graftal:வரைவுக்கூறு;வரைவுரு: வரைவியல் வடிவங்களின் தொகுதி.மெய்போலத் தோற்றமளிக்கும் சிறப்பு விளைவுக்காட்சிகளை உருவாக்கும் தொழில் பிரிவில்,மரங்கள், செடிகொடிகள் போன்ற உருத்தோற்றங்களை வடிவமைக்க வரைவுருக்கள் பயன்படுகின்றன. துணுக்குருக்களை(Fractals)ஒத்திந்த போதிலும் வரைவுருக்களை இணைத்து உருத்தோற்றங்களை வடிவமைத்தல் மிகவும் எளிது.

grammer check:இலக்கணச்சரிபார்ப்பு.

grandfather file:பாட்டன்க் கோப்பு;தாத்தா கோப்பு.

grand total: இறுதிக் கூட்டுத்தொகை.

graphical design:வரைகலை வடிவமைபபு.

Graphical Kernel System:வரைகலை கருவக முறைமை: வரைகலை உருவங்களை வடிவமைக்க,கையாள,சேமிக்க,பரிமாறிக்கொள்ள, அன்சி(ANSI)மற்றும் ஐஎஸ்ஓ (ISO) அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ள கணினி வரைகலைத் தர வரையறை.வன்பொருள் நிலையில் இவை செயல்படுத்தப்படுவதில்லை.பயன்பாட்டுத் தொகுப்பு நிலையிலேயே கடைப்பிடிக்கப்படுகின்றன.ஒரு தனிப்பட்ட சாதனத்துக்கென இல்லாமல்,விசைப்பலகை, சுட்டி,காட்சித் திரை இவையிணைந்த பணிநிலையங்களுக்கானவை.1978ஆம் ஆண்டு இருபரிமாண வரைகலைக்காகவே இம்முறைமை உருவாக்கப்பட்டது.பின்னாளில் ஜிகேஎஸ்-3டி (GKS-30) என்ற பெயரில் முப்பரிமாண வரைகலைக்கும் விரிவாக்கப்பட்டது.

graph chart:வரைவு நிரல்படம்.

graphics:வரைகலை.

graphic field:வரைகலைப் புலம்.

graphic object:வரைகலைப்பொருள்.

Graphics Controller:வரைகலைக் கட்டுப்படுத்தி:திரைக்காட்சிக்கான தேக்கு நினைவகத்தைக் கணினி அணுகுவதற்கு அனுமதிக்கின்ற இ.ஜி.ஏ,விஜிஏ ஒளிக்காட்சித்தகவியின் ஒரு பகுதி.

graphics coprocessor:வரைகலைத் துணைச்செயலி:சில ஒளிக்காட்சி தகவிகளில் இணைக்கப்பட்டிருக்கும் தனிச்சிறப்பான நுண்செயலி.மையச் செயலகத்தின் பிற பணிக்கான ஆணைகளுக்கு ஏற்ப,கோடுகள் நிரப்பிய பரப்புகளால் ஆன வரைகலை உருவங்களை இச்செயலி உருவாக்கும்.

graphics data structure:வரைகலைத் தரவுக் கட்டமைவு:ஒரு வரைகலைப் படிமத்தின் ஒன்று அல்லது மேற்பட்ட கூறுகளைச் சுட்டுவதற்கென்றே தனிச்சிறப்பாய் வடிவமைக்கப்பட்ட ஒரு தரவுக் கட்டமைவு.

graphical design:வரைகலை வடிவமைப்பு.

graphical divice interface:வரைகலைச்சாதன இடைமுகம்.

graphical Terminal:வரைகலை முனையம்.

graphics,computer:கணினி வரைவியல்; கணினி வரைகலை.

graphics spread sheet:வரைகலை விரிதாள்.

graphics view:வரைகலை காட்சி.

greatful degradation:படீப்படியாகத் தரங்குறைதல்;படிப்படியாக தரமிழத்தல்.

graphics & sound:வரைகலை மற்றும் ஒலி.

grass pay:மொத்த ஊதியம்.

gray scale monitor:சாம்பல் அளவீட்டுத் திரையகம்.

gray scale scanner:சாம்பல் அளவீட்டு வருடுபொறி.

great renaming:மிகப்பெரும் பெயர்மாற்றம்: இணையத்தில் இப்போது நடைமுறையில் இருக்கும் செய்திக்குழுக்களின் பெயரமைப்புக்கு மாறிய நிகழ்ச்சியைக் குறிக்கிறது.முன்பெல்லாம், இணையம் சார்ந்த புறச் செய்திக்குழுவின் பெயர்கள் net,என்றெல்லாம் இருந்தன. எடுத்துக்காட்டாக நிரல்களின் மூல வரைவுகளைக் கொண்டுள்ள செய்திக்குழு net.sources என்று பெயர் பெற்றிருந்தன.1985ஆம் ஆண்டு மிகப்பெரும் பெயர்மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன்படி net.sources என்ற பெயர் comp.sources.misc என்று மாற்றம் பெற்றது.இதுபோல,செய்திக்குழுவின் அனைத்துப் பெயர்களும் புதிய பெயரமைப்புக்கு மாற்றப்பட்டன.

Green Pc:பசுமைக் கணினி.

Gregorian calendar:கிரிகோரியன் நாட்காட்டி: மேலை நாடுகளில் முன்பு ஜூலியன் காலண்டர் பின்பற்றப்பட்டு வந்தது.1582இல் பதின்மூன்றாம் போப் கிரிகோரி புதிய காலக்கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினார்.அதுவே கிரிகோரியன் காலண்டர் எனப்படுகிறது.இது,முந்தைய முறையைவிட மிகத்துல்லியமான முறையாகும். ஓர் ஆண்டுக்கு 365.2422 நாட்கள் என மிகத்துல்லியமாகக் கணக்கிடப்பட்டது.இதன்படி நூறால் வகுபடும் ஓர் ஆண்டு நானூறாலும் வகுபட்டால் மட்டுமே நீள்(Leap)ஆண்டாகும். அதாவது 366 நாட்களைக் கொண்டதாகும். இதன்படி,2000 ஒரு நீள் ஆண்டு.ஆனால் 1900 ஒரு நீள் ஆண்டில்லை.கி.பி.1-ம் ஆண்டிலிருந்து கூடுதலாகக் கணக்கிடப்பட்ட 10 நாட்கள் 1582 அக்டோபர் மாதத்தில் கழிக்கப்பட்டன.ஆனாலும் இங்கிலாந்தும் அதன் காலனிகளும் புதிய காலண்டரை ஏற்றுக்கொள்ளவில்லை.1752ஆம் ஆண்டில்தான் அவை கிரிகோரியன் காலண்டரை ஏற்றுக்கொண்டன.1952 செப்டம்பர் மாதத்தில் 11 நாட்கள் கழிக்கப்பட்டன.

GREP1:கிரெப்: முழுதளாவிய இயல்பான சொல்லமைப்பைத் தேடிக்காட்டல் என்று பொருள்படும் Global Regular Expression Print என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கோப்பில் அல்லது கோப்புகளில் ஒருகுறிப்பிட்ட சொல்லைத் தேடிக்காணும் யூனிக்ஸ் கட்டனை.

GREP2:கிரெப்2: யூனிக்ஸின் கிரெப் கட்டளையைப் பயன்படுத்தி ஒர் உரைப்பகுதியைத் தேடும் முறை.

grid layout:கட்ட உருவரை.

grok:கிராக்:ஆழமாய்,தீர்க்கமாய் புரிந்துகொள்ளல். திரு.ராபர்ட் ஏ.ஹெய்ன்லெய்ன் எழுதிய அறியாத நாட்டில் தெரியாத ஆள் (Stranger in a Strange Land)என்ற புதினத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்.அருந்துதல் என்று பொருள்படும் மார்சியன் மொழிச் சொல்லும் ஆகும்.பாலை நிலத்துவாசி நீரின்மீது கொள்ளும் அக்கறையைப் போன்று முனைப்பு ஆர்வத்தைக் குறிக்க மார்சியன் மொழியில் இச்சொல் பயன்படுகிறது.இணையக் கலந்துரையாடல்களில் கணினிப் புலமையைக் குறிக்க குறும்பர்கள் (Hackers)இச்சொல்லைப் பயன்படுத்துவர்.

groove format:வரிப்பள்ள வடிவம்.

ground:தரைத் தொடர்பு:ஒரு மின்சுற்றிலிருந்து பூமிக்கு இணைப்பு ஏற்படுத்தும் பாதை அல்லது தொடுகின்ற உடலோடு ஏற்படுத்தும் தொடர்பு.பொதுவாக,ஒரு பாதுகாப்புச் சாதனமாக இது பயன்படுகிறது.

group:குழு:1.பல உறுப்புகள் இணைந்த ஒரு முழுமை.ஒரு தரவுத்தள அறிக்கையில் குறிப்பிட்ட ஏடுகளின் தொகுதி.2.ஒரு படவரைவு மென்பொருளில் வரைகின்ற ஒரு படத்தில் பல்வேறு உருப்பொருள்களை ஒரு தொகுதியாகச் சேர்ப்பதையும் குழு என்பர்.3.பல் பயனாளர் இயக்கமுறைமையில் சில குறிப்பிட்ட பயனாளர்களை இணைத்து ஒரு குழுவை உருவாக்க முடியும்.சலுகைகளையும் உரிமைகளையும் ஒரு குழுவுக்கென வரையறுக்க முடியும்.அக்குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் அந்தச் சலுகைகளையும் உரிமைகளையும் பெறுவர்.

group band:குழுப் பட்டை. group footer band:குழு முடிப்புப் பட்டை.

group header band:குழுத் தலைப்புப் பட்டை.

group and outline:குழுவும் சுற்றுக்கோடும்.

group coding:குழுக்குறி முறையாக்கம்.

grouping:குழுக்கள்.

grouping data:தரவுக் குழுக்கள்.

grovel:ஊர்தல்;நகர்தல்;(நத்தை போல் நகர்தல்):1.ஒரு தேடலை அல்லது ஒரு பணியை எவ்வித முன்னேற்றமுமின்றி செய்து கொண்டிருத்தல்.ஒரு கோப்பிலிருந்து தகவல் பெற எழுதப்பட்ட சில நிரல்கள் வெளியீட்டைத் தருமுன்பு அக்கோப்பு முழுமையும் மெதுவாக ஊர்ந்து பார்வையிடுவதுண்டு.சில வேளைகளில்,ஒரு நிரலர் ஒரு குறிப்பிட்ட கட்டளை பற்றி அறிய ஆவணங்களில் பக்கம் பக்கமாக ஊர்ந்து தகவலைத் தேடுவதுண்டு.அல்லது நிரலில் ஏற்பட்டுள்ள பிழையைக் கண்டறிய நிரலின் வரிகளுக்கிடையே நகர்தல் உண்டு.2.ஒரு செய்திக்குழுவில் சில அனுகூலம் கருதி முன்வைக்கப்படும் கோரிக்கை.

gt:ஜி.டீ:ஓர் இணையதள முகவரி குவாதிமாலா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.gu:ஜியு:ஓர் இணையதள முகவரி குவாம் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

guest:விருந்தினர்:ஒரு பிணையத்தில் நுழைசொல் இல்லாமல் நுழைந்துகொள்ளும் உரிமையுடைய பயனாளரின் பெயரைப் பொதுவாக இவ்வாறு குறிப்பிடுவர்.செய்தி அறிக்கை சேவைகள் மற்றும் இணையத்தில் பல்வேறு சேவைகளை வழங்குபவர்கள் இதுபோன்ற ஒரு பயனாளரை உருவாக்கி வைத்திருப்பர். அப்பெயரைப் பயன்படுத்தி வருங்கால வாடிக்கையாளர்கள் யார்வேண்டுமானாலும் நுழைந்து,வழங்கப்படும் சேவைகளின் மாதிரியை நுகர்ந்து பார்க்கலாம்.

guest page:விருந்தினர் பக்கம்.

gulp:விழுங்கல்.

gunzip:ஜி-விரிப்பு':ஜீஸிப் எனப்படும் பயன்பாட்டு நிரல்மூலம் இறுக்கிச் சுருக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் விரிக்கச் செய்கின்ற பயன்பாட்டு நிரல்.ஜிஎன்யு அமைப்பின் படைப்பு.

guru:குரு:ஆசான்:நுண்மான் நுழை புலம்மிக்க ஒரு தொழில்நுட்ப வல்லுநர்.அவர் சார்ந்த துறையில் எவ்விதச் சிக்கலுக்கும் தீர்வு சொல்லும் வல்லமை படைத்தவர்.ஐயங்களுக்கும் கேள்விகளுக்கும் அறிவார்ந்த முறையில் விளக்கம் தருபவர்.

.gy:ஜிஒய்:ஓர் இணையதள முகவரி கயானா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.gz:ஜிஇஸட்:யூனிக்ஸில் ஜீஸிப்(gzip) என்னும் இறுக்கிச் சுருக்கும் நிரல் மூலம் குறுக்கிய காப்பகக் கோப்புகளை அடையாளம் காட்டும் வகைப்பெயர்(extension).

gzip:ஜிஸிப்:கோப்புகளை இறுக்கிச் சுருக்கப் பயன்படும் நிரல்.இது ஜிஎன்யு-வின் பயன்பாட்டு மென்பொருளாகும்.