கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/W
wafer-scale integration:மென் தகட்டு ஒருங்கிணைப்பு: ஒற்றை மென்தகட்டில் பல்வேறு நுண் மின்சுற்றுகளை ஒருங்கிணைத்து ஒரே மின்சுற்றாக கட்டுருவாக்குதல்.
WAIS:வெய்ஸ்: விரிபரப்பு தகவல் வழங்கன் என்று பொருள்படும் Wide Area Information Server என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணையத்தில் ஆவணங்களைத் தேடி எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் யூனிக்ஸ் அடிப் படையிலான மென்பொருள்.இணையத்தில் குவிந்துகிடக்கும் ஏராளமான ஆவணங்கள் கருப்பொருள் வாரியாக வகைப்படுத்தப்பட்டு அவற்றின் இருப்பிட முகவரிகள் 400-க்கு மேற்பட்ட வெய்ஸ் வழங்கன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட திறவுச்சொல் அடிப்படையில் அவற்றுள் நமக்குத் தேவையான தகவலைத் தேடிப்பெற முடியும். திங்கிங் மெஷின் கார்ப்பரேஷன், ஆப்பிள் கம்ப்யூட்டர், டோவ் ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து வெய்ஸை உருவாக்கினர். இயற்கை மொழி அடிப்படையிலான வினவல்களைப் பரிச்சீலிக்க இவர்கள் இஸட் 39.50 தர வரையறைகளைப் பயன்படுத்தினர். தனித்த வலைத்தளம் ஒன்றிலும் வெய்ஸ் நிரலை ஒரு தேடு பொறியாகப் பயன்படுத்த முடியும். சிலவேளைகளில் வெய்ஸ் மூலம் பெறப்படும் ஆவணப்பட்டியலில் தேவையற்ற தகவல்களும் இடம் பெறுவதுண்டு. வெய்ஸ் வழங்கனில் தகவலைத் தேட பயனாளர்கள் வெய்ஸ் கிளையன் மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும்.
waisindex:வெய்ஸ் சுட்டுக்குறிப்பு: 1.வெய்ஸ் (WAIS-Wide Area Information Server) வினவல் மென்பொருள் மூலமாக, உரைக் கோப்பு களை அணுகுவதற்கு சுட்டுக் குறிப்பு பட்டியலை உருவாக்கும் யூனிக்ஸ் பயன்கூறு. 2.வெய்ஸ் வழங்கனை அணுகுவதற்கான ஒரு யூஆர்எல் முகவரி wais://hostport/database என்பதுபோல் அமையும்.
Wallet PC:பணப்பைக் கணினி: சட்டைப்பையில் வைத்துக்கொள்ளும் அளவுள்ள சிறிய அட்டை வடிவிலான கணினி. பணப்பை போன்றே பயன்பாடு உடையது. இதை வைத்துள்ள நபரின் மெய்நிகர் (virtual) அடையாளத்தைக் கொண்டிருக்கும். மேலும்,பணம்,பற்று அட்டைகள் மற்றும் பிற இன்றியமையாத் தகவல்களையும் கொண்டிருக்கும். நடமாடும் தகவல் மூலமாகவும் மற்றும் தகவல் தொடர்புக் கருவியாகவும் விளங்கும். இதுபோன்ற சாதனம், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. தயாரிப்பில் உள்ளது.
wand:வருடுகோல்; உள்ளிடுகோல்; எழுத்தாணி: கணினியில் தகவல் உள்ளிட்டுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற பேனா வடிவிலான சாதனம். வரைகலைக்கான வரைபட்டிகை எழுத்தாணி அல்லது பட்டைக்குறி படிப்பிகள்போன்ற வருடுகருவி களை இவ்வகையில் சேர்க்கலாம்.
wanderer:வலைசுற்றி: வைய விரி வலையில் அடிக்கடி உலாவிவரும் பயனாளர். இவர்களில் பெரும்பாலோர் தாம் பார்வையிட்ட தகவல்களை வகைப்படுத்தி வைப்பதுண்டு.
waranty:உத்திரவாதம்.
water mark: நீர்வரிக்குறி, நீர்க்குறி.
wat:வாட்: ஒரு வினாடியில் ஒரு ஜூல் திறனை (energy) செலவழிப்பதற்கு இணையான மின்சக்தியின் அளவு. ஒரு மின்சாரச்சுற்றின் சக்தி,அந்த மின்சுற்றிலுள்ள மின்னூட்டம், அதில் பாய்கின்ற மின்னோட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
E - மின்னூட்டம்
I - மின்னோட்டம்
R - மின்தடை
P - மின்சக்தி (வாட்டில்)
எனில்,
P = IxE =I2xR =E2/R
.wav:வேவ்: அலைவடிவ கேட் பொலி வடிவாக்கத்தில் பதிவு செய்துள்ள ஒலிக் கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர் (file extension).
wavelet:சிற்றலை; அலைத் துணுக்கு: வரம்புக்குட்பட்ட நேரத்தில் மாறுபடுகின்ற ஒரு கணிதச் சார்பு. ஒலி போன்ற சமிக்கைகளை பகுத்தாய்வதற்கு அலைத்துணுக்குகள் உதவுகின்றன. மிகக் குறைந்த நேரத்தில் அலைவரிசையிலும் அலைவீச்சிலும் திடீரென மாற்றத்துக்கு உள்ளாகின்றன. ஆனால் சைன், கொசைன் சார்புகளில் வரம்பிலா நேரம்வரை அலைவரிசையும் (Frequency),அலைவீச்சும் (Amplitude) மாறாமல் அப்படியே இருப்பதைக் காணலாம்.
WBEM:டபிள்யூபிஇஎம்: வலை அடிப்படையிலான நிறுவன மேலாண்மை என்று பொருள்படும். Web-Based Enterprise Management என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு வலை உலாவியை (web browser), பிணையத்தைக் கண்காணிக்கும் ஒரு சாதனம் அல்லது ஒரு பயன்பாட்டு மென்பொருளுடன் நேரடியாகப் பிணைத்துவைக்கும் ஒரு நெறிமுறை (Protocol).
weak typing:பலவீன இனப் பாகுபாடு: கண்டிப்பில்லா இன உணர்வு : தரவுத் இனங்களைக் (Data type) கையாளுவதில் நிரலாக்க மொழிகளில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. நிரலின் இயக்க நேரத்தில் ஒரு மாறியின் (variable) தரவுத் இனத்தை மாற்ற அனுமதித்தல்.(எ-டு): சி#, ஜாவா போன்ற மொழிகளோடு ஒப்பிடுகையில், சி-மொழி தகவல் இனங்களைக் கையாள்வதில் ஒரு கண்டிப்பில்லாத நடைமுறையைப் பின்பற்றுகிறது எனலாம்.
wear:அணி.
web:(தகவல்)வலை; இணையம் : மீவுரையால் (Hyper Text) ஆன, ஒன்றோடொன்று தொடுப்புடைய ஏராளமானஆவணங்களின் தொகுப்பு. பயனாளர்,முகப்புப் பக்கம் (Home Page) வழியாக இணையத்தில் நுழைகிறார்.
web based tamil education:இணையம் வழி தமிழ்க் கல்வி.
web browser:வலை உலாவி; இணைய உலாவி: வைய விரி வலையிலோ, ஒரு பிணையத்திலோ அல்லது தன் சொந்தக் கணினியிலோ பயனாளர் ஒருவர் ஹெச்டிஎம்எல் ஆவணங்களைப் பார்வை யிடுவதுடன்,அதிலுள்ள மீத்தொடுப்புகள் மூலம் பிற ஆவணங்களையும் பார்வையிட்டு தேவையான கோப்புகளை பதிவிறக்கம் செய்துகொள்ள உதவும் ஒரு கிளையன் பயன்பாடு. லின்க்ஸ்(Lynx) போன்ற இணைய உலாவிகள், செயல்தளக் கணக்கு (Shell Account) வைத்திருப்பவர்கள் பயன்படுத்துவது. ஹெச்டீஎம்எல் ஆவணத்தின் உரைப்பகுதியை மட்டுமே பார்வையிட முடியும். பெரும்பாலான உலாவிகள் உரைப்பகுதி மட்டுமின்றி வரைகலைப் படங்கள்,கேட் பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலையும் தருகின்றன.ஹெச்டீஎம்எல் ஆவணத்தில் உட்பொதிவாக இருக்கும் ஜாவா அப்லெட்டுகள் அல்லது ஆக்டிவ்எக்ஸ் இயக்குவிசை கள் போன்ற சிறுநிரல்களையும் இயக்கும் வல்லமை பெற்றுள்ளன. சில உலாவிகளுக்கு இதுபோன்ற பணிகளைச் செய்ய உதவி மென் பொருள்கள் (plug-ins) வேண்டியிருக்கலாம். தற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் இணைய உலாவிகள்,பயனாளர்கள்,மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் உதவுகின்றன.செய்திக்குழுக்களைப் பார்வையிடவும் கட்டுரைகள் அஞ்சல் செய்யவும் பயன்படுகின்றன.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ் புளோரர்,நெட்ஸ்கேப் நிறுவனத் தின் நேவிக்கேட்டர் ஆகிய இரண்டு உலாவிகளும் உலகத்தில் பெரும்பாலான பயனாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இணைய உலாவி சுருக்கமாக உலாவி என்றும் அழைக்கப்படுகின்றது.
web browsing centre:வலை உலா மையம்.
Webcasting:வலைப்பரப்பு.
web counter:வலை எண்ணி.
web crawler:வெப்கிராலர்.அமெரிக்கா ஆன்லைன் நிறுவனத்தின் வைய விரிவலைத் தேடுபொறியின் பெயர்.
web designing:வலைப்பக்க வடிவமைப்பு.
web development:வலைசார் உருவாக்கம்: வைய விரிவலைப் பக்கங்களை வடிவமைத்தலும் நிரலாக்கலும்.
web directory:வலைக்கோப்பகம்: வலைத் தளங்களின் பட்டியல். யூஆர்எல்லின் பெயரும் அதைப்பற்றிய விளக்கமும் இடம் பெற்றிருக்கும்.
web events:வலை நிகழ்வுகள்.
web form:வலைப் படிவம்.
web graphics:வலை வரைகலை.
Web index:வலைச் சுட்டுகை: பயனாளர் ஒருவர்,இணையத்தில் பிற வளங்களைத் தேடிக் கண்டறிய உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வலைத்தளம். வலைச் சுட்டுகை, தேடுகின்ற வசதியையும் கொண்டிருக்கலாம். அல்லது வளங்களைச் சுட்டுகின்ற தனித்தனி மீத்தொடுப்பு களை மட்டுமே கொண்டிருக்கலாம்.
webmaster:தளநிர்வாகி; தளத் தலைவர் : ஒரு வலைத்தளத்தை உருவாக்கிப் பராமரிக்கும் பொறுப்பினை வகிக்கும் நபர் மின்னஞ்சல் களுக்கு பதில் அனுப்புதல், தளம் சிக்கலின்றிச் செயல்படுமாறு கவனித்துக் கொள்ளுதல், வலைப் பக்கங்களை உருவாக்குதல், புதுப் பித்தல், தளத்தின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் வடிவமைப்பையும் பராமரித்தல் ஆகிய பொறுப்புகளை தள நிர்வாகி வகிக்கிறார்.
web page:வலைப்பக்கம்; தளப் பக்கம்; இணையப் பக்கம்: வைய விரிவலையில் உள்ள ஆவணம். ஒரு வலைப்பக்கம் என்பது ஒரு ஹெச்டி எம்எல் கோப்பு. தொடர்புடைய வரைகலை, உரைநிரல் (scripts) ஆகியவற்றை குறிப்பிட்ட கணினியில் குறிப்பிட்ட கோப்பகத்தின்கீழ் கொண்டிருக்கும். இவையனைத்தும் சேர்ந்தே ஒரு யூஆர்எல் எனப்படுகிறது. பொதுவாக, வலைப்பக்கங்கள் பிற வலைப்பக்கங்களுக்கான தொடுப்புகளைக் கொண்டிருக்கும்.
web page design programme: வலைப்பக்க வடிவமைப்பு நிரல்கள்.
web page organizer:வலைப்பக்க ஒருங்கிணைப்பு.
web ring:வலை வளையம்.
web server form:வலை வழங்கள் படிவம்.
web site:வலைத்தளம்; வலையகம்; இணையதளம்; இணையகம் : வைய விரிவலையில், ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் தொடர்பான ஹெச்டிஎம்எல் ஆவணங்கள், தொடர்புடைய பிற கோப்புகள், உட்பொதி நிரல்கள்,ஒரு ஹெச்டீடீபீ வழங்கன் மூலம் தகவல் வழங்குகின்ற தரவுத் தளங்கள் இவை அனைத்தும் சேர்ந்த தொகுப்பு. ஹெச்டிஎம்எல் ஆவணங்கள் மீத்தொடுப்பு (Hyperlinks)களினால் பிணைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வலைத்தளங்கள் உள்ளடக்கத்தைப் பொருளடக்கமாகத் தரும் முகப்புப் பக்கத்தைக் (Home Page) கொண்டிருக்கின்றன. பெரிய நிறுவனங்கள் தங்களின் ஒரே வலைத்தளத்திற்கென ஒன்றுக்கு மேற்பட்ட ஹெச்டீடீபீ வழங்கன் கணினிகளை வைத்திருக்கின்றன. எனினும், ஒரே ஹெச்டிடீபீ வழங்கனில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறு வலைத்தளங்கள் இருக்க முடியும். தனிநபர்கள் தமக்கென வைத்திருக்கும் பலநூறு வலைத்தளங்கள் ஒரே வழங்கனில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு வலைத்தளத்தைப் பார்வையிட பயனாளர் கணினியில் இணைய இணைப்பு வசதியும், ஒரு வலை உலாவி மென்பொருளும் இருக்க வேண்டும்.
web site addresses: வலைதள முகவரிகள்.
web style: வலைப்பாணி
web terminal:வலை முனையம்: மையச் செயலகம் (CPU), ரேம் (RAM),அதிவேக இணக்கி (Modem),மற்றும் இணையத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான கருவிகள், திறன்மிகுந்த ஒளிக்காட்சி வரைகலை-இவற்றைக் கொண்ட கணினி, நிலைவட்டு கிடையாது. இது, பெரும்பாலும் வைய விரிவலையின் கிளையனாக மட்டுமே செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டது. இதனைப் பொதுப்பயன் கணினியாகப் பயன்படுத்த முடியாது.
web TV:வலை டீவி; வலைத் தொலைக்காட்சி: ஒரு சிறிய கருவிப் பெட்டியின் உதவியுடன்,வைய விரிவலையை அணுகி, வலைப் பக்கங்களைத் தொலைக்காட்சித் திரையில் காண்பதற்கான தொழில்நுட்பம். webzine:வலைஇதழ்; இணைய இதழ், மின்னிதழ்: தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்களைப் போல, மின்னணு முறையில் பதிப்பித்து, வைய விரிவலையில் வெளி யிடப்படுகின்ற இதழ்.
WELL:வெல்: முழுப்புவி மின்னணுத் தொடுப்பு என்று பொருள் Whole Earth Electronic Link என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கலிஃபோர்னியா மாநிலத்தில் சான்ஃபிரான்சிஸ்கோ நகரை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு கலந்துரையாடல் அமைப்பு. பல்வேறு நகரங்களிலிருந்து இணையம் வழியாக,தொலைபேசி இணைப்பு மூலம் அணுக முடியும். இது ஒரு மெய்நிகர் மனிதச் சமூகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. கணினி வல்லுநர்கள் தவிர சாதாரண மக்களும் இதில் விரும்பிப் பங்கேற்கின்றனர். ஏராளமான பத்திரிகையாளர்களும் பிற செல்வாக்குப் பெற்ற அறிஞர்களும் பங்கு பெறுவதால், இதனுடைய குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களையும் தாண்டி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
welcome page:வரவேற்புப் பக்கம்.
welknown port:நன்கறிந்த துறை.
what-if analysis:இது கொடுத்தால் எது கிடைக்கும்;இது தரின் எது வரும்: விரிதாள் பயன்பாட்டில் இருக்கின்ற வசதி. சில உள்ளீடுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட விடை பெறப்பட்டுள்ளது; உள்ளீட்டு மதிப்புகளில் ஒன்றை மாற்றும் போது, அதற்கேற்ப விடையும் உடனடியாக மாற்றம் பெறும்.எடுத்துக்காட்டாக, வங்கியில் கடன் பெறும் ஒருவர்,வெவ்வேறு வட்டி வீதங்களில் மாதத் தவணையாக எவ்வளவு செலுத்த வேண்டியிருக்கும் என்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். what will be the result, if the input is this? என்பதன் சுருக்கமே what-if analysis எனப்படுகிறது.
whatis:வாட்இஸ்; என்ன இது: 1.யூனிக்ஸ் கட்டளை. யூனிக்ஸ் கட்டளைகளில் பயன்படுத்தப்படும் சிறப்புச் சொற்கள் பற்றிய விளக்கங்களைத் தரும். 2. இணையத்திலுள்ள ஒரு மென்பொருளைத் தேடிக் கண்டறிய,அதைப் பற்றிய விவரிப்பில் குறிப்பிட்ட சொற்கள் உள்ளனவா எனத் தேடுவதற்குப் பயன்படும் ஒர் ஆர்க்கி (Archie) கட்டளை.
WHIRLWIND:வேர்ல்விண்டு: 1940 களில் மாசாசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) உருவாக்கப்பட்டு, 1950களில் பயன்படுத்தப்பட்ட, வெற்றிடக் குழாய்களினால் ஆன இலக்கமுறைக் கணினி. சிஆர்டீ திரைக்காட்சி,நிகழ்நேரச் செய லாக்கம் ஆகிய புதிய கண்டுபிடிப்புகள் வேர்ல்விண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. இத்திட்டப் பணியில் உறுப்பினராய் இருந்த கென்னத் ஹெச் ஓல்சன் (Kenneth H. Olsen),1957ஆம் ஆண்டில் டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷனை நிறுவினார்.
whiteboard:ஒயிட்போர்டு; வெண்பலகை, கரும்பலகை (நம் வழக்கு): ஒரு பிணையத்தில் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஒர் ஆவணத்தைத் திறந்து கையாள வகைசெய்யும் மென்பொருள். அனைத்துப் பயனாளர்களின் கணினித் திரைகளிலும் ஒரே நேரத்தில் ஆவணம் திறக்கப்படும். ஒரு கரும்பலகையில் எழுதப்பட்ட விவரங்களைப் பலரும் கூடிநின்று படிப்பதைப் போல.
white board window:வெண்பலகைச் சாளரம்.
white paper:வெள்ளை அறிக்கை: பெரும்பாலும் ஒருதொழில்நுட்பத் தகவல்பற்றி முறைசாரா வகையில் விவரங்கள் தருதல் அல்லது வரைவு வரன்முறைகளை முன்வைத்தல்.
who is:ஹூஇஸ்:யார் எவர்?: 1.இணையத்தில் சில களங்கள் (domains) வளங்கும் சேவை,அக்களத்தில் சேமித்து வைக்கப் பட்டுள்ள தரவுத் தளத்தில் மின்னஞ்சல் முகவரிகளையும், பயனாளர்கள் பற்றிய வேறுசில தகவல்களையும் பயனாளர் ஒருவர் அறிந்துகொள்ள இச்சேவை உதவுகிறது. 2."யார்எவர்" சேவையைப் பெறப்பயன்படும் யூனிக்ஸ் கட்டளை.3.நாவெல் பிணையத்தில் அந்த நேரத்தில் நுழைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்துப் பயனாளர்களின் பெயர்களையும் பட்டியலிடும் கட்டளை.
who is client:ஹூஇஸ் ஹிளையன்ட்: யார் கிளையன் பயனாளர் பெயர்கள்,மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தகவல்கள் அடங்கிய தரவுத் தளத்தை அணுகுவதற்குப் பயனாளர்க்கு வாய்ப்பளிக்கும் ஒரு கட்டளை.(யூனிக்ஸில் உள்ள ஹூஇஸ் கட்டளை போன்றது).
who is server:ஹூஇஸ் செர்வர்; வழங்கன் யார் ஹூஇஸ் கிளையன்ட் கட்டளை மூலம் தகவல் அறிய விரும்பும் ஒரு பயனாளருக்கு தரவுத் தளத்திலிருந்து பயனாளர் பெயர்கள். மின்னஞ்சல் முகவரிகளை (பெரும்பாலும் ஒர் இணையக் களத் தினில் கணக்கு வைத்துள்ள பயனாளர்களின் பட்டியல்) வழங்குகின்ற மென்பொருள்.
widelbroad band:அகல/விரிக்கற்றை.
wide SCSI or Wide SCSI-2:விரிந்த ஸ்கஸ்ஸி அல்லது விரிந்த ஸ்கஸ்லி-2: ஒரு நேரத்தில் 16 துண்மி(பிட்)கள் வீதம் வினாடிக்கு 20 மெகாபைட்டுகள் வரை தகவல் பரிமாற்றம் செய்யக் கூடிய ஸ்கஸ்ஸி-2 இடைமுகம். இவ்வகை ஸ்கஸ்ஸி இணைப்பியில் 68 பின்கள் உள்ளன.
width:அகலம்.
width, tape:நாடா அகலம்.
widow:துணையிலி: முந்தைய பக்கத்திலுள்ள இறுதிப் பத்தியின் இறுதிவரி முழுவரிக்கும் குறைந்த நீளமுடையது-அடுத்த பக்கத்தில் இடம் பெறுவது. அச்சிடப்படுகின்ற பக்கத்தில் இவ்வாறு ஒற்றை வரி தனியாக நிற்பது பொதுவாக விரும்பப்படுவதில்லை. பெரும்பாலான சொல்செயலிகளில் துணியிலிகளைத் தவிர்க்க வழிமுறைகள் உள்ளன. காண்க: Orphan.
wildcard characters:பதிலீட்டுக் குறிகள்: ஓர் எழுத்து அல்லது பல எழுத்துகளுக்குப் பதிலீடாகப் பயன்படுத்தப்படும் விசைப்பலகைக் குறி.பெரும்பாலும் நட்சத்திர அடையாளம் (') ஒரெழுத்து அல்லது பல எழுத்துகளுக்குப் பதிலாக இடம் பெறும். கேள்விக்குறி (?) ஓரெழுத்துக்குப் பதிலாக இடம் பெறும்.இயக்க முறைமைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை,அதாவது குறிப்பிட்ட கோப்புகளின் தொகுதியைக் கையாள இக்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.(எ-டு):"SALES." என்பது SALES என்னும் முதன்மைப் பெயருள்ள, வகைப் பெயர் (extension) எதுவாக இருப்பினும் அத்தனை கோப்புகளையும் குறிக்கும். .DOC என்பது DOC என்னும் வகைப்பெயர் கொண்ட அனைத்து கோப்புகளையும் குறிக்கும். SALES1.XLS,SALES2XLS,SALES3.XLS ஆகிய கோப்புகளை SALE?.XLS என்று குறிப்பிடலாம்.
WIN32:வின்32: விண்டோஸ் 95/98 என்டி இயக்க முறைமைகளுக்கான பயன்பாடுகள், இன்டெல் செயலி 80386 மற்றும் அதனிலும் மேம்பட்ட செயலிகளிலுள்ள 32-பிட் ஆணைகளைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும், பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தைக் (Application Programm Interface - API) குறிக்கிறது. விண்டோஸ் 95/98, விண்டோஸ் என்டி ஆகியவை 16-பிட் உள்ள 80x86 ஆணைகளையும் ஏற்கும் என்றபோதிலும்,வின்32 செயல்திறன் மிக்கதாகும்.
WIN32S:வின்32எஸ்: வின்32 பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தின் ஒர் உட்பிரிவு. விண்டோஸ் 3.எக்ஸில் செயல்படக்கூடியது. இலவசமாக வழங்கப்படும் வின்32எஸ் மென்பொருளைச் சேர்த்துக்கொண்டால், ஒரு பயன்பாடு இன்டெல் 80386 மற்றும் மேம்பட்ட செயலிகளில், விண்டோஸ் 3.எக்ஸ் சூழலில் செயல்படும்போது, 32-பிட் ஆணைகளைப் பயன்படுத்திக் கொள்வதால் செயல் திறன் அதிகரிக்கும்.
window definition function:சாளர வரையறுப்புச் செயல்கூறு: ஒரு மெக்கின்டோஷ் பயன்பாட்டில் ஒரு சாளரத்தோடு தொடர்புடைய வளத்தைக் குறிக்கும். ஒரு சாளரத்தை திரையில் காட்டும்போதும், சாளர அளவுகளை மாற்றிய மைக்கும்போதும் மெக்கின்டோஷ் "விண்டோ மேனேஜர்" நிரல் இந்த செயல்கூறை நிறைவேற்றும்.
Windows 95:விண்டோஸ் 95:இன்டெல் 80386,அதற்கும் மேம்பட்ட செயலிகளில் செயல்படக் கூடிய ஓர் இயக்க முறைமை. வரைகலைப் பயனாளர் இடைமுகம் கொண்டது. மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் ஆகஸ்ட் 1995இல் வெளியிட்டது. விண்டோஸ் 3.11, பணிக்குழுவுக்கான விண்டோஸ் 3.11,எம்எஸ்டாஸ் ஆகிய அனைத்திற்கும் மாற்றாக வெளியிடப்பட்ட ஒரு முழுமையான இயக்க முறைமை.விண்டோஸ் 3.xடாஸ்மீது செயல்படும் ஒரு பணிச்சூழல் (Operating Environment). ஆனால் விண்டோஸ் 95,டாஸின் உதவியின்றிச் செயல்படும் ஒரு தனித்த இயக்க முறைமை. என்றாலும் எம்எஸ்டாஸ் மென்பொருள்களை விண்டோஸ்95இல் இயக்க முடியும். 255 எழுத்துகள் வரை நீண்ட கோப்புப் பெயர்களை வைத்துக் கொள்ளலாம். எந்தப் பிணையத்தின் கிளையனாகவும் செயல்படவல்லது. தம்மளவில் விண்டோஸ் 95 கணினிகளை ஒன்றாகப் பிணைத்து, சமனி-சமனி (peer to peer) பிணையம் அமைத்துக் கொள்ள முடியும். இணைத்து-இயக்கு(plug and play)முறையில் எந்தவொரு வன்பொருளையும் அது வாகவே அடையாளம் காணும். பல்லூடகம், இணைய இணைப்புக்கான வசதிகள் அனைத்தும் கொண்டது. 80386 செயலி, 4 எம்பி ரேம் உள்ள கணினிகளில் செயல்படும். என்றாலும் 80486 செயலி 8 எம்பி ரேம் இருப்பது நல்லது.
window menu:சாளரப் பட்டி.
windows application:விண்டோஸ் பயன்பாடு: மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் சூழலில் செயல்படு மாறு வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள் பயன்பாடு.
windows-based accelerator:விண்டோஸ் அடிப்படையிலான வேக முடுக்கி: விண்டோஸ் மற்றும் விண்டோஸ் அடிப்படையிலான பயன்பாடுகளை வேகமாக இயக்குவதற்கென தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மீத்திறன் விஜிஏ (Super VGA) ஒளிக்காட்சித் தகவியின் ஒருவகை. தகவியின் படிப்பு நினைவகத்தில் பதியப்பட்டுள்ள தனிச்சிறப்பு நிரல்கூறுகளின் உதவியால், சாதாரண எஸ்.விஜிஏ ஒளிக்காட்சித் தகவிகளைவிடக் கூடுதல் வேகமும் திறனும் கொண்டது.இந்த நிரல்கள்,ஒளிக்காட்சி தொடர்பாக ஆற்ற வேண்டிய சில பொறுப்புகளிலிருந்து விண்டோஸ் இயக்கமுறைமையை விடுவிக்கின்றன. இதனால் செயல்பாட்டு வேகம் கூடுகிறது.
Windows CE:விண்டோஸ் சிஇ: மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் குறுகிய வடிவம். கையகக் கணினிகளுக்கென வடிவமைக்கப்பட்டது. எக்செல்,வேர்டு,இன்டர்நெட் எக்ஸ் புளோரர், ஷெட்பூல்+,மின்னஞ்சல் கிளையன் போன்ற விண்டோஸ் பயன்பாடுகள் பலவற்றின் குறுகிய வடிவங்களையும் விண்டோஸ் சிஇ-யில் இயக்கமுடியும்.
Windows Driver Library:விண்டோஸ் இயக்கி நூலகம்: மூல விண்டோஸ் தொகுப்பில் சேர்க்கப்படாத, மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயக்க முறைமைக்கான வன்பொருள் சாதன இயக்கிகளின் தொகுதி.
Windows Explorer:விண்டோஸ் எக்ஸ்புளோரர்: விண்டோஸ் 95/98இல்,கோப்புறை மற்றும் கோப்புறைகளை மேலாண்மை செய்வதற்கு அமைந்துள்ள ஒரு பயன்கூறு. விண்டோஸ் 3.1-ன் கோப்பு மேலாளர் (File Manager) நிரலை ஒத்தது. ஒரு விண்டோவில் இரண்டு பாளங்கள் (Panels) இருக் கும். இடப்புறப் பாளத்தில் கோப்புறைகளின் பட்டியலைப் பார்வையிடலாம். ஒரு கோப்புறையைத் தேர்வு செய்து அதன் உள்ளடக்கத்தை வலப்புறப் பாளத்தில் பார்வையிடலாம்.
Windows For Workgroups:பணி குழுவுக்கான விண்டோஸ்: 1992ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விண்டோஸின் ஒரு பதிப்பு. ஈதர்நெட் லேனில் செயல்படுமாறு வடிவமைக்கப் பட்டது. இதற்கென தனியான பிணைய மென்பொருள் தேவையில்லை.
Windows keyboard:விண்டோஸ் விசைப்பலகை.
Windows Media Player:விண்டோஸ் மீடியா பிளேயர்- ஒரு மென்பொருள்.
Windows Metafile Format :விண்டோஸ் மீகோப்பு வடிவாக்கம்:நெறிய வரைகலை (vector graphics) கோப்புகளுக்கான விண்டோஸ் கோப்பு வடிவாக்கம். இரண்டு பயன் பாடுகளுக்கிடையே வரைகலைத் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், இருவேறு பணி அமர்வுகளுக்கிடையே தகவலைச் சேமிக்கவும் பயன்படுகிறது. Windows NT:விண்டோஸ் என்டி. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய இயக்க முறைமை. என்டி எஃப்எஸ் (NTFS) என்னும் பாதுகாப்பான கோப்பு முறைமையைக் கொண்டது. பல்பயனாளர் அமைப்பில் பாதுகாப்புமிக்கது. விண்டோஸ் என்டி 4.0 பதிப்பு ஒர்க்ஸ்டேஷன், செர்வர், அட்வான்ஸ்டு செர்வர், டேட்டா சென்டர் செர்வர் என்னும் நான்கு வடிவங்களில் வெளியிடப் பட்டது.
Windows NT Advanced Server: விண்டோஸ் என்டி அட்வான்ஸ்டு செர்வர்: விண்டோஸ் என்டி-யின் மேம்பட்ட வடிவம். மையப்படுத் தப்படாத பகிர்ந்தமை கள (domain) அடிப்படை கொண்ட பிணைய மேலாண்மை மற்றும் பாதுகாப்புக் கொண்டது. மேம்பட்ட நிலைவட்டு பழுது தாக்குப்பிடித்தல் வசதிகளைக் கொண்டது. நிலைவட்டுகளில் ஏற்படும் எதிர்பாராப் பழுதுகளை எதிர்கொள்ள பிம்பமாக்கம் (Mirroring) போன்ற வசதிகள் உள்ளன. வலை வழங்கன்களுக்கு ஏற்ற இயக்க முறைமை.
Windows Update:விண்டோஸ்-இற்றைப்படுத்தல்.
Windows XP:விண்டோஸ் எக்ஸ்பீ: மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள மிக அண்மைய இயக்க முறைமைய விண்டோஸ் என்டி5.0 பதிப்பே இவ்வாறு பெயர் மாற்றம் பெற்றுள்ளது. எக்ஸ்பீ என்ற எழுத்துகள் eXPerence என்ற சொல்லாகக் குறிக்கின்றன. கண்ணுக்கதிமான பயனாளர் இடை முகத்தைக் கொண்டுள்ளது. குரல் கட்டளையை ஏற்கும் கையெழுத்தை அறியும். உரையைப் பேச்சாய் மாற்றும். இதுபோல் இன்னும் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ள பாதுகாப்பான திறன்மிக்க இயக்க முறைமை.
winG:வின்ஜி:விண்டோஸ் விளையாட்டுகள் என்று பொருள்படும் Windows Games என்பதன் சுருக்கம்.விண்டோஸ் 95 சூழலில் கணினி விளையாட்டுகளுக்கான பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API). வின்ஜி-யின் கீழ், விளையாட்டு நிரல்கள் ஒளிக்காட்சிச் சட்ட இடையகத்தை(Video Frame Buffer) நேரடியாக அணுக முடியும். இதனால் வேகம் கூடும்.
WINS வின்ஸ்: விண்டோஸ் இணையப் பெயரிடு சேவை எனப்பொருள்படும் Windows Internet Naming Service group Glgmu flair தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் புரவன் பெயரை (Host Name) அதன் ஐ.பீ முகவரியோடு பொருத்தும் விண்டோஸ் என்டி செர்வர் வழிமுறை.
WINS - Confignration:வின்ஸ் உள்ளமைவு.
Winsock:வின்சாக்: விண்டோஸ் செருகுவாய் என்று பொருள்படும் Windows Sockek என்பதன் சுருக்கம். விண்டோஸில் டீசிபி/ஐபபீ இடை முகத்தை வழங்குகின்ற ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API).1991இல் நடைபெற்ற யூனிக்ஸ் மாநாட்டில் மென்பொருள் விற்பனையாளர்களிடையே நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தர வரையறை. மைக்ரோசாஃப்ட் உட்பட பல மென்பொருள் தயாரிப்பாளர்களின் ஆதரவினை இது பெற்றது. Wintel:வின்டெல்: மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் இயக்க முறைமையையும், இன்டெல் மையச்செயலகத்தையும் கொண்ட கணினி களைக் குறிக்கும் சொல்.
wired:பிணைப்புறு; இணைப்புறு: 1.ஒரு மின்னணுச் சுற்று அல்லது வன்பொருள் தொகுதியின் பண்புக்கூறு. அவை எந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளதோ அதன் படியேதான் அதன் தகவமைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு மென்பொருள் மூலமாக விரும்பியவாறு நிரல்படுத்தவோ,ஒரு நிலைமாற்றியின் மூலம் மாற்றியமைக்கவோ முடியாது. 2.இணைய வளங்கள், அமைப்புகள்,பண்பாடு பற்றி அறிந்திருத்தல். 3.இணையத்தோடு இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளல்.
wireframe:வலைப்புள்ளிச் சித்திரம்; கம்பிச் சட்டம்.
wiring diagram:கம்பி வரிப்படம்.
Wireless LAN:கம்பியில்லா லேன் : தனித்த கணுக் கணினிகளுக்கும் குவியத்துக்கும் (Nodes and Hub) இடையே பருநிலை இணைப்பு எதுவும் இல்லாமல், வானலை, அகச்சிவப்பு ஒளிச்சமிக்கை அல்லது பிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவலை அனுப்பவும் பெறவும் முடிகிற குறும்பரப்புப் பிணையம். பயனர் ஒரு கையகக் கணினியை இங்கும் அங்கும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கின்ற அலுவலக அல்லது தொழில்கூடச் சூழல்களில் கம்பியில்லா லேன் தொழில்நுட்பம் மிகவும் பயன்படக்கூடியது.
wire printer:கம்பி அச்சுப்பொறி.
wire-wrapper circuits: கம்பிசுற்றிய மின்சுற்றுகள்: அச்சிட்ட மின்சுற்றுப் பலகைகளில்,உலோக இணைப்புத் தடங்களுக்குப் பதிலாக, துளையிடப்பட்ட பலகைகளில் கம்பிகளால் இணைக்கப்படும் மின்சுற்று. இணைப்புக் கம்பிகளின் முனைகள் நீண்ட பின்களின் மீது சுற்றி வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் இத்தகைய மின்சுற்றுகள் கையால் செய்யப்பட்டவை. மாதிரியங்களை உருவாக்கவும், மின்சாரப் பொறியியலில் ஆய்வுகளை மேற்கொள்ளவுமே இத்தகைய மின்சுற்றுகளைப் பயன்படுத்துவர்.
.wmf:.டபிள்யூஎம்எஃப்: நெறிய வரைகலை (vector graphics) அடங்கிய மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மீகோப்புகளை அடையாளங்காட்டும் கோப்பு வகைப்பெயர் (extension).
Word Art:வேர்டு ஆர்ட்: எழிலான எழுத்துகளை உருவாக்க உதவும் மென்பொருள்.
word-addressable processor:சொல்-அழைதகு செயலி: நினைவகத்தில் ஒரு தனி பைட் அணுக இயலாத, ஆனால் பைட்களின் தொகுதியை அணுக முடிகிற ஒரு செயலி. ஒரு தனி பைட்டைக் கையாள வேண்டுமெனில் அந்த பைட் உள்ளடங்கிய நினைவகத் தொகுதியைப் படித்து எழுத வேண்டியதிருக்கும்.
Word Pad:வேர்டுபேடு: ஒரு சொல் செயலி மென்பொருள்.
word passing: சொல் பரப்பி.
word count:சொல் எண்ணிக்கை.
word search:சொல் தேடல்.
word parser:சொல் பகுப்பான். words, reserved:ஒதுக்கீட்டுச்சொற்கள்.
work around:ஒப்பேற்றுதல்,சமாளித்தல்: ஒரு மென்பொருளில் அல்லது வன்பொருளில் பிழை அல்லது பிற குறைபாடுகள் இருப்பினும் அக்குறைபாட்டினை நீக்காமலே குறிப்பிட்ட பணியை ஒருவாறாகச் செய்து முடிக்கும் தந்திரம்.
Workbook:பணிப்புத்தகம்: எக்செல் போன்ற விரிதாள் பயன்பாடுகளில்,பல தொடர்புடைய பணித்தாள்களைக் கொண்ட ஒரு கோப்பு.
workflow application:பணிப்பாய்வுப் பயன்பாடு : ஒரு திட்டப்பணியின் தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து மேலாண்மை செய்வதற்கு உதவும் நிரல்களின் தொகுப்பு.
work offline: அகல்நிலை பணிசெய்.
workplace shell:ஒர்க்பிளேஸ் ஷெல்: பணியிட செயல்தளம்: ஒஎஸ்/2 இயக்க முறைமையின் வரைகலைப் பயனாளர் இடைமுகம். மேக்ஓஎஸ், விண்டோஸ் 95 போலவே ஒர்க்பிளேஸ் ஷெல்லும் ஆவணங்களை மையமாகக் கொண்டது. ஆவணக் கோப்புகள் சின்னங்களாகக் காட்டப்படும். ஒரு ஆவணச் சின்னத்தின்மீது சொடுக்கியதும் அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாடு முதலில் திறந்து பின் அதில் ஆவணம் திறக்கப்படும். ஓர் ஆவணத்தை அச்சிட அந்த ஆவணத்துக்குரிய சின்னத்தை அச்சுப் பொறி சின்னத்தின்மீது இழுத்து விட்டால்போதும். ஒர்க்பிளேஸ் ஷெல், பிரசென்டேஷன் மேனேஜர் மென்பொருளின் வரைகலைச் செயல்கூறுகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
World Wide Web or World-wide Web : வைய விரி வலை: உலக முழுவதிலுமுள்ள ஹெச்டிடீபீ வழங்கன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள, ஒன்றோடொன்று தொடர்புடைய மீத்தொடுப்பு ஆவணங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு. வைய விரிவலையிலுள்ள ஆவணங்கள் வலைப்பக்கங்கள் எனப்படுகின்றன. இவை ஹெச்டிஎம்எல் மொழியில் எழுதப்பட்டவை. இவை யூஆர்எல் மூலம் அடையாளம் காணப்படுகின்றன. ஹெச்டிடீபீ நெறிமுறை மூலம் இவை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்குப் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இவற்றில் மீத்தொடுப்புள்ள சொல்/சொல் தொடர்மீது சுட்டியால் சொடுக்க அதனால் சுட்டப்படும் இன்னோர் ஆவணம் பயனாளருக்குக் கிடைத்து விடுகிறது. அந்த இன்னோர் ஆவணம் ஒரு வரைகலைப் படமாகவோ, ஒலி,ஒளிக்காட்சிக் கோப்பாகவோ, ஜாவா குறுநிரலாகவோ, ஆக்டிவ்எக்ஸ் இயக்குவிசையாகவோ இருக்கலாம். வலப்பக்கங்களைப் பார்வையிடும் பயனாளர் எஃப்.டீ.பீ வழங்கனிலிருந்து கோப்புகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மின்னஞ்சல் அனுப்பலாம். ஐரோப்பிய நுண்துகள் இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் (European Laboratory for Particle Physics CERN) பணிபுரிந்த டிமோத்தி பெர்னர்ஸ் - லீ (Timothy Berners - Lee) என்பவர் 1989-ஆம் ஆண்டில் வைய விரி வலையை உருவாக்கினார்.
World Wide Web Consortium: வைய விரிவலைக் கூட்டமைப்பு : வைய விரி வலை தொடர்பான அனைத்துப் பிரிவுகளிலும் நடைபெறும் ஆய்வு களைக் கண்காணித்து சிறந்த தரக் கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வணிக மற்றும் கல்வி நிறுவனங் களின் கூட்டமைப்பு. சுருக்கமாக டபிள்யூ3சி(W3C) என்றழைக்கப்படும்.
WOSA :வோசா: விண்டோஸ் திறந்த நிலை முறைமைக் கட்டுமானம் என்று பொருள்படும். Windows Open System Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வெவ்வேறு விற்பனையாளர்கள் உருவாக்கும் விண்டோஸ் அடிப்படையிலான பயன்பாடுகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளச் செய்ய, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களின் (APls) தொகுப்பு. திறந்தநிலை தரவுத் தள இணைப் புறுத்தம் (Open Data Base Connectivity-ODBC),செய்தியனுப்பு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Messaging Application Programming Interface- MAPI) தொலைபேசிப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Telephone Application Programming Interface-TAPI) விண்டோஸ் பொருத்துவாய்கள் (Windows Sockets - Winsock) மைக்ரோசாஃப்ட் தொலை நிலை செயல்முறை அழைப்புகள் (Remote Procedure Calls-RPC) ஆகியவை,வோசாவில் அடக்கம்.
.wp:.டபிள்யூபீ வேர்டு பெர்ஃ பெக்ட் எனப்படும் (கோரல் நிறுவன வெளியீடு) சொல்செயலி மென்பொருளில் உருவாக்கப்படும் ஆவணங்களை அடையாளம் காட்டும் கோப்பு வகைப்பெயர் (extension).
WRAM :டபிள்யூரேம்: சாளர குறிப்பிலா அணுகு நினைவகம் என்று பொருள்படும் Window Random Access Memory என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒளிக்காட்சித் தகவிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை ரேம். ஒளிக்காட்சி ரேம் (VRAM) போலவே, ஒரு வரைகலைப் படிமம் எழுதப்படும் போதே திரையை மறுவண்ணமிட (Repaint) டபிள்யூ ரேம் அனுமதிக் கிறது. ஆனால், விரேமைவிட டபிள்யூரேம் வேகம் அதிகம் கொண்டது.
wrap round : மடங்கித்தடுப்பு.
.wri:.டபிள்யூஆர்ஐ: மைக்ரோ சாஃப்டின் ரைட் (write) பயன்பாட்டுத் தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஆவணங்களை அடையாளம் காட் டும் கோப்பு வகைப்பெயர்.
write-behind cache:எழுதும் முன் இடைமாற்று: நிரந்தரச் சேமிப்புக்காக வட்டில் எழுதப்படுவதற்கு முன்பாக தகவலை இடைமாற்று நினைவகத்தில் குறுகிய நேரம் இருத்திவைக்கும் தற்காலிகச் சேமிப்பு முறை. இவ்வாறான இடை மாற்று நடவடிக்கை பொதுவாகக் கணினியின் செயல் திறனைக் கூட்டும். ஒப்புநோக்கில் மெதுவாகச் செயல்படும் வட்டில், எழுதவும் படிக்கவும் அடிக்கடி அணுகவேண்டிய தேவையைக் குறைப்பதால் இது இயல்வதாகிறது.
written media : எழுத்து ஊடகம்.
write mode:எழுது பாங்கு: கணினிச் செயல்பாட்டில், ஒரு நிரல் ஒரு கோப்பில் எழுத (பதிய) முடிகின்ற நிலை. எழுது பாங்கில் ஒரு கோப்பில் ஏற்கெனவே இருக்கும் தகவல்களை மாற்றியமைக்க அனுமதிக்கப்படுகிறது. Write Once, Use Manytimes: ஒரு முறை எழுதி பலமுறை பயன்படுத்து.
Write Once, Use Anywhare: ஒரு முறை எழுதி எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்.
.ws :.டபிள்யூஎஸ்: ஓர் இணையத் தள முகவரி மேற்கு சமோவாவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
.ww.us :.டபிள்யூ.வி.யு.எஸ்: ஓர் இணையத் தள முகவரி அமெரிக்க நாட்டு மேற்கு வர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
www: வைய விரிவலை.
WYSIBYG • What You See Before You Get it : காண்பதே கிடைக்கும்.