கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/R

விக்கிமூலம் இலிருந்து

R

R&D : ஆர்&டி : ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்று பொருள்படும் Research and Development stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

RAD : ரேடு : அதிவேகப் பயன்பாட்டு உருவாக்கம் எனப் பொருள்படும் Rapid Application Development என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி அமைப்புகளை உருவாக்கி நடைமுறைப் படுத்துவதில் ஒரு வழிமுறை. முழுத் திட்டப் பணியும் முடியும்வரைக் காத்திராமல், சிறு சிறு கூறுகளாகப் பிரித்து அவை முடிந்தவுடன் அவ்வப் போது நடைமுறைப்படுத்திவிடும் முறை. ஜேம்ஸ் மார்ட்டின் என்பவர் முதன்முதலில் இம்முறையை உருவாக்கிச்செயல்படுத்திக்காட்டினார். கேஸ் கருவிகள் (CASE Tools) மற்றும் காட்சிமுறை நிரலாக்கச் (Visual Programming) சூழல்களில் இவ்வழிமுறை பயன்படுத்தப்பட்டது. கேஸ் என்பது கணினி உதவியிலான மென்பொருள் படைப்பாக்கம் (Computer Aided Software Engineering) என்பதன் சுருக்கம்.

radio : வானொலி

radio clock , வானலைக் கடிகாரம் : நிகழ்நேர சமிக்கைகளுடன் கூடிய, வானில் பரப்பப்படும் அலைகளைப் பெறக்கூடிய ஒரு சாதனம். இவ் வகைக் கடிகாரங்கள் பிணையத் தகவல் தொடர்பில் பயன்படுத்தப் படுகின்றன. பிணைய நேர நெறி (pop (Network Time Protocol)யின் அடிப்படையில், புரவன் கணினியின்,(Host) வன்பொருள் கடிகார நேரத்தை, உலகப் பொதுநேர ஆயக்கூறு வடிவமைப்புடன் ஒத்திசையும் படி செய்ய இவை பயன்படுகின்றன.

radio frequency : வானொலி அலைவரிசை : சுருக்கமாக ஆர்எஃப் எனப் படுகிறது. மின்காந்த அலைக்கற்றையில் 3 கிலோஹெர்ட்ஸ் - 300 கிகாஹெர்ட்ஸுக்கு இடைப்பட்ட அலைவரிசை. இது 30 மி.மீ - 0.3 மி.மீ அலைநீளத்தோடு உறவுடைய அலைவரிசை

radio station guide : வானொலி நிலைய வழிகாட்டி.

RADIUS : ரேடியஸ் : தொலைபேசிப் பயனாளர் தொலைதூர சான்றுறுதி சேவை நெறிமுறை எனப் பொருள்படும் Remote Authentication Dial-in User Service Protocol என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு பயனாளர் ஒரு பிணைய வழங்கனில் இணைத்துக்கொள்ள முயலும் போது, அவர் அனுமதி பெற்ற பயனாளர் தானா என்கிற சான்றுறுதியும், அணுகல் அனுமதியையும் வழங்குவதற்கெனத் தனியாக ஒரு சான்றுறுதி வழங்கல் (Authentication Server) இருக்கும். இணையத்திற்கென முன் மொழியப்பட்ட நெறி முறை இது.

radix-minus-1 complement : அடியெண்-கழித்தல்-1 நிரப்பெண்; அடியெண்ணுக்கு ஒன்று குறைந்த நிரப்பெண் : குறிப்பிட்ட இலக்கங்கள், வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் இடம்பெறும் எண் முறையில், இயலக்கூடிய அதிகப்பட்ச எண்மதிப்பிலிருந்து, ஓர் எண்ணைக் கழித்தால் வரும் விடையே அந்த எண்ணின் அடியெண்ணுக்கு ஒன்று குறைந்த நிரப்பெண் எனப்படுகிறது. 0 முதல் 9 வரை பத்து இலக்கமுள்ள பதின்ம எண் முறையில் ஐந்து இலக்க எண்களை எடுத்துக் கொள்வோம். இதில் அதிகப்பட்ச மதிப்புள்ள எண் 99999. 01234 என்ற எண்ணின் அடியெண்ணுக்கு ஒன்று குறைந்த நிரப்பெண் என்பது 9999901234-98765 ஆகும். ஆக, இந்த எண் முறையில் எந்தவோர் எண்ணின் குறைஎண் (Negative) அடியெண்ணுக்கு ஒன்றுகுறைந்த நிரப்பெண்ணோடு ஒன்றைக் கூட்டிக் கொள்ள வேண்டும் (ஏனெனில் - a+a=0). இரும எண்முறையில் இரண்டு இலக்கங்களே உள்ளன. இங்கு அடியெண் 2. அடியெண் ணுக்கு ஒன்று குறைந்த நிரப்பெண் என்பது 1-ன் நிரப்பெண் (1's complement)ஆகும்.மின்சுற்று அமைப்பில் தலைகீழாக்கி (Inverter) மூலம் ஓர் இரும எண்ணின் ஒன்றின் நிரப்பெண்ணை எளிதாகப் பெறலாம்.

1 0 1 0 ->ஓர் இரும எண்

↓ ↓ ↓ ↓ -> தலைகீழாக்கிகள்

0 1 0 1 -> ஒன்றின் நிரப்பெண்

radix notation : அடியெண் குறிமானம்; அடிப்படை எண் குறிமானம்.

radix sorting algorithm : அடியெண் வரிசைமுறையாக்கப் படிமுறை : ஒரு உறுப்பினைக் கூறுகளாக்கி அடுத்தடுத்துள்ள அதன் பகுதிகளை அடிப் படையாகக் கொண்டு குழுவாகப் பிரித்து வரிசைமுறையாக்கும் தருக்கப் படிமுறை. (எ-டு) 0.999 எண் வரம்புக்குள் உள்ள எண்களை வரிசைப்படுத்தும் முறையைப் பார்ப்போம். முதலில் எண்களின் பட்டியல், நூறு மதிப்பிடத்தில் உள்ள இலக்கத்தின் அடிப்படையில் 10 குழுவாகப் பிரிக்கப்படும். பிறகு ஒவ்வொரு குழுவும் பத்து மதிப்பிடத்தில் உள்ள இலக்கத்தின் அடிப்படையில் பத்துப் பட்டியல்களாக வரிசைமுறைப்படுத்தப்படும். இறுதியில் ஒவ்வொரு பட்டியலும் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வரிசை முறைப்படுத்தப்படும். இந்தத் தருக்கப்படி முறை இரும மதிப்பு அடிப்படையில் உறுப்புகளை வரிசைமுறைப்படுத்த மிகவும் திறன் வாய்ந்ததாகும். ஒவ்வொரு குழுவும் அதிகப்பட்சம் இரண்டு குழுக்களையே கொண்டிருக்கும். ஒப்பீடும் இரண்டு இலக்கத்தோடுதான்.

rag : பிசிறு; பிசிறு ஓரம்; ஓரப்பிசிறு: அச்சிடப்பட்ட ஒரு பக்கத்தில் உரைப்பகுதியின் வரிகள் இடப்புற அல்லது வலப்புற ஓரத்தில் ஒரே சீராக இல்லாமல் முன்பின்னாக இருத்தல். இக்குறைபாடில்லாமல் தவிர்க்க ஆவணம் உருவாக்கப்படும் போதே ஓரச்சீர்மை (Justification) செய்யப்பட வேண்டும். ஒருபுறமோ அல்லது இருபுறமோ இத்தகு சீர்மை செய்யப்படலாம்.

ragged right : வலப்புற பிசிறு: அச்சடிக்கப்பட்ட உரைப்பகுதியில் வரிகள் வலப்புறத்தில் நேர்சீராக முடிவுறாமல் முன் பின்னாக முடி வுறும் நிலை. கடிதங்கள் மற்றும் பிற சொல்செயலி ஆவணங்கள் இடப் புறம் ஓரச் சீர்மையுடன் இருக்கும். வலப்புறம் பிசிறுடன் காணப்படும்.

RAID : ரெய்டு : தனித்த வட்டுகளின் மிகைக் கோவை என்று பொருள் படும் Redundant Array of Independent Disks என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். தகவல் சேமிப்பு வழிமுறைகளுள் ஒன்று. தகவலோடு சேர்த்து, பிழை திருத்தத்துக்கான தகவல்களையும் (சமன் பிட், ஹேமிங் குறிமுறை போன்றது) இணைத்து இரண்டு அல்லது மேற்பட்ட நிலைவட்டுகளில் பகிர்ந்து சேமிப்பதன் மூலம் செயல்திறனும், நம்பகத்தன்மையும் கூடுகிறது. கோவை மேலாண்மை மென் பொருள், நிலைவட்டின் கோவையை கவனித்துக் கொள்கிறது. வட்டுக் கட்டுப்படுத்தி, பிழை திருத்தத்தைக் கவனித்துக் கொள்கிறது. ரெய்டு, பெரும்பாலும் பிணைய வழங்கனில் பயன்படுத்தப்படுகிறது. அணுகல் வேகம், நம்பகத்தன்மை, செலவு இவற்றின் அடிப்படையில், ரெய்டு பல தரங்களில் செயல்படுத்தப் படுகிறது.

RAM cache : ரேம் இடைமாற்றகம் : ரேம் (RAM) நினைவகத்திலிருந்து தகவலை எடுக்கவும் பதியவும் கணினியால் பயன்படுத்தப்படும் இடைமாற்று நினைவகம் (cache memory). கணினியால் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்ற தகவல் கூறுகள், இடைமாற்று நினைவகத் தில் இருத்தி வைக்கப்படுகின்றன. வட்டுப்போன்ற துணைநிலைச் சேமிப்பகத்தில் தகவலை அணுகுவதைவிட மிகவேகமாகஅணுகமுடியும்.

RAM card , ரேம் அட்டை : ரேம் நினைவகச் சிப்புகளும் நினைவக முகவரிகளை குறிவிலக்கம் (decode) செய்வதற்கான இடைமுகத் தருக்கப் பகுதியும் பொருத்தப்பட்ட ஒரு கூடுதல் வசதி மின்சுற்றுப் பலகை.

RAM compression : ரேம் இறுக்கம்: விண்டோஸ் 3.x இயக்க முறைமையில் பொது நினைவகம் போதாமல் போகின்ற சிக்கலுக்கான தீர்வாக பல்வேறு மென்பொருள் விற்பனையாளர்கள் மேற்கொண்ட ஒரு தொழில்நுட்பம். ரேம் நினைவகத்தின் வழக்கமான உள்ளடக்கத்தை இறுக்கிச் சுருக்குவதன் மூலம், மெய் நிகர் நினைவகத்தில் (Virtual Memoryபெரும்பாலும் நிலைவட்டு) எழுதுதல்/படித்தல் தேவை குறைகிறது. எனவே கணினியின் வேகம் அதிகரிக்கும். (ஏனெனில், ரேம் நினைவகத்தைவிட வட்டில் உள்ள மெய்நிகர் நினைவகத்தைக் கையாள்வது மெதுவாக நடைபெறும் செயலாகும்). ரேம் சிப்புகளின் விலை குறைந்ததாலும், நினைவகத்தை மிகவும் திறமையாகக் கையாளும் விண்டோஸ் 95/என்டி வருகையாலும் ரேம் இறுக்கம் என்னும் நுட்பத்திற்குத் தேவையில்லாமல் போய்விட்டது. ஒருசில பழைய கணினிகளில் பயன்படுத்தப்பட வாய்ப்புண்டு.

RAMDAC : ரேம்டாக் குறிப்பின்றி அணுகு நினைவக இலக்கமுறையிலிருந்து தொடர்முறைக்கு மாற்றி - என்ற பொருள்தரும் Random Access Memory Digital-to-Analog Convertor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விஜிஏ மற்றும் சில எஸ்.விஜிஏ ஒளிக்காட்சி தகவி அட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிப்பு. ஒரு படப்புள்ளியின் இலக்கமுறைத் தகவலை திரையகம் திரையிடத்தகுந்த முறையில் தொடர் முறைத் (Analog) தகவலாய் மாற்றித் தரும், பொதுவாக ரேம்டாக் சிப்பு ஒளிக்காட்சிப் படங்களின் கூர்மையை மேம்படுத்தும்.

random access file : குறிப்பிலா அணுகுகோப்பு: நேரடி அணுகு கோப்பு. random access storage : குறிப்பிலா அணுகு சேமிப்பகம்; நேரடி அணுகு தேக்ககம்.

random noise : ஒழுங்கிலா இரைச்சல்; குறிப்பிலா இரைச்சல் : வீச்சுக்கும் நேரத்துக்கும் (Amplitude and Time) தொடர்பில்லா சமிக்கை. ஒழுங்கு வரிசையில்லாப் பல அலை வரிசைகளின் கலப்பு. குறிப்பிட்ட தோரணி கொண்டதாகவோ, முன்னறியக் கூடியதாகவோ இருக்காது.

random number generation : குறிப்பிலா எண் உருவாக்கம் : முன்தீர்மானிக்க முடியாத எண் வரிசையாக உருவாக்குதல். ஒருநேரத்தில் பட்டியலில் எந்த இடநிலையில் எந்த எண் வரும் என்பதை முன்கூட்டியே அறிய முடியாது. உண்மையில் பார்த்தால் குறிப்பிலா எண் உருவாக்கம் என்பது நடைமுறை சாத்தியமற்றது. கணினியில் பயன்படுத்தப்படும் செயலாக்க முறையை உண்மையில் போலியான குறிப்பிலா எண் உரு வாக்கம் என்றுதான் கூற வேண்டும்.

rapid application development (RAD) tools : அதிவிரைவுப் பயன்பாடு உருவாக்க கருவிகள்.

rapid execution engine: அதிவிரைவு இயக்கப் பொறி.

range of applicability : பயன்பாட்டுத் தன்மை வீச்சு.

RARP : ரார்ப்; ஆர்ஆர்ப் : முன்பின்னான முகவரி கணக்கிடு நெறிமுறை என்று பொருள்படும் Rèverse Address Resolution Protocol group @girl—fficit தலைப்பெழுத்துக் குறும்பெயர். டீசிபி/ஐபி நெறிமுறையில் ஒரு குறும்பரப்புப் பிணையம் இணையத்தில் இணைக்கப்படும்போது, ஒரு கணுவின் ஐபி முகவரியை, வன் பொருள் முகவரிகளைக் கொண்டே கணக்கிட்டுவிடும். ஆர்ஆர்ப், ஐபீ முகவரியை நேரடியாகக் கண்டறியவே பயன்படுகிறது.

raste : ராஸ்டர்; கிடைவரி : ஓர் ஒளிக் காட்சித் தோற்றத்தில் செவ்வகத் தோரணி கொண்ட வரிகள். கிடைமட்ட வரிகளை வருடிப் பெறும் வரை கலை தகவல் என்பதால் ராஸ்டர் வருடல் என்று பெயர் உண்டாயிற்று.

raster image : ராஸ்டர் படிமம்: கிடைவரிப் படிமம் : ஒளி-இருள் அல்லது பல்வேறுபட்ட வண்ணப் படப் புள்ளிகள் செவ்வகக் கோவையில் (Rectangular Array)அமைத்து உருவாக்கப்பட்ட ஒரு காட்சிப் படிமம்.

raster image processor : ராஸ்டர் படிமச் செயலி : நெறிய வரைகலை (Vector Graphics) அல்லது உரைப்பகுதியை ராஸ்டர் வரைகலையாக மாற்றித்தரும், வன்பொருள், மென்பொருள் அடங்கிய ஒரு சாதனம். இவை, பக்க அச்சுப்பொறி, ஒளிப் படதட்டச்சு, மின் நிலைம வரைவுப் பொறிகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆவணத்தின் ஒரு பக்கத்தி லுள்ள ஒவ்வொரு படப்புள்ளி (pixel) யின், ஒளிர்மை, நிறம் ஆகியவற்றின் மதிப்புகளைக் கணக்கிட்டு, நெறிய வரைகலைப் படிமத்தை உள்ளவாறே மீட்டுருவாக்கும் திறன் இச் சாதனத்துக்கு உண்டு.

rasterization : ராஸ்டர் மயமாக்கம்; ராஸ்டர் முறையாக்கம் நெறிய வரைகலையை (Vector Graphics - புள்ளிகள், கோடுகள் அவற்றின் திசை போன்ற கணிதக் கூறுகளால் விவரிக்கப்படும் படிமங்கள்) ராஸ்டர் முறைக்கு (பிட் தொகுதிகள் மூலம் சேமிக்கப்பட்டுக் கையாளப் படக்கூடிய, படப்புள்ளித் தோரணிகளால் உருவாக்கப்படும் அதே மாதிரியான படிமங்கள்) மாற்றியமைத்தல்,

rate, clock : கடிகார வீதம்.

rate, keying-error: விசைப்பிழை வீதம்,

rate, read : படிப்பு வீதம்.

rate, utilization : பயன்படுத்து வீதம்,

rational number : பின்ன எண்.

raw mode : கச்சாப் பாங்கு: செப்ப மற்ற பாங்கு : எழுத்து அடிப்படையிலான ஒரு சாதனத்தை யூனிக்ஸ் மற்றும் எம்எஸ்-டாஸ் இயக்க முறைமைகள் நோக்கும் முறை. அச் சாதனத்தின் அடையாளக் குறி செப்ப மற்ற பாங்கு எனத் தெரியவரின், இயக்க முறைமை உள்ளீட்டு எழுத்துக் குறிகளை வடிகட்டாது. நகர்த்தி திரும்பத் (carriage return), கோப்பிறுதிக் குறியீடுகள், வரியூட்டம் (line feed) மற்றும் தத்தல் குறியீடுகள் (tabs) போன்ற குறியீடுகளுக்கு இயக்க முறைமை, சிறப்புவகைக் கவனிப்பு எதுவும் தருவதில்லை.

ray tracing : கதிர் படியெடுப்பு : உயர் தரக் கணினி வரைகலையை உருவாக்கும் நுட்பம்மிக்க சிக்கலான வழிமுறை. ஒரு வரையறுக்கப்பட்ட ஒளிமூலத்திலிருந்து ஒரு படிமத்தின் மீது ஒற்றைக் கதிரைச் செலுத்தி அது பிரதிபலிக்கும்போது எவ்வாறு மாற்றமடைகிறது என்பதைக் கருத்தில் கொண்டு படிமத்தின் ஒவ்வொரு படப்புள்ளியின் (pixel) நிறம், அடர்வு ஆகியவை கணக்கிடப்படுகின்றன. இதன் செயலாக்கத்திறன் அடிப்படையில் இம்முறை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு கதிரின் ஒளிவிலகல், ஒளிச்சிதறல், ஒளி உறிஞ்சல் ஆகியவற்றையும் படக் கூறுகளின் ஒளிர்மை, மறைப் பின்மை மற்றும் பிரதிபலிக்கும் தன்மை இவற்றையும், பார்வையாளர், ஒளிமூலம் இவற்றின் இட நிலை ஆகியவற்றையும் கணினி கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

ray tube, cathode :எதிர்மின் கதிர்க்குழாய்.

ray tube store, cathode : எதிர்மின் கதிர்க்குழாய் சேமிப்பு.

RCA connector: ஆர்சிஏ இணைப்பி: கலப்பொலிக் (stereo) கருவி அல்லது கலப்பு ஒளிக்காட்சித் திரையகம், கணினியின் ஒளிக்காட்சித் தகவி இவை போன்ற கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சிக் கருவிகளை இணைக்கப் பயன்படுத்தப்படும் இணைப்பி.

README :என்னைப்படி: ரீடுமீ: ஒரு மென்பொருளின் ஆவணமாக்கத்தில் சொல்லப்படாத, பயனாளருக்குத் தேவையான அல்லது பயனாளர் பார்த்து விவரம் பெறக்கூடிய தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பு. பெரும்பாலும் ரீடுt (Readme) கோப்பில் தகவல்கள் நேரடி உரை Guto coau Gu (plain text format) வட்டில் எழுதப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட மென்பொருளில் மட்டுமே படிக்கும்படியானதாக இருக்காது. எந்த உரைத் தொகுப்பியிலும் படிக்கும்படியாகவே இருக்கும்.

read notification: படித்த அறிவிக்கை: மின்னஞ்சலில் உள்ள ஒரு வசதி. அஞ்சலைப் பெற்றவர் அஞ்சலைப் படித்துவிட்டார் என்பதை அஞ்சலை அனுப்பியவருக்கு தெரியப்படுத்தப்படும்.

read-only : படிக்க மட்டும் : படிக்க மட்டுமேயான தகவல். திருத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது. படிக்க மட்டும் எனக் குறிக்கப்பட்ட கோப்பு அல்லது ஆவணத்தை திரையில் காட்டச் செய்து படிக்க முடியும். நகலெடுக்கலாம். ஆனால் எந்தவகை மாற்றமும் செய்ய முடியாது. படிக்க மட்டும் எனக் குறிக்கப்பட்ட நினைவகத்தில் (ROM) முக்கிய நிரல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அவற்றை இயக்கலாம்; ஆனால் மாற்றியமைக்க முடியாது. படிக்க மட்டும் எனக் குறிக்கப்பட்ட சேமிப்பு ஊடகங்களில் (சிடி ரோம் போன்றவை) பதியப்பட்டுள்ள தகவல்களை பயன்படுத்திக் கொள்ளமுடியும். ஆனால் புதிய தகவல்களைப் பதிய முடியாது.

read-only attribute : படிக்க மட்டும் என்ற பண்புக்கூறு: டாஸ், விண்டோஸ், ஓஎஸ்/2 கோப்புகளின் ஒரு பண்புக்கூறாகக் குறிக்கப்படுவது. பெரும்பாலும் ஒரு கட்டளை மூலம் +R எனக் குறிப்பிட்டு அதனைப் படிக்க மட்டும் எனக் குறித்து விடலாம். அதன்பின் அக் கோப்பினை எவரும் மாற்றியமைக்க முடியாது. (டாஸில் அத்தகு கோப்புகளை அழிக்க முடியாது; விண்டோஸில் எச்சரிக்கை தந்து அழிக்க அனுமதிக்கும்). மீண்டும் ஒரு கட்டளை மூலம் -R எனக் கொடுத்துவிட்டால் (விண்டோஸில் சரி அடையாயமிடல்) அக்கோப்பினை மாற்றியமைக்கலாம்; அழிக்கலாம்.

read rate : படிப்பு விகிதம்.

read, scatter : சிதறல் படிப்பு.

read time : படிப்பு நேரம்,

read/write : படிக்க/எழுத, படி/எழுது: சுருக்கமாக ப/எ (R/W) எனக் குறிப்பிடலாம். குறிப்பிட்ட நினைவகப் பகுதியை அல்லது கோப்பினை அல்லது வட்டினை படிக்கவும் முடியும். மாற்றியமைக்கவும் முடியும்; புதிதாக எழுதவும் முடியும்.

read/write channel : படி/எழுது இணைப்பு அல்லது தடம்.

read and write classes : படி/எழுது இனக்குழுக்கள்.

read/write memory : படி/எழுது நினைவகம் : இவ்வகை நினைவகச்சிப்புகளில் பதியப்பட்டுள்ள தகவலைப் படித்தறியலாம். திருத்தி எழுதலாம். குறைகடத்தி ராம் சிப்புகள், உள்ளக நினைவகங்கள் (core memory) இவ்வகை படி/எழுது வகையைச் சார்ந்தவை.

reader, card : அட்டைப் படிப்பி.

reader, character : எழுத்துப் படிப்பி.

reader, film : படம் படிப்பி.

reader, magnetic ink character: காந்த மை எழுத்துப் படிப்பி.

reader, paper tape : தாள் நாடாப் படிப்பி

reader, tape : நாடாப் படிப்பி.

reading station : படிப்பு நிலையம்,

readymade : உடன்பயன். real address : மெய் முகவரி : நினை வகத்தின் ஒரு குறிப்பிட்ட இருப் பிடத்தை குறிக்கும் முற்று (Absolute) முகவரி, பொறி முகவரி (Machine Address) என்றும் கூறலாம்.

Real Audio : ரியல் ஆடியோ : இணையத்தில் பெருமளவு பயன்படுத்தப் படும் மென்பொருள். இறுக்கிச் சுருக்கி வலை வழங்கன்களில் (Web Server) சேமித்து வைக்கப்பட்டுள்ள இசைப்பாடல்கோப்புகளை இணைய உலாவி மூலம் கொணர்ந்து, பயனாளரின் கணினியில் அதனை விரித்துப் பாடவைக்கும். இணையத் தில் நிகழ்நேர (Live) பாடல்களையும் கேட்கலாம். குறிப்பு: இப்போது கேட்பொலி, ஒளிக்காட்சி இரண்டுக் கும் சேர்த்து ரியல்பிளேயர் என்ற பெயரில் இணையத்தில் கிடைக் கிறது. இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

real/float : புள்ளி எண்; மெய்யெண்.

realloca : ரீ-அலாக்; மறு ஒதுக்கீடு : சி-மொழியிலுள்ள ஓர் உள்ளிணைக் கப்பட்ட செயல்கூறு. எம்அலாக் (malloc) என்னும் செயல்கூறு மூலம் ஏற்கெனவே குவியல் நினைவகத்தில் (heap memory}) ஒரு குறிப்பிட்ட சுட்டுக்கு (pointer) ஒதுக்கப்பட்ட நினைவகப் பகுதியை அதிகமாக்கு வதற்கான செயல்கூறு.

real mode : மெய்ப் பாங்கு : இன் டெல் 80x86 குடும்ப நுண்செயலி களில் செயல்படுத்தப்படும் இயக்கப் பாங்கு. மெய்ப்பாங்கு முறையில் செயலியானது ஒரு நேரத்தில் ஒரு நிரலை மட்டுமே இயக்க முடியும். 1 எம்பி நினைவகத்துக்கு மேல் அணுக முடியாது. ஆனால் முதன்மை நினைவகத்தையும், உள்ளீட்டு/ வெளியீட்டு சாதனங்களையும் தாராளமாக அணுக முடியும். 8086 செயலியில் மெய்ப்பாங்கு மட்டுமே உண்டு. எம் எஸ் டாஸ் இயக்க முறைமை மெய்ப்பாங்கில் மட்டுமே செயல்படும். இதற்கு மாறாக 80286 மற்றும் பிறகு வந்த நுண்செயலி களில் பாதுகாக்கப்பட்ட பாங்கு (Protected Mode) அறிமுகப்படுத்தப் பட்டது. இதில் ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யமுடியும். விண் டோஸ் இயக்க முறைமை போன்ற பல்பணி இயக்க முறைமைகள் இதில் செயல்படும். இதற்குத் தேவை யான நினைவக மேலாண்மை மற்றும் நினைவகப் பாதுகாப்பினை பாதுகாக்கப்பட்ட பாங்கு வழங்குகிறது.

real-mode mapper ; மெய்ப்பாங்கு உறவாக்கி : விண்டோஸ் 3.x இயக்கச் சூழலில் 32 துண்மி (பிட்) கோப்பு முறைமையை அணுகுவதற்கான வசதி. டாஸ் சாதன இயக்கிக்கு 32-பிட் வட்டு அணுகு இடை முகத்தை இந்த மெய்ப்பாங்கு உற வாக்கி வழங்குகிறது.

Real Soon Now : மெய்-விரைவில்-இப்போது; கூடிய விரைவில்; வெகு விரைவில்: உண்மையில் வெகுவிரைவில் நடைபெறாத ஒன் றைக் குறிப்பது. ஒரு வணிக முறை நிரல் ஒரு குறிப்பிட்ட வசதியை அடுத்தப் பதிப்பில் தரும் என அறிவித்துவிட்டுப் பல பதிப்பு களுக்குப் பின்னும் அவ்வசதியை வழங்காமலிருத்தல்.

real-time animation : நிகழ்நேர அசைவூட்டம்.

real-time output : நிகழ்நேர வெளியீடு.

real time projects : நிகழ்நேர செயல் திட்டம்; நிகழ்நேர திட்டப்பணி. reassembling : மறு செப்பனீடு.

recipient : பெறுபவர்; பெறுநர்.

recharge : மறு மின்னேற்றம்.

rec.newsgroups : ரெக்.நியூஸ் குரூப்ஸ் : யூஸ்நெட் செய்திக் குழுக் களில் rec. படிநிலையில் ஓர் அங்கம். rec. என்னும் முன்னொட்டால் குறிக்கப்படும். இத்தகைய செய்திக் குழுக்களில் மனமகிழ் நடவடிக்கைகள், பொழுதுபோக்கு மற்றும் கலை தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெறும்.

recoat : மறுபூச்சு, recognition, voice : குரல் அறிதல்.

reconnection : மறு இணைப்பு; மீள் இணைப்பு.

record, addition : சேர்ப்பு ஏடு.

record, data : தரவு ஏடு

record, fixed length : நிலை நீள ஏடு.

record format : ஏட்டு வடிவம்.

record head : பதிவு முனை : நாடாப் பதிவகமுள்ள கணினியில், நாடாவில் தகவலை எழுதும் சாதனம். சில நாடாக் கணினிகளில் படிக்கும் முனையிலேயே பதிவு முனையும் இணைக்கப்பட்டிருக்கும்.

record locking : ஏடு பூட்டல் : பெரும்பாலும் பகிர்ந்தமை தரவுத் தளம் அல்லது பல்பயனாளர் தகவல் தளங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஓர் அட்டவணையிலுள்ள ஓர் ஏட்டில் எழுதுவதைத் தடுப்பதற்கான ஓர் ஏற்பாடு. முதலில் அந்த ஏட்டினை அணுகும் பயனாளர் அதனைப் பூட்டிவிட்டால் வேறு பயனாளர்கள் அணுக முடியாது.

record management : ஏட்டு மேலாண்மை.

record manager : பதிவு மேலாளர்; பதிவு முகமையாளர்.

record new macro : புதிய குறுமம் பதிவுசெய்.

record structure : ஏட்டுக் கட்டமைப்பு : ஓர் ஏட்டில் இடம் பெறக் கூடிய புலங்களின் பட்டியல், ஒவ்வொரு புலமும் ஏற்கக்கூடிய மதிப்புகளின் வரையறைகள் உட்பட.

recording button : பதிவுக் குமிழ்; பதிவுப் பொத்தான்.

recording software suite : ஒலிப்பதிவு மென்பொருள் தொகுப்பு.

records : ஏடுகள்.

recovery : மீட்சி; மீட்பு : இழக்கப் பட்ட தகவலை மீட்டெடுத்தல். கணினியில் பழுதேற்பட்டதால் பிழையாகிப்போன, முரண்பட்டுப் போன தகவலை சரியாக்குதல். வட்டு அல்லது நாடாவில் முன்பே எடுத்து வைக்கப்பட்ட காப்பு நகலிலிருந்து, இழக்கப்பட்ட தகவல் மீட்கப்படுவதையும் குறிக்கும்.

Recreational Software Advisory Council : பொழுதுபோக்கு மென் பொருள் ஆலோசனைக் கழகம் : 1994 ஆம் ஆண்டின் இறுதியில், மென் பொருள் வெளியீட்டாளர் சங்கம் (Software Publishers Association) தலைமையில் ஆறு வணிக அமைப்புகள் இணைந்து உருவாக்கிய ஒரு சுயேச்சையான ஆதாய நோக்கில்லா அமைப்பு.

recto : ரெக்டூ; வலப்பக்கம்; ஒற்றைப் படையெண் பக்கம் : ஒன்றை யொன்று பார்த்துக்கொண்டிருக்கும் இரு பக்கங்களில் வலது பக்கத்தைக் குறிக்கும். பெரும்பாலும் பக்க எண் ஒற்றைப் படையெண் கொண்டதாக இருக்கும்.

recycle : மறுசுழற்சி; மீள்சுழற்சி முறை.

Recycle Bin : மீட்சித் தொட்டி ரீசைக்கிள் பின் : விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ள ஒரு கோப்புறை. விண்டோஸின் முகப் புத்திரையில் (Desktop) ஒரு குப்பைத் தொட்டி போன்ற சின்னத் துடன் இது காட்சியளிக்கும். ஒரு கோப்பினை நீக்க வேண்டுமெனில், அதனை சுட்டி மூலம் இழுத்துக் கொண்டு வந்து இத்தொட்டியில் போட்டு விடலாம். இங்குள்ள கோப்புகள் உண்மையில் வட்டிலிருந்து நீக்கப் படுவதில்லை. நீக்கப்பட்ட கோப்பு மீண்டும் வேண்டுமெனில் இக் கோப்புறையிலிருந்து மீட்டுக் கொள்ளலாம். மீட்புத் தொட்டி யிலுள்ள கோப்புகளை ஒட்டு மொத்தமாக நீக்கவும், ஒரு குறிப் பிட்ட கோப்பினை நிரந்தரமாக நீக்கி விடவும் வழிமுறைகள் உள்ளன.

Red Book : சிவப்புப் புத்தகம்; செம்புத்தகம்; செந்நூல் : அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு முகமை உருவாக்கிய தர வரையறை ஆவணங் கள் இவ்வாறு அழைக்கப்படுகின் றன. நம்பத்தகுந்த கணினி அமைப்பு களின் மதிப்பாய்வு அடிப்படையின் நம்பத்தகுந்த பிணையப் பொருள் விளக்கம் என்பது இப்புத்தகத்தின் தலைப்பு. (Trusted Network Interpretation of the Trusted Computer System Evaluation Creteria). நம்ப த் தகுந்த பிணைய பொருள்விளக்கம் என்கிற ஆவணமும் உண்டு. கணினி அமைப்புகளை A1 முதல் D வரை தரப்படுத்துவதற்கான வரையறுப்பு கள் இப்புத்தகத்தில் உள்ளன. A1 என்பது மிகவும் பாதுகாப்பானது. D என்பது பாதுகாப்பற்றது. மிகவும் உயிர்நாடியான தகவலைப் பாதுகாப் பதில் ஒரு கணினிப் பிணையத்துக் கிருக்கும் திறனை இத் தர வரிசை குறிக்கிறது.

redilining : செங்கோடிடல்; சிவப்புக் கோடிடல்; மாற்றம் பதிகை : சொல் செயலி மென்பொருளில் இருக்கும் ஒரு வசதி. ஒர் ஆவணத்தை ஒன்றுக்கு மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில், ஒருவர் செய்யும் மாற்றங்கள் புதிய சேர்ப்பு கள் நீக்கல்கள் ஆகியவை அடையாள மிட்டுக் குறித்து வைக்கப்படுகின் றன. ஓர் ஆவணம் உருவாக்கப் படுகையில் நிகழும் அனைத்து மாற்றங்களையும் குறித்து வைப்பதே இதன் நோக்கம்.

redo : தவிர்த்தது செய்; திரும்பச் செய்; விட்டதைச் செய். செய்தது தவிர்த்திருப்பின் (undo), தவிர்த்ததை மீண்டும் செய்வதற்கான கட்டளை.

reduce : குறை; அளவு குறை : வரை கலைப் பயனாளர் இடைமுகத்தில், பெரும்பாலாகப் பயன்படுத்தப் படும் சாளரத்தின் அளவினைக் குறைத்தல். தலைப்புப் பட்டையில் அதற்கென உரிய பொத்தானை அழுத்த வேண்டும் அல்லது சுட்டி யின் குறியை சாளரத்தின் எல்லை யில் வைத்து, சுட்டிப் பொத்தானை அழுத்தி விரலை எடுக்காமல் சாளர அகல உயரங்களை மாற்றியமைக்கலாம்.

reduced font : அளவு குறைந்த எழுத்து: சிறிய எழுத்து. redundancy code : மிகைமைக் குறிமுறை.

reel : சுருள்.

reengineer : மறுசிந்தனை ; மறு வரையறை : வழக்கமாகப் பின்பற்றி வந்த செயல்முறைகளில், செயல் பாடுகளில் ஒரு மாற்றம் கொண்டு வருவதற்கான மறுசிந்தனை. கணினி அமைப்புகளின் சூழலில் இதன் பொருள், இதுவரை ஆற்றிவந்த பணிகளின் செயல்முறையை மாற்றி யமைத்தல் - புதிய தொழில்நுட்பத் கின் பலன்களை முற்றாக நுகர வேண்டும் என்பதே நோக்கம்.

reengineering : மறுசிந்தனை ; மறு வரையறுப்பு; மீட்டுருவாக்கம் : 1. ஒரு மென்பொருளைப் பொறுத்தவரை அதன் பலவீனங்களைக் களைந்து கூடுதலான பயன்களைச் சேர்த்து அதனை வலுவுள்ளதாக்குதல். 2. நிறுவன மேலாண்மையைப் பொறுத்த வரை உலகப் பொருளாதாரச் சூழலில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைச் சமாளிப்பதற்கும் விரிவடைந்து கொண்டே செல்லும் தொழிலாளர் கூட்டத்தைத் திறமை யாக மேலாண்மை செய்யவும் தகவல் தொழில்நுட்பக் கோட்பாடு களைச் செயல் முறைப்படுத்துதல்.

reference' : குறிப்பி' : சி++ நிரலாக்க மொழியில் ஒரு தகவல் இனம். குறிப்பியை அறிவிக்கும்போதே அதில் ஒரு மாறியின் மூலம் தொடக்கமதிப்பிருத்த வேண்டியது கட்டாயம். அந்த மாறியின் மாற்றுப் பெயராக அக் குறிப்பி செயல்படும். அதாவது மாறிக்குப் பதிலாகக் குறிப்பியையே பயன்படுத்திக் கொள்ளலாம். (எ-டு. int n = 25; int& r = n) n என்பது int என்னும் தரவினத்தில் ஒரு மாறி. r என்பது n-ஐக் குறிக்க உருவாக்கப்பட்டுள்ள குறிப்பி, cout <<r; என்று கட்டளை அமைத்தால் 25 என (n-ன் மதிப்பு) காட்டும். n-ன் மாற்றுப் பெயர்போல | செயல்படும். 2. # ஜாவா, சி மொழிகளில் ஓர் இனக்குழுவில் (Class) உருவாக்கப்படும் இனப் பொருளை (Object) குறிப்பதற்குப் பயன்படும் மாறி (Variable), குறிப்பி, அடுக்கை நினைவகத்திலும், இனப் பொருள், குவியல் (Heap) நினைவகத் திலும் உருவாக்கப்படுகிறது. சி - மொழியிலுள்ள சுட்டுக்கு (Pointer) இணையற்றது.

reference2 : குறிப்பு : ஒரு கோவையில் (Array) உள்ள உறுப்பு அல்லது ஓர் ஏட்டிலுள்ள ஒரு புலம் போன்ற ஏதேனும் ஒரு மாறியை அணுகு வதற்குப் பயன்படுவது.

reference address : மேற்கோள் முகவரி; குறிப்பு முகவரி,

reference beam : ஆய்வுக் கற்றை .

reference.COM : ரெஃபரன்ஸ்.காம் : இணையத்திலுள்ள தேடுபொறி. 1,50,000க்கு மேற்பட்ட யூஸ்நெட் செய்திக் குழுக்கள், அஞ்சல் பட்டியல்கள், வலை மன்றங்கள் ஆகியவற்றின் முகவரிகளைச் சேமித்து வைத்துள்ள தளம். முகவரி: www.reference.com.

reference parameter : குறிப்பு அளபுரு: ஒரு துணைநிரல்கூறினை (sub-routine) அல்லது ஒரு செயற்கூறினை (function) அழைக்கும்போது ஒரு மாறியின் வெளிப்படையான மதிப்பினை அளபுருவாக அனுப்பிவைப்பதற்குப் பதிலாக மாறியின் முகவரியை அளபுருவாக அனுப்பிவைத்தல். reference type : குறிப்பு இனம்.

reference variables : பொருந்து மாறிகள்; குறிப்பு மாறிகள்.

reflective liquid-crystal display : பிரதிபலிக்கும் நீர்மப் - படிகக் காட்சி : நீர்மப் படிகக் காட்சியில் ஒரு வகை. படிக்கும் தெளிவை மிகுவிக்க ஓர அல்லது பின்புற ஒளியை பயன்படுத்தாமல், பிரதிபலிக்கும் உள்ளுறை ஒளியைப் பயன்படுத்தும் முறை. ஆனால் இத்தகு காட்சித் திரையை வெளிச்சத்தில் பார்த்தால் தெளிவாக இராது. எனவே அறைக்கு வெளியே திறந்தவெளியில் பயன்படுத்த முடியாது.

reflective routing: பிரதிபலிப்பு திசைவிப்பு : விரிபரப்புப் பிணையங்களில், பிணைய வழங்கன் கணினியின் சுமையைக் குறைக்கும் பொருட்டு தகவல்கள் பகிர்ந்தளிக்கப்படுவ துண்டு. ஒரு பிரதிபலிப்பி நிரல் மூலம் இது நிறைவேற்றப்படுகிறது.

reflector : பிரதிபலிப்பி ; ஒரு பயனா ளரிடமிருந்து சமிக்கை கிடைக்கப் பெற்றவுடன் பல பயனாளர்களுக்கு செய்தியை அனுப்பிவைக்கும் ஒரு நிரல். பொதுவகை பிரதிபலிப்பி களுள் மின்னஞ்சல் பிரதிபலிப்பி ஒன்று. ஒரு மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றவுடன் தன்னிடமுள்ள பட்டிய லிலுள்ள அனைத்து முகவரிகளுக்கும் அந்த அஞ்சலை திருப்பி அனுப்பிவைக்கும்.

refresh : புதுப்பித்தல் : 1. கணினித் திரையிலுள்ள படிமம் மாறாவிட்டாலும், படக்குழலில் பாஸ்பரஸ் கதிரியக்கப்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் திரைக்காட்சி புதுப்பிக்கப்படவேண்டும். 2. இயங்குநிலை நினைவகச் (Dynamic Memory-DRAM) சிப்புகளில் இருத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் இழக்கப் படாமல் இருக்க அடிக்கடி புதுப்பிக்கப்பட வேண்டும். நினைவகப் பலகையிலுள்ள ஒரு மின்சுற்று தானாகவே இந்தப் பணியை கூறினை செய்து முடிக்கும்.

refreshable : புதுப்பிக்கத்தகு : ஒரு நிரல் செயல்படுத்தப்படும்போது, அந்நிரலின் செயலாக்கத்தைப் பாதிக்காமல், அந்நிரல் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தகவலுக்குப் பாதிப்பு ஏற்படாமல், நினைவகத்தில் தங்கியுள்ள அந்நிரலின் கூறு ஒன்றினை வேறொன்றால் பதிலீடு செய்யும் வசதி.

refresh cycle : புதுப்பிப்புச் சுழற்சி : இயங்குநிலை குறிப்பின்றி அணுகு நினைவகச் (DRAM) சில்லுகளில் 1 என்னும் இருமத் தகவல் பதியப் பட்டுள்ள நினைவக இருப்பிடங் களில் சேமிக்கப்பட்டுள்ள மின்னூட்டம் இழக்கப்படாமல் தக்கவைக்க அதனை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். நினைவகக் கட்டுப் படுத்தி மின்சுற்று, இதற்கான மின் துடிப்பைக் குறிப்பிட்ட கால இடை வெளியில் வழங்குகிறது. ஒவ்வொரு மின்துடிப்பும் ஒரு புதுப்பிப்புச் சுழற்சி ஆகும். இத்தகைய புதுப்பித்தல் இல்லையெனில் இயங்கு நிலைக் குறைகடத்தி ரேம்கள் தன்னிடமுள்ள தகவலை இழந்து விடுகின்றன, கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்தும் போதும், மின்சாரம் துண்டிக்கப் படும்போதும் பதியப்பட்ட தகவல் இழக்கப்படுவதைப்போல.

refresenrate : புதுப்பிப்பு வீதம்.

refrigerator : குளிர்பதனப் பெட்டி region till : பரப்பை நிரப்பல் ; கணினி வரைகலையில், திரையில் உரு வாக்கப்பட்ட ஒரு வரையறுத்த பரப்பை (வட்டம், சதுரம், செவ்வகம் போன்றவை) தேர்ந்தெடுத்த நிறம், தோரணி அல்லது பிற பண்புக் கூறுகளால் நிரப்பும் நுட்பம்.

regional communities : வட்டாரச் சமூகக் குழுக்கள்.

regional settings : வட்டார அமைப்புகள்.

register, access control : அணுகுக் கட்டுப்பாட்டுப் பதிவகம்.

register, address : முகவரிப் பதிவகம்.

register, arithmetic : கணக்கீட்டுப்பதிவகம்.

register, check : சரிபார்ப்புப் பதிவகம்.

register, circulating : சுற்றுப் பதிவகம்.

register, console display : பணியகக் காட்சிப் பதிவகம்.

register, current instruction : நடப்பு ஆணைப் பதிவகம்.

register, error : பிழைப் பதிவகம்,

register, index : சுட்டுவரிசைப் பதிவகம்.

register, shift : பெயர்வுப் பதிவகம்.

register, storage : சேமிப்புப் பதிவகம்.

registry : பதிவேடு; பதிவகம் : விண்டோஸ் 95/98/என்டி இயக்க முறைமைகளில் பயன்படுத்தப்படும் மையப் படிநிலை தரவுத் தளம். ஒன்று அல்லது மேற்பட்ட பயனாளர்கள், பயன்பாடுகள், வன்பொருள் சாதனங்களுக்காக கணினியை தகவமைக்கத் தேவையான தகவல்களைச் சேமித்து வைக்க இது பயன் படுத்தப்படுகிறது. கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது, கோப்புறை மற்றும் சின்னங்களின் பண்புகளில், கணினியில் இணைக்கப்பட்ட வன் பொருள்களில், பயனாளர்களின் விருப்பத்தேர்வுகளில், நிறுவப்பட்டுள்ள பயன்பாடுகளின் தகவமைவுகளில் செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவை பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன. விண்டோஸ் 3.x-இல் இருந்த .INI கோப்புக்கும், எம்எஸ் டாஸில் இருந்த autoexec.bat, config.sys கோப்புகளுக்கும் மாற்றாக இது விளங்குகிறது. விண்டோஸ் 95/ 98 மற்றும் விண்டோஸ் என்டி பதிவேடுகள் ஒன்றுபோல இருந்தாலும் வட்டில் பதியப்பட்டுள்ள முறையில் வேறுபடுகின்றன.

registry editor : பதிவேடு திருத்தி : விண்டோஸ் 95/98 இயக்கமுறைமையில் பதிவேட்டில் உள்ள விவரங்களை பயனாளர் விரும்பியவாறு திருத்த மாற்ற உதவும் ஒரு பயன்பாடு. regedit என்றும் கட்டளை மூலம் செயல்படுத்தப்படுகிறது.

reinstall : மறுநிறுவல்.

reject : ஒதுக்கு .

relational algebra : உறவுநிலை இயற்கணிதம் : தகவல் தளங்களில் உள்ள அட்டவணைகளைக் கையாள்வதற்கான விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகளின் தொகுப்பு. கீழ்க்காணும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது: select, project, product, union, intersect, difference, join (or inner join), divide. உறவுநிலைத் தரவுத் தளங்களில், ஏற்கெனவே இருக்கும் அட்ட வணைகளின் அடிப் படையில் புதிய அட்டவணைகளை உருவாக்க உறவுநிலை இயற்கணிதம் பயன்படுத்தப்படுகிறது.

relational calculus : உறவுநிலை நுண்கணிதம் : தரவுத் தள மேலாண் மையில் அட்டவணைகளைக் கையாளப் பயன்படும் செயல்முறை சாரா வழிமுறைகளைக் குறிக்கும். இருவகை உறவுநிலை நுண்கணி தங்கள் உண்டு: 1. கள நுண்கணிதம் 2. ஏடுகளின் நுண்கணிதம். இரு நுண்கணிதங்களும் தமக்குள்ளே ஒரே மாதிரியானவை. உறவுநிலை இயற் கணிதத்துடன் உடன்பாடு கொண்டவை. இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, இருக்கின்ற அட்டவணைகளின் அடிப்படையில் புதிய அட்டவணைகளை உருவாக்க முடியும்.

relational model : உறவுநிலை மாதிரியம் : தகவல்களை அட்டவணைகளில் சேமித்து வைக்கும் ஒரு தரவுத் தள மாதிரியம். அட்டவணையை (table), உறவு (relation) என்று அழைப்பதுண்டு. தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள பெரும் பாலான தரவுத் தள மேலாண்மை அமைப்புகளில் இந்த வகை மாதிரியமே பின்பற்றப்படுகிறது.

relational operation : ஒப்பீட்டுச் செயல்பாடு.

relationships : உறவு முறைகள்.

relative address : ஒப்பீட்டு முகவரி; சார்பு முகவரி .

relative cell reference : ஒப்பிட்டு சிற்றம் மேற்கோள்; சார்புக் கலக் குறிப்பு.

relative path : சார்புப் பாதை : டாஸ், யூனிக்ஸ் இயக்க முறைமைகளில் பயன்படும் சொற்றொடர். தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் கோப்பகத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும் கோப்பகப் பாதை. பயனாளர், ஒரு கோப்பு தொடர்பான கட்டளையைக் கொடுக்கும்போது, முழுப்பாதையும் கொடுக்கவில்லை எனில், நடப்புக் கோப்பகம் சார்புப் பாதையாக எடுத்துக் கொள்ளப்படும். C:\WORK> DEL C:\TC\PRGI TEST.C என்ற கட்டளையில் TEST.C என்னும் கோப்பு இருக்கும் முழுப் பாதையும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், C:\WORK> DEL TEST.C என்று கட்டளை அமைப்பின் TEST.C என்னும் கோப்பு WORK கோப் பகத்தில் உள்ளது எனப் பொருள் படும். C:\WORK> DEL PRG\TEST.C என்று கட்டளை அமைத்தால், WORK-லிலுள்ள PRG என்னும் உள் கோப்பகத்திலுள்ள TEST.C என்று பொருள்படும். C:\WORK> DEL TC\PRG\TEST.C என்ற கட்டளையும் C:\WOR\TC\PRG\TEST.C என்ற கோப்பினையே குறிக்கும்.

relative pointing device : ஒப்புநிலை சுட்டுச் சாதனம் : சுட்டி (Mouse), கோளச்சுட்டி (Track Ball) போன்ற, காட்டியை நகர்த்தும் சாதனத்தைக் குறிக்கிறது. திரையில் தோன்றும் காட்டி (Cursor), இவ்வகைச் சாதனம் திண்டின் (Pad) மீது எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொறுத்து அமைவதில்லை . சாதனத்தின் நகர்வு களைப் பொறுத்தே அமைகிறது. எடுத்துக்காட்டாக, சுட்டியைத் திண்டின்மீது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்தில் தூக்கி வைத்தோமானால் திரையில் காட்டி நகர்வதில்லை . ஆனால், திண்டின் மீது உராயுமாறு சுட்டியைச் சிறிதளவு நகர்த்தினால் போதும். திரையிலுள்ள காட்டியும் நகரும். இவ்வகைச் சுட்டுச் சாதனங்கள், முற்றுநிலை (Absoluts) சுட்டுச் சாதனங்களிலிருந்து வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக வரைகலைப் பலகை (Graphics Tablets) யில் குறிப்பிட்ட பரப்புக்குள் சுட்டுச் சாதனம் எந்த இடத்தில் இருக் கிறதோ அதற்கேற்ப திரையிலுள்ள காட்டியின் இருப்பிடமும் அமைகிறது.

relative URL : சார்பு யுஆர்எல் : சீரான வள இடங்காட்டி (Uniform Resource Locator) என்பது சுருக்கமாக யுஆர்எல் என வழங்கப்படுகிறது. களப்பெயர், கோப்பக, உள்-கோப்பகப் பெயர்கள் எதுவுமின்றி ஆவணத்தின் பெயரை யும், வகைப்பெயரையும் மட்டுமே குறிப்பிடும் முறை. சிலவேளைகளில் கோப்பகப் பாதையில் ஒருபகுதி கொடுக்கப்படலாம். நடப்புக் கோப்பின் பாதையிலிருந்து கொடுக்கப் பட்ட கோப்பின் பாதை சார்புப் பாதையாக எடுத்துக் கொள்ளப்படும். www.msn.com\aspinet.html என்ற கோப்பினைப் பார்வையிடும் போது, www.msn.comiaspicsharp\ref. html எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, csharp\ref.html என்று மட்டும் குறிப்பிடுவது சார்பு யுஆர்எல் எனப்படும்.

relay : அஞ்சல்,

relevancy ranking : தேவைக்கேற்ப தரப்படுத்தம்.

release1 : வெளியீடு : 1. மென் பொருள்களின் பதிப்பு தொடர்பான சொல், மென்பொருள்கள் பதிப்பு எண் இடப்பட்டு வெளியிடப்படுகின்றன. விண்ஸிப் 7.0 {Version No) விண்ஸிப் 8.0 என்றெல்லாம் குறிப்பிடுவர். மிக அண்மைக்காலத்தில் வெளியிடப்பட்ட பதிப்போடு தொடர்புடைய வெளியீட்டை வரிசையெண்ணிட்டு அழைப்ப துண்டு . Open Server System v Release 5.0, Lotus 1-2-3 Release 2.2 இவ்வாறு சில நிறுவனங்கள் மென் பொருளின் பெயரோடு சேர்த்தே வெளியீட்டு எண்ணையும் குறிப் பிடுவதுண்டு. 2. பொது வினியோகத் தில் கிடைக்கின்ற ஒரு மென் பொருள் தயாரிப்பின் பதிப்பு எண்.

release2 : விடுவி; வெளியிடு; வெளியீடு : 1. நினைவகத்தின் ஒரு பகுதியை அல்லது ஒரு புறச்சாதனத்தை அல்லது பிற வளம் ஒன்றினை கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து இயக்க முறைமையின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தல். 2. ஒரு வன்பொருள்/மென்பொருள் தயாரிப்பை விற்பனைக்காக சந்தையில் அறிமுகப்படுத்தல்.

reload : மறுஏற்றம் : 1. ஒரு நிரலின் செயல்பாட்டில் எதிர்பாராத இடை யூறு நேரும்போதோ, கணினிச் செயல்பாடு திடீரென நிலைகுலை யும்போதோ, சேமிப்புச் சாதனத்திலிருந்து அந்நிரலை நினைவகத்தில் மீண்டும் ஏற்றுதல். 2. இணைய உலாவியில் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வலைப் பக்கத்தின் புதிய நகலைப் பெறுதல். சில வேளைகளில் இதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட தகவலைப் பெற முடியும். (எ-டு) நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் ஓட்ட விவரம் அடங்கிய பக்கத்தைப் பார்வையிடல். ஒவ்வொரு மறு ஏற்றத்திலும் மிக அண்மைய ஒட்ட விவரம் கிடைக்கும்.

relocatable address : இடம்பெயர்தகு முகவரி, reminder : நினைவூட்டி.

remote : தொலைவிடம்; சேய்மை.

remote access server : சேய்மை அணுகு வழங்கன் : ஒரு குறும் பரப்புப் பிணையத்திலுள்ள புரவன் கணினி . இணக்கிகள் பிணைக்கப் பட்டிருக்கும். அதன் வழியாக தொலைதூரப் பயனாளர்கள் தொலைபேசி வழியாக பிணையத்தில் நுழைய முடியும்.

remote administration : சேய்மை நிர்வாகம் : ஒரு பிணையத்தின் நிர்வாகம் தொடர்பான பணிகளை வழங்கன் கணினியிலிருந்து செய்யாமல் பிணையத்திலுள்ள வேறொரு கணினியிலிருந்து மேற்கொள்ளும் நடைமுறை.

remote communications : செய்மை தகவல் தொடர்பு : தொலைபேசி இணைப்பு அல்லது பிற தகவல் தொடர்பு இணைப்பு வழியாக தொலைவிலுள்ள கணினியுடன் தகவல் பரிமாற்றம் செய்தல்,

remote computer terminal : சேய்மை கணினி முனையம்.

remote console : சேய்மைப்பணியகம்.

Remote Data Objects : சேய்மை தரவுப் பொருள்கள் (ஆர்டிஓ) : விசுவல் பேசிக் 4.0 தொழிலகப் பதிப்பில் சேர்க்கப்பட்ட, பொருள் நோக்கி லான தரவுத் தள அணுகு கருவி. இதற்கென தனித்த கோப்பு வடிவாக் கம் எதுவும் இல்லை . ஆர்டிஓ-க் களை அண்மைக்கால ஓடிபிசி (ODBC • Open Data Base Connectivity) தர வரையறைக்கு உட்படும் தகவல் தளங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்டிஓ-க்களின் செயல்வேகமும், குறைவான நிரல் வரிகள் மூலம் நிறைவான செயல்கள் ஆற்ற முடிவதும் இவை நிரலர் களிடையே மிகுந்த செல்வாக்குப் பெறக் காரணமாயிருந்தன.

remote job service : சேய்மைப்பணிச் சேவை.

remote logging : சேய்மைப் பதிகை,

remote login : சேய்மை புகுபதிகை : தகவல் தொடர்பு இணைப்பு (தொலைபேசி போன்றவை) வழியாக தொலைவிலுள்ள ஒரு கணினி அமைப்பில் நுழைதலைக் குறிக்கும். புகுபதிவுக்குப்பின் பயனாளரின் கணினி, தொலைதூரக் கணினியின் ஒரு முனையமாகச் செயல்படும். இணையத்தில் சேய்மை புகுபதிகைக் டெல்நெட் என்னும் நிரல் மூலமாக நடைபெறுகிறது.

remote phone : சேய்மைப்பேசி.

remote procedure call : சேய்மைச் செயல்முறை அழைப்பு : ஒரு நிரலி லிருந்து நிரலுக்கு வெளியே வரை யறுக்கப்பட்டுள்ள ஒரு செயல் முறையை அல்லது வேறொரு நிரலை அழைக்க முடியும். அந்த வேறொரு செயல்முறை அல்லது நிரல், தனக்கிடப்பட்ட பணியை முடித்து, கிடைக்கப்பெறும் விடையை அழைத்த நிரலுக்கு அனுப்பி வைக்கும். அனழக்கப்படும் செயல்முறை அல்லது நிரல் தொலைதூரக் கணினியில் இருக்குமெனில் அதனை "சேய்மைச் செயல்முறை அழைப்பு” என்கிறோம்.

remote processor : சேய்மை நிலைச் செயலி

remote system : சேய்மைக் கணினி அமைப்பு : ஓர் இணக்கி/தொலை பேசி ஆகியவற்றின் மூலம் பயனாளர் அணுகக்கூடிய கணினி அல்லது கணினிப் பிணையம்.

removable mass storage : அகற்று மொத்தச் சேமிப்பகம்.

remove : அகற்று; நீக்கு.

remove all : அனைத்தும் அகற்று.

remove all arrows : அனைத்து அம்புக்குறிகள் நீக்கு. எம்எஸ் எக்செஸில் உள்ள ஒரு கட்டளை

remove filter : வடிகட்டி அகற்று. எம் எஸ் அக்செஸில் உள்ள ஒரு கட்டளை.

rename : பெயர்மாற்று; மாற்று பெயர் : பெரும்பாலான கோப்பு முறை மைகளில் ஒரு கோப்புக்கு மாற்றுப் பெயர் கொடுப்பதற்கான கட்டளை.

rename column : நெடுக்கைப் பெயர் மாற்று.

reorganize : மீள் ஒழுங்கமை .

repeat : திரும்பச்செய் : சற்றுமுன் செய்த பணியை மீண்டும் செய் விக்கப் பல்வேறு பயன்பாட்டு மென் பொருள்களில் உள்ள கட்டளை.

repetition instruction : திரும்பச் செய் ஆணை .

repetitive strain injury : தொடர்பணி மிகையுழைப்பு ஊறு : கணினி விசைப்பலகையில் தொடர்ந்து பணி புரிவதால், கணினித் திரையைத் தொடர்ந்து உற்றுநோக்குவதால் சில வகை நோய்கள் வர வாய்ப்புண்டு. மணிக்கட்டுக்கு துன்பம் நேரா வண்ணம் விசைப்பலகை அமைப்பு இருக்க வேண்டும். கண்ணுக்கு அவ் வப்போது ஓய்வு தரவேண்டும். கண் கண்ணாடி அல்லது திரைக்குக் கூசொளி வடிகட்டி போன்றவை பயன்படுத்த வேண்டும்.

replace : பதிலீடு; மாற்றீடு : ஒரு குறிப்பிட்ட விவரத்தை வேறொன் றால் பதிலீடு செய்தல். பொதுவாக மாற்றவேண்டிய விவரத்தைத் தேடிக் கண்டறிந்து, பின், அதனை மாற்றி யமைப்பர். பெரும்பாலான சொல் செயலித் தொகுப்புகளில் குறிப் பிட்ட சொல்லை/சொல்தொடரைக் கண்டறிந்து புதியதென்றால் மாற்றி யமைக்கும் “கண்டறிந்து மாற்று" (Find and Replace) என்னும் வசதி உள்ளது. இருக்கும் விவரத்தையும் புதிய விவரத்தையும் குறிப்பிட வேண்டும். எழுத்து வடிவம் (Upper/ Lower case) எப்படியிருப்பினும் மாற்றச் செய்யவும் வசதி உண்டு,

replay : மறு இயக்கம்; மீண்டும் இயக்கு.

reply to all : அனைவருக்கும் பதிலிடு; யாவர்க்கும் பதில்,

replication : படியாக்கம் : ஒரு பகிர்ந் தமை தரவுத் தள மேலாண்மை அமைப்பில், ஒரு தரவுத் தளத்தை அல்லது அதன் ஒரு பகுதியை பிணையத்தின் பிற பகுதியிலுள்ள கணினியிலும் நகலெடுத்து வைத் தல். பகிர்ந்தமை தரவுத் தள அமைப்புகள் ஒத்திசைவோடு விளங்க படியாக்கம் பயன்படுகிறது.

report layout : அறிக்கை உருவரை.

report manager : அறிக்கை மேலாளர்.

report, error : பிழை அறிக்கை .

reports : அறிக்கைகள்.

repository : தொகுபதிவகம் : 1. ஒரு கணிப்பணி அமைப்பைப் பற்றிய அனைத்துத் தகவல்களின் தொகுப்பு. 2. ஒரு தரவுத் தளத்தின் தரவு அகராதியை உட்பொதியாய்க் கொண்டுள்ள மேற்பொதி. representation : உருவகிப்பு.

representation, binary : இரும உருவகிப்பு,

representation, binary coded decimal: இருமக் குறிமுறை பதின்ம உருவகிப்பு.

representation, data : தரவு உருவகிப்பு

representation, fixcal point : நிலைப் புள்ளி உருவகிப்பு.

representation, floating point : மிதவைப் புள்ளி உருவகிப்பு.

representation, number : எண் உருவகிப்பு.

request for discussion : விவாதத் துக்கான கோரிக்கை : ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்கும் முன்பாக அதற்குரிய விவாதத்துக்கு முறைப் படியான பரிந்துரையை முன்வைப்பது. குறிப்பாக யூஸ்நெட் படி நிலையில் ஒரு புதிய செய்திக் குழுவைச் சேர்க்கலாமா என்பது குறித்து விவாதிக்க வைக்கப்படும் கோரிக்கை. இதுவே முதற்கட்ட நடவடிக்கை. இறுதியில் ஓட்டெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்படும்.

required : கட்டாயத் தேவை. எம்எஸ் அக்செஸில் அட்டவணையில் ஒரு புலத்துக்கான பண்புக் கூறுகளுள் ஒன்று.

Research Libraries Information Network : ஆராய்ச்சி நூலகத் தகவல் பிணையம் : ஆராய்ச்சி நூலகங்களின் குழுக்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய, இணைய நிகழ்நிலைத் தொகுப்பு, பெரும்பாலும் அமெ ரிக்க நாட்டிலுள்ள மிகப்பெரும் ஆராய்ச்சி நூலகங்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.

research network : ஆய்வுப் பிணையம்

reserve : ஒதுக்கு; ஒதுக்கீடு ; ஒரு குறிப்பிட்ட புறச்சாதனத்தின் செயல்படு பரப்புக்கென தொடர்ச்சியான வட்டுப் பகுதியை ஒதுக்கீடு செய்வதற்கான கட்டளை. இலக்கமுறை ஒளிக்காட்சிச் சாதனங்கள் இக்கட்டளையைப் புரிந்து கொள்கின்றன.

reserved character : ஒதுக்கப்பட்ட குறியீடு; சிறப்புக் குறியீடு: விசைப் பலகையிலுள்ள சில குறியீடுகளுக்கு நிரல்களில் சிறப்புப் பொருள் உள்ளன. எனவே, அவற்றைக் கோப்பு, ஆவணம், பயனாளர் உருவாக்கும் ஏனைய செயல்கூறுகள், குறுமம் (Macro) ஆகியவற்றின் பெயர்களில் அக்குறியீடுகளைப் பயன்படுத்த முடியாது. பொதுவாக, நட்சத்திரக் குறி (*), முன்சாய்வு (/), பின்சாய்வு (1) , வினாக்குறி (?), செங்குத்துக் கோடு (1) ஆகியவை ஒதுக்கப்பட்ட குறியீடுகளில் அடக்கம்.

reset, cycle : மீட்பியக்கு சுழற்சி.

reset mode : மீளமைவுப் பாங்கு.

resident portion : நிலையான பகுதி; நினைவகத்திடல் நின்று இயங்கும் பகுதி.

resistance : தடை; மின்தடை; மின் தடுப்பி: மின்னோட்டத்தை தடுக்கும் திறன். மீக் கடத்திகளைத் தவிர பிற மின்கடத்திகளில் குறைந்த அளவோ, அதிக அளவோ மின்தடைப் பண் புள்ளது. குறைந்த மின்தடையுள்ள உலோகங்கள் மின்கடத்தும் திறன் மிக்கவையாய் உள்ளன. எனவே இவை கடத்திகள் (conductors) என அழைக்கப்படுகின்றன. கண்ணாடி, ரப்பர் போன்றவை அதிக மின்தடை உள்ளவை. இவை மிகக்குறைவான மின்சாரத்தைக் கடத்துகின்றன. எனவே இவை கடத்தாப்  பொருள்கள் (Non-conductors) எனவும் (Insulators) விலக்கிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

resizing :வடிவமாற்றம், அளவு மாற்றம். resolve :தீர்; தெளிவி : 1. ஒரு தரவுத் தளத்தில் அல்லது தேடறி அட்டவனை(Lookup Table)யில் ஒரு துண்டுத் தகவலை இன்னொன்றோடு தொடர்புபடுத்தல். 2. வன்பொருள் முரண்கள் எதுவும் ஏற்படா வண்ணம் தகவமைவு அளபுருக்களை அமைத்தல். 3. தருக்கமுறை நினைவக முகவரியை மெய்யான முகவரியாக மாற்றியமைத்தல் அல்லது மெய்முகவரியைத் தருக்க முறை முகவரியாக மாற்றுதல். resolve conflicts :முரண்களைச் சரி செய்.

resolution : படப்புள்ளிச் செறிவு: துல்லியத் திரைத்தெளிவு, படத் தெளிவு.resource data :வளத் தரவு: பட்டி, சாளரம் அல்லது உரையாடல் பெட்டி போன்ற ஒரு குறிப்பிட்ட வளத்துடன் தொடர்புடைய தரவுக் கட்டமைப்புகள், முன்வடிவங்கள், செயல்முறை வரையறைகள், மேலாண்மை நிரல்கூறுகள், சின்னக் குறிப்புப் படங்கள் மற்றும் இது போன்றவற்றைக் குறிக்கும். resource ID :வள அடையாளம் : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி யில் ஒரு குறிப்பிட்ட வள வகையில் ஒரு குறிப்பிட்ட வளத்தினை அடையாளம் காட்டும் ஒர் எண். (எ-டு) MENU என்னும் வகையைச் சார்ந்த பல்வேறு மெனுக்களில், ஒரு குறிப்பிட்ட மெனுவைக் குறிக்கும் எண்.

resouce meter :வளமானி, Resource Reservation Setup Protocol: வள ஒதுக்கீட்டு அமைப்பு நெறி முறை : "தேவைக்கேற்ற அலைக்கற்றை (bandwidth on demand) என்னும் வசதியை அளிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு தகவல் தொடர்பு நெறிமுறை. ஒரு தகவல் பரிமாற்றத்துக்காக குறிப்பிட்ட அளவு அலைக்கற்றை, வழங்கன் கணினியால் ஒதுக்கப்பட வேண்டும் என்று தொலைதூர வாங்கிக் கணினி (receiver) கோரிக்கை வைக்கும். கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்ற தகவலை வழங்கன், தொலைதூர வாங்கிக்குத் தெரிவிக்கும்.

resourcetype : வள வகை, வள இனம்: மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் உள்ள, கட்டமைப்பு மற்றும் செயல்முறை வளங்களுக்கான ஏராளமான இனக்குழுக்களில் ஒன்று. குறிமுறை, எழுத்துரு, சாளரங்கள், உரையாடல் பெட்டிகள், முன் வடிவங்கள், சின்னங்கள், தோரணிகள், சரங்கள், இயக்கிகள், காட்டிகள், நிற அட்டவணைகள், பட்டிகள் போன்றவை இவற்றில் அடங்கும். இவற்றை அடையாளங்காண, குறி முறைக்கு CODE, எழுத்துருவுக்கு FONT, காட்டிகளுக்கு CURS போன்ற பெயர்ச்சிட்டைகள் பயன்படுகின்றன.

response unit, audio: கேட்பொலி தருகருவி

resume error :மீட்டாக்கப்பிழை: மீள் தொடக்கப் பிழை.

restore : மீட்டாக்கம்; மீட்டெழுதல்.

restore backed files :காப்புக் கோப்புகளை மீட்டெடு. restore defaults : முன்னிருப்புகளைமீட்டெடு.

resume : மீள் தொடக்கம்.

resuable : மறுபயனுறு.

retention period : வைத்திரு காலம்.

retrace : மீள்படியெடுப்பு : ராஸ்டர் வருடல் கணினித் திரையகத்தில் மின்னணுக்கற்றை பின்பற்றும் பாதை, வலது ஒரம் சென்றபின் இடது ஒரத்துக்குத் திரும்புவதும், திரையின் அடிப்பகுதியிலிருந்து மேல்பக்கத்துக்குத் திரும்புவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது. மீள் படியெடுப்பின்போது மின்னணுக் கற்றையின் இருப்பிடம், இடமிருந்து வலமாக அல்லது மேலிருந்து கீழான அடுத்தகட்டப் பயணத்துக்குத் தயாராக நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு வலமிருந்து இடமாக, கீழிருந்து மேலாக மின்னணுக்கற்றை பயணிக் கும்போது, கற்றை அகல் நிலை {OFF) ஆக்கப்படுகிறது. இதனால் திரையில் தேவையற்ற ஒரு கோடு வரையப்படுவது தடுக்கப்படுகிறது. மீள்படியெடுப்பு ஒரு வினாடியில் பலமுறை நிகழ்கிறது. தீர்க்கமான ஒத்திசைவுச் சமிக்கைகள் மூலம் ஒவ்வொரு முறையும் மின்னணுக் கற்றை அகல் நிலையாக்கப்படுகிறது.

retrieve : மீட்டெடு; முனைந்து பெறு: கண்டு எடு; பெறு:கேட்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட விவரம் அல்லது தரவுத் தொகுதியின் இருப்பிடத் தைக் கண்டறிந்து, கேட்ட நிரல் அல்லது பயனாளருக்கு அனுப்பி வைத்தல். வட்டுகள், நாடாக்கள், நினைவகம் போன்ற எத்தகைய சேமிப்பகங்களிலிருந்தும் தகவலைக் கண்டுபிடித்து எடுக்கும் திறன் கணினிகளுக்குண்டு.

retrieval, information : தகவல் மீட்பு.

return, carriage: நகர்த்தித் திரும்பல்.

return code : திரும்பும் முறை : நிரலாக்கத்தில் ஒரு செயல்கூறு (Function) அல்லது ஒரு செயல்முறை (Procedure) தன் பணியை முடித்த பின் கிடைக்கப்பெறும் விடையை அழைத்த நிரல் அல்லது நிரல் கூறுக்குத் திருப்பியனுப்பும். வெற்றி கரமாக விடை திருப்பியனுப்பப் பட்டதா என்கிற விவரம் அழைத்த நிரலுக்குக் கிடைக்கும். இந்த விவரமே திரும்பும் குறிமுறை எனப் படுகிறது. இந்தக் குறிமுறையின் அடிப்படையிலேயே நிரலின் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்.

return from the dead : சாவிலிருந்து மீள்வு; அழிவிலிருந்து மீள்வு:இணையத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது திடீரென இணைப்புத் துண்டிக்கப்படலாம். அவ்வாறு துண்டிக்கப்பட்டு மீண்டும் இணைய இணைப்பைப் பெறல் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

returntype : திருப்பியனுப்பும்தரவினம்.

return to zero : சுழிக்கு திரும்புதல்: காந்த ஊடகங்களில் தகவலைப் பதியும் ஒரு வழிமுறை. காந்தப் புலம் இல்லாத நிலை, அடிப்படை நிலை அல்லது நடுநிலையாகக் கொள்ளப்படும்.

reverse : தலைகீழ், முன்பின்.

reverse path forwarding :எதிர்நிலை வழி முன்னோக்கல்.

reusable object: மறு பயனுறு பொருள்.

REXX : ரெக்ஸ்: மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக்கணினிகள்(Mainframes) மற்றும் ஒஎஸ்/2 பதிப்பு 2.0-லும் பயன்படுத்தப்பட்ட கட்டமைப்பு நிரலாக்க மொழி. இம்மொழி பயன்பாட்டுத் தொகுப்புகளை இயக்குகிறது. இயக்கமுறைமைக் கட்டளைகளையும் செயல்படுத்தும்.

RFC :ஆர்எஃப்சி : மதிப்புரைக்கான கோரிக்கை எனப் பொருள்படும் Request for Comments என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு தர வரையறை, ஒரு நெறிமுறை (protocol) அல்லது இணையச் செயல்பாடுகள் - இவற்றில் ஒன்றுபற்றி பிற பார்வையாளர்கள், ஆர்வலர்களின் கருத்துரைகளைக் கேட்டு இணையத்தில் வெளியிடப்படும் ஒர் ஆவணம். ஐஏபி-யின் கட்டுப்பாட்டில் இவை வெளியிடப்படுகின்றன. விவாதங்களுக்குப் பிறகு இவையே இறுதித் தர வரையறையாக ஆகிவிடுகின்றன. இன்டர்நிக் போன்றவற்றின் அமைப்புகளிடமிருந்து ஏராளமான ஆர்எஃப்சிக்களை பெற முடியும்.

RFI: ஆர்எஃப்ஐ : வானலை அலை வரிசை இடையூறு எனப் பொருள்படும் Radio Frequency Interference என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வானொலி, தொலைக்காட்சி போன்ற மின்னணுச் சுற்றுகளில், கணினி போன்ற பிற மின் சுற்றுகளில் உருவாகும் மின்காந்த கதிர்வீச்சினால் ஏற்படும் இரைச்சலைக் குறிக்கிறது.

RF shielding : ஆர்எஃப் காப்புறை : வானலை வரிசை ஊடுருவாமல் தடுப்பதற்குப் பயன்படும் கட்டமைப்பு. பெரும்பாலும் உலோகத் தகடு அல்லது உலோக மேற்பூச்சினால் அமைந்திருக்கும்.

RGB monitor : ஆர்ஜிபி திரையகம் : சிவப்பு,பச்சை,நீலம் ஆகிய அடிப்படை நிறங்களுக்கான சமிக்கைகளை தனித்தனித் தடங்களில் பெறுகின்ற ஒரு வண்ணத் திரையகம். மேற்கண்ட மூன்று நிறங்களுக்கான நிலை அளவுகளை ஒற்றைத் தடத்தில் பெறுகின்றது. கலப்பு இனத் திரையகங்களைவிடப் பொதுவாக தெளிவான, தூய படிமங்களை உருவாக்கும் திறன்படைத்தவை.

right : வலம் /வல .

right, access :அணுக்க உரிமை .

right arrow :வலது அம்புக்குறி .

right click :வலச்சொடுக்கு.

right shift : வல நகர்வு;வலது பெயர்வு.

ring connected : வளைய இணைப்பு .

ring network : வளைப் பிணையம்.

ring/loop: வளைய/மடக்கு.

ripple sort : அதிர்வலை வரிசையாக்கம்.

RISC : ரிஸ்க் : சுருக்க ஆணைத்தொகுதி கணிப்பணி என்று பொருள் படும் Reduced Instruction Set Computing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எளிய ஆணைகளின் அடிப்படையில் அதி வேகமாய் திறன்மிக்கதாய் செயல்படக்கூடிய ஒரு நுண்செயலி வடிவமைப்பு. ஒவ்வோர் ஆணையையும் ஒரு கடிகாரச் சுழற்சியிலேயே அதிவேகமாய் செயல்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது ரிஸ்க் கட்டுமானம்.

           மிக எளிய ஆணைகளைப் பொறுத்தமட்டில் ரிஸ்க் நுண்செயலிகளைக் காட்டிலும் சிஸ்க் (CISCComplex Instruction Set Computing) நுண்செயலிகள் மிகவேகமாய் நிறைவேற்றுகின்றன. ஆனால்,மிகவும் சிக்கலான ஆணைகளைப் பொறுத்தமட்டில் ரிஸ்க் செயலிகளைவிட வேகத்தில் குறைந்தவையே காரணம், சிஸ்க் செயலிகள் சிக்கலான செயல்பாட்டிற்கும் தனித்தனி ஆணைகளைக் கொண்டுள்ளன. ரிஸ்க் செயலிகள் பல ஆணைகளின் தொகுப்பாக அவற்றை நிறைவேற்ற வேண்டியுள்ளது. சன் மைக்ரோ சிஸ்டமஸ் நிறுவனத்தில் ஸ்பார்க் செயலி,மோட்டோரோலாவின் 88,000 இன்டெல்லின் ஐ 860, ஆப்பிள், ஐபிஎம் மோட்டோரோலா ஆகியவற்றின் பவர்பீசி, ரிஸ்க் வகையைச் சேர்ந்தவை. 

rlogin : ஆர்லாகின் : ஒரு பிணையக் கணினியில் நுழைவதற்குப் பயன்படும் ஒரு நெறிமுறை. இம்முறையில் பயனாளரின் புகுபதிகைப் பெயரை பயனாளரின் கணினி தானாகவே தந்துவிடும்.

.ro : ஆர்ஓ : ஒர் இணையதள முகவரி ருமேனியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

robopost : பொறிவழி வெளியீடு : ஒரு தானியங்கு நிரல் மூலமாக, செய்திக் குழுக்களுக்குக் கட்டுரைகள் அனுப்பிவைத்தல்.

robot : எந்திரன்:மனிதர்களின் மேற்பார்வையின்றி, சுற்றுச்சூழலை உணர்ந்து, உள்ளீட்டுக்கேற்றவாறு சுற்றுச் சூழலை ஓரளவுக்கு துண்ணறிவோடு மாற்றும் திறன் பெற்ற ஒரு பொறி. பெரும்பாலும், மனித அசைவுகளையொத்த செயல்பாடுடைய எந்திரன்களே வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் உருவத்தில் அவை மனிதர்களைப் போல படைக்கப்படுவதில்லை. வாகனம் மற்றும் கணினி உற்பத்தி சாலைகளில் எந்திரன்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

robust : எதிர்கொள்திறன்; தாக்குப் பிடிக்கும் திறன் : எதிர்பாராத சூழ்நிலைகளிலும் இயங்கக்கூடிய அல்லது இயக்கத்தைத் தொடரக்கூடிய திறன்.

ROFL : ஆர்ஓஎஃப்எல்: ரோஃபல் : விழுந்து விழுந்து சிரித்தல் எனப் பொருள்படும் Rolling on the floor, laughing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பெரும்பாலும் செய்திக் குழுக்களில் மற்றும் நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில், ஒரு நகைச்சுவைத் துணுக்கை அல்லது நகைப்பேற்படுத்தும் சூழ் நிலையை ரசித்துப் பாராட்டுவதைத் தெரிவிக்கப் பயன்படும் சொல்.

role-playing game : பாத்திரமேற்று நடிக்கும் விளையாட்டு : நடப்பு வாழ்க்கையில் சந்திக்கும் பாத்திரங்களை ஏற்று ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நடித்துக் காட்டுவது. பெரும்பாலும் மேலாண்மைப் பயிற்சியகங்களில் பயிற்சியாளர்களுக்கு இத்தகைய பயிற்சி அளிக்கப்படுவதுண்டு. ஒர் அதிகாரியிடம் புகார் தர வருகின்ற வாடிக்கையாளர் ஒருவர் எப்படி நடந்து கொள்வார், அதிகாரி அவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பயிற்சியாளர்கள் நடித்துக் காட்ட வேண்டும். மேலாண்மைப் பதவிகளை வகிக்கப் போகிறவர்கள் நடப்பு வாழ்வில் சந்திக்கவிருக்கும் சவால்களை எதிர் கொள்வதற்கு இத்தகைய பயிற்சிகள் உதவுகின்றன.

roman : ரோமன் : ஒருவகை எழுத்து வடிவம். சாய்ந்த வடிவமாக இல்லாமல் நிமிர்ந்து நிற்கும் வடிவம் கொண்ட எழுத்துரு.

ROM Basic : ரோம் பேசிக் ;ரோம்(ROM-Read Only Memory) நினைவகத்தில் பதிந்துவைக்கப்பட்ட பேசிக் மொழி ஆணைமாற்றி(Interpreter)யைக் குறிக்கும். கணியை இயக்கிய வுடன் பேசிக் மொழி நிரலை எழுதி இயக்கலாம். வட்டு அல்லது நாடாவிலிருந்து பேசிக் மென்பொருளை நினைவகத்தில் ஏற்ற வேண்டியதில்லை. தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து இயக்கக்கூடிய தொடக்ககால வீட்டுக் கணினி (Home Computer)களில் ரோம் பேசிக் இணைக்கப்பட்டிருந்தது.

ROM card :ரோம் அட்டை : அச்சுப்பொறிக்கான சில எழுத்துருக்கள் அல்லது சில நிரல்கள் அல்லது சில விளையாட்டுகள் அல்லது பிற தகவல்கள் பதியப்பட்ட ரோம் (ROM) நினைவகச் சிப்புகள் பொருத்தப்பட்ட ஒரு செருகு அட்டை, ரோம் அட்டை, ஒரு பற்று அட்டை (Credit card)யின் அளவில் ஆனால் அதை விடப் பலமடங்கு தடிமனாக இருக்கும். ஒருங்கிணைப்பு மின்சுற்று அட்டைகளில் நேரடியாகத் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும்.

ROM cartridge : ரோம் பொதியுரை : ரோம் அட்டை (ROM card) ஒரு பிளாஸ்டிக் பொதியுறையில் இடப்பட்டு, இணைப்பு முனைகள் ஒரு விளிம்பில் வெளித்தெரிந்து கொண்டிருக்கும். இதனை அச்சுப்பொறி, கணினி, விளையாட்டுக் கருவி அல்லது பிற சாதனத்தில் எளிதாகப் பொருத்த முடியும். தொலைக் காட்சிப் பெட்டியுடன் இணைத்து விளையாடக் கூடிய பெரும்பாலான ஒளிக்காட்சி விளையாட்டுகள் (Video games) இதுபோன்ற ரோம் பொதியுறைகளில் கிடைக்கின்றன.

ROM emulator :ரோம் மாதிரி :ரோம் போலிகை : ஒர் இலக்குக் கணினியில் ரோம் சிப்புகள் இருக்கும் இடத்தில் இணைக்கப்பட்டுள்ள, ரேம் (RAM) நினைவகச் சிப்புகள் அடங்கிய ஒரு சிறப்பு மின்சுற்று. தனியான ஒரு கணினி இந்த ரேம் சிப்புகளில் தகவலை எழுதும். இலக்குக் கணினி ரோம் சிப்புகளைப் படிப்பதற்குப் பதிலாக இந்த ரேம் சிப்புகளிலுள்ள தகவலைப் படித்துக் கொள்ளும். ரோமில் இருத்தி வைக்கும் நிரல்களைச் சரிபார்க்க (debug), அதிக செலவும் தயாரிப்பு காலமும் ஆகும்.ரேம் சிப்புகள் இல்லாமலேயே இந்தவகை விலை குறைவான ரேம் சிப்புகளைக் கொண்டு செய்து முடிக்க முடியும். ஈப்ரோம் (EPROM) சிப்புகளைக் காட்டிலும் ரோம் போலிகை விலை அதிகம் எனினும், ஈப்ரோமை விட மிகவிரைவாக உள்ளடக்கத்தை மாற்ற முடியும் என்பதால் இந்த வகை ரேம் சிப்புகளே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

root account : வேர்க் கணக்கு:மூலக்கணக்கு :முதன்மைக் கணக்கு : யூனிக்ஸ் இயக்க முறைமையில் கணினியின் செயல்பாடுகளை முழுமையாகக் கட்டுப்பாடு செய் கின்ற பயனாளரின்கணக்கு முறைமை நிர்வாகி, கணினி அமைப்பின் பராமரிப்புக்காக இந்தக் கணக்கினைத் தான் பயன்படுத்திக் கொள்கிறார்.

root directory :மூலக்கோப்பகம்; வேர்க்கோப்பகம்,முதன்மைக் கோப்பகம்,தலைமைக் கோப்பகம் : வட்டு அடிப்படையிலான படிநிலைக் கோப்பகக் கட்டமைப்புகளில் தலைமையாக இருப்பது. இதிலிருந்தே பிற கோப்பகங்களும் உள்கோப்பகங்களும் பிரிகின்றன. ஒவ்வொரு கோப்பகமும் ஒன்று அல்லது மேற்பட்ட கோப்புகள் அல்லது உள்-கோப்பகங்களைக் கொண்டிருக்கலாம்.(எ-டு) டாஸ் இயக்க முறைமையில் பின்சாய்வுக் கோடு (\) மூலக் கோப்பகத்தைக் குறிக்கிறது. அதன்கீழ்தான் பிற கோப் பகங்களும், உள் கோப்பகங்களும், கோப்புகளும் இடம்பெறுகின்றன.

root name : முதன்மைப் பெயர் : எம்எஸ் டாஸ், விண்டோஸ் போன்ற இயக்க முறைமையில் ஒரு கோப்பின் பெயர் இருபகுதிகளைக் கொண்டது. முதல்பகுதி முதன்மைப் பெயர் என்றும், அடுத்த பகுதி நீட்டிப்பு (Extension) என்றும் அழைக்கப்படுகிறது. நீட்டிப்பு பெரும்பாலும் அக்கோப்பின் வகையைக் குறிப்பதாக அமையும் . (எ -டு)): COMMAND.COM EDIT.EXE LETTER.TXT டாஸ் மற்றும் விண்டோஸ் 3.x-ல் முதன்மைப்பெயர் அதிக அளவாக எட்டு எழுத்துகளையே கொண்டிருக்கும். வகைப்பெயர் அதிக அளவாக மூன்றெழுத்துகள். இரண்டுக்கும் இடையே ஒரு புள்ளி இடம்பெறும். விண்டோஸ் 95/98/என்டி மற்றும் பிறகு வந்தவற்றில் கோப்பின் பெயர் அதிக அளவாக 255 எழுத்துகளைக் கொண்டிருக்கலாம்.

ROT13 encryption : ராட் 13 மறையாக்கம் : ஒர் எளிய தகவல் மறையாக்க முறை. தகவலிலுள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்தும், அதற்கடுத்து 13 எழுத்துகளும் பிறகுவரும் எழுத்தால் பதிலீடு செய்யப்பட்டிருக்கும். (எ-டு) A என்னும் எழுத்துக்குப் பதில் N என்னும் எழுத்து பதிலீடு செய்யப்படும். மறுமுனையில் N என்னும் எழுத்து A என மாற்றப்படும். Z என்னும் எழுத்து M-ஆக மாற்றப்படும். ராட்13 மறையாக்கம், தகவலைப் பிறர் படிக்கக் கூடாது என்பதற்காகச் செய்யப்படுவதில்லை. செய்திக் குழுக்களில் பயனாளர் படிக்க விரும்பாத ஆபாசத் தகவல்களை குறியாக்கம் செய்யவே பயன்படுத்தப்படுகின்றன. சில செய்தி படிப்பு மென்பொருள்களில் ஒரு விசையை அழுத்தியவுடனே மறையாக்கம் செய்யவும், மறைவிலக்கம் செய்யவும் வசதி உண்டு.

rotate : சுழற்று; திருகு; சுழல்நகர்வு : 1.திரையில் தோற்றமளிக்கும் ஒர் உருத்தோற்றம் அல்லது ஒரு வரைகலைப்படத்தை இன்னொரு கோணத்தில் பார்ப்பதற்காக திருப்புதல். 2. ஒரு பதிவகத்தில்(register) உள்ள துண்மிகளை இடப்புறம் அல்லது வலப்புறம் ஒரிடம் நகரச் செய்தல். இத்தகைய நகர்வினால் ஒரு முனையில் இடமின்றி நகர்த்தப் டும் இறுதி துண்மி(பிட்) எதிர் முனையில் வெற்றிடமாகும் இடத்தில் ஒட்டிக் கொள்ளும்.

rotation tool :சுழற்று கருவி. rotation speed : சுழற்று வேகம்,

Ro terminal : படிக்க மட்டுமான முனையம்.

round : தோராயம்; ஏறத்தாழ; முழுமை பாகம் : ஓர் எண்ணின் பின்னப் பகுதியின் இலக்கங்களைக் குறைக் கும் வழி முறை (எ-டு): மூன்றாவது இலக்கம் வரை போதும் எனில் நான்காவது இலக்கம் 5 அல்லது அதற்கு மேல் இருப்பின் மூன்றாவது இலக்க மதிப்பை ஒன்று கூட்டிக் கொள்ள வேண்டும். 12.3456 – 12.346 நான்காவது இலக்க மதிப்பு 5-க்குக் குறைவாக இருப்பின் மூன்றாவது இலக்க மதிப்பை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். 65.4321 ) 65.432 கணினி நிரல்களில், இவ்வாறு முழுமையாக்கல் செயல்படுத்தப் படுவதால், கணக்கீடுகளில் குழப்பம் வருவதுண்டு . (எ-டு) நான்கு மண்டலங்களில் விற்பனையாகும் ஒரு பொருளின் விற்பனை சத வீதத்தை தனித்தனியே முழுமை யாக்கிக் கூட்டும் போது, சில வேளை களில் மொத்த சதவீதம் 99 அல்லது 101 வர வாய்ப்புண்டு.

round off error : தோராயமாக்கல் பிழை.

round the clock : முழு நேரமும்; நாள் முழுதும்.

round trip time : வட்ட அடைவு நேரம்; சுழற்சி அடைவு காலம்.

routable protocol : திசைவிப்பு நெறிமுறை : பிணைய முகவரி அல்லது சாதன முகவரி மூலமாக ஒரு கணினிப் பிணையத்திலிருந்து இன் னொரு பிணையத்துக்குத் தகவலைத் திசைப்படுத்தப் பயன்படும் தகவல் தொடர்பு நெறி முறை. டீசிd/ஐபீ, இத்தகு நெறிமுறைக்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும்.

router : திசைவி. ஒத்தியல் பில்லா இரு பிணையங்களை இணைக்கும் சாதனம்.

routine, end of file : கோப்பு ஈற்று நிரல்கூறு.

routing function : குறைசெயல் நிரல் கூறு.

routing receipient : திசைவிப்பு பெறுநர்.

row, binary : இருமக் கிடக்கை .

row, column : நெடுக்கை , கிடக்கை

row, number : கிடக்கை எண், வரி எண்.

row, pitch : புரி அடர்த்தி வரிசை.

row source : கிடக்கை மூலம்.

row/record : கிடைக்கை/ ஏடு.

row source type : கிடக்கை மூல இனம்

RSA encryption : ஆர்எஸ்ஏ மறை யாக்கம் : 1978இல் திருவாளர்கள் ரொனால்டு ரைவெஸ்ட், ஆதி சமீர், லியோனார்டு ஆடில்மேன் ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கிய மறையாக்க முறை. மூவர் பெயர் களின் (Rivest-Shamir-Adleman) முதலெழுத்துகள் இணைந்து ஆர்எஸ்ஏ ஆயிற்று. இந்த மறையாக்க முறையை அடிப்படையாகக் கொண்டு பீஜிபி (PGP-Pretty Good Privacy) மறையாக்க நிரல் உருவாக்கப்பட்டது.

RTFM : ஆர்டீ எஃப்எம் : ஒளிப்பிழம் பான (அல்லது தோழமையான) விளக்கக் குறிப்பேட்டைப் படி என்று பொருள்படும் Read the Flaming (or Friendly) manual என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஓர் இணையச் செய்திக் குழுவில் அல்லது விற்பனைப் பொருள் அறிமுக கருத்தரங்குகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வழங்கப்படும் ஒரு வழக்கமான பதில், குறிப்பேட்டில் அக்கேள்விக் கான பதில் விளக்கமாகத் தரப் பட்டுள்ளது என்பது பொருள்.

RTS : ஆர்டீ எஸ் : அனுப்பிவைக்கக் கோரிக்கை என்று பொருள்படும் Request To Send என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தகவலை அனுப்பிவைக்க அனுமதி கேட்டு, இணக்கிக்குக் கணினி அனுப்பும் ஒரு சமிக்கை. பொதுவாக நேரியல் (serial) தகவல் தொடர்பில் இது பயன்படுத்தப்படுகிறது. ஆர்எஸ்-232-சி இணைப்புகளில் 4-வது பின்னில் அனுப்பப்படும் வன் பொருள் சமிக்கையே ஆர்டீ எஸ் எனப்படுகிறது.

.ru : .ஆர்யு : ஓர் இணைய தள முகவரி ரஷ்ய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

rudder control : சுக்கான் இயக்கு விசை : விமானப் பறப்புப் பாவிப்பு நிரல்களில், பயனாளர் ஒருவர் சுக்கான் அசைவுகளை உள்ளீடு செய் வதற்கு வசதியாக அமைந்துள்ள, ஓர் இணை (pair) மிதிகட்டைகள் அடங்கிய ஒரு சாதனம். இது பெரும் பாலும் ஒரு விசைப்பிடி (Joystick) யுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும்.

rule based education : விதிவழிக் கல்வி.

ruler : அடிக்கோல், வரைகோல் : சொல் செயலி போன்ற பயன்பாட்டு நிரல்களில் திரையில் தோற்றமளிக் கின்ற, அங்குலம் அல்லது சென்டி மீட்டர்களில் (அல்லது பிற அலகு களில் ) அளவு குறிக்கப்பட்ட வரை கோல். இது பெரும்பாலும் ஒரு வரி யின் நீளம், தத்தல் (tab) அமைவுகள், பத்தி உள்தள்ளிடம் (paragraph indent) தொடங்கிடங்களைத் தீர்மானிக்க உதவும். விசைப்பலகை அல்லது சுட்டியைப் பயன்படுத்தி தத்தல் நிறுத்தங்களை (tab stops) இதன்மீது உருவாக்க, நீக்க, மாற்றியமைக்க முடியும்.

run database query : தரவுத்தள வினவல் இயக்கு

rur macro : குறுமம் இயக்கு.

run-length limited encoding : இயக்க நீள வரம்புறு குறியாக்கம் : சுருக்க மாக ஆர்எல்எல் குறியாக்கம் எனப் படுகிறது. மிகவிரைவான, திறன் மிகுந்த தகவல் சேமிப்பு வழிமுறை. குறிப்பாக வட்டுகளில் அதிலும் குறிப்பாக நிலைவட்டுகளில் தகவலைச் சேமிக்கும் முறை. தகவலின் ஒவ்வொரு துண்மியும் (பிட்) உள்ளபடியே சேமிக்கப்படுவ தில்லை. குறிப்பிட்ட தோரணியில் அமைந்த துண்மி (பிட்)கள் குறி முறையாக மாற்றப்பட்டு பதியப்படு கின்றன. தொடர்ச்சியாக வரும் சுழி களின் (zeroes) எண்ணிக்கை அடிப் படையில் மின்புலம் தீர்மானிக்கப் படுகிறது. மிகக்குறைந்த மின்புல மாறுதல்களுடன் நிறைந்த அளவு தகவல் சேமிக்க முடிகிறது. பழைய முறைகளான எஃப்எம் (FM-Frequency Modulation) மற்றும் எம்எஃப்எம் (MFM - Modified Frequency Modulation) ஆகிய முறைகளில் இதே அளவு தகவலைச் சேமிக்க மிக அதிகமான இடம் தேவைப்படும். running foot : ஓடும் அடி : சொல் செயலி ஆவணங்களில் ஒரு பக்கத்தின் அடி ஓரப்பகுதியில் பக்க எண், அத்தியாயப் பெயர், தேதி போன்றவை ஒன்று அல்லது பலவும் சேர்ந்து ஒரு வரியில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளில் அமைவது.

run-time binding : இயக்கநேரப் பிணைப்பு : மாறி (Variable), சுட்டு (pointer) போன்ற ஓர் அடையாளங் காட்டி எதைச் சுட்டுகிறது என்பதை ஒரு நிரலை மொழிமாற்றும் நேரத் தில் (compile time) குறிக்காமல், நிரல் இயங்கும் நேரத்தில் முடிவு செய்து கொள்ளும்படி விட்டுவிடுதல். இதனை காலந்தாழ்ந்த பிணைப்பு (Late Binding) என்றும் கூறுவர். இயங்குநிலைப் பிணைப்பு (Dynamic Binding) என்றும் கூறலாம்.

run-time error : இயக்க நேரப் பிழை; ஒரு நிரலில் ஏற்படும் பிழைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. இலக்கணப் பிழை (syntax error). இதனை, மொழிமாற்றி (compiler) சுட்டிக் காட்டிவிடும். மொழி மாற்றும் நேரப் பிழை எனலாம். 2. தருக்கமுறைப் பிழை (Logical Error) : இப்பிழையை மொழிமாற்றியோ, கணினியோ கண்டுபிடித்துச் சொல்லாது. நிரல் முழுமையாக இயங்கும் ஆனால் பிழையான விடை கிடைக் கும். இதற்குக் காரணம் நிரலர் தருக்க முறையில் செய்த தவறாகும். 3. இயக்க நேரப் பிழை (run-time error); மொழிமாற்றி பிழை சொல்லாது. நிரல் முழுமையாக நிறைவேற்றப் படாது. இயக்க நேரச் சூழல் (Run Time Environment) அல்லது கணினி முறைமையால் பிழை சுட்டப்பட்டு நிரல் பாதியிலேயே நின்றுவிடும்.

run-time version : இயக்கநேரப் பதிப்பு; இயக்கநிலைப் பதிப்பு ; 1. இயக்குவதற்குத் தயாரான நிலையில் இருக்கும் நிரல் தொகுப்பு. பொது வாக, நிரல் குறிமுறை (எந்திர மொழிக்கு) மொழிமாற்றப்பட்டு, பிழைகள் களையப்பட்டு எவ்வகையான தகவல் தொகுதிகளுக்கும் சரியாகச் செயல்படும் வண்ணம் தயார் நிலையில் வைக்கப்படும் தொகுப்பு. 2. ஒரு முழுமையான மென்பொருள் தொகுப்பில் இருக்க வேண்டிய அனைத்து வசதிகளையும் தராமல், ஒருசில வசதிகளுடன் மட்டுமே வெளியிடப்படும் ஒரு சிறப்பு வெளியீடு.

run time exception : இயக்கநேர விதிவிலக்கு.

run web querry : வலை வினவல் இயக்கு,

.rw : ஆர்டபிள்யூ : ஓர் இணையதள முகவரி, ருவாண்டா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

RXD : ஆர்எக்ஸ்டி : தகவல்களை பெறுதல் (Receive Data) என்பதன் சுருக்கம். தகவல் பரிமாற்றத்தில் நேரியல் (serial) முறையில் ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனம் தகவலைப் பெறும் தடம். (எ-டு) இணக்கியிலிருந்து கணினிக் குச் செல்லும் தகவல், ஆர்எஸ் -232-சி இணைப்புகளில் மூன்றா வது பின்னில் பெறப்படுகிறது.