கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/T

விக்கிமூலம் இலிருந்து
T

 T1 or T-1:டி1அல்லதுடி-1: வினாடிக்கு 1.544 மெகாபிட் (மீமிகு துண்மி) அல்லது 24 குரல் தடங்களைக் கையாளவல்ல ஒரு டீசுமப்பி.குரல் அழைப்புகளைச் சுமந்து செல்ல,ஏடி&டி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.இந்த உயர் அலைக்கற்றைத் தொலைபேசி இணைப்பில் உரைகளையும் படிமங்களையும் அனுப்பவும் பெறவும் முடிந்தது.டீ இணைப்புகளை பெரும்பாலும் மிகப்பெரிய நிறுவனங்கள் இணையத் தொடர்புக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

T.120 standard:டீ.120 தர வரையறை: ஒரு கணினிப் பயன்பாட்டுக்குள்ளேயே, கலந்துரையாடல்,பல முனைக்கோப்புப் பரிமாற்றம் போன்ற பல்முனைத் தரவுத் தொடர்பு சேவைகளுக்காக பன்னாட்டுத் தொலைத்தகவல் தொடர்பு சங்கம் (ITU) உருவாக்கிய வரன்முறைகள்.

T2orT-2:டடீ2அல்லதுடீ-2:வினாடிக்கு 6.312 மெகாபிட் அல்லது 96 குரல் தடங்களைக் கையாளவல்ல ஒரு டீ-சுமப்பி.

T3orT-3:டடீ3அல்லதுடீ-3: வினாடிக்கு 44.736 மெகாபிட் அல்லது 672 குரல் தடங்களைக் கையாளவல்ல ஒரு டீ-சுமப்பி.

T4orT-4:டீ4அல்லதுடடீ-4:வினாடிக்கு 274.176 மெகாபிட் அல்லது 4,032 குரல் தடங்களைக் கையாள வல்ல டீ-சுமப்பி.

tab setting:தத்தல் அமைப்புகள்.

table,addition கூட்டல் அட்டவணை.

table,datasheet:தரவுத்தாள் அட்டவணை.

table,decision:தீர்வுகாண் அட்டவணை.

table design அட்டவணை வடிவமைப்பு.

tabular:அட்டவணை வடிவு.

tabulate:அட்டவணைப்படுத்து: 1.ஒரு கிடக்கை அல்லது நெடுக்கையிலுள்ள எண்களைக் கூட்டுதல்.2.தகவலை அட்டவணை வடிவில் ஒழுங்குபடுத்துதல்.

tabulator clear key:தத்தல் நீக்கு விசை.

TACACS:டக்காக்ஸ்: முனைய அணுகல் கட்டுப்படுத்தி அணுகல் கட்டுப்பாட்டு முறைமை என்று பொருள்படும் Terminal Access Controller Access Control System என்ற? தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.அனுமதிக்கப்பட்ட பயனாளர்கள் கொண்ட,தரவுத் தளம் சேமிக்கப்பட்டுள்ள,ஓர் மையப்படுத்தப்பட்ட ஒற்றை வழங்கனில் பயனாளர்கள் நுழைவதற்கான ஒரு பிணைய அணுகு நுட்பம்.பயனாளரின் அடையாளத்தை அணுகு வழங்கன் உறுப்படுத்திய பின்,புகுபதிகைத் தகவலை பயனாளர் நாடிய தரவுத்தள வழங்கனுக்கு அனுப்பி வைககும.

tag file:ஒட்டுக் கோப்பு.

tag switching:ஒட்டு இணைப்பித்தல்; குறி இணைப்பாக்கம்:திசை வித்தலையும் (routing), இணைப்பித் தலையும் (switching) ஒருங்கிணைத்து சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய,ஒரு பல்லடுக்கு இணைய இணைப்பாக்கத் தொழில்நுட்பம்.

tail frame:வால் சட்டம்:

talk:டாக்,(பேசு; பேச்சு):ஒரு யூனிக்ஸ் கட்டளை.இணையத்தில் ஓர் ஒத்திசைவு அரட்டைக்கான கோரிக்கையை உருவாக்கும். talk என்னும் சொல்லைத் தொடர்ந்து இன்னொரு பயனாளரின் பெயரும் முகவரியும் தரப்பட வேண்டும்.

talker:டாக்கர்(பேச்சாளி):இணைய அடிப்படையிலான ஒத்திசைவுத் தகவல் தொடர்பு நுட்பம்.பெரும்பாலும் பல்பயனாளர் அரட்டைச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. வெவ்வேறு அறைகளில்,வெவ்வேறு கருத்துகளைப்பற்றி அரட்டையில் ஈடுபடுவதற்கென கட்டளைகள் உள்ளன.நிகழ்நேரத்தில் பயனாளர்கள் தமக்குள்ளே உரை வடிவில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

talk.newsgroups டாக்.நியூஸ் குரூப்ஸ்: டாக் படிநிலையிலுள்ள யூஸ்நெட் செய்திக்குழுக்கள். talk.என்னும் முன்னொட்டினைக் கொண்டிருக்கும். விவாத்துக்கிடமான தலைப்புகளில் வாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெறும்.ஏழு யூஸ் நெட் செய்திக்குழு படிநிலைகளுள் ஒன்று.பிற ஆறு: comp.,misc.,news.,rec.,SCI.,SOC.

TANSTAAFL:டான்ஸ்டாஃபல்:இலவவசப் பகல்விருந்து என்பது போன்று எதுவுமில்லை என்று பொருள்படும் There ain't no such thing as a free lunch என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.இணையத்தில் மின்னஞ்சல் அரட்டை,அஞ்சல் பட்டியல்,செய்திக் குழுக்கள் மற்றும் பிற நிகழ்நிலை மன்றங்களில் பயன்படுத்தப்படும் சொல்.

tape control:நாடாக் கட்டுபாடு.

tape drive:நாடா இயக்கம்.

tape,magnetic:காந்த நாடா.

tape,paper:தாள் நாடா.

tape reader,paper:தாள் நாடா படிப்பி.

tape station:நாடா நிலையம்.

tape tree:நாடா மரம்: யூஸ்நெட் இசைச் செய்திக்குழுக்களிலும்,அஞ்சல் பட்டியல்களிலும் பயன்படுத்தப்படுகின்ற கேட்பொலி நாடா வினியோகத்துக்கான ஒரு வழிமுறை.இந்த முறையில்,பதிவு செய்யப்பட்ட ஒரு பாடல் பல்வேறு கிளைப் பயனாளர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் அதனை பிற பயனாளர்களுக்கு அனுப்பி வைப்பர்.

tape varifier paper:தாள் நாடா சரிபார்ப்பி:

tape width:நாடா அகலம்.

TAPI:டேப்பி;டிஏபிஐ: தொலை பேசிப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Telephony Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.விண்டோஸ் திறந்தநிலை முறைமைக் கட்டுமானத்தில் (WOSA - Windows Open Systems Architecture) 905 நிரலாக்க இடைமுகம்.விண்டோஸின் கிளையன் பயன்பாடுகள் ஒரு வழங்கனின் குரல்வழிச் சேவைகளை அணுகுவதற்கு உதவுகிறது. சொந்தக் கணினிகளுக்கும்,தொலைபேசிக் கருவிக்கும் இடையே ஊடு செயல்பாட்டை(interoperability)டேப்பி வழங்குகிறது.

.tar:.டார்:டார் நிரல் மூலம் உருவாக்கப்பட்ட இறுக்கப்படாத வடிவமைப்பில் உள்ள காப்பக கோப்பினை அடையாளங்காட்டும் வகைப்பெயர்.

tar1:டார்1: நாடாக் காப்பகம் (Tap Archive) என்பதன் சுருக்கம்.யூனிக்ஸில் உள்ள ஒரு பயன்கூறு.பயனாளர் விரும்பினால் பல்வேறு கோப்புகளை ஒன்றாகச் சேர்த்து ஒரே கோப்பாக வைத்துக்கொள்ள இது உதவுகிறது.அந்த ஒற்றைக் கோப்பு .tar என்னும் வகைப்பெயரைக் கொண்டிருக்கும்.PKZIP போல,tar கட்டளை கோப்புகளை இறுக்கிச் சுருக்குவதில்லை.எனவே tar கோப்புகளை gzip மூலம் இறுக்கிச் சுருக்க முடியும். இறுக்கிய கோப்புகள்.targz என்னும் வகைப்பெயரைக் கொண்டிருக்கும்.

tar2:டார்<sup<2:டார் பயன்கூறு மூலம் ஒரு கோப்புத் தொகுதியை ஒற்றைக் கோப்பாக மாற்றுதல்.

target code(or)object code:இலக்குக் குறிமுறை.

taskbar:பணிப்பட்டை: விண்டோஸ் 95/98/மீ/என்டி/2000 முறைமைகளில் கணினித் திரையின் அடிப்பாகத்தில் தோற்றமளிக்கும் வரைகலைக் கருவிப்பட்டை.இயக்கத்திலிருக்கும் பல்வேறு பயன்பாடுகளை சின்னமாக்கி பணிப்பட்டையில் வைத்துக்கொண்டு தேவையானதை மட்டும் செயல்படுத்தலாம். தொடங்கு (Start)பொத்தானும்,தேதி,நேரம் போன்ற விவரங்களும் இதில் உண்டு. விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு பயன்பாடு இயங்கிக்கொண்டிருக்கும்போது அதற்குரிய ஒரு பொத்தான் பணிப்பட்டையில் தோற்றமளிக்கும். இவ்வாறு தோற்றமளிக்கும் பொத்தான்கள் மீது சொடுக்கி,தேவையான பயன்பாட்டில் பணிபுரியலாம்.

task dispatcher:பணிச்செலுத்தி.

task management:பணிமேலாண்மை.

taskbar options:பணிப்பட்டை விருப்பத் தேர்வுகள்.

task panel:பணிப்பொறுப்புச்சட்டம்; பணிச் சட்டம்.

tak queue:பணிவரிசை;பணிச்சாரை.

.tc:.டீசி ஓர் இணையதள முகவரி துர்க்ஸ்-கைக்கோஸ் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

T-carrier:டீ-சுமப்பி: ஒரு பொதுச் சுமப்பி வழங்குகின்ற தொலைதூர இலக்கமுறைத் தகவல் தொடர்புத் தடம்.இரு முனைகளிலுமுள்ள ஒன்றுசேர்ப்பிகள் பல்வேறு குரல் தடங்களை ஒன்றிணைத்து இலக்க முறைத் தரவுத் தாரைகளாய் (Digital Data stream) அனுப்பி வைக்கின்றன.பெறுமுனையில் குரல்தடங்கள் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன.1993ஆம் ஆண்டில் ஏடி&டீ நிறுவனம் டி-சுமப்பி சேவையை அறிமுகப் படுத்தியது.சுமந்து செல்லும் தட எண்ணிக்கையைப் பொறுத்து பல்வேறு நிலைகள் உள்ளன.டீ.1,டி2,டி3,டி4 ஆகியவை உண்டு.குரல் தகவல் தொடர்பு தவிர இணைய இணைப்புக்கும் டீ-சுமப்பிகள் பயன்படுகின்றன.

TcL/Tk:டிசிஎல்/டிகே;கருவிக்கட்டளைமொழி/கருவித் தொகுதி எனப் பொருள்படும் Tool Command Language/Tool என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒரு உரை நிரல் மொழியும் (TCL),ஒரு வரைகலைப் பயனாளர் இடைமுகக் கருவித் தொகுதியும் (TK) இணைந்த ஒரு நிரலாக்க அமைப்பு.டீசிஎல் மொழி ஊடாடு நிரல்களுக்கும்,உரைத் தொகுப்பான்களுக்கும் பிழை நீக்கிகளுக்கும்,செயல்தளத்துக்கும் கட்டளைகளை வழங்க முடியும்.அவை சிக்கலான தரவுக் கட்டமைப்புகளை உரை நிரல்களில் உட்செருகுகிறது.

TCP:டீசிபீ: பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை என்று பொருள்படும் Transmission Contol Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.டீசிபி/ஐபி நெறிமுறையில் உள்ளிணைந்தது.தகவலை சிறுசிறு பொட்டலங்களாக்கி,ஐபீ மூலமாக அனுப்பி வைக்கிறது.மறு முனையிலிருந்து ஐபி மூலம் பெறப்படும் தகவல் பொட்டலங்களைச் சரிபார்த்து ஒன்றுசேர்த்து முழுத் தகவலை வடிவமைக்கிறது. ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ அடுக்குகளில் போக்குவரத்து அடுக்கில் டீசிபீ செயல்படுகிறது.

TCP/IP:டீசிபீ/ஐபி: பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை/இணைய நெறிமுறை என்று பொருள்படும் Transmission Control Protocol/Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இரு கணினிகளுக்கிடையேயான தகவல் தொடர்புக்கென அமெரிக்கப் பாதுகாப்புத்துறையினர் உருவாக்கிய நெறிமுறை. யூனிக்ஸ் இயக்கமுறையின் அங்கமாக உருவாக்கப்பட்டது. இன்றைக்கு,இணையம் உட்பட பிணையங்களுக்குள்ளே தகவல் பரி மாற்றத்துக்கான,ஏற்றுக் கொள்ளப்பட்ட நெறிமுறையாய் நிலைபெற்றுவிட்டது.

TCP/IP stack:டீசிபி/ஐபி அடுக்கு:டீசிபி/ஐபி நெறிமுறைகளின் தொகுப்பு.

td:டீ.டி:ஓர் இணையதள முகவரி சாட் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

tear-off:பிய்த்தெடு; கிழித்தெடு : வரைகலைப் பயனாளர் இடை முகத்தில் (GUI), திரையில் தோன்றும் ஒர் உருப்படியை இழுத்துச் சென்று பயனாளர் விரும்பும் இடத்தில் வைத்துக்கொள்ளும் வசதி உண்டு.எடுத்துக்காட்டாக,வரைகலைப் பயன்பாடுகள் பலவற்றிலும் பட்டிகள்,கருவிப் பெட்டிகள் போன்றவற்றை இழுத்துச் சென்று வேறிடத்தில் வைத்துக்கொள்ளும் வசதி உள்ளது.

techie:நுட்பி;நுட்பர்:தொழில் நுட்பம் தெரிந்த நபர்.பயனாளர் பணியாற்றும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ,ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கலைப் புரிந்துகொள்ள முடியாமல் போனாலோ,உடனடியாகத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறக்கூடிய நபர். நுட்பர் ஒரு பொறியாளராக இருக்கலாம் அல்லது ஒரு தொழில்நுட்பாளராக இருக்கலாம்.ஆனால், பொறி யாளர் அனைவரும் நுட்பராகிவிட முடியாது.

technical support:தொழில்நுட்ப உதவி.

'technical test:தொழில்நுட்பச் சோதனை.

technology,information:தகவல்தொழில்நுட்பம்.

technolgoy lab:ஆய்வுக் கூடம்.

'technical interview:தொழில்நுட்ப நேர்காணல்.

technophile:தொழில்நுட்ப ஆர்வலர்: வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் உற்சாகத்துடன் ஆர்வம் செலுத்தும் ஒருவர்.

telco:டெல்கோ:தொலைபேசிக் குழுமம் எனப் பொருள்படும் Telephone Company என்பதன் சுருக்கச்சொல்.பொதுவாக,இச்சொல் இணையச் சேவைகளை வழங்கும் தொலைபேசிக் குழுமத்தைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது.

telecom:தொலைதொடர்பு.

telecopy:தொலைபடி;தொலை நகல்.

telehomecare:தொலையில்ல மருத்துவம்.

telephone:தொலைபேசி.

telephony device:தொலைபேசிச் சாதனம்: ஒலி சமிக்கைகளை மின்சார சமிக்கைகளாக மாற்றி வேறிடத்துக்கு அனுப்பி,பெறுமிடத்தில் மின்சாரச் சமிக்கைகளை ஒலியாக மாற்றியமைக்கும் சாதனம்.

telephone exchange:தொலைபேசிப் பரிமாற்றம் /இணைப்பகம்.

television:தொலைக்காட்சி.

televoting:தொலைநிலை வாக்களிப்பு.

telemedicine clinic:தொலைநிலை மருததுவமனை.

telnet1:டெல்நெட்1: டெல்நெட் நெறிமுறையை நடைமுறைப்படுத்துகின்ற கிளையன் நிரல்.

telnet2:டெல்நெட்2: டெல்நெட் நெறிமுறையைப் பயன்படுத்தி இணையத்தின் மூலமாகத் தொலைதூரக் கணினியை அணுகுதல்.

telnet3:டெல்நெட்3: ஓர் இணையப் பயனாளர் இணையத்தில் பிணைந்துள்ள ஒரு தொலைதூரக் கணினியில் நுழைந்து,கட்டளைகளை இயக்க வகைசெய்யும் நெறிமுறை.அக்கணினியுடன் நேரடியாக இணைக்கப்பட்ட,உரை அடிப்படையிலான ஒரு முனையம் போலவே செயல்பட முடியும்.டெல்நெட், டீசிபி/ஐபி நெறிமுறைக் குடும்பத்தில் ஓர் அங்கம்.

template wizzard:வார்ப்புரு வழிகாட்டி.

temporary password:தற்காலி நுழை சொல்.

teraflops:டெராஃபிளாப்ஸ்; மீத்திறன் கணினிகளின் வேகத்தை அளக்கும் அலகு.ஒரு வினாடியில் ஒரு டிரில்லியன் மிதவைப் புள்ளிக் கணக்கீடுகள் என்பதைக் குறிக்கும்.ஒரு வினாடியில் எத்தனை டெராஃபிளாப்ஸ் எண்ணிக்கையிலான கணக்கீடுகளை ஒரு கணினி செய்ய முடியும் என்பதைக் கணக்கிட்டு அதன் வேகம் மதிப்பிடப்படுகிறது.1 டிரில்லியன்-1000 பில்லியன் (1012). terminal adapter:முனையத் தகவி.

terminated line:முடிப்புற்ற இணைப்பு.

termination:முடிவுறல்.

termination,abnormal:இயல்பிலா முடிப்பு.

terminator cap:முடிப்பிக் குமிழ்: ஓர் ஈதர்நெட் பாட்டையின் இருமுனைகளிலும் பொருத்தப்படும் தனிச்சிறப்பான இணைப்பி.இந்த இணைப்பிகளில் ஒன்றோ இரண்டுமோ இல்லாமல் போனால் ஈதர்நெட் பிணையம் செயல்படாது.

ternary:மும்மை:1.நிரலாக்கத்தில் ஓர் உறுப்பு மூன்று இயலும் மதிப்புகளில் ஒன்றைப் பெறும் பண்பியல்பு.2.ஒரு நிபந்தனையில் மூன்று வெவ்வேறு நிலைகள்.3.அடியெண்-3 கொண்ட எண் முறைமை.(இரும,எண்ம,பதின்ம,பதினறும முறைகளைப்போல).

test:சோதனை: ஒரு நிரலைப் பல்வேறு கோணங்களில் பரிசோதித்தல்.பல்வேறு உள்ளிட்டு மதிப்புகள் தந்து சரியாகச் செயல்படுகிறதா எனப் பரிசோதனை செய்தல்.

test automation software:சோதனைத் தானியங்கு மென்பொருள்:ஒரு மென்பொருள் பயன்பாட்டுத் தொகுப்பின் புதிய அல்லது திருத்திய பதிப்பைப் பரிசோதனை செய்வதற்கான அனைத்துச் செயல்முறைகளையும் ஒரு நிரல் மூலமே செய்துமுடித்தல்.சோதனையாளர் தர வேண்டிய உள்ளீடுகள் பிற கட்டளைகள் அனைத்தையும் சோதனைத் தானியங்கு மென்பொருளே செய்து முடிக்கும்.

test box:சோதனைப் பெட்டி.

test message:சோதனைச் செய்தி.

testing room; ஆய்வு அறை.

test programme:சோதனை செயல்முறை;சோதனை நிரல்.

test post:சோதனை அஞ்சல்: செய்தி எதுவுமில்லாத ஒரு செய்திக் குழுக் கட்டுரை. இணைப்பைச் சரிபார்க்க அனுப்பிவைக்கப்படுவது.

TeXorTeX:டெக்ஸ்:கணிதவியலாளரும் கணினி அறிஞருமான டொனால்ட் க்ளத்(Donald Knuth) என்பவர் உருவாக்கிய ஒரு உரை வடிவமைப்பு மென்பொருள்.ஆஸ்க்கி உரை உள்ளிட்டிலிருந்தே அறிவியல்,கணித மற்றும் பிற தொழில்நுட்ப ஆவணங்களை உருவாக்க முடியும். யூனிக்ஸ்,எம்எஸ்டாஸ்,விண்டோஸ்,ஆப்பிள் மேக் முறைமைகளுக்கான டெக்ஸ் இணையத்தில் இலவசமாகக்கிடைக்கிறது(stp://ftp.tex.ac.uk/texarchievi).சில கூடுதல் வசதிகளுடன் விற்பனைக்கும் கிடைக்கிறது. ${\pi}r^$ என உள்ளீடு செய்தால் II2: என்கிற வெளியீடு கிடைக்கும்.டெக்ஸை குறுமங்கள் (macros) மூலம் விரிவாக்க முடியும்.பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கென குறுங்கோப்புகள் கிடைக்கின்றன.

text area:உரைப் பகுதி.

text body:உரை உடற்பகுதி.

text colour:உரை நிறம்.

text entry:உரைப்பதிவு: உரை உள்வீடு விசைப்பலகை மூலம் உரைக்கான எழுத்துகளை உள்ளிடல்.

text lables:உரைச் சிட்டைகள்.

text mode:உரைப் பாங்கு: கணினித் திரையகத்தின் ஒருவகைக் காட்சிப் பாங்கு. இந்தப் பாங்கில் எழுத்து கள்,எண்கள்,ஏனைய குறிகள் மட்டுமே திரையில் தோன்றமுடியும்.வரைகலைப் படிமங்களைக் காட்ட முடியாது.அதுமட்டுமின்றி,வடிவமைக்கப்பட்ட எழுத்து வடிவங்களையும் (சாய்வெழுத்து (Italics),மேல்எழுத்து(superscript),கீழ்எழுத்து (subscript)]முடியாது.சுருக்கமாக,விசிவிக் (WYSIWYG-What You See Is What You Get) சாத்தியமில்லை எனலாம்.

text string search:உரைச்சாரம் தேடல்.

text to columns:உரையை நெடுக்கையாக்கு.

.tf:.டீ.எஃப்: ஓர் இணையதள முகவரி தெற்கு ஃபிரான்ஸ் பிரதேசத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

tg:.டீஜி:ஓர் இணயைதள முகவரி டோகோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

TGA:டீஜிஏ:1.டார்கா (targa) என்பதன் சுருக்கம்.ட்ரூவிஷன் நிறுவனம் உருவாக்கிய கிடைவரி (Raster) வரைகலைக்கோப்பு வடிவம், 16 துண்மி(பிட்),24துண்மி (பிட்),32 துண்மி(பிட்) நிறங்களைக் கையாளவல்லது.2.மிகு தெளிவுள்ள ஒளிக்காட்சி வரைகலைப்பலகை வரிசைகளின் வணிகப் பெயர்.

.th:.டீ.ஹெச்:ஓர் இணையதள முகவரி தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

the microsoft network(MSN): மைக்ரோசாஃப்ட் நெட்வொர்க் (எம்எஸ்என்): மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின்,பல்வேறு வசதிகள் நிறைந்த நிகழ்நிலைச் சேவை.1995ஆம் ஆண்டு ஆகஸ்டில், விண்டோஸ் 95 அறிமுகப்படுத்தப்பட்டபோது தொடங்கப்பட்டது.

thermal wax-transfer printer:வெப்ப மெழுகு-மாற்றல் அச்சுப்பொறி: ஒரு சிறப்புவகை தொடா அச்சுப்பொறி (Non-impact printer)வெப்பத்தின் மூலம் வண்ணமெழுகினை தாளின் மீது உருகவைத்து படிமங்கள் வரையப்படுகின்றன.வழக்கமான வெப்ப அச்சுப்பொறியைப்போலவே,சூடாக்குவதற்கு ஊசி(பின்)கள் பயன்படுத்தப்படுகின்றன. பல வண்ண மெழுகு பூசப்பட்ட நாடா மீது சூடான ஊசிகள் படும்போது ஊசிகளுக்கு அடியிலுள்ள மெழுகு உருகித் தாளில் ஒட்டிக் கொள்கின்றன. ஊசிகள் தாளைத் தொடுவதில்லை.

thermography:வெப்பக்கதிர்.

therminomic:மின்மயத்தூள்

the world-public access UNIX: உலகம்-பொது அணுகல் யூனிக்ஸ்: பாஸ்டனை மையமாகக் கொண்ட மிகப்பழைய பொது அணுகு இணையச் சேவை வழங்கன்.1990 ஆண்டிலிருந்து இவ்வமைப்பு,தொலைபேசி மூலம் இணையத்தை அணுகும் வசதியைத் தந்தது.அதாவது பொதுமக்கள் இணையத்தை அணுகமுடியும்.வைய விரிவலை அணுகல்,யூஸ்நெட்,ஸ்லிப்/பீபீ.பீ. டெல்நெட்,எஃப்.டீ.பீ.ஐஆர்சி,கோஃபர், மின்அஞ்சல் போன்ற பிற வசதிகளையும் வழங்குகிறது.1995 ஆம் ஆண்டிலிருந்து யுயுநெட் மூலமாக உள்ளூர் தொலைபேசி வழி அணுகலையும் அளித்து வருகிறது. thin client:மெல்லிய கிளையன்;சிறுத்த கிளையன்.

thin server:மெல்லிய வழங்கன்;சிறுத்த வழங்கன்: ஒருவகை கிளையன்/வழங்கன் கட்டுமானம்,பெரும்பாலான பயன்பாடுகள் கிளையன் கணினியிலேயே இயங்கும். இதுபோன்ற கிளையன்,கொழுத்த கிளையன் என வழங்கப்படுகிறது.எப்போதாவது தொலைதூர வழங்கனில் தகவல் செயல்பாடுகள் நடக்கும். இதுபோன்ற ஏற்பாடு சிறந்த கிளையன் செயல்திறனைக் கொடுக்கும்.ஆனால் நிர்வாகப் பணிகளைச் சிக்கலாக்கிவிடும்.எடுத்துக்காட்டாக, கிளையனிலிருக்கும் மென் பொருள்களை மேம்படுத்துவது மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

thin space:மெல்லிடவெளி;மெல்லிய இடவெளி: ஓர் எழுத்துருவில் அதன் பாயின்ட் அளவில் நான்கில் ஒரு பங்குள்ள கிடைமட்ட இடவெளி,எடுத்துக்காட்டாக,12-பாயின்ட் அளவுள்ள ஓர் எழுத்துருவில் மெல்லிடவெளி 3-பாயின்ட் அகலத்தில் இருக்கும்.

thread:புரி.

third party:மூன்றாவதாள்; மூன்றாம் ஆள்;மூன்றாம் குழுமம்,தொடர்பற்றவர் தொடர்பிலாக் குழுமம்:ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் கணினிகள் மற்றும் புறச்சாதனங் களுக்குரிய உதிரிபாகங்களைத் தயாரித்து விற்றுவரும் குழுமத்தை இவ்வாறு அழைப்பர். பெரும்பாலும் பெரிய நிறுவனத்தோடு இவர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இருக்காது. கணினித் தயாரிப்பாளர்,கணினிப் பயனாளர் நேரடித் தொடர்புடைய இந்த இருவர்க்கும் தொடர்பில்லாத மூன்றாவது ஆள் என்ற பொருளில் இவ்வாறு வழங்கப்படுகிறது.

threaded discussion:கோத்த உரையாடல்; தொடரும் விவாதம்:ஒரு செய்திக்குழு அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களில்,ஒவ்வொரு செய்தி அல்லது கட்டுரைக்கான பதில்கள்,எதிர்ப்பதில்கள் அனைத்தையும் தனித்தனியே அகர வரிசைப் படியோ,காலவரிசைப்படியோ தொகுக்காமல் மூலச் செய்தியோடு தொடர்ச்சியாகப் பின்னுவது.

threaded newsreader:கோத்த செய்தி படிப்பி: செய்திக்குழுக்களின் செய்திகள்/அஞ்சல்கள்/பதில்களை ஒன்றன்கீழ் ஒன்றாய் ஒரே செய்தி போலக்காட்டும் செய்திப் படிப்பு நிரல். பதில்கள் தனித்தனியே அகர வரிசை/காலவரிசைப்படி தொகுக்கப்பட்டிருக்காது.

threading:புரியாக்கம்: நிரலின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்க சில நிரலாக்க மொழிகளில் பயன்படுத்தப்படும் நுட்பம்.(எ-டு) ஃபோர்த் (Forth),ஜாவா,சி# போன்ற மொழிகளில் புரியாக்க நுட்பம் உள்ளது.ஃபோர்த் மொழியில், ஒவ்வொரு புரியாக்கப்பட்ட துணை நிரல் கூறுகளிலும் காணப்படும் பிற துணைநிரல்கூறுகளுக்கான அழைப்புகள் (ஃபோர்த் மொழியில் முன்வரையறுத்த ஒரு சொல்) அந்த நிரல்கூறுகளுக்கான சுட்டுகளால் (pointers) பதிலீடு செய்யப்படுகின்றன.

three address code:மும்முகவரிக் குறியீடு.

three-dimensional model:முப்பரிமாண மாதிரியம்:நீளம்,அகலம்,ஆழத்துடன் ஒரு பருநிலைப் பொருளை கணினியில் பாவித்தல்,x,y,z அச்சுகளில் அதன் பரிமாணங்கள் அமையும். பல்வேறு கோணங்களில் சுற்றித் திருப்பிப் பார்வையிட முடியும்.

three-tier client/server:மூன்றடுக்கு கிளையன்/வழங்கன்: மென்பொருள் அமைப்புகள் மூன்றடுக்குகளில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு கிளையன்/வழங்கன் கட்டுமானம்.(1)பயனாளர் இடைமுக அடுக்கு.(2) வணிகத் தருக்க அடுக்கு,(3) தரவுத்தள அடுக்கு. ஒவ்வோர் அடுக்கும் ஒன்று அல்லது மேற்பட்ட உறுப்புகளைக் கொண்டிருக்கும்.எடுத்துக்காட்டாக, மேல்அடுக்கில் ஒன்று அல்லது பல பயனாளர் இடை முகங்கள் இருக்கலாம்.ஒவ்வொரு பயனாளர் இடைமுகமும் நடு அடுக்கிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளுடன் ஒரே நேரத்தில் தொடர்புகொள்ள முடியும்.நடு அடுக்கிலுள்ள பயன்பாடு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தரவுத் தளங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

throttle control:தடுப்பிதழ்க் கட்டுப்பாடு: கணினியில் விமானப் பாவிப்பி அல்லது விளையாட்டுகளில்,பாவிப்பு எந்திரப் பொறியின் சக்தியைக் கட்டுப்படுத்தப் பயனாளருக்கு உதவும் ஒரு சாதனம்.தடுக் கிதழ்,பெரும்பாலும் ஒரு விசைப்பிடி (Joystick) அல்லது ஒரு சுக்கான் {Rudder)விசையுடன் இணைந்து பயன்படுத்தப்படும்.

throw:எறி:சி++/ஜாவா/சி# மொழிகளிலுள்ள ஒரு கட்டளை.

thumbnail:விரல்நுனி; விரல்நகம்; குறுஞ்சின்னம்:ஒரு படிமத்தின் மிகச்சிறு வடிவம். படிமங்களை அல்லது பல பக்கங்களை வெகு விரைவாகப் பார்வையிடுமாறு மின்னணு வடிவில் அமைத்திருத்தல்.எடுத்துக்காட்டாக,வலைப் பக்கங்கள் பெரும்பாலும் படிமங்கள் அல்லது குறுஞ்சின்னங்களைப் பெற்றிருப்பதுண்டு. இணைய உலாவி,முழு அளவுப் படிமத்தை விட இக்குறுஞ்சின்னங்களை வெகு விரைவாகப் பதிவிறக்கம் செய்துவிடும்.இக்குறுஞ்சின்னங்களை சுட்டியால் சொடுக்கியதும் முழுப்படம் திரையில் விரியும்.

TIA:டீஐஏ: முன்கூட்டிய நன்றி என்று பொருள்படும் Thanks in Advance என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில், ஒரு கோரிக்கையை முன் வைக்கும்போது, வழக்கமாகச் சொல்லப்படுவது.

tick:டிக்:1.ஒரு கடிகாரத் துடிப்பு மின்சுற்றிலிருந்து உமிழப்படுகின்ற,வழக்கமாய் அடிக்கடி ஏற்படுகின்ற சமிக்கை.இந்த சமிக்கையால் உருவாக்கப்படும் குறுக்கீட்டையும் இது குறிக்கிறது.2.சில நுண்கணினி அமைப்புகளில்,குறிப்பாக மெக்கின்டோஷ் கணினியில்,ஒரு வினாடியில் அறுபதில் ஒருபங்கு. நிரல்கள் பயன் படுத்தும் அகநிலைக் கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் அடிப்படை நேர அலகு.

tiebreaker:சமன் நீக்கி;முடிச்சகற்றி: இரண்டு மின்சுற்றுகளுக்கிடையே எது முன்னுரிமை பெறுவது என்கிற சிக்கல் ஏற்பட்டு செயல்பாடு தடைப்படும்போது,ஒரு நேரத்தில் ஒரு மின்சுற்றுக்கு முன்னுரிமை தந்து சிக்கலைத் தீர்த்துவைக்கின்ற ஒரு மின்சுற்று. tie line:முடிச்சு இணைப்பு: ஒரு நிறுவனத்தின் இரண்டு அல்லது மேற்பட்ட பிரிவுகளை(தொலை தூரக் கிளைகளை) இணைப்பதற்காக,ஒரு தகவல் தொடர்பு நிறுவனத் திடமிருந்து (தொலை தொடர்புத் துறையினர்) குத்தகைக்குப் பெறப்படும் ஒரு தனியார் இணைப்பு.

.tif:டிஃப்: குறியிட்ட படிமக்கோப்பு வடிவில்(Tagged Image File Format-TIFF) அமைந்த பிட்மேப் படிமங்களை அடையாளங்காட்டும் கோப்பு வகைப்பெயர்.

TIFForTIF:டிஃப்:குறியிட்ட படிமக்கோப்பு வடிவாக்கம் எனப் பொருள்படும் Tagged Image File Format அல்லது Tag Image File Format என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சாம்பல் அளவீட்டு வரைகலைப் படிமங்களை வருடி,சேமித்து,பரிமாறிக்கொள்ள,பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோப்பு வடிவம்.பழைய வரைவோவியப் பயன்பாடுகளில் (பழைய மேக்பெயின்ட் போன்ற) டிஃப் வடிவாக்கம் மட்டுமே இருந்து வந்தது.ஆனால் தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன நிரல்களில் ஜிஃப்,ஜேபெக் போன்ற விதவித மான வடிவாக்கங்களில் படிமங்களைச் சேமிக்க வசதிகள் உள்ளன.

TIGA:டிகா: டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் வரைகலைக் கட்டுமானம் என்று பொருள்படும் Texas Instruments Graphics Architecture starp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் 340:0 வரைகலைச் செயலியின் அடிப்படையில் அமைந்த,ஒளிக்காட்சி தகவிக் கட்டுமானமாகும் இது.

tite vertically:செங்குத்தாய் அடுக்கு.

time accass:அணுகு நேரம்.

time acceleration:முடுக்கு நேரம்.

time add:நேரம் கூட்டு.

time add-substract:நேரம் கூட்டு-கழி.

time,available machine:இருக்கும் பொறி நேரம்;மொழிமாற்று நேரம்.

time,compile:தொகு நேரம்.

time error,run:இயக்க நேரப் பிழை.

time,idle:செயல்படா நேரம்.

time out settings:நேர முடிவு அமைப்புகள்.

time,real:நிகழ்வு நேரம்.

time,response:மறுமொழி நேரம்.

time,run:இயக்க நேரம்.

time,search:தேடு நேரம்.

time,seek:நாடும் நேரம்,கண்டறி நேரம்.

time services:நேரத் தொடர்.

time,share:பகிர்வு நேரம்.

time to live:வாழ்நாள்,ஆயுட்காலம்: இணையத்தில் அனுப்பப்படும் ஒரு தகவல் பொதியின் தலைப்புப்புலம்.அந்தப் பொதியை எவ்வளவு காலம் வைத்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

time total:மொத்த நேரம்.

time transfer:பரிமாற்ற நேரம்.

tilt down:கிடைமட்டமாய் சரிவாக்கு.

tilt left.இடப்பக்கம் சரிவாக்கு.

tilt right:வலப்பக்கம் சரிவாக்கு.

tiltup:சாய்த்து உயர்த்து.timed backup:நேரங்குறித்த காப்பு. timer clock:நேரம் காட்டிக் கடிகாரம்.

tip of the day:இன்றைய உதவிக் குறிப்பு.

tiny model:மிகச்சிறு மாதிரியம்: இன்டெல் 80x86 செயலிகளில் செயல்படுத்தப்படும் ஒரு நினைவக மாதிரியம்.இதில்,நிரல் குறி முறைக்கும்,தரவுகளுக்கும் சேர்த்து மொத்தம் 64 கிலோபைட்டுகள் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.சி-மொழி நிரல் ஒன்றை மிகச் சிறு நினைவக மாதிரியத்தில் மொழி மாற்றி (compile) உருவாக்கப்பட்ட EXE கோப்பினை,EXE2BIN போன்ற பயன்கூறுகள் மூலம் COM கோப்புகளாக மாற்றியமைக்க முடியும்.

title:தலைப்பு:

title bar:தலைப்புப் பட்டை: விண்டோஸ் போன்ற வரைகலைப் பயனாளர் இடைமுகத்தில் (GUI) திரையில் தோன்றும் சாளரங்களின் மேற்பகுதியில் அச்சாளரத்தின் பெயரைத் தாங்கியிருக்கும் பட்டை. பெரும்பாலான தலைப்புப் பட்டைகளில் சாளரத்தை மூடவும்,அளவு மாற்றுவதற்குமான பொத்தான்களும் இடம்பெற்றிருக்கும்.தலைப்புப் பட்டையில் சுட்டியை வைத்து அழுத்திக்கொண்டு சாளரத்தை எங்கு வேண்டுமானாலும் நகர்த்திச் செல்லலாம்.

.tj:டீஜே:ஓர் இணையதள முகவரி தாஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

.tk:.டீகே:ஓர் இணையதள முகவரி டேக்கேலாவ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

TLA:டீஎல்ஏ:மூன்றெழுத்துச் சுருக்கச்சொல் எனப்பொருள்படும் Three Letter Acronym என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் மின்னஞ்சல்,செய்திக் குழுக்கள் மற்றும் பிற நிகழ்நிலை மன்றங்களில் கணினிக் கலைச் சொற்களில் இருக்கும் ஏராளமான சுருக்கச் சொற்கள்,குறிப்பாக மூன்றெழுத்துச் சுருக்கச் சொற்கள் குறித்து அங்கதமாய்க் குறிப்பிடப்படும் சொல்.

.tm:டீஎம்:ஓர் இணையதள முகவரி துர்க்மேனிஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.tn:டீஎன்: ஒர் இணையதள முகவரி துனிசியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

to:.டீ.ஓ:ஓர் இணையதள முகவரி டோங்கா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

toggle case:இருநிலைமாற்றிப் பெட்டி:நிலைமாற்றிப் பெட்டி.

toggle switch:இருநிலை மின்மாற்றி.

toggle keys:நிலைமாறு விசைகள்: விண்டோஸ் 95/98இல் உள்ள ஒரு பண்புக்கூறு. கேப்ஸ்லாக்,நம்லாக்,ஸ்குரோல்லாக் போன்ற நிலை மாற்று விசைகளில் ஒன்றை நிகழ் (ON} அல்லது அகல் (OFF) நிலையில் வைக்கும்போது மெல்லிய/உரத்த பீப் ஒலி எழும்.

token bus network:வில்லைப் பாட்டைப்பிணையம்:தகவல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவில்லை அனுப்பும் முறையைக் கடைப்பிடிக்கின்ற,பாட்டைக் கட்டமைப்பில் அமைந்த ஒரு குறும்பரப்புப் பிணையம் (பணி நிலையங்கள் ஒற்றை,பகிர்வு தகவல் நெடுவழியில் பிணைக்கப்பட்டிருக்கும்).தகவல் அனுப்பும் உரிமையை வழங்கும் வில்லை ஒரு நிலையத்திலிருந்து இன்னொரு நிலையத்துக்கு அனுப்பப்படும்.ஒவ்வொரு நிலையமும் வில்லையைச் சிறிது நேரம் வைத்திருக்கும். அந்நேரத்தில் அந்நிலையம் மட்டுமே தகவல் அனுப்ப முடியும்.அதிக முன்னுரிமை பெற்ற நிலையத்திலிருந்து அதற்கடுத்த முன்னுரிமை பெற்ற நிலையத்துக்கு வில்லை அனுப்பி வைக்கப்படும்.அந்நிலையம்,பாட்டையில் அடுத்த நிலையமாக இருக்க வேண்டியதில்லை.சுருங்கக் கூறின்,வில்லையானது பிணையத்தில் ஒரு தருக்க நிலை வளையத்தில் (Logical Ring) சுற்றிவருகிறது எனலாம்.வளையக் கட்டமைப்பில் இருப்பதுபோன்று பருநிலை வளையத்தில் (Physical Ring) சுற்றி வருவதில்லை.இத்தகு பிணையங்கள் ஐஇஇஇ 802.4ல் வரையறுக்கப்பட்டுள்ளன.

tool bar:கருவிப்பட்டை.

toolbox:கருவிப்பெட்டி:முன் வரையறுக்கப்பட்ட(பெரும்பாலும் முன்பே மொழிமாற்றப்பட்ட) நிரல் கூறுகளின் தொகுதி. ஒரு குறிப்பிட்ட கணினிக்காக,ஒரு குறிப்பிட்ட பணிச்சூழலுக்கு,ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக நிரல் எழுதும் ஒரு நிரலர் இந்த மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

toolkit software:கருவித் தொகுதி மென்பொருள்

tools:கருவிகள்.

top-down design:மேல் கீழ் வடிவமைப்பு: ஒரு நிரல் வடிவமைப்பு வழிமுறை. மீவுயர்நிலையில் நிரலின் செயல்பாட்டை (தொடர்ச்சியான பணிகள்)வரையறுப்பதில் தொடங்குகிறது.ஒவ்வொரு பணியும் அதன் அடுத்தநிலைப் பணிகளாக உடைக்கப்பட்டு வரையறுக்கப்படுகின்றன.இவ்வாறு அடுத்தடுத்த நிலைக்குச் செல்லல்.

top-down programming:மேல் கீழ் நிரலாக்கம்:நிரலாக்கத்தில் ஓர் அணுகுமுறை. முதலில் நிரலின் முதன்மைப்பகுதி எழுதப்படும். முதன்மைப்பகுதியில் பல்வேறு துணைநிரல்களுக்கான அழைப்புகள் இருக்கும். அதன்பிறகு துணை நிரல்களுக்கான குறிமுறைகள் எழுதப்படும்.அதில் இடம்பெறும் அடுத்தநிலைத் துணைநிரல்களுக்குப் பிறகு குறிமுறை எழுதப்படும்.

topic drift:தலைப்பு நழுவல்: தலைப்பு திசைமாறல்:இணையத்தில் நடைபெறும் நிகழ்நிலைக் கலந்துரையாடலின் மூலக் கருப்பொருள்,தொடர்புடைய அல்லது தொடர்பில்லாத பிற தலைப்புக்குத் தாவுதல். எடுத்துக்காட்டாக,தொலைக்காட்சி பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போது,திரைப் படத்துக்குத் தாவி,பிறகு செய்தித்தாளுக்குப் போய்,அரசியலுக்குச் சென்று,ஊழலுக்கு மாறி, விலைவாசியில் தொடர்ந்து,பழங்கள் காய்கறிகளின் நன்மையில் முடியலாம்.

top/head:மேல்/தலை(முனை).

topic group:தலைப்புக்குழு: நிகழ்நிலை விவாதப் பகுதி. ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் பொதுவான ஆர்வம் உள்ளவர்களின் குழு.

top-level domain:மேல்நிலைக் களம்: இணைய முகவரிகளின் களப்பெயர் அமைப்பில், பெரும்பாலான களப்பெயர்களுக்குப் பொருந்தக்கூடிய பரந்த வகையைக் குறிக்கும். தற்போது பயன்பாட்டில் உள்ள மேல்நிலைக் களப்பெயர்,.com,.edu,.gov,.net,.org,.mil,.int ஆகியவற்றில் ஒன்றாக இருக்கிறது.

top-of-file:கோப்பின் தொடக்கம்:1.ஒரு கோப்பின் தொடக்கம்.குறிப்பிட்ட பயன்பாட்டில் உருவாக்கப்படும் கோப்புகளின் முதல் பைட் ஒரு சிறப்புக் குறியீடாக இருக்கும்.அதைக் கொண்டே அக்கோப்பு குறிப்பிட்ட வகையைச் சார்ந்தது என்பதை அறியமுடிகிறது.2.வரிசை முறைப்படுத்தப்பட்ட ஒரு தரவுத்தள அட்டவணையில் முதல் ஏடு.

.tor.ca:.டீஒஆர்.சி.ஏ: ஓர் இணையதள முகவரி கனடா நாட்டின் டொரன்டோ நகரைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

total:கூட்டுத் தொகை.

total time:முழு நேரம்.

total transfer:முழு மாற்றல்.

touch pad:தொடு திண்டு: அழுத்த உணரிகளைக் கொண்ட ஒருவகை வரைகலை வரைபட்டிகை (tablet).கையால் தொட்டு காட்டியின் இடம் உணர்த்தப்படும். மின்காந்தத்தைப் பயன்படுத்தும் மிகுதெளிவு வரைபட்டிகைகளும் உள்ளன.

touch sensitive:தொடு உணர்வு.

TP monitor:டீபீ கண்காணிப்பி;தொலை செயலாக்கம் (Teleprocessing) அல்லது பரிமாற்றச் செயலாக்கம்(Transaction Processing) என்பதன் சுருக்கம்.முனையங்களுக்கும் (அல்லது கிளையன்களுக்கும்),பெருமுகக் கணினிக்கும் (அல்லது வழங்கனுக்கும்) இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்பாடு செய்யும் ஒரு நிரல்.ஒன்று அல்லது மேற்பட்ட நிகழ்நிலைப் பரிமாற்றச் செயலாக்கப்(OLTP)பயன்பாடுகளுக்கு முரணில்லாச்சூழலை வழங்குகின்றன.

.tr:.டீஆர்: ஓர் இணையதள முகவரி துருக்கி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

trace dependents:சார்புகளைத் தேடு; எம்எஸ் எக்ஸெல்லில் ஒரு கட்டளை.

trace error:பிழை தேடு.

trace precedents:முன்காரணிகளைத் தேடு.எம்எஸ் எக்ஸெல்லில் ஒரு கட்டளை.

trackpad:தடத்திண்டு: தொடுதலை உணரும் திறனுள்ள சிறிய தட்டை வடிவத் திண்டால் ஆன ஒரு சுட்டுச் சாதனம். பயனாளர்கள் திரையில் தோன்றும் காட்டியை இங்குமங்கும் நகர்த்த,தடத்திண்டின்மீது விரலை வைத்து நகர்த்தினால் போதும்.இத்தகைய சாதனம் பெரும்பாலும் மடிக்கணினிகளில் பொருத்தப் பட்டுள்ளன.

tracks per inch:ஓர் அங்குலத்தில் தடங்களின் எண்ணிக்கை: ஒரு வட்டில் ஓர் அங்குல ஆரப்பரப்பில் பதியப்பட்டுள்ள ஒருமைய வட்டத் தடங்களின் (தரவுச் சேமிப்பு வளையங்கள்) அடர்த்தி.அதிக அடர்த்தி (அதிக எண்ணிக்கை யிலான தடங்கள்) இருப்பின்,வட்டில் அதிகமான தகவலைப் பதிய முடியும்.

track changes:மாற்றங்கள் குறித்து-வை. எம்எஸ் வேர்டில் ஒரு கட்டளை.

track time elapsed:தட நேர முடிவு.

track time remaining:தட நேர மிச்சம்.

tracker ball:தடக்கோளம்.

trademark:வணிகச் சின்னம்: ஒரு நிறுவனம் தானே தயாரிக்கும் தனியுரிமை விற்பனைப் பொருட்களை அடையாளங்காட்டும் ஒரு சொல்,சொல்தொடர்,குறியீடு,அல்லது ஒரு படிமம் (அல்லது இவற்றுள் சிலவற்றின் சேர்க்கை). பெரும்பாலும் வணிகச் சின்னத்தின் அருகில் TM அல்லது ® என்ற குறியீடு இருக்கும்.

trade off:ஈடுகட்டல்.

trade show:வணிகக் கண்காட்சி; விற்பனைப் பொருட்காட்சி;பல்வேறு விற்பனை நிறுவனங்கள் சேர்ந்து தங்களுடைய விற்பனைப் பொருட்களை பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தல்.

traffic:போக்குவரத்து':ஒரு தகவல் தொடர்பு இணைப்பு அல்லது தடத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள்.

traffic intensity:போக்குவரத்து அடர்வு.

trail:செல் தடம்.

trailer record:முன்னோட்ட ஏடு.

trailer edge: முன்னோட்ட விளிம்பு.

trailing edge:பின் விளிம்பு:ஒரு மின்சாரச் சமிக்கையின் பிற்பகுதி.ஓர் இலக்கமுறை சமிக்கை நிகழ் நிலையிலிருந்து அகல்நிலைக்கு மாறும்போது அதன் பின்விளிம்பு நிலைமாற்றத்தைக் குறிக்கிறது.

train:தொடர்,வரிசை: தொடர் வரிசையாய் அமைந்திருக்கும் உருப்படிகள் அல்லது நிகழ்வுகள். (எ-டு) இருமச் சமிக்கைகளை அனுப்பிடும் போது இடம்பெறும் இலக்கமுறைத் துடிப்புகள்.

train:பயிற்று,கற்பி: ஒரு மென் பொருள் அல்லது வன்பொருள் தயாரிப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்று இறுதிப் பயனாளருக்குக் கற்றுக் கொடுத்தல்.

transaction processing council:பரிமாற்றச் செயலாக்கக் குழு:வரையறுக்கப்பட்ட தர நிர்ணயிப்புகளை வெளியிடுவதை குறிக்கோளாகக் கொண்ட வன்பொருள்,மென்பொருள் விற்பனையாளர்களின் குழு.

transcription machine:எழுத்துப்படி பொறி.

transctional application:பரிமாற்றப் பயன்பாடு


transfer,conditional:நிபந்தனை மாற்றல்.

transfer control,conditional:நிபந்தனைக் கட்டுப்பாடு மாற்றல்.

transfer,serial:தொடர் மாற்றல்.

transfer,total:முழு மாற்றல்.

transfer statement:இடமாற்றக் கூற்று:மாற்றல் கூற்று;ஒரு நிரலாக்க மொழியில்,நிரலின் ஓட்டத்தில்,கட்டுப்பாட்டை, நிரலின் இன்னொரு பகுதிக்குத் திருப்பிவிடும் கட்டளை.பெரும்பாலான மொழிகளில் GOTO என்னும் கட்டளை இப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

transfer time:பரிமாற்ற நேரம்:தகவல் பரிமாற்றத்தில் தகவல் பரிமாற்றம் தொடங்கிய நேரத்துக்கும் முடிந்த நேரத்துக்கும் இடைப்பட்ட நேரம்.

transient portion:தற்காலிகப் பகுதி; மாறும் பகுதி.

transistor,டிரான்சிஸ்டர்; மின்மப் பெருக்கி இடம்மாற்று (transfer),மின்தடை (resistor) என்ற இருசொற்களின் கூட்டு.திண்ம நிலை மின்சுற்றுப் பொருள்கூறு.மூன்று முனைகளுடன் இருக்கும்.(1)அடிவாய்(base).(2)உமிழி(emitor). (3)திரட்டி (collector).இதில் பாயும் மின்னழுத்தம் (Voltage) அல்லது மின்னோட்டம் (Current) வேறொரு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தும், மின்மப்பெருக்கி பல்வேறு பணிகளைச் செய்கிறது.(எ.டு) திறன் பெருக்கி (amplifier), நிலைமாற்றி(switch),அதிர்வி(oscillator).நவீன மின்னணுவியலில் தவிர்க்கப்பட முடியாத மிக அடிப்படையான பொருள்கூறு ஆகும்.

translation time:பெயர்ப்பு நேரம்.

transition:மாறுகை.

transliteration:ஒலிபெயர்ப்பு; Computer என்ற சொல்லைக் கம்ப்யூட்டர் என எழுதுவது.

transmission, asynchromous data: ஒத்திசையா தரவுப் பரப்புகை.

transmission,data:தரவுப் பரப்புகை.

transmission medium:செலுத்து ஊடகம்.

transmission speed:வேகம்;பரப்பு வேகம்.

transmission retry:பரப்பு மறுமுயற்சி

transmitter:அனுப்பி;பரப்பி;செலுத்தி: மின்னியல் முறையில் குறியாக்கம் செய்யப்பட்ட தகவலை வேறோர் இடத்துக்கு அனுப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட மின்சுற்று அல்லது மின்னணுச் சாதனம்.

transperency adapter:மறைப்பிலாத் தகவி.

transport layer:போக்குவரத்து அடுக்கு: ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ அடுக்கில் நான்காவது அடுக்கு. பிணைய அடுக்குக்கு நேர் மேலே உள்ளது. சேவையின் தரத்துக்கும்,தகவலைத் துல்லியமாக வினியோகிக்கவும் உதவுகிறது.பிழையைக் கண்டறிதல்,அவற்றைச் சரிப்படுத்தும் பணிகள் இந்த அடுக்கில் நடைபெறுகின்றன.

transputer:டிரான்ஸ்பியூட்டர்;சில் கணினி: மின்மப்பெருக்கி (Transistor),கணினி (Computer)ஆகிய இருசொற்களின் கூட்டுச் சொல். ஒற்றைச் சிப்புவில் ஆன முழுக் கணினி.ராம் நினைவகம் மையச் செயலகம் அனைத்தும் அடங்கிய ஒற்றைச் சிப்பு.இணைநிலைக் கணிப்பணி அமைப்புகளுக்கு அடிப்படையான கட்டுமான உறுப்பாகும்.

Trash:குப்பைத் தொட்டி:குப்பைக் கூடை: மெக்கின்டோஷ் ஃபைண்டர் பயன்பாட்டில் குப்பைத் தொட்டி போல் தோற்றமளிக்கும் ஒரு சின்னம். ஒரு கோப்பினை அழிக்க விரும்பும் பயனாளர் அக்கோப்புக்குரிய சின்னத்தை இழுத்துவந்து குப்பைத் தொட்டியில் விட வேண்டும்.குப்பைத் தொட்டியில் இடப்பட்ட கோப்பு உண்மையில் அழிக்கப்படாது. தேவையானபோது மீட்டுக்கொள்ளலாம்.குப்பைத் தொட்டிமீது இரட்டைச் சொடுக்கிட்டுத் திறந்து மீட்க வேண்டிய கோப்பினை குப்பைத் தொட்டியிலிருந்து இழுத்து வெளியேவிட வேண்டும்.குப்பைத் தொட்டியைக் காலியாக்கு (Empty Trash) என்னும் கட்டளை மூலம் அதிலுள்ள கோப்புகளை நிரந்தரமாக நீக்கிவிடலாம்.

traverse:பயணித்தல்; ஊடு கடத்தல்: நிரலாக்கத்தில்,மரவுரு அல்லது அதுபோன்ற தரவுக் கட்டமைப்புகளில் அனைத்துக் கணுக்களையும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அணுகுவதைக் குறிக்கும்.

trays:இழுப்பறைகள்.

tree sort:மர வரிசைப்படுத்தல்.

trellis-coded modulation:பின்னல் குறிமுறைப் பண்பேற்றம்:90° தள்ளியிருக்கும் கால்வட்ட வீச்சுப் (Amplitude) பண்பேற்றத்தின் மேம்பட்ட வடிவம்.வினாடிக்கு 9600 துண்மி(பிட்) அல்லது அதற்கும் மேற்பட்ட வேகத்தில் செயல்படும் இணக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது.சுமப்பி அலையின் பாகை,வீச்சு ஆகிய இரண்டின் மாற்றங்களுக்கு இயைந்தவாறு,தகவலானது தனித்த துண்மி(பிட்டு)தொகுதிகளாக குறியாக்கம் செய்யப்படுகிறது.பிழைச் சரிபார்ப்புக்கான துண்மிகளும் உடன்சேர்க்கப்படுகின்றன.

:trigger:விசைவில்'.

trim:ஒழுங்கமை.

trial version:வெள்ளோட்டப் பதிப்பு: முன்னோட்டப் பதிப்பு.

tribble click:முச்சொடுக்கி.

trouble shoot:பிழை காண்.

trol:தூண்டில் செய்தி:ஒரு செய்திக் குழுவில் அல்லது பிற நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில்,சூடான பதிலை எதிர்நோக்கி அஞ்சலிடும் சர்ச்சைக்கிடமான செய்தி.எடுத்துக் காட்டாக,வளர்ப்பு விலங்கு விரும்பிகளின் செய்திக்குழுவில் பூனையைத் துன்புறுத்துவதை நியாயப்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிடல்.

trouble ticket:சிக்கல் சீட்டு:ஒரு குறிப்பிட்ட சாதனம் அல்லது கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கல் பணிப்பாய்வுச்(work flow) செயலாக்கம் மூலமாகக் கண்டறியப்பட்டுத் தரப்படும் அறிக்கை,தொடக்க காலங்களில் இது தாளில் அச்சிடப்பட்டதாய் இருந்தது.இன்றுள்ள பல்வேறு பணிப்பாய்வு மற்றும் உதவி-மேசைப் (Help Dest)பயன்பாடுகளில் மின்னணு சிக்கல் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

True Basic:ட்ரூபேசிக்: மூல பேசிக் மொழியை உருவாக்கிய ஜான்கெம்னியும் தாமஸ்குர்ட்ஸும் இணைந்து,பேசிக் மொழியைத் தரப்படுத்தவும்,நவீனப்படுத்தவும் 1983ஆம் ஆண்டில் ட்ரூபேசிக் மொழியை உருவாக்கினர். ட்ரூ பேசிக்கில் வரி எண்கள் தேவையில்லை. கட்டமைப்பான (structured),மொழிமாற்றி (compiler) அடிப்படையிலான மொழியாகும். உயர்நிலைக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகளைக்(control structures) கொண்டது.இதனால் கட்டமைப்பு நிரலாக்கம் (structured programming) இயல்வதாகிறது.

True Type:மெய்வகை: ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் 1991இல் அறிமுகப்படுத்திய வெளிக்கோட்டு எழுத்துருத் தொழில்நுட்பம்.மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1992 ஆம் ஆண்டில் வெளியிட்டது.இது ஒரு விசிவிக் (WYSIWYG) எழுத்துருத் தொழில்நுட்பம் ஆகும். அதாவது,திரையில் காணும் எழுத்து வடிவங்கள் அப்படியே அச்சில் கிடைக்கும்.

try:முயல்.

ΤSΑΡΙ டீசாப்பி:டீஎஸ்ஏபிஐ:தொலைபேசிச் சேவை பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் எனப்பொருள்படும் Telephony Services Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகப்பெரும் தொலைபேசி அமைப்புக்கும் ஒரு கணினிப் பிணைய வழங்கனுக்கும் இடையேயான இடைமுகத்துக்குரிய தர வரையறைகள்.நாவெல் நிறுவனமும் ஏடீ&டீ நிறுவனமும் இணைந்து உருவாக்கியவை.பல்வேறு தொலைபேசிக் கருவி உற்பத்தியாளர்களாலும் மென்பொருள் தயாரிப்பாளர்களாலும் ஆதரிக்கப்படுகிறது.

TSR:டீஎஸ்ஆர்:நினைவகத்தில் தங்கிச் செயல்படுதல் என்று பொருள்படும் Terminate and Stay Resident என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒரு நிரலை இயக்கியவுடன் நினைவகத்தில் சென்று தங்கிவிடும்.ஆனால் செயல்படாது.ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நடைபெறும் போது அல்லது வேறொரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போது நினைவகத்தில் இருக்கும் நிரலை இயக்க முடியும்.எம்எஸ் டாஸ் போன்ற பல்பணித் திறனற்ற இயக்க முறைமைகளில் இதுபோன்ற நிரல்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

.tt:.டீடீ:ஓர் இணையதள முகவரி டிரினிடாட் டொபேக்கோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களபபெயர்.

TFN:டீடிஎஃப்என்: இப்போதைக்கு டாட்டா என்று பொருள்படும் Ta Ta for now என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையக் கலந்துரையாடல் குழு அல்லது தொடர் அரட்டையில்(IRC)பங்கு பெற்றுள்ள ஒருவர் குழுவிலிருந்து தற்காலிகமாக விலகிச் செல்லல். பிறகு வந்து சேர்ந்துகொள்வார்.

TTY:டீடீஒய்:தொலைத் தட்டச்சு (Teletypewriter)என்பதன் சுருக்கம்.தொலைபேசி இணைப்பு வழியாக நடைபெறும் குறைந்தவேக தகவல் தொடர்புக்கான கருவி.ஒவ்வொரு எழுத்துகளாக உள்ளீடு செய்ய ஒரு விசைப்பலகையும்,தொலைவிலிருந்து வரும் தகவலை ஒவ்வொரு எழுத்தாக அச்சிட அச்சுப்பொறியும் கொண்டது.

tube,cathode:எதிர்மின் குழாய்.

tube store,cathod ray:எதிர்மின் கதிர்க் குழாய் சேமிப்பு.

tunnel:சுருங்கை வழி: ஒரு நெறிமுறையின் கீழ் உருவாக்கப்பட்ட பொதி அல்லது செய்தியை இன்னொரு நெறிமுறைக்கான பொதியில் சுற்றிவைத்தல்.இப்படிச் சுற்றி வைத்த பொதி, மேலுறை நெறிமுறையின் பிணையத்தில் இன்னோர் இடத்துக்கு அனுப்பப்படும்.நெறிமுறைக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவே இந்த வகையான பொதிப் பரிமாற்றம் பயன்படுத்தப்படுகிறது. tuple:பண்புக்கூறுத் தொகுதி;கிடக்கை; ஏடு:ஒரு தரவுத்தள அட்டவணையில் தொடர்புடைய,பண்புக்கூறுகளின் மதிப்புகளடங்கிய தொகுதி.உறவுநிலைத் தரவுத்தள மேலாண்மை அமைப்பில் இது ஒரு கிடக்கை (Row) ஆகச் சேமிக்கப்படுகிறது.உறவுநிலையில்லாத் அட்டவணை கோப்புகளில் ஏடு (Record) என அழைக்கப்படுகிறது.

turnpike effect:வழிமறிப்பு விளைவு: ஒரு தகவல் தொடர்பு அமைப்பில் அல்லது ஒரு பிணையத்தில் அளவுக்கதிகமான போக்குவரத்தினால் ஏற்படக்கூடிய முட்டுக்கட்டை நிலை.

.tv:.டீவி: ஓர் இணையதள முகவரி தூவாலு நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.tw:.டீ.டபிள்யூ:ஓர் இணையதள முகவரி தைவான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

TWAIN:ட்வய்ன்:ஓர் ஆர்வம் தூண்டும் பெயரில்லாத தொழில்நுட்பம் என்று பொருள்படும் Technology Without An Interesting Name என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.மென்பொருள் பயன்பாடுகளுக்கும், வருடு பொறியொத்த படிமக்கவர்வு சாதனங்களுக்கும் இடையேயான,ஏற்றுக் கொள்ளப்பட்ட செந்தர இடைமுகம்.ஏறத்தாழ அனைத்து வருடுபொறிகளிலும் ட்வய்ன் தொழில்நுட்பம் உள்ளது.மென்பொருள்களிலும் அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

tween:இடையுரு:இடையாள்:கணினி வரைகலையில் உருமாற்ற(morphing) நிரலில் தொடக்க உருவுக்கும் இறுதி உருவுக்கும் இடைப்பட்ட உருவங்களைக் கண்டறிதல்.

twisted-pair cable:முறுக்கிணை வடம்: இரண்டு தனித்தனி தடுப்புறையிட்ட கம்பிகள் ஒன்றாக முறுக்கப்பட்ட வடம்.அருகிலுள்ள வடங்களிலிருந்து வரும் வானலை இடையூறுகளைக் குறைக்க இவ்வடம் பயன்படுத்தப்படுகிறது.இரண்டிலொரு கம்பியில் முக்கியமான தகவல் சுமந்து செல்லப்படுகிறது. இன்னொரு கம்பி தரைப்படுத்தப்படுகிறது (earthed).

twisted pair wire:முறுக்கிணைக் கம்பி.

two-dimensional mode:இருபரிமாண மாதிரியம்:'நீள,அகலம் கொண்ட பருநிலைப் பொருள்களைக் கணினியில் பாவிப்பது.ஆழம் உருவகப்படுத்தப்படுவதில்லை.x,y-ஆகிய இரு அச்சுகளில் பொருளின் பரிமாணங்கள் குறிக்கப்படும்.

two dimentional storage:இருபரிமாண சேமிப்பகம்.

two-out-of-five-code:ஐந்தில் இரண்டு குறிமுறை:தகவல் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்படும் பிழை உணர்வுமிக்க குறிமுறை.பத்து இலக்கங்கள்(0முதல்9வரை) ஒவ்வொன்றையும் ஐந்து இரும இலக்கங்களால் (0,1)குறிப்பது.ஐந்து இரும இலக்கங்களில் இரண்டு 1மூன்று 0ஆகவோ,இரண்டு 0மூன்று 1ஆகவோ இருக்கும்.

two-planet internet:இருகோள் இணையம்.

two-tier client/server:ஈரடுக்குக் கிளையன்/வழங்கன்:ஒரு வகை கிளையன்/வழங்கன் கட்டுமானம்.இதில் மென்பொருள் அமைப்புகள் இரண்டு அடுக்குகளாகக் கட்டமைக்கப்படுகின்றன.(1) பயனாளர் இடை முகம்/வணிகத்தருக்க அடுக்கு. (2)தரவுத்தள அடுக்கு.நான்காம் தலைமுறை மொழிகள்(4GLs),இந்தவகை ஈரடுக்குக் கிளையன்/வழங்கன் கட்டுமானம் செல்வாக்குப் பெற்று விளக்குவதற்கு உதவின.

TXD:டீஎக்ஸ்டீ:தகவலை அனுப்பு (Transmit Data)என்பதன் சுருக்கம் அனுப்பப்படும் தகவலை ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்துக்குச் சுமந்து செல்லப்பயன்படும் இணைப்புத் தடத்தைக் குறிக்கும்.கணினியிலிருந்து இணக்கிக்கு ஆர்எஸ்-232-2 இணைப்புகளில் இரண்டாவது பின்.

.txt:.டீஎக்ஸ்டீ:ஆஸ்கி உரைக்கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர் (extension). பெரும்பாலும் .டீ.எக்ஸ்டீ வகைப்பெயர் கொண்ட ஆவணங்கள் வடிவமைப்புக் கட்டளைகளைக் கொண்டிருப்பதில்லை.இதன்காரணமாக இவ்வகைக் கோப்புகளை எந்த உரைத்தொகுப்பான் அல்லது சொல் செயலிகளிலும் கையாளமுடியும்.

tymnet:டிம்நெட்:நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் நிகழ்நிலைச் சேவைகளோடும், இணையச் சேவையாளர்களோடும் இணைப்புகளைக் கொண்டுள்ள ஒரு பொதுத்தகவல் பிணையம்.

type-ahead capability:தொடர் தட்டச்சுத் திறன்: விசைப்பலகையில் தட்டச்சு செய்யும் விசையழுத்தங்களை இடைநிலை நினைவகத்தில் பிறகு திரையில் காட்டும் திறனுள்ள ஒரு கணினி நிரல்.பயனாளர் வேகமாகத் தட்டச்சு செய்தால், அந்த வேகத்தில் எழுத்துகளைத் திரையில் காட்டமுடியாதபோது சில விசையழுத்தங்களை இழக்க நேரலாம்.இப்படி நிகழ்வதைத் தவிர்க்கவே இடைநிலை நினைவகத்தில் உள்ளீடுகள் சேமிக்கப்படுகின்றன.

type casting:இனமாற்றம்;வகை மாற்றம்: ஒரு தரவின மதிப்பை வேறொரு தரவினமாக மாற்றுதல்(எ.டு) மெய்யெண் இனமதிப்பை முழுஎண் மதிப்பாக மாற்றுதல்.

type declaration:இன அறிவிப்பு:பல நிரலாக்க மொழிகளில் பயனாளர் தாம் விரும்பும் தரவினங்களை உருவாக்கிக்கொள்ள வசதி உள்ளது.ஏற்கெனவே இருக்கும் மூலத் தரவினங்கள் சிலவற்றை ஒருங்கிணைத்து புதிய தரவினங்களை உருவாக்கி அறிவிக்கலாம்.(எ-டு) சி-மொழியில் struct அறிவிப்பு மூலம் புதிய தரவினங்களை உருவாக்கலாம்.சி++,ஜாவா,சி# மொழிகளில் class என்ற அறிவிப்பின் மூலம் புதிய தரவினங்களையும் அவற்றின் பண்புகள், வழி முறைகளையும் வரையறை செய்ய முடியும்.

typetace:அச்சுரு: அச்சிடுவதற்கான, குறிப்பிட்ட,பெயரிடப்பெற்ற எழுத்துகளின் தொகுதி.(எ-டு) Helvetica Bold Oblique.இது குறிப்பிட்ட கோணத்தில் சாய்வும் (Obliqueness),குறிப்பிட்ட அளவு கோடுகளின் தடிமனும்(Stroke Weight) கொண்டவை.அச்சுரு, எழுத்துரு (Font)விலிருந்து மாறுபட்டவை. எழுத்துருக்கள் குறிப் பிட்ட உருவளவில்(Point Size) உருவாக்கப்படுகின்றனஅச்சுரு,அச்சுருக் குடும்பத்திலிருந்து மாறுபட்டவை.(எ.டு) Helvetica Family.உறவுடைய பல அச்சுருக்களின் குழு.

type safety:இனப் பாதுகாப்பு: வகைப் பாதுகாப்பு.

type size:அச்சுரு அளவு:அச்சிடுகின்ற எழுத்துகளின் உருவளவு.பாயின்ட் என்னும் அலகினால் அளவிடப்படும்.ஒரு பாயின்ட் என்பது ஏறத்தாழ 1/72 அங்குலம்.

type style:அச்சுரு பாணி;அச்சுரு அழகமைவு :1.எழுத்துவடிவத்தின் சாய்வுத் தன்மை.2.ஒரு குறிப்பிட்ட எழுத்துவடிவு அல்லது எழுத்துவடிவக் குடும்பத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பு.3.எழுத்துவடிவில் ரோமன்,தடிமன், சாய்வு,தடிமன் சாய்வு போன்ற அழகமைவுகளுள் ஒன்று.

type writer,console:பணியகத் தட்டச்சுப் பொறி.

typography:அச்சுக்கலை:1.எழுத்துரு வடிவமைப்பு மற்றும் அச்சுக்கோப்புக்கலை .2.வடிவமைக்கப்படாத உரைப்பகுதியை அச்சிடுவதற்கு ஏற்றவகையில் மாற்றியமைத்தல்.

.tz:.டீஇஸ்ட்:ஓர் இணையதள முகவரி தான்ஸானியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.