உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



125 மகிபதி விதரண ராமன் வாக்கினாற் குபேர னாக்கினா னிவனே மாசிலீ சானனா னவனே என்பதாம். வறுமை நோயினால் பற்றப்பட்டு வருந்திக் கொண்டிருந்த தம்மைப் பெரிதும் ஆதரித்துக் குபேரன் போன்ற செல்வமுடைய வனாகும்படி செய்தவன் சாளுவ மன்னனாகிய திருமலை ராயன் என்பதையும் அவன் விதரண ராமன் என்ற வேறொரு பெயரும் உடையவன் என்பதையும் கோப்பையனது புதல்வன் என்பதையும் இப்பாடலில் அப்புலவர் கூறியுள்ளார். திருமலை ராயன் என்ற ஓர் அரசனது கல்வெட்டுக்கள் நம் சோழமண்டலத்தில் பாபநாசம், தஞ்சாவூர், திருவானைக்கா முதலான இடங்களில் காணப்படுகின்றன. எனவே, இவ்வேந்தன் இந்நிலப்பரப்பை ஒரு காலத்தில் ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு புலப்படுகின்றது. அரிசிலாற்றுக்கும் முடிகொண்டான் ஆற்றுக்கும். இடையில் ஓடுகின்ற திருமலைராசன் என்ற ஆறு இவனது ஆட்சிக்காலத்தில் வெட்டப்பெற்றதேயாகும். அன்றியும், காரைக்காலுக்குத் தெற்கே ஆறு மைல் தூரத்திலுள்ள திருமலைராசன் பட்டினமும் இவ்வேந்தன் பெயரால் அமைக்கப்பெற்ற நகரமாகும். இவனது ஆட்சிக்காலத்தை நன்கு விளக்கக்கூடிய கல்வெட்டொன்று தஞ்சையிலுள்ள இராசராசேச்சுரம் என்ற திருக்கோயிலில் உள்ளது. அது (2) சுபமஸ்து சகாப்தம் ஆயிரத்து முன்னூற்று எழுபத்தேழின்மேல் செல்லாநின்ற பவ வருஷத்துக்குச் செல்லும் (3) யுவ வருஷம் சித்திரை மாதம் எ... ஸ்ரீமத் மகாமண்டலேஸ்வரன் மேதினீஸ்வரன் கண்ட கண்டாசி சாகுவ சாளுவத் திருமலை தேவ (4) மகாராசர் தஞ்சாவூர்.வ...ண்டயம் தஞ்சை மாமணிகண்டங்குறை, நாகளாபுரம், பழமாறன் ஏரி, அன்பதின் மேலகரம் (5) வேலங்குடி, அம்மையப்புரம், தென் அளூர், கருப்பூர், மருவூர், இராசேந்திர சோழநல்லூர், சுங்கந்தவிர்த்த சோழ நல்லூரான (6) திருமலைராசபுரம், சமுத்திர...புரம், ஆக இந்த அகரங்களில் வாரியன் கரனத்தானுக்கு நிருபம் தங்கள் அவதாவக (7) க்களை ராஜ ஸபீக்கனை பிரதாநிஜோடி கரணிக்கஜோடி தலையாரிக்கம் மாவடை மரவடை குளவடை மற்றும் (8) எப்பேர்ப்பட்ட பல உபாதி களும் இழித்து விட்ட அளவுக்குச் சந்திராதித்தவரையும் சர்வ மானியமாக சுகமே இருக்கவும் (9) ராஜாவின் அருளிச் செயல்படிக்கு மந்திரமூர்த்தி வெட்டியது+ என்பதாம். இக்கல்வெட்டு, சாளுவமன்னனாகிய திருமலைராயன் என்பான் சகம் 1337-ஆம் ஆண்டில் சில ஊர்களைச் சர்வமானியமாக

  • S.1.1. Vol. II No. 23, Page 118.