கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/நடுக்கோட்டு ராஜா

விக்கிமூலம் இலிருந்து

43. நடுக்கோட்டு ராஜா

அமைப்பு:

20 அடி நீளமும் 10 அடி அகலமும் இருப்பது போல, நீண்ட சதுரம் ஒன்றை ஆடுகளமாக அமைக்கவும். (ஆடுவோர் அதிகமாக இருந்தால், ஆடுகளத்தின் அளவை தேவையான வடிவத்திற்கு அமைத்துக் கொள்ளவும்)

பிறகு, அந்த நீண்ட சதுரத்தை இரண்டாகப் பிரிப்பதுபோல, மத்தியில் ஒரு கோட்டைப் போடவும்.

விளையாட இருப்பவர்களை இரண்டு குழுவாக பிரித்து இரண்டு கட்டங்களுக்குள்ளும் நிற்க செய்யவும்.

நடுக்கோட்டின் மத்தியில் ஒருவரை நிற்க செய்யவேண்டும்.

ஆடும் முறை:

நடுகோட்டில் நிற்பவர் என்னை தாண்டி யாரும் போக முடியாது என்றவாறு வீரம் பேசுவார். அது தான் இல்லை என்று ஆட்சேபிப்பது போல. இந்தக் கட்டத்திலிருந்து அந்தக் கட்டத்திற்கும், அங்கிருந்து இங்கும் என்றவாறு, நடுக்கோட்டு ராஜாவின் கையில் படாதவாறு மாறி மாறி ஆட்டக்காரர்கள் போய் வர வேண்டும்.

ராஜாவின் கையிலே படாதவரையிலும், இடம் மாறி மாறி, எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம், தடுப்பவர் யாரையாவது தொட்டுவிட்டால், தொடப்பட்டவர் ஆட்டத்தை விட்டு உடனே வெளியேற்றப்படுவார்.

தொடப்படாமல், கடைசிவரை அங்குமிங்கும் போய்வருபவரே வெற்றி பெற்றவராவார்.

அவரே அடுத்த ஆட்டத்திற்கு நடுக்கோட்டு ராஜாவாக மாற ஆட்டம் தொடங்கும்.

ஒரே இடத்தில் நிற்காமல், இங்குமங்கும் போய்வந்தால் தான், ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும்.