கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/கதையோ கதை!
Appearance
66. கதையோ கதை
விளையாட்டை நடத்தும் பொறுப்பேற்றிருப்பவர், கதை ஒன்றினை முன்னரே தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
அந்தக் கதையில் வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும், முன்னுக்குப் பின் முரணானவைகளாகவே இருக்க வேண்டும்.
கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும் மாணவர்கள், உடனே குறுக்கிட்டு எதுவும் பேசாமல், என்னென்ன தவறு ஏற்பட்டிருக்கிறது. எங்கே, எப்படி என்பதை யெல்லாம் தமக்குத் தந்துள்ள தாளில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கதை முடிந்தபிறகு, தாங்கள் கண்டுபிடித்து எழுதியுள்ள தவறுகளை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். அதிகப் பிழைகளைக் கண்டுபிடித்தவரே இந்த விளையாட்டில் வெற்றி பெற்றவராவார்.