கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/காவல்காரன்

விக்கிமூலம் இலிருந்து

41. காவால்கரன்

அமைப்பு:

பத்தடி விட்டமுள்ள ஒரு வட்டத்தைப் போட்டு, அதன் மத்தியில் ஒரு சிறு பந்து அல்லது கைக்குட்டையை வைத்து, அந்த வட்டத்திற்குள் ஒருவரை நிற்கச் செய்து காவல் காக்கச் செய்ய வேண்டும்.

ஆடும்முறை:

வட்டத்திற்கு வெளியே நிற்கின்ற மற்ற ஆட்டக்காரர்கள், உள்ளே நுழைந்து அந்தப் பொருளை எடுத்துச் செல்ல முயற்சி செய்வதும், அவ்வாறு எடுத்துச் செல்லாமல், வட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்து காவல் செய்வதும்தான் ஆட்டத்தின் நோக்கமும் ஆடும் முறையுமாகும்.

ஆட்டத்திற்குள் வந்து, பொருளை எடுக்கும் முயற்சியில் தோற்றுப் போனவர். தன் இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு, ஐந்து தோப்புக் கரணம் போட்டபின்னர், காவல்காரனாக மாறி ஆட்டத்தைத் தொடங்கச் செய்ய வேண்டும்.

காவல் காரன் ஏமாந்து, பொருளை மற்றவர்கள் எடுத்துச் சென்றுவிட்டாலும், தன் முயற்சியில் தோற்றதற்காக, முன்னவர் போல 5 தோப்புக் கரணங்கள் போட்டு அவரே காவல் செய்வதுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கும்.

வட்டத்திற்குள் வந்துவிட்டால் கூட, ஆளைத் தொட்டுவிட காவல்காரனுக்கு உரிமை உண்டு.