கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/நான்கு கால் ஓட்டம்

விக்கிமூலம் இலிருந்து

74. நான்கு கால்

ஆட்டக்காரர்களை மூன்றுபேருள்ள குழுவாக முதலில் பிரிக்கவேண்டும்.

ஒரு குழுவாக உருவான அந்த மூவரும், ஒடத் தொடங்கும் கோட்டிற்கு (Starting Line) வந்து நிற்க வேண்டும். நிற்கும் முறையானது, நடுவில் நிற்பவரின் இடது கணுக்காலும் இடது புறம் நிற்பவரின் வலது கணுக்காலும் கைக்குட்டையால் கட்டிக் கொண்டிருப்பது போலவே, நடுவில் உள்ளவரின் வலது கணுக்காலும், வலப்புறம் நிற்பவரின் இடது கணுக்காலும் கட்டியிருக்க வேண்டும். கைகளை இருவரின் தோள்களிலும் போட்டு நடுவில் நிற்பவர் இணைத்திருப்பதுபோலவே எல்லோரும் நிற்கவேண்டும்.

இப்பொழுது மூவர், நான்கு கால்களுடன் ஒடவேண்டும்.

ஒடுங்கள் என்று ஆணையிட்டவுடன், முன்னால் உள்ள முடிவெல்லைக்கோட்டை (Finishing Line) நோக்கி மூவரும் நான்கு கால்களால் ஓட வேண்டும்.

முதலில் வருகின்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.