மழலை அமுதம்/நிலா

விக்கிமூலம் இலிருந்து



    குழந்தை —  நிலக் கடல் ஒரத்திலே
                   நிமிர்ந்து பார்த்த்து யாரோ?
      நிலா — பட்டு நிலா நான்தான் 
              பார்க்க வந்தேனே 
              கட்டித் தயிரைக் கடலில் ஊற்றிக் 
              காண வந்தேனே 
              கொட்டிக் கடலில் மல்லிகைப் பூவை 
              விட்டுப் பார்க்க வந்தேன் 
              வெள்ளிப் பணியைக் கடலில் தூவி 
              வேடிக்கை பார்க்க வந்தேன் 
              துள்ளித் திரியும் குழந்தை நீயும் 
              தூங்கச் சென்றிடுவாய்
"https://ta.wikisource.org/w/index.php?title=மழலை_அமுதம்/நிலா&oldid=1070115" இலிருந்து மீள்விக்கப்பட்டது