அறிவுக்கு உணவு/நீ எப்படி?
Appearance
கடந்துபோன காரியங்களை எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருப்பவன், எதிர்காலத்திலே அடையவேண்டிய பலன்களையும் இழந்துவிடுகிறான். இழந்து போனவைகள் எண்ணி வருந்தாமல், ஊக்கங்கொண்டு உழைப்பவன், எதிர்காலப் பலன்களையும் பெற்று, இழந்தவைகளையும் திரும்பப் பெற்றுவிடுகிறான். நீ எப்படி?
நல்ல குழந்தைகள், பெரியோர்களின் புத்திமதியைக் கேட்ட உடனே அறிவைப் பெற்றுவிடுகிறார்கள். கெட்ட குழந்தைகள், தாங்களாகத் துன்பப்பட்டு அனுபவித்த பிறகே, நல்லறிவைப் பெறுகிறார்கள். நீ எப்படி?