அறிவுக்கு உணவு/அறிய முடியாதது
Appearance
தமிழ்ப் பண்பை அறிய வேண்டுமானால், தமிழை அறிய வேண்டும். தமிழ் மக்களை அறிய வேண்டுமானால் தமிழ்ப் பண்பை அறிய வேண்டும். தமிழகத்தை அறிய வேண்டுமா னால், தமிழ் மக்களை அறியவேண்டும். இம்மூன்றையும் அறியாதவர்கள் தமிழகத்துச் சான்றோர்களை அறிய முடியாது.