அந்தமான் கைதி/8

விக்கிமூலம் இலிருந்து

காட்சி 8.


இடம் : நடராஜன் வீடு

காலம் : காலை

(நடராஜனும் லீலாவும் இரண்டு நாற்காலிகளில் அமர்ந்துள்ளனர். நடராஜன் பாரதி பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றான், போஸ்டு பியூன் வருகிறான்.)

போஸ்ட் : போஸ்ட்!

நட : என்ன?

போஸ்ட் : உங்களுக்கு ஒரு ரிஜிஸ்டர் இருக்கிறது.

நட : ரிஜஸ்ட்டரா? (லீலா உள்ளே போகிறாள். கையெழுத்தைப் போட்டு ரிஜிஸ்ட்டரை வாங்கிப் படிக்கிறான், போஸ்ட்மேன் போகிறான். காமாட்சி வருகிறாள்.)

காமா : என்னடாப்பா அது? நட : ஒன்றுமில்லை. ராமசாமி சேர்வை பணத்துக்காக கோட்டீஸ் கொடுத்திருக்கிறான். ஒரு வாரத்திற்குள் பூராத் தொகையையும் கட்டாவிட்டால் கேஸ் போட்டு விடுவானாம். அவனுக்கும் பணப் பேய் பிடித்துவிட்டது போலிருக்கிறது,

காமா : அவனும் எத்தனை நாளைக்குத்தான் பொறுத்திருப்பான்? வருசமும் அஞ்சாறுக்கு மேலே ஆச்சு. இந்தான்னு ஒரு அரைக்காசு வட்டி கூடக் கட்டலே. அவன் தான் என்ன செய்வான்? இத்தினி நாளா எனக்காகத் தான் பொறுத்துக்கிட்டு இருந்தான்...

நட : இப்போ ஒங்க அண்ணனுக்காக நோட்டீஸ் விட்டிருக்கான்.

காமா : இதென்னடா நீ இப்படிப் பேசுரே சேர்வை நோட்டீஸ் விட்டான்ன அதுக்கு எங்கண்ணன் என்ன பண்ணுவாரு? அவருப் பேச்சே பேசாட்டிப் போனத்தான் ஒனக்கு சரிப்பட்டுவராதே. இந்த வீடும் போயிட்டா அப்புறம் தெரியும் சந்தியிலே நிற்கவேண்டியதுதான்.

நட : எத்தனையோ கோடி ஜனங்கள் சந்தியிலே நிற்கும்போது நாமும் நின்று விட்டுப் போகிறோம். இதற்காக ஒரு பெண்ணைப் பாழுங் கிணற்றில் தள்ளி விட்டுவிடுவதா என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/8&oldid=1073494" இலிருந்து மீள்விக்கப்பட்டது