அந்தமான் கைதி/15
இடம் : வீதி
பாத்திரங்கள் : ஜம்பு, சுப்பையா.
ஜம்பு : டேய் சுப்பையா!
பையன் : வாங்க கணக்கப்பிள்ளை ஐயா, எஜமான் ஒங்களைக் கையோட கூட்டிக்கிட்டு வரச்சொன்னாங்க, ஒங்க வீட்டுக்குத்தான் வந்துக்கிட்டிருந்தேன்.
ஜம்பு : எதுக்குடா?
பையன் : எஜமான் தங்கச்சியில்லிங்க, அவங்க வந்திருக்காங்க.
ஜம்பு : அப்படியா! என்ன விஷயம்?
பையன் : எல்லாம் முடுஞ்சு போச்சு. எஜமானுக்கு நாள் பார்க்க வேண்டியது ஒன்னுதான் பாக்கி.
ஜம்பு : எஜமானுக்கு நாள் பாக்கனுமா?
பையன் : ஆமாங்க, எல்லா ஏற்பாடும் முடுஞ்சு போச்சு. ஐயரையுங் கூட்டிக்கிட்டு வரச் சொல்லி விட்டாங்க. கழுத்திலே கயத்தைப் போடுறதுக்கு நாள் பாத்துட்டா கல்யாணம் முடிஞ்சமாதிரி தான். உம், புறப்படுங்க.
ஜம்பு : சரி. நான் முன்னாடிப் போறேன்; நீ போயி நம்ம பாலகிருஷ்ண சாஸ்திரியேக் கையோட இழுத்துக் கிட்டுவா.
பையன்: இதோ!-
(போகிறார்கள்)