பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விளக்கம் II.-(அ) கூறின்வழி, நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரமானது, மாநிலம் அல்லது ஒன்றியத்து ஆட்சிநிலவரை ஒன்றன் பகுதியை வேறொரு மாநிலத்துடனோ ஒன்றியத்து ஆட்சிநிலவரையுடனோ ஒன்றிணைத்து ஒரு புதிய மாநிலத்தை அல்லது ஒன்றியத்து ஆட்சிநிலவரையை உருவாக்குவதற்கான அதிகாரத்தையும் உள்ளடக்கும். 4. 2, 3 ஆகிய உறுப்புகளின்படி இயற்றப்படும் சட்டங்கள், முதலாம், நான்காம் இணைப்புப் பட்டியல்களைத் திருத்துவதற்காகவும் துணைவுறு, சார்வுறு, விளைவுறு பொருட்பாடுகளுக்காகவும் வகை செய்தல் : (1) 2ஆம் உறுப்பிலோ 3ஆம் உறுப்பிலோ சுட்டப்பட்டுள்ள சட்டம் எதுவும், அந்தச் சட்டத்தின் வகையங்களைச் செல்திறப்படுத்துவதற்குத் தேவையானவாறு முதலாம் இணைப்புப்பட்டியலையும் நான்காம் இணைப்புப்பட்டியலையும் திருத்துவதற்கான வனகயங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்; அது (நாடாளுமன்றத்திலும் அத்தகைய சட்டத்தினால் பாதிக்கப்படும் மாநிலத்தின் சட்டமன்றத்திலும் அல்லது மாநிலங்களின் சட்ட மன்றங்களிலும் சார்பாற்றம் குறித்த வகையங்கள் உள்ளடங்கலாக) நாடாளுமன்றம் தேவையெனக் கருதும் துணைவுறு, சார்வுறு, விளைவுறு வகையங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம். (2) மேற்சொன்ன சட்டம் எதுவும், 368ஆம் உறுப்பைப் பொறுத்தவரை, இந்த அரசமைப்பின் திருத்தமாகக் கொள்ளப்படுதல் ஆகாது. பகுதி II குடிமை 5. அரசமைப்பின் தொடக்க நிலையில் குடிமை : இந்த அரசமைப்பின் தொடக்கநிலையில், இந்திய ஆட்சிநிலவரையில் தம் நிலைவாழ்விடத்தைக் கொண்டிருப்பதுடன் (அ) தாம் இந்திய ஆட்சிநிலவரையில் பிறந்தவராகவும், அல்லது (ஆ) இந்திய ஆட்சிநிலவரையில் பிறந்தவரை, தம் பெற்றோரில் ஒருவராகக் கொண்டவராகவும், அல்லது (இ) அந்தத் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்திய ஆட்சி நிலவரையில் தாம் வழக்கமாகக் குடியிருந்து வருபவராகவும் உள்ள ஒவ்வொருவரும் இந்தியாவின் குடிமகன் ஆவார். 6. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்துள்ள குறித்தசிலரின் குடிமை உரிமைகள். 5ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், பாகிஸ்தானில் இப்போது உள்ளடங்கியுள்ள ஆட்சிநிலவரையிலிருந்து இந்திய ஆட்சிநிலவரைக்குக் குடிபெயர்ந்துள்ள ஒருவர் (அ) தாமோ தம் பெற்றோரில் ஒருவரோ தம் பாட்டன் பாட்டியரில் ஒருவரோ (முதற்கண் இயற்றப்பட்டவாறான) 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்ட இந்தியாவில் பிறந்தவர் என்பதுடன், அத்தகையவர், 1948 ஜூலை பத்தொன்பதாம் நாளுக்கு முன்பு அவ்வாறு குடிபெயர்ந்துள்ள நேர்வில், அவர் தாம் குடிபெயர்ந்த தேதியிலிருந்து இந்திய ஆட்சிநிலவரையில் வழக்கமாக குடியிருந்துவருபவராகவும் இருப்பின், அல்லது