கணினி களஞ்சியப் பேரகராதி-1./O
Oasis : பாலைச்சோலை : பல நுண் கணினியமைவுகளில் பயன்படுத்தப்படும் பல பயனாளர் செயற்பாட்டுப் பொறியமைவு.
obey : பணிந்திணங்கு;கீழ்படி : ஒரு கணினி, தற்போது நிறைவேற்றப்படும் செயல்முறையினை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிரல் மூலம் குறித்து உரைக்கப்படும் ஒரு செயற்பாட்டினை நிறைவேற்றுகிற செய்முறை.
object : பொருள்;இலக்கு;தகவமைவு : உருவாக்குபவருக்கு நிரலாக்கத் தொடர் பொருள்கள் திரும்பப் பயன்படுத்தக்கூடிய குறியீட்டுப் பிரிவுகள்.சக்கரத்தினை ஒவ்வொரு முறையும் திரும்பக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையில்லாததுபோல் முந்தைய வேலையின் புதிய பயன்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்ள உதவுகின்றவை.இறுதிப் பயனாளருக்கு அவை திரைப்பொருள்கள் (ஐக்கான்கள்.கோப்புப் பெயர்கள், விரிதாள் வரிசைகள், சொற்கட்டங்கள் போன்றவை.இவைகளை பொருள்களைப் போன்று கையாள முடியும்.சான்றாக ஒரு கோப்பின் பெயரை அச்சுப்பொறி ஐகானுக்கு இழுத்து வந்தால் அக்கோப்பு அச்சிடப்படும்.
object attribute : பொருளின் பண்புக்கூறு.
object base : இலக்கு தளம்;பொருள் தளம்.
object code : இலக்குக் குறியீடு;இயக்கு நிரல்; இலக்குச் சங்கேதம்;இலக்கு நிரல் : ஒரு தொகுப்பானிலிருந்து அல்லது இணைப்பானி லிருந்து வரும் வெளிப்பாடு.இதுவும் நிறைவேற்றத் தக்க ஒரு எந்திரக் குறியீடாக அல்லது நிறைவேற்றத் தக்க எந்திரக் குறியீட்டினை மேலும் செய்முறைப்படுத்துவதற்குத் தக்கதாக அமைந்திருக்கும்.இதனை "இலக்குச் செயல்முறை" (object programme) என்றும் கூறுவர்.
object computer : இலக்குக்கணினி : ஓர் இலக்குச் செயல்முறையை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கணினி.
object database management group : பொருள் நோக்கு தரவுத்தள மேலாண்மைக் குழு : பொருள்சார் தரவுத் தளங்களுக் கான தர வரையறைகளை வளர்த்தெடுக்கவும் பொருள்நோக்கு தரவுத் தளங்களுக்கான இடைமுகங்களை வரையறுக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பு.
object deck : இலக்கு அடுக்கு : இலக்குக் காட்டு : ஓர் ஆதார அடுக்குக்கு இணையான எந்திர மொழியினைக் குறிக்கின்ற துளையிட்ட அட்டை களின் தொகுதி.
object designator : இலக்கு நியமிப்பாளர்; பொருள் வடிவமைப்பாளர்.
object desk : பொருள்மேசை : எந்திர மொழியைக் குறிப்பிடும் துளையிட்ட அட்டைகளின் தொகுதி.ஆதார மேசைக்குச் சமமானது.
object file : இலக்குக் கோப்பு : எந்திரக் குறியீடு அல்லது செயல்படுத்தக்கூடிய கோப்புடன் இணைக்கப்படக்கூடிய குறியீட்டு வரிகள்.
objective-C : இயக்கு-சி : பீசிக் களிலும் பிரபல பணி நிலையங்களிலும் இயங்கும் ஸ்டெப்ஸ் டோன் கார்ப்பரேஷன் உருவாக்கிய நோக்கம் சார்ந்த சி-நிரல் தொடர் மொழி.சி மொழியின் முதல் வணிக நோக்கிலான பொருள் சார்ந்த விரிவாக்கம் இதுதான்.
objectives : இலக்குகள் : ஒரு அமைப்பு சாதிக்க வேண்டிய செயல் திட்டங்கள்.
object language (Target Language) : இலக்கு மொழி : ஒரு மொழிபெயர்ப்புச் செய்முறையின் வெளிப்பாடு.பொதுவாக, இலக்குமொழி என்பதும் எந்திரமொழி என்பதும் ஒன்றுதான்.இது "ஆதார மொழி" என்பதற்கு மாறுபட்டது.
object language programming : இலக்கு மொழிச் செயல்முறைப்படுத்துதல்;இலக்கு மொழிச் செயல்முறையாக்கம் : ஒரு குறிப்பிட்ட கணினியில் நிறைவேற்றப்படத்தக்க ஓர் எந்திர மொழியின் செயல்முறை வரைவு.
object machine : பொருள் எந்திரம் : குறிப்பிட்ட பொருள் நிரல் தொடரை திரும்பத் திரும்ப செய்யப் பயன்படுத்தப்படும் கணினி.
object management group : ஆப்ஜெக்ட் மேனேஜ்மென்ட் குரூப்;பொருள் மேலாண்மைக் குழு : பொருள்நோக்கு மென்பொருள் பயன்பாடு களுக்கான பொது தரவரையறைகளை இறுதி செய்கின்ற ஒரு பன்னாட்டு அமைப்பு.1989ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.பொருள் மேலாண்மைக் கட்டுமானம் (object management architecture - OMA) என்கிற தரக்கோட்பாட்டையும் இது வரை யறுத்துள்ளது.பகிர்ந்தமை சூழல்களுக்குரிய தரப்படுத்தப்பட்ட பொருள் மாதிரியம் (object model) ஆகும் இது.
object model : பொருள் மாதிரியம் : சி++ போன்ற ஒரு பொருள் நோக்கு மொழிக்கான கட் டமைப்பு அடித்தளத்தைக் குறிக்கிறது.கருத்தியல்(abstraction), உடன்நிகழ்வு(concurrency), உறைபொதியாக்கம்(encapsulation), மரபுரிமம்(inherience), தொடர் நீட்டிப்பு (persistence), பல்லுரு வாக்கம்(polymorphism), வகைப்பாடு(typing) போன்ற கோட்பாடுகளைக் கொண்டது.
object modules : காட்சிப்பொருள் தகவமைவு : எந்திர மொழி நிரல் தொடர் அல்லது அத்தகைய நிரல் தொடரின் ஒரு பகுதி. இது ஒரு சேர்ப்பி அல்லது தொகுப்பியிலிருந்து வெளியீடாக வந்து, செயல்படுத்தப்படும் முன்பு இணைப்பு தொகுப்பாளரால் செயலாக்கப்படுவது.
object orientation : இலக்கு நோக்கிய; பொருள்சார்ந்த.
object oriented : பொருள் : சார்ந்த பொருள் பொருட்டு.
object-oriented analysis : பொருள் சார்ந்த ஆய்வு : ஒரு பிரச்சினையை ஒன்றோடொன்று தொடர்புடைய பொருள்களின் குழுவாக மாதிரி அமைத்து சோதனை செய்தல்.ஒரு பொருளை அதன் வகுப்பு தரவு, பொருள்கள் மற்றும் நடத்தையை வைத்து வரையறை செய்யப்படும்.
object-oriented computer : பொருள் நோக்குக் கணினி.
object-oriented data base : பொருள் சார்ந்த தரவுத் தளம் : தெளிவற்ற தரவு வகைகளை (பொருள்கள்) வைத்திருக்கின்ற தரவுத் தளம்.ஒரு பொருள் சார்ந்த நிரல் தொடர் மொழியிலிருந்து பொருள்களை அது நேரடியாக சேமிக்க முடியும். எந்த வகையான தரவும் சேமிக்கப்படலாம். தரவு களை செயலாக்கம் செய்வதற்கான விதிகள் அப்பொருளிலேயே சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் பொருள்சார்பு தரவுத் தளங்கள் தரவு, சொற்கள், படங்கள், குரல் போன்ற எண்ணற்ற வகைப் பொருள்களை வைத்திருந்து அவற்றை எந்த வடிவிலும் மாற்றித் தரவல்லது. object-oriented DBMS : பொருள் சார்ந்த டி.பி.எம்.எஸ் : பொருள் சார்ந்த தரவுத் தளத்தினை சமாளிக்கும் டி.பி.எம்.எஸ். தொடர்புடைய தரவுத்தள நிரல் தொடர்களில் செய்வதற்கு அரிதான, பொருள்களைப் பற்றிய சிக்கலான கேள்விகளையும் இது எளிதாகக் கையாளும்.
object-oriented design : பொருள் சார்ந்த வடிவமைப்பு : பொருள் சார்ந்த மாதிரி ஒன்றை அதனை உருவாக்கும் அமைப்புக்குத் தேவையான விளக்கக் குறிப்புகள் கொண்டதாக மாற்றுதல். நோக்கம் சார்ந்த ஆய்விலிருந்து பொருள்சார்ந்த வடிவமைப்புக்கு மாறுவது, அந்த மாதிரியமைப்பை விரிவாக்கி மேலும்மேலும் விவரம் சேர்ப்பதன்மூலம் செய்து முடிக்கப்படுகிறது.
object-oriented development : பொருள்நோக்கு மேம்பாடு.
object-oriented graphics : பொருள் சார்ந்த வரைகலை.
object-oriented interface : பொருள் சார்ந்த இடைமுகம் : ஐக்கான்கள், சுட்டி போன்றவற்றைப் பயன்படுத்துகின்ற வரைகலை இடைமுகம். மெக்கின்டோஷ், விண்டோஸ் போன்ற பணிச் சூழல்களை இவ்வாறு கூறலாம்.
object oriented language : பொருள் நோக்கம் சார்ந்த மொழி : பொருள் நோக்கம் சார்ந்த நிரல் தொடர் மொழி.தரவு செயலாக்கப் பணிகளுக்குப் பொருள்களை உருவாக்கிப் பயன்படுத்தும் நிரல் தொடர் மொழி.
object-oriented operating system : பொருள் நோக்கு இயக்க முறைமை : பொருள் அடிப் படையிலான இயக்கமுறைமை.பொருள்நோக்கு வடிவாக்க முறையில் அயலர்கள் மென்பொருள்கள் உருவாக்குவதற்கு உகந்த வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கும்.
object oriented programming : பொருள் சார்ந்த செயல்முறை வரைவு : தரவுப் பொருள்களின் ஒரு தொகுதியை மையமாகக் கொண்டுள்ள செயல்முறைப்படுத்தும் அணுகு முறை.இது, தரவுக்கும் குறியீட்டுக்கும் வெவ்வேறு அணுகு முறையைக் கையாளும.
object oriented programming languages : பொருள் நிரலாலாக்க மொழிகள்.
object-oriented technology : பொருள் சார்ந்த தொழில் நுட்பம் : உலக நடைமுறைகளாகப் பார்க்காமல் பொருள்களாகப் பார்க்கின்ற வாய்பாடு. object programme : இலக்குச் செயல்முறை : கணினியில் இயங்குவதற்கு ஆயத்தமாக, கணினி யிலிருந்து அல்லது இணைப்பானிலிருந்து வெளிப் படும் நிரல்கள்.இதனை இலக்குக் குறியீடு என்றும் கூறுவர். இது ஆதாரச் செயல் முறைக்கு மாறுபட்டது.
object reference : பொருள் குறிப்பி : பொருள்நோக்கு நிரலாக்கத்தில், ஓர் ஆப்ஜெக்ட்டின் நினைவக இருப்பிடத்தை குறிக்கும் முகவரி.
object relational server : பொருள் உறவுநிலை வழங்கன் : இது ஒரு தரவுத்தள வழங்கன் கணினி.ஓர் உறவுநிலைத் தரவுத் தளத்திலுள்ள சிக்கலான தரவினங்களை பொருள் நோக்குமுறையில் மேலாண்மை செய்வதற்கு உகந்தது.
object resource : பொருள் வளம்.
object type : பொருள் வகை.
object type inheritance : பொருள் வகை மரபுரிமம்.
object vision : ஆப்ஜெக்ட் விஷன் : இலக்குப் பார்வை : விண்டோஸ் பயன்பாடுகளுக்காக போர்லேண்ட் நிறுவனம் உருவாக்கும் பயன்பாட்டு வளர்ச்சி அமைப்பு. பயனாளர் இடைமுக வடிவமைப்புக்காகவும் நிரல் தொடர் அளவைக் காகவும் ஒளிநுட்பத்தைப் பயன்படுத்துகிறது. விரிதாள்கள் மற்றும் தரவுத் தளங்களுக்கு இணைப்புகளை ஏற்படுத்தித்தருகிறது.
object windows : ஆப்ஜெக்ட் விண்டோஸ்; இலக்கச் சாளரம் : விண்டோஸ் பொருள்களின் வகுப்பு நூலகம்.போர்லேண்ட் நிறுவனம் உருவாக்கிய இது, விண்டோஸ் பயன்பாடுகளை உருவாக்க உதவுகிறது.போர்லேண்ட் மற்றும் நோக்க மேலாண்மைக் குழு உருவாக்கிய திறந்த தர நிருணயமுறை.
object wrapper : பொருள் மேலுறை : பொருள்நோக்கு மென்பொருள் பயன்பாடுகளில் பேசப்படுவது.
oblique : சாய்வு : ஒரு ணினியில் அல்லது அச்சுப்பொறியில் உண்மையான சாய்வு எழுத்துரு (Italic Font) இல்லாத போது ஒரு ரோமன் எழுத்துருவைச் சற்றே சாய்த்து சாய்வு எழுத்துரு போல ஆக்கிக் கொள்கின்ற முறையை இவ்வாறு கூறுவர்.
obsolescenc : பயனற்றது;காலம் கடந்தது : வன்பொருள் அல்லது மென்பொருள்களை உரிய காலத்துக்கு முன்ன தாகவே மாற்றுவதைக் குறிப்பது.வழக்கமாகப் பயன்படுத்தி தேய்ந்து பழுதாவதைக் குறிப்பதல்ல. தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாக அண்மையில் பொருள்கள் வருவதால் இவற்றை மாற்ற வேண்டியதாகியுள்ளது.
OC3 : ஓசி3 : ஒளிவச் சுமப்பி 3 என்று பொருள்படும் Optical Carrier 3 என்பதன் சுருக்கம்.சோனட் (SONET) எனப்படும் அதிவேக ஒளியிழை தரவு பரப்பு அமைப்புகளில் பயன் படுத்தப்படும் ஒளிச்சமிக்கை மின்சுற்றுகள் பலவற்றில் இதுவும் ஒன்று.ஓசி3 வினாடிக்கு 155.52 மெகாபிட் சமிக்கைகளைச் சுமந்து செல்கிறது.சோனட் மற்றும் ஐரோப்பிய முறையான எஸ்டிஹெச் இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட இந்த வேகம் குறைந்தபட்ச வேகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
occam : ஓசிசிஏஎம் : ஒரே நேரத்திய இயக்கங்களைக் கையாளப் பயன்படுத்தப்படும் இணை செயலாக்க மொழி.
OCR : ஓசிஆர் : "ஒளியியல் எழுத்தேற்பு" என்று பொருள்படும் "Optical character recognition" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் குறும்பெயர்.
octal : எண்மி;எண்ம; எண்ணிலை;எட்டு என்னும் இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு எண்மான முறை.இந்த எண்மி இலக்கங்கள் பெரும்பாலும் ஈரிலக்க எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.இதில், ஒவ்வொரு எண்மி இலக்கமும் மூன்று ஈரிலக்க இலக்கங்களின் (துண்மிகள்) ஒரு தொகுதியைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டு : 111000010001101 என்னும் ஈரிலக்க எண்ணை, 70215 என்னும் எண்மி எண்ணாகக் குறித்துக் காட்டலாம்.ஈரிலக்க எண்ணை எண்மி எண்ணாக மாற்றலாம்.
octal digit : எண்ம இலக்கம்.
octal dump : எண்மி சேமிப்பு.
octal notation : எண்மக் குறிமானம்.
octal number : எண்ம எண்.
octal number systems : எண்மி எண்மான முறை.
octal numeral : எண்மி இலக்கம்;எண்ம இலக்கம்;எண்ம உரு : ஒரு தொகையினைக் குறிக்கின்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கங்கள் கொண்ட எண்.இதில் ஒவ்வொரு இலக்கமும் குறிப்பிடும் எண் அளவு "8" என்னும் மூலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.எண்மி எண்களில் பயன்படுத்தப்படும் இலக்கங்கள், 0, 1, 2, 3, 4, 5, 6, 7.
octal, binary coded : இருமக் குறிமுறை எண்மம்.
octal point : எண்மிப் புள்ளி : எண்மப் புள்ளி : ஒரு கலப்பு எண்மி எண்ணில் முழுஎண் பகுதியைப் பின்னப் பகுதியிலிருந்து பிரித்துக் காட்டும் மூலப்புள்ளி, 72.24 என்ற எண்மி எண்ணில் எண்மி புள்ளி இரு எண்களுக்கு மிடையில் உள்ளது.
octet : எண்மி : எட்டுத் துண்மிகளைக் (bits) கொண்ட எட்டில்.
ΟCΧ : ஓசிஎக்ஸ் : ஓஎல்இ கஸ்டம் கன்ட்ரோல் என்பதன் சுருக்கம்.ஓஎல்இ மற்றும் காம் தொழில் நுட்பம் இரண்டும் இணைந்த மென்பொருள் கூறு. ஒரு மென்பொருள் பயன்பாடு அழைக்கும்போது, அந்தப் பயன்பாட்டுக்கு விரும்புகின்ற சில பண்புக் கூறுகளை அளிக்கும் ஒரு கட்டுப்பாட்டினை இது உருவாக்கித் தருகிறது.ஓசி எக்ஸ் தொழில்நுட்பம் வேறுபட்ட பணித்தளங்களில் செயல்பட வல்லது. 16-பிட், 32 பிட் இயக்க முறைமைகளிலும், பல் வேறுபட்ட பயன்பாடுகளிலும் பயன்படுத்தவல்லது. விசுவல் பேசிக் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடிந்த விபிஎக்ஸ் (Visual Basic Custom Control) தொழில்நுட்பத்தின் வாரிசாக வந்தது.ஆக்டிவ்எக்ஸ் தொழில் நுட்பத்தின் அடிப் படையாக விளங்குவது.ஓசி எக்ஸ்-கள் விசுவல் சி++ மொழியில் எழுதப்பட்டாலும் வேறு பல மொழிகளிலும் எழுத முடியும்.1996 ஒஎல்இ கன்ட்ரோல் வரன்முறையில் இடம் பெற்றுள்ள ஒசிஎக்ஸ் தொழில் நுட்பத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
ODBC : ஓடிபிசி : திறந்த தரவுத்தள இணைப்புநிலை என்று பொருள்படும் Open Database Connectivity என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.பிணையத்திலுள்ள ஒரு தரவுத் தளத்தை விண்டோஸ் பயன்பாடுகள் அணுகுவதற்கு ஒரு பொதுவான வழிமுறையை வழங்கும் இடைமுகம் ஆகும்.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர் உருவாக்கியது.
ODBC Data sources : ஒடிபிசி தரவு மூலங்கள்.
odd pariy check : ஒற்றைப்படைச் சரிபார்க்கும் முறை.
odometer : ஓடோமீட்டர் : தூர இடைவெளியைப் பதிவு செய் யும் ஒரு கருவி.சைக்கிள் மோட்டார் வாகனங்களில் பயன்படுவது.
OEM : ஓஇஎம் : "மூலச் சாதனத் தயாரிப்பாளர்" என்று பொருள்படும் "Original Equipment Manufacturer நிறுவனத்தின் குறும் பெயர்.இந்த அமைவனம் பொருள்களிலும் சாதனங்களிலும் அமைப்பிகளாகப் பயன்படுத்துவதற்காகக் கணினி களையும், புறநிலைச் சாதனங்களையும் வாங்கி, அவற்றைத் தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது.
off : விடுப்பு : நிறுத்து.
off-hook : கொக்கிக்கு வெளியே : சுழற்றி, வெளியே பேசக்கூடிய தொலைபேசிக் கம்பியின் நிலை.உள்ளே வரும் தொலைபேசி அழைப்பை ஏற்று பதில் பேச தடை செய்கிறது.தொலைபேசி உருவான காலத்தில் கைக்கருவியை கொக்கியிலிருந்து வெளியே எடுத்து பேசியதைக் கொண்டு இச்சொல் உருவானது.on-hook என்பதற்கு எதிர்ச்சொல்.
office application : அலுவலகப் பயன்பாடுகள்.
office automation : அலுவலகத் தானியக்கம்; அலுவலகத் தன்னியக்கம் : எழுத்தர் மற்றும் மேலாண்மை அலுவலகப் பணியாளர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்துவதற்குக் கணினி களையும் செய்தித்தொடர்புத் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துதல்.
office computer : அலுவலகக் கணினி : ஓர் அலுவலகத்தில் பயன்படுத்துவதற்கான ஒரு நுண்கணினியமைவு.குறிப்பிட்ட அலுவலகப் பணிகளுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள வட்டு அலகுகள், அச்சடிப்பி, மென்பொருள் போன்றவை இதில் உள்ளடங்கும்.
office information system : அலுவலகத் தகவல் பொறியமைவு;அலுவலகத் தகவல் அமைப்பு : சொல் செய்முறைப் படுத்திகள் வரைகலை முனைய அச்சடிப்பிகள்.கணினியமைவு போன்ற பல்வேறு தகவல் குறிப்புப் பதிவு முனையங்கள் உள்ளடங்கிய பொறியமைவு.
office links : அலுவலகத் தொடுப்புகள்.
office of the future : வருங்கால அலுவலகம் : கணினி தரவுச் செய்தித் தொடர்பு முறைகள் பிற மின்னணுவியல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பெருமளவில் பயன்படுத்தும் எதிர்கால அலுவலகம். இத்தகைய அலுவலகத்தில் பெரும்பாலான எழுத்தர் செயலக செய்தித் தொடர்புப் பணிகள் தானியக்க முறையில் நடைபெறும்.
off screen formatting : திரையில் முறைப்படுத்துதல்.
off state : விடுப்பு நிலை.
office support systems : அலுவலக ஆதரவு அமைப்புகள் : பலதரப்பட்ட கணினி ஆதரவு சேவைகளை ஒருங்கிணைக்கும் அலுவலக தானியங்கி அமைப்புகள்.மேசை அச்சு இணைப்பு கள் மின்னணு அஞ்சல் மற்றும் மின்னணு பணி மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியது.
office vision : ஆஃபீஸ் விசன்;அலுவலகப் பார்வை : எல்லா ஐபிஎம் குடும்பக் கணினி களிலும் செயல்படுகின்ற ஒருங்கிணைந்த அலுவலக தானியங்கிப் பயன்பாடுகள்.எஸ்.ஏ.ஏ. வினை பேரளவில் அமல்படுத்துவதில் அதுவே முதல் முயற்சி.பிரசன்டேஷன் மேனே ஜரை அது உள்ளடக்கியது.1989இல் அறிமுகப்படுத்தப் பட்ட இதில் மின்அஞ்சல், பட்டியலிடல், ஆவண உரு வாக்கம் மற்றும் விநியோகம் ஆகியவற்றுடன் முடிவெடுக்க ஆதரவு, வரைகலை பயன்பாடுகளும் அனைத்துப் பயனாளருக்கும் கிடைக்கும்.
offline : மறைமுகமாக : நேர் தொடர்பிலா; உடனடியற்ற முறை;பின் தொடர் : ஒரு கணினியின் மையச் செயல்முறை அலகுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிராத கருவிகள், சாதனங்கள், ஆட்கள் பற்றியது.கணினியுடன் இணைக்கப் பட்டிராத சாதனம் பற்றியது மாகும்.இது "நேரடியாக" (online) என்பதற்கு மறுதலை.
offline navigator : அகல்நிலை வழிச்செலுத்தி : அகல்நிலை திசைச்செலுத்தி : இணையத்திலிருந்து மின்னஞ்சல், வலைப் பக்கங்கள், செய்திக்குழுக் கட்டுரைகள் அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களி லுள்ள கருத்துரைகள் இவற்றைப் பதிவிறக்கம் செய்து, நமது கணினியிலுள்ள வட்டில் சேமித்து வைத்துக்கொண்டு, பின்னொரு சமயத்தில் இணைய இணைப்பு இல்லாமலேயே அவற்றைப் பார்வையிடுவதற்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருள்.இணைய இணைப்புக்காக ஆகும் செலவு இதனால் மிச்சப்படுகிறது.
offline processing : பின் தொடரும் செயலாக்கம். offline storage : மறைமுக சேமிப்பி;இணையா சேமிப்பகம் : மையச் செயலகத்தின் கட்டுப் பாட்டின்கீழ் இயங்காத சேமிப்பி.
offload : பளு இறக்கம் : இறக்குதல் : 1.ஒரு கணினியமைவின் பணிகளைச் சற்றுக்குறைந்த வேலைப் பளுவுள்ள மற்றொரு கணினிக்கு மாற்றுதல்.2.வெளிப்பாட்டுத் தரவுகளை ஒரு புறநிலைச் சாதனத்திற்கு மாற்றுதல்.
offpage connector : தொடர்பிலா பக்க இணைப்பி;மறுபக்க இணைப்பி;பக்க இணைப்பி : ஒரு தடவரிசை விளக்கப் படத்தில் ஒரு பக்கத்திலிருந்து மாறுபட்ட மற்றொரு பக்கத்திற்கு ஒரு தொடர் வரிசையை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஐங்கோணக் குறியீடு.
offset : எதிரீடு/குறை நிரப்பீடு;விலக்கம் : தேவைப்படும் மதிப்பு அல்லது நிலைமைக்கும், உள்ளபடியாக மதிப்பு அல்லது நிலைமைக்கும் இடையிலான வேறுபாடு.
off-the-shelf : ஆயத்தப் பொருள்கள்;உடன் பயன் பொருள்கள்;ஆயத்த விற்பனையாளர் களிடமிருந்து எளிதாகக் கிடைக்கக் கூடிய, மிகப் பெருமளவில் தயாரிக்கப்பட்ட கணினி வன்பொருள் அல்லது மென்பொருள்கள் பற்றியது.
ohm : ஓம் : மின்சாரத் தடையை அளப்பதற்கான அலகு.ஒரு மின் கடத்தியின் இருமுனை களுக்கிடையே 1 வோல்ட் மின்னழுத்தம் தரப்படும்போது அதன் வழியே பாயும் மின் னோட்டம் 1 ஆம்பியராக இருப்பின் அக்கடத்தி ஏற்படுத்தும் மின்தடை 1 ஓம்.
ohnosecond : ஓனோநொடி : தவறான நிரலைக் கொடுப்பதற்கும், அந்த நிரலினால் படுமோசமான விளைவுகள் ஏற்படும் என்று உணர்வதற்கும் இடையில் கழியும் நேரம்.மிகமிகக் குறைவான நேரம்.
.oh.us : .ஓச்.யுஎஸ் : ஓர் இணையதள முகவரி அமெரிக்க நாட்டின் ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
ok : சரி.
ok/cancel : சரி/விடு.
.ok.us : .ஒகே.யு.எஸ் : ஓர் இணையதள முகவரி அமெரிக்க நாட்டின் ஒக்ல ஹாமா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். OLAP database : ஓஎல்ஏபீ தரவுத் தளம் : நிகழ்நிலை பகுப்பாய்வுச் செயலாக்க தரவுத் தளம் என்று பொருள்படும் Online Analytical Processing Database என்பதன் சுருக்கம்.வழக்க மான உறவுநிலைத் தரவு தளங்களைவிட அதிக சிக்கலான வினவல்களைக் கையாளும் திறன் படைத்த ஓர் உறவுநிலைத் தரவுத தளம் தரவுகளை பல பரிமாண முறையில் அணுக முடியும். அதாவது தரவுகளை பல்வேறு தேர்வு விதிகளின் அடிப்படையில் பார்வையிட முடியும்.மிகவும் தீர்க்கமான கணக்கீட்டுத் திறன் உண்டு.சிறப்புத் தன்மை வாய்ந்த கட்டு வரிசை (indexing) நுட்பங்கள் உள்ளன.
OLE : ஓஎல்இ;ஓலே : பொருள் தொடுப்பும் உட்பொதிப்பும் என்று பொருள்படும் (Object Linking and Embedding stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.பயன்பாட்டு மென்பொருள்களுக்கிடையே தரவுவைப் பரிமாறிக் கொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கு மான ஒரு தொழில் நுட்பம்.படம் வரையும் மென்பொருள் கொண்டு ஒரு படம் வரையப்பட்டுள்ளது.அது ஒரு படிமக்கோப்பில் சேமிக்கப்பட்டுள்ளது.சொல்செயலி மென்பொருளில் உருவக்கப்பட்ட ஓர் ஆவணத்தில் படிமக்கோப்புக்கான தொடுப்பு உருவாக்கப் பட்டுள்ளது எனில், படமானது ஆவணத்தின் ஓர் அங்கமாகவே தோற்றமளிக்கும்.தொடுப்புள்ள படத்தில் செய்யப்படும் மாறுதல்கள் ஆவணத்தி லுள்ள படத்திலும் பிரதிபலிக்கும்.இதனையே "பொருள் தொடுப்பு என்கிறோம்.படத்தை நகலெடுத்து ஆவணத்தில் ஒட்டிவிடுவதை பொருள் உட்பொதிப்பு என் கிறோம்.மூலப்படத்தில் செய்யப் படும் மாறுதல்கள் ஆவணப்படத்தில் பிரதி பலிக்காது.படத்தை மீண்டும் உட்பொதிக்க வேண்டும்.
OLTP : ஓஎல்டீபீ : நிகழ்நிலைப் பரிமாற்றச் செயலாக்கம் என்று பொருள்படும் (Online Transaction Processing) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒரு தரவுத்தள மேலாண்மை அமைப்பில், தரவுகள் உள்ளீடு செய்யப்பட்ட உடனேயே அவை பரீசீலிக்கப்பட்டு முதன்மைக் கோப்புகளின் தரவுகள் புதுப்பிக்கப் பட்டுவிடும்.நிதியக் கணக்கு வைப்புகளுக்கும், சரக்குக் கையிருப்பு மேலாண்மைக்கும் ஓஎல்டிபீ மிகவும் பயனுள்ளது. .om : .ஓம் : ஓர் இணையதள முகவரி ஓமன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக்களப் பெயர்.
ΟΜΑ : ஓஎம்ஏ : பொருள் மேலாண்மைக் கட்டுமானம் என்று பொருள்படும் Object Management Architecture archip தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.பொருள் மேலாண்மைக் குழு (Object Management Group) உருவாக்கிய பொருள்நோக்கு பகிர்ந்தமை செயலாக்கத்திற்கான வரையறை.ஒஎம்ஏ, கோர்பா (CORBA - Common Object Request Broker Architecture) எனப்படும் பொதுப்பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானத்தையும் உள்ளடக்கியது.
omni directional : பல திசையியிலான : எல்லா திசைகளிலும் சான்றாக, பல திசையிலான வானலை வாங்கி (antenna) எல்லா திசைகளில் இருந்தும் சமிக்கை களை ஏற்றுக் கொள்ளும்.
omni page : ஆம்னி பேஜ் : கேயர் கார்ப்பரேஷ னிடமிருந்து பீசி மற்றும் மெக்கின்டோஷூக்காக உருவாக்கப்பட்ட எழுத்து உணர் மென்பொருள். சொற்பகுதியிலிருந்து வரைகலையைப் பிரித்துப் பார்க்கவும் பலவகையான அச்செழுத்துகளை சொற்பகுதியாக மாற்றித் தரவும் திறனுள்ள முதல் பீசி மென்பொருள்.
omr : ஓஎம்ஆர் : ஒளி வழிக்குறி உணர்விப்பி : optical mark reader என்பதன் குறும்பெயர்.
on-board : தன்னமைவு : "தரமான" கணினி மாதிரியின் ஒரு பகுதியாக ஒரு குறிப்பிட்ட வன் பொருள் சாதனத்தைச் சேர்ப்பதைக் குறிப்பிடுவது. சான்றாக." ஐபிஎம் ராம்-ஆன் போர்டு" என்றால் இந்த அளவு ராம் குறிப்பிட்ட மாடல் கணினியில் தரமானதாக சேர்க்கப்பட்டுள்ளது என்று பொருள். "ஆன்-போர்டு" என்ற சொல் ஒரு குறிப்பிட்ட மின் சுற்று தாய் அட்டையில் உள்ளது என்பதையும் குறிப்பிடுகிறது.
on-board computer : ஊர்திக் கணினி : விண்வெளிக்கலம், உந்து ஊர்தி, கப்பல், விமானம் போன்ற ஓர் ஊர்தியில் நிறுவப்பட்டுள்ள கணினி.
on-board regulation : பலகை ஒழுங்குமுறை; பலகைச் சீராக்கம் : ஒவ்வொரு பலகையிலும் தனி மின் வலியளவு ஒழுங்கியக்கியைக் கொண்டுள்ள அமைப்பு முறை. one address : ஒற்றை முகவரி.
one-address computer : ஒரு முகவரிக் கணினி : தனது நிரலைப் படிவமைப்பில் ஒரே யொரு முகவரியை மட்டுமே பயன்படுத்தும் கணினி.எடுத்துக்காட்டு : "ADD x" என்பதில் அறிவுறுத்தத்திலுள்ள முகவரியை 'X' குறிக்கிறது. இது இரு முகவரிக் கணினி, மூன்று முகவரிக் கணினி ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது.இதனை நான்கு முகவரிக் கணினியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
one-address instruction : ஒரு முகவரி அறிவுறுத்தம் : ஒரு நிரலையும் ஒரேயொரு முகவரியையும் கொண்டுள்ள நிரல்.சில தனி நேர்வுகளில், ஓர் ஒற்றை முகவரிக் கணினியின் நிரல் குறியீடானது, சுழி (பூஜ்யம்) , பன்முக முகவரி நிரல்கள் இரண்டையும் கொண்டிருக்கும். இன்றுள்ள கணினிகளில் பெரும்பாலானவை ஒரு முகவரி நிரலையைக் கொண்டவை.
one-chip computer : ஒரு சிப்புக் கணினி.ஒரேயொரு சிப்பில் இயக்கப்படுகிற முழுமையான நுண்கணினி.இது "சிப்பு இயக்கக் கணினி" என்றும் அழைக்கப்படுகிறது.
one-dimensional array : ஒற்றைப் பரிமாண வரிசை : மின்வாய்க் கம்பிகளின் ஒற்றை வரிசையை அல்லது பத்தியைக் கொண்ட வரிசை முறை.
one for-one : ஒன்றுக்கு ஒன்று : சேர்ப்பியுடன் பெரும்பாலும் இணைத்துக்கூறும் சொற்றொடர். ஒரு மூலமொழி சொற்றொடர் வேறொரு எந்திர மொழி நிரலாக மாற்றப்படும்.கடிதப் போக்கு வரத்தில் அதிகமாகப் பயன்படும் வகை.
one gate : ஒரு வாயில்.
one-level memory : ஒரு நிலை நினைவகம் : ஒரே மாதிரியான செயல்முறை மூலம் சேமித்து வைக்கப்பட்டுள்ள இனங்கள் அனைத்தையும் அணுகக்கூடிய நினைவகம்.
one line function செயல்கூறு.
one-off : ஒன்றுமட்டும் : 1.ஒரு பொருளை ஒரே நேரத்தில் மொத்தமாகத் தயாரிக்கும் முறைக்குப் பதிலாக ஒரு நேரத்தில் ஒன்று என்ற முறையில் தயாரிப்பது.2.சிடி ரோம் எழுதும் பொறி ஒன்றில் ஒரு நேரத்தில் ஒரு நகல் மட்டுமே உருவாக்கும் முறை.
one-out-of-ten-code : பத்தில் ஒன்று குறியீடு : இந்தக் குறியீட்டு முறையில், ஒரு பதின்ம இலக்கமானது 10 இரும இலக் கங்களால் குறிக்கப்படுகிறது;இவற்றில் 10 இரும இலக்கங்களில் ஒரேயொரு இலக்கம் மட்டுமே "ஒன்று" இலக்கமாக இருக்கும்.
one-pass compiler : ஒற்றை ஓட்டத் தொகுப்பி : ஒரே சமயத்தில் ஓர் ஆதார மொழிச் செயல்முறையில் ஓடி, ஓர் இலக்குத் தகவமைவை உண்டாக்கும் மொழிச் செயல்முறைப்படுத்தி.
one's complement : ஒன்றின் குறை நிரப்பு எண் : ஒரு குறிப்பிட்ட மதிப்பின் மறிநிலை எண்ணைக் குறிக்கும் இலக்கம்.ஒன்றின் குறைநிரப்பு எண் என்பது ஓர் இரும இலக்க மாகும்.இது அந்த இலக்கத்திலுள்ள ஒவ்வொரு துணுக்கின் துணுக்கு வரிசைமுறையை மாற்று வதன் மூலம் பெறப்படுகிறது.எடுத்துக் காட்டு 01100101 என்பது 10011010 என்ற ஈரிலக்கத்தின் ஒன்றின் குறைநிரப்பு எண்.இரண்டின் குறை நிரப்பு எண், ஒன்பதின் குறை நிரப்பு எண், பத்தின் குறைநிரப்பு எண் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்திடுக.
ongoing activity : நடப்பு/நடவடிக்கை.
on-hook : கொக்கி மீது : வருகின்ற தொலைபேசி அழைப்புகளைப் பெறுகின்ற ஒரு தொலைபேசிக் கம்பி.off-hook என்பதற்கு மாறானது.
onion diagram : வெங்காய வரைபடம் : ஒரு அமைப்பினை வரைபட முறையில் குறிப்பிடுவது. குழி வட்டங்களாகக் காட்டப்படுகிறது.வட்டத்தின் உள்ளே வட்டங்களாக அமைத்து, இறுதி உள்வட்டமே மையமாகும்.மற்ற வெளிவட்டங்கள் அதைச் சார்ந்து இருப்பவை.
online : நேரடியாக : உடனடி முறை;உடன் நிகழ்வு : ஒரு கணினியின் மையச் செயலகத்துடன் நேரடித் தொடர்புடைய கருவிகள், சாதனங்கள், ஆட்கள் பற்றியது.கணினியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள சாதனம் பற்றிய தாகும்.இது மறைமுகமாக" (offline) என்பதற்கு மறுதலை.
online analytical processing : நிகழ்நிலைப் பகுப்பாய்வுச் செயலாக்கம்.
online application : நேரடிப் பயன்பாடுகள்.
online banking : நிகழ்நிலை வங்கிமுறை.
online community : நிகழ்நிலைச்சமூகம் : 1. இணைய மற்றும் வைய விரிவலை ஆகியவற்றின் பயனாளர்களைக் கொண்ட தொகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. 2.தம் அரசாங்கம் பற்றியும், பொது மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகள் குறித்தும் நிகழ்நிலை அரசியல் மன்றங்களில் விவாதத்திற்காக எடுத்து ரைக்கின்ற மக்கள் குழு.3.ஒரு குறிப்பிட்ட செய்திக் குழு, அஞ்சல் பட்டியல், எம்யுடி, பிபிஎஸ் மற்றும் பிற நிகழ்நிலை மன்றத்தை அல்லது குழு வைச் சேர்ந்த உறுப்பினர்கள்.
online database : நேரடித்தரவுத் தளம்;உடன் நிகழ் தரவுத் தளம் : ஒரு முனையத்தில் பெரும் பாலும் ஒரு காட்சிச் சாதனத்தில் ஒரு பயனாளர் நேரடியாக அணுகக்கூடிய தரவுத் தளம்.
online fault-tolerant system : நேரடிப் பிழைதாங்கு பொறியமைவு : உடனடி பிழை பொறுதி அமைப்பு : மென்பொருள் பிழைகள் இருந்தபோதிலும் சரியாகச் செயற்படுகிறவாறு வடி வமைக்கப்பட்ட கணினியமைவு.
online fonts : நிகழ்நிலை எழுத்துருக்கள்.
online help : நேர்முக உதவி : திரையில் வரும் நிரல்.நிரலாக்கத் தொடரின் உள்ளே இருந்து உடனடியாக வருவத
online information service : நிகழ்நிலைத் தகவல் சேவை : தரவுத் தளங்கள், கோப்புக் காப்பகங்கள், கலந்துரையாடல் குழுக்கள் மற்றும் இதுபோன்ற அமைப்புகளிலுள்ள தகவல்களை தொலைபேசி அல்லது தனித்த தகவல் தொடர்பு இணைப்பு அல்லது இணையம் வழியாக அணுகு வதற்கு வசதி செய்துதரும் வணிகமுறை. பெரும் பாலான நிகழ்நிலை தகவல் சேவை நிறுவனங்கள் தத்தமது சொந்த சேவைகளை மட்டுமின்றி பொது வான இணையத் தொடர்பையும் வாடிக்கையாளர் களுக்கு அளிக்கின்றன.அமெரிக்கா ஆன்லைன், காம்பு செர்வ், மைக்ரோசாஃப்ட் நெட் வொர்க் ஆகியவை அமெரிக்காவில் நுகர்வோருக்கான மிகப் பெரும் நிகழ்நிலைத் தகவல் சேவை நிறுவனங்கள் ஆகும்.
online problem solving : நேரடிச் சிக்கல் தீர்வு ;உடனடிச் சிக்கல் தீர்வு : ஒரு கணினியமை வினைப் பல பயனாளர் சேய்மை முனையங்க ளிலிருந்து ஒரே சமயத்தில் பயன்படுத்து கையில் சிக்கல்களை நேரடியாகத் தீர்ப்பதற்கான தொலைச் செய்முறைப் பயன்பாடு.இத்தகைய பயன்பாட்டில் ஒரு சேய்மை முனையத்தில் பயன்படுத்துவோருக்கும் ஒரு மையக் கணினியமைவுக்கும் உள்ள ஒரு செயல்முறைக்குமிடையில் ஒரு பரிமாற்றம் அல்லது உரை யாடல் நடைபெறுகிறது.
online processing : உடன்நிகழ் செயலாக்கம்.
online service : உடன்நிகழ் பணி.
online state : நிகழ்நிலை நிலைமை : ஓர் இணக்கி (மோடம்) இன்னோர் இணக்கியுடன் தகவல்தொடர்பு மேற்கொண்டிருக்கும் நிலை.
online storage : நேரடிச் சேமிப்பகம் : மையச் செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சேமிப்பகம்.
online transaction processing : நிகழ்நிலை பரிமாற்றச் செயலாக்கம்.
on/off : நிகழ்/அகல்.
on screening promotting : திரையில் முறைப் படுத்தல்.
on-screen pasteup : திரையில் ஒட்டு : கணினி முகப்பின் அமைப்புப் படம்.
on state : தொகுப்பு நிலை.
ontime application : நேரடிப்பயன்பாடு.
on the fly : பறந்து கொண்டே : தேவைப்படும் போதெல்லாம் பெரும்பாலும் பயனாளர் தலை யிடா மல் பணி செய்வது.பணியினை முடிப்பதிலான செயல் திறனில் எந்தவித பின்னடைவும் இருக்காது என்பதை உணர்த்துவது.
on web page : வலைப்பக்கத்தில்.
OP : ஓபீ : operation code இயக்கம். "செயற்பாடு" என்று பொருள்படும் “operation" என்னும் ஆங்கிலச் சொல்லின் குறும்பெயர்.
opacity : ஒளிபுகாத் தன்மை : ஒரு காகிதப் பரப்பின் வழியே ஒளி ஊடுருவி அதில் உருக் காட்சி கடக்காத நிலை.
opcode : செய்பணிக் குறிமுறை.
Opel.John : ஓப்பல்.ஜான் : "பன்னாட்டு வணிக எந்திரக் கழகம்” (International Machines Corporation - IBM) என்ற அமைவனத்தை, 1981 இல் நுண் கணினி வணிக அமைவனமாக மாற்றி யவர்.இவருடைய தலைமையில், இந்த அமைவனம் "IBM சொந்தக் கணினி" (IBM personal computer) என்ற நுண்கணினியை உருவாக்கியது.
open : திறப்பு நிலை;தொடங்கு நிலை : ஒரு கோப்பில் அல்லது ஆவணத்தில் பணிபுரியத் தொடங்குவதற்கான செய்முறை.
open access : திறந்த அணுகுமுறை : "சாஃப்வேர் புராடக்ட்ஸ் இன்டர்நேஷனல்" நிறுவனத் தின் டிரேட் மார்க்.
open an existing database : இருக்கும் தரவுத் தளத்தை திற.
open architecture : வெளிப்படை கட்டமைப்பு : திறந்த கட்டமைப்பு : ஒரு அமைப்பின் விளக்கக் குறிப்புகள் வெளிப்படையாகக் குறிப்பிடப்படுவது. தனியார் விற்பனையாளர்கள் கூடுதல் பொருள் களை உருவாக்க இதன் மூலம் ஊக்குவிக்கப் படுகிறது.
open command : திற ஆணை.
open containing folder : உள் கொண்ட கோப்புறை திற.
open data base : தரவுத் தளத்தைத் திற.
open doc : ஓப்பன்டாக் : பொருள் நோக்கிலான ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface) .வெவ்வேறு பணித்தளங்களில் உருவாக்கப்பட்ட பல்வேறு தனித்த நிரல்கள் ஒற்றை ஆவணத்தில் ஒன்றாக இணைந்து செயல்பட வழி பிற கோப்புகள் ஆகியவற்றை உட்பொதித்து அல்லது தொடுப் பேற்படுத்தி ஆவணம் உருவாக்க ஓப்பன் டாக் அனுமதிக்கிறது.ஆப்பிள், ஐபிஎம், ஆப்ஜெக்ட் மேனேஜ்மென்ட் குரூப் மற்றும் எக்ஸ்கன்சோர்ட்டியம் ஆகியவை இணைந்த கூட்டணி ஓப்பன் டாக்கை ஆதரிக்கிறது.
open ended : திறந்த நிலையான : திறந்த முனையுடைய : மூலப்பொறியமைவைப் பாதிக்காமல் புதிய செயல் முறைகள், நிரல்கள், துணை வாலாயங்கள், மாற்றமைவுகள், வகைப்பாடு கள், வரையீடுகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலை.
open file : திறந்தநிலைக் கோப்பு : திறந்த கோப்பு : படிப்பதற்கு எழுதுவதற்கு அல்லது இரண்டுக்கும் அணுகத் தக்க கோப்பு.இது மூடிய கோப்பிலிருந்து (closed file) வேறுபட்டது.
Open Financial Connectivity : திறந்தநிலை நிதியியல் இணைப்பு : மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வகுத்துள்ள வரன்முறை.மின்னணு வங்கிச் சேவைகளுக்கும் மைக்ரோ சாஃப்ட் மணி (Microsoft Money) என்னும் சொந்த நிதி மென்பொருளுக்கும் இடையேயான ஓர் இடைமுகம் ஆகும்.
open group : ஓப்பன் குரூப்;திறந்தநிலைக் குழு : கணினித் துறையில் வன்பொருள், மென் பொருள் உற்பத்தியாளர்கள், பயனாளர்கள் ஆகி யோர் இணைந்த ஒரு கூட்டமைப்பு.பல தரப்பட்ட விற்பனையாளர்களின் தரவு அமைப்பை வளர்த் தெடுப்பதே இதன் நோக்கம்.1996இல் ஓப்பன் குரூப் நிறுவப்பட்டது.ஓப்பன் சாஃப்ட்வேர் ஃபவுண்டேஷன் மற்றும் எக்ஸ்/ஓப்பன் கம்பெனி லிமிடெட் இரண்டும் இணைந்து இக்கூட்டமைப்பு உருவானது.
opening a file : கோப்புத் திறத்தல்.
opening menu : திறப்புக்கட்டளைப் பட்டியல்.
open loop : திறந்த வட்டம்;திறந்த வளையம் : செயலாக்கக் கட்டுப்பாடு அல்லது வழங்கு எந்திர அமைப்பில் மூத்த அல்லது கட்டுப்பாட்டுக் கருவியின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஒரு செய்தியைக் கணினி அச்சிடும் அமைப்பு.
open message : திறந்தச் செய்தி;வெளிப்படைச் செய்தி.
open MPEG consortium : ஓப்பன்எம்பெக் கூட்டமைப்பு : எம்பெக் தரவரையறைகளை பயன்பாட்டில் மிகுவிப்பதை நோக்கமாகக் கொண்ட, வன்பொருள், மென்பொருள் தயாரிப் பாளர்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பு.
open option : சிறந்த விருப்பத் தேர்வு.
open plan : வெளிப்படை திட்டம் : தனி அலுவலகங்களாக உருவாக்குகின்ற உட்பகுதிச் சுவர்கள் அதிகம் இல்லாமல் உருவாக்கப்படுகின்ற அலுவலக வடிவமைப்பு.தடுப்புகள் மற்றும் அலுவலக ஃபர்னிச்சர்களைப் பயன்படுத்தி பணி இடங்கள் உருவாக்கம்.
open shop : திறந்த நிலைக் களம் : ஒரு கணினி வசதியின் செயற்பாடு.இதில் பெரும் பாலான ஆக்கமுறைச் சிக்கல் செயல்முறைப் படுத்துதல்களும் ஒவ்வொரு செயல்முறைப் படுத்தும் வல்லுநர் குழுமத்தினால் அல்லாமல் ஒவ்வொரு சிக்கல் ஒழுங்கியக்குநரால் செய்யப்படுகிறது.இது முடிவுற்ற களம் (closed shop) என்பதற்கு மாறுபட்டது.
open software foundation;திறந்த நிலை மென்பொருள்கழகம். open standard : திறந்தநிலைத் தர வரையறை : ஒரு வன்பொருள் சாதனம் அல்லது மென்பொருள் நிரலின் பண்புக்கூறுகளை விவரிக் கும் வரன் முறைகள்.பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்கும் குறுக்குச் செயலாக்கத்தை அதாவது ஓர் இயக்கமுறைமையில் செயல்படுவது இன்னோர் இயக்கமுறைமையிலும் செய்யப்படுவதை (Interoperability) ஊக்குவித்து, புதிய தொழில் நுட்பங்களை வளர்த்தெடுக்க உதவவே, இந்தத் திறந்தநிலைத் தரவரையறைகள் வெளியிடப் பட்டன.
open subroutine : திறந்தநிலைத் துணை வாலாயம் : திறந்த துணை வழமை : ஒரு வாலாயத்தில் அது பயன்படுத்தப்படும் ஒவ்வொரு இடத்திலும் புகுத்தப்படும் துணை வாலாயம்.இது முடிவுற்ற வாலாயத்திலிருந்து (closed routine) வேறுபட்டது.
open system : திறந்த அமைப்பு : பல தரப்பட்ட பொருள்களுடன் இடையிணைக்கப்படுகின்ற வகையில் வடிவமைக்கப்படும் விற்பனையாளர் தொடர்பில்லாத அமைவு.ஒன்று அல்லது இரண்டு விற்பனையாளருக்காக அல்லாமல் ஆர்வமுள்ளவர் கள் ஒருமித்து தர நிருணயங்கள் உருவாக்கப் படுகின்றன.
'open system interconnection : திறந்தவெளி முறைமை இணைப்பு : திறந்த அமைப்பு இடைத்தொடுப்பி.
operand : இயக்கப்படும் எண்;செயப்படு பொருள்;செயலேற்பி : செயற்பாட்டுக்குள்ளாகும் தரவு அல்லது சாதன இனம்.இது, ஓர் கட்டளையில் ஒரு முகவர் மூலம் அடையாளங் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு : ADD 100 to 400 என்பதில், "100", "400" இரண்டும் இயக்கப்படு எண்கள்.
operand addresses : இயக்கப்படு எண் முகவரிகள்.
operate : செய்முறையை இயக்கு : இயக்கு.
operating environment package : செயற்பாட்டுச் சூழ்நிலை இயக்கம் : இறுதிப் பயனாளர்கள் இயக்க அமைப்பு மற்றும் அவற்றின் பயன்பாட்டு நிரல் தொடர்களுக்கிடையில் வரைகலை சார்ந்த இடைமுகத்தை உருவாக்கும் மென்பொருள் பொதிவுகள் அல்லது பல் பணியாற்றும் திறனும் அளிக்கப்படும்.
operating ratio : இயங்கு நேரவிகிதம். operating system : (OS) : செயற்படு பொறியமைவு : இயக்க முறைமை : செயலாக்க நிரல் தொகை; இயக்கக் கட்டளை அமைப்பு : கணினிச் செயல்முறைகளை நிறைவேற்றுகிற மென்பொருள்.இதில் அட்டவணைப்படுத்துதல், தவறு கண்டறிதல், உட்பாட்டு, வெளிப்பாட்டுக் கட்டுப் பாடு, கணக்கீடு, தொகுப்பீடு, சேமிப்பகம் குறித் தளிப்பு, தரவு மேலாண்மை போன்ற பணிகள் அடங்கும்.
operating system disk : இயக்க முறைமை வட்டு.
operation : செயற்பாடு : செய்முறை செயலாக்கம்;இயக்கம் : 1.வரையறுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை.2.தனியொரு கணினி நிரல் அல்லது உயர்நிலை மொழி கட்டளை மூலமாகக் குறித் துரைக்கப்படும் நடவடிக்கை.சுருக்கம் ஒபீ (op) .
operational feasibility : இயக்க வாய்ப்பறிதல் : உருவாக்கப்படும் (கணினி) அமைப்பை ஆதரித்து பயன்படுத்தி இயக்கும் விற்பனையாளர்களின் திறம் மற்றும் நிர்வாகம், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரின் விருப்பமும் திறனும்.
operation analysis : செயற்பாட்டுப் பகுப்பாய்வு.
operation, AND : உம்செயல்பாடு.
operation, arithmatical : எண் கணித செயற்பாடு.
operation, binary arthmatic : இரும கணக்கீட்டு செயற்பாடு.
operation, binary boolean : இரும பூலியன் செயற்பாடு.
operation, complementary : நிரப்பல் செயல்பாடு.
operation, computer : கணினிச் செயல்பாடு.
operation center : செயற்பாட்டுமையம்; செயலாக்கப் பகுப்பாய்வு : ஒரு கணினி வாயி லாகத் தரவுகளைச் செய்முறைப்படுத்துவதற்கும் தேவையான வெளிப்பாட்டினைக் கொணர்வதற்கும் தேவைப்படும் ஆட்களையும் சாதன வசதிகளையும் கொண்டிருக்கிற இடப்பரப்பு.
operation code : செயற்பாட்டுக் குறியீடு : ஒரு கணினி நிறைவேற்ற வேண்டிய செயற்பாட்டினைக் குறித்துரைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நிரல் குறியீடு.
operation, if-then : அவ்வாறெனில் செயல்பாடு'.
operation, logical : தருக்கச் செயல்பாடு.
operation, NOR : இல் அல்லது செயல்பாடு.
operation on data : தரவு செயலாக்கம்.
operation personal : செயலாக்கக் குழுமம்.
operations analysis : செயற்பாட்டுப் பகுப்பாய்வு : செயற்பாட்டு ஆராய்ச்சி.
operations information system : செயலாக்கங் களின் செய்தித்தகவல் அமைப்பு : ஒரு நிறு வனத்தின் செயலாக்க அமைப்புகள் உருவாக்கும் செய்தி தகவல்களைத் திரட்டி செயலாக்கி சேமிக்கும் செய்தித் தகவல் அமைப்பு.மேலாண்மை செய்தித் தகவல் அமைப்புக்காகவோ அல்லது ஒரு செயலாக்க அமைப்புக்காகவோ தகவலை உள்ளீடு செய்தல்.
operations personnel : செயற்பாட்டாளர்கள் : கணினி மையத்தில் கணினிச் சாதனத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பொறுப்பாக உள்ளவர்கள். இவர்கள் பொறியமைவுகளுக்கு விசையூட்டு கிறவர்கள்;செயல்முறைகளை ஏற்றுகிறார்கள்; செயல் முறைகளை இயக்குகிறார்கள் : சாதனங் களின் தவறான செயற்பணிகளை அறிவிக்கிறார் கள்.
operations research : செயல்பாட்டு ஆய்வியல்; இயக்க ஆய்வியல் : வணிகம், மேலாண்மை, நிர்வாகம் மற்றும் பிற துறைகளில் செயல்திறனை பகுப்பாய்ந்து அதிகரிக்கக் கணிதவியல் மற்றும் அறிவியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தும் ஆய்வியல் முறை.இரண்டாம் உலகப்போரின் தொடக்க காலங்களில் இது உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் போரின்போது இராணுவச் செயல் பாடுகளை மேம்படுத்து வதெற்கென்றே இவ்வாய் வியல் முறை பயன்படுத்தப்பட்டது.அதன் பின்னரே வணிகம் மற்றும் தொழிலகங்களுக்கும் பரவியது. ஓர் அமைப்பை அல்லது செயல்முறையை சிறு பாகங்களாகப் பிரித்து அவற்றுக் கிடையேயான உறவாட்டத்தை நுணுகி ஆய்ந்து ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்த இவ்வாய்வுமுறை பயன் படுத்தப்பட்டது.இவ்வாய்வு முறை உயிர்நாடிப் பாதைமுறை (Critical Path Method) , புள்ளியியல் (Statistics) , நிகழ்தகவியல் (Probability) , தரவுக் கோட்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.
operator இயக்கர்;செய்முறைக் குறி : 1. இயக்கப்படும் எண்களின்மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையைக் குறித்துக் காட்டுகிற ஒரு செய்முறை.2.ஓர் எந்திரத்தை இயக்குகிற ஆள்.
operator associativity : செயற்குறி இணைவு : ஒரு கணக்கீட்டுத் தொடரில் ஒரே முன்னுரிமை யுள்ள இரண்டு செயற்குறிகள் எந்த வரிசையில் செயல்படுத்தப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக் கும் செயற்குறிகளின் பண்புக்கூறு.இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ இருக்க லாம்.பெரும்பாலான செயற்குறிகளின் இணைவு இடமிருந்து வலமாக இருக்கும்.சி-மொழியில் சில செயற்குறிகள் வலமிருந்து இடமாகச் செயல் படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
operator, machine : பொறிச் செயல்பாட்டாளர்; பொறிஇயக்குநர்.
operator overloading : செயற்குறிப் பணி மிகுப்பு : ஒரு குறிப்பிட்ட செயற்குறி, ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் செயல்படும் எனில் அதனைப் பணி மிகுப்பு என்கிறோம்.எடுத்துக்காட்டாக, என்னும் கணக்கீட்டுச் செயற்குறி இரண்டு எண்களைக் கூட்டப் பயன்படும்.அதனையே இரண்டு சரங்களை (strings) இணைக்கப் பயன்படுத்துவோம் ("Good" + "Morning.") எனில், இதனைச் செயற்குறி பணி மிகுப்பு என்கிறோம். இங்கே என்னும் அடையாளம் இருபுறமும் கொடுக்கப்பட்ட மதிப்புகளின் தரவு இன (Data Type) அடிப்படையில் செயல்படும்.அடா, சி++, சி# மொழிகள் செயற்குறிப் பணிமிகுப்பை அனுமதிக் கின்றன.சி, ஜாவா போன்ற மொழிகள் இக் கருத்துருவை (concept) அனுமதிக்கவில்லை.
operator precedence : செயற்குறி முன்னுரிமை : ஒரு கணக்கீட்டுத் தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்குறிகள் இடம் பெறும்போது, அவை எந்த வரிசையில் இயக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறை.அதிக முன்னுரிமை உள்ள செயற்குறி முதலில் செயல்படுத்தப்படும். எடுத்துக் காட்டாக, 5x4 : 3 என்ற கணக்கீட்டில் முதலில் 5x4 செயல்பட்டு 20 ஆகும்.பிறகு 20+3 செயல்பட்டு 23 ஆகும்.544x3 என்று இருப்பின் முதலில் 4x3=12 ஆகிப் பின் 5+12=17 ஆகும்.பொதுவாக x, 1 ஆகியவை முதலிலும், ஆகியவை அடுத்தும் செயல்படுத்தப்படும்.ஆனால், கணக்கீட்டுத் தொட ரில் பிறை அடைப்புக்குறிகள் இருப்பின் அவற்றுள் இருக்கும் கணக்கீடே எல்லாவற்றுக்கும் முன்பாகச் செயல்படும்.5x (4+3) என்று இருப்பின் 4+3=7 ஆகிப் பிறகு 5x7-35 ஆகும்.
optacon : ஆப்டாக்கோன் : கண் பார்வையற்றவர்கள் " படிப்பதற்கு" உதவும் ஒரு சாதனத்தின் வணிகப் பெயர்.இது ஓர் ஒளிக்கற்றையிலிருந்து வரும் துடிப்புகளை எழுத்துகளின் வடிவங்களாக மாற்றுகிறது. பார்வையற்றவர்கள் எழுத்துகளைத் தடவிப் பார்த்துப் படிக்கலாம்.
optical character : ஒளியியல் எழுத்து : ஒளியியல் உரு : ஓர் ஒளியியல் எழுத்துப் படிப்பி மூலம் படிக்கக்கூடிய ஒரு தனிவகை எழுத்து.
optical character recognition : ஒளிவ எழுத்து உணர்வு : தாளில் அச்சிடப்பட்டுள்ள எழுத்து களை அவற்றின் இருள், ஒளித் தோரணிகளை ஆய்வு செய்து அவ்வெழுத்துகளின் வடிவ மைப்பைத் தீர்மானிக்கும் ஒரு மின்னணுச் சாதனத்தின் செயல்பாடு.வருடுபொறி அல்லது படிப்பி எழுத்துகளின் வடிவத்தைத் தீர்மானித்த பிறகு, ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள எழுத்துகளுடன் தோரணியை ஒப்பீடு செய்யும் எழுத்துணர் வழிமுறைகளைப் பயன்படுத்தி, அவை கணினி எழுத்துகளாக மாற்றப்படுகின்றன.இதன் பயன் என்னவெனில், ஏற்கெனவே அச்சிடப்பட்ட ஆவணங்களை வருடி அவற்றைக் கணினி ஆவணமாக மாற்றுவதுடன், உரைப்பகுதியை மாற்ற, திருத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
optical communication : ஒளியியல் செய்தித் தொடர்புகள்;ஒளியியல் தொடர்புகள் : தரவுகள், படங்கள், உரைகள், பிற செய்திகள் ஆகியவற்றை ஒளி மூலம் அனுப்புதல்.அனுப்பீட்டுக் கருவியி லிருந்து புறப்படும் ஒளியலைக் குறியீட்டினைத் தாங்கிச் செல்லும் ஒரு தரவு, ஓர் ஒளியியல் கால் வழியே சென்று, ஓர் அலை வாங்கியில் நுழை கிறது.அந்த அலைவாங்கி, மூலத்தரவுவை மறுகட்டமைப்புச் செய்கிறது. ஒளியியல் இழைகள், லேசர்கள் ஆகியவை இந்தத் தொழில்நுட்பத்தில் அடங்கியுள்ளன. இவை தரவு அனுப்பீட்டுத் திறம்பாட்டினை பெரும் அளவுக்கு உயர்த்த உதவுகின்றன.
optical computer : ஒளிக் கணினி : செய்திகளைச் செயலாக்க கம்பிகளுக்குப் பதிலாக லேசர் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தும் ஒரு வகைக் கணினி. இன்னும் இது பரிசோதனையில் மட்டுமே உள்ளது.மரபு வழியிலான கம்பியிணைப்பு கணினிகளை விட இது மிகவும் வேகமாக வேலை செய்கிறது.
optical data storage divice : ஒளிவ தரவு சேமிப்புச் சாதனம்.
optical disk : ஒளியியல் : ஒளி வட்டு.
optical drive : ஒளிவ இயக்ககம் : ஒளிவ (குறு) வட்டுகளில் எழுதவும், படிக்கவும் முடிகிற ஒரு வட்டு இயக்ககம்.சிடி ரோம் வட்டியக்ககம், மற்றும் வோர்ம் வட்டியக்ககங்களை எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.
optical fiber : ஒளியியல் இழை ; ஒளியிழை : மின்னியல் அனுப்பீட்டு கம்பி வடம். இது மிக உயர்ந்த அளவு ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடி இழையினால் ஆனது. இருமக் குறியீடுகளின் ஒரு கற்றையைக் கொண்டு செல்லும் வகையில் இதற்கு மிக விரைவான துடிப்பூட்டம் அளிக்கப்பட்டிருக்கும். இந்த ஒளியியல் இழைகள் மிகப்பெருமளவு தரவுகளைக் கொண்டு செல்ல வல்லவை; அத்துடன், மரபு இழைகளைச் சீர் குலைக்கக் கூடிய மின்னியல் குறுக்கீடுகளையும் தடுக்கிறது. கணினிச் செய்தித்தொடர்புகளில் ஒளியியல் இழைகளின் பயன்பாடு இப்போது மிகவும் பெருகியுள்ளது. optical fiber cable : ஒளியிழை வடம்; இணைப்பு ஒளியிழை வடம் : கண்ணாடி இழை வடம்.
optical imaging technique : ஒளிவக் காட்சி நுட்பம்.
optical laser disk : லேசர் ஒளி வட்டு.
optical mark reader : ஒளிவம் குறி படிப்பி; ஒளியியல் குறியெழுத்துப் படிப்பி : அட்டை களில் அல்லது பக்கங்களில் உள்ள வரைகலைக் குறி யெழுத்துகளைப் படிக்கக் கூடிய உட்பாட்டுச் சாதனம்.
optical mark recognition (OMR) : ஒளியியல் குறியெழுத்தேற்பு : ஒளியியல் குறியறிதல்; (ஓஎம்ஆர் : ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒரு குறியெழுத்தை இருத்தி வைப்பதன்மூலம் கணினிப்பொறி உட்பாட்டுக்காகத் தரவுகளை இன்னொரு ஊடகமாக மாற்றுவதற்குரிய தகவல் செய்முறைப்படுத்தும் தொழில்நுட்பம்.இந்த நிலை ஒவ்வொன்றும் கணினிப்பொறிக்குத் தெரிந்திருக் கிற ஒரு மதிப்பினைக் கொண்டிருக்கும்.அந்த மதிப்பு மனிதரால் அறியக் கூடியதாகவோ அல்லது அறிய முடியாததாகவோ இருக்கலாம்.இது ஒளியியல் எழுத்தறிதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது.
optical merge tree : உகந்த இணைப்பு மரம்; உகப்பு இணைவு மரம் : இயக்கச் செயற்பாடுகள் மிகக் குறும எண்ணிக் கையில் நிகழும் வகையில் சரங்களை இணைக்கிற வரிசை முறையினை மரவடிவில் உருப்படுத்திக் காட்டுதல்.
optical mouse : ஒளிச்சுசுட்டி : எலி வடிவ ஒளிக்கருவி : அதன் அசைவுகளுக்கு ஒளியைப் பயன்படுத்தும் எலி வடிவக் கருவி.இது ஒரு சிறிய மேசை மேல் உள்ள அட்டையின் மேற்பகுதியில் நகர்த்தப்படுகிறது.ஒரு ரெஃப்ளெக்டிவ் கிரிட் உள்ளது.எலி வடிவக் கருவி ஒரு ஒளியை வெளியிட்டு அது நகரும்போது ஏற்படும் மாற்றங் களைக் கண்டுபிடிக்கிறது.
optical page reader : ஒளியியல் பக்கப் படிப்பி : வாசகம் அச்சிடப்பட்ட ஒரு பக்கத்தை படித் தறிகிற உட்பாட்டுச் சாதனம்.
optical printer : ஒளியியயல் அச்சுப் பொறி.
optical reader : ஒளியியல் படிப்பி.
optical reader wand : ஒளியியல் படிப்பி கோல் : பட்டைக் குறியீடுகளைப் படித்து கணினிக்குள் உரிய தரவுகளைச் செலுத்துகிற சாதனம். optical recognition device : ஒளியியல் ஏற்புச் சாதனம்;ஒளியியல் அறியும் கருவி : காகித ஆவணங்களில் குறியீடிடப்பட்டுள்ள குறியீடுகளை அல்லது குறியெழுத்துகளைப் படிக்கக்கூடிய சாதனம்.இது அந்தக் குறியீடுகளை அல்லது குறியெழுத்துகளை மின்னியல் துடிப்புகளாக மாற்றுகிறது.
optical resolution : ஒளிவத் தெளிவு.
optical scanner : ஒளியியல் வருடி : ஒளியியல் நுண்ணாய்வுக் கருவி.
optical scanning : ஒளியியல் நுண்ணாய்வு : ஒளியியல் வருடல் : எந்திரச் செய்முறைப் படுத்துதலுக்காகச் செய்திகளை மாற்றம் செய்கிற ஓர் உட்பாட்டு முறை.செய்தி எந்தப் பின்னணியில் தோன்றுகிறதோ அந்தப் பின்னணியின் பிரதி பலிப்பு அளவினை மதிப்பீடு செய்வதன்மூலம் இது செய்யப்படுகிறது.
optical storage : ஒளிவச் சேமிப்பு.
optimising compiler : உகப்பாக்கு மொழி மாற்றி.
optimization : உகந்த அளவாக்கம் : செயற் பாட்டு நிரல்தொடர் : ஒரு முடிவினை ஒரு வடிவமைப்பினை அல்லது ஒரு பொறியமை வினை, இயன்ற வரையில் முழுமையானதாக அல்லது செயற்படத்தக்கதாக உருவாக்குகின்ற முயற்சிகள் மற்றும் செய்முறைகள்.
optimization analysis : உகந்த ஆய்வு : குறிப்பிட்ட தடைகளுக்கிடையில் கணித முன் மாதிரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாறிகளின் மதிப்புகளுக்கிடையில் ஒரு உகப்புநிலை மதிப்புக் கண்டறிதல்.
optimize : உகந்த அளவாக்கு : உகப்பாக்கு : சில நிலையளவுருக்களின்-குறிப்பாக செலவு சேமிப்பளவு கால அளவு-மதிப்பினைக் குறுமப் படுத்துகிற அல்லது பெருமப்படுத்துகிற வகையின் ஒரு செயல்முறையை எழுதுதல் அல்லது ஒரு பொறியமைவினை வடிவமைத்தல்.
optimizer : திறன்மிகுப்பி : ஒரு கணினி, பிணையம் அல்லது பிற சாதனம் அல்லது முறைமையின் செயல்திறனை மிகுக்கச் செய்யும் ஒரு நிரல் அல்லது சாதனம்.எடுத்துக்காட்டாக, வட்டுத் திறன்மிகுப்பி நிரல், கோப்பு அணுகல் நேரத்தைக் குறைக்கிறது. optimizing compiler : திறன்மிகுப்பு மொழி மாற்றி : இந்த மொழி மாற்றி அதன் வெளியீட்டை (சிப்பு மொழி அல்லது பொறி மொழி) பகுப்பாய்வு செய்து இன்னும் திறன்மிக்க (குறுகிய, வேகமான) கட்டளைத் தொகுதியாக மாற்றித் தரும்.
optimum : உகந்தஅளவு : ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ள வகைப்பாடுகளின் நோக்கில் மிகச் சிறந்ததும் மிகவும் விரும்பத்தக்கதுமான அளவு.
optimum programming : உகந்த அளவுச் செயல்முறைப்படுத்துதல்;உகந்த செயல்முறை நிரல் : ஒரு வகைப்பாட்டினைப் பொறுத்த அளவில் திறம் பாட்டினை பெரும் அளவுக்கு உயர்த்தும் செயல்முறைப்படுத்துதல்.மிகக்குறைந்த அளவு சேமிப்பியின் பயன்பாடு, மிகக் குறைந்த அளவு புற நிலைச் சாதனப் பயன்பாடு, மிகக்குறைந்த அளவுக் கணிப்புக்காலம் போன்றவை இதில் அடங்கும்.
optimum quantity : உகந்த அளவு.
optimum tree search : உகந்தஅளவு மர தேடல் : பல்வேறு மாற்று முறைகளில் மிகச் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மர தேடல் முறை.
option : விருப்பத் தேர்வு : வாய்ப்பு : தேடல்.
optional : விருப்பத்தேர்வு.
option key : விருப்பத்தேர்வு : தேடல் விசை : சில விசைப் பலகைகளிலுள்ள திருத்தம் செய்வதற்கான விசை.இதனை அழுத்தும்போது அடுத்துத் தட்டச்சு செய்யப்பட்டுள்ள எழுத்துகளுக்கு வேறுவிதமான பொருள் விளக்கம் அளிக்கிறது.
opto-electronics : ஒளி மின்னணுவியல் : ஒளியியலையும் மின்னணுவியலையும் ஒருங்கிணைக்கும் தொழில் நுட்பம்.
OR : அல்லது : இரண்டு பிட்டு கள் (0 அல்லது 1) அல்லது இரண்டு பூலியன் மதிப்புகளை (சரி அல்லது தவறு) இணைப்பதற்கான ஒரு தருக்கமுறைச் செயல்பாடு.இச்செயல்பாட்டின் வெளிப்பாடு கீழ்க்காணும் வகையில் அமையும்.
oracle (software package) : ஆரக்கிள் (மென்பொருள் பொதிவு) : பெருமுகம், சிறு மற்றும் நுண்கணினிகள் போன்ற அனைத்து வகைக் கணினிகளுக்கும் பயன்படக்கூடிய பிரபல தொடர்புறவு தரவுதள மேலாண்மைத் திட்டம்.
orange book : ஆரஞ்சுப் புத்தகம் : அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறையின் பாதுகாப்பு தொடர் பான தரக்கட்டுப்பாடுகளைப் பற்றிய ஆவணம். நம்பிக்கைக்குரிய கணினி முறைமையை மதிப்பாய்வு அளவுகோல் செய்யும் டிஒடி தர வரையறை.5200.28 எஸ்டீடி, டிசம்பர், 1985 என்ற தலைப்புடையது.A1 (மிகவும் பாதுகாப்பனது) முதல் D (குறைந்த பாதுகாப்புள்ளது) வரை பல்வேறு தர வரிசைகளை வரையறுக்கும் ஒரு வழி முறை. உயிர்நாடியான தரவுவை பாதுகாக்க ஒரு கணினி முறைமைக்குள்ள தகுதிப்பாட்டை இத்தர வரிசை குறிக்கிறது.
ORB : ஓஆர்பி : பொருள் கோரிக்கைத் தரகர் எனப்பொருள்படும் Object Request Broker என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கிளையன்/வழங்கன் பயன்பாடுகளில் கிளையன் ஒரு பொருளுக்கான கோரிக்கயை முன்வைக்கும் ஓர் இடைமுகம்.ஓஆர்பி, கோரிக்கையை, பொருளை வைத்துள்ள வழங்கனுக்கு அனுப்பி வைக்கும். விடை மதிப்புகளை கிளையனுக்குத் திருப்பியனுப்பும்.
or circuit : அல்லது மின்சுற்று.
order : வரிசை முறை;எண் வரிசை : வரிசை : 1.ஒரு குறிப்பிட்ட விதிகளின் தொகுதிக்கிணங்க இனங்களை வரிசை முறையில் அமைத்தல்.2. பெரும்பாலான விரிதாள் செயல்முறைகளில் காணப்படும் நிரல்.இது கணிப்பு வரிசை முறையைப் பயன்படுத்துவோர் தீர்மானித்துக் கொள்வதற்கு அனுமதிக்கிறது.
ordered list : ஒழுங்கமை வரிசை.
order of operations : செயற்பாடுகளின் வரிசைமுறை;இயக்க வரிசை : கணிதச் செயற்பாடுகளின் படிவரிசை முறை.இதன்படி மொத்தமாக்கம் முதலிடம் பெறுகிறது.அடுத்து அடுக்குப் பெருக்கல், வர்க்க மூலங்கள் கானல், பெருக்கல், வகுத்தல் இடம் பெறுகின்றன.பின்னர் கூட்டல், கழித்தல் வருகின்றன.
ordinal number : வரிசைமுறை எண் : ஒரு பொருளின் வரிசையை அடையாளம் காணும் எண்.சான்றாக, பதிவேடு 34.
ordinate : செங்குத்து ஆயம்;நெட்டாயம் : ஒரு வரைபடத்தில் செங்குத்தாக உள்ள Y-அச்சு. இது x -அச்சிலிருந்து (மட்டாயம்) வேறுபட்டது.
.Org ஆர்க் ஓ.ஆர்ஜி : இணையத்தின் களப்பெயர் அமைப்புமுறையில் உயர்நிலைக் களங்களுள் வணிக, கல்வி நிறுவனம் அல்லாத, ஆதாயநோக்கில் செயல்படாத நிறுவன அமைப்புகளைச் சுட்டும் பெயர்.வணிக அமைப்புகள் .காம் (com) என்ற பெயரையும், கல்வி நிறுவனங்கள் இடியு (.edu) என்ற பெயரையும் கொண்டுள்ளன.கணித்தமிழ் சங்கம் வணிக நிறுவனமோ, கல்வி நிறு வனமோ அல்ல. எனவே அதன் பெயர் www. kanithamizh.org என அமைந்துள்ளது.
0 or 0 = 0
0 or 1 = 1
1 or 0 = 1
1 or 1 = 1
organisation file : கோப்பு ஒழுங்கமைப்பு.
organise favourites : கவர்வுகளை ஒழுங்குபடுத்து.
organiser : அமைப்பாளர்.
organization : சீர்மை சேமிப்பமைப்பு.
organizational control : அமைவனக் கட்டுப்பாடு : தகவல் பொறியமைவை ஊடுருவல், குறுக்கீடு, நாசவேலை போன்ற வற்றிலிருந்து பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்படும் அலுவலர் நிருவாக நடைமுறைகள்.
organization chart : அமைவன வரைபடம் : ஒரு வணிக நிறுவனத்திலுள்ள பொறுப்புகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டும் அமைப்புமுறை விளக்க வரைபடம். அமைவனப் படிநிலை அமைப்பின் பட விளக்கம். இது ஓர் அமைவனத்தின் பணியாளர்களிடை யிலான உறவு சார்ந்த நிலையைக் காட்டுகிறது.
OR gate : அல்லது வாயில்;அல்லது வழி : உட்பாடுகள் இரண்டில் ஒன்று அல்லது இரண்டும் இருமமாக இருக்குமானால் உட்பாடு ஓர் இரும 1 ஆக இருக்கிற இருவிசைகளைக் கொண்ட கணினி மின் சுற்று வழி.இது "அல்லது இயக்கியை" (OR operator) இயக்குகிறது.
orginal data : தோற்றுவாய்த் தரவு : மூலத் தரவு : செய்முறைப்படுத்த வேண்டிய தரவு.இது, "செப்ப மற்ற தரவு" (Raw data) என்றும் அழைக்கப்படும்.
orientation : ஆற்றுப்படுத்தல். origin : தோற்றுவாய்;தொடக்கம் : குறியீட்டு முறையில் ஒரு செயல்முறையின் அல்லது செயல்முறைப் பகுதியின் முதல் அமைவிடத்தின் முழுமையான நினைவக முகவரி.
original : மூலப்படி.
original equipment manufacturer (OEM) : மூலச்சாதன உற்பத்தியாளர் : மற்ற விற்பனையாளர்களிடமிருந்து சாதனங்களை விலைக்கு வாங்கி தனியொரு பொறியமைவாக ஒருங்கிணைத்து மறுவிற்பனை செய்யும் உற்பத்தியாளர்.
Original Macintosh Keyboard : அடிப்படை மெக்கின்டோஷ் விசைப்பலகை : தொடக்க கால ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியுடன் தரப்படுவது. இது மிகவும் சிறியது. எண் விசைப் பகுதி மற்றும் பணிவிசைகள் (Function keys) இல்லாதது. ஏறத்தாழ தட்டச்சு விசைப் பலகையை ஒத்தது. 58 விசைகளைக் கொண்டது. தட்டச்சுப் பலகையிலிருந்து இரண்டே இரண்டு மாற்றங்கள். கீழ் வரிசையில் இருபுறமும் உள்ள விருப்பத்தேர்வு விசைகள். இடவெளிப்பட்டையின் இடப்புறம் கட்டளை விசையும், வலப்புறம் நுழைவு விசையும் உள்ளன (Enter key).
original message : மூலத்தரவு.
orginate : தொடங்கு.
originate answer : தொடங்கு/மறுமொழிச் சாதனம் : செய்திகளை உண்டாக்கி மறுமொழி யளிக்கக்கூடிய ஒரு சாதனம். பெரும்பாலான தொலைக்கணினிச் சாதனங்கள் மறு மொழி முறையில் அமைந்துள்ளன. எனவே பயன்படுத்துபவர் மறுமொழி முறையிலே இருத்தல் வேண்டும்.
OR operator : "அல்லது" இயக்கி : தருக்க முறை இயக்கி என்பது ஓர் அறிக்கை, 'Q'என்பது இன்னொரு அறிக்கை என்றால், P+Q என்பதன் "அல்லது" (OR) என்பது, குறைந்தது ஒன்று உண்மையாக இருந்தால் மட்டுமே உண்மையானதாகும்;எல்லாம் பொய் எனில் பொய் யானதாகும் என்பதைத் தெரிவிக்கும் தன்மையுடையது.
orphan : அனாதை வரி : தொடக்கத் தனி வரி : ஒரு வாசகத்தின் ஒரு பக்கத்தின் அடியில் தன்னந்தனியாக அமர்ந்திருக்கும் ஒரு பத்தியின் முதல்வரி. இது எல்லா அச்சு வடிவங்களிலும் விரும்பத்தகாததாகக் கருதப்படுகிறது.
orphan file : உறவிலிக்கோப்பு : அனாதைக் கோப்பு : கணினிச் சேமிப்பில் பயனற்றுப் போன பின்பும் தங்கிவிட்ட ஒரு கோப்பு. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட பயன்பாடு செயல்படுவதற்கு உதவியாக உருவாக்கப்பட்ட கோப்பு, அந்தப் பயன்பாடு கணினியிலிருந்து நீக்கப்பட்டபின் அனாதை ஆகிவிடுகிறது.
orth oferrite : ஆர்த்தோ ஃபெரைட் : இது இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருள். இது எதிர்காந்தத் துருவமுனைப்பின் பாம்பு போன்று நெளிந்த மாற்றுப் புலங்களைக் கொண்டதாகும். இது காந்தக் குமிழ் நினைவகத்துக்குப் பயன் படுத்தப்படுகிறது.
orthographic : எழுத்துக்கூட்டு முறை : அச்சு விரிவமைப்பு ஓவியம் அல்லது நிலப்படத்தின் அச்செழுத்து முறை. இதில் முனை நீட்டிக் கொண்டிருக்கும் வரிகள் ஓவியம் அல்லது நிலப்படத்தின் தளப்பரப்புக் குச்செங்குத்தாக இருக்கும்.
.Or. us : ஓ. ஆர். யு. எஸ் : ஓர் இணையதள முகவரி அமெரிக்க நாட்டின் ஒரிகான் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.
OS : ஓஎஸ் : இயக்க முறைமை : "செயற்படு பொறியமைவு" எனப் பொருள்படும் 'Operating System' என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம்.
os/2 : ஓஎஸ்/2 : ஐபிஎம் நிறுவனத்தின் இயக்க முறைமை. தொடக்க காலத்தில் ஐபிஎம், மைக்ரோசாஃப்ட் இரண்டின் கூட்டுத்திட்டப் பணியாய் இருந்தது. பின்னாளில் மைக்ரோசாஃப்ட் விலகிக் கொண்டது. பாதுகாக்கப்பட்ட பாங்கில் (pro- tected mode) செயல்படும். மெய்நிகர் நினைவகம் கொண்ட பல் பணியாக்க இயக்க முறைமைஇன்டெல் 80286, 80386, +i486 மற்றும் பென்டியம் பிராசாசர்கள் கொண்ட சொந்தக் கணினிகளில் செயல்படவல்லது. பெரும்பாலான எம்எஸ்-டாஸ் பயன்பாடுகளும் ஓஎஸ்/2-வில் செயல்படும். அனைத்து எம்எஸ்-டாஸ் வட்டுகளையும் படிக்கும். பிரசென்டேஷன் மேனேஜர் என்கிற துணை அமைப்பைக் கொண்டது. இது வரைகலைப்பணிச் சூழலை வழங்குகிறது. பிணைய வசதிகளைப் பெற "லேன் மேனேஜர்' உண்டு. வங்கிகள் நிறுவியுள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் ஓஎஸ்/2 முறைமையே பயன்படுத்தப்படுகிறது.
oscillate : ஊசலாடு : மிகக் குறைந்ததற்கும், மிக அதிகமானதற்குமான மதிப்புகளுக்கு மிடையில் வந்துவந்து போவது. ஊசலாடுவது என்பது ஒரு சுழற்சி. மாறும் அலைவு எண்ணின் ஒரு முழு அலை.
oscillating sort : ஊசல் வரிசையமைவு : ஒரு நாடா இயக்கியின் திறம்பாட்டிற்கு முன்னும் பின்னும் படிப்பதற்கான வசதியைக் கொடுக்கும் புறநாடா வரிசையமைவு.
oscillation : ஊசலாட்டம் : குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறுகின்ற மாற்றத்துக்கு உள்ளாகும் நிலை. மின்னணுவியலில் ஊசலாட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட சமிக்கையில் ஏற்படுவது.
oscillator : அலையியற்றி : ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அலைவரிசையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறிக்கொண்டே இருக்கும் வெளியீட்டைத் தருகின்ற மின்னணுச் சுற்று. நிலையான அல்லது மாற்றத்தக்க வெளியீட்டைத் தரக்கூடிய வகையிலும் வடிவமைக்க முடியும். மின்னணுச் சுற்றுகளில் அலை இயற்றிகள் மிகவும் முக்கியமானவை. நிலையான அலைவரிசையை உருவாக்க சில அலை இயற்றிகள் குவார்ட்ஸ் படிகத்தைப் பயன்படுத்துகின்றன. செர்ந்தக் கணினிகளில் கடிகார அலைவரிசையை வழங்க ஓர் அலை இயற்றி பயன்படுத்தப்படுகிறது. 1 முதல் 200 மெகா ஹெர்ட்ஸ் வரை துடிப்பவை. செயலியும் மற்றபிற மின் சுற்றுகளும் இதனடிப்படையில் இயங்குகின்றன. oscillography : ஊசல் உருவாக்கம் : ஊசல் வரைவியல் : ஓர் எதிர்மின்வாய்க் கதிர்க்குழலின் முகப்பில் மின்னியல் குறியீடுகளின் ஒரு தோரணியை உருவாக்கிக் காட்டுதல்.
oscilloscope : ஊசல் உருவாக்கக் கருவி : அலைவு நோக்கிக்கருவி : இருளில் ஒளிவிடும் ஒரு திரையில் சுடரொளி வீசுகின்ற ஒரு பரப்பிடத்தை உண்டாக்குகின்ற ஒரு மின்னணுவியல் சாதனம். இது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மாறிகளுக்கிடையிலான தொடர்பினைக் காட்டுகிறது. கணினி பராமரிப்புத் தொழில் நுட்பாளர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
OSF : ஓஎஸ்எஃப் : திறந்தநிலை மென்பொருள் கழகம் என்று பொருள்படும் open Software Foundation என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிஇசி, ஐபிஎம், ஹெச்பீ போன்ற நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ஆதாய நோக்கில்லாக் கூட்டமைப்பு. 1988இல் நிறுவப் பட்டது. யூனிக்ஸ் இயக்கமுறைமையில் செயல்படும் நிரல்களுக்கான தரக்கட்டுப்பாடுகள் மற்றும் வரன்முறைகளை வளர்த்தெடுப்பதும், மூல நிரல் இந்த அமைப்பின் நோக்கம். பகிர்ந்தமை கணிப் பணிச்சூழல் (Distributed Computing Environment), மோட்டிஃப் என்னும் வரைகலைப் பணிச்சூழல் (GUI), ஓஎஸ்எஃப்/1 என்னும் இயக்க முறைமை (யூனிக்ஸின் இன்னொரு வடிவம்) ஆகியவை ஓஎஸ்எஃபின் படைப்புகளில் சில.
OSPF : ஓஎஸ். பீ. எஃப் : திறந்த மீக்குறு பாதை முதலில் எனப்பொருள்படும் Open Shortest Path First என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையம் போன்ற ஐ. பீ பிணை யங்களுக்கான திசைப்படுத்தும் நெறிமுறை. ஒவ்வொரு கணு (node) வையும் செய்தி சென்றடைவதற்கான மிகக்குறுகிய பாதை எது என்பதைக் கணக்கிட்டு திசைவி (Router) வழிப்படுத்தும். திசைவி அதனோடு இணைக்கப்பட்ட கணுக்களிலுள்ள தொடுப்பு-நிலை விளம்பரம் (Link-State Advertisements) என்றழைக்கப்படும் தரவுவை, பிணையத்திலுள்ள பிற திசைவிகளுக்கு அனுப்பி வைக்கின்றன. அங்கே தொடுப்புநிலைத் தரவு ஒன்று குவிக்கப்பட்டு மீக் குறுபாதை கணக்கிடப்படுகிறது.
OTOH : ஓடீஓஹெச் : இன்னொரு வகையில் பார்த்தால் எனப்பொருள்படும் on the other hand என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல், இணையச் செய்திக்குழுக்கள் மற்றும் பிற விவாதக் குழுக்களில் அடிக்கடி பயன்படுத்தப் படுகிறது.
OTPROM : ஓட்ப்ரோம் : one time prom என்பதன் குறும்பெயர். ஒரே ஒருமுறை மட்டுமே நிரல் தொடரமைக்கக் கூடிய ப்ராம் சிப்பு.
oughtred, william (1575-1660) : அவுட்ரெட், வில்லியம் (15751660) : ஆங்கிலேயக் கணித மேதை;1630இல் சறுக்கு விதியைக் கண்டு பிடித்தவர்.
outbox : வெளிச்செல் பெட்டி : செல்மடல் பெட்டி : மின்னஞ்சல் பயன்பாடுகளில் வெளியே அனுப்பப்படும் கடிதங்களைச் சேமித்து வைக்கும் பெட்டி.
outdegree : புறமுகப்போக்கு;வெளியாகு எண் : ஒரு மைய முனையைவிட்டுச் செல்லுமாறு தூண்டப்பட்ட விளிம்புகளின் எண்ணிக்கை. இது உள் முகப்போக்கு (indegree) என்பதிலிருந்து வேறுபட்டது.
outdent : வெளித்தள்ளு : வெளிமுகமாக்கம்; வெளியாக்கம் : ஒரு வாசகத்தின் ஒரே பத்தியில் மற்ற வரிகளிலிருந்து இடதுபக்கம் அதிக தூரம் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு வரியை உள்முகமாகச் செய்முறைப்படுத்துதல். இது "விளிம்பு வெட்டுதல்" (indentation) என்பதற்கு எதிரானது.
out line layout view button : வெளிக்கோடு உருவரை காட்சிப் பொத்தான்.
outer join : வெளி இணைப்பு;புறச்சேர்க்கை : தரவுத்தள மேலாண் மையில் உறவுநிலை எண்கணிதத்தில் நிலவும் ஒரு செயற்குறி. புறச்சேர்க்கை என்பது ஒரு விரிவாக்கப் பட்ட சேர்க்கைச் செயல்பாடு ஆகும். தொடர்புடைய தரவுகள் பதியப்பட்டுள்ள இரண்டு அட்ட வணை களிலிருந்து தேவையான தரவுவைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் பல்வேறு செயல்முறைகளில் இதுவும் ஒன்று. முதல் அட்டவணையிலுள்ள அனைத்து ஏடுகள் இந்தச் செயல்பாட்டின் வெளிப்பாடாக அமையும். முதல் அட்டவணையிலுள்ள ஏடுகளுக்கு உறவுடைய ஏடுகள் இரண்டாவது அட்டவணையில் இருப்பின் அத்தரவுகள் வெளியீட்டில் இடம்பெறும். அவ்வாறு இல்லாத ஏடுடன் அனுப்புவதற்கான கற்றை வெற்று மதிப்புகளுடன் இடம் பெறும்.
outer loop : வெளிக்கொக்கி வளையம்.
outline : வெளிக்கோடு.
outline font : வெளிக்கோடு அச்செழுத்து : ஒவ்வொரு எழுத்துகளின் அடிப்படை வெளிக் கோடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒருவகை அச்செழுத்து. வெளிக்கோடுகளை உண்மையான எழுத்துகளாக அளவிட்ட (பிட்மேப்) அச்சேறுவதற்கு முன் அளிக்கப்படுகிறது.
outline processor : வெளிக்கோடு செயலகம் : பயனாளர் ஆலோசனைகளை ஏற்கும் ஒரு மென்பொருள் பொதிவு. அவைகளை பயனாளர் குறிப்பிடும் வகையில் மாற்றி திரும்பமைத்து அதே எண்ணங்களின் பண்பட்ட மாதிரியாக அளிக்கிறது.
outline utility : வெளிக்கோட்டு பயன்கூறு.
outlook express : அவுட்லுக் எக்ஸ்பிரஸ் : ஒரு மின்னஞ்சல் மென்பொருள்.
out-of-band signaling : கற்றைப் புறத்து சமிக்கைமுறை : ஒரு தகவல் தொடர்புத் தடத்தில் பாட்டுச் சமிக்கை போன்ற சிலவற்றை அனுப்பும் முறை.
out-of-line : முரணிய வரி : வெளியமை வரி : செயல்முறையின் முதன்மை வரிக்குள் அமைந்திராத அறிக்கைகள். எடுத்துக்காட்டு : முடிவற்ற துணை வாலாயங்கள்.
output : வெளிப்பாடு;வெளிப்படுபொருள்; வெளியீடு : 1. ஒரு கணினியின் உள்முகச் சேமிப்பு அலகிலிருந்து ஒரு சேமிப்பிக்கு அல்லது வெளிப்பாட்டுச் சாதனத்திற்கு மாற்றப்படும் தரவு. 2. கணினியினால் செய்முறைப்படுத்தப்பட்ட தரவு வின் இறுதி முடிவு. இது உட்பாடு (input) என்பதற்கு வேறுபட்டது.
output area : வெளிப்பாட்டுப் பகுதி : வெளிப்பாட்டுத் தரவுக்காக முதன்மைச் சேமிப்பியில் ஒதுக்கப்பட்டுள்ள பகுதி. இது "உட்பாட்டுப் பகுதி"க்கு (input area) வேறுபட்டது.
output bound : வெளிப்பாடு கட்டுப்பட்ட : வெளிப்பாட்டுப் பணிகளினால் ஏற்படும் அதிக அளவு தாமதத் தன்மை. குறை வேக தரவு தொடர்புக் கம்பிகள் அல்லது அச்சுப்பொறிகள்.
output buffer : வெளிப்பாட்டு இடையிடம்; வெளியீட்டு இடை நினைவகம்;வெளிப்பாட்டு நினைவறை : தரவுவை ஒரு புறச்சாதனத்திற்கு மாற்றப் பயன்படுத்தப்படும் கிடைத்தடுப்பு நினைவகம்.
output channel : வெளிப்பாட்டுத் தடம் : புறநிலை அலகுகளையும் மையச் செயலகத்தையும் இணைக்கின்ற ஒரு இணைப்புத்தடம். இதன் வழியாக வெளிப்பாட்டுக்காக தரவுகளை அனுப்பலாம்.
output channel, input : உள்ளீட்டு வெளியீட்டுத் திட்டம்.
output data : வெளிப்பாட்டுத் தரவு : செய்முறைப்படுத்துதலுக்குப் பிறகு ஒரு சாதனத்திலிருந்து அல்லது செய்முறையிலிருந்து வழங்கப்படும் தரவு. இது உட்பாட்டுத் தரவிலிருந்து வேறுபட்டது.
output device : வெளிப்பாட்டுச் சாதனம் : ஒரு கணினியிலிருந்து தரவு மதிப்புகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்துபவர் விரும்பும் வடிவத்தில் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் அலகு. எடுத்துக்காட்டு கணினி வெளிப்பாட்டு நுண்சுருள் பதிப்பி;இலக்க வரைவி : அச்சடிப்பி; ஒளிக்காட்சி முனையம். இது உட்பாட்டுச் சாதனத்தி லிருந்து வேறுபட்டது.
output media : வெளிப்பாட்டு ஊடகம் : வெளிப்பாட்டுத் தரவுகளைப் பதிவு செய்வதற்கான இயற்பியல் பொருள். எடுத்துக்காட்டு : காகிதம், காந்த வட்டு, காந்த நாடா.
output primitives : வெளிப்பாட்டு அடிப்படைகள் : திரையில் படங்களை உருவாக்கப் பயன்படும் அடிப்படை உறுப்புகள்.
output signal, zero : வெளியீடில்லாக் குறிகை.
output statement : வெளிப்பாட்டுக் கட்டளை : விவரங்களை, விவரங்களின் அடிப்படையில் கணித்தறியப்பட்ட விடையை பயனாளருக்கு திரை யிலோ, அச்சிலோ, வட்டுப் பதிவாகவோ தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் கணினி மொழி நிரல் தொடர்.
output stream : வெளிப்பாட்டுத் தாரை : வெளியீட்டு ஓடை : ஒரு வெளிப்பாட்டுச் சாதனத்திற்கு மாற்றப்பட வேண்டிய தரவுகளின் வரிசைத் தொகுதி. output unit : வெளியீட்டகம்;வெளிப்பாட்டகம் :
outputting : வெளிப்பாடு செய்தல் : பயனுள்ள தகவல்களின் வெளிப்பாட்டினை உண்டாக்குகிற செய்முறை.
outsourcing : வெளித்திறன் பெறல் : வெளிப்புற ஆலோசர்கள், மென்பொருள் இல்லங்கள் அல்லது சேவை அலுவலகங்களுடன் ஒப்பந்தம் செய்து அமைப்பு ஆய்வு நிரல் தொடரமைத்தல் மற்றும் தரவுமைய இயக்கங்களைச் செய்தல்.
Oval : நீள்வட்டம்.
oval shape : நீள்வட்ட வடிவம் : முட்டை வடிவம்.
overdrive : ஓவர்டிரைவ் : இன்டெல்லின் 486 மேம்படுமையச் செயலகம்.
overdrive socket : கூடுதல் இயக்ககப் பொருத்துவாய்.
overflow : ததும்பல் : வழிதல்;மிகைமதிப்பு : ஒரு கணிதச் செயற்பாட்டில் பதிவேட்டில் அல்லது சேமிப்பு அமைவிடத்தில் அதன் கொள்திறனுக்கு மீறிய அளவில் ஓர் எண்ணளவினை உண்டாக்கு தல்.
over flow, arthmetic : கணக்கீட்டு வழிவு.
overflow error : பொங்கிவரும் பிழை : கணக்கிடப்பட்ட தரவு ஒதுக்கபபட்ட புலத்துக்குள் பொருந்தவில்லையென்றால் ஏற்படும் பிழை. முடிவு பலம் காலியாக விடப்படும் அல்லது பிழை நிலையைக் காட்டும் சில குறியீடு செய்யப்படும்.
overhead : தாங்கா சுமை;மேற்செலவு : 1. ஒரு செயல்முறையை அல்லது சாதனத்தை அதன் உயர்ந்தஅளவுத் திறம்பாட்டுக்குக் குறைவாகச் செயற்படும்படி செய்யும் மட்டுமீறிய காரணிகளைக் குறிக்கும் சொல். 2. செயற்பாட்டுப் பொறியமைவும் செயல்முறையும் ஆக்க முறையான பணிகளைவிட நிருவாகப் பணிகளைச் செய்கிறபோது நடைபெறும் ஆக்க முறையல்லாத முயற்சி.
overlap : மேலழுந்துதல்;உடன் நிகழ்தல் : ஒரு செயலினைச் செய்துகொண்டிருக்கும் அதே சமயத்தில் வேறொரு செயலினையும் செய்யும்படி செய்தல். எடுத்துக்காட்டு : மையச் செயலகம் அலகு நிரல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது ஓர் உட்பாட்டுச் செயல்பாட்டினைச் செய்தல். ஒரே சமயத்தில் கணினி பல செயல்முறைகளை நிறைவேற்ற இம்முறை அனுமதிக்கிறது. overlapping : மேலழுந்து நிலை : ஒரு திரைக்காட்சியில் சாளரங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அல்லது ஒவ்வொன்றின் எல்லைகளுக் குள் மேலழுந்தி இருக்கும் நிலை.
overlap processing : மேலழுந்து செய்முறைப் படுத்துதல் : ஒரு கணினியில் உட்பாட்டினைச் செலுத்துதல், செய்முறைப்படுத்துதல், வெளிப்பாட்டு நடவடிக்கைகளைச் செய்தல் ஆகியவற்றை ஒரே சமயத்தில் நிறைவேற்றுதல். இது மேலழுந்தா செய்முறைப்படுத்துதலிலிருந்து வேறுபட்டது.
overlay : மேற்கவிதல் : ஒரு செயல்முறையின் கூறுகளை துணைச் சேமிப்பியிலிருந்து நிறைவேற்றத்தக்கதாக உள்முகச் சேமிப்பிக்கு மாற்றுதல். இதனால் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கூறுகள் பல்வேறு சமயங்களில் ஒரே சேமிப்பு அமைவிடங்களை பிடித்துக் கொள்கி ன்றன. உள்முகச் சேமிப்பியில் தற்போது அணுகப்பட்டு வரும் செயல்முறையை அல்லது தரவுகளை மட்டுமே வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஒரு நேரடிச் சேமிப்புச் சாதனத்தில் (காந்த நாடா அலகு) தேவையான காலம்வரை வைத்து உள்முகச்சேமிப்பியின் வடிவளவை அதிகரிப்பதற்கு இந்த உத்தி பயன்படுகிறது.
overlay1 : மேல்விரி1 : 1. வட்டில் சேமிக்கப்பட்டுள்ள நிரல் மிகப் பெரியதாக இருப்பின் அதனை முழுமையாக நினைவகத்தில் ஏற்றமுடியாது. அத்தகைய நிரல்களுக்கு மேல்விரி கோப்புகள் தனியாக உருவாக்கப்படுகின்றன. நிரலை நினைவகத்தில் ஏற்றும்போது மேல்விரி கோப்பிலுள்ள ஒரு பகுதி நிரல் மட்டுமே நினைவகத்தில் ஏற்றப்படும். தேவைப்படும்போது அடுத்த பகுதி ஏற்றப்படும். அது நினைவகத்திலுள்ள முதல் பகுதியின் மீதே மேலெழுதப்படும். இந்த ஏற்பாட்டின்படி மிகப்பெரிய நிரலையும் நினைவகத்தில் ஏற்றி இயக்க முடிகிறது என்ற போதிலும் ஓரளவு இயக்கவேகம் குறைய வாய்ப்புள்ளது. 2. குறிப்பிட்ட பண்புக்கூறு களை அடையாளம் காணும் பொருட்டு திரை, மேசை அல்லது விசைப்பலகை மீது மேல் விரிக்கப்படும் அச்சிட்ட படிவம்.
overlay2 : மேல்விரி2 : 1. கணினி வரைகலையில் ஒரு படிமத்தின்மீது இன்னொரு படிமத்தை மேல் விரித்தல். 2. ஒளிக் காட்சிகளில், நிகழ்நேர அல்லது முன் பதியப்பட்ட ஒளிக்காட்சிச் சமிக்கைகளின் மீது கணினியில் உருவாக்கப்பட்ட ஒரு வரைகலைப் படிமத்தை மேல் பொருந்தச்செய்தல்.
overlay card : மேலோட்ட அட்டை : கணினியில் காட்டுவதற்கான ஒளிக்காட்சி மூலத்திலிருந்து வரும் என். டி. எஸ். சி. சமிக்கைகளை இலக்கப்படுத் தும் கட்டுப்பாட்டுப் பொறி.
overloading : அதிகப்பளு ஏற்றல் : நிரல் தொடரமைப்பால் ஒரே பெயரை ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே கணிப்புக் குறியீட்டினை வேறுவேறு விவர இனங்களுக்குப் பயன்படுத்தும் திறன். இதனால் சூழ்நிலைக்கேற்ப அவற்றை வேறுபடுத்த வேண்டியது தொகுப்பின் வேலையாகிறது.
overloading constructor : பணி மிகுப்பு ஆக்கி.
overprint : மேலச்சு : எழுத்தின் தோற்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஒரே நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் அச்சிடும் செய்முறை.
overpunch : மேல் துளையிடல் ; கூடுதல் துளையிடல் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துளைகளுடைய ஒரு அட்டையின் பத்தியில் மேலும் துளைகளையிடுதல்.
override : மேலாணை ; மேலூர்தல் ; ஊர்ந்தியங்கல் : ஒரு செயல்முறைக்குப் பதிலாக்கம் செய்வதன்மூலம் முன்னிருக்கும் மதிப்பினை மாற்றும்படி செய்தல்.
overrun : மேலோட்டம் ; மிகையோட்டம் ' ஊர்ந்தியங்குதல் : ஒரே காலத்தில் இயங்கும் ஊடகத்தைக் கொண்ட இடைத் தடுப்பிலாக் கட்டுப்பாட்டு அலகிலிருந்து தரவுகளை மாற்றம் செய்யும்போதும் வழித்தடத்தின் திறம்பாட்டிற்கு மீறுகையாக நடவடிக்கையைச் செயல்முறை தூண்டும்போது ஏற்படும் நிலை.
overscan : மிகை நுண்ணாய்வு ; மிகை வருடல் : கணினி திரை
overseas : அயல்நாட்டு : தொலைத்தரவு தொடர்புக் குழுமம்.
overstriking : மிகை அடிப்பு : மேலடிப்பு : அச்சுப்படியில் எடுப்பான முகப்பினைக்கொண்டு வருவதற்காக எழுத்துகளை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அச்சடித்தல்.
overtype mode : மேலெழுது முறை : ஏற்கனவே உள்ள எழுத்துகளின் மீது அவையழிந்து புதிய எழுத்துகள் அவ்விடத்தில் பதியுமாறு தட்டச்சிடும் முறை. INSERT Mode-க்கு மாறானது.
overwrite : மேலெழுதுதல் : ஓர்அமைவிட த்தில் ஒரு தரவுவைப் பதிவு செய்து, அந்த அமை விடத்தில் முன்னரே அடங்கியுள்ள தரவுவை அழித்தல் அல்லது சீர்குலைத்தல்.
overwrite mode : மேலெழுது பாங்கு : ஓர் ஆவணத்தில் உரையைத் தட்டச்சுச் செய்யும்போது புதிதாகத் தட்டச்சு செய்யப்படும் எழுத்துகள் அந்த இடத்தில் ஏற்கெனவே உள்ள எழுத்துகளை நீக்கி விடும். இப்போது புழக்கத்தில் உள்ள சொல் செயலித் தொகுப்புகளில் பெரும்பாலும் உட்செருகு பாங்கே (Insert Mode) இயல்பானதாய் உள்ளது. தேவையெனில் மேலெழுது பாங்காக மாற்றியமைத்துக் கொள்ளலாம்.