கணினி களஞ்சிய அகராதி-2/N

விக்கிமூலம் இலிருந்து

கல்வி (கால்) : கற்பித்தலுக்கும், சிக்கல் தீர்ப்பதற்கும் கணினி அமைப்பைப் பயன்படுத்துதல் வழக்கமான கல்விமுறையை மேம்படுத்தவோ, துணை புரியவோ செய்தல். Computer Assisted Instruction என்பதும் இதுவும் ஒன்றல்ல.

computer awareness : கணினி விழிப்புணர்வு : கணினி என்றால் என்ன என்றும், அது எவ்வாறு செயல்படுகிறது என்றும் அறிந்து கொள்வதைவிட சமுதாயத்திற்கு பங்கும் பயனும் பற்றி புரிந்து கொள்வதையே பொதுவாக இவ்வாறு சொல்வர்.

Computer Based Consultant (CBC) : கணினி சார்ந்த ஆலோசகர் : 1970 தொடக்கத்தில் வடிவமைக்கப்பட்ட, மின்னியந்திரக் கருவியினைப் பழுதுபார்க்க உதவுவதற்காக உருவாக்கப்பட்ட அறிவு சார்ந்த அமைப்பு.

computer based information system : கணினி சார்ந்த தகவல் அமைப்பு : தனது தகவல் செயலாக்க நடவடிக்கைகளுக்கு கணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்தும் தகவல் அமைப்பு.

Computer Based Learning (CBL) : கணினி அடிப்படையிலான கல்வி (சிபிஎல்) : கணினி வழிக் கற்றலின் அனைத்து வடிவங்களையும் குறிக்கின்றது.

computer binder : கணினி ஒட்டி : அச்சுப்பொறிகள் உருவாக்குகின்ற அச்சு வெளியீடுகளைப் பாதுகாக்கவும், வைத்துக் கொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ள ஒட்டி.

computer, buffered : இடைத் தடுப்புக் கணினி.

computer bulletin board : கணினி அறிக்கைப் பலகை : ஒரு செய்தித் தாளின் விளம்பரப் பிரிவின் மின்னணுப் பதிப்பு போன்ற ஒரு கணினி அறிக்கைப் பலகை.

computer bureau : கணினி அலுவலகம் : பல பயனாளர்களுக்கு தன்னுடைய கணினியின் நேரத்தை விற்கும் நிறுவனம்.

computer camp : கணினி முகாம் : கோடை வாரங்களில் நடத்தப்படும் முகாம். இதில் பங்கு கொள்பவர்கள் நீச்சலடிப்பது, காரோட்டுவதுடன் நுண்கணினிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்வார்கள்.

computer center : கணினி மையம் : கணினி, அதன் துணைப் பொருள்கள் மூலமாகவும், அதன் பணியாளர் அளிக் கும் சேவைகள் மூலமாகவும் பல தரபபட பயனாள‌ர்களுக்கு கணினிச் சேவைகளை வழங்கும் நிலையம்.

computer center director : கணினி மைய இயக்குநர் : ஒரு கணினி மையத்தின் பணியாளர்களை இயக்கும் தனி நபர்.

computer chess : கணினிச் சதுரங்கம் : சதுரங்க விளையாட்டை ஆடும் கணினி நிரல். 1970 முதல் ஏசிஎம் அமெரிக்க கணினி சதுரங்க சாம்பியன்ஷிப்புகள் வளர்ச்சிக்கு ஒரு கிரியா ஊக்கியாகவும், செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கு வரலாற்றுப் பதிவேடாகவும் விளங்குகிறது. கடந்த 20 ஆண்டுகளில், மன்ற ஆட்டக்காரர்கள் நிலையிலிருந்து உலகின் மிகச்சிறந்த வரிசையில் நிரல்கள் முன்னேறி உள்ளன.

computer circuitry : கணினிச் மின்சுற்றமைப்பு.

computer circuits : கணினிச் மின்சுற்றுகள் : வாயில் மின்சுற்றுகள், சேமிப்பு மின்சுற்றுகள், தொடக்கும் மின்சுற்றுகள், தலைகீழாக்கும் மின்சுற்றுகள், மின்சக்தி பெருக்கும் மின்சுற்றுகள் போன்றவை இலக்கமுறை கணினிகளில் பயன்படுத்தப்படும் மின் சுற்றுகள்.

computer classifications : கணினி வகைப்பாடுகள் : இலக்கமுறை, தொடர்முறை என்று இரண்டு பெரும் பிரிவுகளில் கணினிகள் அடங்குகின்றன. இலக்கமுறை மற்றும் தொடர் முறைக் கணினிகளை ஒன்றாக இணைத்து கலப்பினம் என்று சொல்லப்படும் மூன்றாவது வகையும் உருவாக்கப்படுகிறது. மிகப்பெரிய மீத்திறன் கணினிகள் முதல் மிகச்சிறிய நுண்கணினிகள் வரை கணினிகளின் அளவு, விலை, திறன் மாறுபடுகிறது.

computer code : கணினிக் குறி முறை : ஒரு குறிப்பிட்ட கணினிக்கான எந்திரக் குறி முறை.

computer conferencing : கணினிக் கலந்துரையாடல் : ஒரு கட்டமைப்பில் பங்கு கொண்டுள்ள பலவற்றுக்கிடையேயான தகவல் தொடர்பு. மனிதர்களின் உண்மையான சந்திப்புக்கும், தொலைபேசி மாநாட்டமைப்புக்கும் ஒரு மாற்று ஏற்பாடாக தொலைத் தகவல் தொடர்புகள் வழியாக பலதரப்பட்டவர்கள் தங்களுக்குள் செய்திகளையும், தகவலையும் பரிமாறிக் கொள்வது.

computer control : கணினிக் கட்டுப்பாடு. computer control console : கணினிக் கட்டுப்பாட்டுப் பணியகம்.

computer crime : கணினிக் குற்றம் : கணினி அமைப்பை தீயநோக்கங்களுக்குப் பயன்படுத்தி அனுமதியற்ற செயல்களைச் செய்ய கணினியைப் பயன்படுத்துதல். சிறிய ஏமாற்றுத் திட்டங்களிலிருந்து வன்முறைக் குற்றங்கள்வரை கணினிக் குற்றங்களின் தன்மை இருக்கும். சட்டமுறைகள் இன்னும் சரிவர வரையறுக்கப் படவில்லை. இந்தியா உட்பட சில நாடுகளில் மட்டுமே இதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

computer design : கணினி வடிவமைப்பு : ஒரு கணினி பற்றிய கருத்து, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கணினி வழி வடிவமைப்பையும் குறிக்கும்.

computer designer : கணினி வடிவமைப்பாளர் : ஒரு கணினியின் மின்னணு அமைப்பினை வடிவமைப்பவர். கணினி மூலம் வடிவமைப்பைவரையும் குறிக்கும்.

computer, digital : இலக்க‌முறைக் கணினி.

computer disease : கணினி நோய் : கணினிகளின் நினைவகத்தையோ, செயல்பாட்டையோ பழுதாக்கி எல்லா நிரல்களும் வீணாகுமாறு செய்வது.

computer drawing : கணினி ஓவியம் : கணினி வெளியீட்டுச் சாதனம் உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட உருவம். பொதுவாக வரைகலை அச்சுப்பொறி அல்லது வரைவு பொறி (பிளாட்டர்) இதை வரையும்.

computer enclosure : கணினி நிலைப்பெட்டி : கணினியின் மின்சுற்று அட்டைகளையும், மின்சக்தி வழங்கலையும் பாதுகாக்க அமைக்கப்படும் பெட்டி அல்லது கொள்கலன்.

computer engineering : கணினி பொறியியல் : கணினி வன்பொருள் /மென்பொருள் அமைப்புகளின் வடிவமைப்பினை உள்ளடக்கிய அறிவுப்புலம். பல கல்லூரிகள் அல்லது பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பாக நடத்தப்படுகிறது.

computer errors : கணினிப் பிழைகள்.

computerese : கணினிய : கணினிகள் மற்றும் தகவல் சார்ந்த அமைப்புகளுடன் பணியாற்றும் மனிதர்களின் குழூஉச் சொற்கள் மற்றும் பிற சிறப்புச் சொற்கள்.

computer ethics : கணினிப் பண்பாடு; கணினி ஒழுக்கம் : கணினி வல்லுநர்கள் மற்றும் பயனாளர் களின் சட்ட, தொழில் சார்ந்த, சமூக, ஒழுக்கமுறைப் பொறுப்புகளைக் கட்டுப்படுத்தும் கொள்கைகள்.

computer family : கணினிக் குடும்பம் : ஒரே வகையான நுண்செயலிகளையோ, ஒரே வடிவமைப்பிலமைந்த நுண் செயலிகளையோ கொண்ட கணினிக் குழுக்களைக் குறிக்கும் சொல். (எ-டு) ஆப்பிள் குடும்பக் கணினிகள் மெக்கின்டோஷ் என்றழைக்கப்படுகின்றன. சுருக்கமாக மேக் எனப்படும் இவை மோட்டோரோலா 68000, 68020, 68030, 68040 ஆகிய நுண்செயலிகளில் செயல்படுகின்றன. சில வேளைகளில் அவை வேறு செயலிகளைப் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு. (எ-டு) மேக் கணினிக் குடும்பத்தில் இப்போதெல்லாம் பவர்பீசி (PowerPC) நுண்செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பவர்மேக் என்றழைக்கப்படுகின்றன.

computer, first generation : முதல் தலைமுறைக் கணினி.

computer flicks : கணினிப் படங்கள் : கணினி தயாரிக்கும் திரைப்படங்கள்.

computer floor : கணினி தரை : ஒரு பொய்த்தரை உண்மையான தரை அளவிலிருந்து 25-30 செமீ-க்கும் மேலாக இருக்கும். கணினி தரைதான் கணினி இருப்பிடத்தில் வசதியாகக் வடங்கள் நீக்கவும், தடையில்லாமல் இயங்கும் சூழ்நிலையையும் உருவாக்க உதவும்.

computer fraud : கணினி ஏய்ப்பு; கணினி மோசடி.

computer game : கணினி விளையாட்டு : விளையாடுபவரின் உடற் செய்கைகளை உள்ளீட்டுத் தரவுவாகக் கொண்டுள்ள உரையாடல் வகை மென்பொருள். இதன் வெளியீடு உரையாடல் முறையிலான வரைபட முறை காட்சியாக இருக்கும்.

computer, general purpose : பொதுப் பயன் கணினி.

computer generations : கணினி தலைமுறைகள் : ஐந்து வேறுபட்ட கால இடைவெளிகளில் மின்னணுக் கணினிகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு நடைமுறையும் வன்பொருள்/மென்பொருள் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. வெவ்வேறு தொழில் நுட்பத்தைச் சார்ந்து உருவானவை. கணிப்பின் வரலாற்று முன்னேற்றத்தின் முக்கிய நிலைகள்.

computer graphicist : கணினி வரைகலைஞர் : கணினி வரை கலை அமைப்புகளைப் பயன்படுத்தும் வல்லுநர். படங்கள் அல்லது ஓவியங்கள் தோன்றுவதைக் குறிப்பிடும் பொதுச்சொல். எழுத்துகள் மற்றும் எண்களைப் பயன்படுத்துவதிலிருந்து வேறுபட்டதே வரைகலை.

computer graphics : கணினி வரைகலை : தொடக்க காலத்தில் கணினித் திரைகளில் வெறும் எழுத்துகளையும் எண்களையுமே பார்க்க முடிந்தது. இப்போதெல்லாம் திரைகளில் படங்கள் பவனி வருகின்றன. இதற்கு கணினி வரைகலைத் தொழில்நுட்பமே காரணம். படங்களை உருவாக்குவது, திரையில் காட்டுவது, நிலையாகப் பதிந்து வைப்பது ஆகிய பணிகளுக்கான பல்வேறு வழி முறைகளை கணினி வரைகலை நுட்பம் உள்ளடக்கியுள்ளது.

Computer Graphics Interface : கணினி வரைகலை இடைமுகம் : வரைகலைச் சாதனங்களான அச்சுப்பொறிகள், வரைவு பொறிகள் ஆகியவற்றுக்குரிய மென்பொருள் தர வரையறைகள் ஏற்கெனவே இருந்த ஜிகேஎஸ் (GKS -Graphics Kernel System) என்ற வரையறையின் இணைத் தொகுதியாக உருவாக்கப்பட்டது. பயன்பாடுகளை உருவாக்கும் நிரலர்களுக்கு, வரைகலைப் படங்களை உருவாக்குதல், கையாளுதல், காட்சிப்படுத்தல், அச்சிடல் ஆகியவற்றுக்கான வரையறுக்கப்பட்ட வழிமுறைகளை வழங்குகின்றன.

Computer Graphics Metafile : கணினி வரைகலை மீகோப்பு : பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட‌ ஜிகேஎஸ் (GKS-Graphical Kernel System) தர வரையறைகளுடன் தொடர்புடைய தரக் கட்டுப்பாடு. ஒரு வரைகலைப் படத்தை ஆணைகளின் தொகுதியாக‌ உருவகிப்பது. அந்த ஆனைகளைக் கொண்டு அப்படத்தை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். பயன்பாடுகளை உருவாக்கும் நிரலர்களுக்கு இதற்கான வரையறுத்த வழிமுறைகளை வழங்குகிறது. ஒரு வரைகலை மீகோப்பை வட்டில் சேமிக்க முடியும். ஒரு வெளியீட்டுச் சாதனத்துக்கு அனுப்பி வைக்க முடியும்.

computer independent language : கணினி சாராத மொழி : பேசிக், கோபால், ஃபோர்ட்ரான், பாஸ்கல், பிஎல்/1 போன்ற மொழிகளைப் பொருத்தமான மொழி மாற்றிகளுடன் எந்தக் கணினியிலும் பயன்படுத்தலாம். அத்தகைய பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்ட உயர்நிலை மொழிகள். computer industry : கணினித் தொழில்துறை : கணினி வன்பொருள், மென்பொருள் மற்றும் கணினி தொடர்பான பணிகளை அளிக்கும் நிறுவனங்கள், வணிகர்களைக் கொண்ட தொழில் துறை.

Computer Information System (CIS) : கணினி தரவு அமைப்பு (சிஐஎஸ்) : வன்பொருள், மென்பொருள், தரவு, மக்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளை ஒருங்கிணைத்து செயலாக்கம், சேமிப்பு, உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகியவைகளை ஒருங்கிணைந்த தொடர் பணிகளைச் செய்தல்.

Computer Input Microfilm (CIM) : (சிஐஎம்) கணினி உள்ளீடு நுண்படலம் : நுண்படலம் அல்லது நுண் அட்டையின் உள்ளடக்கங்களை நேரடியாகக் கணினிக்குள் சேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உள் வீட்டைக் கொண்ட தொழில் நுட்பம்.

computer instruction : கணினி ஆணை; கணினி வழி பயிற்று வித்தல்; கணினி அறிவுறுத்தம் : 1. ஒரு கணினி புரிந்துகொண்டு அதன்படி செயல்படுதற்குரிய ஓர் ஆணை, காண்க‌ machine instruction 2. கற்பித்தலுக்குக் கணினியைப் பயன்படுத்துவது.

Computer-Integrated Manufacturing (CIM) : கணினி - ஒருங்கிணைப்பு உற்பத்தி முறை : தொழிற்சாலை தானியங்கி மயமாதலில் கணினியைப் பயன்படுத்துவதன் இலக்குகள் எளிமைப்படுத்துதல், உற்பத்தி செயல்முறைகளையும் பிற உற்பத்தித் தன்மைகளையும் ஒருங்குபடுத்துதலாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒட்டு மொத்தக் கோட்பாடு. இதில் கேட்/காம் அமைப்பு அனைத்து உற்பத்தி செயல்முறைகளையும் கட்டுப்படுத்தி ஒருங்கினைக்கிறது. உற்பத்தி வடிவமைப்பாளர்களும், பொறியாளர்களும் பயன்படுத்தும் அதே தரவு தளத்தையே கணக்காய்வாளர்களும், மேற்பார்வையாளர்களும், பட்டியலிடுபவர்களும், உற்பத்தி திட்டமிடுபவர்களும் பயன்படுத்துவார்கள்.

Computer Interface Unit (CIU) : (சிஐயு) கணினி இடைமுகச் சாதனம் : கணினியுடன் வெளிப்புறச் சாதனங்களை இனைப்பதற்குப் பயன்படும் சாதனம்.

computerise : கணினி மயமாக்கு.

computerization : கணினி மயமாதல் : 1. இதற்கு முன்பு வேறு முறைகளில் செய்த செயலை கணினியைப் பயன்படுத்திச் செய்தல். 2. பரவலாக ஏற்றுக் கொண்டு கணினியைப் பயன்படுத்தி சமுதாயத்தின் உண்மையான தோற்றத்தை மாற்றுதல்.

Computerized Axial Tomography : CAT : கணினி மய ஆக்சியல் டோமோக்ராபி : கணினி கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடுகதிர் (எக்ஸ்ரே) தொழில்நுட்பம். இது ஒரு இடத்தில் படத்தை குறிப்பிட்ட உருவத்தின் வழியாக ஆழத்தில் காட்டும். அப்படத்தின் விவரங்களைக் கொண்டு வரவும், மாறும் திசைகளில் உருவத்தின் மூலம் செல்லும் ஊடுகதிர்களைப் பதிவுசெய்தல் மற்றும் உருவத்தின் அமைப்பைப் போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்குதல் ஆகியவற்றைச் செய்வதற்கு கணினி பயன்படுகிறது.

computerized database : கணினிமய தரவுத் தளம் : ஒரு நிறுவனத்துக்குரிய அனைத்துத் தரவுகளும் குறிப்பிட்ட வடிவமைப்பில் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தொகுதி. துல்லியம், ஒத்தமைவு, நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பு அனைத்தும் கொண்டிருக்கும்.

computerized games : கணினிமய விளையாட்டுகள் : பலவகையான புகழ்பெற்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளை விளையாட கணினிகளைப் பயன்படுத்துவது.

computerized game playing : கணினி மய ஆட்டம் ஆடுதல் : கணினிகளில் பலதரப்பட்ட விளையாட்டுகளை ஆடுவதற்கு நிரலமைத்து, பொழுது போக்கிற்காகப் பயன்படுத்துதல். டிக்-டாக்டோ, பேக்மேன், பிரேக் அவுட், ஸ்டார் ரைடர்ஸ், ஸ்பேஸ் வார், பிளாக் ஜாக், ஹேங்மேன், செஸ், செசர்ஸ் போன்ற பல விளையாட்டுகளை ஆட கணினி பயன்படுத்தப்படுகிறது.

computerized jargon : கணினி குழூஉச் சொல் மொழி; கணினி குழூஉச் சொல் : கணினி அறிவியலுடன் தொடர்புள்ள தொழில்நுட்பச் சொற்கள்.

computerized mail : கணினி மய அஞ்சல் : கணினி கருவி மூலமாக வணிக அமைப்புகளுக்கும், வீடுகளுக்கும் மின்னணு வடிவத்தில் அஞ்சல் அனுப்பும் தொழில்நுட்பம்.

computerized numerical control : கணினி மய எண் கட்டுப்பாடு. computer kit : கணினி கருவிப்பெட்டி : கருவிப்பெட்டி வடிவில் நுண்கணினி, கணினி கருவிப் பெட்டியை வாங்குபவர்கள், மாதிரி விமானத்தையோ அல்லது ஸ்டீரியோ ஒலி அமைப்பையோ உருவாக்குவது போல், நுண்கணியை உருவாக்க முடியும், பள்ளிகளில் கணினி வடிவமைப்பு சொல்லித் தருவதற்கும், கணினி பொழுது போக்கினை பழக்கமாகக் கொண்டவர்களுக்கும் கணினி கருவிப்பெட்டி புகழ் பெற்று விளங்குகிறது.

computer language : கணினி மொழி : ஒரு கணினியில் செயல் படுத்துவதற்கான ஆணைகளைக் கொண்டுள்ள ஒரு செயற்கை மொழி. இருமக் குறிமுறை மொழி தொடங்கி உயர்நிலை மொழிகள்வரை மிகப்பரந்த தொகுதியை இச்சொல் குறிக்கிறது.

computer leasing company : கணினியை வாடகைக்குத் தரும் நிறுவனம் : கணினி உற்பத்தியாளரிடமிருந்து வாங்கிய கணினிக் கருவியை வாடகைக்கு விடுவதில் சிறப்பாக ஈடுபட்டுள்ள நிறுவனம்.

computer letter : கணினி எழுத்து : ஒரு சொல் செயலி பொருள். உருவாக்கும் தனிப்பட்ட எழுத்து வடிவம்.

computer literacy : கணினி எழுத்தறிவு : சிக்கல்களைத் தீர்க்க கணினிகளைப் பயன்படுத்துவது என்ற பொது அறிவும், வன்பொருள் மற்றும் மென்பொருளின் செயல்பாடு பற்றிய பொதுவிழிப்புணர்வும், கணினிகளால் ஏற்படும் சமுதாய மாற்றங்கள் பற்றிப் புரிந்து கொள்ளுதலும் சேர்ந்தது. இவ்வறிவு கணினி சார்ந்த சமுதாயத்தில் வாழ்வது பற்றிய புரிந்து கொள்ளுதல்களையும், அறிவுக் கருவிகளையும் உருவாக்கி உள்ளது. தொழில்நுட்ப அறிவு கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கணினி சூழ்நிலையில் ஒரு பயனாளராக இயல்பாக செயல்படமுடிவதே கணினி எழுத்தறிவு பெற்றிருப்பதாகும்.

Computer Managed instruction (CML) : (சிஎம்எல்) பதிவேடு காக்கும் மேலாளராகவும், கற்றுத் தருவதை வரையறுப்பவராகவும் கணினியைப் பயன்படுத்துவது. கல்விக்காக கணினிகளைப் பயன்படுத்தல்.

computer museum : கணினி கண்காட்சி : அமெரிக்காவில் மசாசூசெட்சின் போஸ்டனில் உள்ள கணினி வரலாறு உரைக்கும் ஆவணக் காப்பகம். இதில் பல தொடக்ககால கணினி அமைப்புகளும், கணினி முன்னோடிகளின் ஒலிநாடா குறிப்புக் கொண்ட தொகுப்பும் உள்ளன.

computer music : கணினி இசை : இசை அமைத்தல், அல்லது ஒலி ஏற்படுத்துதலில் ஏதாவது ஒரு நிலையில் கணினிக் கருவியைப் பயன்படுத்துதல்.

computer name : கணினிப் பெயர் : ஒரு கணினிப் பிணையத்தில் ஒரு குறிப்பிட்ட கணினியைத் தனித்து இனங்காட்டும் பெயர். ஒரு கணினிப் பெயர் வேறொரு கணினிக்கு இருக்க முடியாது. களப்பெயராகவும் இருக்கக்கூடாது. பயனாளர் பெயர் என்பதும் கணினிப் பெயர் என்பதும் வேறு வேறாகும். பிணையத்தில் ஒரு கணினியின் பெயரைக் கொண்டே அதன் வளங்களைப் பிற கணினிகள் பெற முடியும்.

computer network : கணினி பிணையம்; கணினி கட்டமைப்பு : ஒன்றோடொன்று இணைப்பு ஏற்படுத்திக் கொண்டுள்ள இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட கணினிகள், முனையங்கள் மற்றும் தரவு தொடர்பு வசதிகளைக் கொண்ட கணினி அமைப்பு.

computernik : கணினியார் : கணினிகளைப் பயன்படுத்துவதில் அதிக நேரத்தைச் செலவழிக்கும் ஒரு நபர்.

computer numeric control : கணினி எண்முறைக் கட்டுப்பாடு : ஒரு எந்திரத்தைக் கட்டுப்படுத்த கேட்/கேம் மூலம் உருவாக்கப்பட்ட எண் கட்டுப்பாட்டு ஆணைகளைச் சேமிக்க கணினியைப் பயன்படுத்தும் ஒரு எந்திரக் கருவி, கட்டுப்பாட்டுத் தொழில் நுட்பம்.

computer on a chip : ஒரு சிப்பு கணினி : ஒரு ஒருங்கிணைந்த மின்சுற்று சிப்புவின்மீது அமைக்கப்படும் முழு நுண் கணினி.

computer operations : கணினி செயல் முறைகள் : தரவுகளை அன்றாட முறையில் திரட்டுதல், உற்பத்தி செய்தல், விநியோகித்தல், பராமரித்தல் ஆகியவற்றைச் செய்யும் கணினியின் செயல்பாடுகள்.

computer operations manager : கணினி செயல்முறை மேலாளர் : ஒரு நிறுவனத்தில் கணினி செயல்பாடுகளை மேற்பார்வை செய்யும் நபர். பணியாளர்களை நியமித்தல் கணினி செய்ய வேண்டிய வேலைகளை முடிவு செய்தல் ஆகியவற்றைச் செய்யப் பொறுப்பேற்று இருப்பவர். computer operator : கணினி இயக்குநர்.

computer organisation : கணினி ஒருங்கிணைப்பு : பின்வரும் துறைகளைக் கையாளும் கணினி அறிவியல் பிரிவு. கணினி சி. பீ. யு ஒருங்கிணைப்பு ஆணைகள், முகவரியமைக்கும் முறைகள், சேமித்த நிரல் கோட்பாடு, நிரல் இயக்கம், உள்ளீடு/ வெளியீடு ஒருங்கிணைப்பு, கைகுலுக்குதல், நினைவகம், மைய நினைவகம், நுண்செயலி போன்றவற்றின் செயல் பாடுகள்.

Computer Output Microfilm (COM) : கணினி வெளியீடு நுண்படலம் : நுண்படலம் அல்லது நுண் அட்டைகளின் மீது கணினி வெளியீடுகளைப் பதிவு செய்யும் தொழில் நுட்பம். நேர்முக வெளியீடுகளான நுண்படலத்திலிருந்தும், ஆணைவழி வெளியீடுகளை காந்த நாடாவிலிருந்தும் இந்த நுட்பப்படி பதியலாம்.

computer, personal : சொந்தக் கணினி.

computerphile : கணினிப் பைத்தியம் : கணினியில் பணியாற்றுவதிலேயே எப்போதும் மூழ்கிப் போகின்ற நபர். இவர் கணினிகளைச் சேகரித்து வைப்பார். கணினிப் பணியே இவர் பொழுதுபோக்கு.

computer phobia : கணினி அச்சம் : கணினி பயன்பாடு, குறிப்பாக எந்திரன் மற்றும் தானியங்கிச் சாதனங்களின் பயன்பாடு குறித்து உளவியல் சார்ந்த அச்சம்.

computer power : கணினி சக்தி; கணினித் திறன் : பணி செய்வதில் கணினிக்கிருக்கும் திறன். பல வகையிலும் கணினியின் திறன் மதிப்பிடப்படுகிறது. ஒரு வினாடிக்கு எத்தனை மில்லியன் ஆணைகளை நிறைவேற்றும் என்று அதன் வேகம் மதிப்பிடப்படுவதுண்டு (MIPS - Million Instruction Per Second) அல்லது வினாடிக்கு எத்தனை மிதவைப் புள்ளிக் கணக்கீடுகளைச் செய்யவல்லது என்ற முறையில் அளப்பதுமுண்டு (MFLOPS - Million Floating Point Operations Per Second) கணினியின் திறனை வேறு வகையிலும் மதிப்பிடலாம். மதிப்பிடுபவரின் தேவைகளையும் நோக்கங்களையும் பொறுத்தது.

Computer Press Association : கணினிப் பத்திரிகையாளர் சங்கம் : கணினித் தொழில்நுட்பம் பற்றியும் கணினித் தொழில்துறை பற்றியும் எழுதுகின்ற பத்திரிகைகளில், வலை பரப் பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் இவர்கள் சேர்ந்த ஒரு வணிக அமைப்பு.

computer process : கணினிச் செயலாக்கம்; கணினி செயற்பாங்கு : கணினி நடைமுறை.

computer process control system : கணினி செயல்முறைக் கட்டுப்பாடு அமைப்பு : இலாப நோக்கில் பொருளை உற்பத்தி செய்ய மேற்கொள்ளப்படும் செயல்முறையையும் அதன் மாற்றங்களையும் கண்காணிக்கும் சென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ள கணினிக் கட்டுப்பாட்டு அமைப்பு.

computer processing cycle : கணினி செயலாக்கச் சுழற்சி : 1. ஒரு சிக்கலைத் தீர்க்க கணினியைப் பயன்படுத்துவதில் உள்ள நிலைகள். பேசிக் அல்லது ஃபோர்ட்ரான் போன்ற மொழியில் நிரல் எழுதுவது. நிரலைக் கணினியில் உள்ளீடு செய்து மொழிபெயர்க்கச் செயலாக்குவது. 2. அடிப்படைச் செயலாக்கச் சுழற்சியில் உள்ளீடும் / வெயீயிடும்.

computer programme : கணினி நிரல் : ஒரு தரவு செயலாக்கப் பணிக்குத் தேவையான தொடர்ச் செயல்களை முறையாக, கணினிக்கு எடுத்துரைப்பது. ஒரு குறிப்பிட்ட செயல் முறை அல்லது பணியைச் செய்யுமாறு நிரல்களையும், சொற்றொடர்களையும் அமைத்தல்.

computer programmer : கணினி நிரலர் : ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யுமாறு கணினிக்கு ஆணையிடும் நிரல்களை வடிவமைத்து எழுதி, சோதித்துத் தருவதை வேலையாகக் கொண்டுள்ளவர்.

computer readable : கணினி படித்தகு : கணினி படித்துப் பொருள் கொண்டு நிறைவேற்றும் வடிவில் அமைந்த ஆணை. இருவகையான தரவு கணினி படித்தகு என்று சொல்லப்படுகிறது. பட்டைக் கோடுகள், காந்த நாடா, காந்த கையெழுத்துகள் மற்றும் வருடிப் பார்த்து அறிந்து கொள்ளும் ஏனைய வடிவங்கள் இவையனைத்தும் கணினி படித்தகு தகவலாகும். கணினியின் நுண் செயலிக்குப் புரியும் வகையில் எந்திர மொழியில் இருக்கும் தரவு.

computer revolution : கணினிப் புரட்சி : தரவு தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் அதிவேக வளர்ச்சி காரணமாக சமூக, தொழில்நுட்பத் துறைகளில் கணினியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனியாள் பயன்படுத்தும் சொந்தக் கணினிகளின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. சமூக வாழ்வில் இவற்றின் தாக்கம் புரட்சிகரமானது என்று தான் கூறவேண்டும். கணினியின் வேகம், துல்லியம், சேமிப்புத்திறன் ஆகியவை தகவல் சேமிப்பு, செயலாக்கம் மற்றும் பரிமாற்றத்தில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

computer science : கணினி அறிவியல் : கணினிகளை வடிவமைத்து பயன்படுத்துவது பற்றிய அனைத்து நுட்பங்களையும் உள்ளடக்கிய அறிவுப் புலம். பல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பாக அளிக்கப்படுகிறது.

computer, scientific : அறிவியல் கணினி.

computer security : கணினிப் பாதுகாப்பு : அனுமதியில்லாமல் பயன்படுத்துவதையும், தவறாகப் பயன்படுத்துவதையும் தடுத்து கணினி மூலாதாரங்களைப் பாதுகாப்பது. தற்செயலான அல்லது வேண்டுமென்றே ஏற்படும் சேதம், மாற்றம், வெளியிடல் போன்றவற்றிலிருந்து தரவுகளைப் பாதுகாப்பது.

computer select : கணினித் தேர்வு : கணினி நூலகத்திலிருந்து சிடிரோம் சேவை. இது முழுச் செய்திக் கட்டுரைகளும், சுருக்கங்களும் 250-க்கும் மேற்பட்ட கணினி தொடர்பான பருவ இதழ்களிலிருந்து வழங்குகிறது.

computer services : கணினிச் சேவைககள் : தரவு செயலாக்கம், காலப்பங்கீடு, தொகுதி செயலாக்கம், மென்பொருள் உருவாக்கம் மற்றும் ஆலோசனைப் பணிகள்.

computer services company : கணினிச் சேவைகள் நிறுவனம் : பிற தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் கணினிச் சேவைகளை அளிக்கும் நிறுவனம்.

computer simulation : கணினி பாவிப்பு : உண்மையான அல்லது கற்பனையான அமைப்பைக் குறிப்பிடுதல்; கணினி நிரலில் உருவாக்கப்படுவது.

computer specialist : கணினி வல்லுநர் : ஒரு தனிப்பட்ட ஒப்பந்தக்காரராகவோ அல்லது ஆலோசகராகவோ கணினியைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு கணினி சேவைகளை அளிக்கும் ஒரு நிரலர் அல்லது அமைப்பை ஆராய்பவர் போன்ற ஒரு தனி நபர்.

computer, special purpose : சிறப்புப் பயன் கணினி. computer store : கணினி கடை : ஒரு முழு கணினி அமைப்பையோ அல்லது சில உதிரிப் பாகங்களையோ வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய சில்லரைக்கடை. இந்தக் கடைகளில் மென்பொருள், புத்தகங்கள் மற்றும் இதழ்களும் கிடைக்கும். பெரிய கணினிக் கடையில் பலவகையான நுண்கணினி அமைப்புகள் கிடைக்கும்.

computer system : கணினி அமைப்பு; கணினி முறைமை : கணினி வன்பொருள், மென்பொருள் மற்றும் தரவுகளை பயனுள்ள தகவலாக செயலாக்கம் செய்யும் மனிதர்களை உள்ளடக்கிய அமைப்பு.

computer systems, audit of : கணினி முறைமைத் தணிக்கை.

computer telephone integration : கணினி-தொலைபேசி ஒருங்கிணைப்பு : தொலைபேசியில் வரும் அழைப்புகளை முறைப்படுத்துதல், மாற்று எண்ணுக்கு திசைதிருப்புதல், தானாகப் பதில் தருதல், ஒரு தரவு தளத்தில் உள்ள தரவுவைத் தேடி அறிவித்தல், தானாகவே இன்னொரு தொலைபேசி எண்ணை அழைத்து தரவுவைத் தெரிவித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் ஆட்களின் தலையீடு எதுவுமின்றி செய்து முடிக்கக் கணினியையும் கணினி மென்பொருள்களையும் பயன்படுத்தும் தொழில்நுட்பம்.

computer terminal : கணினி முனையம் : கணினியுடன் தொலைத் தகவல் தொடர்பு இணைப்புகள் ஏற்படுத்தும் உள்ளீட்டு வெளியீட்டுச் சாதனம். அதனிடம் மையச் செயலகம் இருந்தால் அது ஒரு அறிவாளி முனையம் என்றும், இல்லையென்றால் முனையம் என்றும் அழைக்கப்படுகிறது.

computer terminal, remote : சேய்மை கணினி முனையம்; தொலை கணினி முனையம்.

Computer Tomographic (CT) : (சிடி) கணினி ஊடுகதிர் உள் தளப்படம்.

computer town : கணினி நகரம் : கணினி எழுத்தறிவையும், சிறிய கணினிகளைப் பொது மக்கள் அணுகுவதையும் ஊக்குவிக்கும் கலிபோர்னியா நிறுவனம்.

computer type setting : கணினி அச்சுக்கோப்பு : ஓர் அச்சுப் பணிக்கான விவரத்தை சில சிறப்பு மென்பொருள்களில் தட்டச்சுச் செய்து அச்சிட தயார் செய்தல். computer user : கணினி பயனாளர் : ஒரு கணினி அமைப்பையோ அல்லது அதன் வெளியீட்டையே பயன்படுத்தும் ஒரு நபர்.

computer users group : கணினி பயனாளர் குழு : ஒரு கணினி அல்லது ஒரு குறிப்பிட்ட கணினி உற்பத்தியாளரின் ஒரு வகைக் கணினிகளில் நிரல்களை உருவாக்கி தங்களது அறிவினை பங்கிட்டுக் கொள்ளும் உறுப்பினர்களைக் கொண்ட குழு பெரும்பாலான குழுக்கள் கூட்டங்களை நடத்தியும், வணிகக் கருவிகளைப் பரிமாற்றங்கள் செய்தும், நிரல்களைப் பங்கிட்டும், தகவலை பரிமாற செய்தி அறிக்கைகளை விநியோகித்தும் செயல்படுபவர்கள்.

computer utility : கணினி பயன் கூறு : கணினிக் குறுபயன் : கணினித் திறனைப் பயன்படுத்தும் சேவை. நேரப் பங்கீட்டு கணினி அமைப்பையே இது பொதுவாகக் குறிக்கும். பயனாளருக்கு மென்பொருள்களும், தரவுகளும் கிடைக்கும். மையச் செயலகத்தில் உள்ள ஒருவரது சொந்த நிரல்களையோ அல்லது வேறிடத்திலிருந்து பெற்று கணினியில் ஏற்றியோ பயன்படுத்தலாம். சேவையில் உள்ள சில தரவுகளையும் மென்பொருள்களையும் அனைவரும் பயன்படுத்தலாம்.

computer vendor : கணினி விற்பவர் : கணினி கருவிகளை உற்பத்தி செய்வது, விற்பது அல்லது சேவைகளை அளிப்பதில் ஈடுபட்டுள்ள நிறுவனம்.

computer virus : கணினி நச்சு நிரல் (வைரஸ்) : வேறொரு நிரல் அல்லது தரவுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் நிரல். ஒரு நச்சு நிரலின் (வைரஸ்) சாதாரண‌ நோக்கம் கணினி அமைப்பைப் பிடித்துக் கொண்டு தரவு செயலாக்கத்தைத் தடுப்பதாகும். பிடித்த நிரல் இயக்கப்பட்டவுடன் முன்பு "துய்மை"யாக இருந்த மென்பொருளுடன் தன்னை இணைத்துக் கொள்ளும். இவ்வாறே பரவிக் கொண்டே செல்லும்.

computer vision : கணினிப் பார்வை : பார்த்தல், புரிந்து கொள்ளல் ஆகிய வசதிகளை கணினி பெற உதவும் அறிவியல்.

computer word : கணினிச் சொல் : ஒரு தனி முகவரி இடக்கூடிய சேமிப்பு இடத்தில் இடம் பெற்று, கணினியால் தனி சாதனமாகக் கருதப்படும் துண்மிகள், பைட்டுகளின் தொடர்.

computing : கணிப்பு; கணித்தல் : தரவுகளை செயலாக்கம் செய்ய கணினியைப் பயன்படுத்தும் செயல். பயனாளர் விரும்புவதை கணினியைச் செய்யுமாறு செய்கின்ற கலை அல்லது அறிவியல்.

computing devices : கணிக்கும் சாதனம்; கணிப்புக் கருவி.

COM recorder : காம் பதிவி : கணினி வெளியீட்டை ஒளிப்பட உணர்வு படலத்தில் நுண் வடிவில் பதிவுச் செய்யும் சாதனம்.

COMSAT : காம்சாட் : தரவு தொடர்பு செயற்கைக் கோள் என்று பொருள்படும் Communication Satellite என்பதன் குறும்பெயர்.

CON : கான் (கன்சோல்) : எம். எஸ் டாஸ் இயக்க முறைமையில் விசைப்பலகை மற்றும் கணினித் திரையைக் குறிக்கும் கருத்தியலான சாதனப் பெயர். உள்ளீடு மட்டும் செய்ய முடிகிற விசைப்பலகை மற்றும் வெளியீடு மட்டும் செய்ய முடிகிற காட்சித் திரை இரண்டும் சேர்ந்து முறையே முதன்மையான உள்ளீடு/வெளியீட்டு ஊடகமாய் எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் பயன்படுகின்றன்.

concatenate : சேர்த்தல் : இரண்டு அல்லது மேற்பட்ட எழுத்துச் சரங்களை ஒரே எழுத்துச் சரமாகச் சேர்த்தல் அல்லது காட்சித்திரையில் ஒரு வரியை அடுத்தவரியில் சேர்த்தல். Decatenate - க்கு மாறானது.

concatenated data set : சேர்த்த தரவு தொகுதி : தருக்க முறையில் தரவு தொகுதியைத் திரட்டுதல்.

concatenated key : சேர்க்கப்பட்ட திரவி : ஒரு பதிவேட்டை அடையாளம் காட்ட ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகளை ஒன்றாகச் சேர்த்த திறவுச் சொல்.

concatenated operator : சேர்ப்பு செயற்குறி : கணினி நிரலாக்க மொழிகளில் இரு விவரக்குறிப்புகள் இணைக்கப் பயன்படும் குறியீடு.

concatenation : ஒன்றிணைப்பு; இணைத்தல்; பிணைத்தல்.

concatenation concentrator : சேர்ப்புச் செயல் மையம் : ஒரு மிகுவேக சாதனத்தில் பல குறைவேக சாதனங்கள் பயன்படுத்த அனுமதிக்கும் சாதனம். குறைந்த வேகமுள்ள கணினிகளில் இருந்து வரும் தகவலை ஏற்றுக் கொண்டு அதிக வேகமுள்ள கணினிக்குத் தரும் ஒரு சிறப்பு நோக்கக் கணினி.

concentrator : செயல்மையம்; மையப்படுத்தி : ஒரு தனியான அதிவேக தகவல் தொடர்புக் கம்பியினைப் பயன்படுத்தி பல தகவல்களை மெதுவாகச் செலுத்தும் சாதனம். பல் பயன்கள் அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

concept : கருத்துரு; மனவுரு : கருத்தமைவு.

concept, database : தரவுத் தளக் கோட்பாடு; தரவுத் தள எண்ணக் கருத்துரு.

conceptual scheme : கருத்துருத் திட்டவரை : தரவுத் தளங்கள் பல, மூன்று நிலைத் திட்ட வரைக் கட்டுமானத்தை ஏற்பவையாய் உள்ளன. தரவுத் தளத்தின் கட்டமைப்பு மற்றும் தரவு உள்ளடக்கம் இரண்டும் சேர்ந்தே திட்டவரைக் கட்டுமானத்தை நிர்ணயம் செய்கின்றன. மூன்று திட்டவரைகளுள் கருத்துருத் திட்டவரை (தருக்க முறைத் திட்டவரை) தரவு தள முழுமையின் மாதிரியை விளக்குவதாய் உள்ளது. எனவே இது அக மற்றும் புற (Internal and External) திட்டவரைகளுக்கு இடைப்பட்டதாய் விளங்குகிறது. அகத்திட்டவரை, தரவு சேமிப்பையும், புறத் திட்டவரை பயனாளருக்குத் தரவுவை வெளிப்படுத்தும் பணியையும் செய்கின்றன. பொதுவாக திட்டவரை என்பது தரவுத் தளம் வழங்கும் தரவு வரையறை மொழி (Data Definition Language - DLL) யின் கட்டளைகளால் வரையறுக்கப்படுகின்றது.

conceptual tool : கோட்பாடுக் கருவி : பொருள்களுக்குப் பதிலாக எண்ணங்களுடன் பணியாற்றும் கருவி.

concordance : சொல் தொகுதி விளக்கப் பட்டியில் : ஒரு ஆவணத்தில் உள்ள சொற்கள், தொடர்களின் வரிசைப்பட்டியல் குறிப்பிட்ட சொற்களும் தொடர்களும் எங்கே உள்ளன என்பதைக் குறிப்பிடுகிறது.

concurrency : உடன்நிகழ்வு : பொருள் மாதிரியத்தின் அடிப்படைத்தன்மைகளில் ஒன்று. பொருள் நோக்கு நிரலாக்கத்தில் இயங்காத பொருள் லிருந்து இயங்கும் பொருளை வேறுபடுத்துதல்.

concurrency control : உடன் நிகழ்வுக் கட்டுப்பாடு : டிபிஎம் எஸ்ஸில் தரவு தளத்திற்கு ஒரே நேர அணுகலை நிர்வகித்தல். ஒரே ஏட்டை ஒரே நேரத்தில் இரண்டு பயனாளர்கள் திருத்துவதைத் தடுக்கிறது. பரிமாற்றங்கள் மாற்று ஏற்பாட்டுக்கும், மீண்டும் பெறுவதற்கும் வரிசைப்படுத்துவது தொடர்பானது. concurrent : ஒரே நெரத்தில் : ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள் இரண்டு அல்லது கூடுதல் நிகழ்ச்சிகள் அல்லது நடவடிக்கைகள் நடைபெறுவது பற்றியது.

concurrent access : உடனிகழ்வு அணுகல்.

concurrent execution : உடன் நிகழ் நிறைவேற்றம் : இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்கூறுகளை அல்லது நிரல்களை, ஒரே நேரத்தில் இயங்குவதுபோல் தோற்றமளிக்குமாறு செயல்படுத்துதல். ஒரு நிரலைப் பல்வேறு பணிக்கூறுகளாக அல்லது பல்வேறு புரிகளாக (threads) பிரித்து நேரப் பங்கீட்டு முறையில் ஒற்றைச் செயலியில் நிறைவேற்றிக்கொள்ள முடியும். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் மூலமும் உடன் நிகழ் நிரல்களை நிறைவேற்ற முடியும்.

concurrent language : உடன் நிகழ்வு மொழி : பல்வேறு செயல்கூறுகள் ஒரே நேரத்தில் இயக்குவதற்கு உதவும் மொழி. இணைக்கட்டுமான அமைப்பு வன்பொருள்களில் இது அதிகம் ஏற்படும். ஒரு நிரலில் இரு வேறு பணிகளை ஒரே நேரத்தில் செயல்படுத்தும் வசதி ஜாவா, சி# மொழிகளில் இவ்வசதி உண்டு.

concurrent object : உடன் நிகழ்வு பொருள் : கட்டுப்பாட்டின் பல இயக்கங்களுக்கும் ஈடு கொடுக்கும் ஒரு பொருள்.

concurrent operation : உடன் நிகழ் செயல்பாடு : நேரப்பங்கீட்டு அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்களை ஒரே நேரத்தில் இயக்குதல்.

concurrent processing : உடன்நிகழ் செயலாக்கம் : ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு அல்லது மேற்பட்ட தரவு செயலாக்கப் பணிகளைச் செய்தல்.

concurrent programme execution : உடனிகழ் நிரல் இயக்கம் : ஒரே நேரத்தில் இரண்டு அல்லது பல நிரல்களை செயல்படுத்தல்.

concurrent programming : உடன் நிகழ் நிரலாக்கம் : பல பணிகளை ஒரே நேரத்தில் குறிப்பிடும் நிரல்களை உருவாக்குதல்.

condensed : சுருக்கப்பட்ட : தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=கணினி_களஞ்சிய_அகராதி-2/N&oldid=1085144" இலிருந்து மீள்விக்கப்பட்டது