கணினி களஞ்சிய அகராதி-2/M

விக்கிமூலம் இலிருந்து

சிட வேண்டுமானால் சாதாரணமாக உயர்வகை வண்ண வருடு பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. அக்கருவிகள் தரவுகளை உயர் தெளிவுத்திறனுடன் குறியீடாக்கவோ அங்குல வாரிப் புள்ளிக் குறிகளாகவோ ஆக்கக் கூடியவை. கீழ்மட்ட வண்ண வருடுபொறிகள் 72 அங்குல வரிப்புள்ளிகள் கொண்ட தெளிவுத்திறனுடன் குறிகளாக்குகின்றன. அச்சு செய்யக் கருதப்படாத கணினித்திரை உருவங்களை உண்டாக்க சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

colour separation : நிறம் பிரிப்பு : நிறங்களில் அச்சிடுதலுக்கான 'நெகட்டிவ்' (Plate) மற்றும் அச்செழுத்துத் தட்டுகளைச் செய்ய நிறங்களால் படங்களைப் பிரித்தல். முழுநிறம் வேண்டுமென்றால் நான்கு வகையாகப் பிரிக்க வேண்டும். சியான், மெஜந்தா, மஞ்சள், கறுப்பு (CMYK).

colour television principles : வண்ணத் தொலைக்காட்சி கொள்கைகள் : எதிர்மின்வாய் (Cathode) கதிர்க் குழாயில் நிறம் பெறுமிடத்தில் ஒவ்வொரு அடிப்படை நிறத்துக்கும் ஒன்றாக மூன்று மின்னணு பீச்சிகள் உள்ளன. ஒவ்வொரு நிறத்தினையும் காட்டும்போது மின்னணு பீச்சிட நிறம் எரியும். மனிதக் கண்கள் இவற்றை ஒன்று சேர்த்துப் பார்க்கின்றன. மூன்று நிறங்களும் ஓரிடத்தில் அடுத்தடுத்து வந்தால் வெள்ளை நிறம் தெரியும்.

colour terminals : வண்ண முனையங்கள்.

. columbus. oh. us : கொலம்பஸ். ஓஹெச். யுஎஸ். : இணையத்தில் ஒரு முகவரி அமெரிக்க நாட்டு ஒஹீயோ மாநிலத்துக் கொலம்பஸ்ஸில் உள்ளதென்பதைக் குறிப்பிடும் பெரும் புவிபிரிவுக்களப் பெயர்.

column : நெடுக்கை; நிரை; நெடு வரிசை : 1. ஒரு வரியில் ஒரே வரிசையாக உள்ள செங்குத்தான உறுப்புகள். 2. ஒரு துளையிட்ட அட்டையில் செங்குத்தான வரிகளில் உள்ள துளையிடும் இடங்கள். 3. ஒரு கணினி சொல்லில் தரவு இருக்கும் இடம். 4. மின்னணு விரிதாளில் நெடுக்கைப் பகுதி. நெடுக்கைகளுடன் சேர்ந்து நெடுக்கைகள் விவரத்தினை, கணக்கீடுகளை உருவாக்க உதவுகின்றன.

columnar : நெடுக்கையாக.

column - binary : நெடுக்கை - இரும எண் : துளையிட்ட அட்டையின் ஒவ்வொரு நெடுக் கையிலும் குறிப்பிடப்படும் நெடுக்கை எண் column break : நெடு வரிசை நிறுத்தம்; நெடுக்கை முறிவு.

column chart : நெடுக்கை நிரல் படம் : மதிப்பளவுகள் செங்குத்தான பட்டைகளாக அச்சிடப்பட்டு வெளியிடப்படும் பட்டை வரைபடம்.

column count : நெடுக்கை எண்ணிக்கை.

column graph : நெடுக்கை வரைபடம்.

column head : நெடுக்கைத் தலைப்பு.

column indicator : நெடுக்கை சுட்டிக் காட்டி.

column move : நெடுக்கை நகர்த்தல் : விவரத்தாளில் பத்தி அல்லது உரை ஆவணத்தில் எழுத்துகளை செவ்வகக் கட்டமாக மாற்றி வேறிடத்தில் வைத்தல்.

column split : பத்தி பிரித்தல் : துளையிடும் அட்டையில் 11வது அல்லது 12-வது வரிசை தொடர்பான துடிப்புகளைக் குறிப்பிட எண் துளைகளைப் நெடுக்கை வாரியாக தனித்தனியாகப் போட்டு அட்டையைத் துளையிடும்போது படிக்க அல்லது எழுதும்போது கிடைக்கச் செய்வது.

column text chart : நெடுக்கை உரை நிரல்படம்.

column width : நெடுக்கை அகலம்.

. com : . காம் : 1. வணிக அமை வனங்கள் பயன்படுத்தும் வலைத்தள முகவரிகளை அடையாளம் காண உதவும் உயர் மட்டப் பகுதி. இணையத்தின் களப்பெயர் அமைப்பில் பெரும் பிரிவுக் களப் பெயர் . காம் என்பது முகவரியின் இறுதிப் பாகத்தில் சேர்க்கப்படுவது. டிஎன்எஸ் (பொருள் வரையறை) பிரதேசம் (பொருள் வரையறை ) ஆகியவற்றையும் பார்க்க. (எ. டு). கவ், . மில், . நெட், . ஆர்க் இவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். 2. எம்எஸ் பாஸ்ஸில் கோப்பின் வகைப் பெயர் கட்டளைக் கோப்பை அடையாளம் காட்டுவது.

combinational circuit : ஒன்றிணைவு மின்சுற்று : கணினியின் பல்வேறு தருக்க இயக்கங்களைச் செய்ய மின்சுற்று அமைக்க உதவும் ஒன்றோடொன்று இணையும் வாயில்களின் வரிசை முறை அமைப்பு.

combination chart : சேர்க்கை நிரல் படம்.

combination logic : ஒண்றிணை தருக்கம் : உள்ளீட்டின் தற்போதைய நிலையைக் கொண்டே வெளியீட்டின் நிலையை முடிவு செய்யும் மின்சுற்று ஏற்பாடு. நினைவகப் பகுதிகளைப் பயன்படுத்தும் இலக்கமுறை அமைப்பு.

combinatorial explosion : ஒன்றிணைவு வெடிப்பு : கணினி தீர்க்க வேண்டிய சிக்கலின் அளவு மிக அதிகமாகிவிட்ட போது ஏற்படும் நிலை. பெரிய கணினிகளிலும் இந்நிலை ஏற்படலாம்.

combinatorics : இணைப்பியல் : நிகழ்தகவு மற்றும் புள்ளி விவர தொகுப்பியல் தொடர்புடைய கணக்கியல் கிளை. எண்ணுதல், தொகுத்தல், வரிசைப்படுத்தல் ஆகியவை பற்றியது. இணைப்பியல் இரண்டு வகை இணைப்புகளையும் வரிசை மாற்ற வகைகளையும் கொண்டது. பெரிய குழுவிலிருந்து எடுத்த உறுப்புகளைத் தொகுத்தல். குழுவில் உறுப்புகள் இருந்துவந்த வரிசையைப் பொருட்படுத்தாமல் எடுத்துத் தொகுக்க வேண்டும். சான்றாக, 4 பொருள்கள் கொண்ட குழுவிலிருந்து ஒவ்வொரு முறையும் இரண்டு உறுப்புகள் எடுத்து ஆறு இணைப்பு வகைகள் உண்டாக்குதல். ABCD என்னும் பொருள்களில் இரண்டை எடுத்து AB, AC, AD, BC, BD, CD என ஆறு உண்டாக்குதல். உறுப்புகளின் வரிசையை அப்படியே கொண்டு பெரியதிலிருந்து உறுப்புகள் எடுத்துத் தொகுப்பது வரிசை மாற்ற வகையாகும். உதாரணமாக நான்கு பொருள் தொகுதியிலிருந்து இரண்டு பொருள்கள் எடுத்து வரிசை மாற்ற வகை செய்தலைக் குறிப்பிடலாம். முதல் தெரிந்தெடுப்பான Aயில் நான்கிலிருந்து எடுக்க வேண்டியிருக்கும். அடுத்த 8 தெரிந்தெடுப்பு மீத மூன்றிலிருந்து எடுப்பதாகும். மொத்தத்தில் 12 வரிசைமாற்ற வகைகள் உண்டாக்கலாம். அதாவது AB, AC AD, BA, BC, BD, CA, CB, CD DA DB, DC.

combined head : சேர்வுத் தலைப்பு : ஒன்றிணைந்த தலைப்பு.

combining characters : கூட்டு எழுத்துகள்.

combo box : சேர்க்கைப் பெட்டி.

combo box control : சேர்க்கைப் பெட்டி இயக்குவிசை.

COMDEX : காம்டெக்ஸ் : தரவு தொடர்பு மற்றும் தரவுச் செயலாக்கக் கண்காட்சி எனப் பொருள்படும் Communications and Data Processing Exposition என்பதன் குறும்பெயர். அமெரிக்காவிலும் பிற இடங் களிலும் நடைபெறும் மிகப் பெரிய கணினி பொருட்காட்சி.

comic book : நகைச்சுவை நூல் : 1985இல் முதல் முறையாக கணினி மூலமான நகைச்சுவை நூல் முறை உருவாக்கப்பட்டது. ஷாட்டர் (Shatter) என்னும் முதல் கணினி நகைச்சுவை நூலை உருவாக்கியவர் மெக்கின்டோஷ் நுண் கணினியை கருவியாகப் பயன்படுத்தினார்.

COMIT : காமிட் : சர செயலாக்க மொழிகளில் ஒன்று.

comma delimited : காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட : தரவு புலங்களை காற்புள்ளியால் தனியாகப் பிரிக்கும் பதிவேடு அமைப்பு. இதில் பொதுவாக எழுத்துத் தரவுகள் மேற்கோள் குறியீடுகளுடன் தரப்பட்டிருக்கும்.

command : கட்டளை : 1. கட்டுப்பாடு சமிக்கை. 2. ஒரு கணித அல்லது தருக்க இயக்கி. 3. ஒரு கணினி ஆணை. 4. கட்டளை.

command and control system : கட்டளை, கட்டுப்பாட்டு முறைமை.

command based : கட்டளை அடிப்படையிலான.

command buffer : கட்டளை இடையகம் : பயனாளர் பதிந்துள்ள கட்டளைகள் வைத்திருக்கும் நினைவகத்திலுள்ள ஒரு பகுதி. பயனாளர் மீண்டும் கட்டளைகளை முழுவதும் தட்டச்சு செய்யாமல், கட்டளைகளை மீண்டும் பயன்படுத்த உதவும். ஏதாவது பிழையிருந்தால் திருத்தவும், சிலவற்றை மாறறவும, கடடளைகளை நீக்கவும், பழைய கட்டளைகளின் பட்டியலைப் பெறவும் உதவும்.

command button : கட்டளைப் பொத்தான் : அழுத்தும் பொத்தானைப் போன்ற உருவுடைய இயக்கு விசை. வரைகலை பயனாளர் இடைமுகத்தில் உள்ள உரையாடல் பெட்டியில் இருப்பது. கட்டளைப் பொத்தானை அழுத்தி பயனாளர் உரையாடல் பெட்டியிலுள்ள வேறு கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்தி அப்போது தான் தெரிந்தெடுத்த கோப்பைத் திறப்பதுபோன்ற செயல்களைச் கணினியை செய்ய வைக்கலாம்.

command chained memory : கட்டளை இணைந்த நினைவகம் : மாறும் சேமிப்பக ஒதுக்கீட்டில் பயன்படுத்தப்படும் நுட்பம்.

COMMAND. COM : கமாண்ட். காம் : எம்எஸ் டாஸ் இயக்க முறை யின் தலையாய கோப்பு. அகக்கட்டளைகளை இதுவே நிறைவேற்றி வைக்கிறது.

command driven : கட்டளை முடுக்கம் : தட்டச்சு செய்த சொற்றொடர்களாக கட்டளைகளை ஏற்றுக்கொள்ளும் நிரல் தொடர். பொதுவாக, இதைக் கற்றுக்கொள்வது அரிது. ஆயினும் பட்டியல் செலுத்து நிரலைவிட அதிக நெகிழ்வுத் தன்மையைத் தரும்.

command driven software : கட்டளையால் முடுக்க மென்பொருள் : முனையத்தைப் பயன்படுத்துவோருக்குப் பட்டிகள் (Menus) மூலம் வழிகாட்ட எந்த முயற்சியும் செய்யாத நிரல்கள். அதற்குப் பதிலாக, கட்டளையால் இயங்கும் மென்பொருளில் எத்தகைய கட்டளை உள்ளது என்றும், அவற்றில் எது பொருத்தமானது என்றும் அறிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

command driven system : கட்டளையால் இயங்கும் முறைமை : கட்டுப்பாட்டு முனையத்திலிருந்து நுழைந்த ஆணையைக் கொண்டு பயனாளர் செயற்பாடுகளைத் தொடங்குகிற ஒர் அமைப்பு.

command file : கட்டளைக் கோப்பு : ஆணைக் கோப்பு.

command interpreter : கட்டளை பெயர்ப்பி; ஆணை பெயர்ப்பி; கட்டளை வரிமாற்றி : சாதாரணமாக இது இயக்க முறைமையின் பகுதியாக இருக்கும். விசைப் பலகையிலிருந்து தட்டச்சான கட்டளைகளை ஏற்று அதில் சொன்னபடி வேலைகளைச் செய்து முடிக்கும். ஆணை பெயர்ப்பி பயன்பாட்டுத் தொகுப்புகளை இயக்கவும், பயன்பாடு தொடர்பான தரவுகள் செல்வதை வழிப்படுத்தவும் செய்கிறது. ஓ. எஸ்/2 மற்றும் எம்எஸ்-டாஸில் கட்டளை பெயர்ப்பி, கோப்புகளை நகர்த்தவும், படி எடுக்கவும், நீக்கவும், கோப்பகத் தரவுகளைக் காட்டவும் செய்கிறது.

Command key : கட்டளை விசை : குறிப்பிட்ட பணிகளைச் செய்ய பயன்படுத்தும் விசைப் பலகையில் உள்ள ஒரு விசை.

command language : கட்டளை மொழி : ஆணை பெயர்ப்பி அமைப்பால் சரியானவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட சொற்களும் சொற்கோவைகளும் கொண்ட தொகுதி.

command line : கட்டளை வரி : இயக்க முறைமையினால் (Operating System) கட்டளை செயல்படுத்தும் நுழைவு. டாஸில் C : \> யூனிக்ஸில் அடையாளத்துக்குப் பின் உள்ளீடு செய்யப்படும் கட்டளை வரியைக் குறிக்கிறது.

command line arguments : கட்டளை வரி உள்ளீடுகள்.

command line interface : கட்டளை வரி இடைமுகம் : இயக்க முறைமைக்கும் பயனாளருக்கும் இடையே உள்ள ஒருவித இடைமுகம். பயனாளர் அதில் ஆணைகளை ஒரு தனி வகை ஆணை மொழியைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்வார். கட்டளைவரி இடைமுகம் கற்றுக் கொள்வதற்குக் கடினமானது என்று கருதப்படுவது வழக்கமென்றாலும், ஆணை அடிப்படை கொண்ட அமைப்புகள் செயல்முறைப்படுத்தத்தக்கவை. செயல்முறைப்படுத்தும் இடைமுகம் அற்ற வரைகலை அடிப்படை கொண்ட அமைப்பில் இல்லாத நெகிழ்வு கிடைக்கிறது.

command line operating system : கட்டளைவரி இயக்க முறைமை.

command line parameters : கட்டளை வரி அளப்புருக்கள் : ஒரு கட்டளையில் சேர்க்கப்படும் கூடுதல் உள்ளீடுகள். டாஸ் அல்லது யூனிக்ஸில் பிராம்ப்டிலிருந்து ஒரு நிரலை இயக்கக் கட்டளை தரும் போது, அந்த நிரலுக்குத் தரப்படும் உள்ளீட்டுத் தரவுகள்.

command line user interface : கட்டளைவரி பயனாளர் இடை முகம்.

command mode : கட்டளை பாங்கு : செயல்படுத்தப்படுவதற்கான கட்டளைகளை கணினியை ஏற்றுக்கொள்ளச் செய்யும் இயக்க பாங்கு.

command path : கட்டளை வழி.

command processing : கட்டளைச் செயலாக்கம் : கணினி ஆணைகளைப் படித்தல், ஆராய்தல் மற்றும் செயல்படுத்தல்.

command processor : கட்டளைச் செயலி : ஒரு இயக்க முறைமையின் மிக எளிமையான கட்டளைகளை அறிந்து கொள்ளப் பயன்படும் ஒரு பொதுவான கட்டளைக் கோப்பு.

command prompt : கட்டளை தூண்டி.

command queuing : கட்டளைச் சாரை : பல கட்டளைகளைச் சேமித்து அவற்றை ஒவ்வொன்றாகச் செயல்படுத்தும் திறன்.

command Set : கட்டளைத் தொகுதி : ஆணைத்தொகுதி (Instruction set) போன்றது. command shell : கட்டளைச் செயல்தளம்.

command state : கட்டளை நிலை : ஒரு தொலைபேசி எண்ணுக்கு தொலைபேசி இணைப்பு ஏற்படுத்து என்று கூறப்படுவது போன்ற கட்டளைகளை இணக்கி (மோடெம்) ஏற்றுக் கொள்கிற நிலை.

command statement : கட்டளைக் கூற்று.

command tree : கட்டளை மரம் : தலைமைக் கட்டளைப் பட்டியலுக்கும் தொடர்புடைய துணைப் பட்டியல்களுக்கும் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் கூறும் ஒரு வரிசைமுறை நிரல் படம்.

comment out : விளக்கக் குறிப்பாக்கு : ஒரு நிரலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிகளை தற்காலிகமாக விளக்கக் குறிப்புப் பகுதியில் அடைத்துச் செயல்பட இயலாமல் செய்தல்.

comments : குறிப்புரைகள் : கணினி நிரலில் உள்ள கணினி மொழி கட்டளைகளுக்கு இடையே ஆங்காங்கே சேர்க்கக் கூடிய ஆங்கில உரைநடை நிரலின் செயல்களை மனிதர்களுக்கு விளக்கப் பயன்படுத்தப்படுகிறது. கணினி விளக்க நூல்களில் சரியாக எழுதப்பட்ட குறிப்புகள் மிகவும் பயனுள்ளவை. நிரலின் உள்ளேயே இவை அமைவதால் எதிர்காலத்தில் பயன்படுத்துவோர்களுக்கு நிரல்களைப் புரிந்து கொள்ளவும், மாற்றவும் மிகவும் உதவியாக இவை அமைகின்றன.

comment statements : குறிப்புரைக் கூற்றுகள்.

commerce server : வணிக வழங்கன்; வணிகப் சேவையகம் : நேரடியாகத் தொழில் நடவடிக்கைகள் நடத்துவதறகாக வடிவமைக்கப்பட்ட ஒரு எச்டீடீபி வழங்கன் கணினி. பற்று அட்டை எண்கள் போன்ற தரவுகளை மறைக்குறியீட்டு முறையில் வழங்கனுக்கும் வலை உலாவிற்கும் இடையில் தரவு மாற்றம் செய்யப்படுகிறது. அஞ்சல்வழி வணிகம் புரியும் கம்பெனிகளும் வணிக வழங்கன்களை பயன்படுத்துகின்றன. சேமிப்பகம் அல்லது கம்பெனி அளிக்கும் பண்டங்கள் அல்லது சேவைகள் ஒளிப்படங்களாக விளக்கப்பட்டு காட்சியாக சேமிப்பகம் அல்லது கம்பெனியின் வலைத் தளத்தில் காட்டப்படுகின்றன. பயனாளர்கள் நேரடியாகத் தங்கள் வலை உலாவியைப் பயன்படுத்தி வேண்டியவற்றைக் கேட்டுப் பெறலாம். நெட்ஸ்கேப், மைக்ரோசாஃப்ட், குவார்ட்டர்டெக்ட் போன்றவை உள்ளடங்கலாக‌ அநேக கம்பெனிகள் வணிக வழங்கன்களை விற்பனை செய்கின்றன.

commercial data processing : வணிகத் தரவு செயலாக்கம்.

Commercial Internet Exchange : வணிக இணைய இணைப்பகம் : பொதுமக்களுக்கு இணைய சேவை அளிக்கும் இலாப நோக்கமில்லாத வணிக அமை வனம். வழக்கமான பிறர் சார்பான நடவடிக்கைகள், சமூக நடவடிக்கைகள் ஆகியவற்றோடுகூட அதன் உறுப்பினர்களுக்கு இணைய இணைப்பு வசதியையும் அளிக்கிறது.

Commercial software : வணிக மென்பொருள்.

commission : தரகுத் தொகை.

Common Access Method : பொது அணுகு வழிமுறை : ஃபியூச்சர் டொமைன் நிறுவனம் மற்றும் ஏனைய ஸ்கஸ்ஸி வணிக நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய தர வரையறை. எப்படிப்பட்ட வன்பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஸ்கஸ்ஸி தகவிகள் (adapters) ஸ்கஸ்ஸி சாதனங்களுடன் தரவு பரிமாற்றத்தைச் சாத்தியம் ஆக்குகின்ற பொது அணுகு வழிமுறை இதுவாகும்.

common applications environment (CAE) : பொதுப் பயன்பாட்டுச் சூழல்.

common area : பொது இடம் : தலைமை நினைவகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு இடம். ஒரே நிரலின் பல பகுதிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளும்.

common business oriented language : பொது வணிகம் சார்ந்த மொழி : கோபால் (COBOL) மொழியின் விரிவாக்கப் பெயர்.

Common Carriers : காமன் கேரியர்ஸ் : பொது மக்களின் பயன்பாட்டுக்காக தொலைபேசி, தந்தி மற்றும் பிற தரவு தொடர்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அரசு வழி காட்டலில் இயங்கும் தனியார் நிறுவனம்.

Common Client Interface : பொது கிளையன் இடைமுகம் : என்சிஎஸ்ஏ நிறுவனத் தயாரிப்பான மொசைக் மென்பொருளின் எக்ஸ்-விண்டோஸ் பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கட்டுப்பாட்டு இடைமுகம். ஒரு வலை உலாவியின் உள்ளக நகலை வேறு நிரல்கள் கட்டுப்படுத்த முடியும். என்சிஎஸ்ஏ மொசைக்கின் எக்ஸ்-விண்டோஸ் மற்றும் விண்டோஸ் பதிப்புகள் டிசிபீ/ஐபீ நெறிமுறை மூலமாக பிற நிரல்களுடன் தரவு பரிமாறிக் கொள்கின்றன. விண்டோஸ் பதிப்பில் ஓஎல்இ தரவு பரிமாற்றமும் இயல்வதாகும்.

common control : பொதுக் கட்டுப்பாடு.

Common Dialog Box Control : பொது உரையாடல் பெட்டி இயக்குவிசை.

commondore international inc : கமாண்டோர் இன்டர்நேஷனல் இன்க் : வீட்டுப் பயன்பாட்டிற்காக நுண்கணினி அமைப்புகளை உற்பத்தி செய்வதில் சிறப்பிடம் பெற்ற நிறுவனம். கமாண்டோர் பெட்விக் மற்றும் கம்மோடோர் 64 ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை. பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கம்மோடோர் 128 மற்றும் அமிகா உள்ளிட்ட பெரிய நுண்கணினி அமைப்புகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

Common Hardware Reference Platform : பொது வன்பொருள் குறிப்புப் பணித்தளம் : பவர்பீசி செயலியின் அடிப்படையில் அமைந்த ஒரு கணினிக் குடும்பத்துக்கான வரையறுப்பு. மேக்ஓஎஸ், விண்டோஸ் என்டி, ஏஐஎக்ஸ் மற்றும் சோலாரிஸ் உட்பட பல்வேறு இயக்க முறைமைகளில் இக்கணினிகள் செயல்பட முடியும்.

Common Internet File System : பொது இணையக் கோப்பு முறைமை : சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வெப் நெட்வொர்க் என்னும் கோப்பு முறைமைக்குப் போட்டியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்வைத்த தர வரையறை. இணையம் மற்றும் அக இணையக் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு கோப்பு முறைமை ஆகும்.

common language runtime (CLR) : பொதுமொழி இயக்கச் சூழல் : மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நெட் (NET) தொழில்நுட்பத்தின் ஓர் அங்கம். பல்வேறு மொழியில் எழுதப்பட்ட நிரல்களை ஒரே இயக்க சூழலில் செயல்படுத்த முடியும்.

common language specification (CLS) : பொதுமொழி வரையறை : பொது மொழி வரையறுப்பு. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நெட் (NET) தொழில் நுட்பத்தின் ஓர் அங்கம்.

Common Lisp : பொது லிஸ்ப் : லிஸ்ப் நிரலாக்க மொழியின் தரப்படுத்தப்பட்ட பதிப்பு. லிஸ்ப் மொழியை எந்த நிறுவனமும் தம் சொந்த வடிவில் வெளியிட முடியும். இதன் காரணமாய் லிஸ்ப் மொழி வெவ்வேறு வடிவில் வெளியிடப்பட்டது. எனவே அம்மொழியைத் தரப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. தரப் படுத்தப்பட்ட பொது லிஸ்ப் மொழி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் லிஸ்ப் நிரலர்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட மூலமொழி கிடைத்தது.

common storage : பொது சேமிப்பகம் : எல்லா நிரல்களும் அணுகக்கூடிய தரவு அல்லது அளவுகோல்களை வைத்துக் கொண்டிருக்கும் நினைவகத்தின் பகுதி.

common storage area : பொதுச் சேமிப்பகப் பரப்பு.

Common User Access : பொதுப் பயனர் அணுக்கம் : ஐபிஎம் நிறுவனத்தின் முறைமைப் பயன்பாட்டுக் கட்டுமானத்தில் ஒரு பகுதியாக, பயனாளர் இடை முகங்களை மேலாண்மை செய்வதற்கான தர வரையறைகளின் தொகுதி. வெவ்வேறு பணித் தளங்களில் ஒத்தியல்பாகவும் முரணின்றியும் செயல்படக் கூடிய பயன்பாடுகளை உருவாக்க உதவுவதற்கென இந்தப் பொதுப்பயனாளர் அணுக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

communicating : தரவு தொடர்பு கொள்ளல் : பயன் படுத்தும் இடம் ஒன்றுக்கு தகவலை அனுப்பும் செயல்முறை.

communicating word processors : தரவு தொடர்பளிக்கும் சொல் செயலிகள் : மின்னணு அஞ்சலை அனுப்பப் பயன் படுத்தப்படும் சொல் செயலிகளின் கட்டமைப்பு.

communication : தரவு தொடர்பு : 1. ஒரு இடத்திலிருந்து (மூலம்) வேறொரு இடத்துக்கு (சேரிடம்) தரவு செல்லுதல். 2. அனுப்புதல் அல்லது தெரியப்படுத்தல். 3. பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சமிக்கைகளின் தொகுதியைப் பயன்படுத்த தனிநபர்களுக்கிடையே தரவு மாற்றிக் கொள்ளும் செயல் முறை.

communication channel : தரவு தொடர்பு வழித்தடம் : தரவுகளை அனுப்புதல் அல்லது பெறுவதற்காக ஒரு இடம் அல்லது சாதனத்தினை வேறொன்றுடன் இணைக்கும் பருநிலை வழி. தரவு தொடர்பு வழித்தடங்களாக இணையச்சு வடம், ஒளிவ நுண் இழைகள், நுண்ணலை சமிக்கைகள், தொலைபேசிக் கம்பிகள் மற்றும் செயற்கைக் கோள் தரவு தொடர்புகள் ஆகியவை பயன்படுகின்றன.

communication control unit : தரவு தொடர்புக் கட்டுப்பாட்டுச் சாதனம் : பல்நோக்குக் கணினியிலிருந்தோ அல்லது கணினிக்கோ செய்தித் தரவு தொடர்பு ஓட்டத்தை மட்டும் கையாள வேண்டிய ஒரே வேலையைச் செய்கின்ற ஒரு சிறிய கணினி.

communication data : தரவு தொடர்பு தரவு.

communication device : தரவு தொடர்புச் சாதனம்.

communication interface : தரவு தொடர்பு இடைமுகம்.

communication line : தரவு தொடர்பு இணைப்பு : தொலை பேசிக் கம்பி இணையச்சு வடம், ஒளியிழை வடம் அல்லது நுண்ணலை இணைப்பு போன்று தரவுகளை அனுப்புவதற்கேற்ற இணைப்பு.

communication link : தரவு தொடர்புத் தொடுப்பு : கணினிகளுக்கிடையே தரவு பரிமாற்றத்துக்கு வழியமைத்துத் தரும் இணைப்பு.

communications controller : தரவு தொடர்பு கட்டுப்படுத்தி : கணினியுடன் பல தரவு தொடர்புக் கம்பிகளை இணைக்கும் வெளிப்புறக் கட்டுப்பாட்டுச் சாதனம். அனுப்புதல், பெறுதல் மற்றும் செய்தி குறியாக்கம், குறிவிலக்கம் போன்ற நடவடிக்கைகளை இது செய்கிறது.

communications interrupt : தரவு தொடர்புக் குறுக்கீடு : நேரியல் தகவி மூலம் வரும் வன்பொருள் குறுக்கீடு. வரிசைக் கோட்டில் வேறொன்றை அனுப்பும்போது ஒரு எழுத்து குறுக்கே வருதல்.

communications link : தரவு தொடர்பு தொடுப்பு : இரண்டு கணினி சாதனங்களுக்கிடையில் தகவலை அனுப்பும் முறை.

communications network : தரவு தொடர்பு பிணையம் : முனையங்களையும் கணினிகளையும் இணைக்கும் தரவு தொடர்பு வழித் தடங்கள்.

communications parameters : தகவல் தொடர்பு அளபுருக்கள் : கணினிகள் தம்மிடையே தகவல் பரிமாறிக் கொள்ளத் தேவையான பல்வேறு தகவமைவுகளைக் குறிக்கும் அளபுருக்கள் ஒத்தியங்காத் தரவு தொடர்புகளில், எடுத்துக்காட்டாக, இரு இணக்கி (மோடம்) களுக்கிடையே தரவு தொடர்பு நடைபெற மோடத்தின் வேகம், தரவு துண்மிகள், முடிப்புத் துண்மிகளின் எண்ணிக்கை, மற்றும் வகைச் சமன் ஆகிய அளபுருக்களை சரியாக தகவமைக்க வேண்டும்.

communications processor : தகவல் தொடர்புச் செயலகம் : கணினி அமைப்புக்கும் தகவல் தொடர்பு கட்டமைப்புகளுக்கும் இடையே தரவு பரிமாற்றலுக்கான பாதை அமைத்துத் தரும் கணினி.

communications programme : தகவல் தொடர்பு நிரல் : மோடெம் மூலமாக தகவல் தொடர்பு கொள்ள கணினிகளை அனுமதிக்கும் நிரல். தகவல் தொடர்பு கொள்வதற்கும், தகவலைப் பெறுவதற்கும் தானியங்கி முறைகளாகிய தானியங்கி பதில் அளித்தல், தானே டயல் செய்தல், வேறொரு கணினியை டயல் செய்தல் போன்றவற்றை சில தரவு தொடர்பு நிரல்கள் செய்யவில்லை. தொலைதூர கணினியில் ஆளில்லாமலே தொடர்பு கொள்ளவும் சில நிரல்கள் திறனுடையவை.

communications protocol : தகவல் தொடர்பு நெறிமுறைகள் : இரண்டு கணினி சாதனங்களுக்கிடையே நடைபெறும் தகவல் தொடர்பை நெறிபடுத்தும் விதிமுறைகள். தரவு இழப்பு, தரவு பிழை தவிர்கின்ற வழி முறைகளையும் கொண்டிருக்கும்.

communications server : தகவல் தொடர்பு வழங்கன் : குறும் பரப்புப் பிணையங்களை விரி பரப்புப் பிணைப்பு அல்லது தொலைத் தகவல் தொடர்பு பிணையங்களுடன் இணைக்கும் கருவி.

communications slot : தகவல் தொடர்புச் செருகுவாய் : மெக்கின்டோஷ் கணினியின் பல்வேறு மாதிரிகளில் பிணைய இடைமுக அட்டைகளைச் செருகுவதற்கென உள்ள விரிவாக்க செருகுவாய்.

communications software : தகவல் தொடர்பு மென்பொருள் : பயனாளரின் கட்டளைகளுக்கு ஏற்ப இணக்கியை (modem) கட்டுப்படுத்தும் மென்பொருள். பெரும்பாலும் இது போன்ற மென்பொருள் முனையக் கணினிகளை குறிப்பிட்ட வகையில் தகவமைத்தல், கோப்புகளைப் பரிமாறிக்கொள்ளல் போன்ற வசதிகளைக் கொண்டிருப்பதுண்டு.

communication satellite : தகவல் தொடர்பு செயற்கைக்கோள் : பூமியின் மேலே சுற்றுப்பாதை யில் பூமியின் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள். நுண்ணலை பரப்பும் நிலையமாக அது செயல்படும். தரை நிலையத்திலிருந்து அனுப்பப்படும் சமிக்கைகளை ஏற்று, அவற்றின் திறன்பெருக்கி வெவ்வேறு அலைவரிசைகளில் பூமியிலுள்ள இன்னொரு தரை நிலையத்துக்கு அனுப்பி வைக்கும். தொடக்க காலங்களில் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளுக்காகவே இத்தகைய தரவு தொடர்பு செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்பட்டன. கணினி தரவுகளின் அதிவேக பரப்புகைக்கும் பயன்படுத்த முடியும். ஆனால் இரண்டு இடையூறுகள் உள்ளன. ஒன்று, அலைபரவலில் ஏற்படும் தாமதம் (சமிக்கைகள் நீண்ட தொலைவு பயணம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தினால் ஏற்படும் தாமதம்). இரண்டாவது தரவு பாதுகாப்பு.

communications system : தகவல் தொடர்பு அமைப்பு : தகவல் அனுப்புகின்றவரின் பருப்பொருள், வழித்தடங்கள் மற்றும் தரவு பெறுபவர்களையும் கொண்ட அமைப்பு.

communication standard : தரவுத் தொடர்புத் தரம்; செய்தித்தொடர்பு செந்தரம்; செய்தித் தொடர்பு திட்ட அளவு.

Communications Terminal Protocol : தகவல் தொடர்பு முனைய நெறிமுறை : ஒரு பயனாளர் தன்னுடைய கணினியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள ஒரு கணினியை, அதனுடன் நேரடியாக இணைக்கப்பட்ட ஒரு கணினியைப் போலவே அணுக வழி செய்யும் முனைய நெறிமுறை இது.

Community Antenna Televisions (CATV) : சமுதாய அலைவங்கித் தொலைக்காட்சி.

compact : குறு; குறுக்கி; கச்சிதம்.

compact database : தரவு தளத்தை இறுக்கு.

compact disc : குறுவட்டு : 1. தொடக்க காலங்களில், கேட்பொலி (audio) தகவலை இலக்க முறை (digital) வடிவில் பதிந்து வைப்பதற்கான ஒரு ஒளியியல் சேமிப்பு ஊடகமாக அறிமுகம் ஆனது. இது மின்காந்த வட்டுகளிலிருந்து வேறுபட்டது. பள பளப்பான உலோகப் பூச்சும் பாதுகாப்பான பிளாஸ்டிக் மேல் பூச்சும் கொண்டது. 74 நிமிடங்கள் கேட்கக்கூடிய உயர்தர ஒலித் தகவலைப் பதிய முடியும். மிகு அடர்த்தியுள்ள
குறுவட்டு

லேசர் கதிர் மற்றும் பிரதிபலிப்பு ஆடிகளின் உதவியுடன் இதிலுள்ள தரவு படிக்கப்படுகிறது. சுருக்கப் பெயர் சிடி (CD). சிலவேளைகளில் ஒளிவட்டு என்று அழைக்கப்படுவதுண்டு. 2. சிடி-ரோம், சிடி ரோம்/எக்ஸ்ஏ, சிடி-ஆர், சிடி-ஆர்டபிள்யூ, ஃபோட்டோசிடி, டிவிஐ என்று பல பெயர்களில், பல்வேறு வகையான தரவு வடிவங்கள் பதியப்பட்டுள்ள குறுவட்டுகள் கிடைக்கின்றன. பல்வேறு படிப்பு/எழுது வேகங்களில் மற்றும் கொள்ளளவுகளில் தயாரிக்கப்படுகின்றன.

compact disc interactive (CDI) : இடைப்பரிமாற்ற குறுவட்டு : ஊடாட்டம் குறுவட்டு.

compact disc player : குறுவட்டு இயக்கி : குறுவட்டில் பதியப்பட்டுள்ள தகவலைப் படிப்பதற்கான ஒரு சாதனம். வட்டின் உள்ளடக்கத்தைப் படிப்பதற்குரிய ஒளியியல் கருவிகளையும், படித்த தகவலை சரியான வகையில் வெளியீடு செய்வதற்குரிய மின்னணுச் சுற்றுகளையும் இச்சாதனம் கொண்டிருக்கும்.

compact disc read only memorry (CDROM) : படிக்கமட்டுமான தரவு பதியும் குறுவட்டு.

compact disc-recordable and erasable : குறுவட்டு-பதிதகு மற்றும் அழிதகு : பதிதகு குறுவட்டுகள் வெற்று வட்டுகளாகத் தயாரிக்கப்படுகின்றன. அதாவது தொடக்கத்தில் அவற்றில் தரவு எதுவும் பதியப்பட்டிருக்காது. இத்தகைய வெற்று வட்டுகளை வாங்கி அவற்றில் எழுதுவதற்கென உரிய சாதனங்கள் மூலம் தகவலைப் பதியலாம். அவ்வாறு ஒருமுறை பதியப் பட்ட தகவலை மீண்டும் அழித்து எழுத முடியாது. அழிதகு குறுவட்டுகளில் ஒரு முறை எழுதப்பட்ட தகவலை அழித்து விட்டு மீண்டும் புதிய தகவலை எழுத முடியும்.

compaction : நெருக்கம் : செமிப்பதற்கு இடம் தருவதற்காக தரவு கோப்புகளை இறுக்கும் முறை. compact model : கச்சித மாதிரியம் : இன்டெல் 80x86 செயலிக் குடும்பத்தில் பின்பற்றப்படும் ஒரு நினைவக மாதிரியம். இதில் நிரலாணைத் தொடர்களுக்கென 64 கேபி நினைவகம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் நிரலின் தரவுகளுக்கென 1 எம்பி வரை ஒதுக்கப்படுகிறது.

company sites : நிறுவனத் தளங்கள்.

comparative grammer knowledge : ஒப்பிலக்கண அறிவு.

comparative knowledge : ஒப்புமை அறிவு.

comparative sort : ஒப்பீட்டு வரிசையாக்கம் : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவரங்களை ஒப்பிட்டு வரிசையாக்கும் முறை.

comparator : ஒப்பீட்டுப் பொறி : மாற்றப்பட்ட தரவுகளின் துல்லியத்தைச் சோதனை செய்ய இரண்டாவது முறையும் மாற்றம் செய்து இரண்டுக்குமிடையில் உள்ள வேறுபாட்டைக் குறிப்பிடும் சாதனம்.

compare : ஒப்பீடு : ஒன்றின் மதிப்பைச் சோதித்து சுழி (பூஜ்யம்) யுடனான அதன் உறவை முடிவு செய்தல் அல்லது இரண்டு பொருள்களை சோதித்தல். ஒப்பீட்டு அளவை முடிவு செய்யவோ அல்லது அடையாளம் காணும் நோக்கத்துடனோ இது செய்யப்படும்.

comparison : ஒப்பீடு : இரண்டு எண்களை அவற்றின் அடையாளத்துக்காக ஒப்பிடுதல் அல்லது இரண்டு எழுத்துகளை அவற்றின் அளவின் ஒப்புமைக்காக ஒப்பிடுதல் அல்லது அகர வரிசைப்படுத்துதல்.

comparison operators : ஒப்பீட்டுச் செயற்குறிகள்.

comparison tests : ஒப்பீட்டுச் சோதனைகள்.

compart : காம்பார்ட் : Computer Art என்பதன் குறும்பெயர்.

compatibility : ஒத்தியல்பு; தகவுடைமை ஏறபுடைமை : 1. ஒரு கணினிக்காக எழுதப்பட்ட நிரல், வேறு ஒரு மாறுபட்ட கணினியில் செயல்பட அனுமதிக்கும் சில கணினிகளின் தன்மை. 2. கணினியும், அச்சுப் பொறியும் போன்று பல்வேறு சாதனங்கள் ஒன்றுசேர்ந்து வேலை செய்யும் திறன்.

compatibility mode : ஒத்தியல்புப் பங்கு : ஒரு கணினி முறைமைக் உருவாக்கிய மென்பொருளோ வன்பொருளோ இன்னொரு கணினி முறைமையிலிருந்து செயல்படும் தன்மை. பொதுவாக இம்முறை, இன்டெல் நுண்செயலிகளுக்காக உருவாக்கப்பட்ட உயர்நிலை இயக்க முறைமைகளில் (ஒஎஸ்/2 மற்றும் விண்டோஸ் என்டி) எம்எஸ்-டாஸ் மென்பொருளை இயக்குதலைக் குறிக்கும். அல்லது சில யூனிக்ஸ் பணி நிலையங்கள் மற்றும் சில மெக்கின்டோஷ் கணினிகளில் எம்எஸ்-டாஸ் மென்பொருள் இயக்குவதைக் குறிப்பதுண்டு.

compatible : ஏற்புடைமை : இரண்டு சாதனங்கள் அல்லது அமைப்புகளுக்கிடையே சேர்ந்து பணியாற்றும் தன்மையைக் குறிப்பிடுகிறது. ஒரு அமைப்பின் பகுதி ஒன்று வேறொரு அமைப்பின் பருப்பொருள் மற்றும் செயல்படு தன்மைகளுடன் முழுமையாக ஏற்புடையதென்றால், எந்த மாற்றமும் செய்யாமல் அதை வேறொரு அமைப்புடன் சேர்த்துக் கொள்ளலாம்.

compatible software : ஒத்தியல்பு மென்பொருள் : எந்தவித மாற்றமும் செய்யாமல் பல்வகை கணினிகளில் செயல்படக்கூடிய நிரல்கள்.

compilation : தொகுத்தல்; மொழி மாற்றல் : கணினிச் செயலகத்தில் நேரடியாக இயக்கப்படுவதற்காக உயர்நிலை மொழிகளில் எழுதப்பட்ட நிரல்களை எந்திர மொழி ஆணைகளாக மொழி பெயர்த்துத் தரும் இரு முக்கிய முறைகளில் ஒன்று. இயக்கத்திற்கு முன்பே முழு நிரல் மொழி பெயர்க்கப்பட வேண்டும். ஆணை மாற்றி (interpretation) -க்கு மாறானது. ஆனைமாற்றி முறையில் ஒவ்வொரு ஆணையும் அது செயல் படுத்தப்படும்போது மட்டுமே மாற்றப்படுகிறது.

compilation process : மொழி மாற்றுச் செயல்முறை.

compilation software : தொகுப்பு; மென்பொருள் : மொழிமாற்றி மென்பொருள்.

compilation time : மொழி மாற்று நேரம் : மூலமொழி நிரலை இலக்கு நிரலாக மொழிபெயர்க்கும் (தொகுக்கும்) நேரம்.

compile : மொழிமாற்று : ஃபோர்ட்ரான், கோபால், அல்லது பாஸ்கல் போன்ற உயர் நிலை நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட நிரலை எந்திர மொழி நிரலாக மாற்றி அமைத்தல்.

compile and go : மொழிமாற்றி இயக்க : ஒரு நிரலை எந்திர மொழிக்கு மாற்றி அதனை இயக்கும் பணியையும் ஒரே நேரத்தில் செய்தல். compiled basic : மொழிமாற்று பேசிக் : பொதுவாக பேசிக் மொழி ஒவ்வொரு ஆணையாக நிறைவேற்றக்கூடிய ஆணை மாற்றி (interpreter) யை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறில்லாமல், முழு நிரலையும் பொறிமொழியாக்கி இயக்கும் மொழிமாற்றியை (compiler) அடிப்படையாகக் கொண்ட பேசிக் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இவ்வாறு மொழி மாற்றப்பட்ட பேசிக் நிரல் மிகவேகமாக இயங்கும் என்பதால் தொழில் முறையான நிரல்களுக்கு இத்தகு பேசிக் மொழியையே தேர்வு செய்வர்.

compiled language : மாற்றிய‌ மொழி; தொகு மொழி : கணினியில் இயக்கப்படுவதற்கு முன் பொறிக் குறி முறையாக்கப்பட்ட ஒரு மொழி ஒவ்வொரு ஆணையாக மொழி பெயர்க்கப் பட்டு இயக்கப்படும் ஆணை மாற்று முறையிலிருந்து வேறு பட்டது.

compiled programme : தொகுக்கப்பட்ட நிரல்; மொழி மாற்றிய நிரல்.

compiler : மொழிமாற்றி; தொகுப்பி : உயர் நிலை மொழி நிரலை, கணினி வன்பொருளில் நேரடியாக செயல்படுத்தும் நோக்கத்துடன், மொழி பெயர்க்கும் மென்பொருள், இயக்கப்படுவதற்கு முன்பே முழு நிரலையும் மொழி பெயர்க்கிறது.

compiler language : மொழி மாற்றியின் மொழி : உயர்நிலை மொழிச் சொற்றொடர்களை இலக்கு மொழிக்கு மொழி பெயர்த்துத் தருவதற்கு பயன்படுத்தும் மொழிமாற்றி உருவாக்கப்பட்ட மொழி.

compiler programme : மொழி மாற்று நிரல்.

compile time : மொழிமாற்று நேரம் : ஒரு நிரலை மொழி மாற்ற ஆகும் நேரம். மூல மொழியிலிருந்து எந்திர மொழிக்கு மொழி பெயர்க்க ஆகும் நேரம். நூலக செயல்களுடன் தொடுக்கும் நேரமும் இதில் சேர்த்துக் கொள்ளப்படும்.

compile time binding : தொகு நேர பிணைப்பு; மொழிமாற்று நேரப் பிணைப்பு : ஒரு நிரல் மொழி மாற்றப்படும்போதே அந்நிரலிலுள்ள ஓர் இனங்காட்டிக்கு (identifier) (எடுத்துக் காட்டாக ஒரு செயல்கூறு அல்லது மாறிலி) இன்ன பொறுப்பு என முடிவு செய்து விடுவது. சில வகை நிரல்களில் இப்பொறுப்பு, நிரல் இயக்கப்படும் போது முடிவு செய்யப்படுவதுண்டு. compile-time error : மொழி மாற்று நேரப் பிழை : மூலக் குறியீட்டை மொழி மாற்றும் போது ஏற்படும் பிழை.

compiling : தொகுத்தல்.

compiling application : தொகுப்பு பயன்பாடு; மொழிமாற்றப் பயன்பாடு.

complement : நிரப்பு எண் : சேர்ப்பு எண் : ஒரு குறிப்பிட்ட எண்ணின் எதிர்மறையை உருவகிக்கும் எண். கடைசி முக்கிய இலக்கத்திற்கு ஒற்றுமையுடையதாக 10-ன் சேர்ப்பெண் மற்றும் 2-ன் சேர்ப்பெண் போன்று ஆதார எண்ணிலிருந்து எண்னின் ஒவ்வொரு இலக்கத்தையும் கழிப்பதால் வரும் எண். Radix Complement என்றும் அழைக்கப்படுகிறது.

complementary MOS (CMOS) : நிரப்பு உலோக ஆக்சைடு குறை கடத்தி எனும் பொருள்படும் Metallic Oxide Semiconductor (MOS) (Complementary MOS) என்பதன் குறும்பெயர். மாசை விட வேகமாக வேலை செய்கின்ற, ஏறக்குறைய மின்சக்தியைப் பயன்படுத்தாமலே இயங்கும் உலோக ஆக்சைடு. குறைக் கடத்தி சிப்பு. LSI-ஐ விடச் சிறந்ததல்ல. ஆனால் பேட்டரியிலிருந்து சக்தி பெறுகின்ற மின்னணு கைக்கடி காரங்கள் மற்றும் பிற கடிகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

complementary operation : நிரப்பு கைச் செயல்பாடு : பூலியன் தருக்க முறையில், நேரெதிர் விடையை வரவழைக்கும் செயல்பாடு. இச் செயல்பாடு அதே தரவுகளின் மீதே நிகழ்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, ஏ என்பது சரி என்ற மதிப்புடையது எனில் இல்லை ஏ என்பது தவறு என்ற விடையைத் தரும்.

complementation, boolean : பூலியன் நிரப்புகை.

complementing : நிரப்புதல்.

complement notation : நிரப்பு முறை.

complement, tens : பத்தின் நிரப்பெண்.

completeness check : முழுமைச் சரிபார்ப்பு : புலங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என்றும் முழுப் பதிவுகளும் சோதிக்கப்பட்டது என்றும் உறுதி செய்வது.

complete word : முழுச் சொல்.

complex : கலவை : கலவை எண்களை (a+ib) பயன்படுத்தும் வகையில் சில கணினி மொழிகளில் உள்ள தரவு இனம். Complex Instruction Set Computer (CISC) : கலவை ஆணைத் தொகுதிக் கணினி.

complexity : உட்சிக்கல்நிலை; கடுஞ்சிக்கல்.

complex number : கலப்பு எண் : a+ib என்ற வடிவில் உள்ள எண். a, b ஆகிய இரண்டும் மெய் எண்கள். i என்பது -1ன் வர்க்க மூலம் என்பது மெய்ப்பகுதி என்றும் b என்பது கற்பனைப்பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. கலப்பு எனகளை இரு பரிமாண வரைபடத் தாளில் எக்ஸ்-ஒய் அச்சுகளில் ஆயத் தொலைவுப் புள்ளகளினால் குறித்துக் காட்டமுடியும். கிடைமட்ட அச்சில் (எக்ஸ்) மெய்ப்பகுதியும் a), செங்குத்து அச்சில் (ஒய்) கற்பனைப் பகுதியும் (b) இடம்பெறும். எக்ஸ், ஒய் அச்சுகள் முறையே மெய், கற்பனை அச்சுகள் என்றழைக்கப்படுகின்றன. வரை படத் தளம் கலப்புத் தளம் (complex plane) எனப்படுகிறது.

comp. newsgroups : காம்ப். நியூஸ் குருப்ஸ்; கணி. செய்திக் குழுக்கள் : யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படிநிலைப் பெயர். முன்னொட்டாக‌ (prefix) comp. என்ற சொல் இருக்கும். இந்தச் செய்திக் குழுக்களில் கணினி வன் பொருள், மென்பொருள் மற்றும் கணினி அறிவியல் தொடர்பான ஏனைய செய்திகளைப் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெறும். யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படிநிலையில் அடிப்படையான ஏழு குழுக்களில் comp என்பதும் ஒன்று. ஏனைய ஆறு : news., rec., sci., soc., talk, misc ஆகியவை.

component : பொருள்கூறு; ஆக்கக்கூறு : கணினி அமைப்புச் சாதனம் : ஒரு கணினி அமைப்பில் அடிப்படை உறுப்பு, மூலக உறுப்பு; ஒரு பயன்பாட்டின் பகுதி. மென்பொருள் ஆக்கக் கூறுகளையும் குறிக்கும்.

component dialog box : பொருள்கூறு உரையாடல் பெட்டி; ஆக்கக் கூறு உரையாடல் பெட்டி.

component event : பொருள்கூறு நிகழ்வு; ஆக்கக்கூறு நிகழ்வு.

component object model : பொருள் கூறு மாதிரியம். ஆக்கக் கூறு பொருள் மாதிரியம்.

component reusability : பொருள் கூறு மறுபயன்பாடு; ஆக்கக் கூறு மறுபயன்பாடு.

component software : ஆக்கக் கூறு மென்பொருள்; பொருள் கூறு மென்பொருள் : கூறுநிலை மென்பொருளாக்கத்தில் பயன் படுத்தப்படும் பொருள்கூறுகள். பொருள் கூறுகள் பிற பொருட் கூறுகளுடன் இணைந்து ஓர் ஒட்டுமொத்த நிரலை உருவாக்குகின்றன. ஒரு நிரலர், ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள பொருள்கூறு ஒன்றினை தன் நிரலில் பயன்படுத்திக் கொள்ள முடியும். மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். பொருள்கூறு எவ்வாறு உருவாக்கப்பட்டது, அதனுள்ளே எழுதபபட்ட நிரல்கள் ஆனைத் தொடர்கள் எவை, அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ளமலே அப்பொருள்கூறின் முழுப் பயனையும் நுகர முடியும்.

COM port : காம் துறை : பிற வெளிப்புற சாதனங்களுடன் தரவு தொடர்பு கொள்வதற்காக பீ. சி. யில் பொருந்தும் ஒரு நேரியல் வெளியீட்டு துறை.

காம் துறை

compose : உருவாக்கு.

compose message : செய்தியாக்கல்.

compose sequence : இயற்று வரிசை முறை.

composite : கலப்பு : அனைத்து மூன்று அடிப்படை ஒளிக்காட்சி (வீடியோ) நிற சமிக்கைகளும் (சிவப்பு, பச்சை, நீலம்) கலந்துள்ள ஒளிக்காட்சி சமிக்கை வகை. சில கணினி திரையகங்களில் உள்ள உருவங்களின் கூர்மையைக் கட்டுப்படுத்துகிறது. எலெக்ட்ரான் பீச்சு கருவியைப் பயன்படுத்தி மூன்று அடிப்படை நிறங்களை உருவாக்கும் தொலைக்காட்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

composite card : கலவை அட்டை : பலநோக்கு தரவு அட்டை அல்லது பல்வேறு பயன்பாடுகளைச் செயலாக்கம் செய்ய‌ தேவைப்படும் தரவுகளைக் கொண்ட அட்டை.

composite colour monitor : ஒருங்குசேர் வண்ணத்திரையகம்.

composite display : கூட்டுருத் திரைக்காட்சி : தொலைக்காட்சி மற்றும் சில கணினித் திரைகளின் காட்சிப் பண்பியல்பைக் குறிக்கிறது. கூட்டுக் கலவையான சமிக்கைகளிலிருந்து ஒரு படிமத்தை மீட்டெடுக்கும் திறனைக் குறிப்பிடுகிறது. கூட்டுருக் காட்சி கறுப்பு வெள்ளையாகவோ, வண்ணமாகவோ இருக்கலாம். சாதாரண கறுப்பு வெள்ளை அல்லது சிபநீ (RGB) வண்ணத்திரைகளைக் காட்டிலும் தெளிவற்றே இருக்கும். சிபநீ காட்சித் திரைகள் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறக் கூறுகளுக்குத் தனித்தனி சமிக்கைகளையும் தனித்தனி இணைப்புக் கம்பிகளையும் கொண்டுள்ளன. ஆனால் கூட்டுருக் காட்சித் திரைகள் ஒரே இணைப்புக் கம்பியிலேயே படிமத்தை உருவாக்குவதற்கான தரவு சமிக்கைகளையும், கிடைமட்ட மற்றும் செங்குத்து வருடல்களுக்கான துடிப்புத் தரவுகளையும் பெறுகின்றன.

composite key : கூட்டுத் திறவி : ஓர் அட்டவணையில் தரவுவைத் தேடிப் பெறப் பொதுவாக ஒரு குறிப்பிட்ட புலம் திறவு கோலாகப் பயன்படும். (எ-டு) பணியாளர்களின் விவரங்களைப் பதிந்து வைத்துள்ள அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட ஏட்டை (record) இனங்காண பணியாளர் எண் திறவுகோல் புலமாகப் பயன்பட முடியும். சில அட்டவணைகளில் ஒற்றைப் புலம் திறவு கோலாகப் பயன்பட முடியாது. பல்வேறு வணிகர்களிடம் கொள்முதல் செய்த பல்வேறு பொருள்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலில் ஒரு குறிப்பிட்ட ஏட்டினை (record) இனங்காண வணிகர் எண்+பொருள் எண் இரண்டு புலங்களும் சேர்ந்த கூட்டுத் திறவு கோலையே பயன்படுத்த முடியும்.

composite statement : கலவைக்கூற்று.

composite symbol : கலப்புக் குறியீடு : ஒரு குறிக்கு மேற்பட்ட குறிகளைக் கொண்ட சமிக்கை < > என்ற குறியீடு சமமானதல்ல என்பதைக் குறிப்பிடச் சில மென்பொருள் அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

composite video : கலவை ஒளிக்காட்சி; கலப்பு ஒளிக்காட்சி; கலந்த ஒளிக்காட்சி : ஒரு தனி ஒளிக்காட்சி சமிக்கையாக குறியீடு செய்யப்பட்டு பிரகாசம், நிறக்கூறு வடிவில் தோன்றும் ஒரு கணினியின் வண்ணக் காட்சித் திரையில் தோன்றும் நிற வெளிப்பாடு. நிறக் கட்டுப்பாடு சமிக்கை ஒரு தரவு தொடராக மூன்று நிறங்களில் (சிகப்பு, பச்சை, நீலம்) குறியீடு செய்யப்படுகிறது. கலவை காட்சித்திரைகள் எனப்படும் சிக்கனமான வண்ண காட்சித் திரைகள் கலவை ஒளிக்காட்சியைப் பயன்படுத்தி தொலைக் காட்சி பெட்டியைவிட ஓரளவு சிறந்த படத்தை அளிக்கும். ஆனால் ஆர்ஜிபி காட்சித்திரை போன்ற உயர்தரத்தில் அளிக்க இயலாது.

composite video display : கூட்டு ஒளிக்காட்சித் திரை.

composition : எழுத்துக் கோப்பு : எழுத்துகளின் அளவுகள், முறைகள் மற்றும் ஒரு பக்கத்தில் அவற்றின் அமைப்புகளைத் தேர்ந்து எடுத்தல்.

compound document : கூட்டு ஆவணம் : சொற்கள் மற்றும் வரைகலை ஆகிய இரண்டும் உள்ள கோப்பு. கூட்டு ஆவணங்களில் குரல் மற்றும் ஒளிக்காட்சியும் இடம் பெறும்.

compound statement : கூட்டு கூற்று : தனியாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டு அல்லது கூடுதல் ஆணைகளைக் கொண்டுள்ள தனி ஆணை.

compress : இறுக்கு; சுருக்கு : இடத்தை சேமிக்க தரவுகளைச் சுருக்குதல், தரவுகளைச் சுருக்க, செயல்பாட்டு ஆனையின் பயனீட்டுக் கோப்புப் பெயருடன் A-Z பின்னிணைப்பு சேர்க்கப்படுகிறது. Uncompress என்ற பயன்பாடு கோப்புகளை விரிவாக்கி பழையபடியே தரும்.

compressed disk : இறுக்கிய வட்டு; இறுகு வட்டு : ஒரு நிலைவட்டு அல்லது நெகிழ்வட்டில் இயல்பாகக் கொள்ளும் அளவுக்கும் அதிகமாகத் தரவுவைப் பதிவதற்கென மென்பொருள் பயன்கூறுகள் உள்ளன. (எ-டு) ஸ்டேக்கர், டபுள்ஸ் பேஸ் போன்றவை. இவை வட்டில் உள்ள தரவுவை இறுக்கிச் சுருக்கிப் பதிவதன் மூலம் அதிகமான அளவு தரவுவைப் பதிய வழியமைத்துக் கொடுக்கின்றன.

compressed drive : இறுகு வட்டகம்; இறுகு இயக்ககம்.

compressed file : இறுக்கப்பட்ட‌ கோப்பு : வழக்கமானதைவிட குறைவான சேமிப்பு இடத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் சேமிக்கப்படும் கோப்பு.

Compressed SLIP : இறுகு ஸ்லிப் : ஸ்லிப் என்பது ஒர் இணைய நெறிமுறை (Internet Protocol). இதன் ஒரு பதிப்பு இறுகு ஸ்லிப் எனப்படுகிறது. இணைய முகவரித் தகவலை இறுக்கிச் சுருக்கிப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாய் சாதாரண ஸ்லிப் நெறிமுறையை விட இது வேகமாகச் செயல்படுகிறது.

compression : இறுக்குதல்; இறுக்கம்.

compression algorithm : இறுக்கப் படி முறை.

compression ratio : இறுக்கு வீதம் : இறுக்கப்பட்ட தரவுகளை அளப்பது. சான்றாக, அதன் மூல அளவின் கால் பங்காக இறுக்கினால் அதை 4 : 1, 25%, 75% என்று குறிப்பிடலாம்.

compression technique : இறுக்கிச் சுருக்கும் நுட்பம்.

compressor : இறுக்கி; செறிவி; சுருக்கி : மிகவும் வலுவானதும் மிகவும் பலவீனமானதுமான அனுப்பும் சமிக்கைகளின் எல்லையைச் சுருக்கும் சாதனம். தரவுகளைச் சுருக்கும் நிரல் அல்லது நடைமுறை ஒழுங்கு.

CompuServe : கம்ப்யூசெர்வ் : தனிநபர்கள் மற்றும் வணிகத் துறையினர் பயன்படுத்தும் பெரிய தகவல் சேவை கட்டமைப்பு, புதிய செய்திக் கட்டுரைகள், பங்குச் சந்தை அறிக்கைகள், மின் அஞ்சல், கல்வி நிரல்கள், நிரலாக்க உதவிச் சாதனங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. பொது தொலைபேசி அமைப்பு மூலம் சொந்தக் கணினி வைத்திருப்போர் 'கம்ப்யூசெர்வ்'யுடன் தொடர்பு கொள்ளலாம்.

computability : கணக்கிடும் தன்மை : கணக்கு முறையில் சிக்கல்களைத் தீர்க்கும் பொருள்.

computation : கணக்கிடல் : கணக்கிடுவதன் விளைவு.

computational complexity : கணக்கிடல் உட்சிக்கல் நிலை.

computational linguistics : கணினி மொழியியல்.

computational stylistics : கணினி நடையியல்.

compute : கணக்கிடு; கணி.

compute bound : கணக்கிடும் வரையறை : மையச் செயலகத்தின் வேகத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட கணினி அமைப்பின் ஒரு நிரலாகக் குறிப்பிடுவது. கட்டுப்படுத்தும் செயல்முறை அல்லது செயலக வரையறை என்பதைப் போன்றது. உள்ளீடு : வெளியீடு வரையறை என்பதற்கு மாறானது.

computer : கணினி; கணிப் பொறி : தரவுகளை ஏற்றுக் கொண்டு அத்தரவுகளின்மீது குறிப்பிட்ட செயல்முறை (கணித அல்லது தருக்க முறை) களை நிகழ்த்தி அச்செயல்முறை களின் முடிவைத் தருவதன் மூலம் சிக்கல்களைத் தீர்க்கும் திறனுடைய சாதனம்.

computer abuse : கணினி கெடு வழக்கு.

Computer Aided Design (CAD) : கணினி உதவிடும் வடிவமைப்பு : காட்சி முறையும் ஒளிப்பேனா அல்லது பலகையின் மூலம் ஒரு கணினிக்கும், ஒரு வடிவமைப் பவருக்கும் இடையில் ஏற்படும் நேரடியான, தரவு தொடர்பினைக் கொண்ட கணினித் தொழில்நுட்பம். கட்டட வடிவமைப்பு, எந்திரங்கள் மற்றும் பொறியியல் கருவிகள் உற் பத்திப் பொருள்கள் வடிவமைப் புக்கு பெரிதும் உதவுகிறது.

Computer-Aided Design and Drafting (CADD) : கணினி உதவிடும் வடிவமைப்பு மற்றும் படம் வரைதல் : ஓவியங்களை உருவாக்குதல், படம் வரைதல், விருப்பங்களை வரிசைப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு பயன்படும் கணினித் தொழில்நுட்பம்.

Computer Aided Designs Computer aided manufacturing (CAD/CAM) : கணினி ரேம்; கணினி உதவிடும் வடிவமைப்பு | கணினி உதவிடும் உற்பத்தி முறை : வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி முறை செயல்பாடுகளைத் தானியங்கி முறையில் செய்யும் முயற்சி. வேகமாக வளரும் கணினி வரைபட முறை. தற்போது கையெழுத்துக் கலை வரைபட முறையையே முக்கிய ஆதாரமாக கொண்டுள்ளது. என்றாலும் ராஸ்டர் வரைபட முறையை உள்ளடக்கிய பகுதிகள், கட்டுமானம் மற்றும் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் போன்ற பரவலான பயன்பாடுகளைச் உருவாக்க கிளை விட்டுள்ளது.

Computer-aided engineering : கணினி - உதவிடும் பொறியியல் : கணினி உதவிடும் வடிவமைப்பு முறைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் உற்பத்தி வடிவமைப்புகளின் மாதிரிகளை உருவாக்க, ஆராய, மதிப்பீடு செய்ய கணினிகளைப் பயன்படுத்துதல்.

Computer Aided Factory Management : (CAFM) : சிஏஎஃப்எம்; கணினி உதவிடும் தொழிற்சாலை மேலாண்மை : உற்பத்தி முறைகளையும், உற்பத்தித் தொழிற்சாலையின் இயக்கத்தையும் தானியங்கியாக செய்வதற்கு கணினிகளைப் பயன்படுத்துதல். Factory Automation என்றும் அழைக்கப்படுகிறது. உதிரி பாகங்களைக் கணக்கெடுத்தல். வழங்கு மையங்களின் தேவைக்கேற்ப புதிய பொருள்களுக்கு ஆணையிடுதல் போன்றவற்றில் துல்லியமான கணக்கு வைத்திருக்க, கணினி மூலம் செயல்படும், உற்பத்தி மேலாண்மை அமைப்பு.

Computer Aided Manufacturing (CAM) : கணினி உதவிடும் உற்பத்தி முறை (கம்) : உற்பத்தித் துறையைச் சேர்ந்த மேலாண்மை, கட்டுப்பாடு, செயல்முறை ஆகியவற்றுக்கு கணினித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல்.

Computer Aided Materials Delivery : கணினி உதவிடும் பொருள் விநியோகம் : ' கணினி இயக்கத்தில் நகர்த்திப் பட்டைகளையும், எந்திரன் (எந்திர மனித) வண்டிகளையும் பயன்படுத்தித் தொழிற்சாலையிலிருந்து பொருள்களையும் உதிரி பாகங்களையும் நகர்த்துதல். இதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரித்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் கூடுகிறது.

Computer Aided Materials Selection : கணினி உதவிடும் பொருள் தேர்வு : ஒரு புதிய பொருள் அல்லது உதிரிபாகத்தை உருவாக்க எந்தெந்த பொருள்களைப் பயன்படுத்தலாம் என்பதை முடிவுசெய்ய கணினியைப் பயன்படுத்துதல்.

Computer-Aided Planning (CAF) : கணினி-உதவிடும் திட்டமிடல் : திட்டமிடல் செயல்முறைக்கு உதவ கணினி மென்பொருள்களை கருவிகளாகப் பயன்படுத்துதல்.

Computer - Aided Software Engineering (CASE) : கணினி உதவிடும் மென்பொருள் பொறியியல் : மென்பொருள் உருவாக்கம் அல்லது நிரலாக்கம் உள்ளிட்ட தரவு அமைப்பு வளர்ச்சியில் பல்வேறு நிலைகளைத் தானியங்கியாகச் செய்ய மென்பொருள் தொகுப்பைப் பயன்படுத்துவது.

computer, all purpose : அனைத்துப் பயன் கணினி.

computer, anolog : ஒத்திசைக் கணினி, தொடர்முறை கணினி.

computer anxiety : கணினி பதட்டம் : கணினிகள் பற்றிய அச்சம்.

computer application : க‌ணினிப் பயன்பாடு : இறுதி பயனாளர் ஒரு குறிப்பிட்ட வேலைக்கோ அல்லது ஒன்றைச் சாதிக்கவோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்க்கவோ கணினியைப் பயன்படுத்துவது. சான்றாக, பொதுவான வணிகக் கணினி பயன்பாடுகளில் கொள்முதல், கோரிக்கை விலைப்பட்டி, கணக்கெடுப்பு, சம்பளப்பட்டி போன்றவை அடங்கும்.

computer architecture : க‌ணினிக் கட்டுமானம் : கணினி அமைப்பின் வன்பொருளின் பருப்பொருள் அமைப்பையும், மற்ற வன்பொருள்களுடன் அவற்றுக்குள்ள உறவையும் பற்றி ஆராயும் கணினி பற்றிய ஆய்வு.

computer art : கணினிக் கலை : ஓவியர்களுக்கான கணினி கருவியைப் பயன்படுத்தி ஓவியர்கள் உருவாக்கிய வடிவம். வண்ணம் பூசும் தூரிகை, கரிபென்சில் அல்லது மனதின் ஒரு விரிவாக்கம் என்பதாக கணினியைக் கருதலாம். ஓவியர் அழகான உருவங்களைக் கனவு கண்டு கணினியைப் பயன்படுத்தி அவற்றை உயிரோட்டமுள்ளனவாகக் கொண்டு வரலாம். காட்சி வரை பட முறைகளிலும், அச்சுப்பொறிகள், இலக்கமுறை வரைவு பொறிகள், படியெடுக்கும் சாதனங்கள் போன்றவற்றால் கணினிக் கலைப் பொருட்களை உருவாக்கலாம்.

computer artist : கணினி ஓவியர் : கலைப் படைப்புகளை உருவாக்கக் கணினிகளைப் பயன்படுத்துபவர்.

computer assisted diagnosis : கணினி உதவிடும் நோயறிமுறை : வேகமாகவும், துல்லியமாகவும் நோயறிவதற்கும், மருத்துவர் நேரத்தைச் மிச்சப்படுத்தவும் கணினியை ஒரு கருவியாகப் பயன்படுத்துதல். மருத்துவத் தரவுகளைப் படித்து வழக்கமாக உள்ளதிலிருந்து மாறுபாடுகளை மதிப்பீடு செய்து நோய் என்ன வென்று அறிந்து கொள்ள கணினியைப் பயன்படுத்துதல்.

Computer Assisted Instruction (CAI) : கணினி உதவிடும் கல்வி : கல்வி கற்கக் கணியைப் பயன்படுத்துதல் படிநிலை முறையில் தொகுக்கப்பட்ட பாடங்களை மாணவர்கள் கணினி வழியாகப் பயிலலாம். மாணவரின் தகுதி, தேவை, திறனுக்கேற்ப பாட வரிசை மற்றும் உள்ளடக்கம் அமையும்.

computer-assisted learning : கணினிவழி கற்றல் : கணினிகளையும் அவற்றின் பல்லூடகத் திறனையும் பாடங்களைக் கற்பிக்கப் பயன்படுத்திக் கொள்ளுதல்.

Computer Assisted Manufacturing (CAM) : கணினி உதவி உற்பத்தி.

Computer Augmented Learning (CAL) : கணினி மேம்படுத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=கணினி_களஞ்சிய_அகராதி-2/M&oldid=1085141" இலிருந்து மீள்விக்கப்பட்டது