கணினி களஞ்சிய அகராதி-2/O

விக்கிமூலம் இலிருந்து

condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக எழுத்துகள் பொருந்தும் வண்ணம் அகலத் தில் சுருக்கப்பட் அச்செழுத்து.

condensed print : சுருக்கப்பட்ட அச்சு : வழக்கமான எழுத்து களைவிட (செங்குத்தாகவோ அல்லது குறுக்குவாட்டிலோ) சிறியதாக அச்சிட்ட எழுத்துகள்.

condition : நிபந்தனை; சூழ் நிலை : 1. குறிப்பிட்ட சூழ் நிலைகள், 2. இருக்கும் நிலைமை.


conditional : நிபந்தனைக்குட்பட்டது : ஒரு நிபந்தனை மெய்யாக இருக்கும்போது அல்லது மெய்யாக இல்லாத போது ஒரு நடவடிக்கையை அல்லது ஒரு செயல்பாட்டை , மேற்கொள்ளுமாறு ஒரு நிரலில் அமைக்கப்படும் கட்டளை தொடர்பானது.

conditional branching : நிபந்தனைக் கிளை பிரிதல் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் வேறு வேறு நிரல்களை அல்லது செயல்கூறுகளை செயல்படுத்த வைக்கும் கட்டளை அமைப்பு.

conditional branch instruction நிபந்தனை சார் ஆணை.

conditional paging

conditional compilation நிபந்தனை மொழிமாற்றம் : ஒரு நிரலின் மூல வரைவினை சில நிபந்தனைகளின் அடிப்படை யில் பொறிமொழியாய் மொழி பெயர்க்கும் முறை. எடுத்துக் காட்டாக நிரலை மொழிமாற்றம் செய்யும் நேரத்தில் (DEBUG) குறியீடு வரையறுக்கப்பட்டிருந்தால் மட்டுமே நிரலர் குறிப்பிட்ட பகுதிகள் மொழி மாற்றப் பட வேண்டும் என்று கட்டளை அமைக்க முடியும்.

conditioinal expression : நிபந்தனைக் கோவை; நிபந்தனை தொடர்.

conditional jump : நிபந்தனை தாவல் குறிப்பிட்ட விதிமுறை கள் பொருந்தி வருமானால் 'தாண்டுதல் ஏற்படுத்தும் ஆணை.

conditional jump instruction நிபந்தனை தாவல் ஆணை.

conditional line : நிபந்தனைக் கோடு.

conditional operators, : நிபந்தனைச் செயற்குறிகள்

conditional paging நிபந்தனைப் பக்கமிடல் : ஒரு குறிப்பிட்ட பகுதி. ஒரு பக்கத்தின் மீதமுள்ள இடத் துடன் முழுமையாகப் பொருந்தாவிட்டால் அடுத்த பக்கத்துக்கு conditional parameters

conducting

மாற்றும் சொல்செயலி பண்புக்கூறு.

conditional parameters நிபந்தனை அளபுருக்கள்.


conditional replace : நிபந்தனை மாற்றீடு : ஒரு சொல் செயலாக்கப் பணி. ஒரு குறியிட்ட பொருளைக் காணும் ஒவ்வொரு தடவையும் அதை மாற்ற வேண்டுமா என்று அது கேட்கும்.

conditional statement : நிபந்தனைக் கூற்று : ஒரு நிரல் குறிப்பிட்ட நிபந்தனை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே கட்டளைகளை நிறைவேற்றுமாறு அமைக்கப்படும் கூற்று.


conditional sum : நிபந்தனைக் கூட்டல்.

conditional transfer : நிபந்தனை மாற்றல் : பின்பற்றப்படுகின்ற நிரல்களின் வரிசையிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்துகின்ற நிரல். இயக்கத்தின் விளைவைப் பொறுத்து, ஒரு பதிவு அல்லது பரிமாற்றம் அமைதல்.

condition code : நிபந்தனைக் குறிமுறை : முந்தைய பொறி ஆனையின் அடிப்படையில் ஒரு துண்மி தொகுதியில் ஒரு குறிப்பிட்ட துண்மி நிகழ் (on) அகல் (off) நிலைக்கு மாற்றப்படுவதுண்டு. பெரும்பாலும் தொகுப்பு மொழி (assembly language) அல்லது பொறி மொழிச் சூழலில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. நிபந்தனைக் குறிமுறைகள் பெரும்பாலும் வன்பொருள் தொடர்பானவை. ஆனால், மிச்ச வழிவு (carry overflow), சுழி விடை (zero result) அல்லது குறைநிலை (negative) விடைதரும் குறி முறைகளைக் கொண்டிருக்கும்.

condition entry : நிபந்தனை நுழைவு  : முடிவு பட்டியலின் நான்கு பிரிவுகளில் ஒன்று. நிபந்தனைக்குப்பின் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை யளிக்கிறது.

conditioning : நிபந்தனையிடல் : ஒரு குரல் ஒலிக்கற்றை அனுப்புக் கம்பியில் தகவல் அனுப்புதல் தன்மைகளை மேம்படச் செய்தல்.

condition portion : நிபந்தனைப் பகுதி.

condition stub : நிபந்தனைப் பொதிவு : முடிவு பட்டியலின் நான்கு பிரிவுகளில் ஒன்று. ஒரு செயல் தொடரினை முடிவு செய்ய கவனிக்கப்பட வேண்டிய அனைத்து காரணிகளையும் (மாற்றுகளையும்) விவரிக்கிறது.

conducting : மின் கடத்தல்.

21 conducting state

configure

conducting state : மின்கடத்தும் நிலை.

conductor : கடத்தி : மின் சக்தியை எடுத்துச் செல்லும் பொருள். insulator- க்கு எதிர்ச் சொல்.

CONDUIT : காண்டியூட் : கல்வி மென்பொருள் வெளியிடும் நிறுவனம். சோதனை பொட்டலத் தொகுதிகளையும் ஆய்ந்து, கல்வி அளிக்கும் கணினி நிரல்களையும், அது தொடர்பான அச்சிடப்பட்ட பொருள்களையும் விநியோகிக்கிறது.

conference : கலந்துரையாடல் : மாநாடு : தொலைபேசி மூலம் ஒரு கலந்துரையாடல் சாத்தியம். கணினி மூலமும் செயல்படுத்தலாம்.

conference tree : மாநாட்டு மரம் : தலைப்புகள் மற்றும் பயனாளர் குறிப்புகளுடன் அமைக்கப்பட்ட ஒரு வகையான செய்தி அறிக்கை. அதன் ஒவ்வொரு கிளையும் ஒரு பெரிய தலைப்பு. கிளை நீள்வதற்கேற்ப அதைப் பயன்படுத்துவோர் மேலும் விரிவாக்கலாம்.

confidence factor : நமபிக்கைக் காரணி.

confidentiality  : இரகசியத் தன்மை : தனிப்பட்ட அல்லது இரகசியத் தகவலை அனுமதியின்றி அனுகாமல் இருப்பதற்கான பாதுகாப்பின் தரம்.

configuration : தகவமைவு : ஒரு அமைப்பாக இயங்கும் வகையில் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி சேர்க்கப்பட்ட எந்திரங்கள் மற்றும் மென்பொருள் கூறுகள். தரவு செயலாக்க அமைப்பு அல்லது வன்பொருளில் உள்ள பொருள்களின் வடிவமைப்பு அல்லது வரைபடம்.

configuration file : (கணினி) தகவமைவுக் கோப்பு : பெரும்பாலும் கணினியை இயக்கவைக்கும்போது மட்டுமே பெரும்பாலும் படிக்கும் ஒரு சிறப்புக் கோப்பு. கணினியின் மூலாதாரங்களை, குறிப்பாக நினைவகத்தை எவ்வாறு ஒருங்கமைத்து பிரிப்பது என்பதை வரையறுப்பது.

configuration management : தகவமைவு மேலாண்மை : ஒரு உற்பத்திப் பொருளின் உற்பத்திக் காலம் முழுமையும் மற்றும் இயக்க வாழ்நாள் முழு மைக்குமாக கணக்கெடுத்து, கட்டுப்படுத்தி, திட்டமிட்டு வடிவமைத்தல்.

configure : தகவமை : செயல்படத் தயார் செய் : சில குறிப்பிட்ட வன்பொருளையோ conjuct

connectionless

அல்லது மென்பொருளையோ ஒன்று சேர்த்து ஒரு அமைப்பாக்குதல். அதன் ஒவ்வொரு பகுதிகளும் சரிசெய்யப்பட்டு மொத்தமாக ஒன்றாக இயங்கச் செய்தல். பிற அல்லது வன்பொருளோடு ஒத்திசைவாய் இயங்கும் வண்ணம் ஒரு மென்பொருள் அல்லது வன்பொருளைத் தயார் செய்தல்.

conjuct : இணை : ஒரு இணைப்பின் பல துணைச் சிக்கல்களில் அல்லது நிலைகளில் ஒன்று.

conjugation : புடைபெயர்ப்பு .

connect : இணைத்திடு.

connect charge : இணைப்புக் கட்டணம் : வணிகமுறைத் தரவு தொடர்பு அமைப்பு அல்லது சேவையுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒரு பயனாளர் செலுத்த வேண்டிய தொகை. சில சேவைகளுக்கு, ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு இவ்வளவு தொகை என இணைப்புக் கட்டணம் கணக்கிடப்படுகிறது. வேறு சில சேவைகளுக்கு, சேவையின் வகைக்கேற்ப அல்லது பெற்ற தகவலின் அளவுக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுவதுண்டு. வேறுசில சேவையாளர்கள், எவ்வளவு மணி நேரம் இணைப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற அடிப் படையில் கட்டணம் நிர்ணயிக் கின்றனர். சில வேளைகளில், இணைப்பின் தொலைவு, அலைக்கற்றை அகலம் அல்லது மேற்கூறியவற்றுள் ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளைக் கணக்கில் கொண்டும் இணைப்புக் கட்டணம் வரையறுக்கப்படுகின்றது.

connected graph : இணைந்த வரை படம் : ஒரு வரைபடத்தின் தனி முனையிலிருந்து தொடர்ச்சியான விளிம்புகள் வழியாக வேறு ஏதாவது ஒரு முனைக்கு நகர்த்தி உருவாக்கப்படும் வரைபடமுறை.

connected line : இணைத்தடம், தொடர்புடைய இணைப்பு.

connecting cable : இணைப்பு வடம் : இரண்டு கருவிகளுக்கிடையில் மின்துடிப்புகளை பரிமாற உதவும் குழாய்.

connection : இணைப்பு : ஒரு வடம் அடிக்கட்டகம் அல்லது ஒரு பகுதியுடன் இணைப்பு ஏற்படுத்தும் மின்சார அல்லது எந்திர இணைப்பு வழங்கும் பொருத்து சாதனம்.

connectionless : இணைப்பற்ற : கணினி வழி தகவல் தொடர்பில் ஒரு வகை. நேரடி இணைப்பு அல்லது முனை களுக்கிடையேயான முறையான இணைப்பு தேவைப்படாமல் ஒவ்வொரு பாக்கெட்டிலும், மூல மற்றும் சேரும் முகவரி களைச் சேர்த்தல். யு. டி. பி (UDP User Datagram Protocol) நெறி முறையில் தகவல் பரிமாற்றம் இவ்வாறுதான் நடைபெறுகிறது.

connection machine : இணைப்பு எந்திரம் திங்கிங் மெஷின் கார்ப்பரேசன் உருவாக்கிய இனைச் செயலாக்கக் கணினிகளின் குடும்பம் 4, 096 முதல் 65, 536 இடம் பெற்றிருந்தன. ஹைபர் கியூப் அல்லது பிற அமைப்புகளில் அவற்றை முடியும். சமிக்கை செயலாக்கம், பாவிப்பு நிகழ்வு , தரவு தளங்களில் விவரங்களைப் பெறல் போன்ற பயன்பாடுகளுக்கு இவை பயன்படுகின்றன. முன் முனையாக வேக்ஸ் (VAX) அல்லது பிற கணினிகள் தேவைபடுகின்றன.

connection matrix : இணைப்பு அணி.

connection oriented : இணைப்பு அடிப்படையிலான ;இணைப்பு சார்ந்த : ஓரு பிணையத்தில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிணையங்களிலுள்ள இரு கணுக் (node) கணினிகளுக்கிடையே தரவு பரிமாற்றம் நடைபெற ஒரு நேரடி இணைப்புத் தேவைப்படுகிற தகவல் தொடர்பு முறைக்கு இணைப்பு சார்ந்த தரவுத் தொடர்பு என்று பெயர்.

connection-oriented network service (CONS) : இணைப்புசார் பிணைய சேவை.

connection oriented protocol : இணைப்புசார் நெறிமுறை.

Connection : இணைப்புகள்.

connection wizard இணைப்பு வழிகாட்டி,

connectivity : இணைப்புநிலை : 1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைபேசி இனைப்பின் தரத்தையோ, இரைச்சல் இல்லாத் தன்மையையோ தரவு தொடர்பு சாதனங்களில் அலைக்கற்றை அளவையோ குறிக்கும். 2. பிற சாதனங்களுக்கிடையே தரவுவை அனுப்புவதற்குரிய ஒரு வன் பொருளின் திறன், அல்லது பிற மென்பொருள் தொகுப்புகளு டன் தொடர்பு கொள்வதற்குரிய

ஒரு மென் பொருளின் திறன். 3. பிணையத்திலுள்ள வேறொரு கணினியுடனோ, பிற வன் பொருள் சாதனத்துடனோ, பிற மென் பொருள் தொகுப்புடனோ தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்குரிய ஒரு வன்பொருள்/மென்பொருள் அல்லது ஒரு கணினி இவற்றின் திறனைக் குறிக்கிறது.

connectivity platform இணைப்பு நிலைப் பணித்தளம்.

connect node : இணைப்புக்கூணு : கணினி உதவிடும் வடி வமைப்பில் வரிகள் அல்லது சொற் பகுதிக்கான இணைப்பு முனை.

connector : இணைப்பி : வன்பொருள் அமைப்பில், இரண்டு வடங்களை இணைக்கவோ, ஒரு இணைப்பு வடத்தைச் சாதனத்துடன் இணைக்கவோ பயன்படுகிறது. (எ-டு : ஆர்எஸ் 23. 2. சி என்னும் இணைப்பி இணைக்கியின் இணைப்பு வடத்தை ஒரு கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது). பெரும்பாலான இணைப்பிகள் ஆண், பெண் என்கிற இரு வகைகளில் அடங்கிவிடுகின்றன. ஆண் இணைப்பிகள் (male connectors) ; ஒன்று அல்லது மேற்பட்ட பின்களைக் கொண்டிருக்கும். இவற்றை நுழை இணைப்பிகள் என அழைக்க லாம். பெண்வகை இணைப்பிகளில், ஆண் இணைப்பி களிலுள்ள பின்களை ஏற்பதற்கான துளைகள் இருக்கும். இவற்றை துளை இணைப்பிகள் என்று அழைக்கலாம்.

connector box : இணைப்புப் பெட்டி

connector, multiple : பன்முக இணைப்பி.

connector symbol : இணைப்புக் குறியீடு : சந்திப்புப் பகுதியைக் குறிப்பிடும் ஒரு வரைபடக் குறியீடு பாய்வு நிரல் படங்களில் சில அடையாளங்காட்டிகளைக் கொண்டதாக ஒரே பக்கத்தில் ஒடும் கோடுகளின் பிரிந்து போன பாணிகளை இனைக் கும் சிறிய வட்டம். ஒரு பாய்வு நிரல் படத்தின் பல்வேறு பக்கங் களின் பாய்வுகளை இணைக்கும் ஒரு ஐங்கோண வடிவம்.

connect time : இணைப்பு நேரம் : ஒரு அமைப்புடன் முனையத்தில் உள்ள ஒருவர் எவ்வளவு நேரம் இணைப்பு வைத்திருந்தார் என்பதைக் குறிப்பிடுவது.

connect using : இதன் மூலம் இணைத்திடு.

consecutive : தொடர்ச்சியான : எந்தவித பிற நிகழ்ச்சிகளின்

தடையுமின்றி தொடர்ச்சியாக இரண்டு ஒரே மாதிரியான நிகழ்வுகள் ஏற்படுவது.

consequent rules : வினைவுறு சட்டங்கள்.

consight . கன்சைட் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கிப் பயன்படுத்திய கணினி கட்டுப்பாட்டில் இயங்கும் எந்திர பார்வை அமைப்பு.

consistent check : நம்பகத் சரி பார்ப்பு குறிப்பிட்ட உள்ளிட்டுத் தரவு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளது என்ற நம்பகத்தன்மையைச் சோதித் தல். ஒரே மாதிரியான தரவு பொருள்கள் அவற்றின் மதிப்பு, வடிவம் ஆகியவற்றில் நம்பக மாக உள்ளதா என்று கட்டுப் படுத்தும் முறை.

console : பணியகம் : ஒரு அமைப்புடன் தகவல் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் கணினி அமைப்பின் முகப்புப் பகுதி.

console applications : பணியகப் பயன்பாடுகள்.

console display register : பணியகக் காட்சிப் பதிவகம்

console log : பணியகப் பதிவு

console operator : பணியக இயக்குநர்

console printer : பணியக அச்சுப் டொறி.

console switch : பணியக விசை

console typewriter : முனையத் தட்டச்சுப் பொறி கணினியுடன் நேர்முக இணைப்புள்ள தட்டச்சுப் பொறி. இது கணினிக்கும் கணினியை இயக்கு பவருக்கும் இடையில் தகவல் தொடர்பினை அனுமதிக்கிறது.

consolidate : ஒருங்கு திரட்டு.

consortium : பேரமைப்பு அவசர நிலை காலத்தில் பயன் படுத்துவதற்காக முழுமையான கணினி வசதியைத் தாங்கி நிற்கும் ஒரு கூட்டு முயற்சி.

constant மாறிலி, மாறா மதிப்பு : நிலைமதிப்பு : கணினி செயல் படும்போது மாறாமல் இருக் கும் மதிப்பு. Literal என்றும் அழைக்கப்படுகிறது Variable என்பதற்கு மாறானது.

Constant Angular Velocity (CAV) : மாறாக் கோண வேகம்.

Constant area : மாறாப் பரப்பு.

constant expression : மாறாத் தொடர் : ஒரு நிரலில், அனைத் தும் மாறிலிகளால் ஆன ஒரு கணக்கீட்டு தொடர். நிரல் நிறைவேற்றப்பட்டு முடியும்.

வரை அதன் ஒட்டுமொத்த மதிப்பு மாறாது.

Constant Linear Velocity (CLV) : மாறா நேர் வேகம்.

constants and variables : மாறிலிகளும் மாறிகளும்.

constellation : கொத்து திறன் தகவல் தொடர்பு அமைப்பில் சுமப்பி அலைகளின் (carrier wave) வெவ்வேறு நிலைகளை உருவகிக்கும் ஒரு தோரணி (pattern) அமைப்பு. ஒவ்வொரு நிலையும் ஒரு குறிப்பிட்ட துண்மி சேர்க்கைகளைக் கொண் டிருக்கும். ஒரு தகவல் தொடர்பு சமிக்கையில் ஏற்படும், தனித் துக் காட்டக்கூடிய ஒவ்வொரு மாற்றத்தையும் அடையாளம் காட்டும் நிலைகளின் எண்ணிக் கையை இத் திரள் அறியலாம். எனவே, ஒற்றை மாற்றத்தில் அதிகப்பட்சமாக குறி முறைப்படுத்த வேண்டிய துண்மிகளின் எண்ணிக்கையை இது காட்டும்.

constraint : நிபந்தனை ஒரு சிக்கலுக்கான தீர்வுகளை கட்டுப்படுத்தும் நிபந்தனை.

construct : கட்டு கட்டமை உருவாக்கு.

constructor : ஆக்கி பொருளாக்கி பொருள்நோக்கு திரலாக்கத்தில் ஒர் இனக்குழுவில் ஒரு பொருளை உருவாக்கும் போது, அப்பொருளின் பண்புக் கூறுகளை நிர்ணயிக்கும் ஒரு செயல்கூறு அல்லது வழிமுறை. இது தானாகவே இயக்கப்படும்.

consultant ; ஆலோசகர் வணிக தரவு செயலாக்கம், கல்வி, இராணுவ அமைப்பு அல்லது நலவாழ்வு போன்ற சில பயன் பாட்டு சூழ்நிலைகளில் கணினி களைப் பயன்படுத்துவதில் வல்லுநர். ஒரு குறிப்பிட்ட சிக்கலை பரிசீலித்து தீர்ப்பதற்கு உதவுகின்றவர்.

consumable : நுகர் பொருட்கள் : வன்பொருள் துணைக் கருவி கள். அச்சுப் பொறி நாடாக்கள், மை, காகிதம் போன்று தொடர்ச்சியாக வாங்க வேண்டிய பொருள்கள்.

consumer electronics : நுகர்வோர் மின்னணுவியல். cont . கான்ட் ; பேசிக் மொழி யில் ஒரு ஆணை. தற்காலிகமாக நின்று போன நிரலை தொடரப் பயன்படுத்தப்படுவது.

contact : தொடர்பு : மின்சாரம் செல்ல அனுமதிக்கும் இனைப்புக்காக தொடர்புள்ள உலோக சுருளைத் தொடும் பொத்தான் அல்லது சாக்கெட்டில் உள்ள உலோகச் சுருள். அரிப்பைத்

தடுப்பதற்காக விலை மதிப்புள்ள உலோகங்களின் மூலம் தொடர்பு கொள்ளப்படலாம்.

contact manager : தொடர்பு மேலாளர்.

container class : கொள்கலன் இனக்குழு வேறு இனக்குழுக் களின் பொருட்களைத் தனக் குள்ளே கொண்டுள்ள ஒர் இனக்குழு. பொருள் நோக்கு நிரலாக் கத்தில் பயன்படுத்தப்படுவது.

containing text : உரையடங்கிய

content உள்ளடக்கம் : ஒரு குறிப்பிட்ட சேமிப்பு இடத்தில் உள்ள முகவரியிடக்கூடிய அனைத்து தரவுகளையும் இது குறிப்பிடுகிறது.

content addressable memory உள்ளடக்க முகவரியிடும் நினை வகம் துணை சேமிப்பகத்தைப் போன்றது.

content adviser உள்ளடக்க ஆலோசகர்.

contention : பூசல் மோதல் தகவல் தொடர்பு மற்றும் கணினி கட்டமைப்புகளில் பயன் படுத்தப்படும் ஒரு சொல் இரண்டு சாதனங்கள் அனுப்பும் தகவல்களை ஒரே பாதையில் ஒரே நேரத்தில் பயணிக்கும் சூழ் நிலையை விளக்குவது. அமைப்பு விதிமுறைகளால் நெறிப்படுத்தப்படுவது. ஒரே நேரத்தில் இரண்டு செயலிகள் ஒரே சாதனைத்தை கட்டுபடுத்த முயலும்போது ஏற்படும் நிலையையும் குறிக்கும்.

contention resolution : மோதல் நிலைத் தீர்வு : இரண்டு சாதனங் களும் ஒன்றை அணுகும்போது எதற்கு இனைப்பு தரப்படு கிறது என்பதை த் தீர்க்கும் செயல்முறை.

contents directory : உள்ளடக்க பட்டியல் ஒரு உட்புற சேமிப்பகத்தில் குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் வழக்கச் செயலைக் குறிப்பிடும் தொடர்வரிசைகள்.

coritext : சூழல் வல்லுநர் முறைமையின் (Expert System) உரிமைப்பகுதி பகுக்கக் கூடிய பல்வேறு சிக்கல் பகுதிகள்.

context diagram : சூழ்நிலை வரைபடம் : மிக உயர்நிலை பாய்வு நிரல்படம். ஒரு கணினி அமைப்பின் எல்லைகளை வரையறை செய்கிறது. தனி செயல்முறையையும், தரவு உள்ளீடுகள், வெளியீடுகள் போன்றவற்றையும் காட்டுகிறது.

context sensitive : சூழ்நிலை உணர்வு குறிப்பிட்ட ஒரு நிரலை இயக்குவது. ஒரு விசை யைத் தொடுவது அல்லது கட்டியைச் சொடுக்குவது போன்றவற்றால் இதனைச் செய்ய முடியும்.

context sensitive help : சூழ் நிலை உணர் உதவி உதவி கேட்கும் நேரத்தில் நிரலின் நிலை அல்லது முறை என்ன என்பது உணர்வது. அது பற்றிய குறிப்பிட்ட தரவு வழங்கும் உதவி முறை.

context sensitive help key சூழ்நிலை உணர் உதவு விசை : பல விசைப் பலகைகளில் உள்ள ஒரு முக்கிய விசை, விசைப்பலகையில் உள்ள இந்த விசையை அழுத்தும் போது குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க உதவும் உதவி காட்சித் திரையில் தானாகத் தோன்றும். பெரும் பாலும் F1 ஆக இருக்கும்.

context sensitive language : சூழ் நிலை உணர் மொழி,

context switching : சூழ்நிலை மாற்றம் : பல்பணி இயக்க முறைமையில் ஒருவகை மையச் செயலியின் கவனத்தை ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்குத் திருப்பும் செயல் முறை. ஒவ்வொரு பணிக்கும் நேரத்தைக் கூடுதலாக்கி மாற்றி மாற்றி ஒதுக்கீடு செய்யும் முறை யிலிருந்து மாறுபட்டது.

contextual search : சூழ்நிலைத் தேடல் அவற்றில் உள்ள சொல் பகுதியின் அடிப்படையில் பதி வேடுகள் அல்லது ஆவணங் களைத் தேடுவது விசைப்புலம் அல்லது கோப்பின் பெயர்மீது தேடுவதற்கு மாறானது.

contiguous அடுத்தடுத்து ஒட்டியுள்ள பொது எல்லைக் கோட்டைக் கொண்ட அடுத் தடுத்த பகுதிகள். (எ. டு.) ஒரு வட்டில் அடுத்தடுத்த தரவு குறிப்புகள் சேமிக்கப்பட்டுள்ள வட்டுப் பிரிவுகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் முறை.

contiguous data structure

அடுத்தடுத்துள்ள தரவுக் கட்டமைப்பு.

contingency pian : எதிர்பாரா நிலைத் திட்டம் அவசர நிலை கள் அல்லது சேதங்கள் ஏற்படும் பொழுது கணினி தரவு அமைப் பினை மீட்டுக் கொண்டு வருவதற்கான திட்டம்.

continuation card : தொடர்ச்சி அட்டை முந்தைய துளை யிட்ப அட்டையில் தொடங்கப் பட்ட தகவலைக்கொண்ட துளையிட்ட அட்டை.

continue தொடர்க . முன்பே வரையறுக்கப்பட்ட வரையறைகளுடன் பொருந்தும் பதிவேடு  களைத் தேடுவதைத் தொடர் வதற்கான டிபேஸின் கட்டளை.

continuing path control : தொடர்பாதைக் கட்டுப்பாடு : எந்திரன் இயங்கு நுட்பத்தில் பயன்படுத்தப்படும் சொல். தேவையான வளைவுப் பாதை வழியாக எந்திரனை நகர்த்திச் செல்வது.

continuity : தொடர்நிலை

continuity check : தொடர்ச்சி சரிபார்ப்பு : தொடக்கம் முதல் இறுதிவரை பாதை சமிக்கைகளை அனுப்புவதற்கு சரியாக இருக்கிறது என்பதை முடிவு சொல்ல ஒரு கம்பி, வழித்தடம் அல்லது மின்சுற்று ஒன்றை சோதனை செய்தல்.

continuous : அடுத்தது அல்லது அடுத்ததாக இருப்பது.

continuous analysis : தொடர் பகுப்பாய்வு.

continuous carrier : தொடர் சுமப்பி : தகவல் தொடர்புகளில் கம்பியில் தகவல்கள் அனுப்பப் படாவிட்டாலும் செல்கின்ற சுமப்பி அலைவரிசை.

continuous data structure அண்மை தரவுக் கட்டமைப்பு.

continuous-feed paper தொடர்ந்து வழங்கும் தாள் பக்கங்களுக்கிடையில் துளை யிடப்பட்டு ஒவ்வொரு பக்கத்தி லும் கிழிக்கக்கூடிய வகையில் அரை அங்குல துளைகள் உள்ள காகிதம்.

continuous forms : தொடர் படிவங்கள் : அச்சுப்பொறிகளில் தானாகவே அனுப்புவதற்கேற்ப வெளிப்புற விளிம்புகளில் சிறிய துளைகள் உள்ள விசிறி மடிப்புத் தாள் அல்லது சுருள் தாள். வெற்றுத்தாளாக இருக்க லாம். அல்லது சோதனைகள், விலைப் பட்டியல்கள், வரி படிவங்கள் போன்ற முன் பாகவே அச்சிடப்பட்ட படிவங் களாக இருக்கலாம்.

cortinuous form paper : தொடர் படிவத் தாள் : தொடர் எழுது


தொடர்படிவ காகிதம் பொருள் என்றும் அழைக்கப்படுகிறது. அச்சுப் பொறியில் டிராக்டர் மூலம் அளிக்கப்படுகிற துளையிடப்பட்ட நாற்றுக் கணக்கான தாள்களைக் கொண்டது. முன்னதாகவே துளையிடப்பட்டு அச்சடிப்புக்குப்பின்னர் தனித்தனியாகப் பிரிக்கக் கூடிய தாள்கள், ஒரு பிரபல அச்சு ஊடகமாகிய இதை ஒரு முறை ஒன்று சேர்த்தால் காகிதத் தொகுதி முழுவதையும் கணினி அச்சுப்பொறியில் ஏற்றமுடியும். தனியாக எடுக்கக்கூடிய (முன் துளையிடப்பட்ட) ஒரு பகுதியில் ஸ்ப்ராக்கெட் துளையைப் பயன்படுத்தித் தொடர்தாள் அனுப்பப்படும்.
continuous graphics : ஒட்டிக்கொள்ளும் வரைகலை : ஒன்றை யொன்று தொட்டுக்கொள்ளும் சில எழுத்துகள் கொண்ட வரைபடங்கள்
continuous processing : தொடர் செயலாக்கம் : ஒரு அமைப்பில் அவை நிகழ்கின்ற வரிசையிலோ அல்லது நிகழ்ந்த உடனேயோ உள்ளீடு செய்யப்படும் நடவடிக்கைகள்.

continuous scrolling : தொடர்நகர்த்தல் : செய்திகளை வரிவரி யாக சாளரத்தில் மூலம் முன்னாகவோ பின்னாகவோ நகர்த்தல்.

continuous speech recognition : தொடர்பேச்சு அறிதல் : பேச்சு ஏற்பிக்கு ஒரு அணுகு முறை. சாதாரண இடைவெளிகளில் சராசரியான உரையாடல்களில் நடைபெறும் பேச்சை இது புரிந்து கொள்ளும்.
continuous stationary : தொடர்தாள்.
continuous tone : தொடர்நீழல் : ஒரு அச்சுப்பொறியிலிருந்து வெளிவரும் புள்ளிகள். அச்சிடலுக்குத் திரை செய்யப்படாத ஒளிப்படம்.
continuous tone image : தொடர்கூட்டுத் தோற்றம் : பல்வகை யான வண்ணக் கூட்டுகள் அல்லது சாம்பல்நிறக் கூட்டுகளைக் கொண்டதாக உள்ள தனித்தனிப் பகுதிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் உருவாக்கப்படும் வண்ணத் தோற்றம் அல்லது கருப்பு வெள்ளைத் தோற்றம்.
continuous tone printer : தொடர்மை அச்சுப் பொறி : ஒருவகை அச்சுப்பொறி, உருவப்படங் களை அச்சிடும்போது சாம்பல் நிற அல்லது வண்ணப்படி மங்களைத் தொடர்மை பூச்சு முறையில் மிக இயல்பான வகையில் அச்சிடும்.
contour analysis : படவேறுபாட்டு பகுப்பாய்வு : ஒ. சி. ஆர்

"https://ta.wikisource.org/w/index.php?title=கணினி_களஞ்சிய_அகராதி-2/O&oldid=1085148" இலிருந்து மீள்விக்கப்பட்டது