உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்லிமலைக் குள்ளன்/வணக்கம்

விக்கிமூலம் இலிருந்து

வணக்கம்

ரும்பு இனிக்கும்; கற்கண்டு சுவைக்கும் என்று யாரேனும் சொன்னால் அதில் புதுமை ஒன்றுமில்லை, அல்லவா? அதே போல், குழந்தை எழுத்தாளர் திரு. பெ. தூரன் அவர்களின் நாவலின் சிறப்பைப்பற்றிச் சொன்னால் அது ஒன்றும் புதிய செய்தி அல்லவே!

குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற இனிய நடையில் எளிமையான சொற்களில், படிக்கப் படிக்கத் தெவிட்டாத வண்ணம், சுவை குன்றாமல் கதை சொல்வதில் வல்லவரான திரு. தூரன் அவர்கள், தமிழ்நாட்டுக் குழந்தைச் செல்வங்களுக்கு ஆக்கி அளித்திருக்கும் அருமையான நாவல் “கொல்லிமலைக் குள்ளன்.”

இதனைக் “குழந்தைகள் தின வெளியீடாக”க் கொண்டு வருவதில் நாங்கள் மிகுந்த பெருமிதம் அடைகிறோம். வழக்கம் போல் எங்கள் வெளியீடுகளை வாங்கி ஆதரவு நல்கும் தமிழ்ப்பெருமக்கள், இந்நூலையும் தங்கள் குழந்தைகட்கு வாங்கிக் கொடுத்து. அவர்கள் வல்லவர்களாக, நல்லவர்களாக வளர உதவ வேண்டுகிறோம்.

பழனியப்பா பிரதர்ஸ்