பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


படைந்தது அதனால் தான் அவர்கள் சிறப்பு பின்னிட்டு குறைவுபட்டது. அவர்கள் பறையடிக்கும் தொழிலை விட வில்லை யுத்தகாலங்களில் இல்லாவிட்டாலும் மற்ற விவாக மரணகாலங்களில் அவர்கள் பறையடிக்க வேண்டியதாய் நேரி ட்டது. அப்படி அவர்கள் அடிக்கும் பறைக்கு தோல் தே வையானது தோலை பிரித்து எடுப்பதற்கும் அந்த மாமி சததை சாப்பிடுவதற்கும் அதிக வித்தியாச மில்லாமையால் அவர்கள் மாட்டு மாமிசத்தையும் சாப்பிட்டுக்கொண்டே யிருந்துவிட்டார்கள். அதனால் தான் இவர்கள் தாழ்ந்த ஸ்தி திகள் வந்துவிட்டார்கள் என்பது ஒரு கொள்கை. + "பறையர் , பௌத்தர் என்பது. பௌத்தமதம அசோக அரசர் ஆண்டகாலத்தில் இந்தி பாவின் எல்லா பாகங்களிலும் இதரதேசங்களிலும் பரவி யது. சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய காவியங்களி லும் பெரிய புராணத்திலும் இன்னும் அநேக நூல்களிலும் தென்னிந்தியாவில் பௌத்தமதம் பரவியிருந்தது என்பதாக சொல்லப்படுகிறது. பௌத்தமதத்தையும் சமணமதத்தை யும் துரத்திவிட சைவமும் வைஷ்ணவ மதமும் செய்த பிர யத்தனங்கள் தமிழ் நூல்களில் விசாலமாய் காணலாம். சென்னையில் கீர்த்திபெற்று யிருந்தவரும் தமிழ் நூல்களை நன்று ஆராய்சசி செய்திருந்தவருமான ஸ்ரீமான் அயோத்தி தாஸ் பண்டிதர் என்பவர் பறையர் என்போர் மின்சாரத்தை தை ஏற்றுக்கொண்டதினால் இவ்வித தாழ்மைநிலமைக்கு கொண்டுவரப்பட்டார்கள் என்று அநேக நூலாதரவுகளுடன் ஞ்சுவு செய்கின்றார். இதுவிஷயம் அவர் எழுதியிருக்கும் நூல் களெல்லாவற்றையும் வாசிக்க தகுதி உடையன. அவை களை அனுசரித்து “பறையர்" என்போர் அநேகர் பௌத்த மதத்தை இச்சென்னை ராஜதானியில் தழுவியிருக்கின்றனர். ஐயன் திசாங்கு என்கிற சீனதேசத்து பிரயாணி சுமார்- கிபி.