உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



' பெண்டாட்டி ஆத்தாள் பெரிய ஆத்தாள் ' 15 தத்தில் அதிக பயந்தவராயிருந்தாலும், வெளிக்குத் தான் மனை விசொல் கேட்பதில்லை யென்று அடிக்கடி பெருமை பேசிக்கொள்வார். ஆனாலும் அந்த அம்மாள் படுத்துகிற பாட்டிற்கு அவர் சாகமாட்டாமல் அவஸ் தைப்படுகிறார் என்ற சங்கதி சிறுகுள முழுவதும் தெரி -யும். அவருக்கு ரோஷம் பிறக்க அவரை வைய வேண்டுமானால், 'பெண்டாட்டி ஆத்தாள் பெரிய ஆத் தாள்' என்று சொல்லிவிட்டால் போதும். அவர் முகம் சிவந்து கண்களில் இரத்தம் சுரந்து விடும். பொன்னம்மாள் வெகு அலங்காரப் பிரியை. அவள் நடக்கும்போதே உலகம் முழுவதும் தன்னழ கையே இமை கொட்டாமல் சித்திரம்போல் பார்த்து பிரமித்து நிற்பதாக அவள் ஞாபகம். போய்க்கொண் டிருக்கும் போதே நாம் அன்ன நடை நடக்கிறோம் - என்று சில சமயங்களில் திடீரென்று அவளுக்கு எண் ணம் உண்டாய்விடும். உடனே அவளுக்கு கர்வமும் லஜ்ஜையும் ஏககாலத்தில் உண்டாகி, கால் தீப்பொறி யின் மேல் மிதித்தாற்போல் கீழே பாவமால், விகார நடையுடன் அவள் ஏதாவது சாக்குவைத்து, நின்று நின்றாவது அல்லது விரைந்தாவது வீட்டுக்குப் போவ -தைப் பலர் பார்த்திருக்கிறார்கள். இந்தப் பரதேவதை தண்ணீரில் இறங்கினவுட -னே மேலே சொன்னபடி அங்கே பிரசங்கம் செய்து - கொண்டிருந்த ஸ்திரீ அவளைப்பார்த்து: 'பொன்னம் மாள், ஏது இத்தனை நாழிகை? கல்யாண அமர்க்கள மோ? அதாரடி உன் மைத்துனனகத்துத் திண்ணையில் ஜோடியாக இரண்டு கிழவர்கள் உட்கார்ந்திருக்கிறார் களே! அவர்கள் யார்?' என்று கேட்டாள். பொன்னம்மாள் வெகு சலிப்புடன், 'யாரோ! கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்? உலகத் தில் அவரவர்கள் பாட்டை அவரவர் கவனத்தால்