பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



16 கமலாம்பாள் சரித்திரம் போதாதா!' என்று வெகு இலக்கணமாய் மறுமொழி சொன்னாள். பொன்னம்மாள் யதார்த்தத்தில் கமலாம்பாள் படித்ததில் பாதிகூடப் படித்திராவிட்டாலும் தன்னி டத்துள்ள சொற்ப சரக்குகளை வைத்துக்கொண்டு எல்லாம் படித்து விட்டதாக பாவனை செய்வாள். கம லாம்பாள் அதிக அழகாய்பேசுகிறாள் என்பதைப்பற்றி அவளுக்கு அடங்காப் பொறாமை. "கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானுமதுவாகப் பாவித்துத் தானுந் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற்போல" கமலாம்பாளைப் பார்த்துத் தானும் நிரம்ப இலக்கண மாகப் பேச ஆரம்பிப்பாள். பிராமணர்கள் தாங்கள் பேசும் பாஷையில் சமஸ்கிருத பதங்களை இடை இடையே, மரத்தில் இலைமத்தியில் புஷ்பங்கள் சேர்ந் தாற்போல், சேர்த்துப் பேசுவதைக்கண்ட ஓர் ஆட் டிடையன், தானும் அவர்களைப்போல் பேச எண்ணி வீட்டுக்குப்போய் தாயாரை அழைத்து, 'அம்மா, ஆஷ் டுக்குஷ்டிவந்து வேஷ்டியைத்திண்கிறது ஓஷ்டு ஓஷ்டு' என்று சொன்னதாக ஒரு கதை யுண்டு. அதுபோல் பொன்னம்மாள் பேசுகிற இலக்கணத்தமிழ் சிற்சில' சமயங்களில் அதிக இலக்கணமாய்விடும். ஆனாலும் கற்றறிவில்லாத அவ்வூர்ப்பெண்டிர்க்கு கமலாம்பா ளைக் காட்டிலும் அவள் அதிகமாகப் படித்திருப்பதாக எண்ண ம். அவள் மறுமொழியைக்கேட்ட சுப்பு என்ற ஸ்திரீ 'உனக்குத் தெரியாதா? சொல்லாமல் போனால் வைத் துக்கொள்ளேன். அடே இழவே தன்னால் அகத்துக் குப்போனால் தெரிகிறது!' என்று கோபத்துடன் சொன்னாள் . பொன்னம்மாள் : 'என்னங்காணும் அவர்கள் கல் யாணத்துக்காகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், நீர் என்ன இழவு என்கிறீரே.'