பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பொன்னம்மாளின் பொறாமை சுப்பு : 'நான் இழவு என்றா சொன்னேன்? நன்றா யிருக்கிறது, அம்மா! கலகம்பண்ணி விடுவாய்போ லிருக்கிறதே !'. பொன்னம்மாள்: 'என்ன தங்களுக்கு இவ்வளவு கோபம். நான் பொழுதுபோக்காக பரிகாசமாகச் சொன்னேன், அவர்கள் வீட்டில் கலியாணம் என்று உமக்கு ஜோஷ்யம் (ஜோதிஷம்) தெரியுமா? அவர்கள் ஏதோ மதுரைப் பட்டணமாம். மைத்துனர் பெண்ணை * நிச்சியஸ்ராத்தம் பண்ண வந்திருக்கிறார்களாம்' என்றாள். சுப்புவுக்கு அவர்கள் இன்னார் என்று தெரியும். இருந்தாலும் பொன்னம்மாளைத் தாண்டினால் கமலாம் பாளுக்கும் அவளுக்கும் கலகம் உண்டுபண்ணி வேடிக் கை பார்க்கலாம் என்று எண்ணிக்கொண்டு மறுபடி யும் அவள் 'ஓஹோ ! உங்கள் புக்ககத்து மாமா வரப் போகிறார் என்றார்களே, அவர் வந்திருக்கிறாரோ? நான் செவ்வையாய்ப் பார்க்கவில்லை. நான் என்ன! அவர்கள் வீட்டிற்கெல்லாம் போகிறேனா வருகிறேனா?' என, பொன்னம்மாள் அவர்கள் தான் போலிருக்கிறது' என்று நீட்டிச்சொல்லி மெதுவாய் சூள் கொட்டிவிட்டு மௌனமாயிருந்தாள். சுப்பு: (இதுதான் சமயம் என்று கண்டு) என்ன! "போலிருக்கிறது என்கிறாய், உன் புக்கத்து மாமா உன் அகத்துக்கு வரவில்லையோ? உனக்கென்ன அவ ரைத் தெரியாதா? நிரம்ப நல்லவர் பிராமணன்.' பொன்னம்மாள் : 'எங்களகத்துக்கு வரவேண் டும் என்று எந்த சாஸ்திரம் முறையிடுகிறது? உலகத்

  • நிச்சயதார்த்தம்' என்பது சரியான வார்த்தை. பொன் னம்மாள் சம்ஸ்கிருதம் பேசுகிற பெருமையில் வார்த்தை களின் வித்தியாசம் தெரியாமல் ஒன்றை ஒன்றாக மாற்றி யிருக்கலாம், அல்லது விஷமமாக 'ஸ்ராத்தம்' என்று அமங் களமாய்ச் சொல்லியிருக்கலாம்.

-