அந்தப்புற ரகசியங்களும் நிச்சயதார்த்தமும் சுப்பு போனபிற்பாடு கமலாம்பாள் 'ஒரு பாவத் தையுமறியாத நம்மை இவள் ஏன் இந்தப்பாடு படுத்து கிறாள். ஜாதகம் பொருந்தாவிட்டால் அதுவும் நம்மு டைய குற்றமா? அடடா இதென்ன வசவு!' என்று பல முறை நினைத்து நினைத்து வருத்தப்பட்டாள். இவ் வாறு உலகத்தில் இவ்வளவு கெட்டவர்களாக மனிதர் இருக்கவேண்டுமா என்று வருத்தப்பட்டுக்கொண்டே கலியாண நிமித்தமாக வந்த கிருஷ்ணய்யர், ராமசுவாமி சாஸ்திரிகள் ஆகிய இருவருக்கும் தக்கபடி உ.பசார முறைகளில் யாதொரு குறைவுமில்லாமல் 'பாயசம், 'வடை,' 'போளி,' 'அப்பளம்' முதலிய சம்பிரமங்க ளுடன் விருந்து செய்தாள். போஜனமானவுடன் ஒரு தூக்கம் தூங்கி எழுந்தபிறகு கடைக்குப்போய் சாமான்கள் வாங்கிக்கொண்டு இன்று சாயந்திரமே நிச்சயதார்த்தம் செய்துவிடுவோம் என்று சொல்லிக் கொண்டு கிழவர்கள் இருவரும் திண்ணைக்கு ஒருவ ராய் நித்திரை செய்யத் தொடங்கினார்கள். முத்து ஸ்வாமி அய்யரோ உள்ளே கூடத்தில் கமலாம்பாள் சாப்பிடும் இடத்திற்கு எதிரே ஜமக்காளம் விரித்து ஒரு தூணில் திண்டுபோட்டு சாய்ந்துகொண்டு தனது அன்புள்ள மனைவியை நோக்கி உல்லாசமாய் 'எங்கள் மாமாதானே வந்திருக்கிறார். உங்கள் மாமா வந்திருக் கிறாரோ? என்ன செய்வாய்!' என்று சொல்ல, அம் மாதர் சிரோமணியும் 'கண் சிமிட்டைப் பார் எங்கள் மாமா அவர்கள் ஊரிலிருக்கிறாரே? உங்கள் மாமா