நிச்சயதார்த்த ஏற்பாடு 31 கமலாம்பாள் : 'உங்களை நம்பலாமா? இப்படியுந் தான் சொல்லுவாளா ஒருத்தி? சிவ சிவா!' சுப்பு: 'மயுமானுக்குப் பொண்ணைக் குடுக்கல்யாம் கொண்டே. ஜாதகம் பொயுந்தாட்டா அதுக்கு யாய் என்ன பண்ணுவா? நடு ஆத்தங்கயையிலே ' பப்ளிக் ' ஆக குடியானச்சிகள் கூட இப்படிவசுக்கொள்ள மாட் டாளே ; முத்ச்சாமி கிட்ட சொல்லி கண்டிக்கச் சொல்லு. இல்லியா நெடுக இப்படித்தான் பாத் துக்கோ!' என்று சொல்லிவிட்டு கமலாம்பாள் யாதும் பதில் சொல்லு முன்னமே திடீரென்று வீட்டுற்குப் புறப்பட்டுவிட்டாள். சுப்பம்மாளுடைய பிரசங்கத்தை நான் அப்படி யப்படியே சொல்லவில்லை. அவளுடைய ராகமும், குர லும், பேசுகிற கம்பீரமும் எனக்கு வரவே வராது. மேலும் இடையிடையே முத்துமாலையில் வயிரக்கற் கள் பதித்தாற்போலே அனேக பழமொழிகள் அவள் பிரயோகித்தாள். அவைகளைச் சற்று நாணமுள்ள புருஷர்கள் உச்சரிக்கக்கூடப் பயப்படுவார்கள். அவ ற்றை இங்கே உள்ளபடி எழுதினால் 'அசுண நன்மாச் செவி பறையெடுத்தபோதிலும்' என்றபடி கானத்தில் பிரியமுள்ள அசுணம் என்ற பட்சிக்குத் தம்பட்ட ஓசை எப்படியோ அப்படி இலக்கண இலக்கிய ஆராய்ச்சியுள்ள ஸ்திரீ புருஷர்களுக்கு அப்பழமொழி களும் பிராசங்களும் அருவருப்பை யுண்டாக்குமாத லால், இங்கே அவற்றை எழுதாது விட்டேன்.