உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



62 கமலாம்பாள் சரித்திரம் அன்று இவர்கள் இருவரும் தனிமையாய்ப் பேசிக் கொண்டிருந்தது யாதெனில் : ஸ்ரீநிவாசன். - ' இப்படித்தானே உட்காரலாம்; = இந்த ஒரு மணியும் விருதா காலட்சேபம். இவ்வளவு பெரிய பள்ளிக்கூடத்திற்கு ஒரு நல்ல தமிழ்வாத்தியார் அகப்படவில்லையா?' - சுப்பராயன். -' ராமசுவாமி அவர்கள் பள்ளிக் கூடத்திலிருக்கிறாரே ராகவய்யர் அவர் நல்ல வித் வானாம்.' ஸ்ரீநிவாசன். - ' ஆமாம், எல்லாம் ஒரு கணக்குத் தான். இவருக்காவது பாட்டுத் தெரியும், அவருக்கு அதுகூடத் தெரியாது. அதுபோகட்டும். இன்றைக் காலமே சங்கதி கேட்டாயா? நான் எண்ணெய் தேய்த் துக்கொள்ள வேண்டுமென்று எட்டு மணிக்கே போனேனல்லவோ? அப்பொழுது அகத்திலே ஏதோ புதுக்குரல் கேட்டது, யார் என்று பார்த்தேன் : நமது சங்கரனும் அவன் அம்மாளும் வந்தார்கள். சுப்பராயன். - ' சங்கரனா?' ஸ்ரீநிவாசன்.--' ஆமடா! தெரியாதா, மேலைக் கோபுரத்திற் கடுத்தாற்போல இருக்கிறது அவன் அகம்.' சுப்பராயன்-' ஓஹோ ! நம்முடைய 'ஷோக்' சங்கரனா, பலே! பாட்டுப் பாடுவானே அவன் தானே!' ஸ்ரீநிவாசன். - ' ஷோக் சங்கரன் தான், அப்படிச் சொன்னால் தானே உனக்குத் தெரியும். அவனும் அவ னம்மாளும் சிறுகுளத்துக்குப் போயிருந்தார்களாம்.' சுப்பராயன். - ' உனது மாமனாரூருக்கோ ?'