உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



68. கமலாம்பாள் சரித்திரம் வரமாட்டேன் என்று ஓடுகிறது; இந்த நிலவுபோதும் அதற்கு; தாயார்கூட வேண்டாம்' என்று சந்தோஷத் தால் தத்தளித்துச் சொன்னான். சுப்பராயன் நிலவுக்கு சமானமா' என்றான். ஸ்ரீநிவாஸன் 'அதோ! பார், பட்சி கள் கத்துகிறது. இந்தவேளைக்குக் காக்கை கத்தினால் கூட பேஷாயிருக்கிறது; பைத்தியக்கார காக்கைகளா! சண்டை மட்டும் செய்யாதேயுங்கள். வேறு என்ன செய்தாலும் இந்த நிலவிற்கு இன்பமாயிருக்கும். அட்டா அந்தத்தெப்பக்குளத்தைப்பார். பாசிபடர்ந்த அந்த பைத்தியக்காரத் தெப்பக்குளத்துக்குக்கூட என்ன மகிமை வந்திருக்கிறது பார். சந்திரன் அதிலே தவழ்கிறது, கொஞ்சுகிறது, விளையாடுகிறது; இந்த ராத்திரிக்குக் குதிக்கவேண்டுமென்கிறேன், நீ ஆடு, நான் பாடுகிறேன்; இல்லாவிடில் நான் ஆடுகிறேன், நீ பாடு. 'இரவின் ஜோதியே, இந்துவின் ஒளியே" பாடு' என்று இப்படி ஸ்ரீநிவாசன் ஆனந்தத்தாண்ட வம் செய்தான். சுப்பராயன் 'நிலவு நன்றாயிருக் கிற' தென்று சொல்லிவிட்டு 'உன் கல்யாணத்தின் போதும் நல்ல நிலா, கிராமப் பிரதக்ஷணத்தன்றும் விடிய விடிய நிலவாயிருக்கும் ; நீ பல்லக்கின் மேல் உல் லாசமாய் ஏறிக்கொண்டு போகும்போது என் நினைவு கூட உனக்கிராது' என்று சொல்ல, ஸ்ரீநிவாசன் 'உன் னினைவில்லாமலா? உன்னைவிட்டு எனக்குச் சந்தோஷ முமா? உன்னைவிட எனக்கு இவ்வுலகத்தில் மன தொத்த சினேகிதர் யார்?' என்று கண்ணில் நீர் ராயன் 'நான் பரிகாசமாய்ச் சொன்னே 'னென்று சொல்ல, ஸ்ரீநிவாசன் 'இன்னொரு சங்கதி கேட்டாயா? சிறுகுளத்துக்கு நெல்லிக்குப்பத்துக் காமாக்ஷி அம்மாள் போயிருந்தாளாம். எனக்கு நிச்சயம் பண்ணியிருக்கிற பெண்ணை அவள் சிற்றம்மை தன் தமையன் பிள்ளைக் குக் கொடுக்கவேண்டுமென்று கட்டாயம் பண்ணினார் களாம். அந்தப்பெண் என்னைத்தவிர வேறொருவரை