154 கமலாம்பாள் சரித்திரம் போனதை எவன் கண்டுகிட்டிருந்தான். அப்படித் தான் வக்கீலய்யரும் சொன்னாரு. சுப்பிர.--' அதிருக்கட்டும் அத்தனை பெரிய வைக் கோற்படப்பை அப்படித்தானா கொளுத்திவிடுகிறது. சுப்பா.- ' என்ன சாமி, படப்பைக் கொளுத்தி னது பேயாண்டித் தேவனா, அந்த ஜமீன் தார்ப்பயல் ஆட்களோ? பேயாண்டித் தேவன் தீக் கொளுத்து வான் இண்டு நினைக்கிறீங்க!" சுப்பிர. - ' அப்படியா, ஆ, அடா பாவிப்பயல் களா ! இருக்கட்டும் சொல்லுகிறேன். நாமெல்லாம் சேர்ந்து அந்த ஜமீன் தார்ப் பயலைப் பொங்கலிட்டு விடவேண்டும்.' சுப்பா. - ' நான் சொன்னபடி நீங்கள் சாச்சி சொல்லுங்க அப்படியே செஞ்சுடுவோம்.' சுப்பிர.--' ஆம் அப்பன், நீ சொல்லுகிறதும் ஒரு நல்ல யோசனை தான் அப்பன். அப்படியே செய்து போடுவோம் போ, நீ ஒன்றுக்கும் யோசிக்காதே, சுவாமி ஒருவர் இருக்கிறார் - ஏன் அப்பன் நீ சாப்பிட் டையோ, கொஞ்சம் நம்ம வீட்டிலே சாப்பிடேன். அடியே யாரடீயங்கே! சுப்பா.-' இல்லே சாமி நான் சாப்பிட்டுக்கிட் டேன். சாப்பிட்டுத்தான் வந்தேன். இல்லாட்டி இந்நேரம் என்ன.' சுப்பிர.-' இல்லை யப்பன் கொஞ்சம் ஒரு பிடி சாப்பிடு, குழம்பு கிழம்பு இருக்குது. கொஞ்சம் சாப்பிட்டுப்போ. யாரடீ இலையைப் போடவில்லை இன்னும்!' வைத்தியநாதனும் சுப்பாத் தேவனை உபசரிப் பதில் கூடச் சேர்ந்துகொண்டான். இவர்கள் இவ்