பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கள்ளப்பயல் பொய் சொல்லமாட்டான் 153 சங்கதியை சும்மா சொல்லேன் ; உன் பேச்சை நான் தட்டியா விடுவேன். சும்மா சொல்லப்பன்.' சுப்பா.-' சொல்றேன் கேளுங்க சாமி. விசாரணை நாளை நாயித்துக் கெட்டா நாளுக்கடுத்த திங்கள் கிழமை வரதாம். வக்கீல் அய்யுரு சொல்றாரு . ஒங்க சாச்சிதான் அதிலே முக்கியமாம். நீங்கள் சாச்சி சொல்லாமப்போனால் கேசு ஒன்னுமில்லையாம். நீங்கள் ஒன்றும் களவு போகலை யன்டு சொல்லிப்பிடுங்கோ, உங்கள் நகை மாடு கீடு எல்லாத்தையும் அப்படியப் படியே குடுத்துடுகிறோம்.' சுப்பா. - ' அதற்கென்ன அப்படியே செய் கிறேனே. நீ சொல்லி நான் கேட்காமலிருப்பானேன். சுப்பாத் தேவா ஒன்றும் யோசிக்காதே போ , அப் படியே செய்துவிடலாம் போ.' எதார்த்தத்தில் அப்படிச் செய்வதாக அவருக்கு - அந்தச் சமயத்தில் யோசனை கிடையாது. எப்படி யாவது ராத்திரி வேளையில் அவனுடன் சண்டை போடாமல் தப்புவித்தால் க்ஷேமம் என்று அவர் நினைத்து அப்படிச் சொல்லிவிட்டார். உடனே சுப்பாத்தேவன் 'சாமி அப்படிச் செய்தேளோ அடி -யேன் ஒங்களுக்கு அடிமை. கள்ளப்பயல் பொய் சொல்லமாட்டான். ஒங்க சாமான் எல்லாம் ஒருமணி சிந்தாமல் ஓங்கவிடம் சேர்க்க நானாச்சுது.' சுப்பிர.-' சுப்பாத்தேவா , அது சரிதான், ஆனால் மாடு கொண்டுபோனதை கல்லாப்பட்டிக் குப்பா பிள்ளை அவர்களெல்லாம் மறித்திருக்கிறார்களே, அவர் கள் சாட்சி சொல்லுகிறபோது என்ன செய்கிறது?' சுப்பா. - ' அதுக்கு ஓசனை பண்ணாதங்கோ சாமி! ஏதோ ரெண்டு உருப்படி மாடு களவு போச்சுது - என்னு வேண்ணாச் சொல்லிவையுங்கோ ; நகை