பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



152 கமலாம்பாள் சரித்திரம் - அந்தக் கல்லாப்பட்டிக் கணக்குக் கழுதை அன்னிக்கு ராவு காணாட்டி பேயாண்டி வந்தான் இண்டு எந்தப் பயலுக்குத் தெரியும். தெரிஞ்சாக்க என்ன, விளை யாட்டுத்தானே. விசாரியாமல் சர்க்காருக்குக் காட்டி விட்டீடரதா?' சுப்பிர. - ' அப்படியில்லை அப்பன் ; பேயாண்டித் தேவனைப் பிடித்துக்கொடுப்பதில் எங்களுக்கேதாவது லாபமுண்டா? எல்லாம் அந்த சப் மாஜிஸ்திரேட்டு வைத்தியநாதய்யர் ஏற்பாடு.' இப்படி நடந்த சம்பாஷணையைக் கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்த வைத்தியநாதன் ' நம்மய்யர் அதற்கெல்லாம் போகவில்லை. அவர்கள் அண்ணன் தான் அதில் எல்லாம் முஷ்கரம், பிடித்ததும் அவர் தான், சிறைச்சாலையிலடைத்ததும் அவர்தான், வக் கீல் வம்பு அமர்த்தினதுகூட அவர் கைப்பணந்தான் எல்லாம். இவரை ஒரு வார்த்தை மரியாதைக்குக் கூட கேட்கவில்லை' என்றான். சுப்பாத்தேவன் 'சரி அந்த ஐயருக்கு என்னமோ பிடிச்சுகிட்டு ஆட்டிரது. அவ்வளவுக் கவ்வளவு அவருக்குப் பின்னாலே இருக் குது. அவர் என்னமோ பேயாண்டி, சுப்பாத்தேவன் இண்டா கையிலாகாதமுண்டங்கள் இண்டு இருக் கிராரு. எங்கப்பன் கருப்பனாணை தொலைச்சு விட் டோம் அவரை. இன்னி தொட்டுப் பெரிய அய்யர் இண்ட மரியாதை யெல்லாம் பறந்து போச்சு. அவர் போனாரு, இப்போ ஒரு வார்த்தை சொல்றேன். கேட்டா ஒங்களுக்கும் சேமம், நமக்கும் சேமம். இல் லாட்டி நமக்காச்சு ஒங்களுக்கு ஆச்சு , பார்த்துக்கிரும்' என, சுப்பிரமணிய அய்யர் நடுக்கத்துடன் 'சுப்பாத் தேவா என்ன நான் இவ்வளவு துரம் சொல்லியும் உனக்கு என் மேலே நம்பிக்கை யேற்படவில்லையே ; என்ன அப்பன், நம்ம பெரியவகள் இருந்த நேசம் என்ன, நாம் இருக்கிற நேசம் என்ன ; சொல்லுகிற