உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கண்மூடிக் கவிராயர் 273 மேலெல்லாம் காயம்பட்டு இரத்தம் வந்ததால் ஆகாய மெல்லாம் செவ்வானமாய்விட்டது' என்று திவ்ய மான சிருங்கார ரசத்தோடு கூடிய பாட்டுகள் அநே கம் பாடினார். இன்னும் வசந்தகாலத்தை வர்ணிக்கும் போது வசந்த காலம் கார் காலத்தையொத்தது என்று பாடினார். ஏனென்றால் கார்காலத்தில் மேகங் கள் நிறைந்திருக்கும். வசந்த காலத்திலும் ஸ்திரீகளு டைய கூந்தல்களாகிய மேகங்களுண்டு. மேலும், கார்காலத்தில் மழை பெய்யும். அதுபோல வசந்த காலத்திலும் ஸ்திரீகள் நாயகர்களுடன் கோபித்துக் கொண்டு அழுகிறார்கள். கார்காலத்தில் பெருங் காற்று அடிக்கும். அதுபோலவே வசந்த காலத்திலும் ஸ்திரீ கள் பிரிவாற்றாமையாற் பெருமூச்சு விடுகிறார்கள். கார்காலத்தில் மயில்களாடும். அதுபோல. வசந்த காலத்திலும் ஸ்திரீகளாகிய மயில்கள் ஆடுகின்றன. -- என்றிப்படி அபூர்வமான உபமானங்கள் அநேகம் எடுத்துச் சொன்னார். இங்கே இவர் இப்படிப் பிர சங்கம் செய்துகொண்டு போகும் போதே பட்டணத் தாருடைய சமாதியில் சுவாமிகள் முத்துஸ்வாமியய் யரை அழைத்து ' இனி நமக்கு இங்கே அலுவல் இல்லை ' என்று சொல்லி அவருடன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு விட்டார். இவ்விடத்தில் அம்மையப்ப பிள்ளையவர்கள் அந்த ஏழைப்பண்டாரத்துக்கு வித் வத் லட்சணத்தையும், சித்திரக் கவிகளின் ஒழுங்கை யும் உவமானங்களின் சாதுர்யத்தையும், இவை களெல்லாம் தன்னிடத்தில் ஒருங்கே அமைந்திருக்கும் உண்மையையும், முன் ஒரு காலத்தில் பட்டி வீரன் பட்டிக் கவண்டயன் கோட்டைக் கவிராயருடன் கைகலந்து யுத்தம் செய்து காக்கைதான் அன்னப் பட்சியென்று சாதித்ததையும், இன்னும் அனேக விஷ யங்களையும் பற்றிப் பிரசங்கம் பண்ணிக்கொண்டே அவனுடன் போனார். அவனும் இவரை நிரம்ப ஆத ரவு பண்ணித் தனிமையான ஓரிடத்துக்கு அழைத் 18|