பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



274 கமலாம்பாள் சரித்திரம் துச்சென்று சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு அவர் மடியில் கைபோட எத்தனித்தான். பிள்ளையவர்கள் தான் செய்த பிரசங்கத்தினால் உருகி தன்னை அன் புடன் ஆலிங்கனம் செய்கிறான் என்று எண்ணி மன மகிழ்ந்து முன்னிலும் அதிக உற்சாகத்துடன் நாய்க் கும் திருடனுக்கும், ஜலத்துக்கும், நெருப்புக்கும், கொக்குக்கும், கழுதைக்கும் சிலேடைகளை எடுத்து விசித்திரமான விருத்தங்களினால் விளக்கத்துவக்கினார். பண்டாரம் அவர் மடியில் அன்புடன் கைபோட்டு அங்கிருந்த பணப்பையை மெதுவாய் உருவினான். பணப்பையை உருவினவுடன் பிள்ளையவர்களுக்கும் பிரக்ஞை வந்துவிட்டது. 'அடேடே என்னடாப் பயலே பண்ணுகின்றனை!' என்று அவர் அதட்ட, அந்தப் பண்டாரம் ' ஒன்றும் விசேடமில்லை சுவாமி ; தாங்கள் இன்னும் சொல்லவேணும், நிரம்ப நன்றா யிருக்கிறது; நாய்க்கும் திருடனுக்கும் சிலேடை வெகு நன்றாயிருக்கிறது. இவ்வளவு அருமையாயறிந்து யார் சொல்லப் போகிறார்கள். நாய் தன்பாட்டில் குலைக் கிறது, திருடனும் தன் பாட்டில் திருடுகிறான், நன்றா யிருக்கிறது உபமானம். ஐயோ தெய்வீகப் புலமை! தங்களுக்கு சரஸ்வதி நாவில் நர்த்தனம் செய்கிறாள்' என்று சொல்லித் தன் மடியில் அந்தப் பையை சமர்ப் பிக்கும் போது வித்வான் அம்மையப்ப பிள்ளையவர் கள் முற்றிலும் விழித்துக்கொண்டு ' ஏனடாபயலே! வஞ்சகக்கள் வோய்! எனது தனத்தை வௌவுகின்ற னையா?' என்று கூவ, அவன் ' இனிமேலெடுக்கவில்லை , சலாம், போய் வருகிறேன்' என்று சொல்லி ஓட்ட மெடுத்தான். அம்மையப்பபிள்ளை கூடத் துரத்தினார். கொஞ்ச தூரம் போனவுடன் அவன் தீடீரென்று திரும்பி அவர் முகத்தில் பளீரென்று ஒரு பலமான அறை அறைந்து கீழேவிழத் தள்ளிவிட்டு ஒரே ஒட்ட மாக ஓடியே போய் விட்டான். அம்மையப்பபிள்ளை எழுந்திருக்கமாட்டாமல் எழுந்து 'ஐயோ தெய்வமே,