உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஏமாந்த சோணகிரி ! 275 இன்றைக்கு யார் முகத்தில் விழித்தோமோ நம்மை இந்தப் போக்கிரிப்பயல் பாட்டுக் கேட்கிற பாவனை யாய் மோசம் செய்து போய் விட்டான். அட்டா, இப்படியுந்தான் உலகத்தில் உண்டா . செவிடன் காதில் சங்கூ. தின கதையாய் இவனிடத்தில் போய் நம்முடைய அருமையான பாட்டுக்களைப் பாடி னோமே' என்று நிரம்பத் துக்கித்தார். பாவம், அவ ருக்குப் பணம் போனது கூட உறுத்தவில்லை. அனு பவிக்கத் தெரியாத மூடனிடத்தில் தம்முடைய பாட் டைப் பாடிக் கொண்டிருந்தோமே என்பதில் நிரம்ப வருத்தம். இனிமேல் அந்தப்பயல் வரட்டும், சொல்லு கிறேன் பார்' என்று சொல்லி அவர் பல்லைக்கடித்துக் கொண்டார். இனிமேல் இவரிடம் வர அவனுக்கு என்ன பயித்தியமா பிடித்திருக்கிறது! அவன் ஓடியே போய்விட்டான். இவரும் தன் மேலிருந்த புழுதி யைத் துடைத்துவிட்டு தன் காலில் பட்ட காயத் தைப் பார்த்துக் கண்ணீர்விட்டு, கடைசியாக நாம் விழுந்ததும் மோசமானதும் நல்லவேளையாய் நம்மைத் தவிர ஒருவருக்கும் தெரியாதே' என்று தன்னைச் சமா தானம் பண்ணிக்கொண்டு ' ஏதோ வேளைப்பிசகு' என்று வேதாந்தம் பேசி மறுபடி திருவொற்றியூரைத் தேடிச் சென்றார். கடைசியாய்க் கண்டுபிடித்து பட் டணத்துப் பிள்ளையின் சமாதியைப் போய்ப் பார்க்க, அங்கே ஒருவருமில்லை. சுற்றும்முற்றும் பார்த்தார், எவரையும் காணோம். தனியேயிருந்த லிங்கத்தை மட்டும் தரிசனம் செய்துவிட்டு பட்டபாடு போதும் என்று வெயிலில் அலைந்து, உழன்று, வியர்த்து, வெறுங்கையாய் வீடுவந்து சேர்ந்தார். இவர் ஏதோ நல்ல சமாசாரங்கள் கொண்டுவரப்போகிறார் என்று காத்திருந்த கமலாம்பாள் முதலியவர்களும் வெறும் ஆளாய்வந்து சேர்ந்ததைப் பற்றி விசனித்தார்கள். அன்று மறுநாளே அங்கே காலதாமதம் செய்வதில் பயனில்லை யென்று கண்டு அவ்விடம் விட்டு வடக்கே போக அவர்கள் எல்லாருமாகப் புறப்பட்டார்கள்