பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



32 ஆசை நோய்க்கு மருந்து முண்டோ? இங்கே இப்படியிருக்க, புதுச்சேரியில் ஒரு. காராக்கிரஹத்தின் மெத்தையில் ஒரு யௌவன புரு ஷன் அங்கவஸ்திரத்தால் தனது முழந்தாளைச் சேர்த் துக்கட்டிக் கொண்டு தனியே உட்கார்ந்திருந்தான். நேரம் நடுநிசி. நிலவு வீசி யடித்தது. ஊர்முழுவதும் நிசப்தமாயிருந்தது. உலகமாந்தர் உண்ணுந்தொழிலை மறந்து உறங்குந்தொழிலிலிருந்தனர். பட்சிகளெல் லாம் ஆடிப்பாடித் தமது கூட்டிலமர்ந்திருந்தன. மரங் கள் கூட அசைவற்று வாயடக்கி மௌனமாயிருந் தன. இப்படிப் பூலோகம் முழுவதும் நித்திராதேவி யின் மோக வலையிலடங்கிச் சிறிதும் செயலற்று உறங் கிக் கொண்டிருக்க ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பேசாது ஒளிர்ந்தன. மேகங்கள் அரவமற்றுத் தனி வழி நடந்தன. எங்கும் பயங்கரமான நிசப்தம் குடி கொண்டிருந்தது. பேய்கூடத் தனிவழி செல்ல அஞ் சும் இந்நடுராத்திரி வேளையில் ஸ்ரீநிவாசன் மாத்திரம் சோர்ந்த முகத்துடன் சந்திரனைப்பார்த்துக்கொண்டு பெருமூச்சுவிடுவதும், தன்னை யறியாமல் ததும்பி வரும் கண்ணீர்த்துளிகளை விரலால் சுண்டி யெறிவது மாயிருந்தான். 'எமதூதர்கள் போல் நம்மை வஞ் சித்த போக்கிரிகள் இன்னகாரணத்திற்காக நம்மைச் சிறையிலிட்டிருக்கிறார்களென்று கூடத் தெரிய வில்லையே' என்று ஏங்கினான். ' நாம் எங்கேயோ ஒரு இடத்திலும், அவள் எங்கேயோ ஒரு இடத்திலுமாக இருக்க நேரிட்டதே ! ஐயோ அவள் நினைந்து நினைந்து. உருகி உயிரை மாய்த்துக் கொள்ளுவளே' என்று