உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



காசி சென்றவர் ஊர் திரும்புகிறார் 299 - - - - - - விருந்தாடிப்பின், சிறுகுளம் நோக்கி எல்லாருமாகப் புறப்பட்டார்கள். உத்தரப்பிரதேசம் தாண்டி தக்ஷி ணம் வந்தவுடனே தந்திமூலமாய் யாவையும் அறிந் திருந்த சப்மாஜிஸ்திரேட்டு வைத்தியநாதய்யர், அவர் களுடைய வரவை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தார். அவர்கள் வந்து சேருமட்டுமாவது உயிர் தரித்திருக்க வேண்டுமென்பதுதான் அந்தப் பிரபுவின் கோரிக்கை. 'காதலொன் றீது மோர் கள்ளின் தோற்றமே' என்ற படி. ஆசைப்பெருக்கால் தன் நினைவுகூட இன்றி கண் டோர் யாவரிடத்தும் ' முத்துஸ்வாமியய்யர் வருகிறார். முத்துஸ்வாமியய்யர் வருகிறார் ' என்று சொல்லி முற் காலத்தில் ராமனை எதிர்பார்த்த பரதன் போல் 'வேதி யரையும், தாதியரையும், தன்னையும், தொழுது கொண் டிருந்த அவர் ஊருக்கு ஒரு மைலுக்கப்பாலேயே பூரண கும்பங்கள், மேள வாத்தியங்கள் சகிதம், அவர்கள் வருகிற செய்தி கேட்டுக் கார்த்திருந்தார். சிறுகுளம் முழுவதும் ஆண்பெண் அடங்க அவ் விடத்தில் கூடியிருந்தது. முத்துஸ்வாமியய்யரும் சச்சிதானந்த ஸ்வாமிகளும் இரண்டு பல்லக்குகளில் எழுந்தருளினார்கள். மற்றவர்கள் குதிரைவண்டிகள் முதலிய வாகனங்களில் ஏறினார்கள். ஜம், ஜம், ஜம் என்று மங்கள வாத்தியங்கள் முழங்கின. அம்மை யப்பபிள்ளை மாத்திரம் ஒரு குதிரையில் ஏறினார். அக் குதிரை வாத்திய கோஷத்தைக் கேட்டு வெருண் டோட பிள்ளையவர்கள் அதனுடன் கௌரதையாய் யுத்தஞ் செய்து பார்த்துக் கட்டாமல் 'கூ கூ ' என்று கூக்குரலிடத்துவக்கினார். பிறகு அவருக்கும் அவர் வாகனத்துக்குமுள்ள வழக்கைத் தீர்த்து இருவருக்கும் பாகம் செய்துவிட்டார்கள். வைத்தியநாதய்யருக்கு சந்தோஷத்தால் தலைகால் தெரியவில்லை. ஊர் முழு வதும் அல்லோல கல்லோலப்பட்டது. சுவாமிகள் பிரம்மஸ்வரூபமாய் எழுந்தருளியிருந்தார்கள். முத்து ஸவாமியய்யர் முதலியவர்கள் வைத்தியநாதய்யர்