31 - பிள்ளையவர்களின் கல்வித்திறமையும் புத்தி நுட்பமும். இங்கே முத்துஸ்வாமியய்யர் இப்படி ஆனந்தித் துக் கொண்டிருக்க, கமலாம்பாள், லட்சுமி, அம்மை யப்பபிள்ளை முதலியவர்கள் சிதம்பரம் விட்டுப் புறப் பட்டு பட்டணம் வந்து ஸ்ரீநிவாசன் முன்னேயிருந்த ஜாகையிலேயே தங்கினார்கள். கமலாம்பாள் ' தெய் வமே உன் திருவுள்ளம் இப்படியா! நான் துன்பப் படுவது போதாதென்று என் பெண்ணையுமா இப் படிச் சீரழிக்கிறாய்' என்று ஒயாமல் கவலைப்பட் டாள். லட்சுமி, 'தகப்பனையும் புருஷனையும் பறி கொடுத்து உயிர்வைத்துக் கொண்டிருக்கிற கள்ளச்சி நானல்லவோ' என்று ஏங்கினாள். அம்மையப்ப பிள்ளை ஊரெங்கும் அலைந்து பார்த்துக்கொண்டிருந் தார். இப்படியிருக்கும் போது அடுத்த வீட்டுப் பாட்டியம்மாள் கமலாம்பாளிடம் வந்து அவளுடைய நிலைமையைக் கண்டு பரிதபித்து ' அம்மா திருவெற்றி யூர் என்று இதற்குச் சமீபத்தில் மகா க்ஷேத்திரம் ஒன்று இருக்கிறது. அங்கேதான் பட்டணத்தார் சமாதி யடைந்தார். அவருடைய கோவிலில் ஒரு பெரியவர் வந்திருக்கிறார். அவருக்கு ஐந்நூறு வயதாய்விட்ட தாம்; அன்ன ஆகாரம் கிடையாதாம். நடந்தது, நடக்கப்போகிறது, நடக்கிறது எல்லாவற்றையும் கொஞ்சங்கூடத் தவறாமல் சொல்லக் கூடியவராம், ஒரு மனிதனைப் பார்த்தால் அவனைப் பார்த்தவுட னேயே அவன் இன்ன காரியமாய் வந்திருக்கிறான் என்று சொல்லி அது பலிக்கும் பலிக்காது என்றும் சொல்லி விடுகிறாராம். வெகு லட்சணமாயிருக்கிறா