உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சீதாராமனின் திவ்ய தரிசனம் 285 கோருவாள் ஒரு சமயம். ' ஐயோ என் கணவரைத் தான் இன்னும் ஒரு தடவை நான் காணவும் கூடுமோ! உன் கிருபை அப்படிக்கில்லையோ ' என்றேங்குவாள் ஒரு சமயம். இப்படிப் பலவாறு சிந்தித்தழியு நாட்க ளுள் ஒரு நாள் இரவில் கடைச்சாம சமயத்தில் திடீ ரென்று கமலாம்பாளுக்கு ஓர் வெகு விசித்திரமான கனவொன்று நேர்ந்தது. மலைகளும், நதிகளும், யானை களும், புலிகளும், ரிஷிகளும், முனிவர்களும் நிறைந்த ஒரு பெருங் காடொன்று அவள் கண்ணுக்குத் தென் பட்டது. அக்காட்டில் பளீர் என்று மின்னும் மின் னற்கொடி போன்ற தேஜோ ரூபத்துடன் பார்க்கப் பதினாயிரம் கண்ணும் போதாத திவ்ய சௌந்தரியத் துடன் கூடிப் புன்னகை தவழ்ந்த உதடும், மலரென மலர்ந்த முகமும், வண்டெனக்கரிய குழலும், பிறை யென வளர்ந்த நுதலும், வில்லெனக் கோடிய புருவ மும், நஞ்சிடையமிழ்தங் கூட்டி, கஞ்சத்தினளவிற் றேனும் கடலினும் பெரிய தாய்,' 'சேயரிசிதறித்தீய வஞ்சமும் களவுமின்றி மழையென மதர்த்த' கண் களும் கொண்டு 'அன்னமும் அரம்பையரும் ஆரமழ்து நாண'- | கற்றைவிரி பொற்சடை மயிர்த்துறு கலாபம் சுற்று மணி புக்கவிழை மிக்கிடை துவன்றி விற்றவிழ வாணிமிர மெய்யணிகள் மின்னச் சிற்றிடை துடங்கவொளிர் சீரடி பெயர்த்து ஒரு பெண்ணரசி அயலேவர, அவளுடன் கைகோர்த்து நாணுலாவு மேருவோடு நாணுலாவு பாணியும் தூணுலாவு தோளும்வாளி யூடுலாவு தூணியும் கொண்டு மையோ மரகதமோ மறைகடலோ மழைமுகிலோ அய்யோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான், என்ற கற்பனை கடிந்த வடிவத் துடன் ஒரு மகாபுருஷன் தன்னெதிரே வந்ததாகவும், வரும்போதே, ' ராமனும் சீதையும் வருகிறார்கள் : ராமனும் சீதையும் நான் காண வருகிறார்கள்' என்று அவளுக்கு ஒரு எண்ணம் உண்டானதாகவும், அவர்