உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



74 கமலாம்பாள் சரித்திரம் மாய் ஓடி. ராத்திரி ஒரு சத்திரத்தில் தங்கி தங்கள் கால் கொப்புளங்களை ஆற்றிக்கொண்டு மறுநாட் பகல் பத்துமணிக்கு சிறுகுளம் போய்ச் சேர்ந்தார்கள். வாத் தியாரோ பாவம் நொண்டி நொண்டிக்கொண்டு பட் டினியாய் ஊர்வந்து தன் காலைப் பார்க்கும் போதெல் லாம் ' அந்தப்பயல்கள் வரட்டும் சொல்லுகிறேன் என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவர்களை ஆவ லுடன் எதிர்பார்த்திருந்தார். சிறுகுளத்துக்கருகில் கடுகனூர், குள்ளப்புறம், விருதக்கப்பட்டி, சோரனூர் முதலிய சில பிரபலமான கிராமங்கள் உண்டு. அவற்றின் மகாஜனங்களுடைய உத்தியோகம் அபிசிரவணம் சொல்லல், பரிசாரகம் செய்தல், சவண்டி தின்னல், பொய்ச்சாட்சி சொல்லல் முதலியனவாம். இவர்களுடைய கீர்த்திக்கு ஒரு அத் தாட்சியாக யாரையாவது இகழ்ச்சியாய் வைய வேண்டுமானால் ' என்னடா , சுத்த குள்ளப்புறத்து' பிராம்மணனா யிருக்கிறாய்!' என்று சொல்வது வழக் கம். முத்துஸ்வாமி அய்யர் பெண்ணின் கலியா ணத்தைச் சிறப்பிக்க எண்ணி இந்த பிராமணோத் தமர்கள் தங்கள் தங்கள் வீடுகளில் ' அடியேய், சிறு குளத்து முத்துசுவாமியாத்திலே கலியாணமாம், வர பதினைந்து நாள் செல்லும்; ஆத்தைப் பார்த்துக்கடீ . என்னடி ஆட்டுமா?' என்று தங்கள் மனை விமாருக்குத் தாக்கீது கொடுத்துவிட்டு ருத்திராட்சம், விபூதி டப்பி ஸ்தாலிச்செம்பு, மடிசஞ்சி, பட்டுக்கயிறு, ஊத்தைவாய் இவ்வித உத்தியோக சின்னங்களுடன் சர்வாபரண பூஷிதர்களாய் சிறுகுளத்தை நோக்கிக் கலியாணத்திற்கு ஒருவாரத்திற்கு முன்னமேயே தங்க ளுடைய இஷ்ட மித்திர சகபரிவார பந்துக்களுடன் முகூர்த்தத்தை நடத்திவிக்க நூற்றுக்கணக்காய் புறப் பட்டுவிட்டார்கள். இவ்விதமாக சிறுகுளத்தைச் சுற்றியுள்ள பிர