ராம நாம பிரபாவம் 307 பாட்டு, பேசுவதெல்லாம் ராமனுடைய பேச்சு , ஓதுவ தெல்லாம் ராமனுடைய திருநாமம். "மன்னுபுகழ்க் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்திறுத்தாய் (செம்பொன் சேர் கன்னி நன்மாமதின் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே என்னுடைய வின்னமுதேயிராகவனே தாலேலோ. கொங்குமலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய் தங்கு பெரும் புகழ்ச்சனகன் றிருமருகா தாசரதி கங்கையிலுந் தீர்த்தமவி கணபுரத்தென் கருமணியே எங்கள் குலத் தின்ன முதே யிராகவனே தாலேலோ. என்றிப்படி ராகவனைப் பாடிக் கொஞ்சி 'மன்னே மாமணியே' என்று ஏத்தி, 'அன்னே தேனே யமுதே' என்று அழுது, 'ஐயே நினக்காளானேன் அல்லேனெனலாமோ' என்று களித்து அவள் தன் காலத்தைக் கடத்தினாள். தன் கணவனைக் கண்டு விட்டால் ஸ்ரீ ராமனையே பிரத்தியட்சமாய்க் கண்டது போல் நினைப்பு. அவருடன் பேசினால் ராமனுடன் பேசுவதாய் மதிப்பு, அவரருகு இருந்தால் ஸ்ரீராமன ருகு இருப்பதாய்க் களிப்பு. அவர் நடையையும் அவர் சிரிப்பையும் காணுந்தோறும் 'கடந்தரு மதங் கலுழ் கவிநல் யானை போல் நடந்தது கிடந்தது என் னுள நண்ணியே' என்றும், 'முந்தியென்னுயிரை வலுண்டதே' யென்றும் ராமனைக் கண்ட சீதையைப் போல் தன்னுள் பாடி மகிழ்ந்து, தீராஎளியார் வலிசேவகனே நாராயணனே தனி நாயகனே. என்று துதித்து இவ்வாறு அவள் ராமத்தியானானந்த வைபவத்தில் முழுகியிருக்கிறாள். கமலாம்பாளது பக்தியின் வைபவமே யிவ்வாறா யின், முத்துஸ்வாமியய்யருடைய ஞானத்தின் வைப் வத்தைச் சொல்லவும் வேண்டுமோ!