உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'இவ்வளவுதான் நான் கொடுத்துவைத்தது - 237 யில் படுத்துத் தனக்கு நேரிட்ட துன்பங்களையெல் லாம் நினைத்து, நினைத்து, யார் ஆற்றியும் ஆறாது விம்மி விம்மி யழுதாள். அழுது, அழுது கண் சிவந்தது, தலை வலித்தது, முகம் வாடிக் கருகியது. ' அழுது கொண்டே பிராணனை விட்டுவிடுகிறேன்' என்று புலம்பினாள். 'ஐயையோ' என்று கதறி தீயிலிட்ட புழுப்போலத் துடித்தாள். இப்படி ஒருநாள், இரண்டு நாள், மூன்று நாள், ஒருவாரமாயிற்று, அவர் வரவேயில்லை. 'இனி மேல் அவர் வருவதேது. இவ்வளவுதான் நான் கொடுத்துவைத்தது-ஐயோ இப்படியா தீரவேண்டும். எங்களுறவு இப்படித் தீர்ந்து போய்விடு மென்று நான் சொப்பனத்திலும் நினைக்கவில்லையே. நீ எங்கே யாவது போ, உனக்கும் எனக்கும் தீர்ந்தது என்று சொல்லி உதறித் தள்ளினீர்களே, அப்படியே செய்துவிட்டீர்களே. ஐயையோ உங்களை விட்டு நான் எவ்விதம் பிரிந்திருப்பேன். உயிரைவிடவும் மனம் துணியவில்லையே. நீங்கள் இருக்கிற இடமாவது எனக்குத் தெரிந்தால், அது எமலோகமானாலும் சாவித் திரியைப்போல நான் துரத்திக்கொண்டு போவேனே. அனாதையாய் இப்படி விட்டுப் போய்விட்டீர்களே. உங்களுக்கு இது தர்மமா! ஐயோ சிதம்பரத்துக்குத் தான் வந்தாரோ வரவில்லையோ. இத்தனை ஆபத்து களுக்கு அப்புறம் உயிரையும் வைத்துக்கொண்டிருக்க வேண்டுமா என்று பிராணனையேவிட்டுவிட்டீர்களோ? ஒன்றும் தெரியவில்லையே, என்ன செய்வேன். ஐயோ நடராஜா , நீ போனது முதல் நான் படும் துன்பம் இவ் வளவு அவ்வளவில்லை. ஒரு செய்தியும் சொல்வாரில் லையே. நான் என்ன செய்வேன் தெய்வமே ! பூமியில் பெண்ணாய்ப் பிறந்து என்னைப்போல் அனுபவிப்பவர் கள் கிடையாது' - என்று புலம்பியழுது, கீரைத்தண்டு போலத் துவண்டு, தண்ணாய் உருகி, மூர்ச்சையாய்க் கிடந்தாள். அப்படிக்கிடந்து தூங்கிய தூக்கத்தின் மத்தியில் முத்துஸ்வாமியய்யர் காவி தரித்த ஒரு சந்நி