'கலகம் நடந்தால் போதும் ' யாய் 'புருஷக் கைம்பெண்' (கைம்பெண் - விதவை) என்றாள். எனவே சுப்புவுக்கு வந்த சந்தோஷத்திற்கு அளவு இல்லை. 'இப்படிப்பட்ட வார்த்தைக்காகத் தான் இவ்வளவு நேரம் காத்தேன்' என்று எண்ணிக் கொண்டு துணி மூட்டைகளைக் கட்டிச் சுருட்டிக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டாள். வீட்டில் குடத்தை இறக்கினதுதான் தாமதம். ஈரப்புடவையுடனே ஒரு எருமுட்டையைக் கையில் எடுத்துக்கொண்டு கமலாம்பாள் வீட்டை நோக்கி அடுப்பு நெருப்புக்காகப் புறப்பட்டாள். யதார்த்தத் தில் தன் வீட்டிலேயே நெருப்பு இருந்தது. ஆனால் பொன்னம்மாள் சொன்ன வார்த்தைகளைக் கமலாம் பாளிடம் ஒன்றுக்குப் பத்தாய்ச் சொல்லவேண்டியது அதிக அவசியமாயிருந்தது. சபைச்சிறப்பு. சுப்பு அப்படி அதிக கெட்டவள் அல்ல. நல்ல ஈகைக் குணமுள்ளவள். மனிதர்மேல் அபிமானமுள்ள வள். மற்ற நாட்டுப் பெண்கள் தங்கள் மாமிமா ருடன் சண்டை செய்வதைக் காட்டிலும் இவள் தன் மாமியாருடன் அதிகமாய்ச் சண்டை செய்வதில்லை. சுக்கிரவாரம், வருஷப்பிறப்பு முதலிய நாட்களில் தன் மாமியார் என்ன சொன்னாலும் அவளுடன் சண்டை செய்யமாட்டாள். ஆனால் மறுநாள் வட்டியும் முதலு மாக யுத்தம் நடக்கும். சில ஸ்திரீகளைப்போல் குடும்ப யுத்தங்களில் அவள் இருபது வருஷத்திய குற்றக் கணக்கை யெடுத்துக் கூறுவதில்லை. பதினைந்து வரு. ஷத்திற்கு முன் ஒரு தினத்தைச் சொல்லி அன்று