உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



24 கமலாம்பாள் சரித்திரம் களோ, அப்படி ஸ்திரீயோ, புருஷனோ, யாவராயினும் சரி, அவர்கள் எவ்வளவு தந்திரிகளானாலும் சரி, அவர்களிடத்திலுள்ள சங்கதி எவ்வளவு ரகசியமா னாலும் சரி, அதை இந்த உத்தியோகஸ்தர்கள் கிரஹிப் பது திண்ண ம். இவ்வாறு கிரஹிக்கிற சக்திமட்டுந்தான் அவர்க ளுக்குண்டென்று நினைக்கவேண்டாம். கற்பனாசக்தி குறைந்த நமது தமிழ் வித்வான்கள் போல் ஒருவர் சொன்னதையே சொல்வதில் அவர்களுக்குச் சற்றே னும் திருப்தியில்லை. பொய்யை நிஜமாக்குவதிலும் நிஜத்தைப் பொய்யாக்குவதிலும், நரியைப் பரியாகவும் (பரி-குதிரை) பரியை நரியாகவும் மாற்றிய பரமசிவ னைக்காட்டிலும் சமர்த்தர். கன்னாபின்னா என்னாமல் கல்லும் புல்லும் உருகப் பேசுவார். ராமாயணத்தை ஒன்றுக்குப் பத்தாய்ச் சொன்ன கம்பரிலும் கற்பனா சக்தியில் சிரேஷ்டர் இவ் வம்பர். வியாச ரிஷி செய்த புராணம் பதினெட்டே. இவர்களோ வீடுதோறும் ஒரு ஸ்தல புராணம் சிருஷ்டிப்பார். அன்பு, புத்தி சித் தம் இவற்றை மாறுபடச் செய்வதில் நடுவேனிற்கனவு' என்ற நாடகத்தின் 'பக்' என்ற குட்டிப்பேயிலும் சிறந்தவர்கள். இச்சமர்த்தர்கள் தங்களைத் தாங் களே உத்தியோகஸ்தராக நியமித்துக்கொள்ளுவார் கள். இவர்கள் தாம் அம்மஹாசபையின் மகா அங்கத் தினர்.