உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கமலாம்பாள் சரித்திரம் இதற்குள் பாவம்! சுப்பிரமணிய அய்யர், 'ராத் திரி நடக்கும் நிச்சயதார்த்தத்திற்குப் போகாமல் எவ் விதம் தப்புகிறது! போனால் இந்த ராக்ஷஸியினுடைய விரோதம். போகாவிட்டாலோ தமயனுடைய, விரோ தம். அவர் என்ன தான் செய்வார்! அவர் நித்திரை இந்த விசாரத்தில் சூரியனைக்கண்ட பனிபோல் பறந்து போய்விட்டது. ஒருவேளை 'இவள் கிடக்கிறாள், தமை யன் பிதாவுக்குச் சமானம். அவர் என்மேல் வைத் திருக்கிற பிரியத்திற்கு நான் போகாமலிருக்கலாமா' என்றும், அடுத்த நிமிஷத்தில் 'இவள் நம்மை உறந்து விடுவாளே, அப்புறம் வீட்டுப்பக்கம் நமக்கு வேலை யில்லை' என்றும் யோசிப்பார். இப்படி அஸ்தமிக்க மூன்று நாழிகை மட்டும் யோசனை செய்துவிட்டு 'ஓஹோ நிச்சயதார்த்த காலம் சமீபித்துவிட்டதே! தெய்வமே, என்ன செய்வேன்! ஒரு உபாயமும் தோன்றவில்லையே! பொன்னம்மாளைக் கேட்போ மென்றால், ஜடம், பயங்கொள்ளி, என்று வைது திட்டு வாளே ராக்ஷஸி, இருக்கட்டும்' என்று தனக்குள் இவ் வாறு சம்பாஷணை செய்தபிறகு தன் மனைவியிடம் போய் நான் அண்ணாவகத்துக்குப் போகாமலிருக்கக் கூடாது, போகத்தான் போவேன் உனக்கென்ன - வெறுமனே' என்றார். அதைத்தானே இன்று பார்க்க வேணும், நானும் இங்கேயே இருக்கிறேன். எப்படித் தான் போகிறீர்கள் பார்ப்போம்' என்று அந்த பிடாரி கண்டிப்பாய் பதில் சொன்னாள். அப்பொழுது அய் யர் 'நீயும் குழந்தையைக் கூட்டிக்கொண்டு எங்கே - யாகிலும் போய்விடு; நானும் அண்ணா வீட்டுக்குப் போகவில்லை, என்னை உள்ளே விட்டுக் கதவைப்பூட்டி விட்டுப் போய்விடு' என்றார். அதற்கு பொன்னம்மாள் நான் இங்கேயேதானிருப்பேன். நீரும் (மரியாதை, யாய்) வீட்டைவிட்டு வெளியேறினீரோ, காலை முறித்துவிட்டேன், பத்திரம்' என்று கூறவும் சுப்பிர மணியய்யர், 'என்னடி, போடி, விளையாடாதேயடி ,