72 கமலாம்பாள் சரித்திரம் 18உ யா முகூர்த்த ம்? 18, 19, 20, 21, 22-ந் தேதி வரைக்கும் கலியாணம். இங்கே 19-ந் தேதி சிராத்தச் சனியன்; அதைத் தொலைத்துக்கொண்டு ஒரேயடியாய் 19-ந் தேதி ராத்திரியே புறப்பட்டால் 20-ந் தேதி காலமே அங்கே வந்துவிடலாம். பார்ப்போம், அப் படித்தான் செய்யவேணும்' என, ராமஸ்வாமி அய் யர் 'அதுதான் சரி, அப்படித்தான் செய்யுங்கள் ; நான் 16-ந் தேதியே புறப்படுகிறேன்' என்றார். இங்கே இப்படியிருக்க, தென்கரை என்ற மற் றோர் கிராமத்தில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 'குட்டைப் பெருச்சாளி' என்று பட்டப்பெயர் பெற்ற முத்துவும், 'கல்லுளி' என்றும் 'கடப்பாரை முழுங்கி' என்றும் பெயர்பெற்ற சுப்பய்யாவும் காலணா மேஜை வைத்து 'அவுட்' ஆடிக்கொண்டிருந்தார்கள். சுப் பய்யா 'இன்னொரு ஆட்டம் போடடீ மகளே போடு' என, முத்து 'ஏ தப்பா! அவன் சொன்னாற்போலிருக் கிறது. ஒரு ரூபாய் தோற்றாய்விட்டது. இன்னும் ஆடவா? இன்னும் ஒரு ரூபாயை அவன் சொன் னாற்போல பற்றப் பார்க்கிறாய்! அவன் சொன்னாற் போல உனக்கென்ன' என, கல்லுளி 'எவன் சொன் னாற்போல? எத்தனை " அவன் சொன்னாற்போல!" அந்த அவன் தான் இன்னான் என்று நிரம்ப நாளாய்த் தெரியவில்லை, அவன் போகட்டும். இன்னும் ஒரே ஆட்டம்; யோசிக்காதே, அந்த ஒரு ரூபாய்க்கும் சிறுகுளம் முத்துஸ்வாமி அய்யர் அகத்துக் கலியாணத் துக்கு திருவாரூர் ராஜம் வருகிறாள, அவளை விட்டு உனக்குச் சந்தனம் பூசிவிடச்சொல்லுகிறேன். பயப் படாதே, ஆடு' என்றான். இதுநிற்க, வீரபாண்டியம் என்ற இன்னொரு கிரா மத்தில் சில சிறுபிள்ளைகளாய்ச் சேர்ந்து தாயார், தகப் பனார், வாத்தியார் இவர்களுக்குத் தெரியாமல் சிறு