பரியாலோசனை" 951 எழுதப் போகிறார்கள், என்ன தைரியம். நான் அவள் கையைப் பிடிக்குமுன் அவள் என் கையைப் பிடிக் கிறாள். எவ்வளவு துணிவு என்கிறாய்! யாரார் எவ்வ ளவு கொடுத்து வைத்திருக்கிறார்களோ அவ்வளவு தான் கிடைக்கும். ஆசைப்பட்டால் பிரயோசன மென்ன.' சுப்பராயன்.--'சே! அவள் எழுதியிருக்கமாட்டா ளடா. கம்பராமாயணம் முதல் வாசித்தவளுடைய எழுத்து இப்படியா இருக்கும், குட்டிகள் யாரோ இந்த சேஷ்டை பண்ணியிருக்கிறார்கள். நான் சொன் னேன் என்று பாரேன்'. ஸ்ரீநிவாசன். - 'நல்லது இருக்கட்டும். லச்சைக் கூத்தா. அப்படியா! என்னைப் பார்த்தால் பொருட் டாய்த் தோன்றவில்லை.' சுப்பராயன் 'என்ன! நிச்சயமாய் அவள் இதை எழுதவில்லை யென்று நான் தான் சொல்லுகிறேனே, அவள் முகத்தைப் பார்த்தாலே தெரியவில்லையா? குட் டிகள் யாரோ எழுதியிருக்கிறார்கள். அப்புறம், தன் னைப்போலத் தெரியும். நீதான் அவளைக் கேளேன்.' என, ஸ்ரீநிவாசன் 'இன்னும் அவளுடன் பேசிவிடவும் வேண்டுமா?' என்று கண்ணீர்விட ஆரம்பிக்கவே, சுப்பராயன் அவனைத்தேற்ற அவன் தேறியிருந்தான். மறுநாளும் அன்றுபோலவே எல்லாப் பெண்களும் அவனுடன் உல்லாசமாய் விளையாடினார்கள். அவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவன் நெற்றியில் சுண்ணாம்பையும் விளக்கெண்ணெயையும் குழைத்து நாமம் போட்டுவிட்டு அவன் இலையில் உட்கார்ந்து பரிசேஷனம் செய்யும் வரை வாயை மூடிக்கொண் டிருந்து பிறகு எல்லாரும் கொல்லென்று சிரித்துப் பரிகாசஞ்செய்து விளையாடினார்கள். ஆனால் ஒருவ ராவது நெடுநேரம் காகித சங்கதியைப்பற்றிச் சொல்