உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



104 கமலாம்பாள் சரித்திரம் அகப்படுவதாயில்லை. அவள் அவரைப் பார்த்துப் பல்லைக் கடித்துக்கொண்டு விரல்களை நெரித்து கொண்டு தன்னுடைய கண்கள் மூலமாக எவ்வளவு கோபத்தை வெளியிடக் கூடுமோ அவ்வளவையும் காட்டினாள். ஒன்றும் பலிக்கவில்லை. இவ்வளவு தைரி யம் இவருக்கு உண்டானது அவளுக்கு வெகு ஆச்சரிய மாயிருந்தது. அவரை எவ்விதம் தண்டனை பண்ணுவ தென்றும் அவளுக்குத் தோன்றவில்லை. அவருடைய தைரியத்தையும் அலட்சியத்தையும் நினைக்க நினைக்க அவளுக்கு ஆச்சரியமாயிருந்ததால் அவள் இராத்திரி முழுவதும் தூங்காமல் ஓயாத யோசனைகள் எல்லாம் செய்தாள். தன் கோபந்தீர் அவரை வைது திட்டி அவருக்குப் புத்தி கற்பிக்க வேண்டுமென்று கூட ஒருநாள் தீர்மானம் செய்தாள். ஆனால் அப்படிச் செய்வது தனக்கே விரோதமாகும் என்று அவளுக்கு மறுநாள் பட்டது. ஆகையால் அவரை நய வஞ்சக மாய்த் தன்னிடம் வரவழைத்து வசியமருந்து செய்து அதைப் பாலில் கலந்து அவருக்குக் கொடுத்து விடு கிறது என்று கடைசியாய்த் தீர்மானம் செய்து கொண் டதுமன்றி துஷ்டப் பெண்கள் கையில் ஒரு கூர்மை யான வாளாயுதம் போல் விளங்குகின்ற அந்த வசிய மருந்து என்னும் விஷமருந்தை இங்கே சொல்லத் தகாத அனேக சரக்குகளைச் சேர்த்து மறுநாளே தயார் செய்து கொண்டு ' எப்போ வருவாரோ எந்தன் சாமி' என்று வெகு ஆவலுடன் தன் புருஷனுடைய வரவை எதிர்ப்பார்த்திருந்தாள்.